uma Karthik
Moderator


ப்ரீத் தன் அலுவலகம் வந்து ஒவ்வொரு சிசிடிவி கேமராவையும்.. ஆராய்ந்து கொண்டிருந்தான்.
அவள் தயங்கி வாசலிலே நின்றது முதல் லிப்டில் இருந்து இறங்கி வெளியே வந்து. அவனது அறையை ஏக்கமாக பார்ப்பது தொடங்கி.. தன் அறைக்கு வரும் வரை, எல்லா காட்சிகளையும் பார்த்து முடித்தவனுக்கு.
அவள் போனில் சொன்ன ' ப்ரீத்.. என்னால வெளியில உட்கார முடியல. ரொம்ப தொந்தரவா இருக்கு. உள்ள வரலாமா.? என்ற வார்த்தையே திரும்பத் திரும்ப கேட்டது.
"எதுக்குடா அவன் நம்மள வர சொல்றான் அதுவும் மீட்டிங் ரூம்க்கு.. ?? " பிரதியிடம் தைரியமாக தகாத முறையில் பேசியவன்.. ப்ரீத் அழைப்பில் பயம் வர. நடுக்கத்துடன் கேட்டு கொண்டே வேகமாய் நடக்க.!!
என்ன நடக்க காத்திருக்கிறது..எனும் கலக்கத்தோடு.. நண்பனிடம்.." போன தாண்டா தெரியும்.." உள்ளே நுழைய இருபது பேர்.. தாராளமாக அமரக்கூடிய அந்த அறையில் இருவரை மட்டும் வர வைத்து இருப்பது. !! மீட்டிங்க்காக இல்லை என்பது திண்ணம்.!!
சட்டை மடக்கி விட்டு ரௌத்திரமாக ஒருவன் எதிரே . நடந்து வருவதை பார்த்து இரு நண்பர்களுக்கும் கால்கள் தள்ளாட்டம் போட்டது.!!
விசாரணையில் நேரத்தை வீணடிக்கும் ரகம் அல்ல ப்ரீத்.. தண்டனை கொடுத்த பிறகு தான் விசாரனையே.!! அருகில் நின்ற பாவத்திற்கு..அவனின் நண்பனுக்கும் சரமாரியாக அடி விழுந்தது.. வலியில் கதறி துடிக்க. நிறுத்தம் இல்லாமல் அடி விழ.!!
"நான் எதுவும் பண்ணல சார் அவன் தான் சார்.” என அவன் பக்கம் அடியை திருப்பி விட்டான்.வலி பொறுக்க முடியாமல் நண்பனை மாட்டிவிட்டு.. சரண்டர் ஆகிட.
காரணம் தெரிந்தும். தைரியமாக எதிர்த்தான்.. " இப்ப எதுக்கு சார் என்ன அடிக்கிறீங்க?? " கேள்விக்கு பதிலாய்.. மேலும் நான்கறை விழுந்து கன்னம் காந்திட. இனி மறுத்து சொல்வது வேலைக்காகாது என்று உணர்ந்து.
" இங்க பாருங்க சார்..? ப்ரொபஷனலா எதுவும் தப்பு பண்ணா.. நீங்க கேட்கலாம். ? என் பர்சனல கேட்க உங்களுக்கு ரைட்ஸ் இல்லை. ?" என சொல்லி வார்த்தையை முடிக்கும் முன். அந்தரத்தில் துடித்துக் கொண்டிருந்தது அவனது கால்கள்.
உயிருக்கு போராடும் நண்பனின் கால்கள். ஆபிஸ் டேபிள் மீது வேகமாக மோதும் சத்தம் கேட்க..?? நண்பனை காப்பாற்ற எவ்வளவோ முயன்று பார்த்தான். இன்னொருவன். வெறியோடு கழுத்தை அழுத்தி பிடித்து இருக்கும் கரங்கள் நூல் அளவு கூட அசையவில்லை.. கழுத்தில் அழுத்தம் அதிகரிக்க.. அதிகரிக்க.. முழிகள் நிலைக்குத்தி மேலே போக..!! இறக்கும் தருவாயில் இருந்தான் ப்ரீத் குமாரின் கைகளில் அகப்பட்டவன்.
" அவன் மேல மட்டும் தப்பு இருக்க மாதிரி பண்றீங்க..??" இயலாமையில் கத்தினான்.
" இதுக்கெல்லாம் காரணமே நீங்க தான்.??" அதை கேட்டதும்.
கழுத்தில் இருந்த பிடி தளர்ந்தது. காரண கர்த்தாவே நீ தான் என்ற மெய்யை சொன்னதும். குற்றமுள்ள நெஞ்சத்தை சொல் குத்தியது.. குற்ற உணர்வே கோபம் குறைத்தவனை அமைதியாக்கியது.
தப்பித்தவனோ ..தொடர் இருமலோடு கழுத்தை நீவி விட்டு.." ஐயா.. உத்தமரே?? இந்த கோட் சூட் போட்டுக்கிட்டு, நீங்க பண்ற தப்பு எல்லாம் வெளியில தெரியுறது இல்ல.? அந்த பொண்ணு பின்னாடி வந்தது. டீஸ் பண்ணது .ஏன் வரியானு கூப்டது எல்லாமே தப்பு தான். நான் ஒத்துக்குறேன்.. ஆனா இதை நான் நேரடியா காட்டுனேன்.
நான் நல்லவன்னு போர்வை போத்திக்கல.? அந்த பொண்ணு நம்ப வச்சு.. காதல வச்சு அந்த பொண்ண சீரழிச்சு.. கர்ப்பம் ஆக்கி நிற்கதியா நிக்க வைக்கல?? பணக்காரன் செய்ற தப்பெல்லாம் பணத்துல அடிபட்டுடுது.
. ஏதோ வாய் வார்த்தைக்கு கிண்டல் பண்ணா?? மனசாட்சியே இல்லாம .. நியாயம் கேட்க வந்துடுறது.!! உன்ன விட அதிகமா நான் எதுவும் பண்ணலையே.??
காதலிக்கிறேன்னு சொல்லி ஏமாத்தி.. எல்லாத்தையும் முடிச்சுட்டு..அந்தப் பொண்ண குப்பை மாதிரி தூக்கி போட்டு இருக்க..? புள்ளைய காரணம் காட்டி .. வந்து பிரச்சனை பண்ண கூடாதுன்னு பவித்ரா மேடத்தை கல்யாணம் பண்ணிட்டேன்னு பொய் சொல்லி கலட்டி விட பார்த்து இருக்க.? நீ என்னடா யோக்கியம்.. என்ன அடிக்க வர.? நீ பண்றது யாருக்கும் தெரியாதுனு நினைச்சியா??
உன்ன லவ் பண்ண பொண்ண நீ யூஸ் பண்ணிக்கிட்ட..? நீ லவ் பண்ற பொண்ணு இப்ப யூஸ் பண்ணிக்க போற..!! அதான் நடக்கும். இந்த பொண்ணு நெனச்சா.. இப்ப பாவமா தான் டா இருக்கு.. முட்டாள் டா அந்த பொண்ணு..எத்தனை மெடிசன் இருக்கு. இப்ப இருக்க டெக்னாலஜி ஒரே ஒரு ஊசி போதும்..!! ஏன்டா.. அவங்க அசிங்கப்படணும்?
ஏன்டா உன் குழந்தைய சுமக்குனும். அது வெறும் குழந்தை இல்லடா..? உன் மேல வச்ச காதல்..!! அதனால அந்த பொண்ணு எவ்வளவு அவமானப்பட்டு இருப்பா தெரியுமா?? என்ன அடிச்சுட்ட, தடுத்துட்ட..? எத்தனை பேர் அசிங்கமா பேசி இருப்பானுங்க கூப்பிட்டு இருப்பாங்க.? வார்த்தையால கொன்னு இருப்பாங்க. லைன் போட்டுப் பாப்பானுங்க..? கல்யாணத்துக்கு முன்னாடி தப்பு பண்ண பொண்ணு கேவலமானவளா தான் இருப்பானு.. கேட்கிற மாதிரி அசிங்கமா பேசுவாங்க.?? இப்படி அந்த பொண்ணு அசிங்கப்பட யார் காரணம்?? ப்ரீத் குமார் சார்..!! நல்லவரே.. " காரி உமிழ்ந்தவன்.
" நீ.. நம்பிக்கை துரோகி டா.. அந்த பொண்ணு வாழ்க்கையை அழிச்சிட்ட, குடுத்துகிட்டா உனக்கு தான்டா நீயே.. தண்டனை கொடுக்கணும்.. அந்த அளவு பாவம் பண்ணி இருக்க. அந்த பொண்ணு வாழ்க்கை நரகமாக்கி இருக்க. நீ எல்லாம் உயிரோட இருக்கவே தகுதி இல்லாதவன். உண்மையா காதலிச்ச பொண்ண ஏமாத்த கூடாது. நீ தாண்டா பொறுக்கி.. பச்சை துரோகி.. நீ ஆடுற ஆட்டத்துக்கு எல்லாம் ஆல்பாஸ்ல போவ போற.. " சாபமிட்டவன் மெல்ல எழுந்து தாங்கி நடந்து..நண்பனோடு வெளியேற..
ப்ரீத் இடிந்து போய் அப்படியே அமர்ந்து விட்டான்.இன்று நிமிர்ந்து கூட பார்த்திடாத பிரதியின் முகமே நினைவுகளில்.!!
கவலைப்படுவதை விட அவளை தேடுவது முக்கியம்.என புத்தி எடுத்துரைக்க..வீட்டை நோக்கி சென்றான் ப்ரீத்.
தவிப்பான குரலில்" பிரதி இருக்காளா?? "
புரியாமல் குழப்பத்தில் விழி விரிய.." பிரதி..யா.. வரலையே..? உன்ன பாக்க வந்தாலா ?சேர்ந்துட்டீங்களா.? இல்ல திரும்பவும் ஏதாவது சண்டை போட்டியா?? "
ஐந்து நிமிட அமைதிக்கு பிறகு..தயங்கி..நடுக்கத்தோடு" பவி.. பிரதி கர்ப்பமா இருக்கா..!!" நேர் கொள்ளாமல். தலை குனிந்து கொள்ள.
நம்பாத பார்வை பார்த்து." பொய் சொல்லாத அப்படியே.. ஏதாவது நடந்தா என்கிட்ட சொல்லி இருப்பாளே.? என் ஃப்ரண்ட் என்கிட்ட மறைப்பாளா.! ப்ரீத்..நீ அமைதியா நிக்கறத பார்த்தா..?பெருசா எதுவும் நடந்திருக்கு போல!! சொல்லுடா என்ன பண்ண?? " ஏதோ தவறு..நடந்திருப்பது உணர்ந்து பதைத்து கேட்க.?
" அவளைப் பார்க்க சென்றது முதல்.. கடைசியாக அருண் சொன்னது வரை..மொத்தமாக சொல்லிய வனுக்கு" அதிக அளவு மது அருந்தியதால் கொலை முயற்சி எல்லாம் நினைவுக்கு வரவில்லை.
" அதுக்கப்புறம் என்ன நடந்துச்சு எனக்கு ஞாபகம் இல்ல..? குடிச்சிட்டு ஏதாவது தப்பா பேசி இருக்கேனா?? எனக்கே தெரியல.??பவி.. " அன்று குடித்து விட்டு தான் சொன்னதை நினைவுப்படுத்தி பார்த்தும் எந்த பலனும் இல்லை.
" சரி அன்னைக்கு நீ நிதானத்தில இல்ல.அடுத்த நாள் தெளிஞ்சிருப்பியே..? அப்ப போய் அவ கிட்ட பேச வேண்டியது தானே ? பண்ணதெல்லாம் தப்புன்னு மன்னிப்பு கேட்க வேண்டியது.. தானே? மாமா "
பதட்டத்தில்"அது..அது.." என ப்ரீத் இழுக்க..
குற்றம் சுமத்தும் பார்வை பார்த்து
" உன்னால முடியாது.. அவங்க சொன்னத நீ நம்பிட்ட..! யார் மாமா அவங்க எல்லாம்..? எவனோ சொல்றத நம்புவ? உன்ன காதலிச்ச பொண்ணு நம்ப மாட்டே.!!
" இல்ல பவி.. என் மேல உள்ள கோபத்தில ஏதாவது தடுமாறி.. யார் என்ன சொன்னாலும் பிரதி நம்பிடுவா..அதான்."முட்டாள் காதலன் தன்னிலை விளக்கம் கொடுக்க.
" உன்ன காதலிச்சதனால அவள நீ முட்டாள்னு நெனச்சிட்டியோ? உன்னை காதலிச்சதுக்கு அப்புறம். பிரதி காதலையே வெறுத்திருக்க மாட்டாளா?? எப்படி இன்னொரு ஆம்பள மேல நம்பிக்கை வரும்? உன்னால அவளை ஹர்ட் பண்ண மட்டும் தான்.. முடியும்னு அவளுக்கு நல்லா தெரியும்..!
சின்னதா நீ குடுக்குற அன்புக்காக எவ்வளவு காயத்தை வேணா தாங்கிப்பா.!! நீ மாறிடுவேனு நம்புனா..!! அழ வைச்ச..? அவமானப்படுத்தின, சந்தேகப்பட்ட, காதலுக்காக அத்தனைக்கும் தாங்கிட்டு பொறுமையா இருந்தா.? பாவம் பிரதி மாமா. உன்ன காதலிக்காம இருந்திருந்தா அவ நல்லா இருந்திருப்பா.
நீ என்கிட்ட எதுவும் சொல்லக்கூடாது மிரட்டுனியா? அவள..? "
" இல்லை..பவி.. நான் பேசவே..இல்ல. ஒரு தடவை மட்டும் பிரதி கால் பண்ணி இருந்தா..?? கோவத்துல எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு தேவை இல்லாம போன் பண்ணாதன்னு சொல்லி கட் பண்ணி வச்சுட்டேன்." தன் மீது தவறில்லை என்பது போல சொல்ல.
மொத்தமும் விளங்கியது பவித்ராவிற்கு." இப்பதான் புரியுது.. நீ நானும் கல்யாணம் பண்ணிக்கிட்டதா அவ நெனச்சிகிட்டா போல!! அதனால தான் என்கிட்ட வரல. குழந்தை உண்டானது கூட சொல்லல. நீ பண்ணது பத்தாதுன்னு என்னையும் துரோகியா.. அவ முன்ன நிக்க வச்சுட்ட இல்ல ப்ரீத்..? எனக்காக தான் டா அவ போராடாம ஒதுங்கிட்டா. " விழிகள் கலங்கிட " நீயும் நானும் நிம்மதியா இருக்க.!! கொடுமைக்கு ஒரு அளவு இருக்கு.. "
மாமன் சட்டையை பிடித்தவள் "மனசாட்சி இல்லையா உனக்கு..? உன்னை காதலிச்ச தவிர வேற எந்த பாவமும் அவ பண்ணல.. உன் புள்ளைய சுமந்தவ ஒரு நாள் நிம்மதியா.. தூங்கிருப்பாளா?ஒரு வேளை ஒழுங்கா சாப்பிட்டு இருப்பாளா? எவ்வளவு அழுது இருப்பா..?பூமிக்கு வராத அந்த பிஞ்சு குழந்தைக்கு கூட நீ கொடுமை பண்ணிருக்க.
பாவிடா நீ.. யாருடா இருக்கா அவள பாத்துக்க.?? " உடைந்து அழுதவள்.. கண்ணீரை துடைத்து விட்டு.
" ஒரு பொண்ண இப்படி துடிக்க வைக்க கூடாது.. பிரதிய அனாதையா தனியா தவிக்க விட்ட இல்ல..? அந்த வலி நீ உணரனும்.!!
என் அம்மா விஷத்தை வளர்த்து இருக்காங்க ப்ரீத். அந்த இடத்துல நான் இருந்திருந்தால். ?? இப்படி ஒரு கேவலமானவனோட வாரிசு சுமக்க கூடாதுன்னு கருவிலயே அழிச்சிருப்பேன்.!
இப்ப கூட அந்த மகராசி உன்னை தண்டிக்கல !! அவ மன்னிக்கலாம்.. என்னால முடியாது. உன்ன காதலிச்சது மட்டும் தான் டா பிரதி செஞ்ச பெரிய தப்பு..! அதுக்கு எவ்வளவு வதைக்க முடியுமோ. அவ்வளவு வதைச்சுட்ட.!! என்னால இனிமே உன் கூட இருக்க முடியாது.. உறுத்துது. நான் போறேன். " கடந்து வாசல் நோக்கி செல்ல.
முன்னால் நின்று போகவிடாமல் தடுத்து " பவி... போகத.. நீ எங்க போவ.? நமக்கு யாரும் இல்லை . " கண்கள் கலங்கியது.இதே நிலையில் தானே.. அவளை விட்டுவிட்டு வந்தோம்.. என்ற கசப்பான உண்மை மனதை அழுத்தியது. ' என்ன விட்டுட்டு பொய்டுவீங்களா. ப்ரீத்..' பிரதியின் அழுத முகம்.. கண் முன் வந்து வதைக்க.. !!
" எங்கேயாவது போறேன்.முடியலையா செத்துப்போறேன்.உன் கூட இருக்க முடியாது. " என ஆவேசமாக கத்தினால் .ப்ரீத் தடுக்க அவள் கையைப் பிடிக்க வெறுப்போடு உதறியவள்.
" ஏன் மாமா..? நீ எப்படி பிரதிய தப்பானவ னு சொல்லி உதறி விட்டியோ., அதே மாதிரி சர்வா என்ன சொல்லிட்டா நான் என்ன பண்ணுவேன். ? என் மாமா யோகியான்னு என்னால சொல்ல முடியாது.ஒருத்தியை ஏமாத்தி புள்ள கொடுத்து இருக்க.?
அப்போ நீயும் நடந்ததை கெட்டவன் தானே.!! இதே சர்வாவும் என் நடத்தையில சந்தேகப்பட்டுட்டா..?? நான் என்ன பண்றது. ?? உன்னை நான் நம்ப முடியாது மாமா.?? என்னயும் பிரதி மாதிரி ஏதாவது பண்ணிடுவே னு பயமா இருக்கு.நான் போறேன் மாமா. தடுக்காத " உறவையும் உரிமையையும் இழந்து விட்டாய் என அழுத்தமான குரலில் சொன்னால் பவித்ரா.
" என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா?" என கேட்டு.. ப்ரீத் தாங்க முடியாமல் அழுதுவிட்டான்.
"சந்தேகப்படுறது கத்தியால குத்தற மாதிரி.!! மத்தவங்கள குத்தும்போது நமக்கு வலி தெரியாது?நம்மளை யாராவது குத்தும் போது நமக்கு வலிக்கும் !! "
என வீட்டை விட்டு வெளியேறிட,
தன் உறவுகளை ஒரு துன்பம் வராமல் ஓடி ஓடி காத்தவனின் பிள்ளை.. ஊர் வாய்க்கு அவிலாக.!!
மூன்று பேரும் ஒரே மன நிலையில் தான் இருந்தனர்.
ஏமாற்றியவனாக ப்ரீத்..
ஏமாற்றப்பட்டவளாக பிரதிக்ஷா.?
ஏமாற விட்டவளாக பவித்ரா..?
விட்டு வந்து விட்டாள் வெறுத்து விட முடியுமா மாமனை. ???
கோவிலில் வைத்து விட்ட சந்தனத்தை ..வாஷ்பேஷன் முன் நின்று கழுவியவள்.அப்பொழுதுதான் கவனித்தால். நெற்றி வகுட்டில் குங்குமம் வைத்து இருப்பதை. " கல்யாணம் ஆன பொண்ணு நினைச்சுட்டாங்க போல.!! இல்லன்னா அவங்களும் திட்டிட்டு தான் போயிருப்பாங்க.."வெறுமையாக சிரித்தவள்.
கண்ணாடியில் தெரியும். மேடிட்ட வயிறை வருடி.. 'அம்மாவோட வைராக்கியமெல்லாம் அப்பா முகத்தை பார்க்கிற வரைக்கும் தான்!! அவர பார்த்ததும் கட்டி பிடிச்சு.. பட்டது எல்லாம் சொல்லி அழ துடித்த மனச கட்டுப்படுத்த எவ்வளவு கஷ்டமா இருந்தது தெரியுமா ? குட்டி.!! அதான் அம்மா அப்பா கிட்ட சொல்லாம கூட ஓடி வந்துட்டேன்..
அவரும் நல்லா இருக்கியா பிரதி. அப்படி பொய்யா கூட ஒரு வார்த்தை பேசல. அந்த கோவில்ல போட்டோ எடுக்கும் போது அந்த பாப்பாவோட அப்பா குழந்தையை தொட்டு ஃபீல் பண்ணி சந்தோஷப்பட்டது. மாதிரி அப்பா உன்னை தொட்டு கொஞ்சம் மாட்டாரா.னு. ரொம்ப ஏக்கம் வந்துச்சி.!!
நம்ம கிட்ட பேச கூட விருப்பம் இல்ல அவருக்கு. " கண்ணீர் கன்னம் உருண்டோடி.வழிய..!!
" அப்பா யாரு வேணா கல்யாணம் பண்ணிக்கட்டும்.ஊர் உலகத்துக்கு அடையாளமும் உறவுக்கான அங்கீகாரம் இல்லாம போனாலும்.மனசுல நெறஞ்சு நிக்கிறவன் தான் புருஷனா என் புருஷன் பிரீத் குமார் தான்!! "
என வழியும் கண்ணீரை மறைக்க தொடர்ந்து முகத்தில் தண்ணீரை அள்ளி கழுவினால் கண்ணீரை.!!
தண்ணீர் கோடுகளுக்கு இணையாய்..கண்ணீர் கோடுகளும் நீண்டது !!
கர்மா யாரையும் சும்மா விடாது.நீ யாருக்கு என்ன நீ கொடுத்தாயோ..
அது வட்டியோடு உன்னிடம் வந்து சேர்ப்பித்துவிடும்.
யாரும் இல்லாத வீட்டில் தனியாக புலம்ப வைத்தது வினை பயன்.!! "என்கிட்ட ஒரு தடவை சொல்லி இருக்கலாமே. நம்ம குழந்தை..' சொல்லிருந்தா மட்டும்..?? மனசாட்சி கிண்டல் செய்ய. 'நீயா எவன் புள்ள னு கேட்ற கூடாதுன்னு பயந்து தான்..அவளே.. சொல்லிட்டா..!! உன் புள்ள அதனால தான் உன்னை டெக்ஸ்ட்க்கு கூப்பிடுறேன்னு. இத சொல்ல எவ்வளவு வலிச்சிருக்கும்.
நீ எல்லாம் வாழவே தகுதி இல்லாதவன். செத்துடு அதான் நீ அவளுக்கு செய்ற நல்லது.அவ கூட வாழ உனக்கு தகுதியே இல்லை. உன்ன நிமிர்ந்து கூட பார்க்கல..அந்த அளவு வெறுத்துட்டா.!! இதுக்கப்புறம் ஆவது அவளை நிம்மதியா இருக்க விடு'மனசாட்சி தன் இறுதி தீர்ப்பு வழங்கியது. !!
நீண்ட யோசனைக்குப் பிறகு ஒரு முடிவு எடுத்தான். ப்ரீத்" உன்னையே நீ கொன்னுகிறது தான் . பிரதிக்கு கொடுக்குற விடுதலையா இருக்கும். உயிரோட இருந்தா உன்ன தேடி வந்துருவேன். இதுக்கப்புறமாவது நீ சந்தோஷமா இருக்கணும். நான் இருக்க கூடாது. பிரதி..பொய்டறேன்.
இப்ப கூட நீ என்கிட்ட சண்டை போடல கோபப்படல, ஒரு வார்த்தை கூட திட்டி பேசலை. இப்ப கூட நீ காயப்படுத்த மனசு வரல.!!
காதலிச்ச ஒரே பாவத்துக்கு காயத்த மட்டும் தான் கொடுத்து இருக்கேன். உன்னால தண்டிக்க முடியாது.மன்னிப்பு கேட்க கூட எனக்கு தகுதி கிடையாது. சபிக்கப்பட்ட வாழ்க்கைல தேவதை மாதிரி வந்த.!! சீ..நான் அரக்கன் பிரதி.. உன்கூட வாழ தகுதி இல்லாத வன். என்ன ? நம்ம குழந்தைக்கும் என்ன பிடிக்காது.
நான் எங்க அப்பன வெறுக்கிற மாதிரி.? நீயும் என்னை வெறுப்ப இல்ல?? அப்பா உனக்கு ஷீரோவா இருக்க ஆசை பட்டேன். என் விதி.. இப்படி நிக்க வைச்சிடுச்சு. நான் கொடுக்காத வேதனை இல்லை அவளுக்கு.!! அம்மா அழுததெல்லாம் கேட்டுருக்கும் என் தங்கத்துக்கு. நீ நல்லா பாத்துக்கணும். பாவம் அவ. என்ன போய் ஏன் டி காதலிச்ச.?
சந்தேகப்படுற ஒருத்தனை யாருக்கும் பிடிக்காது !! அதான் நீ என்ன நிமிர்ந்து கூட பாக்கலையா டி.. வேணாம் னு விட்டுட்டு போய்ட்ட.. வெறுக்க வச்சிட்டேன்.. இல்ல.!! ரொம்ப உறுத்தலாயிருக்கு. நான் திட்டி இருக்கேன்.. உன் அன்ப உதாசின படுத்திருக்கேன். தப்பா பேசி இருக்கேன். சந்தேகம் கூட பட்டிருக்கேன். அதே பிரிவ நீ தரும் போது தாண்டி.. அதோட வலி எனக்கு புரியுது.
நீயும் எனக்கில்லனா வலிக்குதுடி.. இருக்கவே.. பிடிக்கல. கடைசியா உன்கிட்ட ஒன்னு மட்டும் சொல்லணும்.. "வேகமாக பிரதியின் அறைக்கு சென்றவன்.. கீழே கிடக்கும் அவளது டைரி எடுக்க..!!பேனாவோடு இருந்த பக்கத்தை திறக்கவும்..!! அவள் வலிகளை வாசிக்க தொடங்கினான்!!
உயிரானவனே!!
உன்னால்
தினம் வலி(பழி)
சுமப்பேன்!!
உடைத்தாலுமே
இதயத்தை
பரிசளிப்பேன்!!
நம்பாமல்
வதைத்தாலும்!!
சொல்லால்
சிதைத்தாலும்!!
தீராதடா நான்
கொண்ட காதல்.!!
ஒவ்வொரு வரிகளையும் கண்ணீரில் நனைத்தான்.. ப்ரீத்..
காரணம்??
அன்று செல்போன் கடையில் சண்டையிட்டு நடு இரவில் பிரதியை ரோட்டில் தவிக்க விட்டு வந்த இரவு அவள் எழுதியது.!!
மண்டியிட்டு கதறினான்.."என்ன வெறுத்துடாத ப்ளீஸ்.இப்போ.. நாம சேர்ந்தா கூட காதல் இருக்காது.. என் பாவத்துக்கு எனக்கே நான் தண்டனை கொடுத்துக்குறேன். உன்னால ப்ரீத் குமார மன்னிக்க முடியாது.. வெறுத்துறாத ப்ளீஸ்.ஐ லவ் யூ பிரதி..!! " கைகளில் உள்ள விஷ பாட்டிலை பார்த்தவன் கண்களில் பிரதியை நிறைத்து..உயிரில் விஷத்தை நிறைத்தான்..!!
இன்னும் கொஞ்ச நேரம் தான் நானும் உங்ககிட்ட வந்துடுவேன்.. அத்தை. யாருக்குமே என்ன புடிக்கல. எல்லாரையும் கஷ்டப்படுத்திட்டேன்..ஏன்.. என் குழந்தைய கூட.!! எல்லாரும் என்ன வெறுக்கிறாங்க.. விட்டுட்டு போயிடறாங்க. சாக பயமா இருக்கு. என் குழந்தை கூட வாழனும்னு ஆசையா இருக்கு. " கதறினான் தந்தை பாசம் உணராதவன்.
" என்னால அவ கிட்ட பேச முடியாது. அவ கேட்கிற கேள்விக்கு எல்லாம் என்கிட்ட பதில் கிடையாது. என்ன மாதிரி என் குழந்தையும் அப்பால இல்லாம தான் வளர போகுது. என் விதிய தான் என் பிள்ளைக்கும் கொடுத்துட்டு போறேன். அதான் கொஞ்சம் வருத்தமா இருக்கு.
தங்கமே... நீங்க என்ன அப்பானு சொல்ல போறது இல்ல.. எனக்கு தகுதி இல்லை.அப்பா வெறுத்துறாதீங்க. " பிள்ளையை நினைத்து பேசியவன்.கண்கள் நிற்காமல் வடிந்தது
" பவித்ரா கூட உன் மூஞ்சில முழிக்க மாட்டேன்னு என்ன விட்டுட்டு போயிட்டா..!!அவளே என்ன வெறுத்துட்ட. எனக்கு யாருமே இன்னொரு வாய்ப்பு கொடுக்கலையே. நான் திருந்தவே மாட்டேன்னு முடிவு பண்ணிட்டாங்க. தெரிஞ்சு நான் பிரதியை ஏமாத்துவேணா?? '' சுவற்றில் மாட்டிருக்கும் அத்தையின் முகம் பார்த்து ..
" அத்தை உங்க நிழல்ல வளந்தவன். ஒரு பொண்ண நம்ப வச்சு ஏமாத்தி இருப்பனா? நீங்களாவது என்ன நம்புங்க அத்தை..
என் பிரதி மேல எனக்கு சந்தேகம் எல்லாம் கிடையாது. என் மேல இருக்க பயம். அவளும் என்னை பிடிக்கலைன்னு விட்டுட்டு போயிடக் கூடாதுன்னு பயம்.. என்னை விட்டு போகாத அளவுக்கு அவளை இறுக்கி பிடிச்சுக்க நினைச்சேன். அவளுக்கும் வலிக்கும்னு யோசிக்காதது தான் என் தப்பு.!! நீ என்ன மன்னிச்சிடுவ ஆனா என்னால என்னை மன்னிக்க முடியல டி.. அதான் போறேன். நிம்மதியா இருக்க விட்டுட்டு போறேன்.இதுவும் காதல் தான்.!!
"ஒரு காதல் எப்படி எல்லாம் இருக்கணும் அதுக்கு உதாரணம் நீ..!! எப்படி எல்லாம் ஒரு காதல் இருக்க கூடாது அதுக்கு நான்..!!
டைரியில் அவள்.. கையெழுத்தை காதலோடு வருடியவன்..!! ஆசையாக முத்தமிட்டு. நெஞ்சோடு அணைக்க!!. விஷத்தின் வீரியம் ஏற.. கண்களை இருள் அப்பியது.. மூக்கில் இருந்து ரத்தம் வழிய ஆரம்பித்தது. அப்படியே மயங்கி கீழே விழுந்தான்.. பிரதியின்..உயிரானவன்.!!

