உமா கார்த்திக்
Moderator


பவி "ஏன்.. ப்ரீத்.. இப்படி எல்லாம்
மாட்டுவ ணு தெரிஞ்சா ஹிந்தி
கிளாஸுக்கு அனுப்பி
இருக்க மாட்ட தானே?"
'மைண்ட் வாய்ஸ் அப்படியே ரீட் பண்ணுரளே' " இல்ல பவி எவ்ளோ.. அறிவு உனக்கு. ஈஈஈ" என்று மொத்த பல்வரிசை காட்டி அசடு வழிய,
அவனை முறைத்தவள்
"என்னயே ஏமாத்த பாத்தல்ல.அவ போன் நம்பர் உன்கிட்ட
இருக்கா ? "
மறுப்பாக இடம் வலமாக தலையை ஆட்டி "ம்கும் இல்லை. நீ ஏன்
கேட்குற ? நல்ல பொண்ணு பவி பாவம் திட்டிடாத "என்று கெஞ்சும் குரலில் கேட்கவும்.
பவி ஏளனமாக புன்னகைத்துக " கஸ்டமர் கிட்ட நம்பர் கூட இல்லை. பச் .. பொய் சொல்ற தான.! "
"இதுக்கும் எனக்கும் சம்பந்தமே கிடையாது டி ..எல்லாம் சந்தீப்போட வேலை தான்.அவன் கிட்ட நைட்டு ஃபுல்லா
புலம்பி சாவடிக்கறேன்னு
காசு போனாலும் பரவாயில்லை..அந்த
வர்ஷா வ வர வச்சான்..
உனக்கு நம்பிக்கை இல்லைனா நீயும் என் கூடவே டெல்லிக்கு வா. "என்று தோளை குலுக்க.
" நான் வர மாட்டேன்கிற நம்பிக்கையில தான கூப்பிடுற? இல்ல.."என்று சந்தேகமாய் ஒரு லுக் விட,
" ம்கும்..நிஜமா தான் சொல்றேன். ஆனா
அத்தை கிட்ட நீ தான் கேட்கனும். "
" ம்.. உன் கூட தனியா.. அம்மா விட மாட்டாங்க டா.."
"நான் பேசுறேன்.. நாம சேர்ந்து போகலாம்.. சரி..எனக்கு ஒரு வேலை இருக்கு.நைய்ட் வர லேட் ஆகும் "என்றதுமே கேவளமாக பவி
அவனை பார்க்க ?
ப்ரீத்" ஏன் டி
இப்டி பாக்குற? இரத்த காவு எல்லாம் கொடுத்து
இருக்கேன்.கொஞ்சம் மலையேறு ஆத்தா ?பசங்க கூட
தான் போறேன். காஞ்சனா பட
போஸ்டர் மாதிரியே இருக்க டி .. "என்று தனது மொபைல் கேமராவால் செல்ஃபி எடுக்க அருகில்
செல்ல..அவளோ கோபமாக போனை தட்டி விட்டாள்.
ப்ரீத் விடாமல் " வா" என்று அவள்
தோளில் கை போட.. சட்டென அவன் கழுத்தை நெறித்தாள்.
"செம போஸ்.." என்று கிளிக் செய்ய " நாக்கை நீட்டி, கழுத்தை
கடித்துக் இரத்தம் குடிப்பது..என பல வித போஸ்களில்
புகைப்படம் எடுத்து குவித்தபின். " போய் குளிடி எனக்கே
உன்ன பாக்க பயமா தான்இருக்கு.ப் ..பா..ஆ.! " என்று பைக் கீயை எடுத்துக் கொண்டு ப்ரீத் வெளியே கிளம்பிய பின்.
பவி " நம்ம முகம் அவ்ளோ பயங்கரமாவா..
இருக்கு? எங்க பாப்பபோம்."என கண்ணாடியில் அவள்
முகத்தை பார்த்து அவளுக்கே
தூக்கிவாரிப் போட, வேகமாக பாத்ரூம்
உள்ளே சென்று ஷவரை
திருகினாள் . கொஞ்சம்
கொஞ்சமாக அவன் உதிரம் கரைந்து அவள் உடலை சிவப்பாக்க . கண்களை
மூடியாவாறு நின்றவள். முன் மனத்திரையில் நடந்தவை யாவும் ஓட,
" என் மனசுல ஒருத்தி இருக்க அவள தவிர யாரையும் நான்
தொட மாட்டேன். தொடவும் முடியாது. "
என்று அவன் குரலில் சொல்வதுபோல் செவியில் கேட்க.!
வெட்கம் கலந்த புன்னகையோடு
விழிகளை திறந்து பார்த்தாள்..
உடலோடு சேர்ந்து அவளது மனமும் அவன் காதலால் நனைய.!
"இவ்ளோ கோபம் உனக்கு வருமாடி?" என்று ஆச்சர்யமாய்
தன்னை தானே கேட்டாள். ஏனென்றால் பவித்ரா மிகவும்
மென்மையான குணம்
உடையவள்.கோபமான வார்த்தைகள்
கூட அவளுக்கு பிடிக்காது.அவளுடைய அதிகபட்ச கோபமே மெளனம் தான்.ஆனால் இன்று அவள்சண்டை போட்டது அவனை
காயப்படுத்தியது எல்லாம்' எதனால் செய்தோம் என்று
யோசித்தவள்.
என்ன தான் எனக்கு வேண்டும்.இறைவா? 'என்று குழம்பியவாறு
மூளை சூடாக.. செயற்ககை நீர் பூக்களின்
அர்ச்சனையால் கொஞ்சம்
ஆசுவாசமாக உணர்ந்தாள்.
அவளோ குளித்து முடித்து விட்டு
உடைமாற்றி உணவு உண்ண
வந்து அமர ..
சுமதி -" பவி எங்க
ப்ரீத்.? "என்று தாய் கேட்டதும் "வர லேட் ஆகும்னு உங்ககிட்ட
சொல்ல சொன்னான் மா. நீங்க சாப்டுட்டு தூங்குங்க . அவன்
கூத்தடிச்சுட்டு காலையில தான் வருவான். என்ன வெளிய எங்கேயும் விட்டுடாத, இவன் நைட் ஃபுல்லா எங்கேயாவது சுத்திட்டு வந்தாலும் கேள்வி கேட்காதே.."
என்று முகத்தை சுளித்தவாறு
கோபமாய் உறங்க சென்றாள் பவித்ரா.
"இப்ப நான் என்ன கேட்டேன்? எதுக்கு இப்படி உன் மூஞ்ச இழுத்துட்டு
போற " என்று தலையில் அடித்துக்கொண்டார்.. சுமதி.
"தாய் கிழவி நீ.. திட்டுறது கேட்கல போய் தூங்கு. உன் மருமகன் எப்ப
பொறுக்கிட்டு வருவான்னே
தெரியாது. அவனுக்காக
தேவை இல்லாம
முழிச்சிட்டு இருக்காத. "
என்று சொல்லி கோபமாகக் உறங்க சென்றாள்.
காலையில் ஆதவன் மேகம் என்னும் போர்வை விடுத்து பூமி தரிசிக்கும் ஆவலுடன் வந்து
தன் ஒளிக்கீற்றுகளால் உலகை வருட..
எழுந்திரு அஞ்சலி... அந்த டோனில் .. "பவி எந்திரி..எந்திரி ..எந்திரி .. " என்று தூக்கத்தில் இருப்பவளை மில்க் ஷேக் போல ஆடவன் குலுக்க..
"இவன முதல்ல கொல்லனும் "
என்று வெறியோடு விழித்தவள்..
"என்ன தான் ..டா எரும மாடு..இதுக்கு பேசாம நீ டெல்லியில இருந்து இருக்கலாம் எதுக்கு டா
உயிர் போற மாதிரி எழுப்புற.புளிய மரத்த உழுக்குற மாதிரி
உழுக்குற.. வாந்தி வருதுடா வெலங்காதவனே " என்ற அர்ச்சனையோடு போர்வை விலக்கி அவள் ஆடைகளை சரி செய்து மெத்தையை விட்டு கீழே இறங்க..
ப்ரீத் -"நைட் ஃபுல்லா தூங்காத நானே முழிச்சிருக்கேன். உனக்கு என்னடி?" என்றதும் குத்தலாக"
உங்களுக்கு நைட்
ஃபுல்லா தூங்காம இருந்து.. கூட
இருக்கிறவங்களயும் தூங்காம டார்ச்சர் பண்ணுறது பழக்கம் சார்.நமக்கு அப்படி இல்லை"என்று நக்கலாக சீண்ட,
ப்ரீத் - "ஐயோ.. ஆரம்பிக்காத டி..
உன்மேல சத்தியம் பண்ணி இருக்கேன். அப்புறம் சாமி
வந்து கண்ணுகுத்தும் "
என்று மென்மையாக சிரிப்பவனை பார்த்து
முறைத்துக் கொண்டே ..
அவள் வாஷ் ரூம்சென்று
வர,அதற்குள்ளாகவே அவள் அணிய வேண்டிய ஆடைகளை அவளுக்காக தேர்வு செய்து
மெத்தை மீது கிடத்திவிட்டு
தானும் குளிக்க சென்றான் ப்ரீத்.
"பவித்ரா..தலைக்கு குளித்து துண்டுடன்
வெளியே வர நினைத்தவள்.கதவை
பாதியாக திறந்து
வைத்து உள்ளே ப்ரீத் உள்ளானா? என்று சுற்றி
எட்டிப் பார்த்தவள் . அவன் இல்லை என்றதும் வேகமாக
அறைக்குள்ளே வந்து அவன் அவளுக்காக தேர்வு செய்த சிவப்பு நிறகழுத்தில் மட்டும்
எம்ராய்டரி செய்யப்பட்ட
குர்த்தியை கைகளால் எடுத்து அதை வருடியவாரு.. "திடீர்னு
என்ன டிரஸ் எல்லாம் செலக்ட் பண்ணி வச்சுட்டு போறன்?
ஏதோ தப்பா இருக்கு. " என்றுயோசனையோடு, ஹேர் டிரையர்
மூலம் கூந்தலைக் காயவைத்து.
(பிரெஞ்சு பேக் ) ஒருபுறம்
மட்டும் .இடது காதுகளுக்கு மேல்
உள்ள கூந்தலை கீற்றாக அள்ளி கேட்ச் கிளிப் போட்டுக்கொண்டவள்..
கண்ணாடியை பார்த்து தன்னையே ரசிக்க.!
" ஏய் தலை பின்னல்
போடுடி ." என்று அவன் குரல் கேட்டதும்..கோபமாக கண்ணாடி முன் வந்து நின்றவள்.. இதய
வடிவிலான வெள்ளை நிற கற்கள் பதித்த கிளிப்பை எடுத்து கேட்ச
கிளிப்பை அகற்றி. ஸ்டோன் கிளிப்பை தலையில் குத்திக் கூந்தலை பின்னிக் கொண்டாள்.
"பூ வாங்கிட்டு வந்து இருக்கேன்.. பவி..ஃபிரிட்ஜில இருக்கு." என்று
உடை மாற்றிக் கொண்டே
அவன் அடுத்த அறையில்
இருந்து கத்தும் சத்தம் கேட்டதும்
வேகமாக சென்று ஃப்ரிட்ஜ்ல் கவரில் உள்ள பூவை எடுத்தவள்
வேண்டும் என்று "ஹேர்
பின் எங்க வெச்சிருக்க.?"
என்றதும் கடுப்பானவன்
வேக வேகமாக வந்து, ஹேர் பின்னை அவள் அறையினுள் ட்ரெஸ்ஸிங் டேபிளில்
இருந்து எடுத்து வந்து.
வெடிக்கென்று
ஒரு கையில் இருந்த பூவை வாங்கி.. அவள்
கூந்தலில் சூடினான்.
பவி " ஏய் நானே வச்சுப்பேன்
விடு "என்றதுமே "நடிக்காதீங்க
மேடம்..ஹேர் பின்ன கையில கொடுத்தா.. ஏன்? வச்சி விடறதுக்கு உங்க அப்பா வருவாரானு கேப்ப
எதுக்கு ?" என்று தோளை
குலுக்கியவாறு அவளை
அழைத்து சென்றான்.
பவி" 'பரவால்ல நம்மள பத்திநல்லா தெரிஞ்சு வச்சிருக்கான்.'என்று புன்னகைத்தவள்.
' பிடிச்சவங்க கிட்ட சண்டைபோடறது மட்டும் இல்லை.அவங்கள வேலை வாங்குறதும் ஜாலி தான் இருக்கு.
இல்ல. "ம்..கும்" என்று உடலைக் குலுக்கியவாறு ட்ரெஸ்ஸிங்
டேபிள் சென்றவள் சின்னதாக மெருன் நிரப்பொட்டு மட்டும் நெற்றியில் கீழே புருவ இடுக்கில்வைத்து கண்ணாடியை பார்க்க.! அதில் ப்ரீத் அவள் அருகில் வருவது தெரிய.. அடர் சிவப்பு
நிற முழுக்கை சட்டையும் சிவப்பு நிற பார்டர் உள்ள வேஷ்டிஅணிந்தவன் அருகில் வருவதை
கண்டதும், உடல் தானாக
படபடத்தது.. வந்தவன் அவளைஒட்டியவரே நிற்க. பெண்
நாணத்தால் நெளிய..மேலும் அவள் மேல் சாய்ந்து.. வளைந்து கையை நீட்டி.. கன்னம் உரசி..சந்தன பேழை எடுத்து அவள்
நெற்றியில் விரலால் சந்தனம் வைத்து விட,
அவளோ "ஆ.!" என்று வாயை பிளந்தாள். என்ன எதிர்பார்த்தாளோ.? ஏமாற்றமாக 'இதுக்காடா
இவ்ளோ பில்டப்பு..' என்று வேஷ்டியில் கம்பீரமாக நிற்க்கும் .. தன் மாமனின் ஆண்மையின் அழகை பார்வையால் விழுங்க.
"பவி.. ஏய் நல்ல
நேரம் முடிய போகுது டி ..லேட்ஆயிடுச்சு சீக்கிரம் வா.."என்று வெளியே போக எத்தனிக்க.
மெல்ல அவன் கைகளைப் பிடித்து. "எங்க போறோம் ப்ரீத். "
என்று பயந்தவரே மாமனைபார்த்து கேட்டாள் பவித்ரா.
ப்ரீத்" கோயிலுக்கு தான்..போறோம். "என்று அவள்கை பிடித்து பூஜை அறை அழைத்து செல்ல..சாரி இழுத்து செல்ல.. விளக்கேற்ற சொல்லி தீப்பெட்டியை அவள் கையில் தர என்ன பண்ணப் போறாங்க என்று பயந்துவாரு.. தீபத்தை ஏற்றி
தெய்வத்தை தொழுதால் பவித்ரா..மனதை ஒருமைப்படுத்தி
வணங்கியதும்.மூளையின் பல்ப் எரிய..' இந்த கும்பகர்ணன்
காலைல எந்திரிக்கவே
மாட்டான். இவனா நேரமாஎந்திரிச்சு.. கோவிலுக்குபோகணும்னு சொல்றான் ?நல்ல நேரம்போக போகுதுன்னு சொல்றான். அப்படின்..னா..ஏன்? ஒரு வேளை இருக்குமோ.. நல்ல நேரம் எதுக்கு பாப்பாங்க.. நல்லநேரம்
முடிய போகுது. ம்..' என்று
இல்லாத மூளையை அலசிஆராய . அப்ப இன்னிக்குஎனக்கு கல்யாணமா.??
சுமதி வேலையா இருக்குமோ?
என் தாய் தான் இப்படி கிரிமினலா யோசிக்கும்.
வேகமாக பூஜை அறைவிட்டு வெளியே வந்து.சுற்றிலும் தாய் எங்கேஇருக்கிறார் என்று மகள் தேட,
சுமதி " பவி நீயும் அவனும் நல்ல நேரம் முடியுறதுக்கு முன்னாடி கோவிலுக்கு
போங்க. நான் வீட்ட பூட்டிட்டு ஆட்டோல
வரேன். என்றதுமே
ஸ்கெட்சு தான் போல என்றுமுடிவெடுது.
'என் கல்யாணத்த
எனக்கே சொல்லாம நடத்த பாக்கறீங்களா இது நியாயமா?'
"ம் " என்று வெம்பியவள். 'இவங்கள
மீறி என்ன செய்ய முடியும்.'என வேதனை எழ."பிரீத் நான் வேணும்னாபுடவை கட்டிட்டு வரவா?"
என்று கேட்டதற்கு
புன்னகைத்தவன் "புடவை கட்டுனா நல்லா தான் இருக்கும் . ஆனா டைம் இல்ல பவி.. இந்தா " என்று பூஜை அறையில் இருந்து எடுத்து வந்த குங்குமத்தை அவள் கையில் தர..அதைப் வாங்கியவள்
தானாகவே எடுத்து அவனது நெற்றியில் கீற்றாக தீட்டினாள்.
சிறுவயதில் இருந்து இது அவளின் சுபாவம். எப்பொழுது கோவிலுக்கு சென்றாலும் வேகமாக விபூதி எடுத்து வந்து அவன் நெற்றியில் வைத்தால் தான்.. அவளுக்கு நிம்மதி வரும்.ஏனென்றால் வேண்டுதலெல்லாம் அவனுக்காக மட்டுமே இருக்கும். இப்பொழுதும் அதே நடந்தது.
ஆனால் மனதில் பல குழப்பங்கள். ப்ரீத் நெற்றியில் திருநீறு பூசி
விட்டு கண்ணை மூடி திறந்தாள் பவி.
ப்ரீத் -" இன்னைக்கு நாங்க உனக்கு கொடுக்கப் போற
சர்ப்ரைஸ்ல நீ அப்படியே
ஆடிப்போய்டுவ பவி. " என்று அவள்
கையை பிடித்து வாசல் வரை அழைத்து வந்தவன் என்ன நினைத்தானோ மீண்டும் அவள் கரங்களை பற்றி
வேகமாக அவளது தாயிடம் அழைத்து சென்றான். "எங்கள
ஆசீர்வாதம் பண்ணுங்க அத்தை. "என்று அவள் கரங்களையும் கீழே இழுத்து அவர்களின் பாதம் பணிய வைத்து தம்பதிகள் ஆசீர்வாதம் பெற்று நிமிர, தனது தாயை ஏக்கமான
விழியோடு பார்த்தவாறு 'நீ பெத்த பொண்ணு அதுவும் நான் உனக்கு ஒத்த பொண்ணு
தான.?ஏன்.மா கல்யாணத்துக்கு ஒரு பட்டு சாரியாவது எனக்கு எடுத்து கொடுக்க கூடாது. இப்படியா
சுடிதாரோட கல்யாணம்
பண்ணுவீங்க.' என்று
வெம்பியவள்.. 'உங்க மைண்ட் வாய்ஸ் புரியுதும்மா. நேரா
நீங்க சொன்னா கல்யாணம் பண்ணிக்க சம்மதமா இருந்தாலும் ஒத்துக்க மாட்டேன். ஏட்டிக்கு போட்டியா
பேசுவேன்.'
பவித்ரா மன குமுறலோடு 'எவ்வளவு
கனவு கண்டேன். பார்டடிஹால்,டிசைன்னர் சாரி,மெஹந்தி, சங்கீத்,
ரிசப்ஷன், ப்ரொபஷனல் மேக்அப், எதுவும் இல்லை.. ம்..ம்..'
என்று மனதில் கதறினாள் பவி.
சுமதி - " நீங்க ரெண்டு பேரும்
நூறு வருஷம் சேர்ந்து
நல்லபடியா
இருக்கணும்..
என்று இருவர் தலை மீது கை
வைத்து ஆசீர்வதிக்க,
அடுத்த நிமிடமே உணர்ந்து
விட்டாள். "ஆஹா
கல்யாணம் கன்பார்ம் ." ஒரு நிமிஷம் டா
கொஞ்சம் லிப்ஸ்டிக்காவது
போட்டுட்டு வரேன்." என்று தனது
அறையை நோக்கி பவித்ரா.. ஓட..
ப்ரீத் " பைத்தியம் இதை எந்த லிஸ்டில சேர்க்கிறது.. அத்தை." என அலுத்துக் கொள்ள..பவி
வேகமாக வந்தவள்
ஒவ்வொரு பாக்ஸாக திறந்து
தனக்கு பிடித்த பெரிய ..பெரிய ..
ஜிமிக்கி எடுத்து அதை காதில்
மாட்டிக்கொண்டு, அதோடு
ஒப்பனை கொஞ்சம் கூட்டி,
உதட்டுச் சாயத்தை கொஞ்சம்
அடர் நிறமாக தீட்டி, கழுத்தில் ஒரு தங்கச் சங்கிலி அணிந்து, சாதா
பொட்டை எடுத்துவிட்டு டிசைனர்
பொட்டை நெற்றியில் ஒட்டிக்கொண்டு
வேகமாக வந்தாள். கல்யாணத்திற்கான அவசர அலங்காரம்.. இது மிதமான ஒப்பனையோடு வந்த தேவதை கரங்களைப்
இறுக பற்றினான் ப்ரீத் . அவளது
நெற்றியோடு நெற்றி முட்டி
"போலாமா பேபி" என்று அழைக்க..
பரிதவிப்புடன் அவன் கரங்கள்
பற்றி நடந்தாள்."
'ஏன்டா என் கல்யாணத்த
எனக்கே சொல்லாம
நடத்த போறீங்களே டா..இதெல்லாம் உங்களுக்கு
அநியாயமா இல்லையா.?"
என்று மனதிலே உருண்டு
பிறண்டு அழுதவாறு ப்ரீத்தின் பின்னோடு
நடந்தாள்.. மணப்பெண்.' ஒ.. காட்.. என்ன
பண்ண காத்து இருக்கியோ?'
" டேய்... உன் பைய்க் எங்கடா .?" என்றாள் அழும் குரலில்..
"சர்வீஸ் பண்ண விட்டு இருக்கேன் பவி. "
அழகானவள்.. மதிமுகம் சிவப்பேறி.. ஆங்கிரி பேர்ட் ஆக மாறியது."அப்ப எப்படி கோயிலுக்கு
போறது.. டா ? "
"ம்... இப்டியே .. நடந்து போகணும்.
ஒரு நாலு கிலோமீட்டர் தானே.. பேசிக்கிட்டே
இப்படியே ஜாலியா நடந்து
போவோம் .. வா " நடக்க தொடங்க..
'என்னடா டீ குடிக்க அழசிட்டு
போற மாதிரி சொல்றானுங்க..
கல்யாணத்துக்கே
பாதயாத்திரையா?' என்ற
அதிர்ச்சியில் நடை போட்டாள் ..
பவி.
'( எங்கே செல்லும்
இந்த பாதை யாரோ.. யாரோ..
அறிவார்.)'முதல் முறை நடை பயிலும் குழந்தை போல பொறுமையாக அவள் எட்டு வைத்து நடந்து வர " பவி வேகமா நடந்து வா.." என்று கடுகடுக்கத்தான் ப்ரீத்.
" மாமா கோவில் வரை என்னை டோ பன்னிட்டு போறியா?" என்றதும் "நடக்கும் போது எப்டி டோ.. பண்ண முடியும் பவி?"
" இப்படி தான்.. மாமா .. "என்று ஒடி வந்து அவன் முதுகில் தொத்தி கொண்டு.. " நெஞ்சுகுள்ள இன்னாறு னு சொன்னா புரியுமா? " என்று அவள் ராகமிழுக்க " நீயும் பாடு... மாமா.. "
சங்கை பிடித்து நெறித்த அவள்
இருகரங்களை கொஞ்சம் விலக்கி .. லொக்... லொக்... என்று இருமியவன்.
" ஏய் தூக்குல தொங்குற மாதிரி இருக்கு.. நடுரோட்டுல பாட்டு ஒரு கேடு.. இறங்குடி .. " என்றதுமே இறங்கியவள் . கோபமாக முகத்தை சுழித்து வேக வேகமாக அவன் முன்னே நடையிட ,
" நில்லுடி .. சாரி.. " இரண்டு எட்டில் பாய்ந்து அவளை தூக்கி கைகளில் ஏந்த.. சுளுக்கு விழுந்தது போல் கழுத்தை கோணி கொண்டாள்.
ப்ரீத் - "இப்படியே இழுத்து இழுத்து ஒரு நாளைக்கு பெர்மனென்ட் ஆ .. கோணிக்க போகுது.. பவி.. பாருடி.. இல்லை எதாவது சாக்கடைய பார்த்து தள்ளி விட்டுடுவேன்.." என்று சாடியவாறு அவள் முக அபிநயங்களை .. விழிகளின் பொய் கோபத்தை ரசித்த வண்ணம் மெதுநடை பயின்றான்.. கள்வன்.
" மாமா ... ஸ்டாப்.. " கையில் இருந்து தொப்பென குதித்தவள். கண்கள் மின்ன எதையோ பார்க்க.! துள்ளலோடு ஓடினாள்.. அங்கு சிகப்பு நிற வெஸ்பா ஸ்கூட்டி நிற்க. அருகில் சென்று "ஒரே ஒரு போட்டோ இதுல உட்கார்ந்து இருக்க மாதிரி எடு ப்ரீத்.. அப்றம் சேர்ந்து ரீல்ஸ் பண்ணுவோம். "
"வண்டி ஒனர் வந்தா செறுப்பால அடிப்பான் பவி. " என்று பல்லை கடிக்க." அடிச்சா நீ வாங்கிக்கோ." சிவப்பு நிற வெஸ்பா அருகில்.. சாய்வாக நின்று, இரண்டு விரல்களை உயர்த்தி காட்டி போஸ் செய்யதவளை.. கண்ணால் வளைத்து .. அசிங்கமே இல்லாமல் .. ரசித்து, அழகில் திலைத்து, போதும் என்று அவளே சொல்லும் வரை போட்டோ கிளிக்கினான்.. மாம்ஸ். " அழகுடி நீ.. வா.. போவோம். " என்று ப்ரீத் ஸ்கூட்டியை விட்டு இழுக்க " இரு..டா என்றவள் காதலோடு அந்த வெஸ்பா வை மென்மையாக கைகளால் உணர்ந்து, வருடி ஏக்க பார்வை வீச..
" அடியே நீ தடவுற தடவல்ல ஸ்கூட்டரே மூட் ஆகி . ஸ்டார்ட் ஆகிட போகுது "
" ம்.. கும் "என்ற சினுங்கியவள்.. "என்ன விட்டுட்டு போனல்ல ,
சுவேதா தான் தினமும் என்ன பிக் அப் பண்ண வரேன்னு சொன்னா..டா சரி னு நானும் ஓகே சொன்னா.! பெட்ரோல் போட சொன்னா! அப்றம் சாப்பாடு எடுத்துட்டு வர சொல்லுறா .. கேன்டின்ல ஸ்னாக்ஸ் கேட்குறா.. அது கூட பரவாயில்லடா போன்க்கு ரீசார்ஜ் பண்ண சொல்லி சாவடிக்குறா.. வேற வழி இல்லாம நானும் எல்லாமே பண்ணுனேன். அவ ஸ்கூட்டிய ஒரே ஒரு தடவை ஓட்டி பார்க்க தான் கேட்டேன் டா.. ப்ரீத்.. காதுல வாங்காத மாதிரி பொய்ட்டா. மிஸ் யூ டா .. நீ இல்லானா என் நிலமை கொடுமை தெரியுமா? நீ இருந்தவரை எதுக்கும் நான் ஏங்கலை. இப்போ ?" வெஸ்பாவை ஏக்கமாக வெறித்து பார்க்க.
"வண்டி தான இஎம் ஐ போடலாம். என்றான் ப்ரீத்."
"வேணாம் ப்ரீத். நாம ஒன்னும் ஹை கிளாஸ் இல்லை. மிடில் கிளாஸ்.. ஒவ்வொரு சின்ன ஆசை அடைய அவ்ளோ கஸ்டப்படனும். பஸ்ல போகலாம்னு இருக்கேன். என் ப்ரண்ட்ஸ் நெறைய பேர் வர்றாங்க. ஸ்வேதா விட்டா மளிகை சாமான் வாங்கி கேட்பா போல டா "என்று விரக்தி புன்னகை உதிக்க.
" ஸ்டார்ட் பண்ணு போகலாம். " என்பவனை பயித்தியத்தை பார்பதை போல் ஏறிட்டவள் " திருட்டு கேஸ்ல உள்ள போகனுமா? "
"சொந்த வண்டிய நீ ஏன் டி திருட போற ? "சின்ன சின்ன பிங்க் நிற இதயம் உள்ள தேவதை பொம்மையில் நடுவே உள்ளே பி (P) என்ற ஆங்கில எழுத்து கொண்ட கீ செயினை அவள் விழிகளின் முன் அவன் ஆட்டி காட்டியதும் , பிரமிப்போடு .! ஆச்சர்யத்தில் விழிகள் விரிய மான் போல துள்ளி துள்ளி சந்தோஷத்தில் குதித்தவள்.! வேகமாக ஒடி அவனை கட்டிக் கொண்டாள்.. கண்கள் கலங்கி அவன் முகம் நோக்கிட.
" நிஜமா எனக்கா? ஏன்? உன்ன பிடிக்கலை னு சொல்றவ நான். என்ன ஏன்டா இப்படி தாங்குற.!" மன உறுத்தலோடு அவனை கேட்டதும்.
"விரும்பினால் மட்டும் விரும்புறது இல்லை, நீ வெறுத்தாலும் விரும்புறது தான் காதல். என் காதல் எப்பவுமே மாறாது . உன் சந்தோஷம் . உதட்டுல உதிர்க்குற சின்ன சிரிப்பு , அதுக்கா என்ன வேணா செய்வேன்."
பவி - " இது வாங்க காசு ஏது ? உன் பைய்க் எங்க ? "என்று தொடர் கேள்வி கணைகளை தொடுக்க,
" நம்ம எல்லாருமே மிடில் கிளாஸ் பவி , ஒன்னு போனா தான் ஒன்னு வரும்.. " என்றவனை தீ பார்வை பார்த்தவள் "வீட்ல இருக்க ஒருத்திக்கு புதுசா ஸ்கூட்டி வாங்கி கொடுத்துட்டு வேலைக்கு போற நீ எதுலடா போவ?"என்றாள் ஆதங்கமாக.
" சந்தீப் இருக்க பயம் ஏன்.. வண்டிய பூஜை பண்ண போகனும். கிளம்பலாம் டி.." என்றதும் கண்களை மூடி, இஷ்ட தெய்வத்தை வணங்கி. "என் மாமா ஆசையா எனக்கு வாங்கி கொடுத்தது. எனக்கு என்ன அடிபட்டாலும் இந்த வண்டிக்கு எப்பவுமே ஒரு கீறல் கூட படக்கூடாது.." சாவியயை திருகி வண்டியை உயிர்பித்தாள் .. ஸ்கூட்டி யின் வேகத்தில் அவளின் வெள்ளை நிற ஹால் இறக்கை போல் பறக்க , பார்பவர்களுககு அப்சரஸ் போல தெரிந்தாள் பவித்ரா. ஆனால் இவனோ .. அவளின் இரண்டு ஷால் முனையை சேர்த்து முடி இட்டவன் .. " ஏய் வண்டி ஸ்டார்ட் பண்ணுறதுக்கு முன்னால ஷால கட்டிடனும். " என்று அவள் முதுகில் தலையை முட்டு கொடுத்து உறங்க..
" ஏய் கூசுதுடா.. என்றதுமே அவன்
" சரியா தூங்கலை டி ..பைக் வித்து பேமென்ட் கையில் வரதுக்குள்ள நொந்துட்டேன்.. அவசர அவசரமா ஷோரூம் பூட்டுறதுக்குள்ள ஓடி பைக் வாங்கி, ஃப்ரண்ட் வீட்ல மறைச்சு, சர்ப்ரைஸ் கொடுத்து முடியல.. டி .. ப்ளீஸ் அட்ஜஸ்ட் கரோ.. பவி. "
"மாமாவுக்கு ஹிந்தி வருது போல.. "
" கொஞ்சம் கொஞ்சம் வரும் " என்றான் சினுங்களாக.. அதை கேட்டு சிரித்தவள் .."சினுங்காத டா.. என்று தோளில் அடி போட,
தென்றலில் ஆடும் தென்னை கீற்றுகள் உரச வலிக்குமா ? என்ன..? " ஆ... இங்கே பூசு.. அங்கே பூசு.. என்பதை போல ஒவ்வொறு பக்கமாக காட்டி அவள் விரல்களாலே இனிமையான வருடல் வாங்கி முக்தி பெற்றவன் .
" உன்ன அடிச்சு எனக்கு தான் வலிக்குது எருமை ..எருமை என்று கடிந்தவள். ரோட்டின மீது கவனம் எய்திட .
" ஒகே குட் நைய்ட் என்று அவள் பின்னால சரிந்தான் "ப்ரீத்".
அவன் சுவாச காற்று அவள் முதுகின் பூனை முடிகளை சிலிர்த்தெழுப்ப, விலை இல்லா மின்சாரம் ஒவ்வொரு சுவாசததிற்கும் இலவசமாய், அவள் உடலில் மீது வாரி வழங்கினான் ப்ரீத்.
" அவஸ்த்தை படுத்துறானே. இவன் என்று நெளிந்து வளைந்து ஒரு வழியாக கோவிலில் சேர, பூஜைக்கு தயாராக நின்ற பவித்ராவின் தாய் ஐயரை அழைத்து தேங்காய் பழமுடைத்து, வண்டியில் திலகமிட்டு, மாலை பூட்டி, ஃவீலில் எலுமிச்சை கனி வைத்து நசுக்கி தனியாக பல ரவுண்ட் வந்தவள்.. துணையாக " அம்மா வந்து உட்காருங்க ,நாம சேர்ந்து வீட்டுக்கு போவோம் .. " சீ... யாருடா நீ என்பதை போல் கேவள பார்வையாள் அவனை தாக்கிட,
நான் தான் அவுட்டா என்பதை போல் அவளை ஏறிட்டவன் " அப்ப நான் எப்டி வர்றது. ? " என்று கர்ஜனையுடன் முறைத்தவனை.
" இளந்தாரி பையன் தான நீங்க. பொடி நடையா வாங்க மாமா .. வெறும் நாலு கிலோ மீட்டர் தானே.." என்று சிட்டாய் பறக்க.. " ஏய்.. நில்லு.. டி " என்றவன் ஒரு பெட்டி கடையில் லாலிபப் வாங்கி வாயில் வைத்து " இவ கூட வந்ததுக்கு இதான் மிச்சம் " என்று புலம்பியவாறு நடை போட்டான்.. பொடி ...நடை போட்டான் செருப்பு போடாம வந்துட்டான் போல என்ன சூடு..!"பாலைவனத்துல நடக்க விட்டுட்டாளே.. "





உமா கார்த்திக்
Last edited: