யாழ்க்கோ
New member
அத்தியாயம் (3)
விக்ரம் தன்னைக் கேலி செய்து கொண்டிருக்கும் நண்பர்களைத் துரத்திக் கொண்டிருக்க, அவன் செல்பேசி செல்லமாய் ஸ்ரேயா கோஷல் குரலில், "முன்பே வா ... அன்பே வா...." என இசைத்தது.
அதனைக் கண்டுக் கொள்ளாத விக்ரமிடம்,"டேய் மச்சி.... போடா போ... உன் ஆள் தான் கூப்பிடறா.... போய் சீக்கிரமா எடுத்து, லவ் யூ சொல்லி அவள துரத்திர வழியப் பாருடா.... அத விட்டுட்டு இன்னும் எங்களத் துரத்துற.... " என்றான் சுந்தர் துடுக்காக.
வேகமாய்ப் போய் எடுத்துப் பேச, "ஹலோ... மிஸ்டர் ராங் நம்பர்...." என்றது அந்த கரகரத்தப் பெண் குரல்.
"ஹலோ... ஹலோ ... யாரு நீங்க...?" அவன் புரியாமல் விழிக்க,
" என்ன மிஸ்டர்... என்னை யாருன்னு தெரியலயா....?"
" ஃபோன்ல எப்படிங்க ஆள் யாருன்னு தெரியும்....?"
"ஹாஹ்ஹா... நல்ல காமெடி.... நான் அப்பறமா சிரிச்சிக்கறேன்.... இப்ப நேராவே விசயத்துக்கு வர்றேன்.... "
" எ .... என்ன வி...விசயம்...." விக்ரமின் நாக்கு தந்தி யடித்தது.
"அட... செம்ம ஷார்ப்புப்பா நீ .... என்னமா ரியாக்ட் பண்ற நீ .... சூப்பர் சூப்பர்...."
"போதும்... போதும்.... சொல்ல வேண்டியதச் சொல்லு முதல்ல...." என கடுப்புடன் சொன்னவன் இருவரிடமும் அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு ஸ்பீக்கரை ஆன் செய்தான்.
"என்ன விக்ரம் ... நீ மட்டும் தெரிஞ்சிகிட்டா எப்படி, உன் கூட்டாளிகளுக்கும் விசயம் என்னான்னு தெரிய வேண்டாமா...?" எதிர்முனையில் கேட்க,
"ம்ம்... நீ என்ட சொல்லு .... நான் அப்புறமா அவங்கக்கிட்ட சொல்லிக்கறேன்.... " என்றான் வேண்டா வெறுப்பாய்.
"ஹாஹ்ஹா.... ஏன் ஸ்பீக்கர் தான் ஆனாயிருக்கே.... அவங்களுக்கு கேக்காதா.... அவங்க காதென்ன செவிடா....?"
"எ... என்ன .... சொல்ற....? நா... நான் ஆ... ஆன் பண்ண... லயே.... "
"ம்ம்... அப்படியா...? அப்புறம் ஏன் சீமத்துரைக்கு இப்படி நொண்டியடிக்குது வார்த்தையெல்லாம்....?"
"ம்ம்... அதெல்லாம் ஒண்ணுமில்லயே...." நெற்றியில் வியர்வை முத்துக்கள்.
"டேய்.... டோமரு .... என்னை என்ன சொம்பன்னு நினைச்சிட்டியோ....? இப்ப சொல்லிக்கிறேன், மூணு பேரும் நல்லா கேட்டுக்குங்க.... நீங்க நெனச்சி வந்த காரியம் இந்த ஊர்ல என்னிக்கும் நடக்கவே நடக்காது.... புரிஞ்சிதா....?"
"ஹேய்....யா...யாரு நீ .... எ .... என்ன காரியம்....?"
"ம்ம்.... அதான்.... அந்த கோடிக் கணக்கான டாலர் அசைன்மெண்ட்....சம்ஜே.... சாலா ... உங்கள நான் நேர்ல பார்க்குற நாள் ரொம்பக் கொடூரமா இருக்கும்.... பேசாம சொல்லக்காம கொள்ளாம் ஓடிப் போயிடுங்க.... அதான் உங்களுக்கு நல்லது..." எதிர்முனை அணைத்தது.
விக்ரம் ... என்னடா இது புதுப் பிரச்சினை....? இப்ப என்னடா பண்றது....?" வியர்த்தான் சுந்தர்.
" பேசாம இந்த அசைன்மெண்ட டிராப் பண்ணிடலாமா.... நான் ஏதோ சின்னத் திருட்டு தானே... ஒரு பெரிய தொகை கிடைச்சா அப்படியே இதெல்லாத்துக்கும் முழுக்கு போட்டுட்டு சொந்த ஊருக்கு போய் செட்டிலாயிடலாம்னு பார்த்தேன்... இப்படி பிரச்சினை வரும்னு தெரிஞ்சா நான் வந்திருக்கவே மாட்டேன்...." புலம்பிய கதிரை கண்களில் கனல் பொங்க முறைத்தான் விக்ரம்.
"டேய் கதிர், சுந்தர்....இதுக்காகவாடா இருந்த எல்லா வேலையையும் விட்டுட்டு ஆறு மாசமா திக்கு தெரியாத இந்த ஊரில வந்து உக்காந்திட்டிருக்கோம்...."
"புரியுது டா.... ஆனா, இப்படி விபரீதமா ஒரு மிரட்டல் ஃபோன் கால் வரும்னு நான் எதிர்பார்க்கலடா...." சுந்தர் பதறினான்.
"மச்சி.... இது வரைக்கும் எனக்கு நாம போற பாதை சரிதானான்னு சந்தேகமா இருந்துச்சு.... ஆனா, இப்ப ஊர்ஜிதமாயிடுச்சி.... சர்வ நிச்சயமா சரியா தான் போயிட்டிருக்கோம்.... கண்ணுக்கு தெரியாத அந்த எதிரிக்குக் கூட நம்ம மேல ஒரு பயம் வந்திடுச்சி...."பிரகாசமாகச் சிரித்தான் விக்ரம்.
"என்னடா.... என்னென்னுமோ சொல்ற.... ஏதோ ஒரு பொருள மியூசியத்திலேருந்து எடுக்கணும் அதுக்கு என் உதவி வேணும்னு தானக் கூட்டி வந்த.... இப்ப ஏதேதோ சொல்லி கிலி ஏத்துற....?" சுந்தர் மிடறு விழுங்க,
"ஹாஹ்ஹா.... ஆமாம் மச்சி.... நீ கம்ப்யூட்டர் புலி.... நீ பார்த்தத அப்படியே தத்ரூபமா வரையக் கூடியவன்....அதனாலத் தான் பொய் சொல்லிக் கூட்டி வந்தேன்.... உண்மையிலேயே இது நூறு கோடி ரூபா அசைன்மென்ட்...." என அசத்தினான் விக்ரம்.
"என்னது... நூறு கோடியா....?", இமைக்க மறந்து வாய் பிளந்து நின்றனர் இருவரும் விக்ரமின் எதிரில் கற்சிலைகளாய்.
சுவர் கடிகாரம் ஐந்து முறை சப்தமிட, இருவரையும் பார்த்து சிரித்து விட்டு நகர்ந்தான் விக்ரம் கஃபே கார்னருக்கு ஓவியாவை சந்திக்க.
(தொடரும்)