எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மதியின் வேந்தன் -18

subasini

Moderator
பகுதி -18



கோயில் பிரசாத்தைக் கணவனுக்குக் கொடுக்க ஆசையோடு வந்தாள் மதுமிதா.

மடிக்கணினியில் கவனமாக இருந்தான் அவள் கணவன். தன் மனைவி வந்தததோ அவனை மெதுவாக அழைத்ததோ கவனத்தில் விழ வில்லை.. எப்படி அவன் கவனத்தைத் திருப்பவது என்று தெரியாமல் சிலநொடிகள் நின்றவள்… மெதுவாக அவன் அருகில் பிரசாதத்தை வைத்தாள்.

அவனைத் தொந்தரவு செய்ய மனமில்லாமல் அறையில் இருந்து வெளியேறவும், படார் என்று புத்தகம் தட்டும் சத்தம் கேட்டது.



என்ன என்று திரும்பிப் பார்த்தவளுக்கு, தன்னையே எரித்து விடுவது போலக் கோபமாகக் கண்கள் சிவக்கப் பார்த்தான் கதிர் வேந்தன்.



எதுக்கு இவ்வளவு கோபம் என்று புரியாத பெண்ணவளுக்கோ பயம் மனதில் உண்டாகியது.

அவன் அருகில் வந்தவள் மெல்ல “என்ன ஆச்சுங்க” என்றாள் உள்ளே போன குரலில்.

தன் விழியசைவில் அவள் வைத்துச் சென்ற பிரசாதத்தைக் காட்டியவன் “என்னது” என்று கேட்டான் .



மருண்டப் பார்வையினை அவனுக்குப் பரிசளித்தாள் மதுமிதா… அந்தப் பார்வையில் களவுப் போக இருந்தவன் தன்னைச் சுதாரித்து… “உங்கள் கைகளால் எடுத்துத் தரும் அளவுக்கு எங்களுக்குத் தகுதி இல்லையா… இந்தப் பொம்பளைப் பொறுக்கி எதாவது பண்ணிருவானோ என்ற பயமா?” என்ற கணவனின் வார்த்தைகள் எல்லாம் அவளைச் சுக்கு நூறாக உடைத்து எறிந்தது.



கண் கலங்கியவளுக்கு எப்படிக் கணவனைச் சமாதானம் செய்ய என்று தெரியவில்லை.

சில மணித் துளிகள் தயங்கி நின்றவள்…‌ மனதில் ஒரு முடிவோடு அவன் அருகில் வந்தாள்.

அவன் அருகே இருந்த சாமிப் பிரசாதத்தைக் கையில் எடுத்தவள்… அதில் இருந்து ஒரு வாய் அளவு அவனுக்கு ஊட்டி விட அவன் வாயருகே கொண்டு போனாள்… இதைச் சற்றும் எதிர்பாராத கதிர் வேந்தன்… அவளை விழி அகலப் பார்த்தான்.



அழுது கொண்டே போவாள்… இல்லையென்றால் சண்டைப் போடுவாள்… என்ற அவன் எதிர்பார்ப்பைத் தகர்த்தாள் அவன் மனையாள். அவன் வாயருகே இருக்கும் உணவை வாங்கி உண்டவன் அவளையே பார்த்தான். அந்தப் பார்வையின் சக்தியைத் தாங்க முடியாமல் முகம் தாழ்த்தியவள், பின் மெல்ல அவன் அருகே குனிந்து, "இப்படி உங்களுக்கு ஊட்டி விடும் உரிமை எனக்கு இருக்கிறது... அதே போல்" என்று மேலும் அவன் அருகே நெருங்கியவள்… “உங்கள் பிள்ளையச் சுமக்கும் உரிமை எனக்கு மட்டும் தான் இருக்கு” ... என்று தன் உரிமையின் அளவை வார்த்தைகளில் கூறி, “அதற்கு நீங்கள் இப்படி விலகி என்னைத் தள்ளி நிறுத்தினால்… எப்படி உணர வைக்க நான்” என்றவள். அவன் உணரும் முன்னே அவள் சிட்டாகப் பறந்தாள்…



அவள் சென்ற வழியே பார்த்தவன்… எப்படி எல்லாம் பேசுகிறாள் பாரு, என்று அவள் கூறிய வார்த்தைகளில் முகம் சிவந்தது அவனுக்கு.. மெல்ல நம்மையே வெக்கப் பட‌வைக்கிறாளே! இருடி… நீ‌, சொன்னதெல்லாம் நடக்கும் போது வச்சுக்கிறேன் என் கச்சேரியை… என்று மனதில் பேசியவன் தன் வேலையைத் தொடர்ந்தான்.



கணவனின் மனம் புரியத் தொடங்கியது… ஆனாலும் அவன் அவளைத் தள்ளி நிறுத்தி இருக்கும் எல்லையைக் கடக்க அவன் சொன்ன வார்த்தைகள் வேலியாக அவளைத் தடுத்து நிறுத்தி வைத்திருந்தது. காற்றைத் தடுக்க வேலிகளால் முடியாது... காதலும் வாயு போல நாம் அறியாத வண்ணம் நம்மூள் கடந்து பல மாற்றங்களை நிகழ்த்தும்…



இங்கே யாருக்கெல்லாம் இந்த மாற்றம் நிகழ்கிறது என்று வரும் காலங்களில் தெரிந்து விடும்.



மித்ராவோ தன் அறைக்கு வந்ததும் தன் மகனிடம் ஏன்டா இப்படிப் பண்ணற என்று கண்ணீர் மல்கக் கேட்டாள். பிள்ளைக்கு என்ன தெரியும் கள்ளமில்லாத மனதில் அன்பு மட்டுமே உணரும் தெய்வமல்லவாப் பிள்ளை. தாயையைப் பார்த்துச் சிரித்தான் வேதாந்த்…

நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள் எனக்குப் பிடித்தது நான் செய்வேன் என்பது போல் தோன்றியது அவளுக்கு.

பிள்ளையின் சிரிப்பில் சிலுவைகளை மறந்தாள்… இனி தருணிடம் பிள்ளையை விடக் கூடாது என்று மனதில் நினைத்தாள்… அவளால் நினைக்க மட்டுமே முடிந்தது.



ஆம்.. அவள் கல்லூரிக்குச் சென்றபின் தருணோடு மட்டுமே நாள் முழுவதும் இருப்பது அவளுக்குத் தெரியாமல் போனது. நாட்கள் ரயில் பெட்டிகளைப் போல நம்மைச் சுமந்து கொண்டு முன்னோக்கிப் பயணிக்க... துயரங்கள் எல்லாம் கடந்த காலத்திலேயே நின்றது.



மித்ரா, கல்லூரியில் தன் கவனத்தைச் செலுத்திப் படித்தாள்.

அவள் அமைதியைக் கண்டு, சீனியர் ஒருவன் அவளைக் காதலிப்பதாகக் கூறினான்.

அதைக் கேட்டவளுக்குக் குளிர்க்காய்ச்சல் வரும் போல ஆகியது. உடல் நடுங்கப் பயத்தில் கைக்கால்கள் தந்தியடிக்க ஆரம்பித்தது.



தன் தோழியின் பயம் கண்ட ஜோதி… அந்தச் சீனியரை நேரில் கண்டு … "சீனியர்…நீங்கள் பார்க்கும் மித்ரா, என் தோழி தான்…அவள் திருமணம் ஆனவள்… அவளைத் தினமும் அவள் கணவன் தான் வந்து கூட்டிட்டுப் போவாரு" என்று மித்ராவின் பிரச்சினையைத் தீர்த்து வைத்தாள்.



அடுத்த நாளில் இருந்து அந்தச் சீனியர் தொந்தரவு இல்லாமல் போனதில்… “எப்படித் தெரியவில்லை டி அந்தச் சீனியர் இப்போதெல்லாம் டிஸ்டர்ப் பண்றது இல்லை” என்றாள் ஜோதியிடம். “பார்ரா” என்று கேலிச் செய்த அவளின் செயலிலேயே அவள் தான் ஏதோ சொல்லி இருக்கிறாள் என்று புரிந்தது.



“என்னடிச் சொன்னாய் அவனிடம்” என்றவளிடம்…

“உண்மையைச் சொன்னேன்” என்றாள் ஜோதி.

“விளையாடாமல் என்ன சொல்லுடி” என்ற மித்ராவிடம்…

“உனக்குத் திருமணம் ஆகிருச்சு… உன் கணவர் தான் தினமும் வந்து அழைச்சுட்டுப் போவார் என்று சொன்னேன்” என்றாள் ஜோதி. இந்தப் பதிலில் என்ன சொல்ல என்று தெரியாமல் மௌனமாகிப் போனாள் மித்ரா. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று புரியவில்லை. ஜோதியிடம் உண்மையைக் கூறவும் பயம்… அவள் தன்னைத் தவறாக நினைத்து விட்டால் என்ன செய்ய.. அவளுக்கு என்று உண்மையான ஒரு நட்பு அவள் மட்டுமே… அதனால் வேறெதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்து விட்டாள் மித்ரா.



தருணைக் காணமல் சிறிது நேரம் கூட இருக்க முடியாமல் அழுவதற்குப் பழகி இருந்தான் வேதாந்த். அன்று கல்லூரி விடுமுறை என்றதால் வீட்டில் இருந்தாள் மித்ரா.

அவள் கல்லூரிக்குச் சென்றதும்... தருணுடன் வெளியே சென்று பழகியதால் அன்றைக்கு வெளியே போகவேண்டும் என்று வாயில் புறமாகக் கையைக் காட்டி அழுதுக்கொண்டு‌ இருந்தான் வேதாந்த். அவள் என்ன சொல்ல வருகிறான் என்று புரியாமல் தினறிய மித்ரா... பையனை எடுத்துக் கொண்டு கீழே வந்தாள்.



குழந்தையின் அழுகையைக் கேட்டவாறே வந்த ராதிகா… “பார்த்தீங்களா அண்ணி …‌ உங்களுடைய பேரனுக்கு நன்றாகத் தெரியுது.. இந்நேரம் வெளியே போகணும் என்று… நேரத்தைப் பார்த்தீங்களா…தருணுடன் அவன் வெளியே போகவேண்டிய நேரம் இதென்று சொல்லாமல் சொல்றான் ”... தினமும் நடப்பதைப் போட்டு உடைத்தார் ராதிகா.



தன் அத்தையின் வார்த்தைகளைக் கேட்டு உள்ளுக்குள் அதிர்ச்சியானாள் மித்ரா… நாம் என்ன நினைக்கிறோம்... கடவுளே… நீ ஏன் என்னை இப்படி இக்கட்டில் மாட்டி விடுகிறாய் என்று‌ மனதில் புலம்பியவள்…



“இல்லை அத்தை அவனைத் தூங்க வைத்தால் சரியாகிருவான்” என்று மீண்டும் தன் அறைக்குச் சென்றாள் மித்ரா.



“நீ முயற்சிப் பண்ணிப் பாரு மித்து… அவன் வாசம் இல்லாமல் உன் பையன் தூங்க மாட்டான்” என்று கேலிச் செய்தவர்…‌ மேலும் “வேண்டுமானால் ஒன்று செய்... தருண் உடையில் அவனைப் படுக்க வை… அவன் வாசத்தில் தூங்க வாய்ப்பு இருக்கிறது. நான் சில நேரங்களில் அப்படித் தான் பண்ணுவேன் மித்து... நைட்டெல்லாம் அவனுடனே தூங்கிப் பழகி விட்டான் குட்டி… இப்போதெல்லாம் நன்றாகச் சேட்டைச் செய்கிறான்” என்று பல அதிர்ச்சிகளை ஒரே சமயத்தில் கொடுத்து விட்டு அவருடைய வேலையைச் செய்யப் போய் விட்டார்‌ ராதிகா.



ராதிகா, சொன்னது போலத் தருண் வராமல் அழுது அழுதுப் பிள்ளைக்குக் காய்ச்சலே வந்து விட்டது. ஆனாலும் அவனை அழைக்க மறுத்து விட்டாள் மித்ரா. பானுமதி…தருணை அழைக்கலாம் என்று கூறியதற்கு 'இதுவே பழகிரும் அம்மா வேண்டாம்' என்று பிடிவாதம் பிடித்தாள் மித்ரா… இன்று ஒரு நாள் அவளுக்கு விடுமுறை... அவளுடன் குழந்தை நேரத்தைக்கழிக்கட்டும் மென நினைத்து வேதாந்தை எடுக்க வரவில்லை தருணும்.



வேலைப் பளுக் காரணமாக மாலையில் அவன் வருவதற்கு நேரமானது.

வீட்டிற்கு வந்தவனுக்கு வேதாந்திற்கு லேசாகக் காய்ச்சல் என்று கேட்டதும் “காலையில் போகும் போது நன்றாகத் தானே இருந்தான் எப்படித் திடிரென" என்று கேள்விக் கேட்டான் ராதிகா விடம்.



அவன் அழுததைக் கூறினார். அப்போது ஏன் என்னை அழைத்துச் சொல்ல வில்லை என்று மித்ராவை முறைத்தான். அவன்‌பார்வையில் எதுவும் பேசாமல் பிள்ளையை அவனிடம் கொடுத்து விட்டுச் சென்றாள் மித்ரா.



இரவு உணவினைத் தன்னுடைய அறைக்குக் கொடுத்து விடுமாறுச் சொல்லியவன்... பிள்ளையோடு அறையில் ஐக்கியம் ஆனான் தருண். நேரமானதில் இன்னும் தூங்காமல் விளையாடிட்டு இருப்பான் மகன் என்று நினைத்தவள் அவனைத் தூக்கிக் கொண்டு வந்து உறங்க வைக்கலாம்... தருணுக்கும் சோர்வாக இருக்கும்… அலுவலக வேலை அவனைப் படுத்தி எடுத்து இருக்கும் பாவம் என்று நினைத்தவள்... தருண் அறைக்குப் பையனை எடுக்க வந்தவள் அதிர்ச்சியில் நின்று விட்டாள்…



ராதிகா, தன்னைத் தேடி வந்து விட்டார் என்று கண் திறந்தவனுக்கு... தன் பிள்ளையின் தாய் என்றதும் முகம் கடுமையேற…

“என்ன” என்றான்...

“இல்லை தம்பியை வாங்க வந்தேன்… அத்தைச் சமையலறை இருக்காங்க… அது தான்” என்றாள் உள்ளே போன குரலில்...

"ஓ" என்றவன் தன் மார்பில் உறங்கும் பிள்ளையை எடுத்ததும் தான் தாமதம்... அழ ஆரம்பித்தான் வேதாந்த் ...



அவன் அழுகையில்…”சரி டா, செல்லம்… ஒன்னும் இல்லை… ம்ம் நீ தூங்கு”… என்று தட்டிக் கொடுத்ததும் மீண்டும் உறங்கினான் குழந்தை ... என்ன செய்ய என்று தெரியாமல் தவித்தாள் மித்ரா ...



அவளைப் பார்க்கப் பாவமாகத் தோன்றியதால்… “சரி நீ‌, போ‌‌... நான் அவனை அங்கே கொண்டு வந்து படுக்க வைக்கிறேன்” என்றான்... அவளும் சரி எனத் தலையை ஆட்டியபடி வேகமாக அங்கிருந்துச் சென்றாள்...



தருணோ… இரவு நேரத்தில் அவன் அறைக்குத் தன் தாயை மற்றும் கதிர் வேந்தனைத் தவிர வேறு யாரும் வரமாட்டார்கள் என்பதால் வெறும் அரைக்கால் சட்டை மட்டுமே உடுத்தி இருந்தான்...

அப்படியே அவளறைக்குள் வந்தனைக் கண்டு அதிர்ந்துப் போனாள் மித்ரா...



'என்ன இவர் இப்படியே வராரே' என்று நினைத்தவள்... பையன் தந்து விட்டுப் போயிருவான் என்று... தன் உணர்வுகளை எதையும் காட்டாமல் ஒதுங்கி நின்றாள் கதவைத் திறந்து விட்டு...

உள்ளே வந்து பிள்ளையைப் படுக்க வைக்கவும்… அவன் மீண்டும் அழுக ஆரம்பித்தான்... சில நேரங்களில் குழந்தைகள் எதற்கு அழுகிறோம்‌ என்று தெரியாமல் அழும்… வேதாந்தும் அதையேதான் செய்து தன் தாயைச் சோதித்தான்.



“ உனக்கு என்ன ஆச்சுத் தங்கம் இன்றைக்கு”… என்ற படி அவள் படுக்கையில் படுத்தவன் பிள்ளையைப் உறங்க வைக்கத் தொடங்கினான். இதையெல்லாம் பார்த்து மித்ராப் பயத்தில் நடுங்கியபடி…



“யாராவது பார்த்தால் என்ன நினைப்பாங்க.. நீங்க போங்க நான் அவனைப் பார்த்துக் கொள்கிறேன்” என்றாள்...



அவளைப் பார்த்து முறைத்தவன்... “நீ என்ன நினைக்கிறையோ‌ அதற்கெல்லாம்‌‌ இப்போது எனக்கு ஐடியா இல்லை , ரொம்பச் சோர்வாக இருக்கு... தலைவலி வேறு... நீ‌, போய் ‌எனக்கு டீக் கொண்டு வா‌‌... சும்மா நின்று வேடிக்கைப் பார்க்காமல்” என்றவன் மெல்லக் கண்களை மூடிப் பையனை மெல்லத் தட்டித் தட்டி உறங்க வைத்தான்.



அவன் கூறியதைக் கேட்டுக் கோபம் வந்தாலும்… ஒரே‌ அறையில் அவனின் இந்தக் கோலத்தைக் காணச் சகியாமல் அவனுக்கு டீ‌‌ வைக்க வேகமாகக் கீழே வந்தாள்...

நன்றாக அவனை வசைப் பாடியப் படித் தயாரித்த டிக்கோப்பையோடு தன் அறைக்கு வந்தவள் அவனைப் பார்க்க... “ஒஒ டீக் கொண்டு ‌வந்திட்டியா”என்றவன் ஒரு நிமிடம் என்று சைகையில் சொன்னவன் மிகவும் கவனமாகச் மித்ராவின் மகனைப் படுக்கையில் கிடத்தினான். அவன் பனியனைத் தலையணையில் விரித்துக் கிடத்தி இருந்தான் அவனை... அதைப் பார்த்து மேலும் அதிர்ச்சியில் உறைந்தாள்‌ மித்ரா...



அவளின் மனநிலை உணர்ந்தவன்...அவளிடம் இருந்து டீக் கப்பை வாங்கியவாறு… “அதொன்றுமில்லை… நான் அவனுடன் இருக்கேன் என்ற உணர்வில் ஆழ்ந்து தூங்குவான்... அழ‌ மாட்டான்‌… அது தான் இப்படி... நான் நைட் இப்படித் தான் அவனை இவ்வளவு நாட்கள் தூங்க வைப்பேன்” என்றான்...



“அப்போ இவ்வளவு நாளும் தம்பி”... என்று இழுத்தவளிடம்



“ஆமாம் நான் தான் வைத்திருந்தேன்… அம்மா என்னிடம் தந்துட்டுத் தூங்கப் போயிடுவாங்க... பாவம் வயசானவங்க இல்லையா… அது தான்” என்று கூலாகக் கூறியவாறே தன் அறைக்கு வந்தான் தருண்...

மித்ராவின் ஒவ்வொரு செயலிலும் அவனுக்குச் சிரிப்பு வந்த போதும்… அதைக் காட்டிக் கொள்ளாமல் அவள் முன்னே மிகவும் சீரியசாக இருந்தான். அப்போது தான் அவளைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என‌ எண்ணி இருந்தான்... அவன் நினைத்தது சரியே என்பது போல அவனின் இறுகிய முகத்தைப் பார்த்துப் பயந்துத் தான் போனாள் மித்ரா. அதனால் அவனிடம் எதுவும் நேரடியாகப் பேசாமல் இருந்தாள்…



படுக்கையில் படுத்துவனுக்கு உறக்கம் கண்களை எட்ட வில்லை. அமைதியாகத் தோட்டத்திற்கு வந்தவன் அங்கே போட்டு இருக்கும் பெஞ்சின் அருகே வந்த அமரப்போனாவன்… அங்கே ஏற்கனவே படுத்து இருக்கும் கதிர் வேந்தனின் காலில் போய் அமர்ந்து விட்டான்…



ஐயோ… அம்மா என்று கத்தியவாறே எழுந்து அமர்ந்தவன்... பதறி எழுந்து நிற்கும் தருணைக் கண்டு மலைமாடே... பார்த்து உக்கார மாட்டாயா… என்று கத்தினான் கதிர்வேந்தன்.



"எனக்கென்ன தெரியும் இந்த எருமை மாடு, இங்கே படுத்து இருக்குமென்று" என அவனைப் பதிலுக்குத் திட்டினான் தருண்.



"ஆக மனுஷங்க இல்லை நீங்க இரண்டு பேரும்" என்றபடி வந்தார் ராதிகா.



"என்னம்மா நீங்க தூங்க வில்லையா?" என்று கேட்ட மகனிடம் "நீங்கள் என்னடா, பண்ணறீங்க" என்று எதிர் கேள்விக் கேட்டார் ராதிகா.



ஆஃபீஸில் நாளைக்கு ஒரு மீட்டிங்... அதைப் பத்திப் பேச வந்தேன் இவனிடம் என்று சாதாரணமாகக் கூறியதும் அவன் வார்த்தைகளை நம்பி…‌ நேரகாலமாகத் தூங்கப் போங்க... எல்லாம் காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று தன் அறைக்குச் சென்றாள் ராதிகா.



அவர் சென்றதும் “என்ன டா, புது மாப்பிள்ளை… இங்கே இப்படித் தோட்டத்தில் படுத்துட்டு இருக்க... என் தங்கச்சி அடிச்சு விரட்டி விட்டாளா” என்று சிரித்தான் தருண்.



"ஏன் டா… நீ வேற"… என்று நகர்ந்து அமர்ந்தான் கதிர்.



"என்ன ஆச்சுச் சொல்லுடா ‌…சொன்னால் தானே தெரியும்... என்ன பிரச்சினை என்று" கேட்டான் தருண்.



"மித்து வீட்டில் கொண்டு வந்து விடுவதற்கு வந்தவளைப் பலவந்தமாகக் கல்யாணம் பண்ணி இங்கே பிடித்து வைத்து இருக்கிறேனோ தோன்றுகிறது. சின்னச் சின்ன விஷயங்கள் கூடக் கேட்டாள் தான் பண்ணித்தாரா டா… இன்றைக்குக் கோயில் சென்று வந்தவள் பிரசாதம் கூட உரிமையாகத் தருவதற்குத் தயங்குறாள்.‌ அதைப் பார்த்து வேதனையாக இருக்கு டா… எனக்கு வாழ்க்கை நார்மலா வாழ முடியாதா டா… உண்மையாக மனதில் ஏக்கங்கள் அவ்வளவு இருக்கிறது தெரியுமா…



ஏன் டா, தருண்... காதலிப்பது அவ்வளவு பெரிய தவறா டா… அவள் தந்தையிடம் இருந்து என் காதல் சொல்லிச் சம்மதம் வாங்கிட்டேன் டா... இவள் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் நானாக ஒன்றை நினைத்து... செய்த எல்லாமே பிழையாகிப் போச்சுடா… என் வாழ்க்கையை விடு… அவள் வாழ்க்கையில் நான் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டேன் என்று என் மனசாட்சித் தினமும் கொல்லுது... போறேன் என்றவளைப் போக விட்டு இருக்க வேண்டுமோ! என்று நீளமாகப் பேசித் தன் மனப்பாரத்தை இறக்கி வைத்தான் தன் நண்பனிடம்.



கதிர் வேந்தனின் துயரம் மற்றும் மனக் குழப்பம் எல்லாம் பொறுமையாகக் கேட்டவன்…

நீ உன்னோட மனைவியைத் தானே மீண்டும் தாலிக் கட்டி இருக்க… உன்னோட மனைவியாகத் தான் உன்னை விட்டுச் சென்ற பின் வாழ்ந்து இருக்கிறாள் கதிர்…



அந்த உரிமையில் மித்துவைத் தன்னுடன் கூட்டி வந்து அவளுக்குப் பிரசவம் பார்த்து... அம்மா ஸ்தானத்தில் இருந்து எல்லாமே சரியாகச் செய்து இருக்கிறாள். அவள் கடமையை அண்ணியாக மருமகளாகச் சரியாகச் செய்து இருக்கிறாள். ஒரு மனைவியாக அவள் கடமையைச் செய்வதற்கு முதலில் உங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் தவறான புரிதல் சரி செய்ய வேண்டும் கதிர்... அதை விட்டுவிட்டுச் சும்மா என் தங்கையைச் சந்தேகம் படாதே…அவள் பாவம் டா…அவளுக்கு மனதில் பல ஆசைகள் இருக்கும் தானே அதையும் நீ யோசிக்கணும் டா‌” என்றான் தருண்.



அவள் மேல் சந்தேகம் எல்லாம் இல்லையடா... பிடிக்காத பந்தத்தில் இணையும் கஷ்டம் உனக்குப் புரியாதுத் தருண், என்ற கதிர்வேந்தனின் வார்த்தைகளை எல்லாம் அறையில் அவனைக் காணவில்லை என்று தேடி வந்தவள்... அங்கே அவன் வார்த்தைகளைக் கேட்டு இடி இறங்கியது போல் அதிர்ச்சியில் நின்றாள்.



மனதில் விருப்பம் இல்லாமல் தான் தன்னுடன் வாழ்ந்து கொண்டு இருக்கானா... தாலிக் கட்டிய பாவத்திற்குத் தன்னை அவர் வாழ்வில் இணைத்துக் கொண்ட கதிர் வேந்தனின் நிலை எண்ணி வருந்தினாள்.

இணைத்துக் கொண்ட உறவு…

முடியிட்டுப் பிணைத்தக் கொள்ளும் உறவிது…

விதிச் சேர்த்தி வைத்திருக்கும் இந்த உறவில்…

மதியால் பிரிவு வருமா…இல்லை உணர்வோடு உயிராகப் பிண்ணிக்கொள்ளும் உறவாகுமா…



தொடரும்…
 
Top