உமா கார்த்திக்
Moderator


விமான நிலையத்தின் நுழைவு வாயிலில். அவனை வழி அனுப்புவதற்காக வந்தவள்
இந்த நிமிடம் நகரவே கூடாது என்ற வேண்டுதலோடு காத்திருக்கிறாள். இடைவெளி இல்லாத இறுகிய அணைப்போடு .
"எல்லாரும் ஒரு மாதிரி பாக்குறாங்க.. பவி கொஞ்சம் நகரு. "
"முடியாது. " எவன் பார்த்தா எனக்கு என்ன போச்சு என்பது போல. அவனுடைய தோள்களில் முகம் புதைத்து. பிரிவின் வலியை துளித்துளியாய் கண்ணீர் சிந்தி. அவன் தோள்பட்டையை தாண்டி அவன் இதயத்தையும் நனைக்கிறாள் பெண்ணவள். மரணம் எப்படி இருக்கும் என்ற உணர்வை உணர்த்துகிறது இந்த பிரிவு. நினைவு தெரிந்த நாள் முதல் ஒருநாள் கூட பிரிந்ததில்லை இருவரும். அவனுக்கும் அழுகைதான் ஆனால் அவள் முன்னால் காட்டவில்லை. என்ன ஆறுதல் சொல்ல..மொழியில் எதுவும் தன்வசம் இல்லை என்பதைப் போல வலி நிறைந்த பார்வை தான் அவனுக்கு. பேச முடியாத மௌனம் எத்தனையோ உணர்வர்களை பிரதிபலிக்கும். அன்பு,வலி ,காதல் இதுபோல சொல்லில் அடங்காத எத்தனையோ உணர்வு உயிர்வரை ஒரு வலி சென்று ரணமாக்கி கொண்டிருந்தது இருவரையும்..
" பவி அழாதடி.. அழு மூச்சி பவித்ராவ எனக்கு பிடிக்கவே இல்லை. நான் ஏதோ ரொம்ப பெரிய தப்பு பண்ண மாதிரி தோனுது அழாத.. " பெரும் முயற்சிக்கு பின்னும். கண்ணீரை கட்டுப்படுத்த முயன்று தோற்றே போனாள் பவித்ரா.
"அது மட்டும் தான் வருது டா முடியல. என்ன விட்டு போகாத. இது தாங்கவே முடியாது வலியா இருக்கு. என்னால முடியலடா.." அழுது கரைய.
தலையை மென்மையாக வருடி.."வேலைக்காக தானடா போறேன் வந்திருவேன் பயப்படாதே. வாரம் வர முடியாது. ஆனா மாச மாசம் கண்டிப்பா வந்துருவேன். அத்தை பத்திரமா பாத்துக்கோ. உன்ன நீ முதல்ல பாத்துக்கோ. யாரையும் நம்பாதே. யார் கூடையும் தனியா போகாத. " என்ன நினைத்தானே "என்னை மறந்துடாதடி. " என்று சொல்லி "டைம் ஆயிடுச்சு கூப்பிடுறாங்க நினைக்கிறேன் நான் போறேன். என்று அவளிடம் அனுமதி கேட்கவும்..அழுது கொண்டு அவனை இறுக அணைத்து இதயத்தில் புதைந்தாள் பவி..
இத்தனை அன்பா என்மேல் இவளுக்கு என்று அகமகிழ்ந்து நிற்க.! மனதில் மழை அடித்து வெயிலும் அடிக்கும் வானிலை போல பரவசம். ஆனால் ப்ரீத் இதை முழுதாக கிரகிக்கும் முன்னே பிரிவின் வலி. ஊசியாய் இதயத்தில் இறங்க.. ஐஸ் கட்டியில் கால் வைத்தது போல் நெருடல் உணர்ந்தான். அவளவன் அவள் அணைப்பினில் .
'சேர்ந்தா தான் காதலா என்று பவி நினைக்க.?'
" சேராத காதல் எதற்க்கு என்று ப்ரீத் நினைக்க.?'
பிரிவை முதல் முறை உணரும் தருணம். வலி கூடி மூச்சு முட்டியது இருவருக்கும்.
குழந்தையாய் அவள் தவழும் போதே..தாங்கி பிடித்து பாதுகாத்தவனின் பாசம் இல்லையா? இன்று பெண் பிள்ளையை தனியே தவிக்க விட்டு செல்லும் தாயின் நிலை ப்ரீத் உடையது. பயந்து நடுங்கினான் அவள் பாதுகாப்பா இருப்பாளா? என்று என்னை எதிர்க்கயில் சண்டிராணி தான் அவள். ஆனால் யாரிடமும் அதிர்ந்து பேசாத.. பேச மடந்தை அவள். தவிக்கவிட்டு போவது தவறு என புரிந்தாலும், பிரிவு அவள் மனதை மாற்றாதா என்ற சிறு பேராசையில்.. தனிமை தீயில் எரிய தயாரானான் மாமன். விமானம் புறப்பட அழைப்பு வர..
"பவி.. விடு.. போகனும்.. "என்று விலக பார்க்க.
"ம்ச்.. போகனும் போகனும்னு சொல்லாத.. டா.."
ப்ரீத் -"டிக்கெட் வீணாக போகுது."
" டிக்கெட் காசு தான் உனக்கு பெருசா இருக்குல்ல " பவியின் கன்னங்களில் வற்றாமல் நீர் வழிய,அள்ளவும் முடியாமல் தள்ளவும் முடியாமல் தவிந்து போய் நின்றான் பிரித்.
மிரட்டும் தொனியில் " ஒழுங்கா எப்டி போறியோ.. அப்படியே வரனும். ஒரு நிமிஷம் ஃப்ரீ டைய்ம் கிடைச்சாலும் கால் பண்ணனும். அடிக்கடி வீட்டுக்கு வரனும்.புரியுதா. முக்கியமா எவளையும் பாக்கக்கூடாது.
இந்த இரண்டு வருஷம் நிறைய நல்ல மாற்றம் வரும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு ப்ரீத்.
" ம்..சரி.. இதையே நான் சொன்னா மேடம் சந்தேக புத்தி சொல்லி திட்டுவீங்க.." விலகி போர்டிங் நோக்கி சென்றவனின் கையை சட்டென பவி இழுக்க அவள் மீதே மோதி நின்றான்..
" நீ கூட இருக்குறவரை.. எதை எதையோ தேடுன இந்த மனசு.. நீ இல்லானா உன்ன தவிர எதையும் தேடாது ப்ரீத். " என்று கண்கள் கலங்கி இமைமீது நிற்க. அவன் இடது பக்க சட்டை பாக்கெட்டிற்க்கு மேல் இதயத்திற்க்கு நேராய்.. தன் ஈர இதழ்களால் உரசி முத்தமிட்டாள் பவித்ரா.!
காமத்தோடு கிடைக்கும்.. ஆயிரம் முத்தத்தை விட, தனக்கா கண்ணீருடன் அவள் தந்த இதழ் படாத ஒற்றை முத்தம். உயிர்வரை சென்று தாக்குதல் நடத்தியது. சந்தோஷம் தங்காமல் பறக்க தயாரானான் இறக்கை இல்லாமலே.! "ஏய்..இந்த சட்டைய பொக்கிஷமா வச்சுப்பேன் டி.." என்று துள்ளி குதித்து ஓடியவனை. ஐந்து வயது சிறுவனாக பார்க்கும் உணர்வு அவளுக்கு ,தலையில் அடித்துக் கொண்டாள் பவி.
"கைகள் அசைத்து. பின்னால் கண் இருப்பவன் போல..அவளை நோக்கி பின்னுடே நடந்து சென்று மறைந்தான்.
" டெல்லி செல்லும் விமானம் புறப்பட்டு வானில் பறப்பது தெரிய, கண்ணீரை கசிந்தது. அவளது கண்கள்.
விமானத்தின் கண்ணாடி ஜன்னல் வழியே எட்டி எட்டி பார்த்தான். அவள் தெரிய மாட்டாள் என்றாலும் ஏதோ ஒரு ஏக்கத்தில் எட்டி எட்டி பார்த்தான் ப்ரீத். இதயத்தை இடரி எங்கோ தொலைத்தவன் போல் அவள் இல்லா உலகம்,அழகே இல்லா பாலைவனமாக காட்சியளிக்க.. விதியன் வசம் வாழ்க்கையை கொடுத்து விழிகள் முழுவதும் கண்ணீரில் நிரைத்து...விமானத்தில எறி அமர்ந்தவன்.
'பவியை பெற எந்த வகையிலும் உனக்கு தகுதி இல்லை ப்ரீத்.. நீ அவளின் வாழ்கைகுள்ள போன அவ சந்தோஷமாக இருக்க மாட்டா.. அவள விட்டு விலகிறது தான் ..அவளுக்கு நீ செய்யுற பெரிய நல்லது. என்று தீர்க்கமான முடிவோடு அமர்ந்தான்.
"தவறான புரிதல்கள் தான் பல உறவுகளை உடைக்கும்." டெல்லி வந்தும் கடந்த ஒரு வாரமாக ப்ரீத் தனது செல்போனில் அவள் புகைபடத்தை பார்த்து தூக்கம் இல்லாமல், தனிமை தண்டனையாக ஏற்று, முள்ளை விழுங்கியது போல்.. வலியோடு உழல்வான். பித்து பிடித்தது போல் நிழற்படங்களை கண்ணீரோடே வருடி..கதை பேசி.. அழுதழுதே இருவரும் நாட்களை கடத்தினர்.
சந்தீப்_"ஏன்டா.. எப்ப பார்த்தாலும் சோகமா உட்கார்ந்து இருக்க.?"என்று சந்தீப் வினவ
உடைந்த குரலில்" பவி என்ன வேண்டாம்னு சொல்லுறாடா.. கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொல்லிட்டா .. அவள விட்டு விலக டிரை பன்னுறேன்.. ஆனா என்னால முடியல மச்சான். நெருப்புல நிக்குற மாதிரி இருக்கு.. என்னால அவள மறக்க முடியலைடா.."
"ம்..முதல் காதல மறக்குறது ரொம்ப கஷ்டம்டா... ஆனா நம்மல மறக்கிறது ரொம்ப ஈஸி."என்றதும் ப்ரீத் புரியாமல் தன் நண்பனை பார்க்க?"புரியலைடா.?
சந்தீப்-" இங்க நெறைய இருக்கு பொண்ணு, போதை , கஞ்சா, ஊசி.. இதர பல..நீ எங்க இருக்கனே உனக்கே தெரியாது.. உலகத்தையே மறக்கலாம். வர்ஷாவ வர சொல்லறேன். நைய்ட் ரெடியா இருடா.. "
" எதுக்குடா ? " என்று புரியாமல் ப்ரீத் கேட்க.
"டேய்.. டேய்.. வர்ஷா எந்த மாதிரி பொண்ணு உனக்கு தெரியாது. அவ ஸ்டைல்ல உனக்கு ஆறுதல் சொல்லுவாடா..
"வேணாம்டா.. எனக்கு இதெல்லாம் பிடிக்காது."
" நம்மகிட்ட எந்த குறையுமே
இல்லையே.. ஏன் நம்மளை வேணாம்னு சொல்றாகுறது. பெரிய வேதனையா இருக்கும் டா.
இதே.. நீ கெட்டு பொய்டனா.. கேடு கெட்ட நமக்கு அவ கூட வாழ தகுதி இல்லைனு நீயே உன்னை வெறுப்ப.. அப்றம் எங்க அவள நினைக்கிறது.. வர்ஷாவ ஈவ்னிங் வர சொல்லுறேன்.. அமெளவ்ன்ட் நான் தந்துடறேன்.. ஃபைவ் ஹவர் தான். அதுக்கு மேல போனா நீ தான் மாப்ளை எக்ட்ரா காசு தரனும்."
"ம்.." பதட்டத்துடனே " சந்தீப் நீயும் இருப்பல்லடா... "
" இல்லை மச்சி. நீ வேற கன்னி பையனா இருக்க, நான் இருந்தா உனக்கு கம்பர்டபுளா இருக்காது.."
" தனி வீடு தான மச்சான்.. நீ பக்கத்து ரூம்ல இருக்கலாம்ல பாஷை வேற புரியாது.. ஏதாவது டவுட்னா உன்கிட்ட வந்து கேட்பேன். "
" வர்ஷா வர்றா .. எல்லாத்தையும் அவ பார்த்துப்பா.. நீ பயப்படாமல் இரு..இந்தா" என்று பாதுகாப்பு சாதன பாக்கெட்டை அவன் மேல தூக்கி எறிய.. கையால் லாவகமாக பிடித்தவனோ அட்டை படத்தை பார்த்ததும் அதை அருவருத்து கீழே தூக்கி எரிந்தான்."
"பாதுகாப்பு முக்கியம் டா மாப்ள.." என்று கூறி அவன் சென்றுவிட , நேரம் வேகமா நகர.. சாயங்காலம் குளித்து முடித்து வந்தவன்.. டீயை வடிகட்டி கோப்பையில் ஊற்றி பருகினான். வர்ஷா பற்றி முற்றிலும் மறந்தே போய் விட்டான். காலிங் பெல் சத்தம் கேட்கவும். சந்தீப் என்று கதவை திறந்தவன்.. பேய் அறைந்தது போல் நின்றான். எதிரே அவள்.!! அடர் பச்சை நிற புடவையில்.. பிங்க் நிற ஸ்டோன் ஒர்க் செய்யப்பட்டு, சிவப்பு நிற ப்ளவுஸ் அணிந்து அதிக மேக்கப்புடன் ஒரு இருபத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க பெண் முன்னால் நிற்க்க.!
வந்தவள் " வர்ஷா..சந்தீப்." விரலை அவன் பால் நீட்டி "ப்ரீத்.." என்று கேட்க.
இவனோ ஆம் என்று தலையை உலுக்க..அக்கம் பக்கம் பார்த்து விட்டு உள்ளே நுழைந்தாள்.. வர்ஷா "ஹிந்தி" தெரியுமா என்று சைகை காட்ட..
"ம்கும்.." தெரியாது என ப்ரீத் தலை ஆட்ட
"பச்.."என்று இதழ் சுழித்தாள் வர்ஷா.
" இங்கிலிஷ்" என்று அவன் கேட்டதும். இல்லை தெரியவே தெரியாது என வேகமா தலை ஆட்டி வைத்தாள். நில் என்பதை போல் ஐந்து விரலை சேர்த்து கை உயர்த்தி காட்டியவள். சைகையால் பேசி கொள்வோம் என்று விரல்களால் பாவனை செய்ய.
"ம்.." என்று அவன் தலையை ஆட்ட.. " டீ.." என்று கேட்டானே பார்க்கலாம். அதிர்ச்சியில அவள் விழிகள் அகண்டு விரிய.. தயங்கியபடி அவன் தந்த தேனீர் கோப்பையை கையில் வாங்கி பருகியவள். தெரியாத ஆடவன் மரியாதையாக கனிவோடு அவளை நடத்தியதில், இரு மை விழியின் மேல் நீர் பூ அரும்பின அவளுக்கு. டீ கொடுத்ததற்க்கு அவள் அழவில்லை. இது நாள் வரை அவளை கண்ட அனைவரும் நொடி தாளாமல் அவளை ஆட்கொள்ள துடிப்பர். போதை பொருள் அல்லது மதுபானம் பருக வேண்டுமானால் கம்பெனிக்கு அழைப்பர்.. இவனது கரிசனம் அவள் மனதிற்க்கு இதமாக மருந்திட்டது போல இருந்தது. மிருகங்கள் மட்டுமே பார்த்தவள் மனிதனை பார்த்தால் கண்ணீர் வரத்தான் செய்யும். அவன் அறையை டீயை பருகியவாறு நோட்டமிட்டு சுற்றி வர.. புன்னகையோடு ஒரு பெண்ணின் புகைப்படம்.. அவள் அருகே ப்ரீத் சிரித்த முகமாய் காட்சியளிக்க. காதலர்கள் என்று யூகிக்க முடிந்தது. சாம்பிராணி மணத்துடன் விளக்கின் தீய ஒளியில் ஜொலித்தார்..வெள்ளை நிற தொந்தி பிள்ளையார். கை கூப்ப தோன்றியது.
"எங்கே அவனை காணவில்லை என்று நோட்டமிட்டபடி.. வெளியே வர, சமையலறையில் நின்று தோசை ஊற்றிக் கொண்டு இருந்தான். டீயை அவள் பருகிய வேகத்தில் அவள் பசி புரிந்தது.
"வர்ஷா"என அவளை அழைக்க..தயங்கி தயங்கி அவன் அருகில் சென்று பெண் நிற்க.இரண்டு தோசை சாம்பார் ஊற்றி அவள் கையில் திணிக்க.. தலையை சொறிந்தவாறு வாங்கி உண்டாள்..
"அவன் தன் அறை நோக்கி சென்று விட்டான். சாப்பிட்ட தட்டை சிங்கிள் கழுவி வைத்து விட்டு அறைக்குள் வந்தாள் வர்ஷா..
அவனது செல்ஃபோனில் அழைப்பு வந்தது. பவி டார்லிங் காலிங் என்ற வாசகத்தை தாங்கி.. மின்னி ஒளிர, குலை நடுங்கியது அவனுக்கு வேர்த்து வழிய நடுங்கிக் கொண்டே நின்றான் ப்ரீத்..
"அவனின் அதிர்ச்சி தாங்கிய முகத்தை பார்த்து அவன் அருகில் சென்று மொபைலின் தொடுதிரையில் பவி டார்லிங் என்று வர..
அதை கண்டு "பவி.." என்று அவள் பெயரை உச்சரித்தாள் வர்ஷா.
எச்சிலை விழுங்கி அழைப்பை ஏற்றான்.ப்ரீத்.
நொடி தாமதித்து ஏற்ற கோபத்தில் " என்ன பண்ற..உடனே ஏன் டா போன் எடுக்கலை.? "
"ரெஸ்ட் ரூம் போனேன்..டி அதான். சாரி.. என்ன திடீர்னு போன் பண்ணுற" என்று சாக்கு சொல்ல போக..
வர்ஷாவோ பின்னே நகர்ந்து செல்ல.. அவளின் வளையல் ஒலியும் கொழுசின் ஜல்ஜல் சத்தமும் தெளிவாக பவியின் செவியில் விழ.?
"ப்ரீத்.. விடியோ கால்.. வா... என்று கட் செய்தாள் பவித்ரா.

