பகுதி -19
திருமணம் என்னும் அழகான பந்தத்தில் தம்பதிகளிடையே மேலும் காதலை அதிகப்படுத்தும் விதமாக நிகழ்வதே அவர்கள் ஒரு குழந்தைக்குப் பெற்றோர்கள் ஆவது அந்த ஆனந்தத்தை அனுபவித்துக் கொண்டிருந்தனர் ரேணுகாவும் அவள் கணவன் கதிர்வேலனும்.
ரேணுகா, கர்ப்பமாக இருக்கிறாள் என்பதை அறிந்து வீடே ஆனந்த யாழை மீட்டியது.
ராதிகாவோ சந்தோஷத்தில் மகளைக் கட்டிக்கொண்டார். புதுவரவைக் கண்டு குடும்பமே இனிப்புச் செய்து சாப்பிட்டுக் கொண்டாடியது. இதெல்லாம் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் மித்ரா. அவளுக்கு அவள் கர்ப்பமான நாட்கள் நினைவில் வந்தது.
யாரும் இல்லாமல் தனியாக அவள் மட்டுமே அந்த ஆனந்தத்தை எதிர்கொண்டாள். தன் மகனின் வரவை யாரிடமும் பகிர முடியாமல் தனிமையில் தவித்திருந்தாள். வாழ்க்கையில் ஆனந்தமாக நடந்தேற வேண்டிய அனைத்தையும் அவள் கடந்த வந்த நிமிடங்கள் நினைத்துப் பார்த்தாள் மித்ரா.
வாழ்க்கையில் எல்லா இருக்கிறது.. நாம் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கை முறையில் தான் நம் எதிர்காலம் அடங்கி இருக்கிறது என்று வலிக்க வலிக்கக் கற்றுக் கொண்டாள்.
இனி முடிந்ததைப் பற்றிச் சிந்தித்து என்ன ஆகப் போகிறது என்று தெளிந்தவள் நேராக ரேணுகாவின் அருகில் வந்து “வாழ்த்துக்கள் அண்ணி” என்று கட்டிப்பிடித்து வாழ்த்தினாள்.
“நன்றி மித்து… என்றவள் வேதாந்தை வாங்கி முத்தம் வைத்தாள்… “என் பட்டுக் குட்டி என்ன பண்ணறீங்க” என்று
இதைப்பார்த்தத் தருணோ… “எங்கள் பையனுக்கு இப்போதே ஐஸ் வைக்கிற வேலையெல்லாம் வேண்டாம்… வருங்கால மருமகனை எப்படி எல்லாம் கொஞ்சறாள் பாருங்க அம்மா” என்ற படி வந்து தன் தாயின் அருகில் அமர்ந்தான்.
“என் பொண்ணுக்கு இவன் தான் மாப்பிள்ளை... யாருத் தடுக்கிறது நானும் பார்க்கிறேன்” என்று சண்டைக்குத் தயாரானாள் ரேணுகா…
“ஆணோ..பெண்ணோ…முதலில் நல்ல ஆரோக்கியமாகப் பெத்தெடுடியம்மா” … அப்பறம் அவனிடம் சண்டைப் போடலாம்” என்ற பானுமதியின் வார்த்தைகளைக் கேட்டு…
“ வந்துருவாங்க மருமகனுக்குச் சப்போர்ட் செய்துக்கொண்டு... நீங்கள் மட்டும் உங்கள் மருமகனைத் தாங்கும் போது.... நாங்கள் எங்கள் மருமகனைத் தாங்கக் கூடாதா..இதென்னடா நியாயம்… ஆனாலும் உங்களுக்கு அவன் மேல் தான் அத்தைப் பாசம் அதிகம்” என்று முகத்தைக் கோபமாக வைத்துக் கொண்டாள் ரேணுகா.
“ஆமாம் ரேணு… நன்றாகக் கேளு… நம்மளையெல்லாம் .. பாசம் வைக்க யாரும் இல்லை… நாம் இந்த வீட்டில் யாரோ தானே” என்று அவள் உடன் கூட்டணி வைத்துக் கொண்டான் கதிர் வேந்தன்.
“ம்ஹூம்.. உன்னோட மாமாங்காரன்ச் செய்த வேலைக்கு.. அவனுக்கு இன்னும் பாயாசம் போடாமல் இருப்பதே பெரிசு.. இதில் பாசம் இல்லைன்னு ஆடாறான்” … என்று அங்கே வந்த பாலமுருகன் ரேணுவிற்குப் பிடித்தது எல்லாம் வாங்கி வந்து கொடுத்தார்.
தந்தையின் பேச்சில் மீண்டும் மனம் ரணப்பட்டது… ஏற்கனவே குற்ற உணர்வில் இருந்தவனுக்கு மேலும் அடிப்பட்ட இடத்தைக் கீறி விட்டது போல ஆனது.
அவன் முகம் வாடியதைப் பார்த்து என்ன செய்ய என்று புரியவில்லை மதுமிதாவிற்கு.
எல்லா வகையிலும் அவனுக்கு வலி இருந்து… அதற்கு எந்த விதத்திலும் மருந்தாக முடியாத... தன் நிலையை எண்ணி வருந்தினாள்.
அவன் காதல் மனதின் அடியாழத்தில் புதைத்து மக்கிப் போக நானே காரணமாக இருந்து விட்டேனே... காதலை ஒரு நொடி கூட ஆனந்தமாக அனுபவிக்க முடியாமல் போன தன் நிலையை நினைத்து வருந்தினாள் வேந்தனின் மதி.
அமைதியாக நிற்கும் அவளிடம் வந்த ராதிகா.. “நீயும் அடுத்த நல்ல செய்தியைச் சொல்ல வேண்டும்” என்றார்.
அவர் மனதிலோ இனியாவது அன்பான இல்வாழ்க்கை ஆரம்பியுங்கள் என்று வேண்டுதல் இருந்தது.
அவரின் சொல்லில் இருந்தசெய்தியை உணர்ந்தவளுக்கு.. ஒரு கை ஓசை எழுப்பாதே… இந்த நல்ல செய்தியைத் தருவதற்குக் கணவன் துணை அவசியம் அல்லவா…வேகமாக அவன் முகத்தைத் தான் பார்த்தாள்..
அவனும் தானே அருகில் இருந்தான்… அவனுக்குக் கேட்டு இருக்கும் அல்லவா… அத்தை ராதிகாவின் வார்த்தைகளைக் கேட்டதும் தன்னை அவள் குற்றம் சாட்டி… வீசியச் சொல் அம்புகள் எல்லாம் தன் முன் நிற்க அவன் முகம் இருண்டது.
வேகமாக எனக்கு முக்கியமான வேலை இருக்கு என்றவன் ரேணுகா அருகில் வந்து அவள் தலையில் கைவைத்து ஆட்டியவன்…
“உனக்கு என்ன வேணும் ரேணு..சொல்லு நான் வீட்டிற்கு வரும்போது வாங்கி வருகிறேன்” என்று பாசமாகக் கேட்டான் கதிர் வேந்தன்.
“ம்ம் சொல்லறேன் மாமா” என்று ஒரு பெரிய லிஸ்ட் போட்டாள் ரேணுகா.
டேய் வேந்தா அவள் போடும் லிஸ்ட் பார்த்தால், நீ வங்கியில் கடன் வாங்க வேண்டும் போலையே என்று கேலிச் செய்தத் தருணை முறைத்தவன்… “ஆசையாகக் கேட்கிறாள்… இப்படிச் சொல்லதே தருண்” என்று அவனைக் கண்டித்தவன் "நீ கேட்டதெல்லாம் வாங்கி வருகிறேன்" என்று அலுவலகத்திற்குக் கிளம்பினான்.
தன் கணவனையே கவனித்துக் கொண்டு இருந்தவளுக்கு அவள் முகம் பாராமல் தன்னை அவகனிக்கும் விதத்தில் எல்லாம் புரிந்ததும்.
இந்த வாழ்க்கையை எப்படி அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல என்று தெரியாமல் தவித்தாள் மதுமிதா.
மனம் விட்டுப் பேசினால் தீரும் பிரச்சினைத் தான்.. ஆனால் பேசவேண்டுமே…
அன்றைய தினம் ரேணுகா வந்ததில் அவள் கர்ப்பமாக இருப்பதை எல்லாம் கொண்டாடித் தீர்த்தனர்.
பள்ளியில் வேலை இருப்பதால் மதுமிதாப் பள்ளிக்குக் கிளம்பினாள்.
அப்போது முக்கியமான போன் கால் வரவும்... வேகமாக வெளியே சென்றான் பேசுவதற்கு…
அப்போது அங்கே பேபி வாக்கரில் அமர்ந்துத் தத்தித் தத்தி நடந்து கொண்டு இருந்த வேதாந்த்... தருணைப் பார்த்து "அப்பா" என்று அழைத்தான்… அவன் முதன் முதலில் தெளிவாகப் பேசியதோ அப்பா என்ற வார்த்தையைத் தான்.. அதைக் கேட்ட வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் அதிர்ச்சி என்றால் தருணோ சந்தோஷ மிகுதியில் பிள்ளையை வாரி எடுத்து உச்சி முகர்ந்தான்…
அப்பா சொன்னீங்களாடாச் செல்லம்... என்று அவனைக் கொஞ்சிக்கொண்டிருந்தான் தருண்.
அவர்களுக்கு இடையே இருக்கும் உறவை கண்டு ரேணுகாவோ தன் தாயையும், அத்தையையும் தான் அதிர்ச்சியோடு பார்த்தாள்.
அவர்கள் இருவரும் எந்த உணர்வும் காட்டாமல் அமைதியாக அப்பாவும் மகனும் வீளையாடுவதைப் பார்த்துக் கொண்டே இருந்தனர்.
ரேணுகாவிற்கு இதெல்லாம் தெரிந்தப் போதும் இந்த விஷயம் உண்மையில் அதிர்ச்சி மட்டுமே.
‘அப்பா’ என்று அழைப்பது சாதாரணம் இல்லையே… எல்லாம் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர்.
மித்ராவிற்கோ மனதில் புயல் அடித்துக்கொண்டிருந்தது. இதெல்லாம் நடக்கக்கூடாது என்று இருந்தாளோ... தன் மகனுக்கும் அவனுக்குமான உறவுத் தன்னை எந்த அளவுப் பாதிக்கும்... இதனால் பார்ப்வர்கள் என்ன நினைப்பார்கள். அத்தையின் முகத்தில் எப்படிப் பார்ப்பேன் என்று பலவாறுத் தன் மனதில் போராடிக்கொண்டிருந்தாள்.
அங்கே நடக்கும் எதையும் கவனிக்க வில்லைத் தருண். அவன் தன் மகனை எடுத்துக் கொண்டு தன் அறைக்குச் சென்று விட்டான். அவனுடைய உலகம் புதியதாக இருந்தது… அதில் மழலை மணம் கமழ்ந்தது… எல்லாம் அழகாகத் தோன்றியது…
தந்தை இல்லாமல் வாழ்ந்தத் தனக்கு அதன் வலியும் துயரமும் தெரியும்... தாய் மாமன் அரவணைப்புக் கிடைத்த போதும் அவனுக்குத் தன் தந்தையின் இறப்பு இன்றும் மனதில் வேருன்றி இருக்கும் ஆழமான காயம் அது…
அதே நிலையில் இருக்கும் வேதாந்த் கண்டவனுக்கு…மித்ராவின் வாழ்க்கையில் அத்துமீறுகிறோம் என்ற எண்ணம் வரவில்லை... அவள் காதல் வயதிற்கே உண்டான ஈர்ப்பு என்பதில் தெளிவாக இருந்தான் தருண். அதனால் அவளிடம் இப்பொழுதும் மனம் திறந்துப் பேசவோ… அவளின் மனதில் உண்டாகி இருக்கும் பயத்தை உணர்வோ முயலவில்லை தருண்.
அவன் மனம் முழுவதும் மகன் மட்டுமே ஆட்சி புரிந்தான். இதனால் மகனின் தாய் அங்கே பயத்தோடு அலைகழிக்கும் மனதோடு போராடிக் கொண்டிருககிறாள் என்று யோசிக்கத் தவறினான்.
ரேணுகா உடல் சோர்வின் காரணம் உறங்கச் சென்றாள்… அதே நேரம் வீட்டில் இருக்கும் மற்றவர்கள் அவரவர் வேலையில் ஈடுபடத் தனித்து விடப்பட்ட மித்ரா, தன் அறைக்கு வந்தாள்.
இதை இப்படியே விடக்கூடாது என்று மனதில் அசைப்போட்டவள் தன் மகனையும் தருணையும் எப்படியாவது பிரிக்க வேண்டும் என்று நினைத்தாள். மீண்டும் பெற்றவர்கள் மற்றும் தன் உயிராக நேசிக்கும் அத்தையின் ஆசையில் மண்ணை அள்ளி இட விரும்பவில்லை.. அவர்களின் மருமகளாக நல்ல பெண் வரவேண்டு நான் வேண்டவே வேண்டாம் என்று நினைத்தாள் மித்ரா.
இதற்கு ஒரேவழி... தருணின் திருமணம் என்று நினைத்தாள்.
எதற்கும் கட்டுப்படாமல் நகரும் ஒரே விஷயம் நேரம் தான்… ஒவ்வொரு நாட்களும் நிமிடங்கள் போல வேகமாகக் கடந்து சென்று கொண்டிருந்தது.
மதுமிதா வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லை என்றாலும்.. அவளை வேலையில் நல்ல முன்னேற்றம் அடைந்தாள்… அவள் பள்ளியில் பல மாணவர்களின் நம்பிக்கை உரிய ஆசிரியராக வலம் வந்தாள்…
அதில் ஒரு மாணவன் மட்டுமே அவளிடம் அடங்காமல் பல தவறுகளைச் செய்து அவளிடம் கையும் களவுமாகப் படிப்பட்டான்.
அதுவும் இந்த வயதில் துர்பழக்கங்களைக் கையில் வைத்திருந்தான்… அதைக் கண்டு பிடித்துத் தலைமை ஆசிரியரிடம் கூறி அவனைச் சில நாட்கள் பள்ளிக்கு வரக் கூடாது என்று சஸ்பென்ட் செய்தனர்… இதனால் வீட்டிலும் பள்ளியிலும் அவனால் தலைக் காட்ட முடியாமல் போனதில் மதுமிதா மேல் வன்மத்தை உருவாக்கியது அவன் மனதில். தன்னுடைய தவறை உணர மறந்தான் அந்த மாணவன்.
ஆனால் மதுமிதாவிற்கவோ அவனுக்குத் தண்டனைத் தருவதை விட அவனிடம் இருக்கும் கெட்டப் பழக்கங்கள் அவனுடைய பெற்றோருக்குத் தெரிய வரவேண்டும் என்பதும்..அவனை அவர்கள் சரியான வழியில் கொண்டு வர அவனுக்குத் துணை நிற்க வேண்டும் என்பது மட்டுமே எண்ணமாக இருந்தது. நாம் நினைக்கும் எல்லாம் நல்லாதாக நடக்கும் என்பது நிச்சயம் இல்லை.
அவளின் செயலின் எதிரொலித் தவறானதாகவே இருந்தது. அவனுக்குத் தந்தை இல்லை... தாய் மட்டுமே என்று தெரியவந்தது. அவனின் தாயோ புரிந்து கொள்ளாமல் 'என் பிள்ளையைப் பற்றித் தெரியும், அவன் மேல் பழிப் போடுகிறது பள்ளி நிர்வாகம்' என்று வாக்குவாதத்தில் இறங்கினார்.
தன் பிள்ளையின் தவறுக்கு மன்னிப்புக் கேட்கத் தயங்கும் அவர் போன்ற பெற்றோரின் அலட்சியம் தான் பல குழந்தைகள் கெட்டுச் சீரழிந்துப் போகின்றனர் என்று மனதில் வருந்தியவள்…நேராக அந்த மாணவன் அருகே வந்தவள்…
"சௌந்தர்…என்னோடு வா" என்று அழைத்தாள் மது மிதா…
அதைக் கண்ட நிர்வாகம் மற்றும் மாணவனின் பெற்றோரும் அவளையே பார்க்க… அவனோடு அவன் தாயையும் தனியே அழைத்துச் சென்று... தன் கையில் இருக்கும் அலைபேசியில் வீடியோவை ஒளிபரப்பினாள் அவர்களிடம்.
"உங்கள் பிள்ளை என்ன செய்து இருக்கிறான் என்று தெரிகிறதா…
இன்னும் உங்களுக்கு நம்பிக்கை வரவில்லை என்றால் அவன் இரத்த மாதிரி எடுத்துச் சோதனைச் செய்து பாருங்கள் உங்களுக்குத் தெரியும்" என்றவள் சிறு அமைதிக்குப் பின் மெல்ல…
உங்கள் பிள்ளையைக் குற்றவாளி என்றோ... உங்கள் வளர்ப்புச் சரியில்லை என்றோ யாரும் இங்கே உங்களைக் குற்றம் சாட்ட வில்லை… இந்தச் சமூகத்தில் இளம் தலைமுறையினர் ஈஸியாகத் தவறான வழியில் பயணிக்கப் பல சந்தர்ப்பங்கள் நம் கையில் இருக்கிறது…அதனால் யாரும் யாரையும் எதுவும் சொல்ல முடியாது. நாம் தான் நம் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றவள்.
மேலும் .. "அவனுக்கு நாம் தான் சொல்லிக் கொடுக்க வேண்டும்".
"சௌந்தர்… இப்போது சொல்லு, நீ தவறு செய்யவில்லை" என்று எனஅவனைப் பார்த்துக் கேட்டாள் மதுமிதா.
தலைகுனிந்து நின்றான் தன் தவறு பிடிப்பட்டதும்.
அவன் தாயோ... தலையில் கை வைத்து அமர்ந்து விட்டார். பின்னர்
அவளிடம் வந்து மன்னிச்சுருங்க மிஸ்… நான் வேலைக்குச் சென்றால் தான்... எங்கள் குடும்பம் ஓடும் சூழ்நிலையில் இருக்கிறோம்.. நான் கஷ்டப் பட்டாலும் என் மகன் எந்தக் கஷ்டமும் தெரியாமல் தான் இது வரை வளர்த்தி இருக்கிறேன்" என்றுக் கண்ணீர் விட்டு அழுதார்.
"இது தாங்க நம்மைப் போன்ற பெற்றவர்கள் செய்யும் தவறு... பிள்ளைகளைத் கஷ்டத்தை உணர்த்தி வளர்த்த வேண்டும்… இல்லை என்றால் பார்த்தீங்கதானே அதன் விளைவுகள்.
தேவையற்ற எந்தசலுகையும இந்த வயதில் செய்து தராதீர்கள்" என்று கூறியவள் தன் மாணவனை நோக்கி…
"உனக்குத் தெரியாதா இந்தக் கெட்டப் பழக்கம் உன் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய தீங்கை உண்டுப் பண்ணும்" என்று அறிவுரை வழங்கினாள்.
அந்நேரம் அவன் தாய் வேலைச் செய்யும் இடத்தில் தனக்கு ஏற்படும் இன்னல்களைக் கண்ணீரோடு அவளிடம் கூறியவர் எல்லாம் என் பிள்ளை எந்தக் கஷ்டமும் தெரியாமல் அவன் வாழ்வில் நல்ல படியாக வாழ வேண்டும் என்று லட்சியம் மற்றும் தான் என்றார் அவன் தாய்.
"பார்த்தாயா"… என்றவள்
உன் அம்மா சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டு தானே இருக்கிறாய்... தனி மனுஷியாக உனக்காக அவங்கக் கஷ்டப்படும் பொது அவங்களுக்கு நீ... செய்யும் கையமாறு இது தானா…அவங்களோட இவ்வளவு துன்பத்திலும் உன் வாழ்க்கை நல்லா இருக்கனும் நினைக்கிறாங்க… உன் மேல் அவ்வளவு நம்பிக்கை வச்சு இருக்காங்க…. அதைக் கெடுக்கும் வண்ணம் எதுக்காக இப்படிப் பண்ணிற. நீ தானே அவங்களைக் கண் கலங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்… உன் அம்மா கண் கலங்குவதற்கு நீயே காரணமாக இருக்கலாமா…” என்றவள் அவனுக்கு மனதில் பதியும் படிக் கூறி.. தலைமை ஆசிரியரிடம் அவனுக்குப் பேசித் தண்டனை நாட்களைக் குறைக்க உதவினாள்..
தவறுக்குத் தண்டனை என்பது தான் சரி என்றும் அவன் பெற்றோருக்குப் புரிய வைத்தாள்.
அன்றைய தினம் அவள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகிப் போனாள்…தன் கணவனின் கோபம்.. இங்கே சிறு பிள்ளைகள் தவறான வழியில் செல்லக் காரணமாக அவர்கள் வாழ்க்கை முறை என்று பலவிதமான சிந்தனைகள் மனதில் உண்டானது.
பள்ளி முடிந்ததும் மாலை எப்போதும் போன்றே தன் வீட்டிற்குப் பயணமானாள் தன் இரு சக்கர வாகனத்தில் அப்போது பள்ளியின் தெரு முனையைக் கடக்கும் போது காலையில் தண்டனை வாங்கிக் கொடுத்துப் பையன் நின்று இருந்தான்.
அப்போது மனதில் ஏதோ ஒரு நெருடல் உண்டானது.. ஏன் நிற்கிறான் என்று.. ந்த பையனோ, அவளிடம் பேச முற்பட்டதால் வேகமாகத் தன் வாகனத்தில் சென்றாள்.. வேகம் என்றாள் அவளுக்குத் தான் அதுவேகம்... சாதாரணமான வேகத்தில் தான் பயணித்தாள்…
ஆனால் அவள் கவனம் சாலையில் இல்லாமல் பல உணர்வுக் குவியலில் தடுமாறிக் கொண்டு இருந்தாள் மனதில்.. அதனால் பின்னில் இருந்து அவன் அழைத்தது அவளுக்குக் கேட்கவும் இல்லை…
அந்த மாணவனோ அவளை வேகமாகப் பின் தொடர்வதும்... ஏதோ கூற வருவதைச் சரியாக... தவறாக அர்த்தம் கொண்டவள், தன் கண்ணாடியில் கவனம் இருந்ததில் முன் வந்த வாகனத்தைக் கவனிக்காமல் தடுமாறினாள்...
கொஞ்சம் வண்டியை ஒடித்து ஓரமாக நிறுத்தி இருக்கலாம் அல்லது ஓரமாகச் சென்று இருக்கலாம், அங்கே வண்டிச் செல்லும் அளவுக்குத் தடம் இருந்தது… ஆனால் அவள் மனக்குழப்பத்தில் இருந்ததால் இந்த முடிவுச் சரி... என்று வண்டியை வாகனம் நோக்கி விட்டாள்.. ஆனால் எதிரில் வந்த வாகன ஓட்டிச் சுதாரித்து நிறுத்தியதில்... பலமான அடியில் இருந்த அவளால் தப்பிக்க முடிந்தது.. ஆனால் மூளையோ நமக்கு விபத்து ஏற்பட்டு இருக்கிறது என்பதைப் பதிவுச் செய்ததால் மயங்கி வீழ்ந்தாள் அங்கேயே…
சைடு ஸ்டேண் எடுக்காததால் வண்டி அவளுக்கு எதிரில் இருக்கும் வாகண நோக்கி இடப்பக்க இல்லாமல் அவளுக்கு வலப்பக்கமாகச் சரிந்ததில் அவள் தலையில் அடிபட்டிருந்தது.
அந்த விபத்து நடந்த பகுதிக்கு வேகமாக வந்த மாணவன் சௌந்தர்… அங்கே கூடிய கூட்டத்தில் எங்கள் பள்ளியில் வேலைச் செய்யும் ஆசிரியர் தான் என்றவன்... அவள் கைப்பேசியில் இருக்கும் எமர்ஜென்சி நம்பருக்கு அழைக்க... கதிர் வேந்தனுக்கு அழைப்புப் போனது…நடந்ததைச் சுருக்கமாக அந்த வாகனம் ஓட்டியிடம் கொடுத்துச் சொல்லச் சொன்னவன் அருகில் இருக்கும் மருத்துவமனையில் அவளை அட்மிட் செய்தனர்.
கதிர் வேந்தன் வரும் வரை காத்திருந்தனர்.
உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பறந்து வந்தான் தன் மனையாளைக் காண... அவளுக்குத் தானே காதல் இல்லை... அவன் மனம் முழுதும் அவள் மட்டுமே வாசம் செய்பவள்…அவளுக்கு ஒன்று என்றால் அவன் உடலில் உயிர் தங்குமா…
பதறியபடி வந்தான் அங்கே மருத்துவமனையில் விசாரித்து அவள் இருக்கும் பகுதிக்கு வந்தான்.அங்கே இருக்கும் இரண்டு பேரையும் பார்த்து என்ன நடந்தது என்று கேட்டுத் தெரிந்துக் கொண்டான்… இருவரும் நடந்ததைக் கூறினர்.
"சார்.. நான் அவங்க மாணவன் .. அவங்களிடம் மன்னிப்புக் கேட்க வந்தேன்... நான் கூப்பிடுவது காதில் கேட்காமல் சைடு ஸ்டேண்ட் கூட எடுக்காமல் போறாங்க… நான் அவ்வளவு தூரம் சொல்லறேன்... அவங்களுக்குப் புரியவில்லை" என்று கண் கலங்கினான் எங்கே தன்னைத் தவறாக நினைத்து விடுவார்களோ என்று பயந்தான்.
வாகன ஓட்டியோ… "அவங்க நினைச்சு இருந்தால் சைடு எடுத்துப் போயிருக்கலாம் சார்... அவங்க என் வண்டி முன் வேண்டும் என்று வந்து மோதியது போல் தான் இருந்தது. தொலைதூரத்தில் இருந்தே பார்த்ததால், நான் என் வண்டியின் வேகத்தைக் குறைத்துக் கொண்டு தான் வந்தேன் அவங்கச் சைடாகப் போகனும்... ஆனால் சட்டென முன்னாள் வந்துட்டாங்க" என்று நடந்ததைக் கூறினார்.
"ம்ம் புரியுதுச் சார்... எதாவது பதட்டத்தில் இருந்திருப்பாங்க" என்று கூறினான்..
"இருக்கலாம் சார் ஆனால் இப்படிக் கவனமில்லாமல் ஓட்டும் அவங்களுக்கு வண்டியே குடுக்க வேண்டாம், ஏதோ நல்ல நேரம்... நான் சுதாரித்துக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தேன், இல்லை என்றால் யோசியுங்கள்" என்று கேட்டார். அவர்களுக்கு உதவியாக வந்த நபரும் அவள் மேல் தான் வேண்டும் என்றே, அவர் வண்டியின் முன் சென்று விழுந்து இருக்கிறாள் என்று கூறினார் .
அவனுக்கோ மருத்துவர்கள் வந்து என்ன கூறுவார்கள் என்றப் பயம் மனதில் இருந்தது. பெரிய அடிகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்று பல கடவுள்களை வேண்டினான் கதிர் வேந்தன்.
நேரமும் கடந்தது… மருத்துவர்கள் வந்து "பயம் காரணமாக மயங்கமாக இருக்காங்க... பயப்படும் படி எதுவும் இல்லை... சில இடங்களில் அடிப்பட்டு இருக்கிறது... கையில் தான் நல்ல அடி... ஒரு மாதம் நல்ல ஓய்வு எடுத்தால் சரியாகிடும்" என்று கூறினார் மருத்துவர்.
மனதில் இருந்த பயம் நீங்கியது அனைவருக்கும்.. கதிர் வேந்தனுக்கு அப்போது தான் உயிரே வந்தது.
இன்னும் கொஞ்சம் நேரத்தில் கண் விழித்து விடுவாங்க என்று கூறினான்.
மாணவனும் அந்த வாகனம் ஒட்டியும் விடைபெற்றுச் சென்றனர்.. மாணவன் சௌந்தர் நாளை மிஸ்ஸைப் பார்க்க வருவதாகக் கூறிச் சென்றான்.
மணி நேரத்தில் கண் விழித்தவள் மருந்தின் வீரியத்தில் உளறிக் கொட்டிக் தன் மனவேதனைக் கணவனிடம் கூறியதில் அவனுக்கு மேலும் மேலும் வேதனையும் வலியையும் சிரமமில்லாமல் வழங்கினாள் வேந்தனின் மதி…
தொடரும்…