Mr D devil
Moderator
#இரண்டு வாரமா ஓடம்பு சரியில்ல தங்கங்களே.. தாமதமானதிற்கு மன்னிக்கவும்#
வெளியில் நின்ற தேவம்மாளை பார்த்ததும் "உள்ள வாங்க அத்தை..." என அவருக்கு வழி விட்டு நின்றார் தேவி... அவரோ அறையினுள் செல்லாமல் கையைப் பிசைந்தபடி தேவியையும், பிறையையும் பார்த்தார்..
அவரின் தயக்கத்தில "என்னாச்சு மா? ஏன் அங்கேயே நின்னுட்டு இருக்கீங்க?..."என கேட்டுக் கொண்டே பிறை எழுந்து வெளியில் வந்தார்.
பிறை வெளியில் வந்ததும் அவரின் கையைப் பிடித்து "தம்பி, உன் மூத்த மவ வெளிய கிளம்பி போனா ப்பா, வழக்கம் போல நம்ம காட்ஸ் அவளை ஃபாலோ பண்ணிருக்காங்க...அது அவளுக்கு தெரிஞ்சுடுச்சுன்னு நினைக்கிறேன்.. அவங்களுக்கு போக்கு காட்டிட்டு எங்கயோ போயிட்டான்னு சொல்றாங்க...இப்ப அவளை நம்ம காட்ஸ் தேடிட்டு தான் இருக்காங்களாம். இருந்தாலும் நானும் ஃபோன் பண்ணி பாக்கலன்னு பண்ணேன் அவ எடுக்கல... இந்த நேரன்னு பார்த்து ஆகாஷும் காணோம் சின்னதுங்களையும் காணோம்.. போன் போட்டாலும் எடுக்க காணோம். இப்ப என்ன பண்றதுன்னு தெரியல தம்பி மனசு படபடன்னு அடிச்சுக்குது எதுவும் சரியா படல. எதுக்கும் ஒரெட்டு போயி பார்த்துட்டு வரீயா..." என்றார் பதட்டமாக..
அதற்கு பிறை பதில் கூறும் முன்பே
"அத்தை, போன இடத்தில தொலைஞ்சு போகறதுக்கு அவ என்ன சின்ன புள்ளையா? நைட்டுக்குள்ள வந்துருவா நீங்க கவலைப்படாம போங்க..." அவளைப் பற்றி கிஞ்சதமும் கவலைக் கொள்ளாமல் கூறினார் தேவி...
"இல்லை தேவி, இப்ப இருக்கற நிலைமையில அவ வெளிய போனா அவளுக்கு பிரச்சனை வர வாய்ப் ..." என தேவம்மாள் ஏதோ சொல்ல வர இடையிட்டார் தேவி.
"அத்தை,நீங்க நினைக்கிற போல இனி எதுவும் நடக்காது... அதுக்கான ஏற்பாட்டை நான் எப்பவோ பண்ணிட்டேன்...நீங்க பயப்படாம போங்க..."எனத் தீவிரமான முகப் பாவனையுடன் கூறினார்... தேவியின் பேச்சே ஏதோ முடிவெடுத்து விட்டதாக கூற அது தாய், மகன் இருவருக்கும் இன்னும் கலக்கத்தைக் கொடுத்தது...
**
அதே நேரம் கெளரி கூறிய இடத்திற்கு வந்திருந்தாள் முகில்... பகலையும் இரவாக காட்டியப்படி இருந்தது அந்த பிரபலமான கிளப்... சிவப்பு மற்றும் நீல நிற வண்ண மின் விளக்குகளும் டிஜேயின் மெல்லிய இசையும் அவ்விடத்தை ரம்மியமாக்கிக் கொண்டிருந்தது..
சுற்றியும் பார்வையை சுழற்றி கெளரி சங்கரைத் தேடினாள்... எங்கும் அவன் இல்லாமல் போக மனதில் அவனைத் திட்டிக் கொண்டே கெளரியின் போனிற்கு அழைக்க அலைபேசியை கையில் எடுக்கவும் அவனிடமிருந்து அழைப்பு வரவும் சரியாக இருந்தது...
அழைப்பை ஏற்று காதில் வைத்தவள்
"எங்க இருக்க டா..." எனக் கேட்டு மீண்டுமொருமுறை கண்களை சுழல விட்டாள்.
"நான் அங்க இல்லை.. நீ போர்த் பிளோர்ல இருக்கற ரூம் டுவீண்டி த்ரிக்கு வா..." என அந்த கிளப்பின் மேல் தளத்திலிருந்த அறைக்கு அழைத்தான் கெளரி...
"ஏன், அங்க என்ன பண்ற நீ..." எனக் கேட்டாலும் மேல் தளத்திற்கு செல்லும் லிஃப்ட்டை நோக்கி நடந்தாள் முகில்...
கீழ் தளத்தில் கிளப் இருக்க மேல் தளம் முழுவதும் பல அறைகளைக் கொண்டிருந்தது... புருவங்கள் முடிச்சிட கன்னக்கதுப்புகளை கடித்தப்படி கெளரி கூறிய அறையின் கதவை தட்டினாள்...
"கம், உள்ள தான் இருக்கேன்..." என்றவனின் அழைப்பில் இவளின் புருவங்கள் சுருங்கியது...
உள்ளே இருப்பவன் கௌரியா என்ற சந்தேகம் நேரம் கடந்து எழுந்தது அவளுக்கு.. இருந்தும் அறையினுள் நுழைந்தாள் அவளின் சந்தேகம் சரியென்பதை போல் அவள் உள்ளே நுழைந்ததும் அறைக் கதவு பட் என்ற சத்தத்தோடு மூடிக் கொண்டது...
அறைக் கதவு மூடியதும் இவளின்
இதழ்களில் இகழ்ச்சி புன்னகை அரும்பியது. அவளின் பின்னால் காலடி ஓசைக் கேட்டாலும் திரும்பி பார்க்காது அவ்வறையிலிருந்த சிறிய கார்டிரை கடந்து உள்ளே சென்றாள்..
அறையினுள் நுழைந்தவளின் பார்வை சோபாவில் அமர்ந்திருந்தவரின் மேல் 'எதிர்பார்த்தேன்...' என்பதை போல் விழுந்தது...
அவரோ தன் எதிரில் நிற்பவளை ஏளன புன்னகையுடன் பார்த்துவிட்டு முகிலின் பின்னால் நின்றவனை கண்டிப்போடு பார்த்தார். அந்த பார்வையே 'அவள் உள்ளே வரும் வரை என்ன பண்ணிட்டு இருந்த?...' எனக் கேட்காமல் கேட்டது.
தன் எஜமானரின் கண்டிப்பு பார்வையை புரிந்து கொண்டவன்
சட்டென முகிலை பின்னாலிருந்த தாக்க முற்பட அவளோ எக்கி தன் பின்னால் நின்றவனை தன் ஹை ஹில்ஸ் கால்களால் உதைத்திருந்தாள். சரியாக படவேண்டிய இடத்தில் இவளின் ஹை ஹில்ஸ் பட்டிருக்க சுருண்டு விழுந்தான்.
அவன் சுருண்டு விழுந்ததும் அடுத்தடுத்த வந்த இரண்டு ஆடவர்களும் அவளை தாக்க முற்பட இருவருக்கும் அவளின் ஹை ஹில்ஸ் தான் பதில் கூறியது... மூவரையும் சில நிமிடங்களில் வீழ்த்தி விட்டு இதழில் இகழ்ச்சி சிரிப்போடு அவனுக்கு எதிரிலிருந்த இருக்கையில் கால் மேல் கால் போட்டு நிமிர்ந்து அமர்ந்தாள்.
அவளின் அந்த நிமிர்வும் ஆளைத் துளைக்கும் பார்வையும் சோழ நாட்டின் இளவரசி, வல்லவராயன் வந்தியத்தேவனின் பட்டத்து ராணி குந்தவை நாச்சியாரை நினைவு படுத்தியது என்றால் மிகையாகாது... அவளின் அந்த நிமிர்வும் துடுக்கான பார்வையும் எதிரில் அமர்ந்திருந்தவனுக்கு இன்னும் சுவாரஸ்யத்தை கொடுக்க
"ம்ம் தைரியம் தான்..." என மெச்சுதலாக கூறினார்..
"பின்னே படத்துல வர மாதிரி மூடின கதவையும், உங்களையும் மாறி மாறி பார்த்து ஐயோ என்னை விட்ருங்கன்னு கதறுவேன்னு நினைச்சீங்களா? இல்லை சீரியல்ல வர மாதிரி ஆண்டவா என்னை காப்பாற்றுன்னு கடவுளை கூப்பிடுவேன் நினைச்சீங்களா..." நக்கலாக கேட்டவள் தன் நெற்றியில் முத்தமிட்டு கொண்டிருந்த கற்றை கூந்தலை கோதிக் கொண்டே "சாதாரண பொம்பளை புள்ளை இவளால என்ன பண்ணிட முடியுன்னு நினைச்சீட்டிங்களா..." என கேட்டாள்.
அதற்கு எதிரில் இருந்தவரிடம் பதில் இல்லை..நன்றாக பின்னால் சாய்ந்து இவளை அமைதியாக பார்த்தார்..
அவரின் உணர்ச்சி துடைத்த முகத்தை ஏளன நகைப்புடன் பார்த்தவள் "வெறும் நாலு அடியாளை பார்த்து பயப்பட நான் ஒன்னும் சாதாரண விளம்பர மாடல் நறுமுகிலில்லை... ருத்ரா.. ருத்ர நாச்சியா... செல்வத்தோட புள்ளை ருத்ர நாச்சியா..."கர்ஜித்தப்படி எழுந்து நின்றவள்
"உங்களை ஏவி விட்டவங்க கிட்டப் போயி இதை விட பெட்டர் ஐடியாவா யோசிக்க சொல்லுங்க..." எனக் கூறிய நொடி முதுகில் சுள்ளென்றே வலியை உணர்ந்தாள்.
இப்போது சோபாவில் அமர்ந்திருந்தவரின் முகத்தில் வெற்றி சிரிப்பு தோன்றியது... பற்களை கடித்தபடி திரும்பி முதுகில் குத்திய ஊசியையும் எதிரில் நின்ற கையாளையும் மாறி மாறி பார்த்தவள் கண்ணிமைக்கும் நேரத்தில் எதிரில் நின்றவனை வீழ்த்தி... சோபாவில் வெற்றி சிரிப்பை உதிர்த்தப்படி அமர்ந்திருந்தவரிடம் திரும்பி
"ஆம்பளை தானே நீங்க.." எனக் கேட்கவும் செய்தாள்.
அவள் அப்படி கேட்கவும் பொறுமையாக சோபாவிலிருந்து எழுந்து முகிலை நெருங்கி வந்தவர் "நிரூபிக்க வேணுமா..." என்றார் மெல்லிய குரலில்... அவரின் இந்த பேச்சு அவளுக்கு எரிச்சலை கொடுத்தது அவரின் மூச்சு காற்று கூட தீண்டாத அளவிற்கு சிறு தடுமாற்றத்துடனே பின்னால் நகர்ந்தாள்.
அவளின் தடுமாற்றத்தை ரசித்து பார்த்தவர் வாய்விட்டு சிரித்தப்படி
"ருத்ரா, ருத்ர நாச்சியா... ஹாஹா.. ஹாஹா... பேசு இப்ப பேசு ஏதோ நாடக பாணியிலா பினாத்திட்டிருந்தியே இப்ப பேசு.. அதே கம்பீரத்தோட, திமிரோட, கெத்தா இப்ப பேசு பாக்கலாம்..." என படு நக்கலாக கேட்டு மீண்டும்
"இன்னும் கொஞ்ச நேரத்தில இந்த திமிர், ஆணவம் எல்லாத்தையும் உன்னோட சேர்த்து அழிக்க போறேன்.." என்றார் அவளைக் குரூரமாக பார்த்துக்கொண்டே,
"வெரி சிம்பல், பிரபல விளம்பர மாடல் போதையில் தூக்கிட்டு தற்கொலைங்கற செய்தி தீயா பரவ போகுது.." என்றவன் மேலும் நக்கல் தொனியோடு.
"எப்படின்னு நினைக்கிறாயா?? நான் எங்க சூசைட் பண்ணிக்கிறதா சொன்னான்னு யோசிகிறியா?
உனக்கு போட்ட இன்ஜெக்சன் இருக்கில்ல, இன்ஜெக்சன் அது நார்மல் அணேசத்தேடிக் இன்ஜெக்ஷன்னு (மயக்க ஊசி) நினைச்சியா. ட்ரக் இஞ்ஜெக்சன்... அதை போட்ட அடுத்த செகண்ட்ல இருந்து கொஞ்சம் கொஞ்சமா போதை உன் தலைக்கு ஏறும்... அதுக்கு அப்பறம் நான் சொன்னது தன்னாலேயே நடக்கும்..." எனக் கூறியபடி அவளை மேலும் நெருங்கி சென்றார்
அவன் தன்னை நெருங்கி வருகிறார் என மனம் எச்சரிக்கைக் கொடுத்தாலும் உடல் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை... தலை பலமாக சுற்றியது ஒருமுறை தலையை பலமாக உலுக்கி நிமிர்ந்தவள் கண்ணிமைக்கும் நேரம் எதிரில் நின்றவரை பலம் கண்டு தள்ளி விட்டாள்...
அவளிருக்கும் நிலையில் தன் விரலைக் கூட அசைக்க முடியாது என இருமாப்பில் நின்றிருந்தவர் அவளின் திடீர் செய்கையில் மல்லாக்க விழுந்தார். விழுந்ததில் பின்னந்தலையில் அடிபட்டு உடனே மயக்க நிலைக்கு தள்ளப்பட்டார்... இவளோ போதையில் சொருகிய சிவந்த கண்களுடன் அந்த அறையை விட்டு தள்ளாடியபடி வெளியேறினாள்.
முகில் அவ்வறையிலிருந்து வெளி வரவும் பிறை அங்கு வந்து நிற்கவும் சரியாக இருந்தது. தன் முன் நின்ற பிறையை சிவந்த விழிகளுடன் ஏறிட்டு பார்த்தவள் "உங்க பிளேன் சக்சஸ் ஆயிடுச்சா இல்லையான்னு பார்க்க வந்தீங்களா மிஸ்டர் பிறை? ஐ அம் சாரி டூ சே திஸ் உங்க பிளேன்..." என பெருவிரலை கீழாக காட்டி "அட்டு பிளாப்..." என போதைக் குரலில் கூறி முன்னால் நடந்தவள் பின் என்ன நினைத்தாளோ
"ஹான் சொல்ல மறந்துட்டேன்... நீங்க ஏவி விட்ட ஆளுங்கெல்லாம் உயிரோட ஹிம் இல்லை உயிரோட தான் இருப்பாங்க ஆனா உயிர் நாடி உயிரோட இருக்கான்னு தெரியல எதுக்கும் செக் பண்ணிக்க சொல்லுங்க..." என்றவள் மீண்டும் நடக்க துவங்கினாள்..
தன் மகளின் பேச்சில் பிறையின் இதழ்களில் புன்னகை மலர அதே புன்னகையுடன் அருகில் நின்றிருந்த தன் காட்ஷிடம் கண் காட்டிவிட்டு செல்லும் தன் மகளை பார்த்தார்...
அவளின் தள்ளாட்டம் பிறையின் கவனத்திற்கு பதியும் முன் அந்த தளத்தின் லிஃப்ட்டை நெருங்கி இருந்தாள். "குட்டி மா... அங்கேயே நில்லு அப்பா வரேன்..." எனக் கூற கூறவே அவள் லிப்டில் ஏறியிருக்க சற்றும் யோசிக்காமல் படியில் இறங்கினார் பிறை...
அவள் வந்த போது இருந்த கிளப்பிற்கும் செல்லும் போது இருக்கும் கிளப்பிற்கும் பல வித்தியாசங்கள் இருந்தது.. அது எதுவும் இவளின் கவனித்துக் கொள்ளவில்லை என்பதை விட கவனத்தில் பதியவில்லை என்பது தான் உண்மை... ஆம் கிளப் முழுக்க முழுக்க பிறையின் கட்டுபாட்டில் இருந்தது...
பிறை கீழ் இறங்கி வருவதற்குள் முகில் தன் வாகனத்தை உயிர்ப்பித்து இருந்தாள்...
"குட்டிமா... டோண்ட் மூவ்.. நீ ட்ரைவ் பண்ணாத அப்பா வரேன்..." என பிறை கத்தியதெல்லாம் துளியும் காதில் வாங்கி கொள்ளாமல் தன் வாகனத்தை ஓட்டி சென்றாள் முகில்...