எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அவனோடு இனி நானா -14

Lufa Novels

Moderator
அவனோடு இனி நானா!


அத்தியாயம் 14


ஒரு வாரம் கடந்துவிட்டது வாரம் முழுவதும் சூர்யான்ஷ் வித விதமாக பிரணவிகாவின் ஆசையைத் தூண்டி விட்டு அவளிடம் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தான். அந்த முகம் தெரியாத நபரைத் தேடி தேடி களைத்து விட்டாள் பிரணவிகா. சாத்விகா எவ்வளவு எடுத்துக் கூறியும் அவள் கேட்பதாக இல்லை.


இந்த நாட்களில் சாத்விகாவையும் விராஜ் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான், ஏனெனில் இன்னும் ஒரு வாரத்தில் அவளின் பிறந்த நாள் வருகிறது, அதனால் அவளை எப்படியாவது சமாதானம் செய்து விடும் முயற்சியில் அவனும் இறங்கி இருந்தான். அதில் சற்று வெற்றியும் கண்டான்.


வந்துவிட்டது இரட்டை நாயகிகளின் பிறந்த நாளும். காலையில் எழுத்து குளித்து, புத்தாடை எல்லாம் அணிந்து வீட்டில் சாமி கும்பிட்டு, பெரியவர்களிடம் ஆசிர்வாதம் எல்லாம் வாங்கி, கார்த்திகாவின் கைவண்ணத்தில் காலையிலேயே நல்ல உணவையும் சாப்பிட்டு வெளியே கிளம்பிவிட்டனர் அவர்களின் நண்பர்களோடு.


இன்று பிறந்தா நாள் என்பதால் வெளியே செல்ல அனுமதி கேட்க, வழக்கம்போல் கார்த்திகா தடை போட, ஷிம்ரித் நிஹாரிகாவிடம் பஞ்சாயத்து சென்று, அவர்கள் கவின் மூலமாகக் கார்த்திகாவிடம் பேசி அனுமதி வாங்கிக்கொடுத்தனர்.


கார்த்திகா “முதல்ல கோவிலுக்குப் போய்ட்டு போங்க. சாயந்தரம் கரெக்ட்டா நாலு மணிக்கு வந்துரனும் வீட்டுல கேக் வெட்ட சரியா?” எனக்கேட்டே அவர்களை வழியனுப்ப, “சரிம்மா” என்று அவர் கூறியது போலவே கோவிலுக்குச் சென்று விட்டு, அவர்கள் போட்ட திட்டத்தின் படி மாலுக்கு செல்வதற்காக அனைவரும் அவரவர் இருசக்கர வாகனத்தில் கிளம்ப, அவர்களை மறைத்துக் கொண்டு வந்து நின்றது விராஜ்ஜின் வாகனம்.


அவன் இவ்வளவு தாமதமாக வந்ததில் சின்ன ஊடல் கொண்டு நின்றாள் சாத்விகா. அவர்களிடம் வந்தவன் இருவருக்கும் பொதுவாக


“ஹப்பி பர்த் டே மை டியர் சுவீட் டார்லிங்ஸ்” என இருவருக்குமான பரிசு பெட்டகத்தை அவரவர் கையில் கொடுக்க, சந்தோஷமாக வாங்கிக் கொண்டாள் பிரணவிகா. சாத்விகா விரைப்பாக நிற்க, அவள் பரிசைத் தன்னிடமே பத்திரமாக வைத்துக் கொண்டவன் பிரணவிகாவிடம்,


“டார்லி.. டார்லி” என வலிய, அவன் என்ன கேட்க வருகிறானெனப் புரிந்து கொண்டவள், அவளது நண்பர்களை எல்லாம் கிளம்புமாறு கண்காட்டியவள், சாத்விகாவிடம்,


“எஞ்சாய் டி” எனக்கூறிவிட்டு, அவளும் கிளம்ப,


“ஹே நில்லு கேர்ள்.. நானும் வரேன்” என சாத்விகா கூறியது அவள் காதில் விழும் முன்னே பறந்து அவள் நண்பர்கள் வட்டாரத்துடன் இணைந்து கொண்டாள்.


“வா சாத்வி” எனக் கேட்க, அமைதியோ அமைதியாகக் கையைக் கட்டிக் கொண்டு நின்றாள்.


“பேப் ஒரு சின்ன வேலையில மாட்டிக்கிட்டேன் டா. அதான் லேட்” என அவளிடம் கெஞ்ச,


“நைட் என்ன சொன்னேன் டா.. காலையில முதல்ல வீட்டுக்கு வா.. உன்னைத் தான் நான் முதல்ல பார்க்கனும்னு சொன்னேன்ல.. உன்னொட விஷ் தான் காலையில முதல் விஷ்ஷா இருக்கனும்னு சொன்னேன்ல.. ஏண்டா எல்லாத்துலயும் என்ன ஏங்க விடுற?”


“அங்க தான் கிளம்பினேன் டா.. ஆனா வேலையில மாட்டிக்கிட்டேன்”


“ஆமா பொல்லாத வேலை.. கட்ட பஞ்சாயத்து வேலை”


“பேப்.. இன்னைக்கு ஒரு நாள் அதெல்லாம் வேணாம்.. நமக்கான நாளா இருக்கட்டும்”


“நானா பேசினேன்.. நீ தான வேலைனு சொன்ன?”


“வேலை தான் ஆனா அது அந்த வேலை இல்ல.. இது வேற வேலை. அப்புறமா அத சொல்றேன்.. இப்போ வா காருக்குள்ள போலாம்.. எல்லாரும் பார்க்குறாங்க.. அப்புறம் நாளைக்கு நம்ம போட்டோ தான் பேப்பர்ல வரும். முதல்வரின் அடுத்த வாரிசு கல்லூரி மாணவியோடு அஜால் குஜால்னு”


“ச்சீ.. லூசு” என அவனை அடித்தவள் சிரித்துக் கொண்டே வண்டியில் ஏறினாள்.


“என்னடா கிஃப்ட்? அத கொண்டா” என வாங்கி பிரித்துப் பார்க்க, அழகிய கைக்கடிகாரம்.


“சூப்பரா இருக்கு.. அவளுக்கு என்ன வாங்கின?”


“நான் வாங்கல.. இது விஹான் கிஃப்ட். உனக்கு என்ன கலர் பிடிக்கும்னு கேட்டான்.. அத மட்டும் தான் சொன்னேன். அதான் உனக்குப் பிடிச்ச பிங்க் கலர்ல வாங்கிருக்கான் போல.. அவளுக்கு அவளுக்குப் பிடிச்ச பிளாக்ல வாங்கிருக்கான்”


“ஏன் இவர் இப்படி இருக்கார் டா. அவளுக்குப் பிடிச்ச எல்லாம் தெரிஞ்சு.. பார்த்துப் பார்த்துப் பண்றார் ஆனா அவகிட்ட லவ் மட்டும் சொல்ல மாட்டேங்கிறார். இவ போக்கே சரியில்ல.. எவனோ அவகிட்ட பூ கொடுக்க, சாக்லெட் குடுக்க, கிஃப்ட் கொடுக்க, பொக்கே குடுக்கனு தினமும் விளையாடுறான்.. இவளும ‘ஆ’நு வாய பொளந்து பார்க்குறா.. எனக்கு என்னமோ அவ போக்கே பிடிக்கல..”


“என்ன சொல்ற பேப்.. இதெல்லாம் ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லல? நீயே அவள வார்ன் பண்ண பேண்டியது தான?”


“அவகிட்ட சொன்னா நான் அவள பார்த்துப் பொறாமை படுறேனு நினைக்கிறா.. நான் மட்டும் காதலிக்கிறேனாம்.. அவளுக்கு வரச் சின்ன சின்னப் புரோபோசல கூட நான் தடுக்குறேனாம்.. என்னய தப்பா நினைக்கிறா.. அதான் என்னமோ பண்ணுனு விட்டுட்டேன்”


“யார் அவன் சொல்லு? என்னனு பார்க்குறேன்”


“எனக்கு இல்ல அவளுக்குமே அவன் யாருனு தெரியாது.. முகத்தைக் காட்டாம விளையாடிட்டு இருக்கான். முதல்ல நான் கூட விஹான் அத்தான் தான் விளையாடுறாருனு நினைச்சேன் ஆனா அவர் இல்ல.. அவன் ஒரு வொயிட் கலர் பி. எம். டபிள்யூ பைக்கில வரான்..”


“நம்பர் பார்த்தியா?”


“அச்சோ அத மிஸ் பண்ணிட்டேனே! அடுத்த முறை பார்த்தா நோட் பண்றேன் டா”


“சரி.. கவனமா பார்த்துக்கோ”


“இந்த விஹான் அத்தான் தான் சீக்கிரம் அவ கிட்ட லவ் சொன்னா என்ன?நீங்க அவர் கிட்ட பேசுனீங்களா?”


“யாரு நான் அவன்கிட்டவா? போவியா? அவன் கிட்ட 2 வார்த்தைக்கு மேல பேசினா சண்டை வந்துரும் இரண்டு பேருக்கும். எனக்கு என்னவோ அவன் இன்னும் அமைதியா இருக்குறது அவளுக்காகத் தானு தோனுது.. அவ தான் இன்னும் அவன பார்த்தாளே ஓடுறாளே! ஒருவேலை அவ நார்மலா ஆனா சொல்லுவானோ என்னமோ?”


“அது சரி.. லவ் மட்டும் சொல்லமாட்டார் உங்கண்ணே ஆனா கிஸ் மட்டும் அடிக்கத் தெரியும்”


“எதே!” என்றான் அதிர்ச்சியாக, ஆமாமெனக் கண்களை மூடித் திறந்தாள் சாத்விகா.


“நிஜமாவா?”


“ஆமாங்றேன்”


“இந்தப் பூனையும் பால் குடிக்குமா?”


“அதெல்லாம் குடிச்சாச்சு.. அதுவும் வம்படியா” என்றாள்.


“அப்போ சீக்கிரம் லவ் செட் ஆகிடும். அதுவரை இந்த அரைலூச மட்டும் நீ கவனிச்சிக்கோ”


“அது எல்லாம் இப்பவும் அவள அடிக்கடி வார்ன் பண்ணிட்டே தான் இருக்கேன். அவள விடு.. நம்ம விஷயத்துக்கு வா.. இது உங்கண்ணன் வாங்கி தந்த கிஃப்ட்னா.. நீ ஒன்னும் வாங்கலயா எனக்கு? என் கிஃப்ட் எங்க?” என்றாள் செல்லக் கோபத்தோடு.


“அதுக்கு தான் போறோம். வா” என அவளைச் சென்னையில் உள்ள போர்ட்க்கு அழைத்துச் சென்றான். முதல்வரின் வாரிசு என்பதாலும், முன்கூட்டியே அத்தனை ஏற்பாடுகளையும் செய்து வைத்துள்ளதாலும், இருவரும் நேரே ஒரு படகுக்கு (yacht) செல்ல, அப்படகு முழுவதும் சிவப்பு நிற பலூன்களாலும், சிவப்பு நிற ரோஜாவாலும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.


அதைப் பார்த்ததும் அவ்வளவு சந்தோஷமாக அவனை அணைத்துக்கொண்டாள் சாத்விகா.


“சூப்பர் வீர். ஐ லக் தட்”


“வா. உள்ள போகலாம்” என அவள் கையைப் பிடித்து அந்தப் படகுக்குள் அழைத்துச் சென்றான். படகு ஓட்டுநர்களைத் தவிர்த்து இவர்கள் இருவர் மட்டுமே. படகு கடலுக்குள் பயணமானது.


சுற்றி ஆட்களே இல்லாத தனிமையான இடத்தை அடைய, அலைகளின் சத்தம் மட்டுமே! இருவரும் பேசவில்லை. ஒருவர் அருகில் மற்றொருவர். இருவரும் அந்த அருகாமையும், ஏகாந்தவேலையையும் ஆழ்ந்து அனுபவித்தனர். அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் அவள், அவனோ அவள் உச்சத்தலையில் முத்தமிட்டு, தன்னருகில் உள்ள கேக்கை எடுத்து அவளிடம் நீட்டி,


“பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் என்னுடையவளே!” என்றான். அவளது சந்தோஷத்திற்கும், உற்சாகத்திற்கும் அளவே இல்லை. அவனைக் கட்டிக் கொண்டாள் கண்ணீருடன்.


“யூ மேட் மை டே வெர்ரி ஸ்பெஷல் வீர். ஐ லவ் யூ” என்றாள்.


“ஐ லவ் யூ டூ மை சோல். கேக் கட் பண்ணு” எனக்கூற, அந்தக் கேக்கை வெட்டி இருவரும் மாற்றி மாற்றி ஊட்டிவிட்டனர்.


“இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்க இருக்கேன். இதே போல எப்பவும் இருக்கனும்.. நீ அரியர் எக்ஸாம்க்கு படிக்க ஆரம்பிச்சுடில?”


“நீ தான் பிடிவாதமா இருக்கீயே.. படிக்கிறேன் தாயே.. உன் ஆசைப்படி அரியர் எல்லாம் முடிச்சு டிகிரிய வாங்குறேன் போதுமா?”


‘டிகிரி வாங்கினா மட்டும் போதாது.. இந்த அரசியலையும் விட்டுட்டு வரனும்’ எனக் கூற நினைத்தவள், அதைக் கூறி இப்போது இருக்கும் மனநிலையை கெடுக்க மனம் இல்லாமல் கடலை இரசிக்க ஆரம்பித்தாள். படகு இன்னும் கடலுக்குள் சிறிது தூரம் செல்ல,


“இன்னும் கொஞ்ச நேரத்துல உனக்குப் பிடிச்சது நடக்க வாய்ப்பு இருக்கு.. நமக்கு லக் இருந்தா” என்றான்.


“என்ன எனக்குப் பிடிச்சதா? மழை வருமோ?” என்றாள் ஆர்வமாக,


“எதே! அது டேஞ்சர் டி.. இது வேற.. இதுவும் உனக்குப் பிடிச்சது தான்” என்று அவன் கூறி முடிக்க, அதர்ஷ்டம் அவர்களுக்குச் சாதகமாக இருந்ததோ என்னமோ அவர்கள் படகுக்கு அருகிலேயே ஒரு டால்பின் குதித்தது.


“வீர்..” என்றாள் ஆனந்த அதிர்ச்சியாக.


“பார்த்தியா.. இந்த இடத்துல நிறைய டால்பின்களைப் பார்க்கலாம்னு சொன்னாங்க” எனக்கூறி முடிக்க, சுற்றிலும் ஆங்காங்கே டால்பின்கள் குதித்தது. இவளோ இங்குச் சந்தோஷத்தில் குதிக்க ஆரம்பித்தாள்.


“வாவ்.. வாவ்..” எனக் குதித்தவள், எட்டி விராஜ்ஜின் கன்னத்தில் முத்தம் வைக்க,


“முத்தத்துக்கான மரியாதையே உன்னால போச்சு டி.. இங்கயா கொடுப்பாங்க? கொடுக்குறதா இருந்தா இங்க கொடு” என உதட்டை ஈரம் செய்து காட்ட, வெட்கத்தில் நாணியவள், அவனைத் திசைமாற்ற மீண்டும் டால்பின்களை ரசிக்க ஆரம்பித்தாள்.


இருவருக்கும் இனிமையான தருணம்.. ஆனால் இனி இப்படி இனிமையான தருணம் அவர்களுக்குக் கிடைப்போவதே இல்லை. இனி வரும் பிரிவின் வலியை அதிகரிப்பதும் இந்தத் தருணமே, அதே வலியைத் தாங்கும் சக்தியைக் கொடுப்பதும் இந்தத் தருணமே. அவ்வாறான இனிமையான தருணத்துடன் அவர்களது கடல்பயணத்தை முடித்துத் திரும்பினர்.


*******


ராகவேந்திரா இல்லத்தில், விராஜ் இன்று வெளியே சென்றதால் சந்தோஷூம் எங்கேயும் போகாமல் வீட்டில் ஓய்வில் இருக்க, அண்ணனுடன் நேரம் செலவிடுவதற்காக விமலேஷூம் வீட்டில் இருந்தார். அண்ணனும் தம்பியும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர், அவர்களுக்குப் பிடித்த சமையலை செய்துகொண்டிருந்தார் கல்பனா. அப்போது அவர்களிடம் வந்தான் விஹான்.


“ஹாய் பெரியப்பா.. என்ன இன்னைக்கு ரெஸ்ட்டா?” எனக் கேட்க,


“ஆமாம் விஹான். இந்த விராஜ் இன்னைக்கு அவன் பிரண்ட் கூட வெளியே போறேன்னான். அதான் நானும் இன்னைக்கு வீட்டுக இருந்துட்டேன்” என்றார்.


‘அவன் எந்த பிரண்ட பார்க்கப் போயிருப்பானு எனக்குத் தெரியாதா.. அவன் இன்னைக்கு சாத்வியையும், அந்த வாலையையும் இழுத்துட்டு சுத்திட்டு இருப்பான்’ என நினைத்துச் சிரித்துக் கொண்டான். அவன் நினைத்ததில் பாதி சரி பாதி தவறு என யார் அவனிடம் கூறுவார்? அவன் தவறாக நினைத்த விஷயம் அவனுக்கே இன்று விபரீதமாக முடியுமென்றும் யார் கூறுவார்?


“நீ என்ன இன்னும் காலேஜ்க்கு கிளம்பாம இருக்க?” என விமலேஷ் கேட்க,


“இதோ கிளம்பிட்டேன்பா. அதுக்கு முன்னாடி உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லனும் அதுக்காகத் தான் வந்தேன்” எனக்கூறியவன் விஷயத்தைக் கூற தயங்கியதும்,


“என்ன விஹான்? எதுவும் பிரச்சனையா?” எனச் சந்தோஷ் கேட்க, பிரச்சனை எல்லாம் எதுவுமில்லை என தெரிந்த விமலேஷூம் அவன் எதற்குத் தயங்குகிறானென நினைத்து அவனையே கூர்மையாகப் பார்த்தார்.


“அது பெரியப்பா.. நான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு..” எனத் தயக்கமாக இழுக்க, சந்தோஷமான முகத்துடன் அண்ணன், தம்பி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துப் பின்,


“நல்ல விஷயம் தான எதுக்கு தயங்குற? பொண்ணு பார்க்க ஆரம்பிக்கலாமா? இல்ல பார்த்து வச்சிருக்கியா?” என்றார் சந்தோஷ்.


“அதான் பெரியப்பா பேச வந்தேன். எனக்கு பிரணிய பிடிச்சிருக்கு” எனக்கூறவும் அவ்வளவு நேரம் சந்தோஷமாக இருந்த இருவர் முகமும் இறுக்கமாக மாறியது.


“அது சரியா வரும்னு தோனலயே விஹான்” என்றார் சந்தோஷ். விமலேஷூம் ஆமேதிப்பாகத் தலையசைத்தார்.


“ஏன் பெரியப்பா? என் மாமா மக தான?”


“ஆமா உன் மாமா மக தான்.. ஆனா.. அது உங்கம்மாவுக்கு பிடிக்காதே! உன் அம்மா சம்மதிக்காம கவினும் பொண்ணு தரமாட்டான்” என்றார் விமலேஷ்.


“தெரியும் பா. ஆனா பெரியப்பா நினைச்சா எல்லாம் சாத்தியம் ஆகும். அதான் நான் பெரியப்பா கிட்ட வந்து நிக்கிறேன்” எனக்கூறவும் சந்தோஷ் சிறிது நேரம் யோசித்தவர்,


“பிரணிக்கு இதுல சம்மதமா? அவளும் உன்னை விரும்புறாளா?” என்றார்.


“இல்ல பெரியப்பா! நான் அவ கிட்ட வெளிப்படையா இத பத்தி பேசவே இல்ல. ஆனா குறிப்பால உணர்த்திருக்கேன். அவ விளையாட்டு தனமா தான் அத எடுத்திருக்கா. அவ கிட்ட இதபத்தி வெளிப்படையா பேச மனசில்ல.


நான் பேசி, அவ சம்மதிச்சு, அதுக்கு அப்புறம் வீட்டுக்குத் தெரிஞ்சா.. அது அவளுக்குத் தலைகுணிவா தான் இருக்கும். எனக்கு அவ யார் கிட்டயும் கெட்ட பெயர் எடுக்கக் கூடாது.. என் கைய பிடிச்சி தலைநிமிர்ந்து வீட்டுக்குள்ள வரனும்.


அப்போ காதலியா வரத விட என் மனைவியா வந்தா தான் அவ கவுரமா, தலைநிமிர்வா வர முடியும். அவ கூட ஊர் சுத்தனும்னு நான் நினைச்சா காதல சொல்லிச் சம்மதிக்க வச்சிருக்கலாம் தான். ஆனா எனக்கு அவளோட வாழ்நாள் முழுக்க வாழனும். அதுக்கு அவ எனக்கு மனைவியா வேணும்” எனத் தெளிவாகக் கூற, சந்தோஷ் முகத்தில் ஒரு தெளிவும், விமலேஷ் முகத்தில் கலக்கமும் தெரிய, அந்நேரம் சரியாக கவின் வந்தார்.


“வா.. வா கவின்..” எனக்கூற, கவின் வந்த சத்தத்தில் கல்பனாவும் வந்துவிட்டார். பின் அவருக்கான உபசரிப்பு எல்லாம் முடிய,


“அத்தான்.. இன்னைக்கு என் பொண்ணுகளுக்கு பிறந்த நாள். அதான் ஈவினிங் சின்னதா ஒரு பங்ஷன் பண்ணலாம்னு கார்த்தி ஆச பட்டா.. அதான் ஈவினிங் பங்ஷனும், நைட் டின்னரும் ஏற்பாடு பண்ணிருக்கேன். எல்லாரும் வாங்க. நம்ம வீடு மட்டும் தான். உங்களுக்காக பிரண்ட்ஸ் கூட யாரையும் கூப்பிடல. முழுக்க முழுக்க நம்ம வீட்டு ஆட்கள் மட்டும் தான் அத்தான்” எனக்கூறினார்.


“சரி கவின். அதுல என்ன இருக்கு வந்துரலாம் நம்ம வீட்டு புள்ளைங்க பிறந்த நாள் தான. ஆனா அதுக்கு முன்னால உன்கிட்ட ஒன்னு கேட்கனுமே சம்பந்தி” எனச் சிரித்துக் கொண்டே சந்தோஷ் கூற,


“என்ன அத்தான் புதுசா சம்பந்தினு கூப்பிடுறீங்க?”


“நீ சம்பந்தி தான எனக்கு?” என்றார் சிரித்துக் கொண்டே,


“ஆமா ஆமா சம்பந்தி தான். ஆனா எப்பவும் போலப் பெயர சொல்லுங்க அத்தான் வித்தியாசமா இருக்கு இது” எனக்கூறவும்.


“நீ எனக்கு சம்பந்தி ஆயிட்ட இனி என் தம்பிக்கும் சம்பந்தி ஆகனுமே!” எனக்கூற, கவினுக்கு அவர் கூற வருவதின் அர்த்தம் புரிய மௌனமாக இருந்தார்.


“நேராவே கேட்க்குறேன் என் புள்ள விஹானுக்கு பிரணிய தரீயா?” எனக் கேட்டுவிட, அமைதியாக இருந்தார் கவின்.


“சொல்லுப்பா.. என் புள்ளைக்கு என்ன குறை? அவன் நல்லபடியா உன் மகளைப் பார்த்துப்பான்.. வேணும்னா உன் பெரிய பொண்ணுக்கிட்ட கூட விசாரிச்சுக்கோ” எனக்கூற,


“அத்தான்.. என்ன இப்படி பேசுறீங்க? நம்ம விஹான் மாப்பிள்ளைய பத்தி எனக்குத் தெரியாதா? அவருக்குப் பொண்ணு கொடுக்க எனக்கு கசக்குமா என்ன? ஆனா என் தங்கச்சிக்கு என்கிட்ட சம்பந்தம் பண்றது பிடிக்காது. அவ சம்மதிச்சு பொண்ணு கேட்காம என்னால கொடுக்க முடியாது. கார்த்தியும் இதுக்கு சம்மதிக்க மாட்டா. அதான்”


“இப்போ என்னப்பா உன் தங்கச்சியோட வந்து பொண்ணு கேட்டா உனக்கு ஓ.கே தான?” எனக் கேட்க,


“குடும்பமா எல்லாரும் சந்தோஷமா என் வீட்டுக்கு வந்து பொண்ணு கேளுங்க.. அப்போவே என் பொண்ணு கைய பிடிச்சு உங்க கையில ஒப்படைக்கிறேன். ஆனா இதெல்லாம் நடக்கும்ங்ற நம்பிக்கை தான் எனக்கு இல்ல. ஈவினிங் எல்லாரும் வந்துருங்க” என்றவர், எழுந்து விஹான் அருகில் வந்து அவன் தோளில் தட்டிவிட்டு சென்றார்.


கவிதா இதற்குச் சம்மதிப்பாரா? விஹான் பிரணி திருமணம் பெரியோர்களின் ஆசிர்வாதத்துடன் நடைபெறுமா? அதற்கு பிரணவிகா ஒத்துக் கொள்வாளா? பொருத்திருந்து பார்க்கலாம்.
 
Top