எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம்.59

Status
Not open for further replies.

uma Karthik

Moderator
❤️ ஏக்கம் ❤️

அவள் வயிற்றில் வாசம் செய்ய வேண்டிய மகனை. மருமகனாக கையில் ஏந்திய கன்னியின் கண்கள் பூரிப்பில் கலங்க..!!

பிள்ளையை வயிற்றில் சுமக்காமலே .. கையில் ஏந்திய நொடியே தாய்மையை சுமந்து.. இன்பமாக ஈரமானது அத்தையின் ஜோடி கண்கள்.

" குழந்தைக்கு பேர் செலெக்ட் பண்ணிடிங்கலா? அப்டி இல்லைனா பேர் வைச்சதும் பிள்ளைக்கு பர்த் சர்டிபிகேட் வந்து வாங்கிக்கோங்க. " என சொல்லி செவிலியர் நகர.

"அதி மிளிரன் .. பேர் நல்லா இருக்கா சர்வா? " என அன்பனிடம் கருத்து கேட்க.

"நல்லா இருக்கு. அவங்க தான பேர் வைக்கணும் நீ எப்டி ..?" குழப்பத்தில் தலையை சொரிந்தான் நடப்பது புரியாதவனாய்..

அதற்குள் பவித்ரா குழந்தையை எடுத்துக் கொண்டு தாயிடம் வந்து நின்றால்.பவித்ராவின் கையில் .. தன் உயிர் நகல். பயந்து போய் பார்த்தால். பிரதி..!! இத்தனை மென்மையான தளிர் நான் பெற்றதா? என்ற குழப்பத்தில் சந்தேகமாக கேள்வி எழுந்தது.
" குழந்தைய வாங்கிக்கோ.." பவித்ரா தோழியிடம நீட்ட பயந்து மறுத்தால் பிரதி.!

" எனக்கு குழந்தையை தூக்க தெரியாது பவி.. எதாவது ஆகிடுமோ ..னு பயமா இருக்கு. நீயே வைச்சுக்கோ..! நான் இப்டியே பாத்துக்குறேன்."

தாயின் அரவணைப்பு வேண்டி..குழந்தை அழ தொடங்க.. புரியாமல் பதறினால்.. பிரதி
குழந்தை அழுவதை பார்த்து தாயானவள் கண்கள் கலங்கிவிட்டது.

" என்னாச்சு ஏன் பாப்பா அழறான்." புரியாமல் அழுகுரலில் வினவ.

குழந்தை போல பிரதி அழுவது பார்த்து நகைத்து " பையனுக்கு பசிக்குது. இந்தா புடி" என கைகளில் மென்மையாக புதல்வனை வைக்கவும்.. வாஞ்சையுடன் மகனை விழி விரித்து பார்த்தால். அதிசயமாய் ..!! காதலனின் குட்டி வடிவத்தை கையில் ஏந்திய உணர்வு. தன் வயிற்றில் நெளிந்தவன் கைகளில் இழைகிறான்.. அழகு பொம்மை போல!! ரசித்து கிடந்தால் அந்த அழகான நொடிகளை.!!

ரோஜா நிறத்தில் கருமுடிகள் அடர்ந்து நெற்றியில் அலையாட..!! மகன் கையோடு பொருந்தி
போனதும் கண்கள் தானே நிறைந்தது.. வழியும் விழி துளிகள்... பிள்ளை மீது பட்டுவிடாமல் கண்ணீரை உள்ளங்கையில் உதிர்த்து.. நெஞ்சோடு வாரி அணைத்து இதம் தர, இதயத்துடிப்பின் இசையை கேட்டு வீரிட்டு அழுத குழந்தையும் அமைதியானது அதிசயமே.!!

" பிரதி.. பசியில அழறான். " என்று பவிசொல்ல..
இவளோ.. புரியாமல் விழிக்க..

சர்வாவை வெளிய அனுப்பிவிட்டு.. தையல் போட்டு இருந்ததால் பிரதி குழந்தையை பிடிக்க சிரமப்பட, குழந்தையை தூக்கி வைத்து பால் தர உதவினால்.. பெறாத தாயாக இருந்து பவித்ரா பசியாறிய குழந்தையை அருகில் உறங்க வைத்து .. தோழிக்கு உணவை ஊட்டி விட்ட நிலையில் பேசினால்.

" அதி மிளிரன்.. இந்த பேர் பிடிச்சுருக்கா.?இந்த பேர் குழந்தைக்கு வைச்சுடலாமா.. பிரதி.? பர்த் சர்டிபிகேட்க்கு நேம் கேக்குறாங்க.." தயங்கியபடியே யோசனையோடு தோழியிடம் சம்மதம் கேட்க.

"அதி.. ம்... நல்லாயிருக்கு." மென்னகையோடு பிரதி சம்மதம் சொல்ல.

பூரிப்போடு.." எங்க அம்மா செலக்ஷன்.. நல்லா தான் இருக்கும். அவங்க அடிக்கடி இந்த பெயர் சொல்லிக்கிட்டே இருப்பாங்க பிரதி.. பொறக்க போற பேரப்பிள்ளைக்கு இந்த பேர் தான் வைக்கனும் னு சொல்லுவாங்க. அம்மா இருந்துருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பாங்க. "
பவித்ரா மனம் தாயின் நினைவில் வருந்தியது. "சிறிய அமைதிக்கு பிறகு..

" எல்லாத்தையும் என்கிட்ட சொல்லுவே இல்ல.. குழந்தை உண்டானது மட்டும் ஏன் மறைச்ச.? " பிரதி காதலன் உடன் நடக்கும் சண்டை எல்லாம் சொல்லி அழுது புலம்பி ஆறுதல் தேடுவது பவித்ராவிடம் தான்.மறைக்கக் கூடாததை மறைத்ததனால் தான் இவ்வளவு கஷ்டம்.

" உனக்கும் அவருக்கும் கல்யாணம் ஆயிடுச்சுன்னு நினைச்சுட்டேன். " என உதட்டை குவித்து பாவமாக சொல்ல.

" நல்லா.. நெனச்ச.. என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே..பொய்யை நம்பிகிட்டு .. ஏன் இவ்ளோ கஷ்டப்படணும். " மீண்டும் உணவை ஊட்டிவிடும் வேலையில் இறங்கினாள் பவி.

உணவை விழுங்கி.. மெல்லிய குரலில் சொன்னாள் " குழந்தை உண்டானதும் அவர்கிட்ட தான் முதல்ல சொல்ல போன் பண்ணேன் ஆனா கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.என்ன தொந்தரவு பண்ணாத அப்படின்னு அவர் சொன்னதும். உன்ன தான் கல்யாணம் பண்ணி இருப்பாங்கன்னு.. " அவள் கோபப்பார்வை சந்திக்க முடியாமல் தலை குனிந்து கொண்டு " உண்மை தெரிஞ்சா.. உங்க ரெண்டு பேர் மேரேஜ் லைஃப்க்கு பிரச்சனை வந்திரும் அதான்.. சொல்லாம மறைச்சேன்.

" அவன் தான்..கோபத்துல முட்டாள்தனமா ஏதோ சொன்னா.. அத போய் நம்பியிருக்க.. லூசு..நீ மறச்சா..உண்மை எப்படி தெரியாம போகும். ஏதோ புத்தகத்தில ஒளிச்சு வைக்கிற மயிலிறகா.? யார் கண்ணுக்கும் தெரியாம போக.. உயிர் இருக்க ஒரு குழந்தை டி.. அது பாவத்துல என்ன விழ வெச்சிருப்பியே." வாய்க்குள்ளே முனகி கொண்டே வசவு பாடினால் பவித்ரா. தன் ஹேண்ட் பேக்கில் இருந்த தாலியை எடுத்து பிரதியின் கழுத்தில் ஏதோ கையில் கயிறு கட்டுவது போல கழுத்தில் தாலியை கட்ட.!!

அலண்டு பதறி விலகினால் பிரதி.."பவித்ரா என்ன பண்ற.. " பயந்து கேட்க.?

" தாலி கட்டுறேன்.. தெரியல?? "

" நீ எதுக்கு டி..கட்டுற..?" பதட்டத்தில் நடுங்கியது குரல்

எகத்தாளமாக அவளை பார்த்து " அப்ப சர்வேஷ் அ கட்ட சொல்லவா?? " வெகு இயல்பாக சொல்ல. அதிர்ச்சி அடைந்தது பிரதிக்ஷா தான்.


முன்னாள் காதலி.. இந்நாள் காதலிக்கு ..காதலனுக்கு பதிலாக தாலி கட்டினால் அதிர்ச்சி வராதா.!!

"ஐயோ. வேணா .!!" அதிர்ச்சியில் இவளுக்கு பேச்சே வரவில்லை தாலி கட்டி முடிக்கும் வரை.

இந்த கொடுமையை பார்த்து நெஞ்சை பிடித்து கொண்டான் சர்வா..'என்னை தவிர எல்லாரையும் கல்யாணம் பண்றா..இவ..'
பொறாமையில் அடக்க முடியாமல் துள்ளியது ஆண் மனம்.

தாலியை கழுத்தில் கட்டி விட்டு நிமிர்ந்தவள் தோழியின் முகத்தை பார்த்து

" மனசுக்கு யாருமே மதிப்பு கொடுக்கிறது இல்ல.. பிரதி.
இந்த கயிறுக்கு தான்.. மதிப்பு கொடுப்பாங்க.. வெறும் கயிறு மட்டும் கட்டிட்டு மனசு ரெண்டும் ஒட்டாம வாழ்றவங்க பத்தி எல்லாம் சுத்தி இருக்குறவங்களுக்கு எங்க தெரியும்..?"
இகழ்ச்சியாக புன்னகைத்தாள் பவித்ரா.

" எது அவங்க கண்ணுக்கு தெரியுதோ .. அத மட்டும் தான் போகஸ் பண்ணுவாங்க. இந்த தாலிய கட்டிக்கிட்டு அடிபட்டு, மிதிபட்டு கொடுமை அனுபவிக்கிறது.. சகிச்சுக்கிட்டு வாழ்றது .. அந்த ஒரு பொண்ணுக்கு மட்டும் தான் தெரியும். பல ஆம்பளைங்களுக்கு பொண்டாட்டிங்கற பேர்ல பொணம் தான் வேணும்..
எவ்வளவு கொடுமை படுத்தினாலும் திட்டுனாலும்,எந்த உணர்ச்சியும் முகத்துல காட்டாம, பதில் பேசாம நிக்கிற ஒரு அடிமை தான் வேணும். இப்படிப்பட்ட நரக வாழ்க்கை வாழ.. இந்த கயிறா அவங்களை கொடுமைய தாங்கி நிற்க வைக்குது.

ஆறுதல் சொல்லவும்...ஆதரிக்கவும் யாரும் இல்ல..போக வேற இடம் இல்லை.. அந்த ஒரே காரணத்துக்காக தான் நிறைய கல்யாண வாழ்க்கை நகர்ந்துக்கிட்டு இருக்கு. அடிமை மாதிரி நடத்தாமல் எப்ப அன்பா ஒருத்தவன் வாழ வைக்கிறானோ அப்பதான் அது தாலி .. இந்த உலகம் எடை மட்டும் தான் போடும் பிரதி.. என்ன தப்பு நடந்தாலும் பெண்களை தான் ரொம்ப அதிகமா தப்பா சொல்லுவாங்க. உன் கழுத்துல ஒரு தாலி இருந்து உன்னை யாரும் ஏமாத்திட்டாங்கன்னு வச்சுக்க..யாரோ ஒரு அயோக்கியன நம்பி கல்யாணம் பண்ணி இந்த பொண்ணு கௌரவமா ஏமாந்துருச்சுன்னு சொல்லுவாங்க.. இதே தாலி இல்லாம ஒரு பொண்ணு ஏமாந்து போய் நின்னா.. பல பேரை வச்சு பட்டம் கட்டுவாங்க. இந்த உலகத்துக்கு உன்னோட உண்மையான காதல் தெரியாது.. அதனால நீ அனுபவிச்ச வேதனையும் தெரியாது..குறை சொல்ல மட்டும் தான் தெரியும்..தாலி குறை சொல்றவங்க வாய அடைக்கும்னு அடக்கட்டுமே." திமிர் நிறைந்த கோபத்தோடு அழுத்தமாக பவித்ரா சொல்ல.

" இது தப்பில்லையா பவித்ரா." மனம் ஓப்பாமல் கேட்டால் பிரதி.

" உனக்கு ஒருத்தன புடிச்சது காதலிச்ச .. அதனால நிறைய அவமானப்பட்ட, ஆனா குழந்தைய யாரும் தப்பா பேசிட கூடாது.இத நீ முன்னாடியே செஞ்சிருக்கணும். ஏண்டி கண்டவங்க கிட்ட பேச்சு வாங்கி அவமானப்படனும். பொய்ய தான் இந்த உலகம் அதிகமா நம்பும்.உண்மைய சொன்னதுனால உனக்கு என்ன கிடைச்சது. வீடு இருந்தும்..நூறு வேலைக்காரங்க வச்சுக்க வசதி இருந்தும்..அனாதையா ஒரு வாடகை வீட்டில் வந்து இருந்து இவ்ளோ கஷ்டப்பட்டு இருக்க. என் மாமாவோட பொண்டாட்டி தாண்டி நீ. இனிமே யாரு கேட்டாலும் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொல்லு..என் புருஷன் பேரு ப்ரீத்குமார்னு சொல்லு.. வெளிநாட்டில் இருக்காரு..என்ன வேணா சொல்லு .. யாருக்கும் நம்ம வாழ்க்கை மேல அக்கறை கிடையாது பிரதி..நம்ம வாழ்க்கை கெட்டு போயிடுச்சானு தெரிஞ்சுக்க ஒரு ஆர்வம்.அந்த நல்ல மனசுக்காரவங்களுக்கு. அப்படி இல்ல நாம நல்லா இருக்கோம். அப்படின்னு தெரிஞ்சுச்சாவே அவங்க கண்டுக்காம போயிடுவாங்க. வேற ஏமாந்தவங்க வாழ்க்கைக்கு விமர்சனம் வாசிக்க..!!" மனிதர்களின் பிறர் மீதான அக்கறையே ..பிரச்சனை இருந்தால் ஊதி பெரிதாக்குவதில் தான் என அசால்டாக சொல்லி விட்டாள் பவித்ரா.. உலக நிதர்சனத்தை அழகாக உபதேசம் செய்து.

யாருக்கும் யார் வாழ்க்கையின் மீதும் அக்கறையெல்லாம் இல்லை.. வாழ்க்கை கெட்டுப்போய் பிரச்சனையில சிக்கி இருந்தால்.. அதை பேசி.. ஆராய்ச்சி செய்வதில் ஒரு இன்பம் .. அவ்வளவே.!!

பவித்ரா பிரதிக்ஷாவிற்கு தெரியாமல் ..குழந்தை பிறந்ததை மட்டும் மாமனிடம் மகிழ்ச்சியாக தெரிவித்தாள்.. வர துடித்தவனை அவளது உடல்நிலை காரணத்தைக் காட்டி வரக்கூடாது என்று நிறுத்தி வைத்தால்.. ரத்த அழுத்தத்திற்காக மருந்துகள் உண்பதையும் .. அதிர்ச்சியையோ.. சண்டையையோ.. அவள் உடல் தாங்காது என்பதையும் தெளிவாக எடுத்துச் சொல்லி வரவிடாமல் தடுத்தால்.. என் புள்ளய என்ன பாக்க விட மாட்டேங்கறீங்க இல்ல.. என அழுபவனை .. தேற்றிட பவித்ராவால் கூட முடியவில்லை. தந்தையாக வலித்தது அவனுக்கு..
மருத்துவமனையில் பதினைத்து நாட்கள் கழிய..மெல்ல பேச்சை ஆரம்பித்தால் பவித்ரா.

" இன்னைக்கு டிஸ்டாச் பண்ண சொல்லி இருக்காங்க..உன்னால டிராவல் பண்ண முடியுமா..சென்னைக்கு நம்ம வீட்டுக்கு போயிடலாமா.. " பிரதியின் பதிலுக்காக காத்திருந்தாள்.

" நானுமே ரொம்ப பிடிவாதமா இருந்துருக்கேன். பவி.. உன் மாமா வ தவிர மத்த எதுவுமே எனக்கு தேவையில்லை. இந்த உலகத்தில வாழ்றதே அவருக்காக தான் நினைச்சேன். அப்படித்தான் யோசிச்சேன்.. என்னோட காதல் அப்படித்தான் என்னை யோசிக்க வச்சது. அவர் கிடைச்சா போதும். அவர் கூட வாழ்ந்துட்டா போதும்.. என்ன நடந்தாலும் தாங்கிக்க..மன்னிக்க தான் மனசு சொன்னுச்சி.. குழந்தை பிறந்த அப்புறம் தான் ஒரு விஷயம் புரியுது..இனிமே ஏதாவது பிரச்சனை வந்தா அது எங்க ரெண்டு பேர மட்டும் காயப்படுத்தாது.. அவரோட கோபமும் சந்தேகமும் என் குழந்தையும் பாதிக்கும்.. அதி.. க்கு.. என் மேல உள்ள பாசம் அவர் மேல வெறுப்பா மாறும். என் குழந்தையோட அப்பா அவர் தான் அத ஒத்துக்கிட்டதே எனக்கு போதும். தூரமா இருந்துக்கிறது தான் நல்லது.

" இல்ல பிரதி அவசரப்படாதே..குழந்தை மேல அவனுக்கு பாசம் இருக்காதா..? தினமும் குழந்தைய பிரிச்சிட்டேன்னு சொல்லி எவ்ளோ பொலம்புறான்னு எனக்கு மட்டும்தான் தெரியும். அவசரத்துல ஒரு முடிவு எடுக்காதடி"

" நெஜமாவே அவசரத்தில எந்த முடிவும் எடுக்கல..தெளிவா இப்பதான் பவி நான் யோசிக்கிறேன்.."

" இனிமே எந்த பிரச்சனையும் வராது..நான் பாத்துக்குறேன்.

" நீ இருக்கும் போது தான் இத்தனை பிரச்சனையும் நடந்தது.. யாருக்குமே உங்க மாமா அடங்கல. அவர் மாறவே மாட்டாரு.. பொய்யா கூட ஒரு நம்பிக்கை வர மாட்டேங்குது..அவர் காதலிச்சதுக்காக நான் எவ்வளவு வேணா கஷ்டப் படலாம். என் குழந்தை கஷ்டப்படுத்த எனக்கு விருப்பமில்லை.திரும்பத் திரும்ப உடைய எனக்கு தைரியம் இல்லை. " என பேச்சை முடித்துக் கொண்டாள் பிரதி.

பவித்ராவும் மேலும் அதைப் பற்றி பேசவில்லை..

சர்வேஸ்வரன் தான் பொறுக்க முடியாமல் பவித்ராவை தனி அழைத்து வந்து பேசினான். " நீ அந்த பொண்ணு கிட்ட பேசி புரிய வை..குழந்தைய யோசிச்சு சேர்ந்து வாழ சொல்லு. நீ தொடர்ந்து சொன்னா அந்த பொண்ணு மனசு மாறிடும்."

" அவ மனசு மாறாது. ரொம்ப காயப்பட்டு உடைஞ்சு போய் இருக்கா சர்வா.வற்புறுத்தி அழைச்சிட்டு போய் ரெண்டு பேரையும் சேர வைக்கலாம். வாழ வைக்க முடியாது. ப்ரீத் கூட சேர முடியாம.. பிரியவும் முடியாம தவிக்க வைக்கணுமா..போதும் சர்வா அவ பட்ட வேதனை.. " விரக்தியாக தலை மீது கை வைக்க.

" அப்ப இதுக்கு என்னதான் முடிவு "

" காயத்தோட ஆழம் தெரியாம.. மருந்து எப்படி போட முடியும். பிரச்சனை சரி பண்ண... என் மாமன் தான் வந்தாகணும்.காயப்படுத்தினவன் தான் மருந்தும் போடனும். நம்பிக்கையையும் காதலையையும் புதுசா விதைக்கணும். அவனோட கோபத்தையும் குணத்தையும் மாத்திக்கணும். "

" ம்..கும் .. அவன் மாறிட்டாலும் வாய்ப்பில்லை ராஜா " வெறுத்து சொன்னான் சர்வா.

"ஏன் இல்லை.. ராஜா..புள்ள பாசத்துக்கு அடங்காத அப்பாக்களே இல்லை."உறுதியாக சொன்னால் பவித்ரா.

இரண்டு மாதம் .. தாயையும் சேயையும் எந்த குறைவும் இல்லாமல் பார்த்துக்கொண்டால் பவித்ரா. தோழியின் கவனிப்பில் உடல் நலம் பெற்று தன் வேலைகளை தானே செய்யும் அளவு முன்னேறியது. பவித்ராவின் பயிற்சியில் குழந்தையை பராமரிப்பு எப்படி.. என்பதை ஓரளவு கற்று தெளிந்தால் பிரதி. இரண்டு மாதம் ஆனதால் பவித்ரா வீட்டுக்கு செல்ல அனுமதி கேட்க.. மனமே இல்லாமல் சம்மதித்து வழி அனுப்பி வைத்தால் பிரதிக்ஷா.

இத்தனை நாள் எந்த கவலையும் இல்லை.. பவி உடனிருந்தது அத்தனை தெம்பாக இருந்தது. இப்போது பயம் மனதை கவ்வியது.யாரும் இல்லாத வீடும் தனிமையும் நெஞ்சை அழுத்தியது.. மழை வருவது போல காற்று வேகமாக வீச..திறந்திருக்கும் பால்கனி கதவை மூட வந்தவளை ஸ்கிரீன் துணி மொத்தமாக மூட.. மெல்ல அதிலிருந்து தன்னை விடுவித்து கண்ணாடி கதவை அழுத்தி மூட போராடும் போது. யாரோ.. தன்னை பார்ப்பதாக உள்ளுணர்வு சொல்ல.! பார்வையை கீழே பதிய.. உடலோடு உயிரும் நடுங்கியது.. கைகள் உதறலோடு திரைச்சீலையை வேகமாக இழுத்து விட்டு.. அதன் பின் ஒளிந்து கொண்டு தன் இருப்பை மறைத்தவள்.. கண்கள் குளமானது..சந்தோஷம், தவிப்பு, தயக்கம், வெறுப்பு ,காதல், ஏக்கம் எல்லாம் கலந்து மனதில் சுனாமி அலையாய் அடிக்க.!! அவன் தான் நின்றான் .. பவித்ரா திடீரென சென்றதன் காரணம் புரிந்தது. அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

இறுகிப்போன மனங்கள் கூட இளகிப்போகும் மாயம் எல்லாம் காதலில் மட்டுமே சாத்தியம்.!!

❤️நன்றிகள் 🙏கோடி❤️

உமா கார்த்திக்
 
Status
Not open for further replies.
Top