எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம்-06

Status
Not open for further replies.
அத்தியாயம் _06

சுமதி -" ஆயிரத்து ஐநூறு ரூவாக்கு டிரஸ் வாங்கி.. ஒரு நாள்ல இப்படி கிழிச்சு வைச்சுருக்க.. என்று பவித்ராவை திட்டி தீர்க்க, எல்லாம் அவன சொல்லனும்.. கேட்குறத எல்லாம் வாங்கி தர்றான் பாரு.. காசோட அருமை தெரிஞ்சா இப்படி வீணாக்குவியா? "

" கிழிச்சதே அவன் தான். " என்று தாய்க்கு கேட்கதவாறு வாயோடு முணு முணுத்தாள் பவி.

" சின்ன புள்ளையாடி நீ... துணிய கிழிச்சுட்டு வர்றதுக்கு.. எறுமை மாடு மாதிரி வளந்துருக்க. " கிழிந்த சுடிதார் டாப்பை கையில் இருந்து கீழே வீச,

" எறுமை மாட்டா ல தான் மா..கிழிச்சது. "
"என்ன மாடா.?அது எப்டி கிழிக்கும். " மகளை சந்தேகம் நிறைந்த பார்வை பார்த்தார் தாய் சுமதி.

"மாடு முட்ட வந்துச்சா.. தப்பிக்க ஓடும் போது எங்கயாவது மாட்டி கிழிச்சு இருக்கும். ம்..மா. " என்று வெட்கம் வர மறைப்பதற்க்கு "எனக்கு தூக்கம் வருது. நான் போறேன் மா.." என சமாளித்து வேகமாக தனது அறையினுள் புகுந்து கொண்டு
அறை கதவில் சாய்ந்தாள் பவி. அன்று காரில் நடந்தவை யாவும் காட்சியாய் வர, மின்சாரம் பாய்ந்தது போல் உடல் உதறல் போட, தனது அறைக்குள் சென்று மெத்தையில் கவிழ்ந்தாள். மெத்தையில முகம் புதைத்து "மாமா.. " என மஞ்சத்தை முத்தமிட்டாள். கண்களை மூடிட ரிபீட் மோடில் .. தங்களது முத்த காட்சியை மனதில் ஒட விட்டாள். போதையானாள் பேதை. தாபத்தில் கண்கள மேலே நிலைகுத்தி நிற்க்க. தனிமை தாளாது , தலையணையை இறுக்கினாள். நல்ல வேளை அதற்க்கு உயிர் இல்லை.!!

" தலைவனை பிரிகையிலே தலையனை துணை அறிந்தேன் " என்று பாடியவரே.. காரில் நடந்த காட்சியில் மூழ்கினாள் பவித்ரா.

ப்ரீத் " பவி.. கொஞ்சம் லவ்வோட மாமானு கூப்டேன். "
காதோரம் கெஞ்சினான்.

வேண்டா வெறுப்பாக"மாமா" என்று அழைக்க.

"இப்டி இல்லை கண்ணை மூடிட்டு மாமானு சொல்லுடி."
'இவன் வேற ' என்று அலுத்துக் கொண்டு கண்களை மூடி. "மா... ம்...கும் .. " முனகல் சப்தம் வந்தது. முத்தத்தால் வார்த்தைகள் தினற.. விழிகள் இரண்டும் சிறகடிக்க.. அதிர்ச்சியில் ஆரம்பித்தது முத்த பாடம். ஒவ்வொரு இதழ் சுவைப்பும் இதுவரை இருவருமே அறியா இன்பத்தை வழக்க,
போதை ஏறிய விழிகள்.. உஷ்ணம் கொண்டு சிவப்பாக, பருவ உணர்வின் வெளிப்பாடாய் .. அழகை அளந்து பார்க்க ஆடவன் கைகள் குறுகுறுக்க, மெல்ல விரல்களை அவள் இடையோடு மேலே வருட..விரல்போர் தொடுக்கும் வீரனின் கரங்கள் எல்லை தாண்டும் முன். இறுக பற்றினாள் பவித்ரா.

விரல் போரை நிறுத்தலாம். ஆனால் இதழால் கண்ணத்தை வருடி..கழுத்தில் முகம் புதைத்து அவள் நெஞ்சில் குடியேற .. செய்வது அறியாது பெண் அவள் நாணத்தின் உச்சத்தை உணர்ந்து துடிக்க. " போதும்..ப்ளீஸ்.. மாமா " என்று மன்றாடினாள் பவி.

கேட்பேனா நான் என தலைவன் தாராளமாக இறக்கி தைத்த டைலருக்கு மானசீகமாக நன்றியை கூறி.. கழுத்து "ப" டிசைன் வடிவில் முழுதும்.. முத்தம் மிட்டு.. தோளில் உணர்ச்சி மிகுதியால் பல்தடம் பதிக்க.

"ஸ்..ஆ.. " வலியில் துடித்தாள். பின் கொத்தாக அவன் முடியை பிடித்து மேலே இழுக்க.. மிட்டாயை பிடிங்கிய குழந்தையாய பரிதவிப்புடன் அவளை ப்ரீத் ஏக்கமாக பார்க்க.

முறைப்போடு " என்னடா பன்ற?"
தலையில் இருந்து அவள் கையை உதறிவிட்டு "ஆராய்ச்சி .." என்றான் நகைப்போடு .

நாணத்தில் முகம் சிவக்க "ம்..பண்ணுவ பண்ணுவ..
விளையாட்டுக்கு சொன்னா.. இப்படியா..டா.? " என்று அதிர்ந்து " மொத்த உடம்புல பூகம்பம் வந்த மாதிரி இருக்கு." உடலை குலுக்கினாள் பவி.

" நீ.. தான் இதுக்கு சரிபட்டு வரமாட்ட னு சொன்ன ? இப்ப சொல்லு பாக்கலாம். " பெருமையாக சட்டையை தூக்கி விட்டு, அவள் முகத்தை பார்க்க.. தலை நிமிராமல் கூச்சத்தோடு போராட்டம் நடத்தினாள் பவித்ரா.

சுச்சுவேஷன் சாங். உபயம் நெடுஞ்சாலையில் சென்ற லாரி.. தூசி புகையோடு பாடலையும் சேர்த்தே உதறிவிட்டு போனது.

"ஆத்திரத்தில் தொட்டுப்புட்டேன்..
சாத்திரத்தில் விட்டுப்புட்டேன்..
ஆம்பளைய கிள்ளிப்புட்டேன்..
வீம்புபண்ண சொல்லிப்புட்டேன்..

எறைக்காத நீரு…இது எளம் பஞ்சு தேரு..
உருக்காத தங்கம்…இனி உனக்காக பொங்கும்…
:வெத்தலைய…நான் கிள்ளிக்கவா…
மத்ததெல்லாம்…மெதுவா சொல்லிக்கவா.. என்று
மெல்லியதாய் பாடல் முடிய..

பார்வைகள் மோதி.. ஒருவரை ஒருவர் விழிகளால் ருசிக்க..பவித்ரா பொய்யான கோபத்தோடு "வெட்கமா இல்லை? பிடிக்காம ஒரு பொண்ணுக்கு முத்தம் கொடுக்குற."

"பிடிக்கலையா?" என பயந்தது மாம்ஸ்.

" ஆமா.. திடீர் னு தனியா இருக்க பொண்ணு கிட்ட தப்பா நடந்துக்குற..சீ.. பேட் பாய்.. " என்று இதுவரை அடக்கிய சிரிப்பை .. அடக்க முடியாமல் சிரிக்க.

"அப்ப பிடிச்சுருக்கு.. " என்று துள்ளளோடு அருகில் அவன் வந்ததும், பயந்து ஜன்னல் புறமாக முகத்தை திருப்பினாள் பவி.

"திரும்புடி..பவி பச்..பாருடி.." சந்தணமாக அவன் குரல் குழைய..

"முடியாது முடியாது.. " விலகி அமர்ந்தாள்.

"ஏய்.. வாடி.."என்று அவள் கையை ப்ரீத் இழுக்க..
இழுத்த கையோடு வந்தது. அவள் சுடிதார் டாப் பின் 3/4 கையும்.. அவன் கையில் சேர்ந்தே வர, உடையை கிழித்த மாமனை கொலை வெறியோடு பவித்ரா பார்த்தாள். "சா..சா.. சாரி.. பவி இது என்னடி.? கையோடு வருது."

" எருமை மாடு புடிச்சி கிழிச்சா வராம என்ன செய்யும்.. இன்னைக்கு காலைல இருந்து நீ.. ஒரு மாதிரி நடந்துகிற.." முகத்தை திருப்பினாள்.

துப்பட்டா இல்லா சுடிதாருடன் ஒரு கை கிழிந்து நயன்டீஸ் (90S) ரேப் சீன் ஹீரோயின் போல அவள் காட்சி அளிக்க.!!

கலங்கிய குரலில் " இப்ப எப்டி நான் வீட்டுக்கு போறது.. ஸ்லீவ் லஸ் மாதிரி ஆக்கிட்ட டா..
உன் அத்தை கிட்ட மருமவன் லட்சணம் பாரு னு காட்டனும். தலையில் தூக்கி வைச்சு ஆடுதுல்ல அந்த சுமதி. " தன் தாயையும் காரணம் சொல்லி திட்டினாள் மகள்.

ப்ரீத் அவள் இடையோடு சேர்த்து அணைத்து பவித்ராவின் பின் கழுத்தில் முத்தங்கள் பதிக்க.! திண்டாடி நின்றாள் பாவை. மீசை முடிகள்
வன் முத்தத்துடன் காதல் ஊசிகள் போட.. சிலிர்த்துக் கொண்டே தவித்தாள் பவி. காரின் டோர் லாக் செய்யப்பட்டு இருப்பதால் தப்பிக்க வழி இல்லாது கத்தினாள்.
"டேய்.. லாக் ரிலீஸ் பண்ணு எனக்கு பயமா இருக்கு. " மாமன் திடீர் நடவடிக்கைகள் சரியில்லாதால் நிஜமான பயத்தோடு சொன்னாள்.திடீரென அவளை சீட்டில் தள்ளிவிட்டு விலகியவனை வியந்து ஒரு பார்வை பார்த்து "திருந்திட்டானா? "யோசனையில் நோக்க.அவன் கிழித்த சுடிதாரின் கையை அவள் முகத்தில் வீசிவிட்டு, விரலால் கலைந்த தலையை ப்ரீத் சரி செய்ய, ஒன்றுமே புரியாமல் விழித்தவளை. சுடிதாரின் கையை சுட்டி "கைய போடுடி.. அத்தை வீடியோ கால் பண்ணுறாங்க. " என்றதும்
மரண பீதியில் "அய்ய..ய்யோ.. " என்று அலறி.. வளையல் அணிவது போல் கை வழியே.. சுடிதார் ஸ்லீவ் வை நுழைத்து மேலே.. தோளில் ஏற்றி வைத்து,கார் சீட்டில் சாய்ந்து விழாதவாறு அழுத்தம் கொடுத்து அமர்ந்தாள் பவி.

"தலைய சரி பண்ணு டி ..குரங்கு பேண் பார்த்த மாதிரி இருக்கு "

விழிகளால் எரிப்பது போல் முறைந்தவள். "பேசுவடா.. பேசுவ.. அசைஞ்சா அந்த கை கீழ விழுந்துடும்..டா.. எருமை. " என பற்களை கடிக்க.

"சரி..இரு.. டி " தன கைகளால் அவள் கலைந்த முடி கற்றையை காதோடு ஒதுக்கி .. நெற்றியில் படிந்த வியர்வை துளியை. புறங்கையால் துடைத்து விட்டு "ப்ளீஸ்..டி இங்க நடந்தத சொல்லிடாத.. " மன்றாடினான்

" ம்..பாக்கலாம்.. இப்ப மட்டும் பம்முற... தைரியமான ஆளா இருந்தா இப்ப பண்ணு பாக்கலாம்.உங்க அத்தை முன்னாடி "

" கிஸ் வேணும்னா கேளு..தனியா தர்றேன். இப்ப உசுப்பேத்தாம
பேசு.. அத்தை கிட்ட, என போனில் ஆன் பட்டனை அழுத்தவும்.

சுமதி "பவித்ரா... நீ அங்க என்ன பண்ணுற.? என்னடி காயம்.. " என அதிர்ச்சியில் கத்த..அனிச்சையாக பவித்ராவின் கைவிரல்கள் உதடுகளை வருடி பார்க்க..!

ப்ரீத்" சோலி முடிஞ்சுடுச்சு"

சுமதி -"பவி உன்ன தான் கேட்குறேன்.?" என்ற தாயின் காட்டு கத்தலில் ஏசியிலும் எகுறிப்போனது
இதயதுடிப்பு
அவளுக்கு.
வேர்வை ஆறாய் வழிய..
நா வறண்டு வார்த்தைகள் வர மறுத்தது பாவைக்கு.

" அது... அம்மா.. நான்..நா.." என உளறல் ஒவரானது நாவில் .

ப்ரீத் -"என்ன கேக்குறீங்க னு புரியல்லை அத்தை. என்ன கேட்குறீங்க?" 'மாட்டுனா மர்கயா தான்.

"ப்ச்.. ப்ரீத் உன் கையில என்ன கட்டு.? எப்டி அடிபட்டுச்சு.. ப்ரீத்.. " என்றதும் தான் இருவருக்கும் உயிரே வந்தது.

அப்பாடா மோமன்ட் "கார் டோர் சாத்தும் போது கை மாட்டிடுச்சு அத்தை அதான். "நம்புற மாதிரி இல்லையே.. என அவனது அத்தையின் பார்வையே அப்பட்டமாக காட்ட,இப்போது பவித்ராவின் புறம் பார்வை திரும்பினார் சுமதி.

அதட்டும் குரலில் " பவி.. காலேஜ் முடிஞ்சு இன்னும் வீட்டுக்கு வராம என்ன பண்ணுற ?

தைரியத்தை வரவழைத்து பேசினால் " நான் வர.. தான்.. மா வந்தேன்.இந்த மாமா தான்." என்று பழியை அவன் பக்கம் திருப்பி விட்டாள்.

"மாமா..வா?" ப்ரீத் ம்.. சுமதியும் அதிர்ச்சியில் விழி விரித்து நோக்க.!!
மாமா சொல்லி தான ஆகனும்.. வாங்கிய அடிகள் அப்படி, மாமன் கூட இருந்தா பரவாயில்லை. தன்னாலே தான் ப்ரீத் டெல்லி செல்கிறான். என தெரிந்ததால். எப்ப சிக்குவாள் சிதைக்களாம் என்று கண் கொத்தி பாம்பாய் காத்து இருக்கும் தாயிடம் சிக்குவனா.. நான். என பர்பாமன்ஸ் பண்ணிக்கொண்டு இருக்கிறாள் பவி.

சுமதி -" புதுசா என்ன மாமா? சொல்ல சொன்ன கூட சொல்ல மாட்ட? என்ன திடீர் பாசம். எத்தனை நாளைக்கு இந்த கூத்து.. "சந்தேகமாக கேட்க ?

அன்னையின் துளைக்கும் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலைகுனிந்தவாறு " இனிமே எல்லாம் அப்படி தான் மா.. மாமா மேல எனக்கு மரியாதை கூடுது."

இளக்காரமாக பார்த்து " கூடும்..கூடும்."

இங்கு இடையோடு ஏதோ ஊர்வது போல உணர்ந்தவள். நெளிந்தவாறு இடையில் பார்வை பதிய விட, ப்ரீத்.. விரலால் வரிகள் இட,ஏன்டா.? ஏன்.. என்பதை போல பவி அவனை முறைக்க. 'நகர முடியாம இருக்கப்ப அட்வான்டேஜ் எடுத்துகிறான். பொறுக்கி.. கை மட்டும் கிழியாம இருந்தா.. ' என்று திட்டி, பார்வையால் அவனை எரிக்க. அவனோ சட்டையே செய்யாமல் அத்தையுடன் உரயாடினான்.

" ஈவ்னிங் தான் போறேன் . பொய்ட்டு போன் பண்றேன் அத்தை. பவிய பத்திரமா பார்த்துகங்க என்று அங்கே பேசியவன். இங்கே அவள் இடுப்பை கிள்ள.. திமிறி அவள் துள்ள..!

ப்ரீத் எதுவும் தெரியாதது போல் " என்ன ஆச்சுடா மா? எறும்பு கடிச்சுடுச்சா? பாப்பாவ ? "

பவி -'டேய்..டேய்..டேய்.. உலக நடிப்பு டா சாமி..'
" என்னாச்சி பவி மா? "

" ஒன்னும் இல்லை மாமா. " என்றாள் எரிச்சலோடு.

"அத்தை பூனை கிட்சன் உள்ள போகுது.." அத்தையை திசை திருப்பி விட,

'வீடியோ கால்ல மூஞ்சே ஒழுங்க தெரியாது. பூனை எப்டி தெரியும்.? உருட்டுனாலும் கூட ஒரு நியாயம் வேணாமா ?என் அம்மா மூஞ்சே தெரியலை.. மங்களா ஒரு உருவமா தெரியுது சுமதி..ஏதோ... ப்ளான் பண்றான்.' என மனம் எச்சரிக்கை செய்தது.

" பால் திறந்து இருக்கே."என அதிர்சியில் சுமதி.. கிட்சனை நோக்கி விரைய..

பவி..என்று அழைத்ததும் மெலிதாய் தலைய மட்டும் அவன் பக்கம் முறைப்பெண் திருப்பிட.!

நொடியில் வன்மையாக மாமன் முத்தமிட ' நீ பொய்டுவ..டா.. நான் தான்..டா மாட்டுவேன். ' என்று எண்ணி நொந்துவளோ அவனைத் தள்ளி விட முற்பட்டாள் முடியவில்லை. இதழ்கள் மூடியதால்.
விடுடா என்ன மனதிற்குள்ளே பவி கதற, சில நிமிடங்கள் கடந்ததும் நல்லவன் போல் அவனே நகர.! " ப்ஃராடு நாய் "என்று திட்டினாள்.

"அத்தை நான் வீட்டுக்கு வர லேட் ஆகும். கொஞ்சம் திங்ஸ் வாங்கனும்.அவ கூட இருந்தா நல்லா இருக்கும்." கிச்சனிலிருந்து வந்த அத்தையிடம் பேச.. அம்மா வந்ததால் தான் விலகினான் என புரிந்தது.

"ம்.. " என்றவர் தொடர்பை துண்டிக்க, பளார் என்று ஒரு அறையை பரிசளித்தாள் மன்னவனுக்கு.! "ஸ்..ஆ..ஏன்டி.." கண்ணத்தை தேய்த்தவாறு ப்ரீத் கேட்க.?

கொந்தளிப்போடு "ஏன்.. அடிச்சதுக்கான காரணம் புரியலையா? அம்மா..ஆன் கால்ல இருக்குறப்ப கிஸ் பண்ணுற.? ஒருவேளை அவங்க பார்த்து இருந்தா.? என்ன ஆகும்.அவ்ளோ நம்பிக்கை உன் மேல அவங்களுக்கு. என்ன ஆச்சி டா உனக்கு. " கைகளால் அவன் கன்னங்களை பற்றி கண்களை பார்க்க வைத்தவள்.

"முத்தம் கொடுத்தா காதல் வருமா என்ன?" நக்கலாக புன்னகைத்து கொண்டே, "சினிமாவுல எத்தனை கிஸ் சீன் வருது. நிஜ வாழ்கையிலுமே பிடிக்காம யாராவது அத்துமீறுனா வெறுப்பு தான் வருமே தவிர, காதல் வராது.சாரே..
உன்னோட சித்து விளையாட்டு எல்லாம் ஏதாவது கேன சிறுக்கிங்க கிட்ட காட்டு பவித்ரா கிட்ட இதெல்லாம் ஏடுபடாது.. " முத்தம் அத்துமீறல் காதல் இல்லை என்று தெளிவு தீர்க்கமாக உரைத்தாள் பவித்ரா.

"பயமா இருக்குடி " என்று தலை குனிந்து கொண்டான் ப்ரீத்.

" ஏன் நான் எவன் கூடயாவது ஒடி போய்டுவன்னா ? "

"ப்ச்.. இல்லைடி நீ இல்லாத உலகத்துல வாழ பயமா இருக்கு. "
அவன் வாயாலே அவன் வலிகளை உணர்த்த,சில நிமிடங்கள் அமைதி நிலவியது.

" மாமா... கொஞ்சம் தள்ளு... கார் கண்ணாடி வரை தள்ளி அவன் அமர்ந்ததும் .. அவன் மார்பில் மாலை போல் மங்கை சாய..!

"அதிர்ச்சியில் இதயம் நின்று துடித்தது அவனுக்கு"என்னடி பண்ணுற "என அவன் கேட்க.

" ஏன் தெரியலை யா? "உடலை இன்னும் அழுத்தி அவன் மார்பில் தலை சாய்க்க.!

" ஏன் டி.. என்ன பார்த்தா.. மெத்தை மாதிரியா இருக்கேன். நெளியாதடி பாடா படுத்துறாளே.. என்னைய.. "என்று முணுமுணுக்க.

வெட்கப் புன்னகையுடன் தலையை சாய்த்து பவி அவனை பார்க்க."பிடிக்கலையா மாமா.. சரி நான் போகவா.? " என்று கோபமாக நகர இடையோடு இரு கரங்களால் கோர்த்து அணைத்துக் கொண்டான் மாமன்." தள்ளிப் போகதடி.. இங்க வலிக்குது."

" எனக்கும் தான். எதவாது பாட்டு பாடேன் மாமா.. லவ் சாங். "
ப்ரீத் பாடினான்..

" சின்ன சின்ன கவிதை…
என் கை எழுத துடிக்கும். "

பவி -"மெல்ல மெல்ல எழுது…
என் மெல்லிடையும் தவிக்கும். என்ன மாமா சுச்சுவேஷன் சாங் ஆ.." நக்கலோடு ப்ரீத் ஐ பார்க்க.

"கைய விடு.. கவிதை எழுதனும். அவள் கைகளில் சிக்கிய கரங்களை விடுவிக்க முயல,
" ம்.. ஹீம்.. கல்யாணத்துக்கு அப்புறம் எழுது. யார கல்யாணம் பண்ணிக்கிறியோ அவங்க கிட்ட கவிதை எழுதலாம் மாமா" என்று சிவந்த முகம் வெட்கம் உதிர்க்க.!

'ஏன் இப்படி சொல்றேன்னு கேட்டா.. ஏதாவது சொல்லி என் மனச நோகடிப்ப, இந்த நிமிஷம் உன் அருகாமை கொடுக்குற நிம்மதி போதும் டி எனக்கு. என் முகம் கொஞ்சம் வாடுனா கூட தாங்க முடியாத நீ.. ஏன் என்ன வேணாம் னு சொல்லுற.?'

"என்ன மாமா மைய்ன்ட் வாய்ஸ் ஆ..அதீத அன்பும் பாசமும் எனக்கு உன்மேல இருக்கு மாமா.. ஆனா உங்க புத்தி சந்தேக புத்தி. நம்பிக்கை இல்லாத உறவு நிலைக்காது மாமா. மத்தவங்க நம்மள எந்த அளவுக்கு உசத்தியா மனசுல வச்சிருக்காங்கன்னு தெரிஞ்சிட்டு நம்ப வார்த்தை விடணும். நீ விட்டுட்டு யோசிப்ப.. வேணாம் மாமா..

"ஒரு சொல் வெல்லும்
ஒரு சொல் கொல்லும். "

நீ ஏதாவது தப்பா சொல்லிட்டேனா.. நான் செத்துருவேன் மாமா.. நிதானம் இல்லாத வார்த்தை ரொம்ப காயப்படுத்தும். நீயே.. அடிச்சா ரொம்ப வலிக்கும் மாமா.." கண்கள் கலங்க .

" இப்போ கூட நீ.. ஒரு சின்ன பொண்ணு மாதிரி என் கண்ணுக்கு தெரியுற பவி. உன்ன பத்திரமா பாத்துக்கணும் . அவ்வளவு தான் எனக்கு. அத நீ சந்தேகம் னு நெனச்ச நெனச்சுக்கோடி. "

"அதுக்காக.. எங்கேயும் போகாம யார்கிட்டயும் பேசாம சிறைக்கு கைதி மாதிரி வாழ முடியாது டா "

" வாயை மூடு .. என்ன ? உன்ன கல்யாணம் பண்ணிக்கூடாது. அவ்ளோ தான. இனிமே நீயே சொன்னாலும் நான் உன்ன கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். லிவ் இன் ரிலேஷன் ஷப் ல இருந்துக்கலாம். " என்று சொல்ல.. புன்னகை ததும்ப"
ஹா..ஹா.. மாமா.. என்ன விட மாட்ட. "

" விடவே மாட்டேன். " என்று உறுதியாக சொன்னான் ப்ரீத். விட முடியாத உறவு நீ.. என்று வருங்கால மனைவியிடம்.

❤️நன்றிகள் 🙏கோடி❤️
உமா கார்த்திக்








 
Status
Not open for further replies.
Top