uma Karthik
Moderator


அடைபட்ட பறவையாய்.. இவன் கையில் பிடிபட்டு தப்பிக்க வழி இல்லாமல். எங்கே அழைத்து செல்கிறான் என்று கூட தெரியாமல். கண்ணீரோடு தத்தளித்தது மிரண்டவள் மான் விழி.!!
சர்வேஷ்வரனின் கார் .. மனித நடமாட்டம் அதிகம் இல்லாத சாலையில் செல்ல..
ஒதுக்குப்புறமான கடற்கரை ஒட்டிய ஆடம்பர பெரிய வீட்டின் முன் கார் நின்றது.!! காரிலிருந்து வெளியே வந்தவன்.. அவள் பக்க கதவை திறந்து கட்டிப்போட்ட கன்னியை கையில் ஏந்தி கம்பீரமாய் நடந்தான்.!!
அவளும் இறங்க கை காலை உதற , எந்த பயனும் இல்லை. அவன் உடலின் பலம். அவன் பிடியின் உறுதியில் புரிந்தது பெண்ணுக்கு. இன்னொன்றும் புரிந்தது.. !! இவனால் தன்னை தற்காத்து கொள்ள முடியும். ஏன்.. !! குடியால் பலம் இழந்து நிற்க்கும் மாமனை கூட சண்டையில் எளிதாக தோற்கடிக்க முடியும் என்று.. காலம் கடந்து தாமதமாக உரைத்தது.!!
அவனோ..? முகம்கொள்ளா புன்னகை சிந்தி. கையில் ஏதோ..! சொர்க்கம் இருப்பதை போல கர்வமாக.. காதலியை பார்த்து இமை மூடாமல் ரசித்தான். அவளின் நிழல் கூட தீட்டாமல் உடலாலும் மனதாலும் காயப்பட்டு கிடந்தவனுக்கு இது காதல் திருநாள்.!! காதலி குழந்தையாக அவன் கையில் தவழுவது.. நிஜத்தில் அதிசயம் தான்.!!
மென்மையான எட்டுகள் எடுத்து நடந்தவன்.. தன் வீட்டிற்குள் நுழைந்தும்.. கூட பவித்ராவை இறக்காமல் .. மேலே தன் அறையை நோக்கி நடக்க..!!
நெஞ்சம் நின்றது அதிர்ந்து " சர்வா.. இறக்கி விடு ப்ளீஸ்.. கைய அவுத்து விடு.. "கையை முறுக்கி உருவினால். மேலும் இறுக்கியது கயிறு தவிர.!விடுபட முடியவில்லை.
மெத்தையின் முனையில் அவளை அமர வைத்தவன்.. பவியின் மென் பாதங்களை தரையில் இருந்து மெத்தையின் மீது வைத்தான்.. சடாரென்று மெத்தையில் விழுந்து.. உருண்டு.. புரண்டு எற்கனவே அவன் செய்கையில் மிரண்டு பயந்தவள் மடி மீது தலை மட்டும் வைத்து.. கண் மூடினான். சர்வேஷ்வரன்..
கையை கைதி போல கட்டி போட்டு.. ஏதோ மெரினா பீச்சில் காதலியின் மடியில் உரிமையாக படுத்து இருக்கும் காதலனாய் ..? மடி சூட்டில் சமத்தாக ஏதோ .. மழலைப் போல் உறங்குவதை பார்த்துக்கொண்டு வயிறு பத்தி கொண்டு எரிந்தது பவித்ராவிற்க்கு. 'அவன் கிட்ட இருந்து காப்பாத்த போய்.. இவன்கிட்ட வந்து மாட்டிக்கிட்டேனே.!!' மெல்லிய குரலில் புலம்பினால்.
அழுத்தமாக கெஞ்சினால் " சர்வா..ப்ளிஸ்.. கைய அவுத்து விடு.. நான் வீட்டுக்கு போகனும். " பாவமாக கேட்க.?
மர்ம சிரிப்பு கொண்ட மாயவன். " கை கட்ட அவுத்தா ? வாய் கட்டு போடுவேன் ..!! பரவாயில்லையா?" நக்கலாக கேட்டு ஒரு புருவத்தை வெட்டவும்..
அவன் சொன்னதின் அர்த்தம் புரிய.. குரங்கு பொம்மை போல ..!!
கயிற்றில் கட்டி இருக்கும் .. தன் கையால் வாயை மூடிக்கொண்டு கப்சிப் என்று அமைதியானால் பவித்ரா..!!
மெல்ல சிரித்தவன் துங்குவதை போல அழகாய் நடித்தான்.
அந்த அறையின் சுவற்றையே.. அவளும் எவ்வளவு நேரம் தான் வெறித்து பார்க்க முடியும்..? மடியில் உறங்கும் ஆண் பூனையின் பக்கம் பார்வையை திருப்பினால். அழகன் தான் அவன்..!! வெளிநாட்டு வாசம் இன்னுமே .. அழகை கூட்டி மெருகேற்றி காட்டியது. அவன் நன்றாக உறங்குவதை கண்டு. ' காலேஜ் படிக்குறப்ப எவ்வளவு நல்ல பையனா இருந்த .. இப்ப ஏன்டா..இப்டி ஆகிட்ட?கட்டிப் போட்டு கடத்திட்டு வர்ற.? பாஃரின் போய் ரொம்ப கெட்டுப பொய்ட்ட, பழைய சர்வாவ தான் எனக்கு பிடிக்கும். இப்ப ரொம்ப ஓவரா போற.! மடியில் படுத்து பெரிய ரொமான்டிக் ஹீரோ மாதிரி தூங்குற ? '
மெல்ல கை கட்டை அவிழ்த்து விட்டு.. ஆளனின் வலது புருவத்தின் வெட்டு தழும்பை ஒரு முறை விரலால் வருடினால். மாமன் செய்த அடையாளம் அவளை ஏதோ செய்தது. பழைய கசப்புகள் அலையாய் மோதியது நெஞ்சில்.!!
அவளுக்காக காயப்பட்டவன். பாவப்பட்டவனாய் தெரிய..!! மெல்ல அவனது தலையை கீழே வைத்துவிட்டு. வேகமாக படி இறங்கி வெளியே வந்தவள். வீட்டை விட்டு வெளியே தப்பிச்செல்ல, ஒரு வழி கூட இல்லை. அனைத்து கதவு பின் ஜன்னல்வரை திறக்க போராடி தோற்றவள். கண்களை கூட லேசாக ஈரம் எட்டிப் பார்த்தது.!! நகத்தால் பூனை போல கோபத்தில் கதவை கீறிட. கீச்.. கீச்.. சத்தம் கண்ணாடி கதவில் .
அவள் காது அருகில் வந்து செருமியவன்.. நெருக்கத்தில் நடுங்கினால் பவித்ரா.!!
ஹஸ்கி வாய்ஸில் " என்ன பவி. சின்ன புள்ள தனமா பண்ற ?? நான் நெனச்சா தான் நீ வெளிய போக முடியும். " வில்லன் போல தொனியில் பேசிட.
முறைப்போடு எகிறினால் ஆங்கிரி பேர்ட் " இங்க பாரு சர்வா.. நான் உன்ன லவ் பண்ணலை. உன்ன காப்பாத்த ஒரு பொய். அவ்ளோ.. அவ்ளவே தான். என் மாமா என்ன தேடும்.. வீட்டுக்கு போகனும் கதவ திறந்து விடு. சர்வா?
உயிர் மருகிடும் குரலில்" இப்பவும் தவிக்கவிட்டுட்டு போக முடிவு பண்ணிட்டியா? பவி.
ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிட்டு போ.. என் மேல காதல் வருமா?உனக்காக நான் காத்திருக்கலாமா?" பதில் வேண்டி பார்த்திட .
"வேணாம் " என மறுப்பு சொல்லிட, இது அவன் காதலுக்கான பரிட்சை.இப்போது அவன் வீட்டில் தனிமையான இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வானா?? இல்லை தன் விருப்பமின்மைக்கு மதிப்பளிப்பானா? என்று எழுந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்யவே.. இப்படி பதில் சொன்னால்.
சிறு சிரிப்பை இதழ் தாங்கி " ம்..ம்.. நான் தடுக்க மாட்டேன். நீ போகலாம். " சாவியை எடுத்து .. பூட்டிய கதவை திறந்து "போ.. " என வெளியே கையை காட்டிட !!
அவனை விழி அசையாமல் பார்த்து நின்றே . நினைவு இல்லாதவளாய் மெய் மறந்தால்.!!
"இதுக்கு மட்டும் பதில் சொல்லு? இன்னும் எத்தனை வருஷம் வேணாலும் உனக்காக நான் காத்திருக்க தயார். ம்..ம்..னு ஒரே ஒரு வார்த்தை.." கெஞ்சும் குரலில் உணர்ச்சி மிகுதியில் அவள் கைகளை பற்றி கேட்க.?
மெல்ல கைகளை விடுவித்தவள்." எனக்காக நீ காத்திருக்க வேண்டாம்.சர்வா" என்று பேசி முடித்தவள் .அவன் வீட்டை விட்டு வெளியேறிட.
செல்லும் காதலியை ஆழமான ஒரு பார்வை பார்த்து. தடுக்காமல் நாயகன் அப்படியே நிற்க.!!
'எப்படியும் போக விடாமல் தடுப்பான். என நினைத்தவள் ஏமாற்றத்தோடு வாசலில் சிலையென நிற்பவனை.. திரும்பத் திரும்ப பார்த்து.. தயங்கி நடந்தால்.
அந்த வீட்டின் இரும்பு கேட்டை தாண்டியதும் அதில் உள்ள சிறிய கம்பி வழியே.. எட்டி பார்க்க..அவன் அசையாமல் அங்கேயே நின்றான். ஆனால் இவள் மனதை அசைத்தது.. ஆணின் காதல்.. வற்புறுத்தாத காதலுக்கு வலிமை அதிகம்..
சாலையை அடைந்தவளுக்கு கண்ணுக்கு எட்டிய வரை எந்த ஆள் நடமாட்டமும் இல்லாமல்.. தனித்தீவு போல காட்சி அளிக்க.. அவனை மனதில் திட்டி கொண்டு மெல்ல நடக்க ஆரம்பித்தால் பவித்ரா. ஐந்து நிமிடம் நடைப்பழகிய பிறகு.. காதைப் பிளக்கும் ஹாரன் சத்தத்தில் உடல் துள்ள அதிர்ந்தவள்.. திரும்பாமலே தெரிந்தது. யார் பின் தொடர்வது என்று.. கண்டு
கொள்ளாமல் அவள் நடக்க.. அவள் நடைக்கேற்றவாறு காரின் வேகத்தை மட்டுப்படுத்தியவன்.. ஊர்ந்து செல்வது போல அவளையே தொடர..
எரிச்சலோடு கத்தினால்"என்ன?? ஏன் பின்னாடி வர்ற" கடிப்பது போல வல்லென்று விழுந்தால். பவி வெறியில் .
காதலியின் திட்டில்..உதட்டை பிதுக்கியவன். "லிப்ட் வேணுமா??" சின்ன சிரிப்போடு காரை அவளை ஒட்டி அணைத்துக் கொண்டு வந்து.. காரால் உரசுவது போல நெருங்கி அனுமதி கேட்க ??
பொரிந்தால்
" ஒன்னும் வேணாம் போடா"சும்மா இருந்த என்ன கொண்டு வந்து பாலைவனத்துல இறக்கி விட்டுட்டு லிப்ட் ஆம் லிப்ட் உ.
திட்டலில் அதிர்ந்தவன்
" டா..வா..? இங்க பாரு பவித்ரா.. மூணு கிலோ மீட்டர் நடந்து போகனும். வீட்ல விட்றேன். வா.. கதவை திறந்து விட , கொஞ்ச நேரம் அடம் பிடித்தவள்.. கோபமாக காரில் ஏறி அமர்ந்து விட்டாள்..
" பவி இங்க பாரேன்..பச்..பாரு.. பாவம்னு லிப்ட் குடுத்தா ரொம்ப ஓவரா தான் பண்ற." ஜன்னல் ஓரமா தலை சாய்த்து வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டு பவித்ரா வருவது.. மேலும் புகைச்சலை கிளப்பியது..
வீடு வந்ததும் இறங்கி நன்றி..
சொல்லாமல்
திரும்பி பார்க்காமல் விட்டால் போதும் என்று செல்ல .!!
" பவித்ரா எதையோ.. மறந்து விட்டுட்டு போற போல ??"எதை சொல்கிறான்.. என கேள்வியாக திரும்பி பார்த்தாள்.. பவித்ரா.அவளது செல்போனை கையில் வைத்து ஆட்டி காண்பிக்க
வேகமாக காருக்குள் வந்தவள்.. செல்போனை பறிக்க முயல.. அங்கே இருவருக்கும் தள்ளுமுள்ளு தான்.!! விடாகண்டனாக செல்போனை தராமல் வம்பு இழுத்தான் ஈஸ்வரன்.
" சர்வா என்னோட போன குடு "
"இன்னும் கொஞ்ச நேரம் கூட இரு.. பவித்ரா ப்ளீஸ். நாளைக்கு நான் ஊருக்கு போய்டுவேன் அப்புறம் பார்க்கவே முடியாது. கொஞ்ச நேரம் என் கூட இருடி.. ரிக்வஸ்ட்டா கேட்கிறேன். "
இதுவரை இருந்த சின்ன சிரிப்பு முகத்தில் இருந்து எங்கோ..மறைந்து பவித்ராவின் முகம் கலக்கமாக மாறியது.. வெடுக்கென ஆடவன் கையில் இருந்த செல்போனை பிடுங்கிக் கொண்டாள்..வேக வேகமாக வீட்டுக்குள் சென்று கதவை அடைந்தாள்.பவித்ரா.
நீண்ட நாட்களுக்கு பிறகு அவனை சந்தித்தது மகிழ்ச்சி தான்.!! ஆனால் இதை காதலாக யோசிக்கும் நிலையில் அவள் இல்லை. காரணம் பிரிந்த காதல் ஜோடிகள் காதலின் வேதனைகளை கண்முன்னே பார்க்கிறாள் அல்லவா? அதனால் அவளுக்கு காதலிக்கும் ஆசை இல்லை. சர்வேஷ்வரன் காதலை நிலுவையில் போட்டுவிட்டு அவள் வேலையை பார்க்க தொடங்கினாள்.
காதல் இன்பம் மட்டும் தரும் சொர்க்கம் அல்ல.!! துன்பத்தையும் சேர்த்து வழங்கும் நரகம்!!
ஒரு மாதம் இப்படியே போக பவித்ராவின் எண்ணிற்கு தினமும் காதல் மெசேஜ் வந்து குவிந்தது. சர்வேஸ்வரனின் லீலைகள் தான் எல்லாம். கெஞ்சி கெஞ்சி பேச வைத்து விட்டான். பிடிக்காமல் வேறு வழி இல்லாமல் பேசுவது போல காட்டிக் கொண்டால் பவித்ரா. நமக்கு நெருக்கமான உறவுகள் முறிந்து உடையும் போது நமக்கு உறவுகள் மீது நம்பிக்கை அற்று போய்விடும். காதல் மீது நம்பிக்கை அற்ற நிலையில் அவள்.!! நம்பிக்கையோடு காதலையும் விதைப்பது ஈஸ்வரன் பாடு..??
பிரிந்த காதலின் வலி.. நினைவெனும் நெருப்பாய்.. இருவரின் இதயத்தை எரிக்க. உயிர் வாழ்வதை போல மற்றவர்கள் பார்வைக்கு நடித்து கொண்டு.. பிரிவை தாங்க முடியாமல் ஏங்கி துடித்துக் கொண்டிருந்தனர்.காதலர்கள். (ப்ரீத் பிரதி.)
எங்கே செல்கிறோம் என்று தெரியாமல்.. இலக்கில்லாத கார் பயணம் மட்டுமே.. இப்போது..அதில் ஏதோ ஆறுதல்..
நாடினால் பிரதிக்ஷா.
எல்லாம் மாறும் காதல் சேரும் என்ற நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக செத்துப் போக..!! வாழ வேறு காரணமில்லை.. அவன் தான் வேண்டும். இன்று பேசுவான். நாளையாவது வருவான். என்ற நம்பிக்கை கதிர்கள் அஸ்தமிக்க தொடங்கி விட்டது.
தனிமையின் வெறுமை. காதலில் தோற்றவளுக்கு தவறான போதனை தர .. கண்ணீரை துடைத்தவள்.. அவன் நினைவின் அழுத்தத்தை பொறுக்க முடியாமல். நிரந்தர நிம்மதிக்கான வழியை தேடினால்.
அவளது கார் வேகமெடுத்து.. நெடுஞ்சாலையில் சீரிப் பாய்ந்தது. எதிரே வரும் லாரி பார்த்து கண்களை இறுக்க மூடிக்கொண்டு மரண பயத்தோடு.. எமனுக்காக காத்திருந்தால் பிரதிக்ஷா .. அந்நேரமும் அவனிடம் பேசியது பேதை மனம். " செத்த பிறகாவது என்ன நம்புவீங்களா? நான் போனா அழுவிங்களா? என்னால முடியல. நீங்க வெறுக்குற பிரதியா வாழ பிடிக்கலை. " ப்ரீத் மீது உள்ள காதல் போல காரின் வேகத்தை உச்சத்தில் வைத்தால். எமனாய் வரும் வாகனம்.. உயிரை வாரிட பாய்ந்தது.
காற்றிடம் அவள் சொல்லும் விளக்கம் எல்லாம் அவன் செவிகளை சேருமா ? வெறும் (மரண) செய்தி போய் சேருமா?



உமா கார்த்திக்