உமா கார்த்திக்
Moderator


அத்தியாயம் 05
மறுநாள் காலை
இனம் புரியாத உணர்வோடு நேற்று நடந்தவை எல்லாவற்றையும்.. அசை போட்டவாறு அவள் கல்லூரியில் உள்ள சிமெண்ட் நாற்காலியில் அமர்ந்திருந்தால் பவித்ரா.
மனமோ.. கொந்தளித்தது 'இன்னிக்கு என்ன காலேஜுக்கு டிராப் பண்ண ப்ரீத் வரல.. காலைல எங்க போனான் னு தெரியல, என்ன அவாய்ட் பண்றானா?
ஒரு மாதிரி கஷ்டமா இருக்கு .. ரொம்ப காயப்படுத்தி இருக்குமோ.?
ஏன் இப்படி விலகி போறான்.. ஒரு நாளைக்கு அவன் கூட பேச முடியாம போனாலும் தாங்கிக்க முடியல, நமக்கும் அவனை பிடிக்குமோ ? இது தான் காதலா?' தலையை பிய்த்து கொள்ளலாம் போல இருக்க.. ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவள்.. திட்டி தீர்த்தாள்.. மாமனை.
"பொறுக்கி விலகி போனால் லவ் வரும்னு சீன் கிரியேட் பண்ணுறான். பேசவே மாட்டானா? நான் ஏன் பித்து பிடிச்ச மாதிரி அவனையே நினைக்கிறேன்.. டேய் எங்க டா இருக்க..? முடியலை ப்ரீத்.. வாடா.. "என வாய்விட்டு புலம்ப,
அவள் முன்னே கீரிச்சிட்டு வந்து நின்றது சிவப்பு நிற உயர் ரக கார். யார் என்று பவி பார்வை உயர்த்த முற்பட, சிமெண்ட் நிற ஜீன்ஸ் பேண்ட் வெள்ளை நிற முழு கை சட்டை அணிந்து.. காரில் இருந்து வெளியே வந்தான் ப்ரீத்.
ஆச்சர்யத்தில் வாய் பிளந்தவளை கண்டு.மென்னகை புரிந்தவாறு அருகில் வந்து அமர்ந்தான ப்ரீத்.
" என்ன டா கார்ல வர்ற கார் யாரோடது சொல்லுடா.."
குரல் உயர்த்தி " ஏய்.. டா போட்டு கூப்டாத.. என் கார்தான். கல்யாணம் தான் இல்லை னு சொல்லிட்ட, அதான் மொத்த சேவிங்ஸ் ல கார் வாங்கிட்டேன். " தோளை உலுக்கினான்.
"நிஜமா? என்கிட்ட சொல்லவே இல்லை. கோவமாக முகத்தை திருப்ப
அவனோ " ஆமா.. யார் நீ .. உன்கிட்ட நான் ஏன் சொல்லனும்.?" பதில் சுளீர் என இதயத்தை சுட அவளின்
கண்களில் நீர் அறும்புவதை கண்டு உள்ளுக்குள் குதுகளித்தவனாய்.
" பவி.. உன் லிமிட்ல இருக்க கத்துக்க.. நான் ஒன்னும் உன் லவ்வர் இல்லை. பர்மிஸன் கேட்க, நேத்தோட நம்ம உறவு முடிச்சுடுச்சு.. சரியா.." முகத்தை திருப்ப
"ம்.. " என்றவள் கட்டுப்பாடு இல்லாம் கண்ணீர் வழிய.. வலது கையால் ஊதா நிற ஷாலின் நுணி கொண்டு கண்ணீரை துடைத்தாள்.
வலியோடு " எந்த உறவும் இல்லையா நமக்குள்ள.? இன்னைக்கு நீ இல்லாம தனியா காலேஜ் வந்ததயே என்னால தாங்க முடியல.. எப்ப நீ வருவனு துடிச்சுகிட்டு இருந்தேன். ஒ.. இப்பத்தான் என்னால எந்த யூஸ்..ம் இல்லை. அதனால நான் வேண்டாம பொய்ட்டேன். பரவாயில்லை.. அப்ப பாசம் எல்லாம் கிடையாதா என் மேல.?" குரல் வலியோடு தொடர்ந்தாள் "தெரியாம கேட்டுட்டேன் சாரி ஒரு நாள்ல.. " என அவள் ஒப்பாரியை ஆரம்பிக்கும் முன்
" போதும்.. டி" கைகளால் கண்ணீரை துடைத்து கண்ணங்களை அள்ளி.. முரண்டு பிடிக்கும் கோபக் குழந்தையின் முகத்தை உயர்த்தி தன்னை பார்க்கும்படி செய்தான் ப்ரீத்.
" அடியேய்.. பையத்திய காரி.. வாடகை கார் டி.. நீ இல்லாம என் வாழ்க்கையில எதுவும் நடக்காது. உரிமை குரல் ஓவரா இருக்கு. ஒன்னு விடனும இல்லை பிடிக்கனும்.. இது என்ன?மதில் மேல் பூனை மாறி எந்த பக்கம் போக விடாம என்னை ஆட்டி வைக்கிறே? அண்ணன்னு சொல்லிவேனா ராக்கி கட்டிரு. இல்ல புருஷன் சொல்லி தாலி கட்டிக்கோ.. இது ரெண்டும் இல்லாம நீ அண்ணனும் இல்ல புருஷனும் இல்ல அப்ப நான் யாரு உனக்கு..?"
"மாமா.." என்று அவனை பார்த்து பவி கண்ணடிக்க "என்ன மாமா வெட்கமா?" அவன் முகம் பார்த்து.
"ஜிவ்வுனு ஏறுதே... அடியே.. போதும் நார்மலா பேசுவோமா."
"பேசலாமே சொல்லுங்க மாமா.."
"மாமானு கூப்பிடாதடி.. ஒரு மாதிரி வெட்கமா ஆகுது." இதழ் மடித்து சிரிக்க.
"அழகு... காற்றில் அள்ளி நெட்டி முறித்தாள். அத்தை மகள். அம்மாவ திருஷ்டி சுத்தி போட சொல்லனும் மாமா."
"பவித்ரா... என்ன பாரு.."
"பவி... னு சொல்லு என்ன பவித்ரா.. அது எனக்கு பிடிக்கலை.."
" பவி.. ப்ரீத் இனிமே உன் வாழ்க்கையில இல்ல. நீ நிம்மதியா இருக்கலாம்.
யார வேனா காதலிக்கலாம். யார் கூட வேனா சுத்தலாம்.. சுதந்திர பறவையா பறக்கலாம்.. யார பிடிக்குது சொல்லு அவங்கள உனக்கு கல்யாணம பண்ணி வைக்கிறேன். சரியா.. நான் டெல்லி போறேன் என் ப்ரண்ட் ஒட கம்பேனியில பார்ட்னர் ஆ.. ஜாய்ன் பண்ணி இருக்கேன். ஊர விட்டு போறேன் .. உன்ன விட்டும் போறேன்.. சொல்லிட்டேன் கிளம்புறேன். பாய்.
கண்ணீர் துளிர்க்க
" பழி வாங்க முடிவு பண்ணிட்டியா? இங்க கூட அவங்க பிரான்ச் இருக்கே? " பிரிவதால் நேரும் தவிப்போடு கேட்க.
அவனோ..."மூச்சு முட்டுது.. பவி.. நன்றிய காட்ட நான் தான் கிடைச்சனா ?" அவள்சொன்னதை போன்ற பாவனையில் சொல்லி காட்ட,
அது ஏதோ..கோபத்துல என்று இழுத்தாள்.
" நிம்மதியா இருங்க..பவித்ரா.. நான் போன அப்பறம் உலகம் என்னனு புரியும்.. அன்புக்காக ஏங்குவ." கையை கட்டி அழுத்தமாக சொன்னான் ப்ரீத்.
" சாபம் விடாதடா.. நீ இல்லாம எப்டி நான் இருப்பேன். போகாதடா.. ப்ளீஸ் "
" நடிக்காதடி .. எப்ப போவேனு தான இருந்த .. பாவம் பவி நீ.. இனிமே பஸ்ல காலேஜ் வரனும் ..உன் காலேஜ் ஃபீஸ் நீயே கட்டனும்.. பச்.. காலேஜ் என்ட்டர்ன்ஸ் ல இருந்து ஒரு நாளாவது கிளாஸ் ரூம்.. நடந்து போய் இருக்கியா? கொண்டு போய்.. வாசல்ல இறக்கி விடனும்.. நடக்க மாட்டாங்க.. மேடம்.. " குறையை அடுக்கி தன் பெருமை பீத்திக் கொண்டான்.
பவி அடிப்பட்ட பார்வையோடு. "இந்த ஆடு கோழி வளர்பாங்கள்ல அது மாதிரி தான் நீ என்ன பாக்குற, நான் உன்ன லவ் பண்ணலனா நீ.." கண்ணீர் வழிய.. " கணக்கு எதுவும் எழுதி வைச்சி இருக்கியா.. டா " கொட்டி விட்டது கண்ணீர்.
" ம்.. வச்சி இருக்கேன். பெரிய லாங் சைஸ் நோட் முழுக்க, தண்ட செலவு .. ம்...கும். " என்று மாமன் சலித்துக கொள்ள,
" இங்க பாரு காலேஜ் முடிஞ்சதும்.. வெர்க் போயி..கண்டிப்பாதிரும்ப கொடுத்துடுவேன். "
" ம்..கும் ... நீ கொடுத்துட்டாலும், ஒருவேளை பணத்தை நீ.. கொடுத்துடலாம் பாதாம் முந்திரி, பிஸ்தா.. எல்லாம் ஊட்டி உன்ன செதுக்கி வச்சுருக்கனே.. அத எப்டி கொடுப்ப?"
மாமனை சந்தேகமாய் பார்த்து " எதை கொடுக்கனும்.. உனக்கு " என்று முறைக்க.
" கார்ல போய் பேசலாமா ?
கொடுக்கல் வாங்கல் உள்ள போய் பாத்துகளாம்..வா. " கை பற்றி இழுத்து சென்று காரில் அமர வைத்து பின் காரில் ஏறி..சீரான வேகத்தில் பயணித்தான். "
பவி வெறுப்பை நிரப்பி அவனை பார்த்தவள். "எங்க கூட்டிட்டு போற.?"
" வரும் போது புரியும்.. இன்ப அதிர்ச்சிக்கு ரெடியா இரு பேபி.." கார் வேகமெடுக்க நடக்கப் போவது புரியாமல் அமர்ந்து கொண்டாள் பவித்ரா
கார் ஐ ஒட்டிக் கொண்டு பேச்சை ஆரம்பித்தான் " பவி.. அழகா இருக்க, இந்த டாப்.. எங்க எடுத்தோம்? ஆயிரத்து ஐநூறு ரூவா தானே.. இதுதான் வேணும்னு அடம் பிடிச்சியே. "
" சொல்லி காட்டுறியா? இல்லை, ஆசை காட்டுரியா.? நீ இல்லைனா எனக்கு எதுவும் கிடைகாதுனு மறைமுகமா குத்தி காட்டுறியா? என்ன ஹான் " பவி கோபமாக கேட்க.
" இல்லை..நான் இல்லைனா யார் உன்ன கடைக்கு அழச்சுட்டு போவா.." என்று கண்ணை கசக்கி..போலியாக அழ
" நீ தான். மாசம் மாசம் வருவல்ல ?" பதிலுக்காக அவன் விழிகளை பார்க்க.
" ம்..கும்.. வாய்ப்பில்லை.. நான் ஏன் வரனும் உனக் தான் என்ன பிடிக்காதே.. "
" கார் ..அ நிறுத்து, என்ன பாரு.. நான் உன்ன வெறுக்க நீ டிராமா பண்ணுற னு .. ஒபனா தெரியுது.. டா "
" என்னால நடிக்க கூட முடியலை பவி.. கிளி மாதிரி உன்ன வளர்த்துட்டேன்.. எந்த பூனை கிட்டயும் போய் மாட்டிகாத " ஆதங்கமாக சொல்ல
" ம்... அப்ப நீயே நல்ல மாப்பிள்ளைய பாரு.." என வெறுப்பேற்ற.. சினத்தில் சிவந்து
" ம்.. பாக்குறேன். உனக்கு ஏன் டி என்ன பிடிக்கலை. ? கொஞ்சம் பொசஷிவ் .. மத்தபடி நல்ல பையன். தெரியுமா " விழிகளால் ஏற்க கெஞ்சினான்.
"உன்ன ரொம்ப பிடிக்கும். அதனால தான் சொல்லுறேன்.. நீ வேணா எனக்கு " காரணமாக மறுத்தாள்.
" இது ரொம்ப புதுசா இருக்குடி .. உன்ன பிடிக்கும் ஆனா நீ வேணா.. நியாயமா.. பவி.." என அவள் கையை பிடிக்க " இப்ப தேன் வடிய பேசுவ, நிஜம் வேற.. ப்ரீத். சண்டை வரும்.. சந்தேகம் வரும்.. உன் அளவுக்கு அதிகமான பொசஷிவ் ஃபீல் என்ன அழிச்சுடும். உரிமை இல்லாமலே சலங்கை கட்டி ஆடுற.. கல்யாணம் ஆச்சி அவ்வளவு தான்..!நீ கேட்கலாம், வேற யாரையும் கல்யாணம் பண்ணா.. சண்டை வராதா னு.. வரும் ஆனா எவ்வளவு பெரிய சண்டை வந்தாலும் என் மனசு காயப்படுமே தவிர உடையாது.. ஆனா நீ எதாவது சொன்னா.. நான் உடஞ்சிடுவேன் ..
கொலைகாரன் மாதிரி அவன அடிச்ச,தடுக்க வந்த என்னையும் அடிச்ச, உனக்கு நான் கட்டுப்படலாம்.. என்கிட்ட லவ் சொன்னவன இப்படி அடிக்கலாமா? உறுத்தலா இல்லை."
அலட்சியமாக "ஐயோ... எவ்ளோ லவ் அவன் மேல.. அவன மனசுல வைச்சிட்டு என்ன வேணாம்னு சொல்லுறியா.. டி "
" கொன்னுட்டு ஜெயிலுக்கு போய் இருப்படா.. திருப்பி அடிக்க முடியாத யாரையும் அடிக்குறது வீரம் இல்லை ப்ரீத். " கோபத்தில் கத்திட
நக்கலாக சிரித்து " எவ்ளோ... லவ் அவன் மேல "
" மனசாட்சியே இல்லாம யார்னே தெரியாத ஆள என் கூட சேர்த்து வைச்சு பேசுற.. சந்தேகம் மட்டும் ஒரு உறவுகுள்ள வந்துடவே கூடாது.. ப்ரீத். " அழுத்தமாக சொன்னாள் பவி.
" அது தாண்டி நானும் சொல்றேன்.வேற எவன கட்டினாலும் உன்னையும் என்னையும் சேர்த்து வச்சு சந்தேகப்படுவான்.
ஒரே வீட்ல எப்படி சும்மாவே இருந்தீங்கன்னு கேட்பான். " கார் ஸ்டேரிங்கை ஒங்கி அடிக்க..
" என் மாமா வ நம்பி ஒரு வீட்ல என்ன.. ஒரு ரூமுக்குள்ள கூட வாழ்க்கை முழுக்க இருக்கலாம்னு அப்படின்னு சொல்லுவேன்.."
" அட போடி..அப்படியே உத்தமன்னு எனக்கு அவார்ட் கொடுத்து உன்னை ஏத்துக்குவானுங்க " சலிப்பு தட்டியது குரலில்.
" அடுத்தவன் என்ன கொடுக்கிறது என் மாமாக்கு நான் அவார்ட் கொடுக்கிறேன்.. நல்லவன்டா நீ.."
அதான் இப்டி என்ன ஏமாத்துற ,இந்த தேவதை எனக்கு இல்லன்னா என் மனசு உடையாதா டி.."
" அத விடுடா,உண்மையில நீ நல்லவனா.? ஸ்கூல் படிக்கும் போது.. என்ன கண்டுகவே மாட்ட அந்த நந்தினி சனியன் பின்னாடி நாக்க தொங்க போட்டுட்டு அழையுவ "
" ஏய்..சனியன்னு சொல்லாத, மை ஸ்வீட்டி அவ."என்று முடிக்கும் முன் காளிதேவி கரங்கள் அவன் கழுத்தை இறுக்க
"பவி... வலிக்குது" கண் மேலே போகும் அளவு அழுத்தம் மாமன் கழுத்தில்.
கழுத்தை விடாமல் அழுத்தி " யாரு .. ஸ்வீட்டி?"
"நீ தான்டி செல்லம்"..
"அது.. "
பவித்ராவிற்க்கு பழைய மலரும் நினைவுகள் வந்தது.
ஹான்.. நான் முக்கியம் இல்லை இல்ல.. என மாமனை மிரட்ட காம்பஸ் கூர் முனையால் தன் கையில் ..கிழித்த வடுக்களை மெல்ல வருடியது அவள் விழிகள்.!!
" அது எப்படி.. டி.. நான் எவளயும் பார்க்க கூடாதுன் னு சண்டை போடுவ, கை ஃபுல்லா இப்டி கோடு போடுவ, கடிவாளம் போட்ட குதிரை மாதிரி உன்ன தவிர எவளையும் பார்க்க விட மாட்ட.. அதையே நாங்க செஞ்சா நாங்க சந்தேகப்படுறோம்..நல்லா இருக்குடி உன் நியாயம்.. "
"உன் மேல உள்ள பொசஷீவ் ல என்ன தான் நான் காயப்படுத்திக் கிட்டேன் நந்தினிய இல்லை. அடுத்தவன அடிக்கறது ரொம்ப ஈஸி.. வா..மாமா காம்பஸ் வாங்கி தர்றேன்.. சும்மா.. கிழி.. கிழி.. கிழி.. ரத்தம் சொட்ட சொட்ட சொல்லு "
" ஐ .. இவ சொன்னதும் கைய கிழிச்சு காதல காட்டுவேன் .. அடி போடி.. ஊசினாவே பயப்படுவேன். காம்பஸ் ல கிழிக்கனுமால்ல.. ஆள விடு "என்று ப்ரீத் கும்பிடு போட,
அழுவது போல் பாசாங்காய் " உனக்கு என் மேல பாசமே இல்ல எல்லாம் நடிப்பு. நோகாம இருக்க தானே.. பாக்குற, காதல் இருந்தா எவ்ளோ வலியும் தாங்கிப்பாங்க. உனக்கு என்மேல லவ்..வே இல்லை. மாமா.."
" ஏதாவது உசுப்பேத்தி விட்டு என்ன கொல்ல பார்க்கிறாயா.? உன் எந்த முயற்சியும் என் கிட்ட பலிக்காது "என்று புன்னகை மிளிர.. காம்பஸ் கிடைக்காமல் கத்தியால் தன் கைகளில் கோடிட்டான். நரம்புகள் அறுபட்டு உதிரம் சொட்ட சொட்ட .. அவளை நோக்கி " பவி.. என்ன தவிர யாருமே உன்னை பத்திரமா பாத்துக்க முடியாது என்கிற பயம் மட்டும் தான் மனசுல.. இருக்குடி"
" ஏய்.. சைக்கோ " அவசர அவசரமாக துப்பட்டாவை கழட்டி காயத்தை ரத்தம் கசியாதவாறு இறுக்கி கட்டினாள் பவித்ரா." அறிவு கெட்ட .. வனே.." என்று அழுது கதறி துடித்தாள் பவித்ரா. "ப்ரீத்.. எவ்ளோ ரத்தம் பாரு.. சும்மா.. தானே சொன்னேன். ஏன்டா.?"
"எனக்கு வலிச்சா... உனக்கும் வலிக்குது.ஏன் பவி.." கர்வமாக கேட்க.. பதில் கூற முடியாமல் ஆறுதலாக பவித்ரா அவனை அணைத்துக் கொள்ள, அவள் முகத்தை உயர்த்தி கண்களை கலக்க விட்டவன். பதில் கூறாத இதழ்களை முற்றுகையிட ஆயத்தமானன்....
10 நிமிடங்களுக்கு பிறகு..
"வலிக்குதுடா..விடுடா "
"ப்ளீஸ்டி... இந்த வாட்டி கொடுத்துடுவேன்
கண்ண மூடு "
பவித்ரா -" ஏன் கண் மூட வேண்டும். என்பதை போல் முறைக்க..
தலையை உலுக்கி பின் "இல்லை பயமா இருக்கு. ப்ளீஸ் டி .." கெஞ்சினான் கிஸ் அடிக்க தெரியாதவன்.
போய்த்தொலை என சலிப்போடு கண்களை மூட,
மூஞ்சூர் எலியை போல வாயை குவித்து... ஆணி அடிதார் போல்.. அமர்ந்த நிலையில் அங்கேயே நின்றான் அவன்.
"இது வேலைக் ஆகாது. "என்று வெளிப்படையா புலம்பியவள் " டேய் நீ எல்லாம்.. அதுக்கு எல்லாம் சரிபட்டு வர மாட்ட ஏன்டா.. கூ...... னு வாய் வைச்சுட்டு இருக்க. " என்று வாயிலே அடித்தாள். "முத்தம் கொடுக்க கூட துப்பில்லை. நீ எல்லாம் கல்யாணம் பன்னி என்ன கிழிக்க போகுது. வேஸ்ட் பய ஊ...னு ரயில் வேணா ஒட்டலாம்.
"பவி" என்று அவன் அவமானத்தில் குழைய
"சீ..பே..என்று எரிந்த்து விழுந்தாள் பவித்ரா "
பிரதி நிகழ்காலத்தில் இதுவரை கதை கேட்டவள் ஆர்வம் தாங்காது.. "பவி..பவி..என்று அவளை உலுக்க, கதை அளந்தவள் நிகழ்காலத்தை அடைந்து."என்ன பிரதி.. முழுசா சொல்ல விடு. டி" என்று சொல்ல வரும் போதே தடுத்தால் பிரதி.
" ஒரு முத்தம் கூட அந்த ஆளுக்கு கொடுக்க வரலையா.!! " என்ற மகிழ்வில் துள்ளி குதித்து தன் அறைக்கு சென்று விட்டாள் பிரதி.
' அப்போ.. அவன் தான் டி.. என் புருஷன்.. என்று தன் மனதில் சபதமெடுத்தவாறு காதல் டூயட் பாட கற்பனைக் உலகிற்க்கு சென்றாள் பிரதி.
அவள் முகத்தில் எரியும் காதல் பல்பின் ஒளியை வைத்து ' டிரீமம்.. போல உண்மை என்ன னு தெரிஞ்சா தாங்க மாட்டாளே பிரதி..!
"அன்னைக்கு என்ன நடந்துச்சுனா ?" என கடந்த காலத்தில் நடந்த, நடக்கக்கூடாத சம்பவத்தை நினைத்து பார்த்தாள் பவித்ரா.
நடந்தது என்ன?அடுத்த எபிசோட்ல என்ன னு பாக்கலாம்.



உமா கார்த்திக்