பகுதி - 20
சினமெல்லாம் சிதறி ஒடி விடும் நம்மைச் சார்ந்தவர்களுக்கு உண்டாகும் ஆபத்தில்… எங்கே நம்மை விட்டுப் பிரிந்துச் சென்ற விடுவார்களோ என்ற பயமே அவரின் மேல் இருக்கும் கோபத்தின் நெருப்பை அணைக்கும் நீராகி விடும்.
அதே தான் கதிர் வேந்தன் நிலையும்... தன்னவளுக்கான ஆபத்து அவன் ஆழ் மனதில் பொதிந்துக் கிடக்கும் காதலைத் தோண்டி எடுத்துக் கொண்டு வந்தது…
அவள் அனுமதித்து இருந்த அறையில் இருந்து வெளியே வந்த டாக்டர்..
“அவங்க நன்றாகப் பயந்து இருக்காங்க…கொஞ்சம் இல்ல நல்லாவே ஏஸ் அ ஹஸ்பெண்டாக அவங்களை, நீங்கள் தான் பேம்பர்ப் பண்ண வேண்டி இருக்கும். வலித் தாங்க மாட்டாங்களா… ரொம்ப அழுதாங்க, அதனால் அவளுக்கு டிரீட் பண்ண அனத்தீஷியா டோஸ் அவுன்ஸ் கொஞ்சம் அதிகமாகக் குடுக்கவேண்டியதாகிருச்சு... பயபடவேண்டாம் அதன் மயக்கம் இருக்கும்”…
என்றவர் அவளுக்குக் குணமாக எவ்வளவு நாட்கள் ஆகும், எப்போது அவளுக்கு டிஸ்சார்ஜ் பண்ணுவது என்பது பற்றியும் கூறித் தன் கடமையை முடித்துக் கொண்டு அங்கிருந்துச் சென்றார்.
அவளைக் காண வேகமாக உள்ளே வந்தவன் அங்கே, நர்ஸின் கைகளைப் பிடித்துக் கொண்டு உளறிக் கொண்டு இருக்கும் மனைவியைத்தான் கண்டான். மருந்தின் வீரியத்தில் உளறிக் கொட்டிக் கொண்டிருக்கும் தன் மனையாளின் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டே வந்தான்.
அவளின் புலம்பல்கள் கேட்ட அந்த நர்ஸிற்கும், அவள் நிலையை எண்ணிப் பாவமாக இருந்ததால் கேட்டுக் கொண்டாள்... இதைப் பார்த்தக் கதிர் வேந்தன்.. என்ன என்று கேள்வியோடு அந்த நர்ஸைப் பார்க்கவும்.. அவள் கண்களை மூடிப் பொறுமையாக இருக்கச் சொன்னவர்.. அவள் கைகளை மெல்லத் தட்டிக் கொடுத்தார்.
தந்தையின் இழப்பை இவ்வளவு நேரம் கூறியவள்... அடுத்துத் தன் காதலைக் கூறத் தொடங்கினாள்.
அந்த நர்ஸம்மா எதாவது தவறாக நினைத்து விடுவாரோ என்று வேகமாக வந்தவனை, தடுத்த அந்த நர்ஸம்மாவின் வயது, அவள் அன்னையின் வயது ஒத்திருந்தது… இதுப் போன்றுப் பலரைப் பார்த்து இருப்பதால் அவர் அலட்டிக் கொள்ளாமல் பொறுங்கள்… என்று கூறியவர் மேலும் அவளை வருடிக் கொடுத்தார்.
“அவருக்கு என் மேல் நம்பிக்கையே இல்லை... எப்படிப் புரிய வைப்பேன் அவருக்கு… என் உயிர் தோழியின் வருங்காலக் கணவரின் காதலை… எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்” என்றுக் கேட்டு அழுதாள் மதுமிதா…
ரேணுகாவின் வருங்காலக் கணவனா? அது யாராக இருக்கும் என்று சிந்தித்தவன் மேலும் அவள் கூறுவதை… இல்லை உளறிக் கொண்டு இருப்பதைக் கேட்டான்.
உன்னைக் காதலிக்கிறேன் சொன்னால் கோபம் வரும் தானே, அது தான் சண்டைப் போட்டேன்.. ஆனால் எனக்குத் தெரியாமல் அவர் மேல் எனக்குக் காதல் வந்ததை நான் மூன்று முறை உணர்ந்தேன்…முதல்முறை… அவர் தங்கச்சி ஒருத்தரைக் காதலிக்காறாள் என்பதை அவரிடம் கூறினேன்.. ‘அண்ணா’ என்றழைத்து… அதில் கோபம் வந்து 'யாருக்கு யார் அண்ணன்' என்று கோபத்தில் மிகவும் அருகில் அவர் முகமும் அந்தக் கண்களும்.. கண்டதில் ஏதோ ஒன்று என்னை ரொம்பப் படுத்தி எடுத்தது" என்றவள் அரைக்குறையாக முடியிருந்தவிழிகளும்…அவள் முகமும் அந்த இரவு நேரத்தில் வெட்கம் ஆட்கொண்டது…
"சரிம்மா நீ தூங்கு.. நேரம் ஆகிறது பார்" என்று மேலும் அவளைத் தூங்க வைத்து அவர் சென்றார்…
அவர் சென்று விட்டாரென உணராமல் மேலும் “கேளுங்கள் அம்மா… இதெல்லாம் நான் யாரிடமும் சொல்லாமல் மறைத்து, மனமெல்லாம் வலிக்குது … அதுதான் செத்துப் போயிட்டேனே நான்”... என்று சம்மந்தம் இல்லாமல் பேசியவளின் வார்த்தைகள் எதுவும் புரியவில்லை அவனுக்கு…
"இறந்துப் போனவங்களிடம் இப்படித் தான் கேட்பாங்களாம் மேலுலகத்தில்” என்றவள் மேலும் தொடர்ந்தாள்…
“ரேணுகா, காதலிப்பது என் வேந்தனை என்று நினைத்தேன்”… என்று அவள் கூறிய 'அவள் வேந்தன்' என்ற வார்த்தைகள் எல்லாம் அழகாக இருந்தது அவனுக்குக் கேட்க.. மெல்ல இதழ்ப் பிரித்துச் சிரித்தவன் அவளைப் பேச விட்டுக் கேட்கத் தொடங்கினான்.
“அது கதிர் வேலன் என்று அவள் திருமணம் அன்று தானே எனக்குத் தெரிந்தது.
'தீர ஆராயாமல்' என்று பல பாடங்களைப் பள்ளியில் படித்தும் நான் மட்டி என்று உணர்ந்த தினம் அன்று. ஆனால் எல்லாம் அவர் காதலால் மட்டுமே மாறியது…
ஆனால் அவரை நான் பேசிய பேச்சுக்கள் எல்லாம் அவரால் மறக்க முடியாமல், அவர் படும் வேதனைப் பார்க்கக் கஷ்டமாக இருக்கிறது… என்னால் எவ்வளவு தான் துயரங்களை அவர் கடந்து வர.. அதுதான் வாழு… இல்லை வாழ விடு… என்று எண்ணி அவரை வாழ விட நான் என் உயிரை விட வண்டியின் முன் விழுந்துவிட்டேன்… எனக்குச் சின்னத் தண்டனைத் தாங்க” என்று அழுதாள்…" என் அப்பா இங்கே தான் இருக்காரா?" என்று வினவிய அவள் கேள்வியில் தான்.. அவள் இறந்து விட்டதாக நினைத்து உளறிக் கொண்டு இருக்கிறாள் எனப் புரிந்தது.
அவளின் சிறுபிள்ளைத் தனம் சிரிப்பை உண்டுப் பண்ணினாலும்… வேணும் என்று வண்டி முன் விழுந்து இருக்கிறாள்… என்று ஊர்ஜிமானது அவள் வாய் மொழியில். அந்தக் கோபம் புதிதாகச் சேர்ந்தது அவள் தவறுகள் வரிசையில்.
வாய்க்கு வந்தது உளரும் அவள் பேச்சை நிறுத்த என்ன செய்ய என்று தெரியாமல் அவள் அருகே குனிந்து “அமைதியாகத் தூங்கு மதி” என்றான் வேந்தன். தினமும் இப்படித் தான் நீங்கள் வந்து என்னைத் தூங்க விடுவதில்லை” என்று அவனைத் தன்னருகே இழுத்தாள்…
அப்போது அலைபேசிச் சப்பமிட்டு நிகழ்க்காலத்திற்கு அவனை இழுத்து வந்தது.
கையில் இருக்கும் ஃபோனைப் பார்த்தவனுக்கு அழைத்தது தன் அன்னை என்று தெரிந்ததும்…இங்கே மருத்துவமனையில் இருக்கிறோம் அவளுக்குச் சின்ன விபத்து என்றும் பயப்பட வேண்டாம் என்று தெளிவாகக் கூறினான் கதிர் வேந்தன். அவன் கூறியதைக் கேட்ட வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அவளைப் பார்க்க அலறியடித்து வந்தனர்.
அவர்கள் வரும் நேரம் நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் அவர்கள் மருமகள்.
தன்னவளின் மனதில் இருப்பதை எல்லாம் தெரிந்து கொண்ட போதும் அவளின் இந்த முடிவு அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை உள்ளதில் வேதனையை அதிகப்படியாக்கியது…
எதாவது நம் கெட்ட நேரத்திற்குப் பெரிய அளவில் விபத்து நடந்திருந்தால் எத்தனை பேர் வாழ்க்கைப் பாதிக்கப்பட்டு இருக்கும்… எதிரில் வந்தவரின் மன நிலை.. அவள் பின் மன்னிப்புக் கேட்க வந்த மாணவனின் மன அமைதி எல்லாத்தையும் காவு வாங்கி இருக்குமே… என்றவனுக்குத் தன் மனைவியின் சிறுபிள்ளைத் தனம் புரியத்தான் செய்தது.
அப்பொழுதுப் தான் பானுமதித் தன் மகனிடம் கேட்டார்… “நீ சாப்பிட்டாயா வேந்தா”… என்று “இல்லை அம்மா” என்றவனிடம்…
வா என்று அழைத்தது சென்றார் அங்கே இருக்கும் கேண்டினிற்கு…
“என்ன வேந்தா… டாக்டர் என்ன சொன்னாங்க” என்று நேரடியாகக் கேட்டார்ப் பானுமதி.
“பயப்பட வேண்டாம் தான் சொன்னாங்க அம்மா, ஆனால் வலியைத் தாங்க மாட்டாள் அம்மா… ரொம்ப அழுதிருக்காள்... டாக்டர் சொன்னாங்க” என்றவன்…
“இவளை வச்சு என்ன செய்யப் போறேனோ” என்று சிரித்தான் வேதனையை மறந்து…
“நாம் எல்லாம் இருக்கோம்.. பார்த்துக்கலாம் டா” என்றவர்
“நான் இன்றைக்கு இரவு, உன்னுடன் இங்கே இருக்கேன், அப்பா அத்தையும் வீட்டிற்குப் போகட்டும் வேந்தா” என்றார்ப் பானுமதி.
"நானும் அது தான் நினைத்தேன் அம்மா… உங்களுக்கு எதுக்குச் சிரமம் அம்மா" என்றவனை முறைத்தவர்…அவள் என் மருமகள் தான் ஆனால் மகளாகத் தான் பார்க்கிறேன் வேந்தா… மித்ரா இருந்தா விட்டுட்டுப் போவேனா…சும்மா எதாவது பேசிட்டு இருக்காமல் டீயைக் குடி நேரம் ஆகுது" என்றார்.
மெல்ல அவர்கள் இடத்திற்கு வந்ததும்… அங்கே கவலை நிறைந்த முகத்தோடு இருக்கும் தன் கணவரிடம், “நீங்கள் வீட்டுக்குப் போங்க..மித்துவதும் குட்டியும் தனியாக இருக்காங்க… நானும் வேந்தனும் இங்கே இருக்கோம்” என்று கூறினார்ப் பானுமதி.
அன்றைய தினம் அம்மா மகனுக்கு மருத்துவமனையில் முடிந்தது.
அமைதியாக உறங்கும் மனைவியின் முகத்தை ஆழ்ந்துப் பார்த்தான் அவள் கணவன்.
அப்பொழுது ஒன்றை உணர்ந்தான்.. என்னதான் அவள் பெரிய பெண் என்று தோற்றம் இருந்தாலும் முகத்தில் ஒரு சிறு பிள்ளைத் தனம் தவழ்ந்தது.
மெல்லச் சிரித்தவன் தன் அலைபேசியில் ஆழ்ந்தான்.. ஆனால் மனமோ இனி இந்த வாழ்க்கையில் பல விஷயங்களை மாற்ற வேண்டும். அதன் பொறுப்புத் தன்னிடம் இருக்கிறது என்று உணர்ந்தான்.
அவனுக்கும் அவளுக்குமான நிகழ்வு எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக வரிசைப்படுத்திப் பார்த்தவனுக்கு, அதில் எங்கேயும் பொறுமையாக ஒரு விஷயத்தைக் கையாளும் நிதானம் இல்லாமல் எதிரில் இருப்பவரைச் சினபடுத்தும் வார்த்தைகளை யோசிக்காமல் பேசும் பண்பும் அவளிடம் இருப்பதை உணர்ந்தான்…
வாழ்க்கையில் யாராவது ஒருவர் பழையது மறக்க வேண்டும். அது நாமாக இருக்கவேண்டிய கட்டாயம் புரிந்தது.
அவள் தவறுக்கு மன்னிப்பும் கேட்டு விட்டாள் … தன் மேல் காதல் இனி வரும் காலங்களில் வரலாம் வராமலும் போலாம்… ஆனால் எனக்குத் தான் மனம் முழுதும் அவள் மேல் காதல் இருக்கே… அந்தக் காதல் எங்கள் வாழ்க்கையை அழகுப் படுத்தும் என்று நம்பினான் கதிர் வேந்தன்.
மனதில் தெளிவாக முடிவுச் செய்தான் கதிர் வேந்தன்.
பெற்றோர் இல்லாமல் தனியாக இருக்கும் மனைவியின் மேல் காதல் மட்டுமே இல்லாமல் பாசமும் கரைபுரண்டு வந்தது அவனுக்கு. இனிமேலாவது அவளைச் சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற மனதில் நினைத்தான்.
அப்படியே உறங்கிப் போனவன் கண் விழிக்கும் போது… நேற்றிரவு அவளுக்கு நடந்த விபத்தின் கதையைத் தன் தாயிடம் கூறிக் கொண்டு இருக்கும் மனைவியைத் தான் பார்த்துக் கண் விழித்தான்.
இவளை என்று எழுந்தவன் இதழில் புன்னகை மட்டுமே.
“அம்மா இதை மட்டுமே அவள் ஓராயிரம் முறைச் சொல்லி விட்டாள்... நீங்களும் அதையும் கேட்கறீங்க ” என்றபடியே எழுந்தான் கதிர் வேந்தன்.
அங்கே வந்த டூட்டி டாக்டர் அவளைப் பரிசோதித்து…இன்றைக்கே நீங்கள் வீட்டிற்குக் கூட்டிப் போகலாம்… நன்றாக ரெஸ்ட் எடுத்தால் சரியாகிடும் என்று கூறினார்.
அன்றைய தினம் வீட்டிற்கு வந்து விட்டாள் மதுமிதா.
அவளைச் சிறுக் குழந்தைப் போலப் பார்த்துக் கொண்டனர் கதிர் வேந்தன் வீட்டில் இருக்கும் அனைவரும்.
அதை எல்லாம் கவனித்துக் கொண்டு இருந்தவனுக்கு.. "இப்படியே அவளைத் தாங்கிட்டே இருந்தால், எப்படி இவளுக்குக் காதல் பாசம் நேசம் வரும்" என்றுப் புலம்பியதைக் கேட்டப் படி அங்கே வந்தான் தருண்.
“அது தானே… உன்னைப் பெர்ஃபாமன்ஸ் பண்ணவே விட மாட்டேங்கறாங்களேடா மச்சான் என்ன பண்ண…உன் நிலைமையை யோசிச்சால் கஷ்டமாகத் தான் இருக்கு” என்று கேலிச் செய்தான் தருண்.
“விடுடா… இராத்திரி ஒன்னு இருக்கு இல்லையா, அப்போது பார்த்துக்கலாம்” என்றதும்…
“அடே... பாவம் டா, அடிப்பட்ட பிள்ளையிடம் என்னடா, மனசாட்சி இல்லாமல்” என்று கூறியத் தருணை முடிந்த வரைக்கும் முறைத்தான் கதிர் வேந்தன்.
“உன் வாயில் வசம்பை வைத்துத் தேய்க்க” என்றவன்
“அவளைப் நன்றாகப் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்ல வந்த என்னைப் பார்த்து, என்னவெல்லாம் சொல்லிட்ட… நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்டா” என்றக் கதிரிடம்
“ நீ மட்டும் அப்படியே வாழ்ந்துக் கிழிச்சுட்ட, போடா டேய்” என்று அங்கிருந்து சென்றான்.
படுக்கையில் சாய்ந்து இருந்தவளைப் பார்த்தான் அவள் கணவன்.
அன்றைய தினம் வேகமாகச் சென்றதில் இரவும் வந்தது.
உணவை முடித்துக் கொண்டு மருந்து எடுத்தவளுக்கு உதவியவன் அவளை நன்றாகப் படுக்க வைத்துக் காலுக்குக் கீழே வலி ஏற்படாமல் இருக்கத் தலையணை வைத்தான். தன் காலைப் பிடித்துத் தலையணை நகர்த்தும் கணவனின் செயலில் முகம் சிவக்க “பரவாயில்லை விடுங்கள்” என்றாள்.
மெல்ல அவள் அருகில் வந்தவன்… அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான்.
அவன் பார்வையில் தடுமாறியவள்.. “என்னங்க” என்று உள்ளே போன குரலில் கேட்டாள்.
முன்னால் வரும் வண்டியில் ஏன் வேணும் என்று போய் உன் வண்டியை விட்டாய் என்று நேரடியாகக் கேட்டான் கதிர் வேந்தன்.
கணவன் இந்தக் கேள்வியைக் கேட்பான் என்று எதிர்பார்க்கவில்லை மதுமிதா.
பயத்தில் முகம் தாழ்த்தியவளின் செயலில் அவள் முகத்தைத் தன் கைகளில் ஏந்தியவன்…
“ஏன்டி இப்படிப் பண்ணின… என்னைப் பற்றி யோசிக்கவே மாட்டாயா” என்று கேட்டான்.
அவன் கண்களைப் பார்த்தவளுக்கு இவரை விட்டுச் செல்ல எப்படி மனம் வந்தது எனக்கு என்று வேதனையுற்றாள் பெண்ணவள்.
“உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும் மது” என்று ஆழ்ந்தக் குரலில் சொன்னவன்.
“நீ இங்கே குடி வந்து நாளில் இருந்து உண்டானது என் காதல்… உன்னோட ஒவ்வொரு செயலிலும் காதல் வந்து தாக்கும் என்னை… மித்ராவின் பின் அவள் காதலன் சுற்றுவதைச் சொன்னாயே நினைவிருக்கிறதா”… என்று கேட்டான் தன் மனையாளிடம்.
ம்ம் இருக்கு என்றாள்…
“என்னை எப்படி அழைத்தாய் நீ” என்றவனின் கேள்வியில் புரியாமல் பார்த்தாள்.
“அன்றைக்கு நீ என்னை அண்ணா என்றழைத்தாய்… மனம் முழுவதும் காதலில் தவிக்கும் என்னிடம் வந்து அண்ணா என்றால்… நான் என்ன பண்ணனும் சொல்லு” என்றவனின் வார்த்தைகளைக் கேட்டபின் அன்றைய அவனின் கோபத்தில் தவறிருப்பதாகவும் அவளுக்கு இப்போ தெரியவில்லை.
“சாரிங்க” என்றாள் மனமுணர்ந்து…
அவன் கண்கள் சிந்தும் காதலில் விரும்பியே விழுந்தாள் மதுமிதா…
மேலும்… “நீ என் தங்கையின் வாழ்க்கையில் காட்டிய அன்றைய அக்கறையும் பாசமும் இவள் தான் என் மனைவி என்று ஓராயிரம் முறைச் சொல்லிக்கொண்டேன் என் மனதில். உன் தந்தையிடம் என் விருப்பமும் அதற்கு அனுமதி வாங்கி இருந்தேன் மது” என்றான்.
இது வரைக்கும் தன் தந்தை இதைப் பற்றி அவளிடம் கூறவில்லையே என்று சிந்தனையோடு நோக்கியயவளை… “நான் தான் சொல்ல வேண்டாம்” என்றேன்…
என் காதலை உன்னிடம் சொன்னப் பிறகு உன்னிடம் பேசுச்சொல்லியிருந்தேன் மது… நாம் திகட்டத் திகட்டக் காதலிக்க வேண்டும் என்று காத்திருந்தேன்.. ஆனால் அதற்குள் மாமா மரணம் எதிர் பார்க்கவில்லை நான்… அதே போல் மித்ராவும் இப்படிச் செய்வாள் என்று நான் நினைக்கவில்லை.
இரண்டு சந்தர்ப்பங்களும் தான் நான் மெதுவாக உன்னிடம் பேசலாம் என்று தள்ளி வைத்தேன். ஆனால் ஏனோ மனதில் இனம் புரியாத பயம் ஆட்கொள்ள… உன்னிடம் காதலைச் சொல்லி விடு என்று உணர்த்தியது... பல முறை நான் பேச முயற்சிச் செய்தும், நீ எனக்குப் பேசவதற்குச் சந்தர்ப்பம் தரவில்லை... அதனால் எனக்கு மனதில் சஞ்சலம் ஏற்பட்டது. என்ன ஆனாலும் உன்னிடம் பேசிச் சம்மதம் வாங்க வேண்டும் என்று முடிவில் தான் கையில் தாலியோடு வந்தேன்.
உன்னைக் கல்யாணம் செய்துக்கொள்ள விரும்புகிறேன் என்று கூறி… உன் தந்தையின் சம்மதமும் நம் காதலுக்குக் கிடைத்தது விட்டது என்றும், உன்னிடம் சொல்லி, நம் வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்ல முடிவு செய்ய வந்த என்னிடம்”…
என்று நீண்ட நெடிய மௌனத்தை அங்கே வலம் வர விட்டவன் மூச்சினை ஆழ இழுத்துப் பெருமூச்சுடன்
எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது நம் வாழ்க்கை.
அன்றைய தினம் நான் வரவில்லை என்றால் நீ"… என்றவன் அதற்கு மேல் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான் கதிர் வேந்தன்.
பின்னர்
"எதனால் இவ்வளவு காதல்… என்றெல்லாம் எனக்குத் தெரியவில்லை.. ஆனால் உன்னை மட்டும் தான் எனக்குப் பிடிக்கும் மது.
அவள் முகம் அருகில் குனிந்து "அன்றைக்கு நீயும் என்னைக் காதலிக்கிறாய் என்று நான் உணர்ந்துகொண்டேன்… ஆனால் உன் வார்த்தைகள் எல்லாம் அதற்கு நேர்மாறாக இருந்தது.
ஒரு கட்டத்துக்கு மேல் நீ பேசிய வார்த்தைகளின் வீரியம் என்னைத் தடுத்தது… ஆனால் உன்னோட அன்பும் நமக்கிடையே இருக்கும் பந்தமும் தான் நான் அன்றைக்கு உன் கழுத்தில் கட்டிய மாங்கல்யம். விருப்பம் இல்லாமல் ஒரு பெண் மேல் கைவைக்கும் அளவுக்கு நான் மோசமானவன் இல்லை” என்றான் அவள் கணவன்.
நம் வாழ்க்கையை இந்த அளவுக்குப் பிரச்சினைகள் உண்டாகக் காரணம்.. என் தவறான சிந்தனைத் தாங்க… என் தவறான புரிதலை யாரிடமாவது கேட்டு இருக்க வேண்டும்… நான் ஏன் அதைச் செய்ய வில்லை என்ற கேள்விக்குப் பதில் தான் இல்லை… உங்க மேலே இருக்கும் காதல்.. அதனால் ரேணுகா 'ஆமாம்' என்று சொல்லி விட்டால் உண்டாகும் வலி என்றெல்லாம் பொய்ச் சொல்லித் தப்பிக்க விரும்ப வில்லை.
நான் மன்னிப்புக் கேட்கத்தான் காதலோடு உங்களை நெருங்கி வந்த நேரம் எந்த எதிர் வினையும் இல்லாமல் இருந்த உங்க நிலை, எனக்கு ரொம்ப மனவேதனை உண்டாக்கியது.
எப்படி உங்களைச் சமாதானம் செய்ய என்று உண்மையாகவே எனக்குத் தெரியவில்லை… எனக்கு மன்னிப்பு என்ற வார்த்தையைத் தவிர வேறு வார்த்தைகள் இல்லை…
ஆனால் ஒரு மனைவியாக உங்களைச் சமாதானம் செய்ய முடியும் தான், ஆனால்" என்று தயங்கியவளின் நிலையை உணர்ந்தவன் அவளை மென்மையாக அணைத்தான் கதிர் வேந்தன்.
"மனம் ஒன்றிணையாமல் உடல் சேருவதுப்பற்றி நீங்கள் சொன்னது, என்னைய உங்களிடம் நெருங்க விடாமல் தடுத்தது" என்று தன் வேதனையைக் கண் கலங்கப் பகிர்ந்தவளின் நிலையை, உணர்ந்த அவள் கணவன் அவள் வதனத்தை வாஞ்சையோடு இரு கரங்களில் ஏந்தியவன், அவள் அதரங்களில் தன் முத்தத்தை அரங்கேற்றினான்… அவன் உதடுகள் செய்த மாயமும் அவள் கனவில் நித்தமும் நடக்கும் இந்த நிகழ்வு நேரில் உணர்ந்துக்கொண்டு இருந்தவள், எங்கேயும் எந்த எதிர்ப்பையும் பதிவு செய்யாமல் இந்தத் தருணத்த முழுவதுமாகக் காதலோடு உணர்ந்துக் கொண்டிருந்தாள் வேந்தனின் மது.
அன்பு மட்டுமே எந்தத் தவறையும் மன்னிக்கவும் மறக்கவும் கற்றுத் தரும்…
அதில் காதலும் இளையோடினால் மனக்கிலேஷம் இருக்கும் தடம் அறியாமல் அடித்துச் சென்று விடும் என்பதை அனுபவத்தில் உணர்ந்தனர் கதிர் வேந்தன் தம்பதியினர்.
ஆனால் எல்லாம் நாம் சிந்திக்கும் விதமே அன்றி வேறில்லை.. இவர்களின் இந்தப் புரிதல் வாழ்க்கையில் அடுத்து வரும் காலங்களில் எந்தப் பிளவினையும் உருவாக்காமல் இருக்குமா என்பது எப்பொழுதும் போலக் காலத்தின் கையில் தான்…
தொடரும்…