எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம். 50

Status
Not open for further replies.

uma Karthik

Moderator
♥️ஏக்கம்♥️

காதலும் உயிரை கொல்லும் ஒருவகை சாபம் தான்..!! கண்ணீர் பக்கங்கள் இல்லாமல் காதல் காவியம் எழுதிட இயலாது.!!

இருவரின் காதலில் கண்ணீருக்கு குறைவே இல்லை..!! இவர்கள் காதல் காவியமாகுமா.??

பெங்களூர் டூ சென்னை பேருந்து பயணம்.. முழுவதும் .. கண்ணீரை வாரி இறைத்தான். காதலியை வஞ்சித்தவன்.!!
காதலி ஏமாற்றி விட்டாலாம். !! சென்னை வந்து இறங்கியதும் .. வலிக்கு மருந்தை தேடினான்.. ??

வேறென்ன கோதை தந்த காயம் போதையால் தான் மாறும். என சற்று முன்னர் தெளிந்தவன்.. மீண்டும் மயக்கத்தில் ஆழ்ந்திட !! மதுவை நாடி ஓடினான்.. அதனுள்ளே மூழ்கினான்.

உடல் எல்லாம் இரத்த கறை படிந்த உடைகள்.. அணிந்து போதையில் தள்ளாடிடும்.. ஆண் . அவனை பார்க்கும் பலர் கண்களை .. முகம் சுழிக்க.. வைக்க!!
சிலர் இவனை அடிபப்பவனாக..!!
பலர் இவனை கொலைகாரனாக .. !! நொடியில் ... அவனை பார்ததும் வந்த கற்பனையின் அடிப்படையில் மனதிலே சித்தரித்தனர்.!!

வீட்டின் வாசலில் ஆட்டோ.. சத்தம் கேட்க? இருவரும் வந்து விட்டார்கள்.. என ஆவலாய் ஒடி வந்த பவித்ரா.. முகம் வாடியது. அவன் மட்டும் இறங்கி .. அதுவும் அவன் தருமாறும நடையே ..!! மாமனின் நிலை போதையின் உச்சம் என்பதை உறைக்க. ? தலையில் அடித்துக்கொண்டே அவனை தாங்கியவள்.. தெரு வாசிகள் இவன் கோலத்தை பார்க்காமல் மறைக்க..! உடனே உள்ளே இழுந்து சென்று கதவை பூட்டினால்.. அவள் கதவை தாழிடும் போதே தரையில் சரிந்து விழுந்தான். போதைக்கு புதிதானவன்.!!

" மாமா.." என விழுவதை பார்த்து அலறி விட்டாள்.. பவித்ரா..!! மெல்ல அவனை தூக்கி சோஃபாவில் தலையை சாய்த்து வைத்து. இரத்தம் உறைந்த சட்டையை மெல்ல கலட்டினாள்..? உடலில் ஏதும் காயம் பட்டுருக்கிறதா..? என ஆராய்ந்தும் பார்த்தால்.. இல்லை என்றதும் நிம்மதி பெருமூச்சு விட்டாள். 'ஏதோ.. கெட்டது நடந்திருப்பதை அவளால்
நன்றாக உணர முடிந்தது. இரு கண்கள் சிவப்பாக மாறி .. நரம்புகள் புடைத்து வெடிக்கும் நிறத்தில் இருக்க..!! ஆணவன் மனம் உடைந்து
அழுது இருப்பது தெரிந்தது. ஏன்..? என்ற கேள்வி மனதை அரிக்க.!!'

உடைந்த குரலில் சொன்னான் மாமன்.
"ப... வி ..த்...ரா.. உன் ஃப்ரெண்ட் என்ன நல்லா ஏமாத்திட்டா .!! நான் பிச்சைகாரனாம்..? என்கிட்ட பணம் இல்லையாம்.? அழகு..தகுதி .. ஏன் ஒரு நல்ல செருப்பு வாங்க கூட வக்கில்லையாம்.!! அவகிட்ட நெறைய பணம் இருந்தா..?? பணம் இல்லாதவன் பிச்சைகாரனா ?? ப்ரீத்.. ப்ரீத் னு என் பின்னாடி சுத்துறப்ப நான் வசதி இல்லாதவன் னு தெரியாதாடி உனக்கு?? " எங்கோ..இருக்கும் காதலியிடம்.இங்கு இருந்தே கேள்வி கேட்டான். ? தரமான குடிமகனாய் .!!

" என்ன மாமா... சொல்ற.??" நம்ப முடியாமல் கேட்டாள். பவித்ரா.

விரக்தியோடு " எல்லாம் முடிஞ்சு போச்சு? ஏமாத்துட்டேன் டி. முதல்ல உன்கிட்ட.!! இப்ப அவகிட்ட !! " கண்ணீர் பெருகி கன்னம் இறங்க !!

வெறி பிடித்ததை போல் கர்ஜித்தான் " பிடிக்கலைனா முன்னடியே சொல்ல மாட்டிங்களா?? மொத்தமா மனசு..உயிர்வரை கலந்து
வேர்விட்ட அப்றம். எனக்கு நீ வேணாம் னு சொல்ற ஒத்த வார்த்தையில.. ? கழுத்தை அறுக்குறத போல..!! காதலை அறுத்துட்டு போறீங்கள்ல டி..?? காதலிச்சவன்.. உசுரயும் சேர்த்து அறுத்துட்டு போறீங்கனு புரியாதாடி?? எத்தனை வலிய தான் டி ...நான் தாங்குவேன். ?? காதல்னா என்னனு தெரியாத அறியாத வயசுலயிருந்து உன்ன காதலிச்சேன்.!! நீயே என்ன பிடிக்கலை வேணாம்னு சொல்லிட்ட.?? அப்பவே நான் பாதி செத்துட்டேன். ஃபர்ஸ்ட் லவ் தோத்து போனா.. எப்படி வலிக்கும் தெரியுமா ?? சாகவும் முடியாம ?? நீ இல்லாம வாழ முடியாம. ?? நீ மனசு மாறிட மாட்டியா? என்னை ஏத்துக்க மாட்டியா னு தவிச்சேன்.. ஆனா நீ..? மாமா.. வேற ஒரு பையன பிடிச்சுருக்கு.. நீ தான் முன்ன நின்னு கல்யாணம் பண்ணி வைய்கனும் மாமா னு சொன்ன.? நானும் மனுஷன் தான!! எனக்கு அது எவ்ளோ.? வலிக்கும்னு தெரிஞ்சே ஏன்டி என்ன கொன்ன..?? " அதற்கு மேல் அவளால் அங்கு நிலைக்க முடியவில்லை. தன்னால் பட்ட காயத்தை சொல்லி அழும்போது தன்னையும் மீறி அவனை காதலித்ததை சொல்லிவிடுவோம்.என்ற பயத்தில் விலகி தனிமையில் தவிக்க விட்டு சென்றால் பவித்ரா.!

" ஏய்.. போகதடி.. எனக்கு பதில் சொல்லு..?? " வேகமாக வந்து அறை நுழைந்தவுடன் கதவோடு காதுகளையும் சேர்த்தே அடைத்துக் கொண்டாள் பவித்ரா.

அவன் அருந்திய சரக்கு.. மூளையில் ரசாயன மாற்றத்தை நிகழ்த்தி.. நூறு மடங்கு அதிகமாக அவள் நினைவுகளை சுனாமி போல நெஞ்சில் மோத வைக்க..!! அவனை சுற்றிலும் பிரதி நிறைந்து இருப்பதை போல ஒருவித மாயை உண்டானது.!! கண்களை மூடி மூடி திறந்தவன்.. அவள் மறையாமல் நிற்கவும்..!! நிஜம் தான் என நினைத்து அணைக்க பாய்ந்தவன்.. கீழே விழுந்து விட!! " இப்பவும் ஏமாத்துற ?? தலையை மட்டும் உயர்த்தி அவள் பிம்பம் தெரியும் திசையில் கை நீட்டி.." என்கிட்ட வந்துடுமா.!! என் மேல தான் தப்பு..!! நான் உன்ன போக விட்டது தான் தப்பு.. என்ன தூங்க வை .. டி .. போகதடி..!! நிறைய வலிக்கு அப்புறம். கிடைச்ச உன் அன்பு தாண்டி, என்னை
உயிரோட இருக்க வச்சது அந்த அன்பு எனக்கு இல்லன்னு தெரிஞ்சதும் செத்துரலாம் போல இருக்கு தெரியுமா? பிரதி.. பிரதி.. நீ வேணும் எனக்கு." கதறினான். தாய்மையோடு காதல் தந்த தேவதை வேண்டும் என்று ஏங்கியது அவன் மனம் அனாதையாக!!

"பவித்ராவுக்கு கல்யாணம் ஆயிட்டா..? என் கடமை முடிச்சுடுச்சு.. என் பொறுப்பு முடியுற வரை நான் உயிரோட இருக்கனும். நான் சீக்கிரமே உங்ககிட்ட வந்துடுவேன் அத்தை . நீங்க போனதும் எல்லாமே போச்சு.!! யாருமே பாசமா இல்லை. துரோகிங்க அன்பு காட்டி ஏமாத்துறாளுக.. !! ஏய்.. பிரதிக்ஷா .. நான் தான் டி நிஜம்.. அவன் எல்லாம் பணத்துக்காக அழியுற அழகுக்காக.. அலையுற நாய்டி..!! என்கிட்ட வந்துருடி.. பிரதி..ப்ளிஸ்.. " தலையை கீழே பலமாக மோதிக்கொண்டவன்.. காயத்தின் தாக்கத்தில் மயங்கி விழுந்தான்.!!

ஒரு மாதம் கடந்தது பிரதி(உயிரை)யை பிரிந்து. முன்பெல்லாம் இரவோடு மட்டும் இருந்த போதை பழக்கம்.. முழு நேரமானது. நிதானத்தில் இருக்கும் பிரீத் குமாரை பார்ப்பது அரிதாகி போனது.. வீட்டுக்கு வருவதே இல்லை..
வந்தாலும் உணவை வேண்டாம் என்று மறுத்து அறையில் அடைந்து கிடப்பதே..வழக்கமானது..அதனால் அவனின் அதீத போதை பழக்கம் பவித்ராவிற்க்கு தெரியாமல் போனது.. காதல் தோல்வியால் இப்படி இருக்கிறான். என அதன் வேதனை புரிந்து அவளும் தொந்தரவு செய்யாமல்.. தானே மீளட்டும் என்று விட்டுவிட, மீளவே முடியாத அளவு தன்னை‌.. தானே அழித்து. பலவகையான போதைகளில் மூழ்கி பாதி உயிராகி இருந்தான்.ப்ரீத்.

பவித்ராவிற்க்கு சந்தீபிடம் இருந்து அழைப்பு வர ஏற்றவள்.. அவன் மாமனை பற்றி அண்ணன் அடுக்கிய புகாரில் உடைத்தே போனால்.. !!

" நிஜமா ப்ரீத்.. இப்படி எல்லாம் பண்ணுறானா??"
அதிர்ச்சியில் கேட்டாள்.

"நான் ஏன்..மா‌.. பொய் சொல்லனும்.. ??
யாருனே தெரியாத ஒரு பொண்ணுக்காக என் ஃப்ரண்ட சாக கொடுக்க முடியாது பவி. இப்படியே ஒரு பத்து நாள் போனா அவன் செத்துடுவான்.. எல்லா விதமான போதையும் அவன் யூஸ் பன்றான் .. எனக்கே தெரியாம கம்பெனி பணம் எவ்ளோ.. எடுத்து இருக்கான்னு தெரியுமா? பணம் பெருசு இல்லை.. அவனயே.. அவன் கொஞ்சம் கொஞ்சமா கொன்னுகிட்டு இருக்கான் மா.. "

" ப்ரீத்.. ஏதோ.. குடிப்பானே தவிர.. இதெல்லாம் இருக்காது." என உறுதியாக சொன்னவளை பார்த்து விரக்கியாக சிரித்தவன்.

" இங்க டெல்லியில பக்கத்து ரூம் பசங்களுக்கு நெறைய போதை பழக்கம் இருக்கு. அவனுங்க கிட்ட போன் பண்ணி கேட்டு
இருக்கான்.. தரலாமானு என்கிட்ட கேட்டதும் தான்.. உடனே உனக்கு கால் பன்னேன். அவன் பாவம் பவி..வர்ஷாவ விட்டு என்னால வர முடியாது உனக்கே தெரியும்.அவ மெடிக்கல் கண்டிஷன். " இயலாமையை தங்கையிடம்
விளக்கினான்.சந்தீப்.

" நீங்க வர முடியாது னு எனக்கு தெரியும்.. நான் என்ன பண்ணனும்னு சொல்லுங்க அண்ணா.?? " போதையின் தாக்கத்தில் இருந்து மாமனை மீட்க வழி கேட்டால் கண்ணீரோடு. இந்த பழக்கதின் தன்மை பற்றி எல்லாம் அறியாதவள்.

"இப்ப அவனுக்கு தேவை அவன் கூடவே இருந்து. அன்பு காட்ட ஒருத்தவங்க. ஆனா அது பிரியவே முடியாத உரிமையான உறவால தான் முடியும். நீ அவன கல்யாணம்
பண்ணிக்கோ..பவி. நீ அவனை காதலிக்கிறது எனக்கு தெரியும். இல்லனு நீ என்கிட்டயும் பொய் சொல்லாத?? " தெரியும் என்ற வார்த்தையை அழுத்தி சொன்னான்.. இல்லை என்று என்னிடம் மறுக்காதே என்பது போல்.!!

" பிரதி இருக்கும் போது.. நான் எப்படி அவனை கல்யாணம் பண்ணிக்க முடியும்?? " மறுத்து சொன்னால். இனொருத்தி இவனுக்காக காதலோடு இருப்பதை அண்ணனிடம்.

" என்னமோ.. பெருசா நடந்திருக்கு பவி.. அவன் சொன்னத வச்சு பார்த்தா அந்த பொண்ணு ஸ்டேட்ஸ் பார்த்து இவன் வேணாம்னு சொல்லி இருப்பா னு நினைக்கிறேன். பணக்கார பொண்ணுங்களுக்கு மிடில் கிளாஸ் பசங்கள காதலிக்கும் போது தெரியாது.. கல்யாணம் பண்ணிக்கணும் நினைக்கும் போது ஸ்டேட்டஸ் தடுக்கும்.

" பிரதி அப்படி எல்லாம் இல்லனா.. ரொம்ப நல்ல பொண்ணு. " தோழிக்கு ஆதரவாக குரல் கொடுத்தாள் பவித்ரா.


" இவன் கூட இருந்தா நெறைய ஹர்ட் பண்ணுவானு பயந்து கூட பிரேக்கப் பண்ணி இருக்கலாம். எல்லாருக்கும் எல்லார் கூடையும் ஒத்துப்போகாது பவி. "

"இல்லன்னா அப்படி எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை. நான் பேசும் போது கூட.. இங்க வரேன்னு சொன்னா !! இடையில என்ன ஆச்சினு தெரியல.?"

" அப்படின்னா அந்த பொண்ணுக்கு போன் பண்ணி பேசு.. இவனோட நிலைமை பத்தி சொல்லு உடனே வர சொல்லு.. இதெல்லாம் பண்றதுக்கு முன்னாடி அவனோட ரூம்ல போய் செக் பண்ணு. அவன் பண்ற தப்பு உனக்கு தெரியுதுனு ஒரு பயமாவது இருக்கும். ஆரம்பத்திலேயே இதெல்லாம் தடுத்துறனும், பழகியாச்சுன்னா மீள சுத்தமா முடியாது. கொஞ்சம் வாட்ச் பண்ணு. என்ன வச்சிருக்கானோ அதை அப்படியே எனக்கு ஒரு போட்டோ எடுத்து வாட்ஸ் அப்ல சென்ட் பண்ணு." என்றவன் கடைசியாக " யாரோ பேர் தெரியாத பொண்ணுக்கு நியாயம் பண்றன்னு உனக்கு இருக்க ஒரே உறவையும் பறி கொடுத்துட்டு நிக்காத மா.. ??அக்கறையில் தான் இதை சொல்றேன். உனக்கு இருக்க அக்கறை கூட அந்த பொண்ணுக்கு இல்ல.. ஒரு மாசம் ஆகுது. காதல் வேணும்னா அத காப்பாத்த முயற்சி பண்ணி இருப்பாங்க..?ப்ரீத் யாருக்குமே வேணாம்.. !! இல்லையா பவித்ரா. ?? குத்தலாக கேட்டவன்.. ஆதங்கமாக கத்தினான். " என் ஃப்ரண்ட் இந்த காதல் கருமம் எல்லாம் பண்ணாம இருந்தாலே நல்லா இருந்திருப்பான்.

" அண்ணா.. "

என்ன தப்பா நினைச்சாலும் பரவால்ல?? நீ அவன கல்யாணம் பண்ணிக்கிறது தான்.. சரியா இருக்கும்.. தனியா ரூம்குள்ள உக்காந்து அவன் என்ன பண்றான்னு யாருக்கு தெரியும்..?? கதவு காலையில திறந்தா தான் அவன் உயிரோட இருக்கான்றது உனக்கே தெரியும் ?? கவனிக்கவும்.. கண்டிக்கவும்.. ஆள் இல்லனா என்ன வேணா நடக்கும்.!! இதைத்தாண்டி நான் எப்படி சொல்லி புரிய வைக்கிறது எனக்கு தெரியல ?? பவி. அந்த பொண்ணு கிட்ட கொஞ்சம் நீயா பேசு.. ஆபீஸ்ல அவனுக்கு இருந்த மரியாதையும் போயிடுச்சு. வேற ஒருத்தவங்க ஆபீஸ் ஆ இருந்தா இந்நேரம் ஜெயிலுக்கு போய் இருப்பான். லட்சக்கணக்கில பணம் கையாடல் பண்ணி இருக்கான். நான் இதை பேச முடியாது. பிரண்ட்ஷிப்கு இடையில் ஓனர் லேபர் னு பிரிச்சு பேசி சண்டை வர்றத நான் விரும்பல.?நீ தான் பேசணும். அவன மாதிரி நல்ல ஃப்ரண்டே இருக்க முடியாதுன்னு பெருமைபட்டு இருக்கேன். எங்க பணத்தை பத்தி கேட்டு சண்டை போடுவேன் னு பயந்துகிட்டு போன் கூட அட்டென்ட் பண்ண மாட்றான். அவன விட்டுறாத பவி " என அழைப்பை துண்டித்தவன் கண்களும் கலங்கியது. நல்ல நண்பன் கொஞ்சம் கொஞ்சமாக தீய பழக்கங்களால் அழிவதை அவனால் ஏற்க இயலவில்லை. தடுக்க முடியாத சூழ்நிலை நினைத்து மேலும் வருந்தினான்.சந்தீப்

இங்கு சந்தீப் சொன்னது போல மாமன் அறையை சோதனை செய்தவளுக்கு புதையலைப் போல கண் படாத மறைவிடங்களில் எல்லாம் போதை வஸ்துக்கள். மொத்தமாக எல்லாவற்றையும் தேடி எடுத்தவள்.. கலைந்திருந்த பொருட்களை எல்லாம் முன்பிருந்தது போல அடுக்கி அறையை விட்டு வெளியேறினால்.

இரவு தாமதமாக வீட்டுக்கு வந்தவன்.. சாப்பாடு வேண்டாம் என மறுத்து வழக்கம் போல அறையில் அடைந்து கொள்ள..!!

உள்ளே சென்று பத்து நிமிடத்தில் மொத்த அறையையும் தலை கீழாக திருப்பி போட்டிருந்தான் ப்ரீத்.. கைகள் நடுக்கம் எடுக்க தேடி தேடி ஓய்ந்து போனதும்.. கோபமாக வெளியே வந்தவன்.. முன் பவித்ரா நிற்க.. !!அவனால் நேரடியாக கேட்க முடியாது. நடுங்கும் கரங்களை அழுத்தி பிடித்தபடி தலைகுனிந்து நின்றான். அவள் முகத்தை பார்க்க தைரியம் இல்லாதவன்.

" இதை தான தேடுற ?? அவன் தேடிய பொருளை உள்ளங்கையில் வைத்து காட்டிவிட்டு கையை இறுக்கமாக மூடிக் கொண்டாள் பவித்ரா "

" பவி..ப்ளிஸ்..பவி.. கை எல்லாம் ரொம்ப நடுங்குது. தலை வெடிக்கிற மாதிரி இருக்கு ப்ளீஸ்.. அதை கொடு.. " கைகளில் இருப்பதை.. பாய்ந்து கொண்டு பறிக்க வர.. தராமல் பின்னால் மறைத்தால்.. பவித்ரா.. அவள் கையில் இருப்பதை கைப்பற்ற போராடியவன் ஒரு கட்டத்திற்கு மேல் வெறியேறி.. தரச்சொல்லி.. கோபமாக கத்தியும்.. தராமல் அவள் நிற்பதை பார்த்து.. கோபத்தில் நிதானம் இழந்து போதை வெறியில் மிருகமானவன்.. வலது கரத்தால் பவித்ராவின் கழுத்தை பிடித்து உயர தூக்கினான். கால்கள் அந்தரத்தில் உதறி துடிக்க.. மூச்சுக்கு திணறினால்.. பவித்ரா.

அவள் துடிப்பதை பார்த்து நிதானத்திற்கு வந்தவன். கைகளை வேகமாக பின் எடுக்க..!! அந்தரத்தில் இருந்தவள்.. திடீரென கீழே விட்டதும்.. ஒரு நொடி.. தடுமாறி கீழே விழாமல் தன்னை நிலைபடுத்தி.. வலிக்கும் கழுத்தை நீவி விட்டு கொண்டு.. இருமிக்கொண்டே..
மூச்சை நன்றாக உள்ளிழுத்தாள். பவித்ரா.

" சாரி... பவி.. தெரியாம பண்ணிட்டேன். " என்று சொன்னவன் கன்னத்தில்
பளார் என்று அறை விழுந்தது. அடித்ததை பொருட்படுத்தாமல் பவித்ராவின் கழுத்தை தொட வர.. பிடித்து தள்ளியவள் வேகத்தில் நிலைத்தடுமாறி கீழே விழுந்தவன். எழுந்து மண்டி இட்டு கை கூப்பி கெஞ்சினான். " ப்ளீஸ் பவி.. அதை கொடு.. என்னால முடியலை. பயித்தியம் பிடிக்குற மாதிரி இருக்கு. " கெஞ்சுவதை பொறுக்க முடியாதவள் தொண்டை அதிர கத்தினால்..
" இதை கொடுக்கலனா என்ன கொல்லுவ. ?? எந்த அளவு மிருகமா மாறி நிக்குற தெரியுதா.டா?? "என சட்டையை பிடிக்க.

" வலிக்குதுடி .. இந்த ஏமாற்றத்தை என்னால தாங்கிக்க முடியலை. "

" வெறும் ஆறு மாசத்துல..வந்த காதல் பிரிவு.. முறிவு.. வலிய மறக்க..!! போதை மருந்து எடுத்துக்கலாம். இல்லையா மாமா.. ? இருபத்தி மூணு வருஷம் பாசமா இருந்த அம்மா அனாதையா விட்டுட்டு பொய்டாங்க. நீயும் இப்ப அதே தான் பன்னுற .?? உன் வலி தான் பெருசா தெரியுது. என்ன பத்தி கொஞ்சம் யோசிச்சியா? எனக்கு யார் இருக்கா.? என் அம்மா உன்ன வளர்த்த பாவத்துக்கு செத்தும் அவங்க பேரை கெடுக்குற? எல்லாரும் இதுதானே சொல்லுவாங்க? சுமதி வளர்ப்ப தப்பா போயிடுச்சு..!! காதல் ஒன்னும் வாழ்க்கை இல்லை. இது சாப்பிட்டா வலி‌.. வேதனை எல்லாம் போயிடுமா?? " கேள்வியாக அவனை உறுத்து பார்த்தவள்.

கண்ணீரோடு வேகமாக அந்த கவரைப் பிரித்து வெந்நிற போதை மாத்திரையை வாயில் போட்டு விட..!!

அதிர்தவன் எழுந்து வந்து.." பவி.. வேணாம்.. பவித்ரா .." என்று அலறினான் ப்ரீத்..
அவள் கன்னத்தை கைகளால் அழுத்தியவன். போதை மாத்திரையை அவள் வாயில் கை விட்டு பிடிங்கி எடுத்து தூக்கி எறிந்தான்.

" ஏன் பவி.. இப்படி பண்ற.?? " அழுதே விட்டான்..ப்ரீத்.தன் சுயநலத்தால்.. பவித்ரா இப்படி தன்னால்
கஷ்டப்படுவதை எண்ணி துடித்தான்.

கண்ணீரை கொட்டியவளும் " ஏன் மாமா இப்படி பண்ற?"கேள்வியை கேட்டு நொருக்கினால் மாமன் மனதை.


தழுதழுத்த குரலில் உதடுகள் நடுங்க கண்ணீரோடு கேட்டாள்." என் அம்மா இல்லைங்குற
தைரியமா??என விசும்பியவள்
அழுகையோடு " ஒருத்தவங்க இருந்தா தான்.. ஒழுங்கா இருக்கணும் னு இல்லை.அவங்க இல்லாம போனலும்.. நல்ல பிறப்பு.. வளர்ப்பு தப்பு பண்ணாது.!!
பிரச்சனைய பார்த்து ஓடுறதும்,ஒளிறதும்.
பிரச்சனை பெருசா ஆக்குமே.. தவிர தீர்க்காது. எத்தனை நாள் உன்னால மயக்கத்தில இருக்க முடியும். எல்லா வலியும் தாங்கி கடந்து தான் வந்தாகனும். கெட்டுப் போக ஆயிரம் வழி இருக்கு. ஒழுங்கா வாழ்றது தான் கஷ்டம்."

தவறை உணர்ந்து " நான் தான் சுயநலமா இருந்துட்டேன்.. அத்தை என்ன நம்பி தான்.. உன்னை விட்டுட்டு போனாங்க.. இனிமே என்னால என் அத்தை பேர் கெட்டு போகாது..!!

" என்ன தான் ஆச்சி..?? பிரதி கிட்ட நான் பேசி பாக்கவா..? " சம்மதம் வேண்டி அவனை பார்க்க.??

அவன் முகம் வெறுப்பில் இறுகியது " எல்லாமே முடிஞ்சு போச்சு பவி.. திரும்ப திரும்ப அதை பத்தி பேசாத பவித்ரா. அவ திரும்ப வந்தா..? நான் உயிரோட இருக்க மாட்டேன். செத்துப் போன உறவ காப்பாத்த முடியாது.மனசு ஒட்டாது, திரும்ப சேராது. அதையும் மீறி நல்லது பண்றேனு அவள என் கூட சேர்த்து வைக்க முயற்ச்சி பண்ணா.!! மொத்தமா யாருக்கும் இல்லாம பொய்டுவேன்.. " என்று தனது அறையை நோக்கி சென்றவனை தடுத்தவள்.
" இங்கயே தூங்கு.. இனிமே உன்ன தனியா விட முடியாது. " சோஃபாவை கை காட்டி படுக்க சொல்ல.?

அவனை நம்பாமல் கண்காணிப்பதை பார்த்து சின்ன சிரிப்போடு
சோஃபாவில் படுத்தவனுக்கு உறக்கம் வந்த பாடு இல்லை ?? நிம்மதி இல்லாமல் மனம் அலைபாய தூக்கம் தொலைந்தது.

அவன் அருகில் வந்து தரையில் அமர்ந்தவள்.. தலை வருடிட, கண்களை மட்டும் மூடி கிடந்தவன் இதழ் விரிந்தது. மெல்ல அவள் அருகாமையில் மனம் அமைதிபட கண்களை உறக்கம் தழுவியது.

உறங்கும் மாமனை விழியகலாமல் பார்த்தவளுக்கு..!! புத்தியில் உறைத்தது ' சந்தீப் அண்ணா.. சொன்னது போல் பிரியாத .. நிலையான உறவு கணவன் மனைவி உறவு தான்.!! விதி.. இது தான் என்றால் ?? அதுவே நடக்கட்டும். ' பவித்ரா ஹாலில் மாட்டபட்ட தனது தாயின் படத்தை இமைக்காமல் பார்த்து. ' நீ ஆசை பட்டது தான் நடக்க போகுது மா .. நாளைக்கு எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம்.'


இங்கே.. அவசர சிகிச்சை பிரிவில் சுய
நினைவின்றி உயிருக்கு போராடி கொண்டிருந்தால்.. ப்ரீத்குமாரின் பிரதிக்ஷா ..

❤️‍🔥நன்றிகள்🙏 கோடி❤️‍🔥

உமா கார்த்திக்
 
Status
Not open for further replies.
Top