உமா கார்த்திக்
Moderator
கண்களை தாண்டி கொண்டு கண்ணீர் வழிய.. " பவி நீ பண்றது உனக்கே நியாயமா? அடுக்குமா? வெட்டுனா எரியாத வெங்காயமா எடுத்து கொடு டி .. வலிக்குதுடி.. என்று கண்கள் நிரம்பி ததும்பி நீர் வழிய.. " என்ன காட்டம் " கண்ணு மூக்கு எல்லாமே தண்ணி வருது.
நக்கலாக " இனிமே நான் தயாரிச்சா தான் உண்டு.. மாமா. " என்று அவளும் காட்டமாக ஒரு பார்வை பதித்து, அலமாரியை துலாவி ட்ரான்ஸ்பரன்ட் கூலர்ஸ் ஐ எடுத்து வந்து கண்களோடு கண்களை மோத விட.. அவன் அழுது சிவந்த கண்களால் மாமன் காதல் வலையை வீசிட .. கர்வமாக அவன் காதலில் விழுந்தாள் கோதை.! கண்களாலே இருவரும் காதல் பிரியாணி கிண்ட,
நடப்பதை சகிக்க முடியாமல் சந்தீப் கத்தினான் " டேய்..பசிக்குது டா..! அப்பறமா லவ் பண்ணுங்கடா.." என்று கத்தவும், அதில் பவித்ரா கூச்சம் உண்டாக சட்டென ப்ரீத் ஐ விட்டு விலகி நின்றாள்.
கடுப்பானவன்.. வெங்காயத்தை சந்தீப் மீது எரிந்தான்." டேய்..காட்டு கரடி..வந்தேனு வை." அவள் விலகி போக வெறியில் கத்தினான் ப்ரீத்.
" மாப்ள... நாக்கு செத்து நாலு வருஷம் ஆகுதுடா.. தங்கச்சி கையால ஒரு ப்ளேட் பிரியாணி கிடைச்சா .. நாவுக்கு உயிர் வந்துடும்."
"*யிர் வந்திடும் .. வந்து காய்கறி நறுக்கி தாடா." நண்பனை உதவிக்கு அழைக்க
" இல்லை அண்ணா பரவாயில்லை.. ப்ரீத் போதும் எனக்கு. நீங்க போய் ரெஸ்ட் எடுங்க. " முதுகில் கை வைத்து வெளியே தள்ளினாள் பவித்ரா.
" தங்கச்சி.. டெல்லி வந்ததுல இருந்து நீ சரி இல்லை."
" பெரிய கண்டுபிடிப்பு போடா " என அண்ணனை வெளியே விரட்டிவிட்டு கிட்சனுள் வந்தால் பவித்ரா.
" ஏன் அம்மு.. அவனும் வந்தா சீக்கிரம் பிரியாணி ரெடி ஆகிடும்ல."
" திங்கிறதுலயே இரு..ஏன் போட்டி நடத்துறியா..என்ன? பொறுமையா சமைக்கலாம்.
ம்.. " அவன் கன்னம் கோடிட்ட நீரை இரண்டு கைகளால் அழுத்த அப்பி துடைத்து விட்டு.. கண்களில் கூலர்ஸ ஐ மாட்டி. விழிகளால் சுட்டி வெங்காயத்தை நறுக்க பவி கட்டளை இட,
தக தக வென ..காதல் தீ பற்றியதோ.. இல்லையோ.. கன்னம் காந்தியது காரத்தீயில்.!
ப்ரீத் -"ஸ்..ஆ..ஆ.! எரியுதே.." என்று கன்னத்தை கைகளால் கசக்கி பிய்த்து தேய்க்க." என்னாச்சி என்று புரியாமல் விழித்தவள் தன் கையை பார்த்ததும் புரிந்து போனது. ஆளுக்கு ஒரு வேலையாக செய்யலாம் என இவனை வெங்காயம் வெட்ட சொன்னவள். தக்காளி நறுக்கி முடித்து பச்சை மிளகாய் நறுக்கிய கையோடு கண்ணீரை துடைக்கிறேன் என்ற பெயரில், சந்தனம் பூசுவது போல.!
"அய்.யய்.யோ.. ப்ரீத் ஸாரி டா.. "
"ஆ..வலிக்குது ஆ..ஸ்..ங்கே.. ம்..ஸ்.. " என்று முனகி பந்து போல எம்மி எம்பி குதிப்பவனை.
'நல்ல நாள்லயே அவன் (சந்தீப்) நல்லா நினைக்க மட்டான். இந்த நாய் ஆ..ஊ..னு வேற கத்துறான்' டேய் வாய மூடுடா.." என்று கைகளால் வாயை மூட வர,
வேகமாக தலையை ஆட்டிதடுத்தவன் " வாயும் எரியுறதுக்கா?. பவி.. ஹாண்ட்ஸ் அப் "என்றதும் சிரித்தவள்.. கையை உயர்த்தி பின்னே நகர, மெல்ல அவள் பின்னால் ஒட்டி வந்து அந்த தங்க சிலையை தள்ளி கொண்டு சிங்க் தொட்டியில் ஒட்டி நிறுத்தி.. பின்னோடு அணைத்தவாறு இரண்டு கையும் அவள் கையில் கோர்த்து சோப் ஆயிலை ஊற்றி அவள் விரல்களை மென்மையாக தேய்த்து கையை கழுவ,
'கை கழுவ சொன்னா நானே கழுவ மாட்டானா? சீன் போடுறான் சின்ன பிள்ளைக்கு ஹாண்ட் வாஷ் பண்ணி விடுறதபோல' என்று நினைத்தவள். அப்போது தான் உணர்ந்தாள்.! உடலோடு ஒட்டி உறவாடும் இடைவெளி இல்லா அவன் தேகமும்.. கையோடு கையும் உரச பின் கன்னத்தோடு காது மடல் உரச.. அவன் வேர்வை வாசம் அவள் நாசியில் ஏறிட, கைகளை அவன் நீரில் சுத்தம் செய்ய. அழுக்கானாள் பவித்ரா. அவன் நெருக்கம் என்னவோ போதை தர.! புது வகை உணர்வு அவன் மேல். மெல்ல அவன் மீது அவளும் சாய.! சட்டென அவளை இழுத்து ப்ரீத் தள்ளியதும்,சுழன்று போய் அப்படிக்கா விழுந்தவள். கிட்சன் மேடையில் உடல் மோதி நின்றாள்.
தலைவன் தள்ளிவிட்ட கடுப்பில் திட்டினாள்." எருமை மாடே... ம். கும் " என்று ஏக்க பெருமூச்சி விட்டவள். 'இவனுக்கும் ரொமான்ஸ்க்கும் செட்டே ஆகாது போல..' என்று எண்ணிவாறு அவனையே ஏறிட்டு விக்கித்து நிற்க.!
" அவனோ ... என் எரிச்சல் எனக்கு என்பதை போல் .. கைகளால் தண்ணீரை முகத்தில் வாரி.. வாரி.. அடித்து .. "உஃப்.. " என்று ஊதி.."ஆ..ஸ்.. என சீறும் நாகமாய் " கார எரிச்சலில் கண்கள கலங்கி..எரிச்சலில் குதித்தான். இவனை தூரத்தில் இருந்து யாராவது பார்த்தால் உக்கிரமாய் அருள் வந்து சாமி ஆடுபவன் போல தெரிவான் ப்ரீத்.
" போய்.. ஐஸ் கியூப் எடுத்து வை.. அப்ப தான் எரிச்சல் குறையும் டா.. போ.. என்றாள் பவித்ரா அக்கறை பொங்கும் குரலில். போ என்றதும் போகாமல்
" பரவாயில்லை பவிமா.. "நேராக வந்து அவள் நறுக்கிய மிளாகாயை மட்டும் தனியாக தட்டில் எடுத்துவைத்து நகர்த்தவும்.
" என்ன? " என்று கேட்டு புரியாத பார்வை பார்க்க.!
" ஒன்னும் இல்ல.. காரம் உன் கை எரியும் அதான்." என்று அக்கறையோடு ஆண் மயில் வெட்கப்பட.!
கிளீன் போல்ட் ஆனாள் பாவை.. காதலோடு அக்கறையின் கீரிடம் தலைக்கு ஏற.. என்னவன் என்ற கர்வம் பிளஸ் காதலும் கலந்தோட.. விழியும் விழியும் மோதி காதல் பூக்கள் பூக்க..!
பிரியாணி வாசம் வரலயே... என்று சந்தீப் எட்டி பார்க்க.!
" என்ன இதுங்க இப்டி உறைஞ்சு போய் நிக்குதுங்க.. " எதிர் எதிரே ஒருவருள் மூழ்கி ஒருவர் நிற்க. சந்தீப் இருவரின் நடுவில் கையை ஆட்ட,நோ யூஸ். " பிரியாணி வேணுமே.. பிரிச்சுவிடனுமே." சந்தீப் பவித்ராவின் காதருகே .. யூ ட்யூப்.. வீடியோ ஒன்றை பிளே செய்ய அதில்
"அப்டியே .. இனிக்க... இனிக்க.. வாழை பழம் மாதிரியே .. பேசுவான் மேடம்.. எப்பேர் பட்ட பொண்ணும் இவன் கிட்ட விழுந்துடும் மேடம். " என்ற வசனம் ஒலிக்க.!
காதல் பஞ்சாயத்து ஆடியோ .. காதில் கேட்டதும் காதல் மயக்கம் தெளிந்து. நான் ஸ்டாப் சிரிப்பில் பவி மற்றும் சந்தீப். குபீர் சிரிப்பில் இருவரும் பிஸி ஆகிவிட ,ப்ரீத் முறைப்பது இன்னும் காமெடியாக இருந்தது. வயிற்றை பிடித்து குலுங்கி குலுங்கி சிரித்தனர்.அண்ணன் தங்கை இருவரும். " இவர்கள் சிரிப்பு ப்ரீத்தையும் தொற்றிக் கொள்ள..
ப்ரீத் பவியிடம் கிண்டலாய் ." வாழை பழம் மாதிரியா பேசுறேன் மேடம்.. " என்று வினவ,
" ம்.. " என்றாள் குறும்பாக.. விடாத மாமன் பார்வையில் கன்னம் சிவக்க, நாணியவள் தலை கவிழ்ந்து நிற்க.ப்ரீத் அவளையே நோக்க.!
பொறுமை இழந்து சந்தீப் பொங்கிய விட்டான்.. " கறிய குடுங்கடா நான் பச்சையாக தின்னுகிறேன். " என்றதுமே சத்தமாக சிரித்தவள்.
" ரெண்டு பேரும் முதல்ல வெளியே போங்கடா.. நானே சமைச்சுக்கிறேன் என்று ப்ரீத்.சந்தீப் இருவரையும் பிடித்து பவித்ரா வெளிய தள்ள.
ப்ரீத் -" நான் வேணா அப்படி ஓரமா நின்னுக்கவா.. பவி.." அடிக்ட் ஆன மது பிரியனைப் போல் கெஞ்சினான்.
பவித்ரா -" ஒரு டேஷ்..ம் வேண்டாம்." என்று சத்தம் போட, ப்ரீத் தலையில் தட்டி இழுத்து சென்றான் சந்தீப்.
ஆண்கள் உதவி செய்ய வரவே இல்லை என்று ஏங்குவதும் . உதவி செய்ய வந்தால் திட்டுவதும் . பெண்களின் இயல்பு.!
ஆமா..அவன் எங்கே பிரியாணி கிண்ட உதவி பண்ணினான்? பவித்ராவை பிக்கப் இல்ல பண்ணினான்.
ஒற்றை தாயால் பராமரிக்கப்பட்டு வளர்க்கப்பட்டவள் அல்லவா.! அத்தனையும் அத்துப்படி அவளுக்கு. நாளைக்கு மணவரையில் அமர்த்தி தாலி கட்டினால் கூட கட்டு செட்டாக குடும்பத்தை நடத்தும் அளவு திறமையானவள் பவித்ரா. சொப்பு சாமான் வைத்து சோறு ஆக்கும் வயதிலேயே. வேலைக்கு செல்லும் தாய்க்கு உணவு சமைத்து ப்ரீதோடு சேர்த்து மூவருக்கும் டிபன் கட்டி கொடுத்து, விடுமுறை நாட்களில் தாயுடன் சேர்ந்து மண்டபத்திற்கு சமையல் வேலைக்கும் செல்வாள். ஐந்து பேருக்கும் சமைக்க தெரியும் ..!
ஐம்பது பேருக்கும் சமைக்க தெரியும்..அக்மார்க் குடும்பத்தலைவி மெட்டீரியல் பவித்ரா.
"இளமையில் வறுமை கொடியது என்றாலும் கஷ்டங்களும்
வலிகளும் தான் சிற்பமாக மனிதர்களை செதுக்கும்.!
". சுமதி எனும் கண்டிப்பான தயாள் நேர்த்தியாக செதுக்கப்பட்ட சிற்பம் இவள்.! ஓடுகாளியாய் போன தந்தையின் பெண் அல்லவா.. யாருமே தன் பெண்ணை குறை கூறக்கூடாது என்று ஒவ்வொன்றையும் சொல்லிக் கொடுத்து ,கிள்ளி கொடுத்து, தண்டித்து கண்டித்து கட்டுக்கோப்பாக வளர்க்கப்பட்டவள்.! பொக்கிஷம் போல பொத்தி வச்ச மல்லிகை. அப்படி கூட சொல்லலாம். நமது (ப்ரீத்) தலைவனும் என்றுமே அவளுக்கு அரசனாக, அவள் தேவை தீர்க்கும் தேவனாக ,அன்பு காதலனாக, காப்பாளனாக. என்றுமே நிலைப்பான் அவளின் உயிராக .!
பவித்ரா.." டேய்.. அப்ரண்டீஸ் கலா.. குக்கர் மூணு விசில் வந்தவுடன் நிறுத்திடுங்க.கிரேவி வந்து சிம்ல வச்சிருக்கேன்.. சிக்கன் வெந்தோன பக்கத்துல கொத்தமல்லி நறுக்கி வச்சிருக்கேன். தூவி ஆஃப் பண்ணிடுங்க சரியா. "
சந்தீப் -" டேய்.. அப்படினு அண்ணனையும் சேர்த்து சொன்ன மாதிரி. கேட்டது?"
" ஆமா டா .. அண்ணா.."
" பத்து வயசு மூத்தவன் நான் மரியாதை.."
"மரியாதை வேணுமா? பிரியாணி வேணுமா?"
" பிரியாணி தான்.. மரியாதை.. அதை என்ன அள்ளியா திங்க முடியும்." அண்ணன் சொல்வதைக் கேட்டு நகைத்தவள்." போய் சொன்ன வேலைய பாருங்க டா.. வெட்டி மாடுங்களா. " என்று அறையை நோக்கி சென்றவள். குளித்து உடை மாற்றி வந்து.. சுட சுட பிரியாணியை பரிமாரிக் கொண்டே
இருவரையும் பார்க்க.." தட்டுக்குள் தங்க புதையல் இருப்பதாக நிமிராமலே அண்ணனும் மாமனும் வெட்டி வீச.. ப்ரீத்திற்க்கு பிரியாணியை அள்ளி அப்பியதால் தொண்டை அடைக்க.
" தண்ணி கூட கொண்டு வராம .. என்ன அவசரம் " என்று கிட்சன் நோக்கி ஓடியவள்.. தண்ணீர் கொண்டு வந்து புகட்டி ..புறையேற அவன் தலையை தட்டி விட்டு நின்றாள். காலிங் பெல் அடிக்கவும்.. ஒடி சென்று கதவுகளை திறக்க. ! எதிரே ஒரு பெண் நிற்கவும்.. சந்தேக பார்வை பார்த்து ..
" யார பாக்கனும்? என்று கேட்க. அந்த பெண் இவளையே உற்று பார்க்க.!
" பவி.." என்றால் வர்ஷா .
" ம்.. நீங்க?" உடை அலங்காரத்தை வைத்து கனித்தாள் யாராக இருக்கும் என்று " வர்ஷா ? ஆ.. தானே நீங்க "என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல் எதிரே நின்றவள் தலை தாழ்ந்து தயங்கி நின்றாள்.
பவி-" நீங்க வர்ஷா வா? " என்றதும் ஆமாம் என்று தலை அசைத்தவள் அங்கேயே நின்றாள். பவித்ராவின் விழிகளை கேள்வியாக பார்த்து கொண்டே.. தனியாக ரோட்டில் நடந்து சென்றால் கூட
தனக்கு சம்மந்தமே இல்லாமல் நிற்க்கும் பெண்கள் கூட காது கூசுகிற அளவு தவறான வார்த்தையை செவிபட பேசினாலும் விதியை நொந்து கொண்டு அமைதியாக செல்வாள் வர்ஷா. ஆனால் இவளோ அசிங்கம் போல முகம் சுழிக்காது, அருவருத்து பார்க்காது நிற்பதை கண்டு, உடல் முழுவதும் நடுக்கம் உணர்ந்தால் முதல் முறையாக,
காதலர்களை பிரித்து விட்டோம் என்று குற்ற உணர்வோடு வேதனையில் துடித்தாள். 'இருவரும் அமர்ந்து விடிய விடிய பேசினோம் என்றால் தானே பவித்ராவாக இருந்தால் கூட நம்ம மாட்டோம்.' பிடிக்காதவரை விட பிடித்தவர்களின் வார்த்தை வலிக்கச் செய்யும். சந்தீப்பின் தங்கையாக பவித்ராவை தெரியும் அங்களுக்கு,முதல் முறையாக செய்யாத தவறுக்கு திட்டு வாங்கப் போவது அவளுக்கு வேதனை இல்லை. இருவரின் காதல் தன்னால் பிரியப்போகிறது என்பதால் மிகுந்த வருத்தம் அவளுக்கு, கணவனையோ.. காதலனையோ.. யாருக்கும் பங்களிக்க பிடிக்காதல்லவா பெண்களுக்கு? வரப்போகும் சுடு வார்த்தைக்கு பயந்து கொண்டே செருப்போடு செருப்பாக ஒதுங்கி நின்றாள் வர்ஷா.
" என்கிட்ட பேசணும் கேட்கணும்னு சொன்னீங்க" என்று தட்டு தடுமாறி வர்ஷா வார்த்தைகள் உதிர்க்க.
"உள்ள வந்தா தானே பேச முடியும்."என்று உள்ளே வர்ஷாவின் கை பிடித்துபவித்ரா அழைத்து வர,
தயங்கி தயங்கி அவள் பின்னோடு வந்தவள் சந்தீப், பீரீத் முகம் பார்க்காமலே தலை கவிழ்ந்து நிற்க.
வர்ஷா வருவது ப்ரீத்துக்கு தெரியாததால். அவளை கண்டதும் உச்சபட்ச கோவத்தில் இருந்தான்."இந்தபைத்தியக்காரிக்கு வேற வேலையே இல்ல. இன்வெஸ்டிகேஷன் னு சொல்லிட்டு அவங்க மனச ஏதும் கஷ்டப்படுத்த போற,சும்மா சொல்றானு பார்த்தா..நிஜமாவே விசாரிக்க தான் போற போல.! எங்கள விசாரிச்ச மாதிரி வர்ஷாவ விசாரிக்க கூடாது. என்று கடவுளிடம் வேண்டுதல் வைத்தான் ப்ரீத்.
பவித்ரா -" வாங்க கை கழுவிட்டு வந்து சாப்பிடலாம். " என கையை சுத்தம் செய்து இருவரும் வந்து டைனிங் டேபிள் அருகருகே அமர
இன்முகமாய் தனக்கு உணவைப் பரிமாறும் பவித்ராவையேமிரட்சி கொண்ட விழிகளில் ஒருவித படபடப்புடன் பார்த்தால் வர்ஷா.
இப்படி அவள் என்றுமே பயந்ததில்லை
இருவரின் உறவு கண்ணாடியில் கல்லாய் வந்து விழுந்துவிட்டோமோ.! என்று அகம் நொந்து போனாள். உண்மையை சொல்ல நாவோ துடி துடித்தது, ஏழையின் சொல் அம்பலம் ஏறாது என்பதைப் போல வேசியிடமிருந்து கிடைக்கும் நற்சான்றிதழை எப்படி நல்ல குடும்பத்து பெண் ஏற்பாள்? பதட்டத்தில் உடலும் வேர்த்து வடிய, மெல்ல உணவை கையில் அள்ள தடதடவென்று கைகள் நடுங்கியது.
உண்ணும் மூவருது பார்வையும் பவித்ராவை சுற்றி இருந்தது. அவள் முகத்தில் எந்த சலனமும் இல்லை. விழிகள் எந்த உணர்ச்சியும் பிரதிபலிகவில்லை, புதிய கண்ணாடியாய் அவள் முகம் பளிச்சிட்டு மின்னியது.டைனிங் டேபிள் கீழே இருந்து இடது கையால் வர்ஷாவின் கரத்தை தனது மென்பஞ்சு விரல்களால் பிடித்தால் பவித்ரா. நடுங்குகிறாள் என்று தெரிந்ததும், அழுத்தமாக பற்றி கையை கொள்ள அவள் பிடிக்கும் விதத்தில் அறிந்து கொண்டாள் அது நேசம் மிகுந்த விரல் அணைப்பு என்று இப்பொழுது தான் அவளுக்கு உயிரே வந்த உணர்வு பவித்ராவை பற்றி சந்தீப் கூறி கேட்டிருக்கிறாள்.
உடன் பிறவா தங்கை போல அவள் எனறு அவள் குணமும் குறும்பும் சேட்டைகளையும் செவி வழி கேட்டு அவள் மீது பாசத்தை வளர்த்துக் கொண்டாதோடு கண்களால் காணாமலேயே ஒருவர் மேல் நேசம் துளிர்க்கும் அல்லவா, அப்படியான நேசம் அவள் மேல்.! தங்கை போல பாவித்தவளை இந்த இழிநிலையில் பார்க்க வைத்த விதியை நொந்தாள் வர்ஷா.'இப்போது கோபத்தை கட்டுப்படுத்தி சபையில் அமைதியாக இருக்கிறாள்.கேள்வி அம்புகளால் இதயத்தை குத்தி கிழிக்கப் போகிறாள் என்பது மட்டும் உறுதி என்று நினைத்தவள்.
மிகவும் பிடித்த சிறு பெண் முன்னாள் காதலனை களவாண்டவளாக நிற்பதால் அருவருப்பு தன் மேலே எழுந்தது அவளுக்கு. இன்று அவள் பேச வேண்டும் என்றதுமே ஆயிரம் கேள்விகளை அவளுக்குள்ளே கேட்டுக் கொண்டு தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டாள் வர்ஷா . இழிவான பிறவி எடுத்துவிட்டேன், என் அருகில் இருந்த பாவத்திற்கு அவனது வாழ்க்கையை, இவளின் தூய காதலை அழித்தது ஒரு புறம் என்றால்
தங்கையென மனதில் தத்தெடுக்க நினைத்தவளை, உன் இடம் இது தான். தாசி நீ.. என்று தலையில் குட்டு வைத்த விதி, பொல்லாத விதி.!
நெருப்பு விளக்கில் எரியும்போது தீபமாகவும், வீட்டை எரிக்கும் போது சாபமாக தென்படும் போது தான் எம்மாத்திரம். விரக்த்தி சிரிப்பொன்று வந்தது.புனித நீரில் கலந்த ஒரு துளி விஷமாய் அவளை உணர்ந்தால் வர்ஷா.சந்தேகம் ஒரு கொடுநோய் இரவில் தனி அறையில் சேர்ந்து இருந்து சல்லாபத்தில் ஈடுபடவில்லை என்று சான்றிதழ் வழங்கவா முடியும்? அவளால்.
நல்லவளோடு இருந்தால் நம்புவாள் பவித்ரா நானோ?
பவித்ரா சிந்தனையில் மூழ்கிய வர்ஷாவை நோக்கி கேட்டாள்." ரொம்ப பலமான யோசனை போல ? சாப்பிடுங்க டேஸ்ட் பிடிக்கலையா.? " என்று கேட்கவும்
தலையை உலுக்கி சுயத்தை அடைந்தவள். "பிடிச்சுருக்கு"ருசிபசி உணர இயலாமல்
வேகமாக சாப்பிட்டால் வர்ஷா .
பவித்ராவின் செல்போன் அலற, வேகமாக டேபிள் நோக்கி சென்று அதை ஆன் செய்தாள். அழைப்பில் ப்ரீத் "ஹலோ" என்று சொல்லவும் கடுப்பானாள் பவி." என்னடா? ரூம்ல இருந்துக்கிட்டே ஹால்ல சாப்பிடுற எனக்கு ஃபோன் பண்ற.? பைத்தியம்" என மாமனை திட்டவும் " வர்ஷாவ வர சொன்னதே தப்பு மனசு கஷ்டப்படும்படி எதையும் கேட்காத டி" என்றதுமே அழைப்பு துண்டிக்கப்பட புரித்தது. " எங்க ரெண்டு பேரையும் டீல் பண்ண மாதிரி அவங்கள டீல் பண்ணாம இருக்கணும்." என்று வாய் விட்டு புலம்பினான் ப்ரீத்.
உணவிற்க்கு பின் இங்கு வர்ஷாவை தனிமையில் பேச வேண்டும் என்று பவித்ரா அழைத்து தனது அறை சென்று கதவை தழிட , அச்சத்தில் வேர்த்து வழிந்தது வர்ஷாவின் உடல்" என்ன கேட்க போறேன்னு உங்களுக்கு தெரியும் அதனால நீங்களே " நடந்ததை அறிந்து கொள்ள கேட்க,
சத்தியம் செய் என மனசு குரல் எழுப்ப 'பெரிய பத்தினி நீ செய்யும் சத்தியத்தை நான் நம்ப என்று பவி கேட்டு விட்டாள் என்ன செய்வது.?
தைரியத்தை வரவழைத்துக் கொண்டு
" பவித்ரா கடவுள் நம்பிக்கை எனக்கு அதிகம். தூர்கா மாதா மேல சத்தியமா " என்றதும் இடை நிறுத்தினாள் பவித்ரா.
"சத்தியமெல்லாம் எதுக்கு சாதாரணமா சொல்லுங்க, என்ன பத்தி என்ன உங்க கிட்ட புலம்புனான் ப்ரீத். மொழியே உங்களுக்கு புரிஞ்சுருக்காது பச்.. ஆனா முகத்துல ஃபீலிங்ஸ் தெரியுமே,எந்த மாதிரி உணர்வோட பேசினான்.? "
"பேசுனதும் தெரியும்."என்று வர்ஷா நடந்ததை தெளிவாக சொல்ல ஆரம்பிக்க,
அந்த நாள்
மெத்தையில் வர்ஷா முனையில் அமர்ந்திட, கட்டிலின் கால் பக்கத்தில் கால்களை குறுக்கி குத்து காலிட்டு அமர்ந்திருந்தான் ப்ரீத். அவளை நிமிர்ந்து கூட பார்க்காமல் செல்போனில் பவித்ராவின் புகைபடம் கண்டு பிதற்றிக் கொண்டே இருக்கவும் ஒன்றுமே புரியாததால் வர்ஷா சந்தீப்க்கு கால் செய்து ப்ளுடூத்தில் கனெக்ட செய்ததும், மொழி பெயர்ப்பு நடந்தது சந்தீப் மூலம் வர்ஷா விற்க்கு,
"பவி சின்ன குழந்தை டி நீ.. முதல்ல உன்ன வாங்குனது நான் தான் தெரியுமா? இந்திரன் மாமா
( சுமதியின் கணவன்) நீ பாப்பானு தெரிஞ்சதுமே வேணாம்னு பொய்டாரு, யாருமே இல்லை நர்ஸ் வந்து பிடி என்று கையில உன்ன தந்ததும் ஒரு லைய்ட் பிங்க் கலர்ல குட்டி பொம்மை விரல வாயில் வைச்சிட்டு அழகா சிரிச்சது.இப்ப கூட நான் கண்ண மூடினால் அதே மாதிரி தெரியுவ டி நீ.. குட்டி தேவதை.!!" கண்களின் நீர் கசிந்தவாறு போன் திரையில் அவள் நிழல் வருடி
பேசிக்கொண்டு இருந்தான்.
" அத்தை கண் முழிச்சதும் மறுமகனே நீ தான் என் பொண்ண கல்யாணம் பண்ணிக்கனும் அவதான் உன் பொண்டாட்டி, என் பொண்ண பத்திரமா பாத்துகுவியா? னு கேட்டாங்க.
அப்பவே நீ பொண்டாட்டியா என் மனசுல பதிஞ்சுட்ட, என் பாசம் கொஞ்சம் கொஞ்சமா காதலா அளவிட முடியாத அளவு வளர்ந்துடுச்சு. உனக்கு பேர் வைச்சதே நான் தான் " லேசாக புன்னகைத்தவன் உனக்கும் எனக்கும் ஒரே எழுத்துல வரனும் னு தேடி.. தேடி..வைச்ச பேர் தான் பவித்ரா.
நீ எனக்கு வேணா உன் சந்தேகபுத்தி என்ன கொன்னுடும் னு சொல்லி, நாம பிரியலாம்னு சொன்னல்ல.? நான் உன்ன சந்தேகப்படுவனா பவி.? நான் ஏன் இப்டி இருக்கேன் தெரியுமா? அத்தையம்மா எவ்ளோ ஜாலியா இருப்பாங்க தெரியுமா?
நம்பவே முடியலை தான.! சுமதி அத்தை ஏன் இறுகி போனாங்க தெரியுமா? ஆம்பளை துணை இல்லாம தனியா ஒரு பெண்ணு ரெண்டு பிள்ளைங்களோட ஆதரவில்லாம இருக்கதால நெறைய பிரச்சனை பண்ணாங்க, தினமும் அத்தை அழுவாங்க குடிச்சுட்டு வந்து கதவ தட்டுவானுங்க தப்பா சைகை காட்டுறது துணிய விலக்கி காட்டுறது, ஜாடைய வானு கூப்பிடுறது மேல இடிக்கிறது, என்ன கூப்பிட்டே நைய்ட் வரவானு கேட்டு சொல்ல சொல்லுவாங்க. அத்தைகிட்ட அழுவேன். சின்ன வயசுல ஒன்னும் பண்ண முடியாம என் மேலே எனக்கு கோபம் வரும்
அப்ப ஒரு தடவை நான் கிரிக்கெட் விளையாட பொய்ட்டேன். நீ அழுகிட்டே வந்த என்னனு கேட்டேன். பக்கத்து வீட்டுல இருந்த நாய் உன்ன அங்க தொடுறான் வலிக்குதுடா னு சொன்ன செத்துட்டேன் பவி. அப்பவே என் வாழ்கையே உன்ன பத்திரமா பாதுகாக்க தான் என்று முடிவு பண்ணிடேன். ஒரு நிமிஷம் கூட உன்ன தனியா விட மாட்டேன்.
பாதுகாப்பான இடத்துக்கு குடி போக நாயை விட அதிகமா உழைச்சேன்.தூக்கமே இருக்காது எனக்கு ஆனா நீ நிம்மதியா தூங்கவ, எவ்வளவு கஷ்டம் பட்டாலும் பரவாயில்லைனு தோனும். என் அத்தை அழ கூடாது. சீக்கிரமா பெரியவனா வளரனும், உங்கள பத்திரமா பாத்துக்கனும் அதுக்காக தான் உன் சந்தோஷம் தான் என் வாழ்கை தெரியுமா பவி. நீயே போ னு சொன்னா என்னடி ஆவேன் நான்.? யாருமே இல்லைடி எனக்கு எல்லாமே நீ தான் தெரியுமா.?"
அவன் விழிகள் அருவியை போல் வழிய கைகளால் துடைத்தவன்.
" பவிமா..உன் ப்ரீத் அழறேன். நீ வேணும்.. டி.." என்று பிள்ளை போல தேமியவாறு அவன் தொடர " என்ன பிடிக்கலை வெறுக்கிறேன் னு மட்டும் சொல்லாதடி வலிக்குது. ரொம்ப ரொம்ப வலிக்குது. என்ன விட்டு போயிடுவேன் னு சொல்லாத டி பயமா இருக்குடி.. " என்று வாய்விட்டே ஆணவன் கதறிட "நான் போயிட்டுறேன். நீ இல்லாத வாழ்க்கை எனக்கு வேணா .. நீ சந்தோஷமா இரு டி அது என்னால தர முடியாது னு சொல்லிட்ட இல்ல " என்று கட்டிலின் காலை தொடர்ந்து கைகளால் பலமாக அடித்து தன்னை தானே காயம் செய்து கொள்ளும் அவனை பார்க்கையில்.! கண்ணீர் தானாய் சுரந்தது வர்ஷாவின் விழியில்,காதல் இப்படித்தான் இருக்குமோ? என்று ஏக்கம் கொண்டாள் வர்ஷா.
காதல் சதை பசிக்கான காம குறியீடு என்றே நினைதிருந்தவள். இன்று அப்படி இல்லை என்று அவள் முன்னால் ஒருவன் உயிர் சாட்சியாக தன்னையே வதைத்து கொள்கிறான் காதலுக்காக, அவனை நெருங்க முடியவில்லை அவளால்.. அவனது வலிகள் புகைப்போல அறை முழுவதும் பரவி இருக்க தேற்றத் தெரியாமல் ஸ்தம்பித்து நின்றாள் வர்ஷா .சந்தீப்பிடம்.. இறைஞ்சினாள் "போன் ப்ரீத்திடம் கொடுக்குறேன் நீ பேசு ப்ளீஸ்.. எனக்கு பயமா இருக்கு. " என்றதும் நிதனமாக சொன்னான் சந்தீப்." அழவிடு இறுக்கமான அவன் மனது இப்படியாவது கரையட்டும். " என்றதும் அழைப்பை துண்டித்தவள்.
மெளன பார்வை அவன் மீது இறுத்தி, இத்தகைய அன்பு எல்லை வரம்பற்ற காதலை கண்டு ஒருவித பிரமிப்புடன் அதிர்ந்தாள்.!
'இவன் என்ன வகையான ஆடவன். காமத்தின் தூரிகையாக இருந்தவளுக்கு தெரியுமே.. காதல் வெறும் பிதற்றல் என்று காரியம் ஆக சொல்லும் பசப்பு வார்த்தை என்று
இதோ கண்களாலேயே பார்க்கிறேனே.. காதலின் அரிச்சுவடியானவனை.! கண்ணீர் வழியே காதல் கசிந்து இதோ துளித்துளியாய் அவன் உயிர் வடிகிறது.! முட்டாள்களுக்கு தான் இது போல வைரம் கிடைக்குமோ? அவன் காதலியை எண்ணி வெறுமையாக இப்படி வதைக்கிறாளே ராட்சசி.. என்று திட்ட தவறவில்லை.
'காதலின் பரிசு கண்ணீர் உண்மை தான் போல.. காமுகர்களை காதலன் என நம்பி ஏமாறும் பெண்கள் உண்மை காதல் கொண்ட மனதை கூர்வாளால் துண்டிடுவது ஏனோ.? நிதர்சனம் உணர்ந்தவள் இவனுக்காக மனதில் வேண்டினாள்.
அந்த முட்டாள் பெண்ணுக்கு மூளையை கொடுத்து காதல் கைசேர வேண்டும் என்று இப்படி ஒரு காதல் தவபயன் போல.! வரத்தை உணரதவளை மனதில் வசைபாடி தீர்ந்தாள் வர்ஷா . இன்னும் அவன் கண்ணீர் நிற்க்கவில்லை.
காவிய காதலனாக தெரிந்தான் ப்ரீத்.தடுக்கலாம் என்று நினைத்தவள் இல்லை அழட்டும் அழுது ஓயட்டும், கண்ணீர் தான் சிறந்த வடிகால் தீராத காதல் வலிகளுக்கு என்று அமைதியாய் கட்டிலில் அமர்ந்தாள்.
"தற்கொலை என்பது நொடி நேர துணிவு. "
'கண் அயந்து விடாதே வர்ஷா என தனக்குள்ளே கூறினாள் நிலையான மன நிலையில் அவன் இல்லை.
வலியை உணர மொழிகள் தேவை இல்லை. இவனுக்காய் அவளிடம் பேச வேண்டும் இழந்துவிடாதே என்று கெஞ்ச வேண்டும். முன்பிறவி தவம் பலன் தந்த பொக்கிஷம் இவன் காதலென்று அந்த பேதையிடம் புரிய வைக்க நினைத்தாள் வர்ஷா.
அவன் சுவற்றில் தலையை சாய்த்து அமர்ந்திருந்தான்.இடது விழி நீர் நிரம்பி அழுதழுது சிவந்த அவன் வலது கடைக்கண் வழி கசிந்தது.
அவன் கண்ணீர் இவளையும் தொற்றிக் கொள்ள விழிநீர் வடித்தாள்.ஏன் என்று புரியாமல்
தெரியாதவர் புன்னகைத்தாள் நம் இதழ் விரிந்து தானாக பதில் நகை புரியும், அதே நிலை தான் வர்ஷாவிற்க்கு உண்மையாய் உடைந்து அழுபவனை கண்டு இவளும் உடைந்தாள். அதனால் அழுதாள். அவன் மேல் கழிவிறக்கம் பிறந்தது என்று வர்ஷா சொல்ல இதைக் கேட்டதும் அதிர்ச்சியில் கல்லென சமைந்து நின்றவளை அசைத்து பவித்ரா கையில் ஒரு காகிதத்தை தந்தாள் வர்ஷா. அன்று ப்ரீத் அருகே கிடந்தது இந்த காகிதம்
அதை பத்திரமாக பாதுகாத்து வைத்தாள். அவன் காதலியிடம் சேர்க்க " இதுல என்ன எழுதி இருக்குனு எனக்கு தெரியாது ஆனா உனக்காக எழுதுனது என உறுதியாக தெரியும்." என்று அவள் கைகளில் தினிக்க.
"மெல்ல அதை படித்தவள்.. கைகள் நடுங்க பார்வை நிலை குத்தி, உடல் நடுங்கி போனாள் பவித்ரா. கண்ணீர் ஜீவநதியாய் பிரவாகமாகி ஒட, நிற்கவும் திரணியற்று தொப்பொன தரையில் விழுந்து.. "ப்ரீ..த்.!" என்று குரல்வளை கிழியும் அளவு கத்தி..தன்னை தானே ஆவேசமாய் அடித்துக் கொண்டு அழுதாள் பவித்ரா. மீண்டும்
மாமா.. என்று அலறினாள்.





