subageetha
Moderator
தோடி இராகம் 5
ஜம்பை தாளம்
பல்லவி
அம்பர சிதம்பர சதானந்த
அடிகள் மறவாதருளும் அனு இனமூமே [அம்பர]
அனுபல்லவி
செம்பொன் மலைச் சலைவளைத்த தஇவ்விய பரமானந்த
சம்போ சிவசங்கர ஸ்ரீதாண்டவ நடேசா
அம்பர
சரணம்
கங்கை மதி அரவசைய காதில் குழைஅசைய
செங்கைமழு துடிஅசைய செய்ய ஜடைஅசைய
பொங்குபுலி பதளசைய பொற்பாதச் சிலம்பசைய
மங்கைசவ காமவல்லி மழ நடம்புரியும்
[அம்பர]
தின்மல நிராலம்ப நிர்க்குண நிரஞ்சன
ஏன்மயானந்த பர சிற்க்குண சொரூபா!
வன் மலங்கள் நீக்கெருள் வாரியுரவே
எனது புன்மையற உமைக்காணப் பொதுவில் நடம்புரியும்
அம்பர
துங்கமறை ஆகமங்கள் சொன்னவிதி வழுவாமா?
ஏங்கார மாமகங்கள் செய்து தனந்தினமும்
மங்காத. நீறுபுனை வைதிக மூவாயிரவர்
நங்கோ வென்றே பரவநாளும் நடம்புரியும் [அம்பர]
செல்வாம்பிக்கை தன்னை மறந்து பாடிகொண்டிருக்க, அபர்ணா ஆடிக்கொண்டு இருந்தாள்.
இந்த வாரம் வெள்ளி அன்று அவளது பிராக்டிகல் தேர்வு இருக்கிறது. அதில் அவள் ஆடிக்காட்ட வேண்டியதை தான் இப்போது பயிற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
எப்போதும் இன்னிகழ்வு நடப்பது தான். அபர்ணாவின் முன்னேற்றத்திற்கு தன்னால் ஆன எல்லாவற்றையும் செய்பவள் செல்வா.
செல்லம்மாவை விட அப்பு அதிகம் தேடுவது செல்வாவை தான்.
அதனாலேயே தங்கை மீது உரிமை உணர்வும் செல்வாவுக்கு அதிகம் உண்டு.
ஆனால், அபர்ணாவின் சினிமாவில் அவளது நடனம் குறித்த விஷயங்கள் செல்வா அவளை வாயை திறக்காமல் அழுத்தியது.
சந்திரசூடன் பேசியவற்றை ஆமோதிப்பது போல் தங்கை வாயை மூடி இருந்ததை செல்வாவால் தாங்க முடியாது போனது.
'எனில் எனக்கு அபர்ணா மீது பொறாமை இருப்பதாக அவளும் நம்புகிறாள் என்று தானே அர்த்தம் ஆகிறது.'
'இனி எந்த காரணத்தை கொண்டும் அபர்ணாவின் விஷயங்களில் அதிக கவனத்தை செலுத்த வேண்டாம். எப்படியும் அவளுக்கும் இன்னும் ஒரு மாதம் கடந்தால் இருபது வயது ஆகிறது. இனி அவளது முடிவுகளை அவளே எடுக்கட்டும்.'
அவளுக்கொரு தேவை என்றால் உதவுவதற்கு அம்மாவும் இருக்கிறார்கள் தானே! 'என்றெல்லாம் தனக்குத்தானே உரு போட்டுக் கொண்டாள்.
அபர்ணா மனதிலும் குற்ற உணர்ச்சி. சந்திரசூடன் பேசியவற்றிற்கு அன்றே எதிர்வினை ஆற்றி இருக்க வேண்டும். அமைதியாக இருந்தது எவ்வளவு பெரிய தவறு?
அக்கா சொல்வதும் நிஜம் தானே! ஒருமுறை சினிமா நடிகை என்ற முத்திரை வந்துவிட்டால் அதிலிருந்து வெளியேறுவது மிகவும் கடினமாகிவிடும்.
ஏற்கனவே குடும்ப அளவில் பெரிய பிரச்சனைகள் அவர்களுக்கு உண்டு. அப்பா இருந்தும் இல்லாத நிலை. அம்மாவோ தனது வாழ்க்கைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் அளவிற்கு எங்கள் இருவரின் எதிர்காலம் பற்றிய யோசனைகளை முன் வைத்துக் கொள்ளாமல் நாட்களை கடத்திக் கொண்டிருக்கிறார்.
எல்லாவற்றிற்கும் விடையாகதானே அக்கா இந்த அகாடமி தொடங்கியது... இதோ இரண்டரை வருடங்கள் ஆகிவிட்டது. ஆரம்பித்த பொழுது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. வெறும் வாய்ப்பாட்டும் வீணையும் மட்டும் சொல்லித் தந்து கொண்டு இருந்தார்கள்.
இப்பொழுதோ கடந்த ஒரு வருஷமாக வாய்ப்பாட்டு, வீணை,அத்துடன் பரத நாட்டிய நடனம் என்று தொடங்கிய பிறகு வருமானம் நன்றாகவே வருகிறது.
அதை கெடுப்பது போன்ற எந்த விஷயத்தையும் அக்காவால் தாங்கிக் கொள்ள முடியாது.
நான் ஏன் அமைதியாக இருந்தேன்? என்று தன்னையே நொந்து கொண்டு இருந்தாள் அபர்ணா.
ஒரு பெரிய மௌன போராட்டம் அவர்கள் இடையில். ஆனாலும் எந்த விஷயத்திலும், விட்டுக் கொடுத்துவிட்டு இருப்பதற்கு அவர்கள் தயாராக இல்லை.
தான் மனதில் நினைத்துக் கொண்டதற்கு நேர் எதிராக தங்கையின் நடன பயிற்சிக்காக பாட்டு பாடி கொண்டிருக்கிறாள் மூத்தவள்.
மனக் குழப்பத்தினாலோ என்னமோ, அபர்ணாவின் பாவம்,முத்திரை எல்லாவற்றிலும் தவறுகள் நடந்து கொண்டே இருந்தது.
இதைப் பார்த்த, செல்வாம்பிகைக்கு கோபம் தலைக்கேறியதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
" உன்னால ஒழுங்கா டான்ஸ் ஆட முடியலன்னா தயவுசெய்து என்னுடைய வேலையை கெடுக்காத அப்பு. ஒரு தடவை சினிமாவுக்கு போனா இதுதான் பிரச்சனை. நம்மளுடைய எல்லா தினசரி வழக்கமும் மாறிடும். இத நான் எடுத்து சொன்னா ஒருத்தன் வந்து உனக்கு பொறாமைன்னு பேசுவான். நீ வாய மூடிக்கிட்டு கேட்டுட்டு இருப்ப. அவனையே வந்து உனக்காக பாட சொல்ல வேண்டியது தானே... யூஸ்லெஸ் ஃபெல்லோஸ் " என்று கத்திவிட்டு, தனது அறைக்குள் சென்று விட்டாள்.
எப்பொழுதாவது செல்வாம்பிகை இளையவளை திட்டுவது தான். ஆனால் இன்று சந்திரசூடனால் இந்த நிகழ்வு.
அபர்ணா அழுது கொண்டே இருந்தாள். தான் செய்தது தவறு என்று அவளுக்கு தெரியாமல் இல்லை.
அதற்கு பரிகாரம்,பிராயசித்தம் தான் என்ன என்று அவளுக்கு புரியவில்லை.
சந்திர சூடன் கொடுத்து விட்டு சென்ற செக் இன்னும் வெளியே எடுக்கப்படாமல் அவளது ஹேண்ட் பேக்கில் தான் இருக்கிறது.
இந்த விஷயங்களை கையால் அளவிற்கு அவளுக்கு வயதும், பக்குவமும் இல்லை. இந்த நிமிடம் வரை அக்காவின் கைப்பிடித்து நடக்கும் குழந்தையாக தான் இருக்கிறாள்.
பலமுறை அபர்ணா சுய பரிசோதனைக்கு தன்னை ஆட்படுத்திக் கொண்டதும் உண்டு. ஆனால் முடிவில் அவளால் செல்வாம்பிகையின் துணை இல்லாமல் அந்த விஷயங்களை முடிக்க முடியாது.
அபர்ணாவுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து, செல்வா அதிக தைரியத்துடனும் நிமிர்வுடனும் தான் இருக்கிறாள்.
" எனக்கு அக்கா மாதிரி இருக்க முடியல.எப்ப பாத்தாலும் நா ஏன் அக்கா என் கைய புடிச்சு கூட்டிட்டு போகணும்னு நினைக்கிறேன் " என்று யோசித்து களைத்து போன நாட்களும் கூட உண்டு.
சந்திரசூடன் பணத்திற்கான செக் கொடுத்தது அதில் ஒன்றும் தவறு இல்லை. சினிமாவில் அவள் நடனம் இடம்பெறுவது, செல்வாம்பிகை பற்றிய பேச்சை தவிர்த்து அவன் பேசிய மற்ற வார்த்தைகள் அவையெல்லாம் இன்றைய காலத்தில் நடைமுறைக்கு ஒத்தவைதான்.
ஆனால் அக்காவின் மனதில் என்ன இருக்கிறது என்பதுதான்.
அத்துடன் சந்திரனுக்கு ஏன் அக்காவை கண்டால் பிடிக்கவில்லை?
இருவரும் இதுவரை சரியான முறையில் பேசிக்கொண்டு அப்பு பார்த்ததில்லை.
இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர் கோபமும் வெறுப்பும். பார்த்த நொடி முதல் இப்படித்தான்!
அக்கா சந்திராவிற்கு எதிராக ஒரு வார்த்தையும் பேசியதில்லை, அவனைப் பற்றி தவறாக சித்தரிப்பதும் இல்லை.
இன்னும் சொல்லப்போனால் அவனை ஒரு பொருளாக எடுத்துப் பேசியதே இல்லை.
சந்திராவிற்கு ஏன் இவ்வாறு தோன்றுகிறது?என் அக்காவை பற்றி அவன் என்ன அறிந்து கொண்டிருக்கிறான் ?இது பற்றி அடுத்த முறை பார்க்கும் பொழுது சந்திர சூடனிடம் தீர்மானமாக பேசிவிட வேண்டும் என்றும் மனதிற்குள் குறித்துக் கொண்டாள் அபர்ணா.
அறைக்குள் சென்ற செல்வாம்பிக்கைக்கும் மனது கேட்கவில்லை. சற்றே தன்னை நிதானம் செய்து கொண்டு வெளியே வந்தவள், அபர்ணா இன்னும் அதே இடத்தில் நின்று கொண்டிருப்பதை பார்த்து தவித்துப் போனாள்.
" இட்ஸ் ஓகே விடு அப்பு. நீ சரியா ஆடலங்குற கோவத்துல பேசிட்டேன். அதோட நீ நம்முடைய குடும்ப பின்புலத்தையும் யோசிக்கணும். நமக்கு ஒரு பிரச்சனைனா நம்மள காப்பாத்தவும்
யாரும் இல்ல. இதுதான நிதர்சனம்.
ஏற்கனவே பாட்டு டான்சுன்னு சுத்துறீங்களான்னு ஒரு சிலர் பேசுறாங்க. நம்முடைய கேரியர் நமக்கு முக்கியம். "
"ஏதாவது ஒரு இடத்துல சறுக்கினாலும், பிறகு நாம்ம நிலைமை என்னனு உனக்கே தெரியும்.ம்ம்ம்..தெரியும் தானே அப்பு " என்று கேட்டவள், ' எனக்கு மனசு கொஞ்சமும் சரியில்ல, நான் என்னோட பிரெண்ட்ஸ்சை மீட் பண்ணிட்டு வரேன். நீ மனசை வேற எதுலயாவது போகஸ் பண்ணு " என்று விட்டு அவ்விடம் அகன்றாள்.
அக்கா சொல்வதில் இருக்கும் நிஜம் சுட , இனி அகாடமியில் மட்டும் கலையை வளர்க்கலாம்' என்று முடிவு செய்து கொண்டாள் அபர்ணா.
ஆனால், அவளது தீர்மானம் அந்த வாரம் சனிக்கிழமையில் சந்திர சூடானை பார்க்கும் வரைதான் நிலைத்து இருந்தது.
சந்திராவின் பேச்சு சாமர்த்தியம் அலாதி. அவனுக்கு நன்றாக தெரியும், எப்படி பேசினால் கனியும் என்று.
தெரியாமலா அவன் அப்பாவுடன் சேர்ந்து திரை துறையில். நீடித்து இருக்கிறான்?
" பாருங்க அபர்ணா... உங்க அக்கா இன்னும் அப்டேட் ஆகலன்னு நினைக்கிறேன். இன்னிக்கு இருக்குற கம்பெட்டிஷன்ல நம்ம திறமைய நாம தான் சேல் பண்ணிக்கணும்.
ஒரே ஒரு பாட்டுக்கு உங்களுடைய டான்ஸ் வர்றது தப்புன்னு நீங்க நினைக்கிறீங்களா? "
அவனது பேச்சில் ஏதோ ஒரு நியாயம் தென்பட்டது. அது ஒன்றே அபர்ணாவை சமாதானம் செய்ய போதுமானதாக இருந்து விட்டது.
மெல்லமாய் திரைப்பட வெளியீட்டு விழாவிற்கும் அவள் வரவேண்டும் என்று வற்புறுத்த தொடங்கினான் சந்திரசூடன்.
தில்லைநாதன் அவளும் மலேசியா வந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார் தான்.
ஆனால் கண்டிப்பாக வரவேண்டும் என்று அவர் ஒன்றும் வற்புறுத்தி சொல்லவில்லை.
செல்வாம்பிகையின் உடனான கடைசி சந்திப்பு தான், சந்திர சூடனை அபர்ணாவிடம் வற்புறுத்தி பேசச் செய்தது.
ஏதாவது ஒரு வகையில் செல்வாம்பிகையை தோற்கடிக்க செய்ய வேண்டும் என்ற வேகம்.
அவன் கண்ட முறையில், அவளது ஒரே பலவீனம் தங்கை அபர்ணா தான்!
அவனது இந்த செய்கை குழந்தைத்தனமாக தோன்றினாலும், அதற்குள் அவனது கோவம் மறைந்து தானே இருக்கிறது. இந்த விஷயம் செல்வாவை எந்த விதத்திலும் பாதிக்கப் போவதில்லை. மாறாக இன்னும் குழந்தை மனம் கொண்டிருக்கும் பக்குவப்படாத அபர்ணா சிக்கிக் கொள்வாள்.
சந்திர சூடனிடம் அதிகம் பழக்கம் இல்லாத நிலையில் அபர்ணா இன்னும் கொஞ்சம் யோசித்து இருக்க வேண்டும்.
"ம்ம்ம்.. மலேசியா வர்றது எல்லாம் அக்கா ஒத்துக்க மாட்டாங்க. அவங்களுக்கு இதெல்லாம் பிடிக்கவும் பிடிக்காது. இன்னும் சொல்லணும் னா அக்காவுக்கு சினிமாவே பிடிக்காது. சோ நான் வரது நிச்சயம் இல்லை.
அக்காவோட இஷ்டத்துக்கு மாறா நடக்க மாட்டேன்." என்றவளிடம்
" சொல்றத சொல்லிட்டேன். இது உன்னோட சாய்ஸ் உன் கேரியர். சோ யு ஹவ் டு டிசைட். என்ன பொறுத்த வரைக்கும் நீ உங்க அக்காவுக்கு எக்ஸ்பிளைன் பண்ணி பார்க்கலாம். நீயே என் முடிவு பண்ற " என மறைமுகமாக அவளை தூண்டி விட்டு, அங்கிருந்து கிளம்பி விட்டான் சந்திரசூடன்.
இன்னும் செக் டெபாசிட் செய்யப்படவில்லை என்பது அவனுக்குள் இன்னும் கோபத்தை விசிறிவிடச் செய்திருந்தது.
அன்று செல்வாவும் அபர்ணாவும் பேசிக் கொண்டிருந்ததை வைத்து ஏதோ பெரிய பிரச்சனை அவர்களது குடும்பத்தில் இருக்கிறது என்பது வரை புரிந்து கொண்டான். ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி மூலம் அவர்களது நிலைமை பற்றி விசாரிக்க செய்தவன், தனக்குள் சிரித்துக் கொண்டான்.
அவன் மனதில், இவ்வளவு மோசமான நிலைமைய வச்சுக்கிட்டு என்கிட்ட திமிரா நடந்துக்கு இந்த பொண்ணுக்கு எவ்வளவு தைரியம். இதை இப்படியே விட்டு வைக்க கூடாது. என்று செல்வா மீது கோபத்தை வளர்த்துக் கொண்டான்.
ஆனால், அவன் உயரம் வேறு. சாதாரண செல்வா ஏணி வைத்தால் கூட எட்ட முடியாது. அவளது வயது, அனுபவம் எல்லாமே குறைவு தான். செல்வா என்னும் பெண்ணை அவன் கடந்து போயிருக்க வேண்டும். இதை எதற்கு இவ்வளவு சீரியசாக எடுத்துக் கொள்கிறான் என்று தெரியவில்லை.