uma Karthik
Moderator


இரவில் நிலவு மட்டும் துணை இருக்க.!! அலைகள் வந்து ஆறுதலாய் அழாதே..என பாதம் முட்டி கெஞ்சியும்.. விசும்பலோடு
கண்களில் இருந்து வந்த கண்ணீர்..!! கடல் நீருக்கு.. உவர்பை சேர்க்க..!! முகம் மறைத்து தேம்பி அழுதாள் பவித்ரா. பிரதிக்கு தன் மாமன் செய்தற்க்கு எல்லாம்.. தானும் ஒருவகை காரணம் என குற்றம் சுமத்தி.. நெஞ்சை அமிழ்தும் உணர்வு அழுகையை தந்தது. மேலும் உடைந்து அழுதால்.. பவி.
ஒரு பெண்ணாய்.. தன்னைவிட இளையவள்..முறையற்ற தாய்மையால் பட்ட அவமானங்கள்.. அனுபவிக்கும் துன்பங்கள் எல்லாம் கண் முன் வர.!! யாரிடமாவது சொல்லி அழ வேண்டும் என பேதை மனம் ஆழ்ந்தது..
இன்று தான்.முதல் முறையாக, அவளே சர்வேஸ்வரனுக்கு கால் செய்தால்.!!
காதலியின் முதல் அழைப்பு கண்டு மகிழ்ச்சியில் ஆவலாக ஏற்றான் சர்வா..ஆனால் கேட்டது.. காதலியின் அழு குரல்." என்ன ஆச்சு பவி..மை..டால்ஸ்..அழறியா.." எனவும்..
அடைமழையாய் மனதில் இருந்த வேதனைகளை எல்லாம் கொட்டி தீர்த்து விட்டால். மொத்தத்தையும் கேட்டவன்.. பதிலளிக்காமல அமைதியாகவே இருக்க.!!
" எனக்கு திரும்பவும் வீட்டுக்கு போக பிடிக்கல சர்வா.." உடைந்து அழுதால் பவித்ரா.
புன்னகை விடுத்து கடினமான குரலில் கட்டளையிடுவது போல்.. " பவித்ரா அவன் பண்ண அதே முட்டாள்தனம் நீயும் பண்ணாத. இப்போ உன் மாமாவ தனியா விட்டுட்டு வந்திருக்க கூடாது. அவன் எல்லாத்தையும் இழத்துட்டு நிக்குறான். ஒன் சைடா உன்ன லவ் பண்ணிட்டு.. நீ என்ன பிரிச்சப்ப அவ்ளோ வலிச்சது. அதே தான்..ப்ரீத் நிலைமையும்.
யாருமே இல்லாத தனிமையும் வெறுமையும் தப்பான முடிவுகள் எடுக்க வைக்கும்.நீ போ.. நடந்த தப்ப சரி பண்ணு. அவனால இந்த ஜென்மத்துல அது முடியாது. அதையே சொல்லிக்காட்டி என்ன நடக்க போகுது.
மறுத்து"இல்லை.
சர்வா..எனக்கு பிடிக்கலை. பாவத்தில பங்கு போட்டுக்கற மாதிரி இருக்கு. "குற்ற உணர்ச்சி மிகுதியில் பேசினால்.பவி
தன்மையாக எடுத்து கூறினான்.சர்வா " இத்தனை கஷ்டத்துக்கு நடுவுல நம்ம மேல யாரோ ஒருத்தவங்க வைக்கிற அன்புக்காக தான் போராடி வாழ்கிறோம். எந்த உறவையும் விலகிப் போய் இல்ல. கூட இருந்து தான்..அவங்க செஞ்ச தவறுகளை.. புரிய வைக்க முடியும். " நிதானமாக முடித்தான்.
எரிச்சலோடு "ஓ...ஓ. இனம் இனத்துக்காக பேசறீங்க..? பிரதியும் இப்படித்தான் வேதனை பட்டுருப்பா.. இவனும் படட்டும்."ஆத்திரம் தீராமல் கத்தினால் பவித்ரா.
நக்கலாக நகைத்து" உன் மாமன் எனக்கு வில்லன்.. எனக்கு அவன சுத்தமா பிடிக்காது. செத்த பாம்ப அடிச்சு..என்ன ஆக போகுது.. குற்ற உணர்ச்சியில் ஒருத்தவங்க தவிக்கும் போது.. மேலும் நம்ம காயப்படுத்த கூடாது..மா. பவித்ராவா யோசிக்காத ? உங்க அம்மா இப்போ உயிரோட இருந்தா என்ன செய்வாங்க அப்படி யோசி. ஒரு தெளிவு கிடைக்கும்." தனிமை தெளிய வைக்கட்டும் என அழைப்பை துண்டிக்க.
கண்களை மூடி.. அலையின் ஓய்வில்லாத பொங்கி..ஆர்ப்பரிக்கும் ஓசை கேட்டு. தாயிடம் மனதார பேசினால். ' என்ன பன்னனும்னு எனக்கு தெரியலை மா. ? பிரச்சனையில் இழுபட்டு கிடக்கும் போது தீர்வு தெரியாது.
பேரிரைச்சலோடு ஒலி எழுப்பும்.. கடல் அலையும் நிசப்தம் ஆகிப்போக !! மூடிய கண்வழி கண்ணீர்.. உருண்டிட, இறக்கும் கடைசி நொடியில்.. இறுதியாக தன் அம்மா பேசியது கருத்தில் கேட்டது.
" அவன பாத்துக்கோ..விட்டுடாத பவி. " அவன் நலம் வேண்டி.. கடைசி வேண்டுதல்
வார்த்தையாக உதிர்த்த அம்மாவிற்க்காக..விருப்பமேயின்றி இறுக்கமான மனதோடு வீட்டிற்கு புறப்பட்டால் பவித்ரா..
வாசலை நெருங்கியதும் ஏதோ ஒரு அசம்பாவித உணர்வு..!! நெஞ்சம் உரக்க அதிர.. ஒவ்வொரு அடிகளையும் அவள் தயங்கி எடுத்து வைக்க..
விழிகள் நடுக்கத்தோடு மாமனை தேடியது. ஹாலில் தேடி விட்டு, ஒவ்வொரு அறையாக சென்று தேடிப்பார்த்தால்.
பிரதின் அறையிலும் யாரும் இல்லை. வெளியே செல்ல திரும்பியதும்..ஏதோ உள்ளுணர்வு எழ.. மீண்டும் கண்களால் அலசினால்.. கீழே கட்டில் விளிம்பில் அவன் பாதம் மட்டும் தெரிய.." மாமா "என வீடே ஒலிக்க..அலறினாள் பவித்ரா.பதில் இல்லாமல் போக.. வேகமாக அருகில் ஓடி வந்தால்.." மாமா..மாமா.." உணர்வில்லாத உடலை கைகளால் உலுக்கினால்.. " நான் தான்.. நான் தான்.. நான் தான் ..மாமா.. எல்லாத்துக்கும் காரணம்.." தலையில் அடித்துக் கொண்டு கதறினாள் " விட்டுட்டனே.. ஏமாத்திட்டு போயிட்டியே டா.. அவளுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்.?? என் ப்ரீத் வேணும்ன்னு கேட்பாடா..??" வெடித்து குரல் வெளியே கேட்க்கும்படி அழ..!!
அழு குரலில்" நான் போனது தப்பு தான் மாமா..வந்துடு டா.. நம்ம புள்ளைங்களுக்காவது அப்பா வேணும்டா வாடா.. தெரியாம பேசிட்டே நான் உன்னை விட்டு போகல.. போக மாட்டேன்.. கூட தான் இருக்கேன் மாமா.." கன்னங்களை தட்டி பார்த்தும் எந்த அசைவும் இல்லை.." பிரதி பாவம் மாமா.. அவளுக்கு பண்ண கொடுமைக்காக சாகணும்னு தோணுன உனக்கு. சந்தோஷமா வாழ வைக்கணும்னு ஏண்டா தோணல.? இது தெரிஞ்சா அவ உயிரோட இருக்க மாட்டா மாமா.. பிரச்சனை பேஸ் பண்ண பயந்துகிட்டு ஒரு நிமிஷம் நீங்க தைரியமா.. எடுக்கிற முடிவு.. வாழ்நாள் முழுக்க ஒருத்திக்கு வலிக்கும்.. உன் புள்ள அப்பா இல்லாம ஏங்கும்?மாமா.. அம்மா உன்னை தானே.. பார்த்துக்க சொன்னாங்க.?? உங்க அத்தை பேச்சு மீறுறியே.. என்ன விட்டு போறியா மாமா?? ஆ...ஆ... மாமா... மாமா..."என புலம்பி கொண்டு..
அவன் சட்டை பிடித்து குலுக்கியவள்.. மண்டியிட்டு அவன் மார் மீது தலை வைத்து.. ஒப்பாரி வைக்க..!! அவள் ஓலமிட்டு அழும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கூடி. பவித்ராவை விலக்கி நஞ்சுண்டவனை அவனது காரில்..ஏற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆண்கள் மட்டும் சென்றதால்.. பவித்ரா ஆட்டோவில் சென்று சிகிச்சை நடக்கும் அறைக்கு வெளியே தவமிருந்தால்..
' ஆயிரம் முறையாவது அவளயே.. குற்றம் சாட்டி இருப்பாள்.. ' நீ தான் காரணம்.. விட்டுட்டு போயிருக்க கூடாது.. கடவுளே..என் மாமா வேணும்.. இதே மாதிரி தான் திடீர்னு ஒரு நாள் என் அம்மாவையும் எடுத்துக்கிட்டே..!! யாருமே இல்லை எனக்கு..என் மாமா வேணும்..' மனனம் போல திரும்ப திரும்ப..கைகளை ஒன்றோடு ஒன்று பிண்ணி வேண்டினால் கண்ணீரோடு..
சிறுவயதில் இருந்து இதுவரை காட்டிய அன்பு, அக்கறை.. எல்லாம் அழுத்தம் தர உள்ளம் உடைந்து அழுதால்.பவித்ரா..
இதே போல ஒரு சிகிச்சை அறையின் முன்னால் தானே..தாயை பறித்துக் கொண்டது விதி..!! மாமாவும்.. என்ற நினைவே.. வெடித்து அழ வைத்தது.. தனித்து நின்றவளை!!
உறவானவன் உயிர்.. மீட்டு தர தாயிடம் பிராத்தனை செய்தால்.. யாரிடமாவது சொல்லி அழ வேண்டும்.. ஆறுதலான வார்த்தையை தேடியது ஆதரவில்லாதவள் மனது..
அழைத்தால் அவளவனுக்கு "சர்வா.." அடுத்த வார்த்தை வராமல் விம்மல் மட்டும் கேட்க.
" என்ன ஆச்சி..பவி..மா.. ஒய் கிரையிங் டா.. வீட்டுக்குள்ள விட மாட்டேன்னு சண்ட போட்றானா அவன்.." காட்டமாக கேட்டான்.. சர்வேஸ்வரன்.
வெப்பிய குரலில்
" மாமா.. வெ..வெ..ஷம் குடிச்சிட்டான். சர்வா.."சொல்லி முடிக்க முடியாமல்.. அழுகை அடக்கி தேம்பினால்.
உற்சாகம் பொங்க.." செத்துட்டானா.." சந்தோஷமிகுதியில் கேட்டே விட..
" என் மாமா ஒன்னும் சாகாது.." ஆங்காரமாய் கத்தினால் பவி.
ஏமாற்றத்தோடு..சலித்தபடி" அதான் உனக்கே தெரியுது இல்ல.. அப்புறம் ஏன் இந்த அழுகை.. இந்த மாமனுக்கு வலிக்குதா இல்லையா!! " காதலில் கரைந்து வந்தது வார்த்தை.
வெறுப்பில் திட்டினால்." நான் எந்த நிலைமையில இருக்கேன்.. ஆறுதலா ஏதாவது சொல்லுவனு போன் பண்ணேன்
பாத்தியா.. அதான் என் தப்பு." கட் செய்துவிட்டு, எரிமலையாய் வார்த்தையில் அவனை திட்டி வெடித்தபடி.. அமர்ந்தாள் பவி.
தொடர் நச்சரி(அழை)ப்பில் ஈடுபட்டான் சர்வா.. நர்ஸ் கடுப்பாகி.. "போன் எடுமா..அதான் வந்துகிட்டே இருக்கு இல்ல." திட்டியதும் வேறு வழி இல்லாமல் ஏற்றாள் பவித்ரா.
தீராத கோபத்தில்." என்னடா உனக்கு வேணும் தெரியாம போன் பண்ணிட்டேன்..ப்ளீஸ்.. கால் பண்ணாத ஹாஸ்பிடல்ல இருக்கேன்.."
" எனக்கு நீ தாண்டி வேணும்." காதல் வசனம் பேசினான்.
நொந்து..போய்.." உனக்கெல்லாம் மனசாட்சி இருக்கா டா.. என் மாமா உயிருக்கு போராடிட்டு இருக்கான்..எந்த இடத்தில் என்னென்ன பேசிட்டு இருக்க
" அவன் சிரிக்கும் சத்தம் இன்னும் வெறியேற்றியது.
" அவன்ல்லாம் சாகமாட்டான் பவி.. பல பேரை கொன்னு குழியில போட்டுட்டு தான் அவன் போவான்.. தைரியமா இரு.. நான் வரவா..?? " உண்மையான அக்கறையோடு கேட்டான்.
இந்த அக்கறையும் ஆதுரமும் அவளுக்கு தேவைப்பட்டது
" ம்..ம்..ம்.." உடனே சம்மதித்தால்.. அன்பானவனின் அருகாமை வேண்டியது.. தனித்து விடப்பட்டு தவிப்பவளின் மனம்.!!
" வந்துட்டு மட்டும் போகணுமா..மொத்தமா வந்துடவா..?? நாயகன் காதலுக்கு அவசியமான கேள்வியை கேட்க.
என் மாமா உயிருக்கு போராடுற நேரத்துல கல்யாணத்த பத்தி பேசிட்டு இருக்கான் இவன் மனுஷன் தானா??'என நெற்றியில் அடித்துக் கொண்டு." சர்வா.. நான் சாப்பிடவே இல்லை திட்ட கூட தெம்பு இல்ல. என்ன கோபப்படுத்தாத.. என்னால கத்த முடியல..ப்ளீஸ்.." அழுததிலே அத்தனை தெம்பும் போயிருந்தது.
சர்வா வெடுக்கென்று " எல்லா அயோக்கியத்தனத்தையும் பண்ணிட்டு.. விஷத்துக்கு குடிச்சுட்டா நல்லவன் ஆயிடுறான் இல்ல..!! "
மாமனை..விட்டுக் கொடுக்க முடியாமல்.." ப்ரீத்..நல்லவன் தான்..ஏதோ.புரியாம" பவி முடிக்கும் முன்னமே.. பாய்டாக மறு கேள்வி கேட்டு வாயடைக்க வைத்தான் சர்வா.
" தெரியாம அப்பா ஆகிட்டார்..ஹா..ஹா.." கிண்டல் அடித்து நிறுத்தமே..இல்லாமல் நகைக்கவும்..
இதற்கு என்ன பதில் சொல்வது. விட்டுக் கொடுக்க முடியாமல்.. " அதெல்லாம் ஏன் பேசுற.?? " பல்லை கடித்தால் பவித்ரா. சோகம் போய் கோபம் மூண்டது அவளுக்கு.
உறுதியான நம்பகத்தன்மையோடு " பண்ண தப்புக்கு அவன் அனுபவிக்கிறான்.. எனக்கு அவன் மேல இரக்கம் கூட வரல, அந்த பொண்ண நினைச்சா தான் பாவமா இருக்கு.. இவனா கீழ இறங்கி போக கூடாதுன்னு , அந்த பொண்ண வர வைக்க.. சும்மா மெரட்டி பார்க்க பண்ணி இருப்பான்.பவி.
" இல்லை.. மாமா பிரதியால இப்படி ஒரு முடிவு எடுக்கல.. நான் புரிஞ்சுக்கல விட்டுட்டு போயிட்டேன்.நம்பலை, தப்பா பேசிட்டேன்..அதை தாங்கிக்க முடியாம தான்..!!
மோசமான நேரத்துல கூட யாருமே இல்லன்னா ரொம்ப பயமா இருக்கும் சர்வா. என்னையும் மீறி உன் கிட்ட பேசுறேன். நான் மூஞ்சில முழிக்க மாட்டேன்னு சொல்லி போனதும் . அவனும் இதே வெறுமையை தான் ஃபீல் பண்ணி இருப்பான். விட்டது என் தப்பு.. புரிய வச்சிருக்கணும் சேர்த்து வச்சிருக்கணும்..
யாருக்குமே கோபத்துல நிதானம் வேணும்..அது இல்லைனா நிறைய இழக்க வேண்டியது இருக்கும். இப்படி எல்லாம் பேசினா என் மைண்ட் மாறும்னு பேசுறன்னு எனக்கு புரியுது. ஆனா என்ன பண்ணாலும் மனசு மாறாது சர்வா. நான் நிக்கிற நிலைமை அப்படி..!! எனக்காக யோசித்ததுக்கு தேங்ஸ். "
" மொத்தமா வந்துட்டா என்ன கண் கலங்காம பார்த்துப்பியா??"
" எல்லாம் சரியான அப்புறம்..கேளு.. இதுக்கு பதில் சொல்லுறேன்."
" நம்பலாமா.." காரியத்தில் கண்ணாக கேட்க.
"ம்..ம்..ம்.." கொட்டி பவித்ரா வெறுமனே..சொல்ல..
"தைரியமா இரு..பவி. "தேற்றினான்.. அவளின் ஈஸ்வரன்.
இரண்டு நாட்கள் தொடர் சிகிச்சையில் இருந்தவன்.. விழித்ததும் அவன் முன் அமர்ந்து கொண்டாள் பவித்ரா.
" மயக்கத்தில இருக்கிற மாதிரி நடிக்காத. நீ முடிச்சிட்டேன்னு சொல்லி தான் நர்ஸ்..என்ன வர சொன்னாங்க."
மெல்ல கண்களைத் திறந்து அவளை ஒரு பார்வை பார்த்து.. மீண்டும் கண்களை மூடினான்.
" மாமா.. பாரு... டா .. ஒவரா பண்ணாத.. நான் தான் கோபப்படனும். எதுக்குடா விஷத்தை குடிச்ச ? பிரதி தாங்குவாளா.? " முகத்தை வேறு பக்கம் திருப்ப, திரும்பிய பக்கம் எழுந்து சென்று அவன் முன் நின்றால்.பவி
" ஏன்.. என்ன.. காப்பாத்துன.? "விரக்தியாக கேட்டான் ப்ரீத்.
" தெரியாம காப்பாத்திட்டேன்.."
" என் மூஞ்சில முழிக்க மாட்டேன்னு சொன்ன.?"
" தெரியாம சொல்லிட்டேன் மாமா. எல்லா தப்பையும் நீ பண்ணிட்டு என்ன குற்றவாளி மாதிரி விசாரிக்கிற பாத்தியா.?என் நேரம், நமக்கு இருக்கது ஒரு வாழ்க்கை. வாழாம எதுக்கு சாகனும்??"
" நான் தான்.. ரொம்ப கெட்டவனாச்சே.. ஏன் வாழனும். பிரதி கூட சேர முடியாது. என் குழந்தையை கையால தூக்கி கொஞ்சவும் முடியாது.எல்லாமே இருந்தும். யாருமே இல்லாம வாழற வேதனை..எதிரிக்கு கூட வரக்கூடாது.
" கண்ணீர் பொங்கியது பிள்ளைக்கான ஏக்கத்தில்.
" இதே நிலமைய தானே.. நீ அவளுக்கும் கொடுத்து இருக்க குத்தி காட்டுறதுக்காக சொல்லல. மாமா. இதெல்லாம் இப்ப பேச வேணா.. மாமா சாப்பிடு வா " விஷத்திற்கான சிகிச்சையின் விளைவு..டியூப் விட்டதால்.. தொண்டையில் இருந்து குடல் வரை..புண்ணாகி போனது.. திரவ உணவுகள். மட்டுமே நோயளிக்கு..மசாலாவோ.. உப்போ .. துளி சேர்க்காத உணவு மட்டும் தான் வழங்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்திட, உப்பில்லாத கஞ்சி சாதம் தான் எடுத்து வந்திருந்தால் பவித்ரா. சாப்பிட அழைத்தும்.
உணவு வேண்டாம் என்று மறுத்து விட்டான் மாமன்
" என் குழந்தையோட குடும்பமா வாழனும்.அது என்னால பண்ண முடியாது.உன்னால மட்டும் தான் முடியும். " மறைமுகமாக உதவி கேட்டான்.
" இப்ப கூட உன் பிடிவாதம் மாறல, சாப்பிட மாட்டேன் னு மிரட்டி ஹெல்ப் கேட்குற "என கோபம் துளிர மாறாதவனை கண்டித்து சொல்ல.
" ரொம்ப வலிக்குது டி.. தண்ணி மட்டும் தான் குடிக்க முடியுது. அதான் வேணாம்னு சொன்னேன். " தொண்டையில் முள் தைக்கும்.. உணர்வு,எச்சிலை விழுகினாலும் அத்தனை வலி.. கண்ணீரே அரும்பும் அளவு வேதனை தந்தது.
" காயம் கொஞ்சம் கொஞ்சமா தான் ஆறும். வலிய தாங்கிக்க பழகிக்க மாமா.." உணவை பிசைந்து ஊட்டி விட்டாள். நீ தந்த காயங்கள்.. அவள் மனதில் எளிதில் ஆறாது. பட்ட அவமானம், அதன் பலனாய் உனக்கு நிறைய வலிகளை, காயங்களை திருப்பி தருவாள் . தாங்கிட பழகு. என சொல்லாமல் சொல்லி நிற்க.
இருபது நாள்.. சிகிச்சையிலே.. சென்றது. இன்று தான் மாமனை வீட்டுக்கு அழைத்து வந்து, மருந்துகளை தந்து உறங்க வைத்து, அப்படியே கிடந்த வீட்டு வேலைகளை .. தொடங்கி கிட்சனில உள்ள பாத்திர குவியல்களை பார்த்தே மலைப்பு வர.!! ஒரு வழியாக எல்லாம் விளக்கி முடித்து வரவும். ப்ரீத் உறக்கம் கலைந்து விழிக்கவும் சரியாக இருக்க..!
எழுந்து வெளியே செல்ல போனவனை அதட்டினால் .. பவித்ரா..
" எங்கடா .. போற??"
நிலைப்பு இல்லை.. தரையில்..அவள் வேண்டும். அடம் கொண்டது ஆண் மனம்." பிரதிய பாக்க போறேன். அவள பார்த்து பேசனும்.. இங்க கூட்டிட்டு வரனும்.. அவ வீட்டுக் போய் அழைச்சுட்டு வர்றேன்." காதலன் கூப்டிட்டதும்.. பட்ட வலிகளை எல்லாம் உதிர்த்து விட்டு வருவால் என்ற அதீத நம்பிக்கை.!! அவள் காதலை கண்டவனுக்கு.
இறுக்கமான முகத்துடன்" பிரதி அங்க இல்லை. எங்க இருக்கானு யாருக்கும் தெரியலை. விசாரிச்சுட்டேன் மாமா.. பிரதியா உன்ன தேடி வந்தா தான்.. உண்டு. இப்ப இருக்குற நிலமையில உனக்கு ரெஸ்ட் வேணும்.. அவ பழைய நம்பர் கூட யூஸ்ல இல்லை. மறைஞ்சு இருக்கவங்கள கண்டு பிடிக்க முடியாது மாமா.. அவளா வருவா..!! பொறுமையா இருப்போம்.."
அவசரமாக மறுத்தான்.." என்னால முடியாது. அவ வேணும்.. என் குழந்தை வேணும். "என்றான் பிடிவாதமாய்.
" நீ மட்டும் நெனச்சு என்ன ஆகப்போகுது. அவளுக்கு நீ வேணா.. அதான் தேடி வந்திர கூடாதுன்னு ஊர விட்டே போயிட்டா.
" எப்படி வர வைக்கணும்னு எனக்கு தெரியும்."
அழுத்தமேறி வந்தது வார்த்தைகள்.
" இன்னும் என்ன தான் பண்ண போறீங்க.??என் கூட வந்து வாழலைன்னா விஷம் குடிச்சிருவேன் அப்படின்னு மெரட்ட போறீங்களா? இல்லை வற்புருத்தி இழுத்துட்டு வந்து..வாழ போறிங்களா..?"
" எதை வேணா பண்ணுவேன்.பிரதியும் என் குழந்தையும் என் கூடவே இருக்கனும்.."
" உங்க குழந்தை.." எள்ளலாய் ஒரு பார்வை பார்த்து " பிரதி சொன்னா தான் உங்க குழந்தை மாமா.!!நீங்க அப்பா இல்லைனு மறுத்துட்டா என்ன பண்ண முடியும்.??" குத்துகிறாள் என்று புரிந்தது அவனுக்கு .
யோசிப்பது போல் பாவனையில்" பிரதி மேல கேஸ் போடலாம். காதலிச்சு குழந்தை வாங்கிகிட்டு ஏமாத்திட்டா னு, டி என் ஏ டெஸ்ட் எடுத்து பார்க்கலாம். கோர்ட்டுக்கு இழுத்து கஸ்டடி கேட்கலாம். மேலும் மேலும் காயப்படுத்தி கட்டாயப்படுத்தி வேற வழியே இல்லாம உன் கூட வாழ வைக்கலாம். ஆனா சந்தோஷமா இருப்பாளா.? காதல் இருக்குமா? நிம்மதி கிடைக்குமா? உன் மேல வெறுப்பு காட்டுற பிரதிக்ஷா கூட உன்னால வாழ முடியுமா.? உருகி உருகி உன்னை காதலிச்சவ.. உன் முகத்தை பார்க்க பிடிக்காம விலகி போனா தாங்க முடியுமா? இதுக்கப்புறமாவது திருந்துங்க டா..டேய்.. இனிமே..நான் பாத்துக்குறேன். நீ ஒன்னும் கழட்ட வேணாம்.. கொஞ்ச நாள் பொறுமையா இரு, அது போதும்.." என காந்தலாய் பேசும் போதே.. சர்வாவிடமிருந்து கால் வரவும். ஏற்று பேச.. யாரிடம் பேசுகிறாள் என பார்த்தவனுக்கு மூளையில் சூடு ஏறியது..சர்வேஷ் என்றாலே..இவனுக்கு அலர்ஜி.. விஷத்தை விட அதிகம் வயித்தெரிச்சல் தந்தது..அத்தை மகளின் முகத்தில் அவனுக்காக தோன்றும் வெட்கம் பார்த்து மாமங்காரனுக்கு.!!
" சகலைய பத்திரமாக கொண்டு வந்து வீட்டில் சேர்த்துட்டியா"
சகலை என்றதும் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு.." ம்..சேத்தாச்சு.. சேர்த்தாச்சு" மாமனுக்கு பயந்து வாசல் பக்கம் திருப்பி நடக்க.. எதிரே நின்றான் ஈஸ்வரன்..பவித்ரா..
சர்வமும் மறந்து அவனையே..பார்க்க!! பிரிவை காட்டும் வகையிலான மெல்லிய அவன் அணைப்பில் தெளிந்து..உடனே விலகினால்.
அதிர்ந்து " எதுக்குடா இங்க வந்த.." விரட்டுவது போல கேட்க..
முகம் மாறி போனது தலைவனுக்கு.!!
பதைத்து " என் மாமாவ டாக்டர் சத்தமா பேசவோ.. கத்தவோ.. கூடாதுன்னு சொல்லி இருக்காங்க சர்வா.. உன்ன பாத்தா காட்டுக்கு கத்து கத்துவான்.. ப்ளீஸ் கிளம்பு.."என்று கும்பிடும்..பவியின் கையை பிடித்து அருகில் இழுத்தான்..காதலி அவன் மீது மோதி நிற்க..!! காதலர்கள் கண்கள் கலக்கும் முன்.!!
இடையூறாக பவித்ராவின் போனில் அழைப்பு வந்தது..
கலவரம் முகத்தில்..தவிப்போடு.. " நா...வர்றேன்.. நீங்க பாருங்க.." பேச்சை முடித்து.. " சர்வா உடனே பெங்களூர் போகணும். என் கூட வர முடியுமா?? " அவசர படுத்தினாள்.
" வெரட்டுன.. ஏன்..உன் மாமன்காரன இழுத்துட்டு போறது." விரைப்பாக முறுக்கி கொண்டான்.
மெல்ல அவன் கையை பிடித்தவள்..மனதில் 'ப்ரீத் வந்தா பிரச்சனை ..இவன எப்படியாவது ஏமாத்தி அழைச்சிட்டு போகனும்..' கொஞ்சும் குரலில்" சர்வா.. உன் கூட டிராவல் பண்ண ஆசையா இருக்கு. "
"நிஜமாவா?பவி.. இப்படி இப்படியெல்லாம் நீ பேச மாட்டியே.." சந்தேகமாக யோசிக்க.?
வெட்கம் கலந்த சிரிப்போடு.."ஆசையா கூப்டுறேன்.. போன்ல பேசுறதுக்கும் நேர்ல பேசுறதுக்கும் வித்தியாசம்
இருக்குல்ல..சர்வா.டிக்கெட் நானே போடுறேன்.வா..வா போகலாம்.." ஜாலமாய் பேசி.. உண்மையை மறைத்து அவனை தள்ளிக் கொண்டு போனால்.. பவித்ரா.



உமா கார்த்திக்