எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம்.49

Status
Not open for further replies.

uma Karthik

Moderator
♥️ஏக்கம் ♥️


காதலன் தன்னவள் மீது கொண்ட சந்தேகத்தால்.. அன்பானவள் வயிற்றில் கத்தியை பதித்திட .. கூர் பட்டு வலிக்கும் போதும்.. குருதி கசியும் போது கூட கத்திடாமல் கை கொண்டு தடுக்காமல்.. விட்டுவிடு என்று அழுது கெஞ்சாமல். !!
இப்போது கூட உன்னை காதலிப்பேன் என்று சொன்னால்..??
அவள் சொன்னாலே..!! கையோடு சேர்த்து உயிரும் நடுங்கியது.. சந்தேகனுக்கு..!! மொத்த காதலையும் .. வெறும் .. மூன்றே மூன்று வார்த்தையில் காதலிப்பதாய் சொல்லி.!! தன் அளவில்லா அன்பை பெண்ணவள் காட்டிட.!!


தூக்கிலிட்டது போல் துடித்தது ஆண் மனம்..!! பெண்ணவள் மீது கொண்ட
கோபம்.. சந்தேகம் .. ஆத்திரம்.. செய்த துரோகம்.. இதையெல்லாம்.. உன்னை என் கையால் கொன்று பழி தீர்த்துக் கொள்வேன்.. என்று இறுகி நின்றவனால்..!!

அவளைக் கொல்ல முடியவில்லை.!! கத்திக்கு மேலும் அழுத்தம் தராமல் அவள் மேல் வைத்த காதல் தடுத்து நிறுத்த..!! காதலியிடமிருந்து கத்தியை பின் நோக்கியவன்.. !!
கசியும் சிறு ரத்தம் கண்டு.. கண்ணீர் வந்து.. கண்ணை நிறைக்க !!

" என்னால முடியலடி..!! இந்த முட்டாள் இன்னும் உன்னை காதலிக்கிறேன்.!! ஆனா தாங்க முடியல.?? " என அலறினான் " இந்த வலி போகனும்.. அதுக்கு உயிர் போகனும்.. !! " என சொல்லி வழிந்த கண்ணீரை.. கத்தியோடு உள்ள வலது கையால் துடைத்து எறிந்தவன்.. முடிவை நோக்கியவன் கத்தியை திருப்பி.
தன் நோக்கினான்..!!

கண்களை மூடி திறந்து.. மூச்சை நன்றாக உள்ளிழுத்து.. அவளை பார்த்து சிரித்துக் கொண்டே.. " எனக்கு துரோகம் பண்ணும் போது உனக்கு உருத்தலை.. ஆனா இனி ஒவ்வொரு நாளும்.. நீ.. வாழுற வாழ்க்கையே.. உனக்கு தண்டனையா கொடுத்துட்டு போறேன்..டி.." வேகமாக கத்தியை தன் பக்கம் திருப்பி வயிற்றில் ஆவேசமாய் குத்தினான்.!!

அந்த நொடியே.. கத்தியின் கூரானது.. குத்தி கிழித்தது.. குருதி.. வழிந்து உடையை நனைக்க.!!
அவளை விட்டு விழி அகலாதவன்.. ??
பார்வை கத்தியை தாங்கி..!!
காயத்தை வாங்கியவளின் கையை .. நடுக்கத்தோடு வெறிக்க ..!!
அவன் உடைமீது பட்டு.. நனைத்தது அவள் உடல் திரவமான செந்நீர் .. என்றாலும்.. !! அது நேசம் வைத்தவள்.. நெஞ்சம் உடைப்பவன்.. மீது கொண்ட அளவில்லா காதலின் இரத்த பிரவாகம்.!!

தன் உயிர் போகும்.. நிலையிலும்.. எதிர்காமல், தடுக்காமல் .. பாத அடிகள் தளராமல் நின்றவள்..!! தன்னவன் மேல் சிறு கீறல் விழாமல்.. தாங்கிடும் கரங்களில் ..!! காதலன் கத்தியினால் சிலுவையில் அறைய..!! சதைகள் கூர் பட்டு சிதைந்து ரத்தம் கசிய.. !!

இதை விட காதலை எப்படி உணர்த்த முடியும்..?? அவள்??

என் உயிரானவன் நீ தானடா..!! என வலியை தாங்கி நிற்கும் அவளை பார்க்க முடியாது. அழுத்தி பிடித்துக் கொண்டு நிற்க்கும அவளிடம் இருந்து. ஆண்மகனாலும் கத்தியை பிடிங்க இயலவில்லை..!! பறிக்க முயன்றான் .. பயன் இல்லை.. !! கத்தியை விட்டவன்.. உயிர் நடுங்க..!! அவனையும் மீறி " பிரதி " என்றான். கண்ணீரோடு காயத்தை தொட போக..!!


கத்தியை எடுக்க வருவதாய் .. நினைத்து . அவசரமாய் வேண்டாம் என்று வேகமாய் தலையை அசைக்க பாவையின் விழிநீர் இருபுறமும் தெறித்தது..!!கண்களில் வலியோடு ..
அவனால் கலங்கம் சுமந்தப்பட்டு .. நின்றால்.. உத்தமி.!! பெண் தெய்வமாக நின்று தன்னவன் உயிரை காத்து..!!

" க.. க.. கத்தி " குரல் நடுங்க.. " வலிக்கும் டி.." என சொல்லியவன் கண்கள் கலங்கியது..

கண்களை மூடி திறந்து .. பெருமூச்சுடன் " நான் போறேன்.. என்ன தேடி நீ வரக்கூடாது.. அப்படி வந்தா..?? அது தான் நான் வாழுற கடைசி நாளா இருக்கும் .. நான் வாழனும்னு நெனைச்சா..?? என்னை தேடி வராத. திரும்ப ஒட்ட முடியாத அளவுக்கு என் மனத உடைச்சிட்ட ..!!
ஐ ஹேட் யூ...
ஐ... கம்ப்ளீட்லி ஹேட் யூ பிரதிக்ஷா ஆதிகேசவன்... உயிரோ..?? உணர்வோ ..?? இல்லாத பொணமா ..!! ஆக்கிட்ட.. திரும்ப வந்து என்ன கொன்னுடாத.. ?? " கை எடுத்து கும்பிட்டவன்.. வாசல் நோக்கி.. நடக்க..

" என்னை விட்டுட்டு போறீங்களா..? ப்ரீத்.. நான் எந்த... தப்பு...ம்..." கண்ணீரோடு விசிம்பியவள்.. காதலை உணராதவன்
வேகமாக .. திரும்பி ஒன்றை விரல் சைகையால் " ஸ்..ஸ்..ஸ்... பேசாத.. மாட்டிகிட்டதுக்கு அப்பறம் எல்லாருமே சொல்ற சேம் டைலாக். பச்..பச்.. பச். கேட்க எனக்கு விருப்பமில்லை. நீ தப்பானவ .. எனக்கு நீ வேணா.. முடிஞ்சது.

ஒருத்தவங்க.. மனசுல யார் வேனா.. இருக்கலாம். காதல் மாறும்..!! ஆனா உடம்பு கோவில் மாதிரி..?? அது எனக்கானதா.. மட்டும் இருக்கனும். ஆனா.. நீ..?? " எனக்கு துரோகம் செய்தவள்.. என குற்ற பார்வையில் தீயாய் எரித்தவன்.. திரும்பிப் பார்க்காமல் விலகி வெளியே நடக்க..

அவன் தூரம் விட்டு விலக.. விலக.. கத்தியினை மேலும் மேலும் கைகளால் இறுக்கிறாள். மனம் அடிபட.. அந்த வலியை பொறுக்க முடியாமல்.. கைகளை மேலும் காயப்படுத்தி வலியை சமன் செய்ய முயன்று தோற்றுப் போனால்.பிரதிக்ஷா .

காதலன் பிரிந்ததை விட..!! கற்பை கேள்வி குறியாக்கியது..?? சாவை விட அதிகமாக வலிக்க..!! அதை தன்னவன் நம்பியதும் அதற்காக சந்தேகித்து விலகியதும் கொடுமையின் உச்சம்..!! விசாரிக்காமல் தந்த முட்டாளின் தீர்ப்பால்.. தவறே இழைக்காமல்.. தண்டனை தாங்கி நிற்கிறாள் பாவப்பட்ட ஜீவன் ஒருத்தி..!!

பதைத்து தயங்கியபடி அருகில் வந்து முதியவர் " என்ன மன்னிச்சிடுங்க..மா.. இந்த பையன் நல்லவன் மாதிரி தெரியலம்மா.. அதனால தான்.. "


அவரை பார்க்க கூட விருப்பமில்லாமல். பார்வை எங்கேயோ நிலைத்து .. வெறுத்து .. சொன்னால் " யார் வேணா.. ஏன்.. ரோட்ல சும்மா.. போறவங்க கூட ஒரு பொண்ண பத்தி தப்பா சொன்னா.. இந்த உலகம் எடுத்துக்கும்.. அதை உண்மையா ஏத்துக்கும்.. ஆனா.? தப்பு செய்யாதவ .. தான் நல்லவனு அவளே சொன்னாலும்.. தப்பு பண்ணவங்க ஒத்துக்க மாட்டாங்க.. ?? நான் எப்படி உன்னை நம்புறது னு கேட்குற உலகம் இது.. !! நீங்க சொன்ன.
பொய்ய கண்ண மூடிட்டு நம்புன அவரு உண்மைய சொன்னா.?? நம்பமாட்டார்..!!
மனசாட்சியே இல்லாம நடத்தைக்கு சாட்சி கேப்பாரு.?? அதுக்கு எங்க நான் போவேன்..?? அம்மாவா இருக்காங்க. என் பொண்ணு என் கூட தான் இருந்தா னு சொல்ல.?? இல்ல அப்பா இருக்காங்களா.?? சட்டையை புடிச்சி என் பொண்ண நான் அப்படி வளர்க்கல.. அப்படின்னு பேச. ?? யாரும் இல்லாம தனியா இருக்கற .. பொண்ணு ஒழுங்கா வளர்ந்து இருக்கு மாட்டா..னு ஒரு எண்ணம் ஆழ் மனசுல அவருக்கு இருந்திருக்கு. இப்ப வெளியில வந்திருக்கு அவ்வளவு தான்..!! எனக்காக பேச யாருமே இல்லையே..? தெய்வம் தான் சாட்சி சொல்லணும்.!! " என அழுதவள் முகம் வதைக்க..

"நான் நேரா .. போய் அந்த பையன் கிட்ட.. எல்லாமே சொல்லிடுறேன்.. நான் தான் பொய் சொன்னேன்.. அந்த பொண்ணு நல்ல பொண்ணு வேணும்னு நான் பழி சொன்னேன்..
கோபப்பட்டு அந்த பையன் என்ன அடிச்சாலும் வாங்கிக்கிறேன்..மா..!! கையில ரத்தம் வருது பாரு ஆஸ்பத்திரி போலாம்... மா.. " என்று அவள் உள்ளங்கையில் ஆழ ஊடுருவிய கத்தியை மெல்ல இழுக்க..!! கண்ணீர் ஒட்டம் மட்டும் நின்ற பாடு இல்லை. உடல் கொண்ட இந்த காயத்திற்காக கண்ணீர் வடிக்கவில்லை..!!


"தப்பு பண்ணிட்டீங்க.. ? என் அப்பா காலத்துல இருந்து இங்க வேலை செய்றீங்க.. அப்பாவும் சரி நானும் சரி உங்களுக்கு எந்த குறையுமே வச்சது இல்லை.அப்புறம் ஏன் இப்படி பண்ணீங்க.?? ஒரு பொய் என் வாழ்க்கையே முடிஞ்சிருச்சு..!! அவர் மனசு முழுக்க தப்பானவ னு பதிஞ்சுட்டேன்.. இனிமே இது மாறவே மாறாது.. என்னோட அதிகபட்ச ஆசையே அவரோட அன்பு மட்டும் தான்.!! ஆனா அவருக்கு அது புரியவே இல்லை..?? நான் பணத்தையும் அழகயும் பாக்குறவளா.?? உண்மையான அன்பு எப்பவும் எனக்கு நிலைக்காதது சாபமா.!! இப்படி தனியா தான் கடைசி வரை நிக்கணுமா.?? புருஷன் குழந்தைகள் னு குடும்பமா என்னால வாழ முடியாதா?? "பிரிவு ஏற்க முடியாமல் ஏதேதோ .. சுயம் இழந்து வெளிப்படையாகவே காதலன் விட்டுச் சென்றதை தாங்காமல் உளறினாள். நிலையில்லா மனம் கொண்டவள்,

" நான் எந்த தப்பும் பண்ணலயே.. அவரை தவிர வேற யாரையும் .. நான் யோசிச்சது கூட இல்லையே..?? அவருக்கே இதெல்லாம் புரியல. ??

" நீ அழாத..மா . நான் போய் பேசுறேன்.. பழி சொன்னது நான் தானே..!! நான் போய் .. அப்படியெல்லாம் இல்லன்னு சொன்னா நம்புவாங்க மா..?? "


வேதனையாக அவரை ஒரு பார்வை.. பார்த்து. நகைத்தவள்.. கத்தினாள் " என்ன பத்தி என்ன வேணா சொல்லலாம்.. யார் கேட்பா.??
ஏன் ஒருத்தனோட நிறுத்திட்டீங்க ..தினமும் பத்து பேர் வர்றதா கூட சொல்லலாமே. ?? பழி சொல்ல பணம் ஆகாதே !! கல்யாணம் பண்ண போறேன் னு சொல்லலாம்..!! குடும்ப நடத்துறேன்னு சொல்லலாம் !! ஏன்..?? குழந்தை இருக்குன்னு கூட சொல்லலாம்..!! நரம்பில்லாத நாக்கு எப்படி வேணா சொல்லலாம். இல்லையா.?? உலகமே சொன்னாலும் அவர் என்ன நம்பி இருக்கணும். மாறாத நம்பிக்கை தான் காதல். நம்பிக்கையே இல்லை.?? விதி..!! எங்க உறவு இனிமே சேராது.!! " என்றவளுக்கு அதிக ரத்தம் பூமிக்கு வார்த்ததால்..!! மயக்கம் வர நிற்க முடியாமல் சரிந்து கீழே அமர்த்தவள்.. கால்களில் முகம் புதைத்து
சத்தமிட்டே கதறி அழுதாள்.

" காயமா இருக்கு..டாக்டர் வர சொல்லடுமா...மா..?? " அக்கறையோடு அனுமதி கேட்டார் முதியவர்.

" வேணாம்.. நீங்க பண்ணதே போதும்.. நான் தனியா இருக்கணும்.. " முகத்தில் அடித்தார் போல் சொல்ல.. முகம் வாடியது.. முதுமையால் நடைத்தளர. தாங்கி.. தாங்கி நடந்து .. வாசல்வரை போனவரை தடுத்து நிறுத்தியது.. அழுத்தமான பெண்ணின் குரல். " அன்பு மட்டுமே பார்த்து பழகுற பொண்ணு வீட்ல வேலை பாக்குறீங்க.?? என்ன பாக்க வர்றவங்க கிட்ட ஸ்டேட்டஸ் பார்க்கிறத.. இன்னையோட நிறுத்திடுங்க..!! என்ன பத்தி அக்கறை படுறதுக்கும்.. தப்பா பேசுறதுக்கும்.. யாருக்கும் நான் உரிமை கொடுக்கல.?? " என்று எச்சரிக்கை விடுத்தாள். பிரதிக்ஷா ஆதிகேசனாய்.

சூரியன் மறைந்து நிலவும் வந்து விட்டது. !! ஆனால் காரிகை அதே இடத்தில் அப்படியே இருந்தால். காயம் உறைந்து ... கீழே வழிந்த ரத்தமும் உறைந்து ..!! உள்ளம் சிதைந்தவளின் செந்நீர் ஓவியம்.. வெள்ளை பளிங்கு தரையை அழங்கரிக்க..!! .

ஆட்கொண்டவனால் காயப்பட்டவள்.. மனம் மாறி வந்து விட மாட்டானா.?? என்ற சிறிய நப்பாசையில் ஏங்கி காத்திருந்தால்..
தலைவிரித்த ஒழுங்கற்ற முடிகள் எல்லாம் முகத்தில் படர்ந்து.. கண்ணீர் விட்டு சிவந்து வீங்கியவள் முகத்தை விகாரமாக காட்ட..!! உடைகளோடு தரையும் ரத்தத்தில் திளைக்க.. !! அலங்கோலமாக சிதைப்பட்டு காத்து கிடந்தாள். வராதவனை தேடி.. காயம் தந்தவன் தான்.. காயத்திற்கு மருந்து என காதல் உள்ளம் தவிக்க..!! அபலை பெண்ணின் நிலையோ..??காதல் முறிவு நிகழ்ந்துவிட்டது என்ற நிதர்சனத்தை உணராத மழழை போல பிடிவாதம் பிடித்து நின்றாள்.. மெய் காதல் செய்த முட்டாளாக.!!

துரியோதனன் சபையில் துகில் உரிக்க பட்டு.. அவமானப்பட்டு கண்களில் கண்ணீர் வழிய.!! இருதயத்தில் ரத்தம் கசிந்திட ..!! தன்மானம் இழந்து அவமானத்தோடு .. அகண்ட விழிகள் .. தொடர்.. அடைமழையாய் பெருக்கெடுத்த உவர் நீரால் சிவந்திருக்க..!! தேங்கி நின்ற கண்ணீரும்.. விழி திரையின் சிவப்பும் கலந்து.. !! பார்ப்பதற்கு ரத்தக்கண்ணீராய் காட்சி அளித்தது.!! கருநிற நதியாய் தலை முடி .. தரை பட்டு படந்திருக்க..!! வாழ்வையே..?? வெறுத்து அமர்ந்திருந்தால் திரௌபதி.. ஐ ஒத்த தோற்றம் கொண்டவள்.!!

நிலையில்லா .. காதலன் மீது கொண்ட அளவில்லா நம்பிக்கையால் ??தன்னையே விருந்திட்டு வாங்கினால் தரிகெட்டவள் என்ற பட்டத்தை .!! வஞ்சகம் இல்லாமல் வார்த்தை என்னும் சுருக்கிட்டு
இறுக்கிப்பிடித்தான். காதலை மறந்த காதலன்.!!
சந்தேகம் என்னும் கயிற்றில் கட்டி !!

காதல் பொம்மலாட்டத்தில்
அவனே ஆட்டி வைத்து
பயன்படுத்தியதால்..
பழுதாகி விட்டாய்..என்று தூக்கி எறியப்பட்ட உயிர் பொம்மையாக!! கண்ணீர் வரவில்லை அவளுக்கு.. சவம் கண்ணீர் சிந்தாது.!! உள்ளதோடு உயிரும் சிதைந்து விட.!!

காதலியை விருந்தாக கேட்டு?? உணவாக அவளை உண்டு.!! பசி தீர்ந்ததும் எச்சில் நீ.!!
எனக்கு வேண்டாம் என்று அருவருத்து.. இன்னொரு ஆணுடன் ஜோடி சேர்ந்தவள் நீ..என குப்பையாக உதறி செல்வதை பார்க்க இந்த உயிரை ஏன் நிறுத்தி..!! வைத்து துடிக்க வைக்கிறாய் இரக்கம் இல்லாமல்.. இறைவா.??

கலங்கமானவள் என்ற பட்டத்தை காதலன் தந்து விட்டு விலகுவது விதியா!! கற்பு ஆணுக்கு இல்லையா.?? காதலின் வேர் நம்பிக்கை இல்லையா.? சந்தேகத்தால் வேர் அறுந்த மரமாய் காதலும் மண்ணில் வீழ்ந்திட !! வேதனையில் கொஞ்சம்
கொஞ்சமாக மரித்தால் காதலெனும் நஞ்சை உண்டவள்.!!


❤️‍🔥நன்றிகள்🙏 கோடி❤️‍🔥

உமா கார்த்திக்
 
Status
Not open for further replies.
Top