எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம்.54

Status
Not open for further replies.

uma Karthik

Moderator
♥️ஏக்கம்♥️


பூமியை தீண்டிடாத சின்ன உயிரை .. தாய்மையை பரிசாய் தந்த தளிரை நானே அழித்து விட்டனே ?? என அழுகை வெடித்தது..

பிள்ளை சுமப்பவளின் நெஞ்சம் பாரமாக மனதை பிசைந்தது ஏதோ .. அழு குரல்.!! குழந்தை வலியில் துடிப்பதை போல சத்தம் வர !! உயிரை உலுக்கியது.. அந்த குரல்.. உடைந்து அழுதாள் பிரதிக்ஷா . புத்திர சோகம் வாட்டியது தாயை.

" யாருமே எனக்கு இல்லன்னு தெய்வமே தந்த உன்னையும் என் கையால " தலையில் அடித்துக் கொண்டு கதறினால்.

சின்ன குழந்தை மீது அமிலம் பட்டு பிஞ்சு உடல் சிதைவது போல மனதில் விம்பம் தோன்றியது.. அதுவே தாயானவள் கொலையை
நடுங்க வைத்தது.
பெருங்குரல் எடுத்து பிள்ளை சிதைய போவதை நினைத்து அழுதால் .

தாயின் கருவறையே .. கல்லறை ஆவதை உணர்ந்த குழந்தை. அமுது தர வேண்டிய தாய்.. விஷம் தர வேண்டாம். என மறுத்து விட்டது.!!

அவன் ரத்தத்திற்க்கு கோபப்பட, சண்டை போட ,போராட சொல்லியா தர வேண்டும். தாயை தனியாய் தவிக்க விடாமல். விதியை வென்று மசக்கையின் முதல் அறிகுறியை தாய்க்கு தந்து..!! தற்காத்து கொண்டது தன் உயிரை .!!


விஷத்தை எல்லாம் விசிறி அடித்துவிட்டு.. ஆதுரமாய் தாயின் கருவறையை பாசத்தோடு பற்றி கொண்டது. வளர்ச்சியில் முழுமை பெறாத அன்பான அவளின் மூத்த பிள்ளை.!!

தலைவலி எடுக்க . உடல் நடுங்க குமட்டலோடு உண்ட மாத்திரைகள் எல்லாம வாந்தியாய் வர, ' உன்னை பிரிய மாட்டேன் அம்மா என பிள்ளை உணர்த்திட !! உணர்ச்சி பெருக்கில் கண்ணீர் கொட்டியது சுமப்பவளுக்கு.!!
மெல்லிய புன்னகையை இதழில் தாங்கி..!! வயிற்றில் கை பதித்து இதமாக வருடினால் அழுத்த காரனின் வாரிசை!!

" அம்மா நான் இருக்கேன் குட்டி " தட்டிக் கொடுத்தால் பயந்த சிசுவிற்க்கு.

தாயின் கண்ணீரை மட்டுமே கேட்டு.. உணர்ந்து .. வளரும் கருவோ . தாய் உண்ட விஷத்தை பார்த்து அஞ்சி நடுங்கியது. அதன் துடிப்பு கூடியது. தாயின் ஆதுரமான முதல் பேச்சு பிஞ்சுக்கு நிம்மதி தர..!! தாயின் கை சூட்டில் குளிர் காய்ந்து இதம் கண்டு மகிழ்ந்தது.

உடையவனிடம் பிள்ளையை பற்றி சொல்லாமல் மறைத்து விடலாம் என்று முடிவெடுத்து. தன்னை வெறுக்கும் ப்ரீத்..தன்னைத் தேடி வர போவதில்லை. ஒருவேளை வந்தாலும் என் வயிற்றில் வளர்வது அவர் பிள்ளை என்பதை ஏற்கப் போவதுமில்லை. பவித்ரா வந்து கேட்டால்?? அவர் குழந்தை இல்லை என்று மறுத்து விடலாம்.. ஏற்கனவே கெட்ட பெயர் தானே.?? இன்னும் கெடட்டும்.!! என விரக்தியாக நினைத்து .

தாய்மையின் உறுதியோடு இனி பிள்ளைக்காக வாழ முடிவெடுத்தால் தாயுமானவள். அதன் பின்விளைவு தெரியாமல் !!


ஐந்தாம் மாதம் வர.. வயிறு மேடிட்டது. தாய்மையின் அடையாளமாக !! ஊர் சிரித்தது.. அதை பார்த்து.!!

ஊரார் கூற்று, ஏழைப்பெண் ஏமாற முடியும். காதலித்து பிள்ளையையும் கொடுத்து அந்தஸ்து பணத்தை வைத்து கழித்து கட்டும் ஆண்களே இங்கு அதிகம்..!! பணக்காரி எப்படி ஏமாறுவாள்..?? பிரதிக்ஷா ஆதிகேசகனின் கர்ப்பத்திற்கு யார் காரணம்?? பதிலை யூகிக்க போட்டி நடத்தினர்.

எப்பேர்பட்ட நல்ல மனிதருக்கு இப்படி ஒரு பெண்ணா!! இதற்கு வாரிசே.. இல்லாமல் இருந்திருக்கலாம். சரம்சரமாய் கதை தொடுத்தனர்..

அவள் வீட்டில் பணியில் இருக்கும் பாதுகாவலர்களில் இருந்து. வாத்தியார் உடன் பழக்கமோ.?? வெள்ளிக்கிழமை ஆனால் பைக்கில் ஒருவன் வருவான் (அருண்) அவனோ..?? கடைசியாக கலந்துரையாடல் ஒரு முடிவுக்கு வந்தது. கல்யாணமான ஆணுடன் தான் தொடர்பு என்று..!!

" இம்மா சொத்துக்கு ஒத்த வாரிசு.. ரதி கணக்கா இருக்கா. இவளை கட்டிக்க கசக்குமா என்ன?? கல்யாணம் ஆனவன தான் பிடிச்சுருப்பா.!! குடும்பம் கலைகிற வ "என்று விவாதம் முடிவுக்கு வந்தது.

இறைவன் படைப்பில்
வலியும் பழியும் பெண்ணுக்கு மட்டும் தான்!!

தினமும் சொல்லால் சுடு பட்டாள் பிரதி. கணவன் என்றோ ? காதலன் என்றோ ? யாரையும் ஏசுவோர்.. முன்னாள் கொண்டு வந்து நிறுத்த முடியாத அவல நிலை அபலைக்கு.

உறவினர்களில் சிலர் பாவமாக பலர் லாபமாக..!! பிள்ளையை மட்டும் கலைத்துவிடு.. என் மகனை தாரை வார்த்து தியாகி பட்டம் பெற்றுக்கொள்கிறேன். என சில தாய்மார்கள் சொத்துக்காக சொந்தம் கொண்டாடினர்.

இனி ஒரு துணை அவளால் ஏற்க முடியுமா?? அவன் தந்த வலி(பழி)களை தீர்க்கவே கொண்ட ஆயுள் போதாது.!! போதும்டா சாமி கும்பிடு போடும் மனநிலையில் பிரதிக்ஷா..

குழந்தையை கலைக்க முடியாது என்று உறுதியாக மறுத்தும் கூட பணத்தாசை கொண்ட தா(பே)ய்கள் இன்சியல் பிரச்சனையை தீர்க்க பயன்படுத்திக்கொள்ள சொல்ல. !! சீ என்று ஆனது அவளுக்கு.. தவிர்க்க முடியாமல் அந்த தன்மானகாரனின் முகம் வந்து மோதியது நினைவில்.!! அவன் பேராசை எல்லாம் தன்னவளின் காதல் தனக்கு மட்டும் என்பது தான்!!


அவள் வீட்டில் வேலைக்கு வரும் பெண்கள் எல்லாம் முகத்திற்கு நேராக புன்னகையும். முதுகுக்கு பின்னால் புனைவும் பேசினார்கள். கண்டும் காணாமல் தான் இருந்தால் பிரதிக்ஷா.

ஒரு நாள் அலைபேசியில் அரட்டையாக இவள் வாழ்க்கை.??

" கணக்கே இல்லாம கண்டவனுக கூட கடந்திருப்பா போல டி.. இதே ஒருத்தனா இருந்தா?? இந்த சொத்துக்கும் அந்த குட்டி அழகுக்கும் ஓடி வந்து ஒட்டிக்க மாட்டானுங்க?? பணக்காரி.. வேற. கேட்க ஆள் இல்லை.. வயசு திமிருல எல்லாம் பண்ணிட்டு, வவுத்த தள்ளிக்கிட்டு நிக்கிறா. இதே நல்ல குடும்பத்து பொண்ணா இருந்தா மானம் தான் முக்கியம்னு உசுர மாச்சுக்கிட்டு கெளரவமா போயிருக்கும். நாலயும் உதித்ததுங்க **** தனம் பண்ணிக்கிட்டு தான் திரியும். அடக்க ஆத்தாளா.. அப்பனா..?? அவித்து விட்டது கணக்கா திரியுறா.. அப்பன் யாருனு பிள்ளை பிறந்ததும், அங்க அடையாளத்த வைச்சு கண்டு பிடிச்சா தான் உண்டு. ம்..ம்.. அதுவும் எத்தனை பேர் சாயல்ல பொறக்க போகுதோ !! யாரு கண்டா??
அந்த காலத்துல ஊர்ல இருக்கவங்க புள்ளைக்கு அப்பன் பெயர் தெரியாதானு கேப்பாங்க.? ஆனா இங்க உடன் பட்டவளுக்கே யாரு காரணம்னு தெரியலை.!! கொடுமை.. ஒருதனோட நிக்காம வரைமுறை இல்லாம மேஞ்சிருக்கா. கொழுப்பெடுத்..த..சி..று.. க்கி.. என்று இழுத்து திரும்ப.. பின்னால் நின்ற பிரதியை பார்த்து அரண்டு போய் பேச்சை மாற்றினார் " மூனாவது வீட்டு மகேஷ் பொண்ணா..? ராணி.. அந்த கதை எதுக்குடி வேலை இருக்கு .அப்றம் கூட்டுறேன் " விழிகள் படபடக்க.. எச்சிலை கூட்டி விழுங்கி.. வியர்த்த முகத்தை புற கையால் துடைத்து விட்டு.. " பக்கத்து வீட்டு பொண்ணுமா." என சமாளித்து அவசரமாக அழைப்பை துண்டித்தார்.

கலங்கிய விழிகள்.. அவள் எல்லாம் கேட்டுவிட்டாள் என்பதை உரைத்தது. திருடனுக்கு தேள் கொட்டிய நிலையில் பிரதி. எதிர்த்து கேள்வி கேட்க்கும் இடத்தில் அவள் இல்லை. மீறி கேட்டால் இன்னும் கீழ்தரமான வார்த்தைகளை பதிலாய் கேட்க நேரிடும். என்பதற்காக மௌனமாகவே கடந்தால்.

அன்றோடு சம்பள பாக்கியை பெற்றுக் கொண்டு , வேலையை விட்டு நின்று விட்டார். அந்த பெண்.

ஆனால் அவர் சொன்ன அந்த வார்த்தை மட்டும் திரும்ப திரும்ப கேட்டது. இதுனால் வரை, தாய் தந்தை இல்லாத சின்ன பெண். தெரியாமல் யாரையோ .. நம்பி ஏமாந்து விட்டால் என இரக்கப்படுவார்கள் என்று தான் நினைத்தால்.!!

இப்படி இட்டுக்கட்டி பேசுவார்கள் என்று கனவில் கூட நினைக்கவில்லை.
விரத்தியில் கண்ணிரோடு புலம்பினால்.
" எனக்கு என் புள்ளையோட அப்பா யாருன்னு தெரியாதா?? பல பேருடைய சாயலில் எனக்கு குழந்தை பிறக்குமா ?? விபச்சாரியா நான். ? என் மனசு உடம்பு அவன் ஒருத்தனுக்கு மட்டும் தான்.!! என் ப்ரீத்..க்கு மட்டும் தான். என் காதலோட தூய்மை தெய்வத்துக்கு தெரியும்.!!"
மனசீகமாக

' கடவுளே.. என் புள்ளை ப்ரீத் மாதிரி தான் பிறக்கனும். என் புள்ள முகத்துல அவர பாக்கணும்." தெய்வத்திடம் வேண்டுதல் வைத்தால். அவனின் நிழல் முகம் தாங்கிய சிறு மலர் வேண்டும் என.!! காதலனின் சந்தேகத்தை தீர்ப்பதற்காக அல்ல. அவனோடு வாழாத வாழ்க்கையை அவன் முகம் பார்த்து வாழ .!!

மெய் தெரியாமல் பொய் பரப்பி ..
பழி சுமத்தும் அழுக்கான மனதினரை. வழிந்தோடும் பத்தினி பெண்ணின் கண்ணீர் எரிக்கட்டும்.

அப்பன் பேர் தெரியாத பிள்ளை என்ற வார்த்தை. விபச்சாரியை விட வலித்தது.


அவமானமும் இழிவும் தன்னோடு நிற்காமல். யார் அப்பன் என்ற கேள்வி கேட்டால்.? தன்னால் பதில் சொல்ல முடியுமா? அந்த அமில வார்த்தைகளை தன் பிள்ளை தாங்குமா?? குழந்தையின் எதிர்காலம் பற்றி முதல் முறையாக பயம் வந்தது. தந்தை இவர் தான் என்று அடையாளப்படுத்தப்படாத பிள்ளைகள் பிழைகளாக அவமான சின்னமாக சமூகம் சித்தரிக்கும் என்ற உண்மை சுட்டது.நீண்ட நேர அழுகைக்கு பிறகு திடமான ஒரு முடிவு எடுத்தால். தாயாக இருந்து பிரதிக்ஷா .

இந்த ஊர் உறவு எதுவும் வேண்டாம். தன் பிள்ளையையும் அதன் பிறப்பையும் கேள்விகள் மொய்க்காத தூரத்திற்கு அழைத்து போக நினைத்தால். அடையாளம் மறைத்து. மாளிகையில் வாழ்ந்தவள்.. வாடகைக்கு வீடு தேடி.. தன் நடத்தையை பற்றி எடை போட்டு தீர்மானிக்காத.!! அதற்க்கு நேரமே இருக்காத. நகரத்திற்கு மத்தியில் இருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இடம் பெயர்ந்தால் அகதியாக.!!

" இங்கு சீதை பிள்ளையோடு வனவாசம் செல்ல முடிவெடுத்தால். ராமனின் சந்தேகத்தால்.!!"

ஒரு பெண் விருப்பப்பட்டு ஆணிடம் ஏமாறுவாளா?? பெண்கள் தான் இங்கு பெண்களை வதைப்பதில் முதல் பங்கு வகிக்கிறார்கள். பழி சொல் எத்தனை வலி கொடுக்கும். என்பதை நேரமுள் நம்மை குறி வைத்து பழி தீர்க்கும் போது தான் தெரியும். அதன் ஆழ் வேதனை.!!


இங்கே நெஞ்சை நிமித்துக்கொண்டு ஆபீஸில் உயர் பதவியில் மிடுக்காக அமர்ந்திருக்கும் ப்ரீத் குமார் அவர்களுக்கு நடத்தை கெட்டவன் அசிங்கம் ,
கலங்கம், என்ற பட்டம் எல்லாம் இல்லை. !! தந்தை ஆனதற்கான அடையாளமோ !! அறிகுறியோ இல்லை!!

காதல் கொண்டவளை.. காமம் கொண்டவளாக ஊரே தூற்றி‌ காற்றில் விட !!

இங்கு கௌரவமாக நகர்வலம் வந்தான்.. பிள்ளையோடு பழியையும் சுமக்கும், சுமை தாங்கியாக நிற்கும் காதலிக்கு வாழும் போதே நரகத்தை பரிசளித்த நாயகன்.!!

❤️‍🔥நன்றிகள்🙏 கோடி❤️‍🔥

உமா கார்த்திக்
 
Status
Not open for further replies.
Top