எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மதியின் வேந்தன் - 21

subasini

Moderator
பகுதி - 21



என் காதல் கொண்டாடப் பட வேண்டும் எனில் நான் என் காதலை முதலில் சீராட்ட வேண்டும்…



கதிர் வேந்தன் அதைதான் செய்தான் தன் காதலை முதலில் கொண்டாட நினைத்தான்.



தன் மனைவியின் தவறைப் சிறுபிள்ளையின் தவறாக நினைத்து மறந்துக் கடந்து போக முடிவுச் செய்தான்…



எதுவும் நம் மனநிலையைப் பொறுத்தது.

அவள் உயிர் விட நினைத்தாள் என்ற விஷயத்தை உணர்ந்ததும்…



தன் காதல் உயர்ந்தது என்றும், அவள் மேல் காதல் கொள்ளவும், காதலில் ஊடலாகச் சண்டைப் போடவும் அவள் தன்னுடன் வாழ வேண்டும் என்று மனதார உணர்ந்தவனுக்குத் தன் வலி எல்லாம் கரைந்துக் காற்றோடு காற்றாகிப் போனது.



கோபமும் அழகான உணர்வுத் தான்… அதை வெறுப்பாகக் காட்டாமல் காதலாக உணர்த்தலாம்… இதே தன் கோபத்தையும் காதலில் உணர்த்தத் தொடங்கி விட்டான் மதியின் வேந்தன்.



கணவனின் முத்தத்தில் பித்தம் கொண்டாள் பெண்ணவள்…



தன்னுடைய தவறு திருத்த ஒரு வாய்ப்பைத் தேடியவளுக்குக் கணவனின் மன்னிப்புப் பெரிய நிம்மதியைத் தந்தது.



எதுவும் கேட்காமல் தான் பேசிய பேச்சினை எல்லாம் மனதில் இருந்து களைந்து, அவர் காதலைத் தன்னிடம் உணர்த்தும் கணவனின் மனம் புரிந்தது அவளுக்கு. வெட்கத்தில் முகம் சிவந்தது என்றால் அவன் காதலில் கண் கலங்கியது.



ஐயம் சாரி… என்றாள் அவன் முகம் பார்த்து.



இப்போ எதுக்கு டி இந்த வார்த்தைகள் என்றவன்…நம் இரண்டு பேருக்கும் இடையே இனிமேல் நோ சாரி..நோ தேங்க்ஸ்…



நிறையச் சண்டைப் போடலாம் ஆனால், அதை இப்படிச் சமாதானம் செய்து கொள்ளலாம் என்று மீண்டும் அவளைத் தன் முத்தத்தில் திணறடித்தான் கதிர் வேந்தன்.



முதலில் நீ உடல் நிலையைச் சரியாகணும் மது என்றவன் அவள் கால்களை மெல்லத் தடவி விட்டான் அந்நேரம், சரியாக உள்ளே வந்த தருண், கண்டதென்னவோ மனைவியின் கால்களில் கைகளை வைத்து இருக்கும் தன் நண்பனைத் தான்…



“என்னடா, தப்புப் பண்ணின… என் தங்கச்சிக் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கும் அளவுக்கு” என்றவன்…

“என்ன தங்கச்சி உன்னை எதாவது சொன்னானா... ஏன் கண் சிவந்து இருக்கு... கேட்க யாருமில்லை என்று நினைச்சியாடா… அவள் அண்ணன் நான் இருக்கேன் டா… எந்திருச்சு வெளியே போடா ராஸ்கல்” என்று…‌‌ எந்த விளக்கமும் கேட்காமல் தன் பாட்டுக்குப் பேசிக்கொண்டே போனான் தருண்.



வந்துட்டான் பெரிய சமுத்திரம் படம் சரத்குமார் மாதிரி…போடா‌ டேய்…‌ உன் தங்கச்சி என்னைப் போகச் சொல்ல மாட்டாள்…எங்கே சொல்லுப் பார்ப்போம் என்று திமிராகச் சொன்ன நண்பனின் செயலில்…



"ரொம்பப் பண்ணாதே வேந்தா… அவளை வந்த நாட்களில் இருந்து அழ‌‌ மட்டுமே வைத்திருக்காய்…‌இப்போ பாரு" என்று மதியிடம் திரும்பியவனிடம்…



"மச்சான் வேண்டாம் டா, அவமானப் படப் போற நீ" என்றான் கதிர் வேந்தன்…



"ஏன்டா" என்று கேட்டத் தருணிடம்..



"உன் தங்கச்சிக்கு நான் குடுத்த மருத்த அப்படி" என்று கண்ணடித்தான்…



"ஓஹோ…‌கொஞ்சம் நான் கண் அசந்தக் கேப்பில்... நீ உன் காதலை ஸ்டாட் பண்ணிட்ட… ஓகே…‌ஓகே… நன்றாக இருறென்றவன்.. தன் உடன் பிறவா தங்கையிடம் எப்படிம்மா இருக்கு உனக்கு …‌ இனி நீ வண்டியைத் தொடவே கூடாது… நான் தான் உன்னையும் ஸ்கூல் கொண்டு போய் விடுவேன்..இதை மாட்டேன் சொல்லதே என்று அன்பாகக் கண்டித்தான் ஒர் அண்ணனாக…‌அவனின் பாசத்தைக் கண்டு கண் கலங்கச் சரி என்று தலையை ஆட்டியவளின் செயலில் தானும் கண் கலங்கினான் தருண்.



இவர்களின் பாசப் போராட்டம் கண்டு அப்போது தான் அவளைக் காண வந்த ரேணுகா “அடியே மதி” என்று கத்தினாள்…



"இப்போ நீ எதுக்குச் சவுண்ட் விடற என்று‌க் கேட்ட வேந்தனிடம்… அவன் என் அண்ணன்"… என்று தருணை நோக்கிக் கை நீட்டினாள் ரேணுகா.



"நான் மட்டும் என்ன சொன்னேன்…‌அவன் உன் மாமா என்றா.. நானும் அது தான் சொல்லறேன் தருண் உன் அண்ணன் தான்".



"மாமா.. உங்க பொண்டாட்டி என் அண்ணனைப் பங்குப் போடறாள்" என்று கத்தினாள் ரேணுகா…

அவன் என்ன ஸ்நாக்ஸா டி லூசு, பங்குப் போட" என்ற வேந்தனின் வார்த்தைகளைக் கேட்டு மாமா என்று கத்தியவளின் செயலில் "மதி வா டி‌ ரேணு… நம் தருண் அண்ணா டி" என்று செல்லம் கொஞ்சினாள்‌.



தருணின் இருப்பக்கமும் ரேணுகா மற்றும் மதுமிதா அமர்ந்து இருக்க இருவரின் அன்பில் கண்கள் கலங்க, உதட்டில் புன்னகைத் தவழ, தன் நண்பனைப் பார்த்தான் தருண்…



இந்த மூவரணியின் கலாட்டாவில் கடுப்பான வேந்தன்…



"மித்தும்மா" என்று வீடே அதிரும் படிக் கத்தினான்... தன் அண்ணன் குரலில் பயந்தவள்…‌போட்டது போட்டபடியே ஒடி வந்து அவன் முன் நின்றாள் மித்ரா…



அவள் வந்த‌ வேகத்தில் தெரிந்தது செய்து கொண்டு இருந்த வேலையை விட்டுவிட்டு வந்து இருக்கிறாள் என்று.



"உனக்கு மட்டும் தான் தங்கச்சி இருக்காங்களா, எனக்கும் தான் டா இருக்குத் தங்கச்சி" என்று தன் தங்கையை அணைத்த‌, அண்ணனின் செயலில் உணர்ச்சி வசப்பட்டு மித்ரா அவனைக் கட்டிப் பிடித்து அழுதாள்.



அவள் அவன் கைகளில் குழந்தை என அடைக்கலமானதைக் கண்டதும் தருணுக்கு மனதில் பொறாமை கடலலையெனப் பொங்கியது.



இவர்களின் இந்தப் போட்டியை அறியாமல் என்னமோ ஏதோ என்று அங்கு வந்த பானுமதி மற்றும் ராதிகா… இளையவர்களின் கலாட்டாவில்.. "பைத்தியங்களா…‌நானும் கூட ஏதோ சண்டைத் தான் போடுறீங்க ஓடி வந்தேன்" என்று மெல்ல அங்கே வந்து அமர்ந்தார்.



"கல்யாணமாகிக் குழந்தைப் பெத்துக் கொள்ளும் வயதானாலும், இன்னும் இப்படியே அடிச்சுட்டுச் சுத்தறீங்களே‌ வெக்கமா இல்லையா" என்று தலையில் அடித்துக் கொண்டு கேட்டாள் பானுமதி.



இல்லை என்று எல்லாத் திக்கும் இருந்து வந்தது பதில்…

அதில் சிரிப்புப் பொங்க அந்தச் சத்தம் வீடே அதிர்ந்தது.



இத்தனை நேரமும் தன் அண்ணன் தோள் வளைவில் இருந்த மித்ரா, தன் அண்ணன் முகத்தைப் பார்த்தாள்.



கண் கலங்கத் தன்னைப் பார்க்கும் தங்கையின் நெற்றியில் முத்தம் மிட்டு “அழகூடாது மித்தும்மா…நீ‌ அழும்‌ப் போது உன்னைப் பாதுக்காக்கத் தவறி விட்டேன் என்று‌க் குற்ற உணர்வு என்னைக் கொல்லுது” என்றான் கதிர் வேந்தன்.



“இல்லை அண்ணா நான் அழவே மாட்டேன்” என்றவள் தன் கண்களைத் துடித்தாள்.



இருவரையும் கவனித்த தருண்… மித்ராவின் செயலில் அவன் கை இறுகியதில் மதுவின் தோளில் வலி உண்டாகத் தருணைப் பார்த்தாள்.. அதேபோல் ரேணுவும் பார்த்தாள்.

இருவருக்கும் தருணின் காதல் புரிந்ததும்... பெண்கள் இருவரின் விழிகள் சந்தித்துக்கொண்டது.



"போதும் டா உங்க பாசத்தில் நாங்கள் வழுக்கி விழுந்தற‌ப்போறோம்" என்று பானுமதியின் குரல்



அண்ணன் தங்கை‌ இருவரையும் நிகழ்க்காலத்திற்குக் கொண்டு வந்தது.



அப்போது அங்கே வந்த பாலமுருகன்…‌ "மது‌ உன் பள்ளியில் இருந்து உன்னோட மாணவர்கள் வந்து இருக்காங்கப் பார்ப்பதற்கு" என்றார்.



அவர்களைப் போய் அழைத்து வந்தான் கதிர் வேந்தன்.



வந்த‌ மாணவர் கூட்டத்தில் அவள் பின்னாடி வண்டி ஓட்டி வந்தவனும் இருந்தான்… அவன் மதுமிதா அருகே வந்து.. “சாரி மிஸ்.. அன்றைக்கு மாலை உங்களிடம் மன்னிப்புக் கேட்டு,‌ இனி இது போன்ற தவறான செயல்களில் ஈடுபட மாட்டேன் என்று சொல்லத்தான் உங்கள் பின்னாடியே வந்தேன். ஆனால் அதற்குள் இப்படி நடந்து விட்டது" என்று‌ வருந்தியவன… இனி நல்ல மாணவனாக.. தன் தாய்க்கு நல்ல மகனாக இருப்பேன் என்று வாக்குக் கொடுத்தான். பின் எல்லோரும் அவள் நலம் விசாரித்த பின்னர் அங்கிருந்துச் சென்றனர்.



அவனின் இந்த மாற்றம் அனைவருக்கும் சந்தோஷமாக இருந்தது.



தன் மருமகளைப் பெருமையாகப் பார்த்தார் பாலமுருகன்.



"என் மருமகள் மனசு எப்பவுமே நல்லது மட்டுமே சிந்திக்கும்" என்றார்.



"இனி அவர் மருமகள் புராணம் தான் பேசுவாரு..நாம் இங்கே இருந்து போவது நம் மனதுக்கு ஆரோக்கியம்" என்று‌க் கேலிச் செய்தாள் ரேணுகா.



“உனக்குப் பொறாமை டி” என்று‌பதிலுக்குச் சண்டைப் போட்டாள் மதுமிதா.



"உங்க சண்டையை அப்பறம் போடுங்கள்" என்றவர் வாங்கி வந்த பழங்கள் அனைத்து மதுமிதாவிடம் கொடுத்து “இதெல்லாம் சாப்பிடனும் மது அப்போது தான் வேகமாக எழுந்து நடமாட முடியும்” என்று அங்கிருந்துச் சென்றார்.



அனைத்தும் நன்றாகச் சென்றுகொண்டிருந்தது…



மதுமிதா உடல் நிலை நன்றாகத் தேறி வரத் தொடங்கியது. அனைவரின் அன்பும் அக்கறையும் அவள் மனதையும் தேற்றியது... பெற்றோர் இல்லை என்ற வேதனையை மறக்க வைத்தது பானுமதி, ராதிகாவின் அன்பு.



கணவனின் மனதில் இருந்து கோபமும் மாயாமாக மறைந்தது அவளுக்கு ஆனந்ததை உண்டாக்கியது. நாம் நினைப்பதெல்லாம் சரி என்ற எண்ணம் தான் பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கிறது என்ற உண்மையை உணர்ந்துத் தெளிந்தாள் மதுமிதா. இனி நம் குடும்பத்தில் எந்தக் கஷ்டமும் வரக்கூடாது என்று‌ மனதில் நினைத்துக் கொண்டாள்.



நாட்காட்டியில் நேரம் வேகமாகப் பயணித்தது.

ரேணுகாவிற்கு வளைகாப்புச் செய்யப் பேச்சுக்கள் குடும்பத்தில் போய்க் கொண்டு இருந்தது. அவளைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டாள் மதுமிதா.



இரண்டு வீட்டுப் பெரியவர்கள் இருந்த போதும் தன் தோழியைக் கர்ப்பகாலத்தை அவளுடன் சேர்ந்துத் தானும் ரசித்தாள். மனதின் ஓரத்தில் தானும் தாயாக வேண்டும் என்ற ஆசை அவளைச் சிறுகச் சிறுகத் தின்றுக் கொண்டிருந்தது… இதனால் அவள் முகத்தில் வெறுமை குடிக்கொண்டது.



எதுவோ குறைவாகத் தோன்றியது அவளிடம் ஆனால் என்ன என்று யாருக்கும் தெரியவில்லை… அதனால் நன்றாகப் போகும் குடும்பத்தில் எந்தப் பிரச்சனையும் வேண்டாம் எல்லாம் சரி ஆகும் என்று‌பெரியவர்கள் நினைத்தார்கள்.



கதிர் வேந்தனின் மனதிலோ இப்போது தான் மனதளவில் நெருக்கமான உணர்வு வந்திருக்கிறது. மெதுவாக அவள் காதல் முழுவதும் உணர்ந்து மனதோடு உடலும் சேரட்டும் என்று எண்ணிய எல்லாம் வீணாகிப் போனது.



மித்ரா, தன் கல்லூரிப் படிப்பில் கவனம் முழுவதும் செலுத்தியதால், அவள் தருணின்‌ப் பக்கம் திரும்புவதில்லை… அவனுக்கு மனதில் வருத்தம் இருந்த போதும் அதைக் காட்டிக் கொள்ள வில்லை. அவள் என்றுமே தன் காதலுக்கு நியாயம் செய்ய வில்லை என்று நினைத்தான்.



அதனால் தன் வலி.. வேதனை… ஏமாற்றம் எல்லாம் தன் மனதில் புதைத்தவன் வேதாந்த் மட்டுமே உலகம் என்று இருந்தான்.

மதுவின் முகத்தில் இருக்கும் வெறுமை உணர்ந்துக் கதிர் வேந்தன் அவளுக்கு என்ன பிரச்சினை என்று சிந்திக்கத் தொடங்கினான்



தன் மனைவியின் மனதில் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள அவளிடம் மனம் விட்டுப் பேச முடிவுச் செய்தான் கதிர்வேந்தன். தன் வேலையெல்லாம் முடித்துக் கொண்டு தங்கள் படுக்கைக்கு வந்தவளைக் கைகள் பிடித்துத் தன் அருகில் அமர்த்தினான் அவள் கணவன்.



"ரொம்ப நாளா உன்னைக் கவனிச்சுட்டே இருக்கேன் என்ன ஆச்சு அடிபட்ட இடத்தில் ஏதாவது வலி இருக்கா, ஏதாவது பிரச்சனையா ஸ்கூல்ல, ஏன் ஒரு மாதிரியாவே இருக்க உன் முகத்தில் பழைய சந்தோஷம் இல்லவே இல்லை.



நம் இருவருக்கும் இடையே சண்டைகள் இருந்த போதும் உன் முகத்தில் ஒரு நம்பிக்கையும் அதன் பின்னில் இருக்கும் சந்தோஷத்தையும் என்னால் உணர முடிந்தது. ஆனால் இப்பொழுது உன் முகத்தில் வெறுமை மட்டுமே இருக்கிறது என்ன பிரச்சனை" என்று கேட்டான் கதிர்வேந்தன்.



"எனக்குப் பிரச்சனை ஒன்னும் இல்லைங்க" என்றாள் அவள் மனைவி.



"உங்களுக்கு நானே சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வரேன், டீக் குடிக்கிறீங்களா இல்லை காபி வேணுமா? என்று பேச்சை மாற்றினாள் மதுமிதா.



"பேச்சு மாத்தாத மது" என்றான் அவள் கணவன் என்ன சொல்ல வருகிறான் என்பது புரிந்தப் போதும், அவளால் அவனிடம் தன் மனதில் இருப்பதை நேரடியாகக் கேட்கவோ பகிரவோ தயக்கமிருந்தது. தன்னைத் தவறாக நினைத்து விடுவானோ என்ற பயம் இன்னும் அவள் மனதில் பயணித்துக் கொண்டே இருந்தது என்பது தான் உண்மை.



தானாகத் தங்கள் இருவரின் உறவிலும் முயற்சி எடுத்து அதை அவன் காதல் இல்லாமல் தங்களிடம் ஏற்படும் நெருக்கம் என்பது பற்றி அவனுடைய விளக்கம் அவள் மனதில் மிகப்பெரிய காயத்தை உண்டுப் பண்ணி இருந்தது. தன் காதலை எங்கேயும் அவளிடம் அவள் சொல்லவுமில்லை சொல்லுவதற்கு அவன் சந்தர்ப்பம் தரவும் இல்லை என்பதுதான் அங்கே உண்மை. அவன் மேல் தனக்குக் காதல் வந்தது என்பதைச் சொல்லவும் அவளுக்கு ஒருவிதத் தயக்கம் இருந்தது. காரணம் அவள் கடந்த காலத்தில் பேசியதும், செய்ததும் தான் என்பது அவளுக்கே புரிந்தும் இருந்தது.



அதனால் இந்த வாழ்க்கை எவ்வளவு தூரம் போகுமோ அவ்வளவு தூரம் போகட்டும் என்று பொறுமையாகவே இருந்தாள். எதுவாக இருந்தாலும் கணவனாகவே முன் வரட்டும். அது காதலாக இருந்தாலும் தன் கடமையாகும் இருந்தாலும் சரி என்று மனதைப் பக்குவப்படுத்திக் கொண்டாள் மதுமிதா.



அவனுக்கு டீயைக் கொண்டு வர‌ச்சென்றிருந்நாள் மதுமிதா.



தன் மனைவியின் மனதில் எதையோ நினைத்துக் குழம்பிக் கொண்டிருக்கிறாள் என்பது தெளிவாகப் புரிந்தது கதிர்வேந்தனுக்கு.



இப்பொழுது எல்லாம் அவளைக் கவனிக்கத் தொடங்கி இருந்தான். தன்னுடைய தவறு தான் அவளை உயிரை விடத் தூண்டியது அவனுக்கு இன்றும் குற்ற உணர்வினைத் தந்தது.



கணவன் மனைவி இடையில் சண்டைகளும் பிணக்குகளும் வரத்தான் செய்யும், அதில் யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்துச் செல்வதுதானே வாழ்க்கை.



தன்னுடைய கோபத்தைக் குறைத்து இருந்திருக்கலாம், இல்லையென்றால் அவளுக்குத் தன்னுடைய மனநிலையைப் புரிய வைத்திருந்தீர்களாமோ?



இரண்டுமே செய்யாமல் தன்னை நாடி வந்தவளைக் கோபத்தில் வேதனைப்படுத்தி விட்டதினால் தான், அவள் தன்னிடம் எதுவுமே மனம் விட்டுப் பேச முயல்வதில்லை என்பது தெளிவாகப் புரிந்தது கதிர்வேந்தனுக்கு.



தவறு தன்னுடைய பக்கம் இருக்கிறது என்பதை மனமார ஏற்றுக்கொண்டான்.



இதை இப்படியே கொண்டு சென்றால் தங்களுடைய திருமண வாழ்க்கையில் பிளவு வந்துவிடும் என்ற பயமும் அவனுக்கு இருந்தது.



பல வருடக்காதலும் காதல் மனைவியும் இழக்க அவன் தயாராக இல்லை. அதனால் இன்று இதற்கு ஒரு முடிவு வேண்டும் என்று மனதில் நினைத்தவன் அலைபேசியில் டைமர் அடித்தது…‌என்ன என்று எடுத்துப் பார்த்தவனுக்குத் தன் மனைவியின் பிறந்த‌நாள் தினத்தின் அலாரமென்று புரிந்தது.



வருடா வருடம் நடப்பது தான் இந்த வருடம் அவள் தன்னுடன் இருக்கிறாள்…



வாழ்க்கையில் சரி செய்ய முயலும்போது அதற்கு உதவும் விதமாகச் சந்தர்ப்பம் கையில் கிடைத்ததில், இதழில் தோன்றியப் புன்னகையில் அந்த ஆண்டவனே நம் பக்கம் தான்டா, கதிரு' எனத் தனக்குத் தானே சொல்லிக்கொண்டவன் அன்றைய பிறந்தநாளை‌ச் சர்ப்ரைஸ் கொடுத்து அவளுடைய இந்தப் பிறந்தநாள் சிறப்பானதாக மாற்ற முடிவு செய்து இருந்தான்.



ஆனால் தன் மனைவியோ அவனுக்குச் சர்ப்ரைஸ் தரும் போது

அவன் காதல் என்னவாகும் என்று பார்க்க அவனோடு காலமும் காத்திருந்தது…



காத்திருப்பதும் அழகுத் தான்…



வாடி நிற்கும் செடியாக

நீ இருக்க…

இதோ நீராகி உன்னைத் தழுவுகிறேன்…



மேகம் மூடி மறைக்கும் நிலவாக

நீ இருக்க…



இதோ காற்றாகி உன்னை

தழுவுகிறேன்…



நீ எதுவாக மாற்றினாலும்

உன்னைத் தழுவ நானும்

பல உருவங்களில் வருவேன்…



தொடரும்...
 
Top