எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம்.58

Status
Not open for further replies.

uma Karthik

Moderator
♥️ஏக்கம்81 ♥️

பெங்களூருவில் மருத்துவ மாத பரிசோதனைக்கு பிரதிக்ஷாவிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப பரிசோதனையில்,
ரத்த அழுத்தத்தின் அளவு.. மிகவும் அதிகமாக இருக்க. அன்பான அரவணைப்போ.. காதலோ..தாய் மடியோ ..எதுவுமே வாய்காத வெறுமை.. நெஞ்சம் முழுவதும் கவலை, வேதனை, மன உளைச்சல், வயதுக்கு மீறிய துன்பம்.. காதல் ஏக்கம் எல்லாம் ஒன்று கூடி.. ரத்தத்தில் அழுத்தம் ஏற்றியது.

மகப்பேறு மருத்துவர் கடிந்து கொண்டார் " இங்க பாருமா.. பிளட் பிரஷர்.. ரொம்ப அதிகமா இருக்கு. உடனே அட்மிஷன் போட்டே..ஏ.. ஆகணும். உங்க யாரும் இருந்தா வர சொல்லு " என தீவிரமாக அறிவுறுத்தும் குரலில் சொல்ல.

" எனக்கு யாருமே இல்ல " தலையை தாழ்த்தி தரையை வெறித்து பார்க்க.

துளிர்த்த கோபத்தை அவள் நிலையை கருத்தில் கொண்டு அடக்கி "காரணம் இல்லாம வர சொல்ல மாட்டோம். புரிஞ்சுக்கோ.. யாராவது தூரத்து சொந்தக்காரங்க இருந்தாலும் வர சொல்லு அட்மிஷன் ஃபார்ம்ல கையெழுத்து போடணும். அப்போதான் நாங்க டெலிவரி பார்க்க முடியும்." என அழுத்தி கூறினார். துணைக்கு ஆள் வர வைக்க வேண்டியது மிக அவசியம் என புரிந்தது. ஆனால்

பயத்தின் வெளிப்பாடு கலக்கமான முகத்தோடு .. ஒரு துளி கண்ணீரும் துணைக்கு வர " யாரும்..இல்ல.. டாக்டர்.. நான் சைன் பன்னுறேன்.ஆப்ரேஷன் பண்ணுங்க." என்றவள் விழி நீரும் கெஞ்சியது மருத்துவரிடம். மருத்துவ விதிமுறைகள் மீற முடியாத நிலை.

வருத்தத்தோடு " புரியாம பேசாதமா..ப்ரஷர்‌.கூட..கூட ரிஸ்க் அதிகம்.. லேட் ஆக ஆக குழந்தைக்கு ஆபத்து.." நிலையை எடுத்து சொல்லி வரப்போகும் பிரச்சனையின் தீவிரம், துரிதமான முடிவின் அவசரம் உணர்த்த,

கண்ணீரோடு " ப்ளீஸ்.. குழந்தைக்கு எதுவும் ஆயிடுச்சு..நான் உயிரோட இருக்க மாட்டேன்.. அட்மிஷன் போடுங்க.." கையெடுத்து கும்பிட்டு அழ ஆரம்பித்தாள். பிரதி.

" நீ நார்மலா இருந்து ,உனக்கு எந்த பிராப்ளமும் இல்லாம இருந்தா.. தைரியமா நானே அட்மிஷன் போடுவேன். இது ரொம்ப ரிஸ்குமா.. ஹஸ்பண்ட் ஆர் ரிலேட்டிவ் கையெழுத்து வேணும். இல்லாம அட்மிஷன் போட முடியாது. "

வலி தோய்ந்த குரலில் " என்கிட்ட வேலை பாக்குற யாரையாவது வந்து நான் சைன் போட சொல்லவா? அட்மிஷன் போடுவீங்களா??"

அவள் கெஞ்சும் விதம் மனதை பிசைய " அப்படி பண்றது சாத்தியம்னா.. நானே பண்ணி இருக்க மாட்டேனா?? பிரசவத்தை தாங்குற அளவுக்கு உன் உடம்புல தெம்பு இல்ல.. மா.. பிரஷர் ரொம்ப அதிகமா இருக்கு. என்ன வேணா நடக்கலாம். ஹார்ட் அட்டாக் கூட உங்களுக்கு வரலாம்.. வாய்ப்பு இருக்கு. கோமா நிலைக்கு போகலாம். " அவள் உடல் நடுங்குவதை பார்த்து ஆசுவாசபடுத்த " அப்படி தொண்ணூறு சதவீதம் எதுவும் நடக்காது. அப்படியே ஏதும் நடந்தா..? நல்லா பாத்துக்கிறவங்க கையில குழந்தையை ஒப்படைக்கணும். ஒர்க்கர்ஸ் எப்படி குழந்தை நல்லா பாத்துக்க முடியும் பிரதிக்ஷா. யோசி யாரையாவது வர சொல்லு.

நல்லவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சொன்னதுமே தோழியின் முகம் வந்து போனது.." குழந்தையை விட்டுட்டு நான் செத்து போயிடுவேனா டாக்டர் .." கதறினாள் பிரதி. குழந்தையின் வாழ்க்கையை பற்றிய பயத்தில் இருந்தவளுக்கு உயிர் பயமும் சேர்ந்து வர.. உடனே நெடு நெடுவென பயத்தோடு அதிர்ச்சியும், உச்சம் ஏறி மூளையில் உயர் அழுத்தம் அதிகரிக்க மயங்கி சரிந்தாள் பிரதிக்ஷா. நல்ல வேளையாக அருகில் இருந்த செவிலியர் தாங்கி பிடித்ததால் , கீழே விழுந்து விடாமல் தப்பித்தால்.

அவளுக்கு துரிதமாக சிகிச்சை அளித்து இரத்த அழுத்தத்தை குறைக்க மருந்து கொடுத்து.. மயங்கிய நிலையில் பெட்டில் துணைக்கு கூட ஆள் இல்லாமல் கிடக்கும், அவளை பாவமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு.. செவிலியரை அழைத்தார் மருத்துவர்..

" அந்த பொண்ணு பேக் எடுத்துட்டு வந்து செக் பண்ணுங்க.. போன் பிங்கர் பிரிண்ட் மூலியமா அன்லாக் ஆகுதான்னு பாருங்க. அதிகமா இந்த பொண்ணு பேசி இருக்க நம்பர் யாருன்னு பாருங்க. அவங்கள உடனே வர சொல்லுங்க." பிரதியின் நிலை மருத்துவர் மனம் கூட கணக்க தான் செய்தது. அவளது அலைபேசி எடுத்து வந்து கைரேகை வைத்து திறந்து பதிந்துள்ள எண்களை ஆராய்ந்த செவிலியர்.

" மை ஹஸ்பண்ட் அப்படிங்கற நம்பருக்கு அடிக்கடி பேசி இருக்காங்க மேடம்."

" ஃப்ராட் பய..மா வர
மாட்டான்.. குழந்தைக்காக அப்பா முக்கியமா எடுக்குற டெஸ்ட்க்கு கூட வரல, இந்த பொண்ணு தான் தேடி போனா.. டயல் பண்றதே வேஸ்ட்.வேற லேடிஸ் நம்பர் இருக்கா பாரு?

" பவித்ரா னு ஒரு நம்பர்.. இருக்கு.." என்று போன ஸ்கீர்னை காட்ட.

" போன பண்ணி விஷயத்தை சொல்லு.. வர முடியாதுனா.. யார்கிட்ட தகவல் சொல்லனும்னு கேளு.. " கசந்த சிரிப்பை உதிர்த்து பெருமூச்சுடன்

" மை ஹஸ்பண்ட் னு சேவ் பண்ணி என்ன பண்றது.? லவ் பண்ணும் போது லவ்வரா மட்டும் நெனைங்க புருஷனா .. நம்பி உரிமைய கொடுத்தா.. இந்த பொண்ணு கதி தான்.. " பிரதியை விழியால் நோட்டமிட்டு.
" உங்களுக்கும். "

"மேடம் அதை ஏன் எங்கள பாத்து சொல்றீங்க?"
இளம் செவிலிய பெண்கள் பதைத்து அதிர்ந்து முகம் மாறி கேட்க.

" நீங்க லவ் பண்ணுறதா கேள்வி பட்டேன். ?"

" நாங்க.. இந்த ஃபீல்ட்ல இருக்கோம்.சேஃபா இருந்துக்குவோம் மேம்.. "

" ஒழுங்கா .. இருங்க.சேஃப் ஆ இருந்துடாதிங்க. " மறைமுகமாக கண்டித்து, முதுகில் தட்டி விட்டு, அடுத்த வார்ட்க்கு சென்றார். அந்த பெண் மருத்துவர்.

பிரதியின் நிலை சொன்னதும்.. பிளைட் டிக்கெட் புக் செய்து . தோழியை பார்க்க சர்வேஷ்வரனின் துணையோடு.. நல்ல முறையில் பிள்ளை பிறக்க வேண்டும்.. என பயணம முழுவதும் வேண்டுதல் வைத்து, இதோ.. மருத்துவமனை வாசலில் டாக்ஸியில் வந்து இறங்கி விசாரித்தவள்.. பிரதியை பற்றிய தகவல் கிடைக்க.
பாவம் துணைக்கு வந்தவன் அப்பாவியாய், தெரியாத ஊரை வேடிக்கை பார்க்க..!! அதை காணாது அவனுக்காக காத்திறாது உள்ளே பவித்ரா வேகமா செல்ல.. பின்னால் ஒடி வருவது தவிர வேறு வழி இல்லை நாயகனுக்கு. காதலியை நம்பி வந்ததால் இந்த அவல நிலை சர்வேஸ்வரனுக்கு. !!

என்ன ? வேற யாரோ மாதிரியே அத்து விட்டுட்டு போறா.. என நினைத்து.
"ஏய்.. பவித்ரா. ஹஸ்பிடல் எதுக்கு வந்து இருக்கோம்.. எனக்கு எந்த வியாதியும் இல்லை. பயப்பிடாம கல்யாணம் பண்ணலாம். "சர்வா பேபி.. பாவம் நிலமை புரியாமல் கல்யாணத்துக்கு அடி போட .

முறைத்து விட்டு
" சர்வா.. இங்க யார் என்ன கேட்டாலும்.. ஆமா..னு சொல்லு மாத்தி எதுவும் சொல்லக்கூடாது. சரியா "பவி எச்சரித்து செல்ல.!!

கண்ணை கட்டி காட்டில விடுவது போல ஒன்றுமே புரியாமல் குழப்பிய மனதோடு பின்னோடு சென்றான் சர்வா..


" சர்வா.. இந்த
ஃபோம் ல ஷைன் பண்ணு " என இயல்பாக நீட்டகவும்.

அதை வாங்கி படித்தவனுக்கு.. நெஞ்சமே வெடித்து விட்டது.. ஒரு கன்னி பையனை இன்னொரு பெண்ணின் கணவன் என காதலியே .. கையெழுத்திட சொன்னால் !! அதிராதா..? பதறாதா..? அவனும் என்ன செய்வான் பாவம்.!! எச்சில் விழுங்கி பயந்து நிமிர. நேரமே தராமல் .

"சர்வா சீக்கிரம் கையெழுத்து போட்டு கொடு.. அப்புறம் என் மூஞ்ச பாக்கலாம். " கோபமாக சர்வாவை அவசரத்தில் பவித்ரா திட்டியதும்.

" நான் கையெழுத்து போட மாட்டேன். "

" ரேப் கேஸ்ல உள்ள தள்ளிடுவாங்க பரவாயில்லையா?" என்று பவித்ராவின் மிரட்டல் பேச்சை கேட்டு, சர்வாவின் முகம் சுருங்கியது.

திகைத்த அரண்ட அழகனின் முகத்தை ரசித்தவள். " மிஸ்டர் லண்டன் .. அப்றம் ஏர்போர்ட் வாசலை கூட மிதிக்க முடியாது. "மிரட்டி படிவத்தை நீட்டி வலுக்கட்டாயமாக கையெழுத்து கேட்க.?

குழந்தை போல இழுத்து.. " நீ... ஆசையா வானு சொன்னல்ல.. அப்ப புரியலை.. இப்ப புரியுது..
" நொந்து படிவத்தில் கணவன் என்ற கோடிட்ட இடத்தில் அவன் பெயர் எழுத செல்ல..எஸ்.. போடவும் ..

கையில் பட்டென அடித்து " டேய்.. உன் பேரை ஏன் எழுதுற .. என் மாமா.. பேரை எழுது."

"ஆமா.. அவன் பேர் என்ன?" தெரியாதது போல வேண்டும் என்று கேட்டான்.

" ம்..ம்.. உனக்கு தெரியாது. ? ப்ரீத் குமார். "

" பிரதிக்ஷா மேடம் ஹஸ்பண்ட் நீங்க தான சார். "செவிலியர் அழைக்க.
இவன் பாவமாக பவித்ராவை பார்க்க ??சம்மதிக்க சொல்லி கண் காட்டவும் .. மாடு போல தலையை மட்டும் ஆட்டினான்.
நந்திகேஸ்வரனாக.!

" மேடம் உங்கள உள்ள வர சொன்னாங்க " கையோடு அழைத்து சென்று அறையில் விட, திருதிரு முழிகள்.. பயந்த சுபாவம் கொண்ட ஆணுக்கு.
" நீங்க தான்.. பிரதிக்ஷா ஹஸ்பெண்ட் ஆ . "
ஆமாம்.. இல்லை என எல்லா பக்கமும் தலையை ஆட்டினான் சர்வேஷ்.

அருகில் உள்ள நர்ஸிடம் அவனை பார்க்க கண் காண்பித்து " பார்க்க அப்பாவி மாதிரி.. முகமெல்லாம் இந்த மாதிரி ஏமாத்துற பேர்வழிகளுக்கு மட்டும் எப்படி அமையுதோ.? இந்த சார பார்த்தா ஒரு பொண்ண கர்பமாக்கி கைவிட்டவர் மாதிரி ஆ தெரியுது.? "

" மேடம்.. நான் இல்லை.. "

" ஸ்.. நான் பேசுறேன் கேளுங்க மிஸ்டர். அப்றம் பேசலாம்.
" இருபத்தியொரு வயசுல பிளட் பிரஷ்ஸர் வருமா? சொல்லுங்க? பிரசவத்துல அந்த பொண்ணு உயிர் போக கூட சான்ஸ் இருக்கு. இதுக்கு எல்லாம் யார் காரணம்?" சர்வேஸ்வரனை குற்ற பார்வை பார்க்க ' அந்த ப்ரீத் நாய் தான் காரணம் ' பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் வந்ததை நினைத்து உள்ளே புலம்பினான் உத்தமன்.

அவனை அழைத்துச் சென்று அரை மணி நேரம் ஆகவும், பவித்ரா டெங்ஸனோடு ஒவ்வொரு நகமாய் கடித்துக் கொண்டே பத்து விரலையும் தீர்க்க.!

மந்திரித்து விட்டவனாட்டம் வெளியே வந்தான் சர்வேஸ்வரன். வாசலை வெறித்து பார்த்து ஆணி அடித்தது போல் அசைவற்று நிற்க..

"சர்வா" பவித்ரா தோளை உலுக்கிட எந்த உணர்ச்சியும் இல்லை‌ " சர்வேசு..என்ன ஆச்சு டோஸ் ஓவரோ.? டாக்டர் மோசமா திட்ட மாட்டாங்க..

" அந்த அம்மா டாக்டரே கிடையாது. என்ன கிழி கிழிக்குது தெரியுமா? நான் ரேப் பண்ணிட்டேனா.!!
என் மேல கேஸ் போட போறாங்களாம்.!! இந்த ஹாஸ்பிடல்ல விட்டு போறதுக்குள்ள நான் தாலி கட்டி ஆகணுமா.!! பாசமா பேசி பலி கொடுக்குறதுக்கு தான் கூட்டிட்டு வந்தியா?? நான் கூட லவ் பண்ணுற னு நம்பி வந்தேனே.. மோசக்காரி.." பவமாக கத்தவும்.


நக்கலாக காதை பார்த்து " காதுல ரத்தமே வரலையே சர்வா??"

" இங்க வருதுடி" நெஞ்சில் கைவைத்து அழுத்தி.. மூன்று முறை குத்திக் கொண்டு."கொலை பழியை கூட ஏத்துக்கலாம்..இதை நான் எப்படி ஏத்துக்குறது.. அந்த பொண்ணு கழுத்துல நான் எப்படி தாலி கட்டுறது.

" தாலி தான கட்டிக்கலாம் வா" கை பிடித்து தர தரவென இழுத்து செல்ல..

" வெல்லம் அவன் திங்க. வேதனை மட்டும் எனக்கா?? இது அநியாயம் டி.. ட்ரு லவ் வ மிஸ் யூஸ் பண்ணாத.. பவி. என்ன காதலிக்கலானா கூட பரவால்ல.. யாருக்கும் என்ன கல்யாணம் பண்ணி வச்சிடாத." கெஞ்சினான் மழலை போல!!

அவனை சீண்டுவதில் அத்தனை இன்பம் இவளுக்கு. அழகான முகபாவம் அவனுக்கு !! குழந்தை மிரட்டி அழவைப்பது போல இருந்தது. 'சோ.. கியூட் சர்வா.. நீ ' " நீ தான் சொன்ன.. என் மாமா கெட்டவன். அதனால.. நல்லவன் நீ இருக்கும் போது மோசமான ஒருத்தனை அந்த பொண்ணுக்கு ஏன் கல்யாணம் பண்ணி வைக்கணும். "

" இதுக்கு நான் ஒத்துக்கவே மாட்டேன்." முரண்டினான் இவள் காதலன்.

அவள நல்லா வாழ வைக்கணும்னு முடிவு பண்ணிட்டேன் அத நீ நினைச்சா கூட மாத்த முடியாது. முதல்ல உன்கிட்ட யாரு சம்மதம் கேட்கப் போறா.. வாய மூடிட்டு ஃபாலோ மீ.. இல்லை.. டாக்டர்.. போலீஸ கூப்பிடுங்க.." என பயம் காட்ட. செல்ல பிராணியாட்டம் பின்தொடர்ந்தான். 'வேற வழியே இல்ல, அவன காப்பாத்த என்ன கோத்து விடுறியேடி..கேஸ்ல மாட்டுனா..ஆ.. ஃபாரின் பக்கமே போக முடியாதே..' பயந்து அவள் பின்னே ஒடுங்கி, ஒசை இன்றி கதறிய படி ஃபலோவிங் செய்தான் சர்வேஸ்வரன் நாய்குட்டியாக.!!

மயக்கத்தில் இருந்து மெல்ல விடுபட்டவள்.இமைகள் மெல்ல விரிய. எதிரே நிழலாய் ஒரு உருவம் தெரிய .! கண்களை பட்டென மூடி..மூடி திறக்க.. அதிர்ச்சியில் விரிந்த விழிகள் நூல் அளவு கூட மாறாமல் அப்படியே நிலைத்து நிற்க.. அவளையே பார்த்தால்..!! ' பவித்ரா, ' மயக்கத்தில் இருந்து சற்று முன் விழித்ததால். இது கனவில்லை என்பது உறுதியாக புரிய.நம்ப முடியாமல் பவித்ராவை திகைத்து போய் பார்க்க..!! அவளை நெருங்கி வந்தவள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. செலைன் ஏறும் கரத்தை விடுத்து..மறு கரத்தை அழுத்திப் பிடிக்க.. பிரதியின் உடல் மொத்தமாக சிலிர்த்தது.மௌனமே.. மௌனம்.ஒரு சினேகமான கரம்களின் தீண்டலால் .. மொழி இல்லாமல் கிடைக்கும் ஆறுதல் தான் எத்தனை.!

பெண்ணாய் பிரதியின் விழி போக்கை உணர்ந்து கொள்ள முடிந்தது.. தன் மாமனை காண தேடலுடன் தவிக்கும் விழிகள்.. கண்ணீர் கோடுகளாய் வழிய, பவியின் மனம் வருந்தியது.

ஏதோ.. நினைவு வர பவித்ராவை கூர்ந்து கவனித்தால்.. பிரதிக்ஷா ..

தோழியின் தவிப்பை உணர்ந்து கழுத்தில் ஏறியிருந்த காட்டன் ஷாலை கீழே இறங்கி .. "பச். " உதட்டை பிதுக்கி இல்லை என அவனை இழந்து விட்டது போல.. அலத்து சலித்து முகத்தை வைக்க..

இவளுக்கு நெஞ்சில் நிம்மதி படர்ந்தது.. பாய்ந்து தோழியை கட்டி பிடித்து அழுதே விட்டாள் பிரதி.
மொழிகள் அற்ற உணர்வு பரிமாற்றம் ஒன்றுமே விளங்கவில்லை.நம்ம ஆளுக்கு .. ஏன் இந்த அழுகை.. புரியாத புதிராக இருந்தது. ? கட்டாயக் கல்யாணத்தை நினைத்து பயந்து போய் நின்றான் களவாடிய திருடனாட்டம்.!!

இங்கே கண் அசைவில் யார்.? என்ன.? திருமணம் வரை விழிகள் சின்ன சின்ன அசைவுகளில் பிரதி கேள்விகள் கேட்க.?

பவித்ரா இமைகளை விழியோடு சில நொடி சாத்தி.. திறந்து எல்லா உறவும் இவர் தான் என , நாணம் கொண்ட மென்நகையில் சொல்லாமல் சொல்ல.!

இப்போது தான்.. சர்வேஷ்வரனை பார்க்கிறாள் பிரதி.. இதற்க்கு முன் பார்த்தால் தான் கவனிக்கவில்லை. இப்போது மாப்பிள்ளை பார்க்கும் படலம் .. பெண் தோழியாய்.! சாந்தமான முகமே பவித்ராவிற்க்கு சரியான ஜோடி என நினைத்தால் பிரதி.. தயக்கம் விடுத்து " நீங்க ரொம்ப லக்கி அண்ணா.. பவி கிடைக்க .. "

ஆச்சரியத்தில் துள்ளி குதித்தது மனது " நிஜமாவா " பவித்ரா பக்கம் பார்வையை திருப்பிட ' வெய்டிங் லிஸ்ட் ல இருந்த நான் கன்ஃபர்ம் ஆகிட்டேன் என மகிழ்ச்சியில் வாய்யெல்லாம் பல்லாக சிரிக்க.

"பல்ல காட்டாம போ.. " என வெளியே விரட்டி விட்டு, பிரதியின் தலையை வாரி பின்னலிட்டு முடிக்க..வார்டு உதவியாளர் வந்து ஸ்ட்ரெச்சரில் ஆப்ரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் செல்லும் போது, வாயிலில் நுழையும் முன் பிரதியின் கையை பிடித்து " நான் இருக்கேன். " தோழியின் ஒற்றை வார்த்தை அத்தனை மனதிடமும் தெம்பும் தந்தது, இதுவரை பிரசவத்தை எதிர்கொள்ள உள்ளே பயந்து நடுங்கிய இளம் தாய்க்கு.! தனியாக சாவது பிரச்சனை இல்லை. தன்மை நம்பி ஜனனித்த உயிரை விட்டு போய் விடுவோமா? என்ற பயம் தான் அவளைக் உள்ளோடு அழுத்தி கொன்றது. அவளின் உடலை வதைத்து, மன அழுத்தத்தை, இரத்த அழுத்தத்தை அதிகரித்து உச்ச கட்ட அளவிற்க்கு ஏற்றி ,அபாய கட்டத்துக்கு தள்ளியது.

இப்போது ஒருத்தி இருக்கிறால் என்ற நம்பிக்கை அவள் உடலை சீராக்கியது.!!அச்சம் எல்லாம் விலகி. படபடப்பு... துடிதுடிப்பு... அடங்கி, தைரியமாக எதிர்கொண்டாள் தோழியின் நம்பிக்கை கிடைக்க,பிரசவத்திற்காக ஆபரேஷன் தியேட்டர் உள்ளே சென்றால் பிரதிக்ஷா .

கண்கள் கலங்கி நிற்பவளின் கைகளை ஆதுரமாய் பிடித்தான் சர்வேஸ்வரன்.அத்தனை நடுக்கம் .. இவன் கைகளுக்கும் கடத்த.. பற்றிய ஆணின் கையும் நடுங்கியது.

" குழந்தை நல்லபடியா பிறக்கணும் சர்வா, நீயும் வேண்டிக்கோ." அவன் மீது சாய்ந்து, காதலன் தோளை கண்ணீரால் நனைக்கும் தேவதை மீது மேலும் மேலும் காதல் கூடியது.!!

" நல்லபடியா உன் மாமாவுக்கு குழந்தை பிறக்கும் ஏன் பயப்படுற.. அழாதடி... "

" ரெண்டு பேரும் நல்லா இருக்காங்கன்னு சொன்னா தான் மூச்சே வரும் போல. " அரை மணி நேர தவிப்பை தீர்க்கும் வகையில்.. நர்ஸ் அவளிடம் தன் வீட்டின் முதல் ஆண் வாரிசை தர .. கையில் மிதக்கும் வெண் மேகமாய் , கண்கள் திறந்து அவளை மாமன் பையன் பார்க்க..!! அகமகிழ்ந்து போனால் பவித்ரா..' அம்மா.. உன் மருமகன ஜெராக்ஸ் எடுத்து வைச்சுருக்கா பிரதி.. ' தாயிடம் சொல்லி சிரித்தவள்.. நெற்றியில் இதழ் ஒற்றி எடுத்தாள்.

" அம்மா வயித்துல இருந்தப்ப அத்தைக்கு தெரியல டா.தெரிஞ்சிருந்தா உன்ன கஷ்டப்பட விட்டிருக்க மாட்டேன்.மன்னிச்சுக்கடா குட்டி. உன் அப்பனா நீ தான் திருத்தணும். அம்மா கூட சேர்த்து வைக்கனும்.. என வேண்டி.. பிஞ்சு பாதங்களில் கண்ணீர் பட முத்தமிட்டால்.

சர்வேஷ்வரன் குழந்தையை பார்த்த மகிழ்ச்சி தாங்காமல் .. குதுகலமாய் பவித்ராவை தோளோடு அணைத்துக்கொண்டு நெற்றியில் முத்தமிட்டு " நாமலும் இது மாதிரி குழந்தை பெத்துக்குவோமா.?" உற்சாகமா கேட்க.

"ம்..கும் .. வேணா சர்வா " சோகமாக மறுத்தவள் .. தலைவனின் ஏமாற்றத்தால் தொங்கி போன முகத்தை ஏறிட்டு.

" நாம தமிழ் கலாச்சாரத்த பஃலோவ் பண்ணலாம் .. " புரியாமல் அவளை பார்க்க ?

" கல்யாணம் பண்ணிட்டு பெத்துக்கலாம் " என்றவள் வெட்கத்தில் முகம் சிவக்க.!!
" கல்யாணம் பண்ணிக்கலாமா... பவி " உறுதி படுத்திக் கொள்ள கேட்க.

" ம்.. " சம்மதம் சொல்ல சந்தோஷத்தில் எகிறி குதித்தான் அவளவன்.

" தெய்வமே நீ பொறந்து .. என் வாழ்க்கையை செட்டில் பண்ணிட்ட. " பிள்ளையின் பாதத்தில் விழுந்து ஆசி வாங்கியவன் சந்தோஷ கடலில் மிதக்க .!!

பிள்ளை பிறந்த சுவடு கூட தெரியாமல்..மருந்தின் வீரியத்தில் நிம்மதியாய் உறங்குகிறான்.. தந்தையாவன்..!!

பிள்ளையின் ஜனனம் விதியை மாற்றி .. தீராத இருவரின் காதலுக்கு மறுபிறவி கொடுக்குமா?
 
Status
Not open for further replies.
Top