எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

Thalam 4

subageetha

Moderator

(தெருவில் வாரானோ) 4

பல்லவி:

தெருவில் வாரானோ என்னை சற்றே திரும்பிப் பாரானோ (தெருவில்)

அனுபல்லவி

உருவிலியோடு திரிபுரத்தையும் உடன் எரி செய்த நடனராஜன் (தெருவில்)

சரணம் 1

வாசல் முன்னில்லானோ எனக்கொரு வாசகம் சொல்லானோ

நேசமாய் புல்லேனோ கழை வைத்த

ராசனை வெல்லேனோ தேசிகன் அம்பலவாண நடம் புரி

தேவாதி தேவன் சிதம்பர நாதன் (தெருவில்)

சரணம் 2

போது போகுதில்லையே எனக்கொரு

தூது சொல்வாரில்லையே

ஈதறிந்தேனில்லையே என்மேல் குற்றம் யாதொன்றுமில்லையே வேதனுமாலு-முவாயிரரும் சூழ விண்ணவரும் தொழ ஆடிய பாதன் (தெருவில்)

சரணம் 3

மெய்யென்றிருந்தேனே அவனிட சைகை அறிந்தேனே மையல் தணிந்தேனே பசத்திடு

மெய்யும் குளிர்ந்தேனே வையகமுய்ய பதஞ்சலி போற்றிட வாழும் கனகசபை நடராஜன்

(தெருவில்)

தன்னை மறந்து சுழன்று ஆடிக்கொண்டிருந்தாள் அபர்ணா. கால்களில் சலங்கை கட்டிக்கொண்டு ஆடுவதற்கு முழுவதும் இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது.

இப்போது இரண்டு நாட்களாக அகடமி வருகிறாள்.இன்னும் வகுப்புகள் எடுக்க ஆரம்பிக்கவில்லை. இவளது வகுப்புகள் செல்வா வசமே!எத்தனை நாட்கள் செல்வாம்பிக்கை தன் வேலைகளுடன் இதையும் பார்க்க முடியும்?

செல்வாம்பிகைக்கு தேர்வுகள் முடிந்து விட்டது. இன்னும் ஒரு பருவம் மட்டும் மிச்சம்.அவள் சிங்கப்பூர் செல்ல தன்னை தயார் செய்து கொண்டிருக்கிறாள். அனேகமாக அடுத்த வருஷம் இந்தியாவிலிருந்து அவள் அங்கே சென்றிருப்பாள்.

அன்றைய சம்பவத்திற்கு பிறகு ரகு இரண்டு முறை வந்தாயிற்று.தன் தகப்பன் தான் எனினும் செல்வாவால் அன்றைய சம்பவத்தை கடந்து வர இயலவில்லை.அருவருப்பில் அவள் கண்கள் கலங்குவது நிஜம்!

தன் அக்காவின் துணை இன்றி எப்படி இங்கே இருப்பது என்று இப்போதிலிருந்தே அபர்ணா தவிக்கிறாள்.

" செல்வாக்கா... ஒரு ரெண்டு வருஷம் இங்கேயே இரேன். நாம சேர்ந்தே இங்கேந்து கிளம்பலாம் "என்று தயக்கத்துடன் கேட்ட தங்கையை வெற்றுப் பார்வை பார்த்தாள் செல்வா.இப்போது வரை என்ன செய்ய வேண்டும் என்று தெளிவான முடிவுக்கு அவளால் வர முடியவில்லை.

வேலைக்கு ஏற்பாடு செய்பவர்கள் இரண்டு வருஷம் பொறுமை காக்கக் கூடுமோ?கிளம்பும் முன் அம்மாவிடம் இன்னும் கொஞ்சம் பேசியாக வேண்டும் ' என்று மட்டும் மனதில் குறித்து வைத்துக்கொண்டாள் செல்வா. அதிகாபட்சமாய் அவள் இங்கே இந்திய மண்ணில் இருக்கப் போவது மாதக்கணக்கில் எனும் பொழுது நிச்சயம் பேசித்தான் தீரவேண்டும். அபர்ணாவை அலைபேசியில் அழைத்தான் சந்திரா. மலேசியாவில் படத்தின் வெளியீட்டு விழாவை மிக பிரம்மாண்டாமாய் ஏற்பாடு செய்திருந்தார் தில்லை.

படத்தின் கதாநாயகன் - ரண்டு கதா நாயகிகள்,நகைச்சுவை நடிகர்கள் என குழுவின் அநேகர் செல்லும் பயணம்.

அபர்ணாவையும் அழைத்து செல்லவேண்டும் என்பது சந்திராவின் விருப்பம். அதற்கு தில்லையும் ஒப்புக்கொண்டார்.அபர்ணா ஆடியிருந்த பகுதியை எடிட் செய்யாமல் காட்சி அமைப்பை மட்டும் மாற்றி அவளது நடனமே திரையில் வருவதாக அமைத்து விட்டார் பட இயக்குனர்.

அபர்ணாவிடம் இது பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறான் சந்திர சூடன். ஆனால், அப்போது அப்பு இது பற்றி யோசிக்கும் நிலைமையில் இல்லை.

இப்போது மீண்டும் இது பற்றிய ஒரு பேச்சு. ம்ம்ம்... அவளிடம் பேச வேண்டும்.அவளது நடனம் வைப்பது என்றால் அவளுக்கு கொடுக்க வேண்டிய தொகையும் மாறும் தானே!

அபர்ணாவுக்கு அலைபேசியில் சந்திரா அழைக்க அவள் எடுக்கவில்லை. போன முறை பேசும்போது அவள் அகடமி செல்ல முடிவு செய்து இருப்பதாக சொன்னது ஞாபகம் வந்தது.

ஏற்கனவே கொடுத்திருக்கும் செக்குடன் இன்னொரு செக் எழுதி எடுத்துக்கொண்டு அபர்ணாவின் அகடமி நோக்கி சென்றான்.

அங்கே செல்லம்மா கிளம்பியிருக்க செல்வாவும், அபர்ணாவும் ரகு குடும்பம் பற்றிய தீவிரமான பேச்சில் இருந்தார்கள்.அபர்ணா கிட்டத்தட்ட அழுது கொண்டிருந்தாள். செல்வா முகம் இறுக தங்கையை பார்த்துக்கொண்டிருந்தாள்.

வெளியே இருந்து உள்ளே நுழைநத சந்திர சூடன் கண்ட காட்சி இதுதான்.

லேசாக இருவரின் உரையாடலும் அவன் காதுகளில் எட்டியிருக்க, தன்னையும் மீறி அவன் முகம் யோசனை ஆனது.அவன் எண்ணங்களில் ஆயிரம் கேள்விகள். 'இந்த பெண்களுக்கு அப்பா கிடையாதா'என்பதில் ஆரம்பம் ஆனது அவன் குழப்பங்கள்.

யாருக்கு என்ன ஆனால் என்ன? என்று விட்டேத்தியாய் அவனால் கடந்து போக முடியாமல் நெருடல்.தன் உணர்வுகளை முகத்தில் காண்பிக்காமல், மெல்ல உள்ளே நுழைந்தவன், " மே ஐ கம் இன் " என்று சற்று தாமதமாக அனுமதி கேட்டான்.

அவனது வருகையை எதிர்பார்த்து இராத பெண்கள் இருவருக்கும் மெல்லிய அதிர்ச்சி தான்!

அனேகமாக இந்த நேரத்திற்கு அகாடமியில் யாரும் வருவதில்லை. பெண்கள் இருவரும் கூட வகுப்புகள் முடிந்து வீட்டிற்கு கிளம்பும் நேரம் தான்.அக்கா இல்லாமல் இந்தியாவில் எப்படி சமாளிப்பது என்ற அபர்ணாவின் எண்ணம் தான் அவர்களின் இந்த உரையாடலுக்கு காரணம்.

செல்வாம்பிக்காவுக்கு தங்கையை தேற்றும் வகை தெரியாமல் தான் கையை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.முடிந்தால் தங்கையையும் கூட்டிக்கொண்டு செல்லும் எண்ணம் அவளுக்கு இருக்கிறது.

முதல் விஷயம் இருவருக்கும் ஒரே சமயத்தில் வேலை கிடைக்குமா?என்று தெரியவில்லை.போதா குறைக்கு அங்கே பி ஜி முடித்து இருக்க வேண்டும் என்கிறார்கள். அபர்ணாவின் தோழியின் அப்பாதான் ஏற்பாடு செய்து இருக்கிறார்.

முதலில் இருவரும் செல்ல முடிவாகி இருக்க, நிர்வாகம் தகுதியை நிர்ணயம் செய்ததில் வந்த மாற்றம்.சிங்கப்பூர் சென்ற பிறகும் வேலையில், ஏதேனும் பிரச்சனை வரும் என்றால் மீண்டும் இந்தியா வந்து அகாடமி தொடங்குவது என்பது சற்று கடினமான விஷயம். இருப்பதை தக்கவைத்துக் கொள்வது தான் புத்திசாலித்தனம். அதற்கு கொஞ்ச காலம் தங்கை இங்கு இருந்தாக வேண்டும்.

மொத்தமாக அகாடமியை மூடு விழா நடத்தி விட்டு செல்ல முடியாது. இவர்கள் இருவரும் இல்லை என்றால் செல்லம் அவருக்கு இதில் எல்லாம் பெரிய ஈடுபாடு இல்லை. ரகு அவருக்கு கொடுக்கும் பணமே, பாதிக்குமேல் செலவழியாமல் பேங்கில் தான் உறங்கிக் கொண்டிருக்கிறது. பெண்கள் இருவருக்காக தான் செல்லம்மா வகுப்புகள் எடுக்கிறாள்.

சரி, 'தான் இங்கு இருந்து கொண்டு தங்கையை வெளிநாட்டிற்கு அனுப்பலாம்' என்றால், தன்னை விட இளையவளான அபர்ணாவை மாத கணக்குகளில் அங்கே தனியாக விட்டு வைத்திருப்பதில் செல்வாவிற்கு உடன்பாடு இல்லை. செல்வாவை பொருத்தவரை அபர்ணா இன்னும் சின்ன குழந்தைதான். தகுதி அடிப்படையிலும் அபர்ணா இன்னுமும் வளர வேணும்.

பொறுப்புகளை தான்தான் சுமக்க வேண்டும் என்பதில் செல்வா, திடமாக இருக்கிறாள்.சந்திர சூடனின் குரல் கேட்டு பெண்கள் இருவருக்கும் தூக்கி வாரிப் போட்டது.இவர்கள் அருகில் அவன் வருவதற்குள் தங்கள் முக பாவத்தை மாற்றிக் கொண்டவர்களில் முதலில் உரையாடலை ஆரம்பித்து செல்வா "வாவ், இன்னிக்கு மழைதான் பெய்ய போகுது. இவ்ளோ பெரியமனுஷன் நம்ம இடம் தேடி வந்திருக்காங்க "இல்ல அபர்ணா? என்று தங்கையின் முகத்தை பார்த்தாள்.

செல்வாவின் குரலில் ஏனோ நக்கல் வழிந்தது, கூடவே பிடித்தமின்மையும். காரணம் ஒன்றும் பெரியதாக இல்லை.இரண்டு நாட்களுக்கு முன்பு, செய்தித்தாளில் சந்திராவின் புதிய பெண் தோழி என்று இப்போது வெளியாக இருக்கும் திரைப்பட கதாநாயகியும் இவனும் சேர்ந்து, நெருங்கி இருக்கும் புகைப்படத்துடன் செய்தி வந்திருந்தது.

செல்வாவின் மனதுள் ஏனோ இது மெல்லிய சலனத்தை உண்டாக்கி விட்டதோ?அக்காவின் குரலில் புரிந்து கொண்டது அபர்ணா மட்டுமல்ல. சந்திர சூடனுக்கும் அந்த குரலின் பேதம் புரிந்து விட்டது.

ஆனால் எதனால் என்ற காரணம் தான் புரியவில்லை.நிலைமையை சுமூகமாக்கும் எண்ணத்துடன் அபர்ணா மூவருக்கும் பிளாஸ்கில் இருந்து டீ ஊற்றி எடுத்து வந்தாள். டீ குடித்து முடிக்கும் வரையான ஒரு மௌனம் , மூவரது உணர்ச்சிகளையும் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டது.

தன் யோசனைகளை தூர வைத்த சந்திரா, பாகிலிருந்து அபர்ணாவுக்கான காசோலையை எடுத்துக் கொடுத்தான்.அதை கண்ட பெண்கள் இருவருக்கும் ஆச்சர்யம்.

'இது எதுக்கான செக்.. 'என்று ஆரம்பித்தவள் மீண்டும் செல்வா தான்.அவளுக்கு இன்னும் திரைப்படத்தில் அபர்ணாவின் நடனம் இடம் பெறப் போவது தெரியாதே!

அபர்ணாவுக்கும் முதலில் விஷயம் ஞாபகம் வரவில்லை. பிறகுதான் சற்றே அதிர்ந்தவள் 'தான்' இன்னும் இந்த விஷயத்தை வீட்டில் சொல்லவில்லை என தோன்ற மெல்லிய குரலில் தன் அக்காவிடம் சொல்ல ஆரம்பித்தாள்.முதலிலேயே சொல்லியிருந்திருக்க வேண்டும்.

எங்கிருந்து? ஷூட்டிங் முடிந்து வரும்பொழுதே காலில் அடிப்பட்டுதானே வந்தாள்... பிறகு இதுபற்றி மறந்தே போனாள்.இன்று சந்திராவின் வரவு நிச்சயம் எதிர்பாராதது.தங்கை எவ்வளவு சொன்னாலும் செல்வாவால் இதை ஒப்புக் கொள்ள முடியவில்லை.

" ஏன் அப்பு, முன்னமே சொல்லி இருந்திருக்கலாம். நாம ரன் பண்றது கிளாசிக்கல் டான்ஸ் அண்ட் கர்நாட்டிக் மியூசிக் சொல்லி தரும் அகடமி. இப்போ உன்னோட பேஸ் சினிமால வந்தா, நம்ம ரெப்ட்டேஷன் என்ன ஆகும்? யோசிச்சியா?"அக்காவின் கேள்வி அபர்ணாவை யோசிக்க வைத்தது என்றால் சந்திராவை கோவம் கொள்ள வைத்தது.

சினிமா துறையை பற்றிய செல்வாவின் கண்ணோட்டம் புரிந்ததில் வந்த கோவம்.

"லுக் மிஸ். செல்வாம்பிகா... இந்த காலத்துல சினிமா ல ஒரு சீன்ல முகம் தெரிஞ்சாலே பெரிய பாபுல்லரிட்டி கிடைக்குது. நிறைய ரியாலிட்டி ஷோ பண்றவங்க டார்கெட் பண்ணுறது பிக் ஸ்கிரீன் தான்.

இதுக்கு பிறகு உங்க லெவல் மாறிடும். அண்ட் அபர்ணாவுடைய பியூட்சர் ரொம்ப பிரைட்டா ஆகிடும். நோ டவுட். பட் உங்களுக்கு அதுதான் பிரச்சனையா.. என்று செல்வாவின் வார்த்தைகளுக்கு பொறாமை எனும் வர்ணம் பூசினான்.

அவன் முகத்தில் திருப்பிக் கொடுத்த திருப்தி. அதை கண்டவுடன். செல்வாவின் கோவம் மீற, " தென், நா இங்கே அதிகப்படின்னு நினைக்கிறேன்... நீ பூட்டி சாவியை எடுத்துகிட்டு வந்திரு "என்று அதற்கு மேல் அங்கே நிற்காமல் கிளம்பியும் விட்டாள்.

அபர்ணாவுக்குள் அக்கா தன்னை விட்டு செல்லும் உணர்வு மீண்டும் தலை தூக்க " நீங்க ரொம்பவே பேசிட்டிங்க சார்.. " என்று மனதில் நினைத்ததை சொல்லியும் விட்டாள்.சந்திரஸூடனுக்கும் தான் பேசியது அதிகம் என்று புரிந்தவன் " ஓகே, நா ஒரு டூ டேஸ் ல திரும்ப உனக்கு கால் பண்றேன் " என்றுவிட்டு கிளம்பினான்.

அவனுக்கு புரியவில்லை, செல்வாவுக்கும் தனக்கும் ஏன் எப்பொழுதும் ஏதாவது பிரச்சனை வருகிறது.. என் அந்தஸ்திற்கு அவளுடன்.. ச்சை.. என்று சலித்துக் கொண்டான்.

இதுவரை அவன் அந்தஸ்து என்றெல்லாம் யோசித்து பார்த்ததில்லை.எல்லோருடனும் அவனுக்கு சகஜமான உறவு உண்டு.அபர்ணாவுடன் அவனால் சாதாரணமாக பழக முடிகிறது. ஆனால், செல்வா?அவன் வாழ்க்கையில் இதுவரை இப்படிப்பட்ட உணர்வுகளை எதிர்கொண்டதில்லை.

சங்கடங்களை சந்திக்கதானே வேணும்?

 
Top