uma Karthik
Moderator


தொலைதூரம் வெறும் கால்களில் நடந்து வந்தவன். சேரக்கூடாத இடத்திற்கு வந்து.. மது பாட்டிலை வெறித்து பார்த்துக் கொண்டே...
சிந்தனையில் மூழ்கினான்..
' யாரோ..? சொல்வதை நான் ஏன் நம்ப வேண்டும். ? ? ' தன்னிடமே கேட்டவனுக்கு.. மெல்ல தெளிவு வர !! 'அவள் எனக்கானவள். அந்த கிழவன் ஏதோ.. கடுப்புல இப்படி எல்லாம் கிளப்பி விடுறான். போய் நேரா மாட்டிவிட்டு.. வேலைய காலி பண்றேன்.. சரியான வில்லன் தாத்தா.. என் பிரதி.. எனக்கு துரோகம் பண்ணுவாளா.? இந்த சுர்..ர்...ர்..னு வர்ற கோபத்தை விட்டாலே பாதி பிரச்சனை வராதுடா.. ப்ரீத்.. கோபத்த குறை டா.. சுய அட்வைஸ் செய்து தன்னயே திட்டி . பாட்டிலை பார்க்காதே.. பிரதி அங்கே காணமல் தேடுவாள் என்று மனம் அறிவுறுத்த.. எழுந்தவன். முன் இரு நண்பர்கள் நகர விடாமல்.. பேசிக் கொண்டே நிற்க..! மீண்டும் சேரில் அமர்ந்தவன்.. காதில் விழுந்தது.. !!
" டேய்.. அருணு வர.. வர.. ரூம்க்கு வர்றதில்லை போல.!! அந்த ஹச் ஆர் கூட மீட்டிங் ஆ.. " நக்கல் குரலில் கேட்க ?
" மீட்டிங் மட்டும் இல்ல. மேட்டிங் ..ம்... தான்.!! " வெட்கத்தோட சொல்ல.
" கிழவியை கூட விடுறது இல்லை. " தலையில் அடித்துக் கொண்டான் நண்பன்.
" டேய்.. சீ.. அத சொல்லலை. டா.. நம்ம எம்.டி மேடத்தை சொன்னேன். "என்றான் காலரை தூக்கிவிட்டு.
கேட்டதும் குபீர் என்று சிரித்தவன்" யாரு .. நம்ம மேடமா.. உன்னை வீட்டுக்குள்ளேயே விடாம நாய் கூட சேர்த்து, நிக்க வச்சு கையெழுத்து போட்டு அனுப்புறதா கேள்விப்பட்டேன். ? " என்றான் நண்பனை கேவலமாக ஒரு பார்வை பார்த்து.
அவமானம் ஆண் மகனுக்கு தன்மானம் சீற. அப்படி தானே திமிர் பிடித்தவள் நிக்கவும் வைத்தால்..!! உன் எல்லை இது தான் என்று.!! அவமானத்தில் முகம் இறுகிட " நான் பிரதிக்ஷா வ கரெக்ட் பன்னிட்டேன். எவனையோ லவ் பன்னி ஏமாந்துட்டா போல..!! ஆறுதல் சொன்னேன். அவளுக்கும் எனக்கும் பத்திகிச்சு. " பேண்ட் பாக்கெட்டில் கை விட்டு..தெனாவட்டாக நண்பனை பார்த்து கர்வமாய் நகைத்தவன்.
தன் கனவில் கூட அடைய முடியாத ஒருத்தியை . பொய்யாக அடைந்ததாய் தம்பட்டம் அடித்துக் கொள்வது கூட அத்தனை கர்வத்தை கொடுக்க.!! கற்பனை கதைகள் கட்டவிழ்க்கப் பட்டன.!!
" லவ் ஃபெயிலியர் ஆன பொண்ணுங்கள மடக்குறது ரொம்ப ஈஸி டா . உன் மாதிரி அழகான நல்ல பொண்ணு, என்ன மாதிரி உண்மையான லவ் பண்றவங்களுக்கு கிடைக்க மாட்டேங்குதுன்னு சீன் போட்டா போதும். அப்படியே நம்பி ஏமாந்தருவாள்க.!! டா .. அவளும் பெண்தானே..!! நக்கல் அடித்து சிரித்தான். அருண்
" நிஜமாவா...டா ? " வாயை பிளந்து வயித்தெரிச்சல் பட்டு கேட்டான். " பெண்களை மயக்குவது பிழைப்பாக வைத்திருப்பவன் கையில் .. சிக்கி விட்டாளா?? என்ற சந்தேகம் வலுத்தது.
" கல்யாணம் பன்னுற அளவு போயாச்சு.. லிவ் இன் ல இருக்கோம். " திமிரான குரலில் சொன்னான்..
அருண்குமார்
" போடா.. லவ் கூட ஓகே.. உன் போய் அவங்க கல்யாணம்..? வாய்பில்லை ராஜா."
" அப்படியா.?? தினமும் நைட்டு ஒன்னா தாண்டா இருக்கோம். " அழுத்தமாக சொன்னான். அருண். நண்பனை தன் பொய்யை நம்ப வைக்க!! அருகே அவள் காதலன் கொலை வெறியோடு முடிக்கட்டும்.. என அமர்ந்து இருப்பது தெரியாமல். ??
" வாயால என்ன வேணா சொல்லலாம் சாட்சி. ?? ரெண்டு பேரும் சேர்ந்து இருக்குற ஒரு போட்டோவை காட்டு ஒத்துக்கிறேன். " என்றதும் சிரித்து மலுப்பினான். அருண்
" இப்ப என்ன உனக்கு சாட்சி தானே வேணும். பிரதிக்ஷா ஆதி கேசவன் மேடம்க்கு இங்க ஒரு மச்சம் இருக்கும். " கையால் அவன் நடு நெஞ்சிலே கை பதிக்க..
" டேய்..சீ.. என்று துள்ளியவனை பார்த்து
" அவளும் இப்படி தான் குதிப்பா.. நான் தொட்டா.!! " என்று பொய்யாய் வெட்கம் கொண்டு கைகளால் முகத்தை முடியவன். வாங்க வேண்டிய பாட்டிலை கடைப்பையன் தரவும். கையில் பிடித்தவாறு வெளியே நடக்க..!!
பெண்கள் மீது மட்டும் கைகளால் தன் வீரத்தை காட்டும். வீரமான ஆண்மகன் கண் முன்னே இருந்த பாட்டிலை திறந்து ராவாக வாயில் சரித்தான்.
'கொண்டவனுக்கு தெரியும். அல்லவா? கோதையின் அங்கங்கள்.!!'
அவளின் கெட்ட நேரம்.. நிஜத்திலும் அவளுக்கு அப்படி ஒரு மச்சம் இருக்க.!! சந்தேகப்படவோ ??? தவறாக புரிந்து கொள்ளவோ ?? நம் நாயகனுக்கு சொல்லியா தர வேண்டும்.!! அவன் சொன்னது எல்லாவற்றையும் கற்பனையில் காட்சிப்படுத்தி போதையோடு வெறுப்பையும் ஏற்றுக் கொண்டான். தன்னவள் மீது தீராத கோபத்தோடு இவன் செய்ய போகும் வதைகளை தாங்குவாளா பிரதிக்ஷா ??
சந்தேகத்தில் தோய்ந்த கத்தியாய் காதலியின் உயிரோடு உணர்வையும் ஒரு சேர கொன்றிட வீடு நோக்கி பயணித்தான் அவளை தேடி..!!
இங்கு குளித்து வந்தவள்..தலையை கூட உலர்த்தாமல். வீடு முழுவதும் அவனைத் தேடி அலைந்து.. வெளியே சென்று இருப்பது தெரிய வர.. ஈரமான முடியிலிருந்து துளித்துளியாய்.. நீர் வடிய .. வாசலில் பார்வை பதித்து. தன்னவனுக்காக காத்திருப்போடு அங்கேயே அமர்ந்து விட்டாள்.. பிரதிக்ஷா .
அவளை கொன்று போட்டுவிடும் கோபத்தில் வந்தவன் போதையில் நிலை தடுமாற்றம்.. கொண்டு கால்கள்பின்னி பிணைந்து நடையிட்டான்.
தள்ளாடி நடந்து வருவதை பார்த்து. தான் செய்தது தான் சரி என சமாதானமானார். வயதில் மட்டும் பெரியவரான சிறிய மனிதர்.
வீடு முழுவதும் அவனைத் தேடி களைத்தவள். காதலன் வருவது கண்டதும்.. வேகமாக நடந்து தருமாறி விழ போனவனை தாங்கி பிடித்து நிற்க.
" பார்த்து.. நில்லுங்க.. என்ன பழக்கம் இது ? காலையிலயே குடிக்கிறது."
அக்கறையாக அவன் முகத்தை வருட போன கைகளை உதறியவன்.. ஈரம் சொட்டும் கூந்தலை வலது கையில் பற்றி முகத்திற்க்கு நேராய் இழுத்து பார்வையால் எடை போட்டு .
துரோகியாய் தன் முன் நிறுத்தி.. கேட்டான் கேள்வி அவளிடம்" ஏன் இப்படி துரோகம் பன்ன.. டி ? உறுத்தலையா? " மேலும் மேலும் பிடியை இறுக்கிட !! கண்ணீரே வந்துவிட்டது. வேதனையில் அவள் முகம் சுணக்க !! புருவம் இமை மீது படும்படி..வலியில் துடித்தாள். பிரதி.
" ஸ்... வலிக்குது விடுங்க.." இரு கைகளால் போராடுயும். அவன் பிடியை தளர்த்த முடியாமல்.. வலியில் கெஞ்சினால்.. பிரதி..
" வலிக்குது விடுங்க" என்று கத்தியதும். பிடியை தளர்த்தியவன்.
" வலிக்குதா.? " என்றான் எகத்தாளமாக நகைத்து
குடியின் பக்க விளைவு இது.. என்று நினைத்துக்கொண்டு
" இந்த அளவு குடிச்சா உடம்பு என்ன ஆகும். ?" அக்கறையோடு கேட்டாள்.
பாசமாக கேட்பவளை பார்த்து சத்தமாய் சிரித்தவன்.." ப்..பா... என்ன நடிப்பு..!! குடிக்காதீங்க உடம்பு என்ன ஆகும்.!! அக்கறை தாங்கல டி.. என்ன நடிப்பு.. நாடகம் நடத்தாத டி.. பிரதிக்ஷா .. உன் அப்பன பேரு ஏதோ.. சேர்த்து சொல்லுவியே ?? அவன் கோடி கோடியா பணம் வைச்சுட்டு போன திமிரு.. நான் பிச்சகாரனா?? சொல்லுடி.." என்றவன் கர்ஜனையோடு அவளிடம் அடியெடுத்து வைக்க. !! காதலன் தீயென நெருங்க .. தானாய் அவள் கால்கள பின்னோக்கி சென்றது. 'தாழ்வு மனப்பான்மையால் இப்படி எல்லாம் யோசிக்கிறார். போல?? என நினைத்து .பின்னால் நகரந்தவள் சுவரில் உடல் பதித்து மேல நகர முடியாமல் அப்படியே நின்றாள்.!!
" பணம் இல்லாதவன் மேல காதல் வராதா? என்ன பிடிக்கலையா?? நானா வா வந்தேன்.. நீ தானடி வந்த .. காதலிக்கிறதா... கம்பி கட்டுன . என் உயிரு.. ரு... மயிர் னு அளந்த ..! இப்ப கசந்துட்டனா? சொல்லுடி." சில நிமிட அமைதியுடன். இடைவெளி விட்டவன்.
வன்மையை தொடர்ந்தான் " அழகான பணக்காரன தான் பிடிக்குமா ? உண்மையா.. காதலிச்சேன்.. உன் கூட வாழ சாக கூட துணிச்சேன். ஏன்டி எனக்கு துரோகம் பன்ன? " ஒங்கி விட்ட அறையில் நிலை குழைந்து கீழே விழுந்தாள்.. காதலி. இரகமில்லாமல்
" வலிக்குதாடி.. எனக்கும் அப்படி தான் வலிக்குது. இப்ப சொல்றேன்.. எனக்கு நீ வேணா !! அதான் டி .. கடவுளே.. நம்ம கல்யாணத்த நடக்க விடலை.!! தப்பிச்சுட்டேன்..
என அவன் வாயால் சொன்னதை கேட்டதும்.
துடித்தாள்.. தப்பித்தேன் என்ற வார்த்தை.. காதல் கொண்டவளை உடைத்திட .!!
கண்ணீர் வரிகள்.. கன்னம் வழிய. வலியோடு அவன் முகம் பார்க்க.. !! அதற்குமே..!!
" நடிக்காதடி..!! இப்டி அழுது.. நடிச்சு தான்.. என் வாழ்க்கைய கெடுத்த..? இன்னும் நம்ப வைச்சு கழுத்தை அறுக்கனு ..மா.. மா..? வீடே அதிர அவன் கத்திய சத்தம் கேட்டு.. வாட்ச் மேன் தாத்தா.. ஒடி உள்ளே வர..வியர்த்துக் கொட்டியது.. அவருக்கு.!!
" என்னப்பா.. ரவுடி மாதிரி அராஜகம் பன்னுற ?? மேடம் யாருனு தெரியுமா?"
" மேடம்.. பத்தி. நல்லா தெரியுமே. !! ஒல்ட் மேன் .. உன் பாஷைல சொல்லனும்னா.!! என்ன மாதிரி பிச்சகாரன காதலிக்குறேன் னு சொல்லி.. ஏமாத்துவாங்க. விளக்கு பிடிக்குற.. காவல்காரனுக்கு தெரியாததா? மேடம் எப்படி னு..??"
வயதானவரை ப்ரீத் அவமதிப்பது பிடிக்காமல்.
" ப்ரீத்.. உங்க கோபத்தை எல்லாம் என்மேல காட்டுங்க. வயசானவங்கள மரியாதை இல்லாம பேசுறீங்க. " கடிந்து கொண்டாள்.
" அய்யோ... சாரி.. பெரியவா கிட்ட அப்படி பேசுனது தப்பு தான்..!! கால காட்டுங்க.. மொத்தமா விழுந்துகிறேன். நாக்கை துருத்தி.. மடித்து கடித்தவன்.. " தாத்தா.. சரியான... சில்லறை.. புத்தி.! ஆனா பெரிய ஆளு..!! செருப்பு வாங்க வக்கில்லாதவன். பிரதிக்ஷா ஆதி கேசவன் மேடம காதலிக்க.. தகுதி இருக்கானு கேட்ட பெரிய மனுஷன் ?? ஆமா..!! செருப்பால கூட ஸ்டேட்டஸ் வருமா.!! சொல்லுடி.. இல்லை என்னை கலட்டி விட இந்த கிழவன இப்படி பேச சொன்னியா? ஸ்டேட்டஸ் பாக்குறியாடி என்கிட்ட??
" இல்லைங்க..? இப்படி எல்லாம் இவங்க பேசுனது எனக்கு தெரியாது. நா..நா..ன்...ஸ்டேட்டஸ்" மேலே தொடர முடியாமல் கண்ணீரோடு மறுப்பாய் தலை அசைத்திட .!
" எல்லாருக்கும் நிழலா இருந்தவன்..டி..எனக்காக நான் வாழ்ந்ததே இல்லை.. உன்ன தான் டி. என் நிழலா.. என் உயிரா நெனச்சேன்.. நீயுமே.. என்ன ஏமாத்திட்டியே டி..?? வேகமாய்
தலையில் அடுத்துக் கொள்ள.!!
பொறுக்காது எழுந்து தடுக்க வந்தவளை பார்வையால் எரித்தவன். " தீடீர்னு என் மேல வந்த..அளவில்லா காதல்.!! ஒரு மாச பிரிவ கூட தாக்கு பிடிக்கல.?? அப்போ...?? " சந்தேக பார்வையில் கொன்றான்.. பிரதியை
" பவித்ரா.. என் காதலை வேண்டாம்னு சொன்னப்போ ..? அவ மேல எனக்கு கோபமோ !! வெறுப்போ வரலை. !! நான் தகுதி இல்லாதவன் அவள மாதிரி ஒரு பொண்ணு கிடைக்க.!! அதிஷ்டம் இல்லாதவன் நான்..!! அப்படி னு மட்டும் தான்.. இப்பவரை நினைக்கிறேன். நீயுமே நேரடியாவே.. என்ன வேணாம்னு சொல்லி இருக்கலாம்..! எனக்கு நீ செட் ஆகமாட்ட,நாம விலகிடலாம் னு நீ சொல்லி இருந்தாலாவது உன் மேல வெறுப்பு வராம இருந்து இருக்கும். யார் காதலுக்கும் தகுதி இல்லாதவன் னு என் மனசு ஆறி இருக்கும்..!!
என் இடத்த இன்னொருத்தனுக்கு தர எப்டி உன்னால முடிஞ்சது?? போன மாசம் வரை என்ன காதலிச்ச !! இந்த மாசம் வேற ஒருத்தன கல்யாணம் பண்ண போற ?? இந்த வீட்டு முதலாளி னு சொல்லி இருக்க.!!
என்ன இந்த பெரியவர், யார் டா.. நீ.. உள்ள போக கூடாது னு நாயை தொரத்துற மாதிரி விரட்டும் போது.!! அந்த சார.. காக்க வைக்காம சகல மாரியாதையோட உடனே உள்ள அனுப்ப ஆர்டர் போட்டு இருக்கீங்க மேடம்.. அவன் கூட தினமும்.. நைய்ட் எல்லாம்.. " பொறுக்க முடியாமல் .. ஆ.... என மதம் பிடித்தவனாய் அலறி .. கோபம் அடங்காமல் சுவற்றில் கையை மடக்கி ... வெறி தீரும்வரை ஓங்கி... குத்தியவன்.. குருதியில் கை நனைந்து வழிய..!! பேச்சை மேலும் தொடர்ந்தான்.
" நான் கெட்டவன் தான்.. டி.
என்ன வேண்டாம் னு விலகின பிறகு.. இன்னொருத்தனை உன் வாழ்க்கைக்குள்ள வர வைச்சு இருந்தினா.? எனக்கு இவ்வளவு வேதனை இருந்து இருக்காது.!! அதுலயும் காலையில ஒன்னு நடந்ததே.. நமக்குள்ள.!! நேத்து அவன். ? இன்னைக்கு நான்? அப்போ.. நாளைக்கு.?" யார்.. என்று கேள்வியாக புருவத்தை வளைக்க .. கூசி போனது அவள் உடல். இதுவரை ஏதோ போதையில் உளறுவதாய் .. நினைத்தவள்.. ஏதோ சதி நடந்து இருப்பதை கணித்தால். யாரோ இப்படி சொல்லி.. நம்ப வைத்து இருப்பார் என புரிந்தவளின் பொறுமையை சோதிக்க ஆரம்பித்தான்.. அசிங்கமான வார்த்தைகளை நா கூசாமல் பேசி..!!
" துணிய மாத்துற மாதிரி. துணைய , மாத்துறதுக்கு பேர் என்ன தெரியுமா.? நான் போதலையாடி உனக்கு..!! தினமும் வெரைட்டி ...யா " என முடியும் முன் அவன் கன்னம் அதிர்ந்தது பிரதி விட்ட அறையில் . எத்தனை வார்த்தைகள் தான் அவளும் பொறுப்பால் .. " மரியாதை கெட்டுடும் ப்ரீத்" கோபமா எச்சரிக்கை செய்தாள் பிரதி..
நாற்காலியை காலால் எட்டி உதைத்து தள்ளியவன். கோபத்தில் கொந்தளிததான்." நீ தப்பு பன்னிட்டு.. என்ன அடிக்கிறியா டி.? " நிதானம் இல்லாமல் அவள் கண், காது. கழுத்து. கன்னம். என்று கூட பார்க்காமல் .. அவன் கை இலக்கே இல்லாமல் கை போன வீச்சில்.. முரட்டு தனமாய் அறை விழுந்தது. அவனை காதலித்த பாவிக்கு. சுதாரிக்க நொடி நேரம் தராமல் விளாசிய அறையில் .!!
நிலை தடுமாறி டைனிங் டேபிள் மீது அரை மயக்கத்தில் காதலித்தவள். அடி தாங்காமல் சரிந்து விழ.. !!
ஆத்திரம் குறையாமல்.வெறி பிடித்தவனை போல் !! டைனிங் டேபிளில் மீது உள்ள திரையை வெறியோடு .. இழுத்து எறிய .!!
அதில் அடுக்கபட்டு இருந்த, பீங்கான் பொருட்கள் மொத்தமாக தரையில் விழுந்து சரியும் சத்தத்தோடு.. மயங்கி கிடந்தவள் தலையை தாங்கிய திரையை அரக்கன். தன் கையின் பலம் திரட்டி.. அழுத்தம் கொடுத்து உருவிட. !!
படாரென நெற்றி அந்த தேக்கு டைனிங் டேபிளில் மோதியது. சிறு கீறலோடு ரத்தம் கசிய.. !! ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போவதாய் மூளை எச்சரிக்கை செய்தது. தலையை உயர்த்தி.. ஹாலில் மாட்டுப்பட்டு இருந்த .. தாய் தந்தையின் முகத்தைப் பார்த்து கண்ணீர் விட்டவள்.. ' உங்க கூடவே பேசாம என்னை அழைச்சிட்டு போயிருந்திருக்கலாம். என்று குறைபட்டுக் கொண்டால். பெத்தவங்க இல்லாத பிள்ளைங்க வாழ்க்கை நரகம்..நீங்க இருந்து இருந்தா ?? இப்படி எல்லாம் என்ன ப்ரீத்.. அசிங்கமா ... பேச விட்டு இருக்க மாட்டீங்க இல்லப்பா..' என்று மானசிகமாக தந்தையிடம் கேட்டு கதறி அழ.. ஆரம்பித்தாள். பிரதிக்ஷா ஆதி கேசவன்.
அவள் செய்த துரோகத்தால் வந்த கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல். நின்றவன் கைக்கு நேராக மேசையில் கத்தி கண்ணில் பட.!! இந்த
காதல் கதையை இன்றோடு முடித்து விடலாம்.. என கத்தியை கையில் எடுத்தவன். சட்டைக்கு மேலே கூர்முனையை நெஞ்சில் நீவி ..பிரதியின் அருகில்.. கொண்டு வர..
நடப்பதை எல்லாம் பேய் அறைந்தது போல.! பார்த்து நடுங்கிக் கொண்டிருந்த பெரியவர்.இனிமேல் தாமதித்தால் ஏதாவது விபரீதம்.. நடந்து விடும் என்று பாதுகாவலர்களை அழைக்கலாம் .. என்று நகர,பார்வையால் எச்சரித்து ..கை காட்டி அடக்கி .. தடுத்து நிறுத்தியவள்.. சொல்லாமல். சொன்னால் ..! என்னை கொல்ல கூட உரிமை உள்ளவன்.. என் காதலன் என்று.!!
பாதுகாவலர்கள் நான்கு பேர் சேர்ந்தால்..அடித்து கொன்று விடுவார்கள். தன்னை மனதாலும்.. உடலாலும்... வதைத்தும் தாயாக தாங்கி.. நிற்கிறாள்.!! கொல்ல வரும் காதலனை !!
தன்னால்தான் இத்தனையும் நடக்கிறது என்ற குற்ற உணர்வு.நெஞ்சத்தில் சுருக்கிட்டது போல வலித்தது. கிழவனுக்கு !! அரக்கனாகி நிற்பவனை தடுக்க கூட ... அவருக்கு தைரியம் இல்லை. தன்னையும் சேர்த்து கொன்று விடுவான் என்ற பயம்.. எமனாக நிற்பவனை கண்டு..!! உயிர் பயம்.!! ஆண்டு அனுபவித்து நரைத் தொட்டு.. நிற்பவருக்கே உயிர் வெல்லமாக இருக்கும் போது.!! சலனம் இல்லாமல் சாவை எதிர் கொண்டு அசைவில்லாமல்.. !! நிற்பவர்களின் .. காதல் பிரம்மிப்பையே தந்தது.!!
பொய்யாய் தான் சொன்ன கதைகள்.ஒரு பெண்ணின் உயிரை காவு வாங்குவதை பார்த்து நொந்தவரால் கண்ணீர் தான்.. விட முடிந்தது. மிருகனை தடுக்கவும் முடியாது.
விசுவாசத்திற்காக போராடி சாகவும் முடியாது. வயதான ஆணுக்கு இருக்கும் சுயநலம். !! நடக்கப் போகும் ...கொலையை சாட்சியாக வேடிக்கை மட்டும் பார்த்தார்.
கடினப்பட்டு மேசையின் விழிம்பில் கை ஊன்றி எழுந்து நின்றவள்.
விழியில் பயமோ.. உயிருக்கு இறைஞ்சி துளி.. சலனம் கூட இல்லை.இமைக்காமல் பார்வையில் அவனை நிறைத்தவள் ' உன் சந்தேகத்தால் தினமும் சாகறதுக்கு. ஒரே தடவை மொத்தமா செத்துடுறது நிம்மதி தான். !! ' தீர்க்கமான அவள் பார்வை சொல்லாமல் சொன்னது.
துரோகம் செய்தவளுக்கு தண்டனை மரணம் தான்!! என நினைத்தவன் கைகளில் உள்ள ஆயுதம் ரத்தத்தோடு அவள் உயிரையும் குடிக்க பாய்ந்திட !!
அவளுக்கோ .. ஒரே ஒரு . வருத்தம் தான்.!! உயிர் போவதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. என்றைக்குமே தான் ஒழுக்கமானவள்..துளி கூட தன்னவனுக்கு துரோகம் செய்யாதவள் என்ற .. உண்மை மட்டும் இவனுக்கு தெரியக்கூடாது. ?? துரோகம் இழைத்தவளாகவே சாவுக்கு பிறகும் வெறுக்கட்டும். பரவாயில்லை. !! உண்மை கடைசி வரை தெரியாமல். இருக்க வேண்டும். அப்படித் தெரிந்தால் உயிரோடு இருக்க மாட்டான் தன் காதலன். இந்த தப்பானவள் பிம்பம் போகவே வேண்டாம்.!! என்று இல்லாத இறைவனை வேண்டியவள். வயிற்றில் கத்தி இறங்க !!குருதியோடு கண்ணீரும் வடிய .. குத்துவதற்காக அவள் அருகில் நின்றவனின் செவியை அடை
ந்தது அவளின் கடைசி வார்த்தை.
கொன்றாலும் என் காதல் தீராதடா என்று கண்ணீரோடு வலியில் உதடுகள் நடுங்க உதிர்த்தால் காதலை !! " ஐ வல் யூ.. ப்ரீத் .