priya pandees
Moderator
அத்தியாயம் 11
அதுவரை அவர்கள் நடந்து பாதை எல்லாம் மலையடிவாரத்தை ஒட்டித்தான், மரங்கள் அடர்ந்த வனங்களுக்குள் சென்றுவிட்டால், மிருகங்கள் எங்கிருந்து தாக்கும் என தெரியாது, சூரிய ஒளி சுத்தமாக ஊடுறுவ முடியாமல் பகலும் இரவாக தான் இருக்கும், ஓய்வெடுக்க மரங்களையோ, அதை சுற்றியோ இருக்கும் இடங்களை நம்புவதை விட மலைகளும், சிறு சிறு குன்றுகளும் சாலச்சிறந்தது, இதுபோன்ற பல்வேறு காரணங்களால் அவர்கள் மரங்கள் அடர்ந்த பகுதிக்குள் செல்லாமல் மலையோர பகுதி ஏற்ற இறக்கங்களாக இருந்த போதிலும் அதை பின்பற்றிவிட்டனர்.
குரங்கு மனிதர்கள் வாழும் பகுதியை நெருங்குகையில் தான் கொஞ்சம் காட்டின் உட்பகுதிக்கு அழைத்து வந்தனர் ஜனோமியும், க்ளாடியனும்.
"இந்த பகுதில தான் வாழுறாங்கன்னு எங்க முன்னோர்கள் கணிப்பு" என பேசிக்கொண்டே அழைத்து வந்தபோது தான், அந்த குரங்கு மனிதர்கள் விவசாயம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு அடர்ந்த மரத்தின் பின் பதுங்கிக் கொண்டனர்.
குரங்கு மனிதர்கள் பேசும் தமிழ் மொழியைக் கண்டதும், யாஷ், வருணி இருவரும் சில நொடிகள் அதிர்ந்து நின்றுவிட்டு, பின் குதூகலம் ஆகிவிட்டனர். "மாமா நாம நேராவே அவங்கட்ட பேசி நம்ம பசங்கள கூட்டிட்டுப் போயிடலாம். வாங்க" என வருணி முன்ன செல்லப் போக,
"என்ன பண்றீங்க டாக்டர்? அவங்க நம்மள பார்த்த நிமிஷம் மறைஞ்சுடுவாங்க. அப்றம் நாமளும் அந்த மூணு பேருக்கு துணையா போக வேண்டியது தான்" என்றான் ஜனோமி.
"அவங்க எங்க லாங்குவேஜ் பேசுறாங்க க்ளாடியன்" என்றாள் வருணி சந்தோஷமாக.
"ஹே அவங்க எப்டி தமிழ் பேசுறாங்க?" என யாஷ் கேட்க.
"அவங்க பேசுற மொழி உங்களுக்கு புரியுதா?" என்றான் குழம்பி நின்ற க்ளாடியன். ரகசியமாக தான் பேசி நின்றனர்.
"அது எங்க மதர்டங் மேன். இங்க உள்ளவங்க எப்டி அதப் பேசுறாங்க?"
"அது தெரியல. ஆனா இவங்க எங்கள சேத்துக்கிட்டாலும் உங்கள தான் பார்த்த நிமிஷம் தூக்கிட்டுப் போயிடுவாங்க"
"ஏன்?"
"நாங்க இங்கேயே உள்ளவங்க, எங்கள மறைஞ்சுருந்து கூட அடிக்கடி பாத்துருப்பாங்க. சோ எங்களால அவங்களுக்கு ஆபத்தில்லன்னு தெரியும். ஆனா நீங்க கண்டிப்பா அவங்களுக்கு அவங்கள அழிக்க வந்த மிருகமா தான் தெரியுவீங்க. அதனாலேயே யோசிக்க கூட நேரம் எடுக்க மாட்டாங்க" என ஜனோமி சொல்ல,
"அவங்கள ஆளுற தலைவன் ரொம்ப கொடுமைகாரன்னும், சாப்பிட மாமிசம் கிடைக்கலாம் அவங்க ஆட்களையே பிடிச்சுத் தின்னுடுவான்னும் சொல்லுவாங்க. இவங்க வேட்டையாடிக் கொண்டுக் கொடுக்குறதுல அந்த தலைவன் பாத்துக் கொடுக்குறது தான் அவங்க உணவு. அதனாலேயே இப்படி தானா வந்து மாட்டுற மனுஷங்கள விலங்குகள வேட்டையாடும் மாதிரி கொண்டுப் போயிடுவாங்க. நமக்கும் விலங்குகளுக்கும் பெரிசா வித்தியாசம் பாவம் அவங்கள்ட்ட கிடையாது. அவங்கள பொறுத்த வரை எல்லாமே ஒன்னு தான்" என்றான் க்ளாடியன்.
"இங்க இருக்க தங்க சுரங்கத்த ஆராய்ச்சி பண்றேன்னு, தோன்றோம்னு காட்ட அழிக்க வந்த வெளி ஆட்கள்ட்ட நாங்க போராடினோம். அப்ப காட்டுல இருந்த பல இன மக்கள் அழிஞ்சு போனாங்க. இங்க இருக்க இனத்துலயே அதிவீரமிக்க இனம் இந்த மனிதகுரங்கு இனம் தான். மறைஞ்சுருந்து இவங்க தாக்குனதுல தான் வந்தவங்க நிறைய அழிஞ்சு போனாங்க. அப்றம் தான் கவெர்ன்மெண்ட் பார்வையே எங்கமேல பட்டுச்சு, அதனால நாங்க மாட்டினாலும் நீங்க மாட்டிக்கக் கூடாது டாக்டர்"
"இப்ப நம்ம பசங்க மூணு பேரும் அவங்கட்ட தான் இருக்குறாங்களாம். அவங்க அத தான் பேசிக்கிறாங்க"
"அவங்க இருப்பிடத்துக்குக் கொண்டுப் போயிருப்பாங்க. இப்ப நாம அவங்க வாழ்ற இடத்துக்கு கொஞ்சம் வெளில தான் நிக்றோம்னு நினைக்கிறேன். அவங்க வாழ்ற இடம் ரொம்ப பசுமையும் செழிப்புமா அழகா இருக்கும்னு சொல்லுவாங்க"
"இங்க காடே அப்படி தான இருக்கு? நீங்களே நேச்சரோட நேச்சரா தான் வாழ்றீங்க?" வருணி சொல்ல,
"ஆமா தான் ஆனா நாங்க செயற்கையா செஞ்ச குடில் மரவீடுன்னு வாழுறோம். அவங்க அப்படி எதுவும் இல்லாம, குகை, மரத்துலன்னு வாழக் கூடியவங்க, இந்த மரங்கள கூட சூர்ய ஒளிக்காகவும், தற்காப்பு ஈட்டி செய்யவும், உணவு தயாரிக்க எரிக்கவும் தான் வெட்டி எடுக்குறாங்க"
"இன்ட்ரெஸ்டிங்!" என்றான் யாஷ்.
"இப்படியே இங்கேயே நின்னு பேசிட்டே தான் இருக்கப் போறோமா?" என்றாள் வருணி.
"அவங்க நகர்ந்தா தான் நாமளும் அவங்க பின்ன போக முடியும் டாக்டர்"
"ஓ காட். ஏற்கனவே இன்னைக்கு இன்னும் குளிக்கல, பாத்ரூம் போகல, ப்ரஷ் பண்ணல" அவள் மெதுவாக புலம்ப,
"அங்கேயே இருந்துருந்தா எல்லாம் பண்ணிருக்கலாம்ல? ஏன் பின்னாடியே வால் பிடிச்சுட்டு வந்த?" என்றான் நக்கலாக யாஷ்.
அவனை கோபத்தில் உரசியும் காட்டி, "திரும்ப ஆரம்பிக்காதப்பா நீ. இப்படி உரசிட்டே இருந்து மனுஷிய உன் கிறுக்காக்கிட்டு இப்ப தனியா போறேன்னா எப்படி விடமுடியும்? நீ என்ன தாட்ல அமெரிக்கால இருந்தவள அமேசான் காட்டுக்கு கூட்டுட்டு வந்தியோ அதே தாட்ல தான் இப்ப நா உன் பின்னாடியே வந்ததும்" என்றவளை, சிரிப்பும் முறைப்புமாக தான் பார்த்து நின்றான் யாஷ்.
"அமைதியா பேசுங்க" என்றாள் க்ளாடியனின் மனைவி.
"ரெண்டு சின்ன பிள்ளைங்கள வச்சுட்டு நீ என்ன செய்ற தெரியுமா? பாரு அவங்க ரெண்டு பேரும் உன்ன எப்படி பாக்றாங்கன்னு" என யாஷ் வருணியை அவள் அவனை உரசிக் கொண்டு நின்றதற்காக பேச,
"அடேங்கப்பா அவங்க பனிரெண்டு வயசுலயே செய்யிறத நா இருபத்தி மூணு வயசுல தான் செய்றேன்னு தெரியட்டுமே இப்ப என்ன?" என்றாள் பதிலுக்கு.
"இருக்க இடத்துக்கு இந்த பேச்சுத் தேவை தானா?"
"நடந்துட்டே இருந்தா கூட தெரியல இப்படியே நிக்க கடுப்பாகுது மாமா" என்றவள் மரத்தில் சாய, அவளருகில் ஒரு அட்டை ஊர்ந்து வந்து கொண்டிருந்தது. அப்போது தான் அந்த மரம் இருக்கும் நிலையையே பார்த்தான் யாஷ்.
அவளிடம் காட்டினால் நிச்சயம் கத்திவிடுவாள், என்பதால் அவளை இடுப்பில் கைக் கொடுத்து தன்னோடு இழுத்து இறுக்கி அணைத்தான்.
"இதமட்டும் அந்த சின்னப் பொண்ணுங்க பாத்துட்டு போட்டுமோ? டேய் மாமா!" என அவன் தோளில் அடித்தாள்.
மற்ற நால்வரும், இது இப்போது தேவைதானா என்பதாக வாயைப் பிளந்து பார்க்க, "டேக் தேட் அசைட்" என ஆண்கள் இருவருக்கும் அந்த அட்டையை கண் காட்டினான் யாஷ். ஆனால் அவளின் அருகில் நின்ற பெண்களில் ஒருத்தியே, அதைப் பார்த்து விட்டு, அந்த மரத்திலிருந்து மரப்பட்டையை ஒடித்து அட்டையை சுருட்டி எடுத்து தூர வீசிவிட்டாள்.
அவர்கள் நால்வரும் மரத்தின் மேல் சாய்ந்து சாதரணமாக நிற்க, அதில் எறும்பு புத்துகளும், அட்டைகள் இன்னும் நான்கு ஐந்து நிற்பதை பார்த்த யாஷ், சட்டென்று அதிர்ந்து அவளுடனே இரண்டடிகள் பின் வைத்துவிட்டான். சரசரவென்று இலைகள் சத்தத்துடன் பின் சென்ற இருவரும் சறுக்கி கீழே விழுந்தனர்.
சற்று சரிவான இடம் என்பதால் ஒருவர் மீது ஒருவர் என விழுந்து உருண்டு அந்த மனித குரங்குகளையும் கடந்து விட்டனர். அடுத்த நொடி கண்ணெதிரே பட் பட்டென்று அங்கிருந்த மனித குரங்குகள் அனைவரும் மறைந்து விட்டனர்.
இதுவரை அவர்கள் தங்கி இருந்த இடத்தில் எல்லாம் மனிதர்கள் வாழ்வியலில் இருக்க, இவர்களும் அதுபோன்ற அமைப்பான இடங்களில் இருந்ததால் பெரிதாக பயம் ஒவ்வாமை தெரியவில்லை. இது முழுமையாக விலங்குகள் வசிக்கும் காடு என்றிருந்தாலும் இரண்டு நாட்களாக நடையிலேயே கழிந்ததால் பெரிதாக எதுவும் கருத்தில் பதியவில்லை.
இப்போது அவர்கள் தேடிவந்தவர்கள் இருக்கும் இடம் தெரிந்துவிட்டதால் கொஞ்சம் ஆசுவாசம் ஆக, காட்டில் இருக்கும் ஒரு மரத்தின் முழு வீரியத்தைக் கண்டான் யாஷ். சுற்றி இருந்த அத்தனை மரங்களும் அப்படிதான் இருந்தன. பாம்புகள் கூட வசிக்கும் போலும் அவ்வளவு அடர்த்தி.
யாஷும் வருணியும் அந்த லேசான சரிவில் உருண்டு சருகும் இலையுமாக எழ முயன்று கொண்டிருக்க, குரங்கு மனிதர்களுக்கும் அறிமுகம் ஆகியிருந்தனர்.
"அச்சோ!" என மற்ற நால்வரும் அவர்கள் மொழியில் அலறி வாயை மூடிக் கொள்ள, மறைந்தவர்கள் முன் செல்லவும் பயம், அவர்களுக்கு சென்று உதவவும் பயம் எனப் பார்த்து நின்றனர்.
"வரு என்னடி ஒருத்தரையும் காணும்? மறைஞ்சுட்டாங்களா?" என்றான் யாஷ்.
"லேசா உரசுனதுக்கு அப்படியே லவுட்டலாம்னு கட்டி புடிச்சு உருண்டு இப்ப பாரு அவங்கள தாண்டி வந்துட்டோம். எல்லாம் ஜுபூம்பா போட்ட மாதிரி காணாம போயிட்டாங்க. எல்லாம் உன்னால தான்" என அவனிடம் சண்டைக்கு செல்ல.
"உன்ன யாருடி வந்து உரச சொன்னது. அதான் மூடு மாறிடுச்சு" என்றவனும் சுற்றிக் காணாமல் போனவர்களை தான் பார்வையால் தேடிக் கொண்டிருந்தான். கை அவர்களை சுற்றியிருந்த மர வேர்களையும் சருகுகளையும் எடுக்க முயன்று கொண்டிருந்தது, வாய் மட்டும் அவளுக்கு பதில் கூறிக்கொண்டிருந்தது.
"இப்பவும் நல்லா உரசிட்டு தான் இருக்கேன், ஒரு ஃப்ரீ ஷோ காட்டுவோமா?" என பல்லைக் கடித்தாள்.
"இல்ல இப்ப மூடில்ல திரும்பப் போகும் போது வேணா ட்ரை பண்ணுவோம்"
"டேய்!" என என்னவோ சொல்ல வருகையில், இருவரையும், மேலிருந்து விழுந்த வலை மூடிவிட, "என்னடா இது?" என்றாள் பதறி,
"வலைவீசி அமுக்கி புடிச்சுட்டாங்கடி நம்மள" என்றவன் வேகமாக அந்த வலையை விலக்க முயன்றான். இருவரும் அதை விலக்கி எழ முயன்றும் முடியாமல் போக, குரங்கு மனிதர்கள், வலையில் இருவரையும் சுழற்றி ஒரு முடிச்சுட்டு சரட்டென்று தூக்கிவிட, 'என்ன நடந்தது?' என புரியும் முன் காவடி போல் நடுவில் இவர்கள் தொங்க, இருவர் அவர்களின் இருபக்க தோள்களில் ஆயாசமாகத் தூக்கிக் கொண்டு நடந்து கொண்டிருந்தனர்.
"மாமா பயமா இருக்கு. ஜீஸஸ் ப்ளீஸ் சேவ் அஸ்" என்ற வருணிக்கு இதயம் அதிவேகமாக தான் துடித்துக் கொண்டிருந்தது. அதனை தன்மேல் அவள் சாய்ந்திருந்ததால் தன் நெஞ்சிலும் அவனால் உணர முடிந்தது.
"எனக்கும் பயமா தான் இருக்கு. எந்த நேரத்துல சாகப் போறேன் சாகப் போறேன்னு வாய வச்சியோ இப்ப சேர்ந்து போகத்தான் போறோம் போ" என்றான்.
"நீ என்ன இவ்வளவு சாவகாசமா பேசிட்ருக்க. உன் பேச்சுல பயம்லாம் தெரியல நேத்து இருந்த டென்ஷன் கூட இல்லாத மாதிரி இருக்கு"
"எல்லாம் உன் அப்பா பறந்து வந்தாவது நம்மள காப்பாத்திடுவாருன்ற தைரியம் தான்"
"இப்ப மட்டும் எங்கப்பா வேணுமோ உனக்கு?"
"எல்லாத்துக்கும் காரணமே அவர் தான?"
"எங்கப்பா இப்ப என்ன பண்ணாங்க? உன்ன அமேசான் காட்டுக்கு போய் சேவை பண்ணுன்னு சொன்னாங்களா?" என அந்த இடைஞ்சலிலும் நிமிர்ந்து அவனை முறைத்தாள்.
"நல்லா சந்தோஷமா, இந்தா மருமகனே என் பொண்ண கட்டிக்கோ ரெண்டு பேரும் ரொம்ப வருஷம் சீரும் சிறப்புமா நல்லா வாழணும்னு, முழு மனசா நா ஆசையா கேட்ட உடனே உன்ன எனக்குக் குடுத்து நம்மள சேர்த்து வச்சுருந்தா, இன்னைக்கு அந்த ப்ளஸிங் நம்மள காப்பாத்திருக்கும்ல?"
"உன்ன!" என பல்லைக் கடித்து, "உனக்கு இருக்குடா. இங்க இருந்து போனப்றம் வச்சுக்குறேன்" என்றாள் கைக்கு அருகில் இருந்த அவன் இடுப்பில் நறுக்கென்று கிள்ளி வைத்து.
அவர்களின் தமிழ் மொழி காரணமா என்று தெரியவில்லை, உண்மையிலேயே யாஷ் நிதானத்திற்கு வந்திருந்தான். மனதில் தங்களுக்கு எதுவும் ஆகாது என ஏதோ ஒரு நம்பிக்கை அவர்களின் தமிழ் மொழியால் விளைந்திருந்தது அவனுக்கு.
க்ளாடியன், ஜனோமி, அவர்களின் இரு பெண்கள் என நால்வரும் குரங்கு மனிதர்கள் அறியாமல் அவர்களை பின் தொடர்ந்தனர்.
யாஷையும், வருணியையும் தூக்கிச் சென்றவர்கள் ஓரிடத்தில் இறக்கி, வலையிலிருந்து உருட்டியும் விட, இருவரும் சேர்ந்தே உருண்டு சிறிது தூரம் வந்து தான் நிமிர்ந்து எழ முயன்றனர். வேர்களை எடுத்துவிட்டு எழுந்து அமர்ந்து சுற்றிப் பார்க்க, அவர்களை தான் சுற்றி ஆங்காங்கே நின்று பார்த்திருந்தனர் குரங்கு மனிதர்கள்.
ஆனால் அவர்களையும் தாண்டி அங்கிருந்த இயற்கை, "ப்பா எவ்வளவு அழகான வ்யூ!" என இருவரையும் கண்ணை விரிய வைத்தது.
இரு பக்கமும் நல்ல உயர எழுந்து நிற்கும் மலை, பாதி ஏற்றமான இடத்தில் தான் இருந்தனர். அங்கிருத்து தான் பார்த்தனர் இருவரும். இந்த மலையிலிருந்து அந்த மலைக்கு ஏறி இறங்கிச் செல்லும் நீர்வீழ்ச்சி. அது இரு மலைகளின் நடுவில் ஆறாகவும் ஓடிக்கொண்டிருக்க, மலையில் இருபுறமும் ஆங்காங்கே குகைகளும் அதன் வெளியே குரங்கு மனிதர்களும் நின்று வேடிக்கைப் பார்த்திருந்தனர். சுற்றிலும் மலை தான் என்பதால் புல்வெளி போர்த்திய போர்வையே தரையாக இருக்க, ஆங்காங்கே இடைவெளி விட்டு மரங்கள்.
கண்ணை சுழல விட்டவர்கள் பார்வை ஓரிடத்தில் நின்றது, அவர்களின் மருத்துவ மாணவர்கள் ஒரு மரத்தில் இலை தலைகளைக் கொண்டு சுற்றிக் கட்டி வைக்கப் பட்டிருந்தனர். இவர்களைக் கண்டதும், "டாக்டர் ப்ளீஸ் ஹெல்ப்" என செய்கையில் சொல்ல, வாயைத் திறக்க விடாமல் எதையோ வைத்து அடைத்திருக்கின்றனர் என தூரத்தில் இருந்து பார்த்ததில் இவர்களாக யூகித்துக் கொண்டனர்.
"மாமா!" என வருணி அவனை நெருங்கி அமர,
"மறுபடியும் பயமா இருக்குல்ல?" என அவன் கேட்க,
வேகமாக, "ஆமா அடுத்து நம்மளையும் அப்படி தான் கட்டி வைக்கப் போறாங்களோ?" என்றாள்.
"அப்படி தான் நினைக்கிறேன் நானும்"
"எதாவது பண்ணுடா மாமா!"
"எல்லாரும் நம்மளையே பாக்குறாங்க இப்ப என்னடி பண்ண முடியும் என்னால?"
திரும்பி முறைத்தவள், "தப்பிக்க எதாவது பண்ணுன்னு சொன்னேன்"
அவள் தலையில் கொட்டியவன், "நானும் அதை தான் சொன்னேன். நம்மள நடுவுல உக்காற வச்சு சுத்தி எல்லா திசைலயும் நிக்றாங்க என்ன பண்ண முடியும்னு?" என அவனும் முறைத்தான்.
"நிஜமா பயமா இருக்கு மாமா!"
அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டவன், "ரைட் நவ் ஐ ஹேவ் இன்னர் கான்பிடென்ஸ், கண்டிப்பா நாம சேஃபா ரிட்டர்ன் ஆகிடுவோம்னு என் இன்டியூஷன் சொல்லுது வரு" என சொல்லவும்,
நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள், "ம்ம்!" என தலையை ஆட்டிக் கேட்டுக் கொண்டாள்.
"சரி எந்திரி அவங்கட்ட பேச்சுக் குடுத்து ஹெல்ப் கேட்டுப் பாக்கலாம்" என அவனும் கையை ஊன்றி எழுந்து அவளையும் பிடித்துத் தூக்கிவிட, கிடுகிடுவென ஓடிவந்து மரங்களால் ஆன கூறான ஈட்டிகளுடன் இருவரையும் சுற்றி வளைத்து நின்றனர் அந்த குரங்கு மனிதர்கள்.
எங்கெங்கோ நின்றவர்கள் எல்லாம் நொடியில் அவர்கள் முன் தாக்க தயாராக நின்றிருந்தனர்.
"ஜீஸஸ். வெயிட் வெயிட்" என வருணி அவனை இறுக்கிப் பிடித்துக் கொள்ள,
"நாங்க உங்கள தொந்தரவு பண்ண வரல. ப்ளீஸ் வழி தவறி தான் இங்க வந்துட்டோம். எங்கள விட்ருங்க" என யாஷ் பேசவும், அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு விழித்தனர்.
"உண்மையா தான் சொல்றேன். தவறுதலா இங்க வந்துட்டோம்"
"இவன் எவ்வாறு நம் பாஷையில் பேசுகிறான்?" என ஒருவன் மற்றவனிடம் கேட்க,
"யார் நீங்கள்? எங்களை போல் பேச எங்கு பயின்றீர்கள்?" என்றான் மற்றவன் நேராக யாஷிடம்.
"அது எங்களுக்கும் தாய் மொழி தான்"
"தாய் மொழி என்றால்?"
"மதர் டங்க்" என்றால் வருணி.
"சும்மா இருடி" என அதட்டியவன், "நாங்க இந்த உலகத்தில் பிறந்ததுல இருந்து பேசுற மொழி எங்க அம்மா, மாமா, தாத்தா பேசி எங்களுக்கு கத்துக்கொடுத்த மொழி" என சொல்ல,
"நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?"
"இந்தியா. தமிழ்நாடு, நீங்க நான் பேசுற மொழியோட பிறப்பிடம்"
"நமக்கு குஜராத் அப்றம் டெல்லிடா மாமா"
"கொஞ்ச நேரத்துக்கு சும்மா இருடி"
அவர்கள் மொழி பேசும் மனிதர்களைக் கண்டு ஆச்சரியத்தில் தான் குரங்கு மனிதர்களும் பேச்சை வளர்த்துக் கொண்டிருந்தனர். இதுவரை அவர்கள் கடத்திக் கொண்டு வந்த யாரும் இவர்கள் மொழி பேசியதில்லை என்பதால் வந்த அதிர்ச்சியில் இருந்தனர். அவர்கள் பேசுவது தமிழ் மொழி என்றும் அதன் பிறப்பிடம் வேறெங்கோ உள்ளது என்றெல்லாம் அவர்களுக்கு தெரியாது. ஒவ்வொரு மிருகங்களுக்கும் ஒவ்வொரு பாஷை அதில் அவர்களுக்கான பாஷை பறிமாற்றமாக தான் அதை நினைத்துக் கொண்டிருந்தனர். அதையே மனித உருவில் வந்த இருவர் பேசவும் வியந்திருந்தனர்.
"நாங்க மருத்துவர்கள், இந்த காட்டில் வாழும் மக்களுக்கு மெடிக்கல் ஹெல்ப்" என சொல்ல வந்தவன், "மெடிக்கல் ஹெல்ப்ப தமிழ்ல எப்படி வரு சொல்றது?" என அவளிடம் குனிந்து கேட்க,
"தெரியல அவங்க தான் நம்மளவிட ரொம்ப நல்லா தமிழ் பேசுறாங்க அவங்கட்டயே கேளு" என்றாள் அவள் பயத்தில், அவ்வளவு அருகில் உயர உயரமாக குரங்கு முகத்தோடு இலை தலைகளை உடுத்திக் கொண்டு, கட்டை குரலில் பேசி நிற்பவர்களை பார்க்கப் பார்க்க வெடவெடத்தது. ஆண்கள் பெண்கள் வித்தியாசமும் தெரியவில்லை. பெண்கள் சிலர் வெற்று மார்புடனும் சிலர் மட்டுமே இலைகளை கொண்டு மறைத்தும் நின்றனர். அவள் அதைச் சுற்றி வரப் பார்த்து அந்த ஆராய்ச்சியின் பயத்தில் நின்றாள்.
"என்ன பேசுகிறீர்கள்?" என்றான் ஒருவன் மிரட்டும் தோணியில்.
"காட்டில் வாழும் மக்களுக்கு வைத்தியம் பார்க்க வந்தவர்கள் நாங்கள். அதோ நீங்கள் அங்கு கட்டி வைத்திருப்பவர்கள் எங்களுடன் வந்தவர்கள் தான். வழி தவறி உங்கள் எல்லைக்குள் வந்துவிட்டோம். மன்னித்து விடுங்கள். எங்களை விட்டுவிடுங்கள்" என்றான் கோர்வையாக.
"எங்கள் தலைவர் அனுமதிக்காமல் நாங்கள் எதுவும் செய்ய இயலாது. எங்கள் இடத்திற்கு வந்த மற்ற மிருகங்களை வேக வைத்து தின்பது தான் எங்கள் வழக்கம்"
"அடேய் நாங்க அனிமல்ஸ் இல்லடா. குரங்கு மூஞ்ச வச்சுட்டு எங்கள அனிமல்னு சொல்லுவியா நீ?" என்றாள் வருணி.
"என்ன கூறுகிறாய்?"
"உதவி பண்ணுங்க ப்ளீஸ்" என்றான் யாஷ்.
"நரன்களை எங்கள் தலைவர் திருப்பி அனுப்புவதில்லை. அது எங்கள் வழக்கமும் இல்லை. எங்களின் அடுத்த ஒரு திங்கள் உணவு நீங்கள் ஐவரும் தான். உங்களை அனுப்பிவிட்டால் எங்களில் இருவர் தான் உணவாக வேண்டும்"
"உங்கள் தலைவரிடம் நாங்களே கேட்டுப் பார்க்கட்டுமா?"
"இப்போது அவர் ஓய்வில் இருக்கிறார். அவராகவே ஒரு திங்களுக்குள் எழுந்து வந்து உங்களைப் பார்த்தால் அப்போது கேளுங்கள்" என்றனர்.
"ஒரு திங்களா? அவரு எப்போ வருவாருன்னு எக்ஸாக்டா சொல்ல முடியாதா?"
"முன்பனி காலம் முடியவும் வருவார்"
முன்பனி காலம் என்பது மார்கழி, தை என்ற இரு மாதங்கள் என புரியாமல், வானத்தையும் சுற்றி மலையையும் பார்த்துக்கொண்டு, "முன்பனி காலம்னா மார்னிங்கா இருக்குமா வரு?" என யாஷ் கேட்க.
"இப்ப வின்டர் தானே அங்க நமக்கு. அது சொல்றாங்கன்னு நினைக்கிறேன்"
"எத்தன நாளாகும் அவர் வர்றதுக்கு?" என்றான் இப்போது தெளிவாக.
"அறுபது நாட்கள்"
இருவரும் அதிர்ந்து, "டூ மந்த்ஸா?" என்க,
"அவர் ஓய்விற்கு சென்று மூன்று நாட்கள் ஆகிறது, இன்னும் ஐம்பத்தி ஏழு நாட்களில் வருவார். அதுவரை எங்கள் கிளத்தினான் பொறுப்பில் தான் நாங்களே"
"சரி இப்ப அவர எங்க?"
"மலை மேல் உள்ள எங்கள் அனுமனை வணங்கச் சென்றிருக்கின்றார். அதோ அவர்களின் நரபலிக்கான உத்தரவு கேட்டுவரச் சென்றிருக்கின்றார்" என மருத்துவ மாணவர்களைக் காட்டி தான் கூறினார்.
"நாங்க தவறி இங்க வந்துட்டோம்"
"அது எங்கள் தவறு கிடையாது. இறையாக கொண்டு வந்ததை நாங்கள் திருப்பி அனுப்புவதும் கிடையாது"
"மனுஷங்கள சாப்பிடுறது விஷம் மாதிரி. சாப்பிட கூடாது"
"நீங்கள் மிருகங்கள் தானே?"
"சுத்தம். நாம பேசுறது அவனுக்கு புரியல அவன் பேசுறது நமக்கு புரியல, இதுல ஒரே லாங்குவேஜ்னு பெருமை வேற" என எரிச்சலாக மொழிந்தாள் வருணி.
அவர்களை பொறுத்தவரை தலைவராக இருப்பவர் ஓய்வில் இருந்தாலும் அவருக்கான உணவை எடுத்து வைத்துவிட்டே இவர்கள் எடுத்து கொள்வர்.
அவர்களோடு இதே வாக்குவாதத்தில் சில மணிநேரங்கள் கூட கழிந்திருந்தது. திடீரென அந்த கிளத்தினான் வருகையை அறிந்த அந்த குரங்கு மனிதர்கள், பரபரப்பாக ஒதுங்கி விலகி குனிந்து வணங்கி எழுந்தனர்.
யாஷும், வருணியும் திரும்பிப் பார்க்க, அதே குரங்கு மனித சாயலில் கம்பீரமான நடையில் விலங்குகளை விரட்டும் மரதடியோடு இறங்கி வந்து கொண்டிருந்தார் அந்த கிளத்தினான்.
இவர்களைக் கண்டதும், "அடுத்த இறைகளா?" என நக்கலாக கேட்க,
"நாங்க தெரியாம உங்க எல்லைக்கு வந்துட்டோம். தயுவுசெஞ்சு எங்கள விட்ருங்க. எங்க ப்ரண்ட்ஸ் தான் அவங்க, அவங்கள தேடித்தான் நாங்க வந்தோம். ப்ளீஸ் எங்கள விட்ருங்களேன்?" என யாஷ் சொல்லவும், அவன் பேச பேச அதிர்ந்து பார்த்துக் கொண்டே வந்தவர், கையில் வைத்திருந்த தடியைப் போட்டுவிட்டு அப்படியே மண்டியிட்டுவிட்டார்.
"ஓம் நமோ ஹரி ராமதூத ஆஞ்சநேய அதிபல பராக்ரம சூலா அண்ட ரண்ட பகிரண்ட சண்ட பிரசண்ட உத்தண்ட கோலாகலா அகோர ஸத்ரு" என இறங்கி வந்த திசையை நோக்கியே கைகூப்பி வணங்கி அழுதார்.
மற்றவர்களும் ஏன் என்றே கூறாமல் உடன் சேர்ந்து அழுதனர். யாஷும், வருணியும் புரியாமல் விழித்து, "எதுக்கு அழுறீங்க? திடீர்னு என்னாச்சு?" என கேட்க,
ஆவேசமான அந்த கிடத்தினான், "உன் பரினாம வளர்ச்சியில் வந்த ஒருவன், காலஞ்சென்றேனாலும் உன் ஆதி தேசத்திலிருந்து வருவான், உன் மொழி பேசும் அடையாளம் கொண்டவனாக இருப்பின் உன் இனத்தையே காத்து அருள்வான்" என்றார் திரும்பி யாஷைக் கண்டு.
"ம்க்கும் நாங்களே அறைகுறை தமிழ், இதுல இது எந்த ஊர் தமிழ்னு தெரியல, கைமா தான் போல" என்றாள் வருணி அயர்ந்து.

Last edited: