எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம்.60

Status
Not open for further replies.

uma Karthik

Moderator
❤️ ஏக்கம் ❤️

பிள்ளையை பிரித்து வைத்து..தவிக்க விட்டதற்க்கு ருத்ர தாண்டவம் ஆடப் போகிறான் என்பதை காதல் அனுபவம் எடுத்துரைத்தது.. குழந்தையை பறித்து சென்று விடுவானோ என்ற நினைவே பிரதியை மேலும் மேலும் அழ வைத்தது.

தீர்வை நோக்கி சிந்தணை செல்ல
" பவித்ரா " அவசரமாக போனை எடுத்து அவளது நம்பரை அழுத்தினால் பிரதி.. " ஹலோ.. ஏன் அவர் இங்க வந்து இருக்காரு பவி.. என்ன பண்ண போறீங்க?" உரிமையான கோபத்தோடு தோழியை கேட்க.

" அவன் வந்தா அவன கேளு..என் மேல ஏண்டி கோபப்படுற..?" கடுகடுத்தாள் பவித்ரா.

" சொல்லி வச்சு தானடி எல்லாம் நடக்குது.. நீ போன அடுத்த நிமிஷமே அவர் வந்து நிற்கிறாரு. நீ சொல்லாம அவருக்கு இந்த அட்ரஸ் எப்படி தெரியும்..? " பிரதி சரியாக கேள்வி கேட்டு பவித்ராவை மடக்க .

உணர்வு பூர்வமாக வெளிவந்தது வார்த்தை" உனக்கு இருக்க மாதிரி தான மாமாவுக்கும் குழந்தை மேல பாசம் இருக்கும். அவன் புள்ளைய பாக்கணும்னு ஆவல் இருக்காதா."

"அவர் உறவே வேணாம் னு நான் தான் ஒதுங்கிட்டேனே.. திரும்ப ஏன் வந்து தொந்தரவு பண்ணனும். "

தொந்தரவு என மாமனை சொன்னதும் கோபம் தீயாய் பரவ " இந்த உறவப் புதுப்பிக்கவோ ..உன்னை காதலிக்கவோ .. யாரும் அங்க வரல .. அவன் பிள்ளைய பாக்க விடு.. குழந்தை மேல சமமான உரிமை அப்பாவுக்கும் இருக்கு.. என் மாமா அதிய பாக்க தவிக்குது டி .. ப்ளீஸ் புள்ளை முகத்தை ஒரு தரம் பாக்க விடு.. உன்ன பிரிஞ்சுப்படுற வேதனை போதும்..டி.. குழந்தைய பிரிச்சு தண்டனை கொடுக்காத.. பாக்க ஒரே ஒரு வாய்ப்பு ப்ளீஸ் பிரதி."

பதட்டம் ஏறியது வார்த்தையில் " அவர பத்தி எனக்கு தெரியும் வந்தா போக மாட்டாரு.. குழந்தையை தூக்கிட்டு போயிடுவாரு.. எனக்கு பயமா இருக்கு பவி.. " பேசும் போதே.. பிரதியின் கண்கள் லேசாய் கலங்கியது.

எரிச்சலாகியது பவித்ராவிற்க்கு" ஓவரா பண்ணாத.. உனக்கு உடம்பு சரியில்லன்ற ஒரே காரணத்துக்காக தான் குழந்தைய பாக்க கூட ப்ரீத் வரல.. உனக்கு எதுவும் ஆயிடக்கூடாதுன்னு மனச கட்டுப்படுத்திட்டாங்க எங்க மாமா.. பாவம் தெரியுமா.? பாக்க உரிமை இல்லையா என்ன?? உனக்கு புடிக்கலைன்னா நீ பிரிஞ்சிரு .. குழந்தைக்கு அப்பா வேணாமா.?? தப்பு பண்ணவங்க திருந்துவாங்க பிரதி.. ஒரு தடவை பார்க்க வாய்ப்பு கொடுத்தா என்ன..?? வரம் கொடுத்தவனுக்கு காட்டலைன்னா எப்படி?? " ஊசியை வார்தையில் ஏற்ற ..

" நீ ஏதோ பிளான் பண்ணிட்ட, அது மட்டும் எனக்கு நல்லா தெரியுது.. நான் நிம்மதியா இருக்குது உனக்கு பிடிக்கலையா டி திரும்பி வரணும் சந்தேகப் படணும். சண்டை போடணும். நான் அழணும்.. அதான உனக்கு வேணும்." என பிரிதியின் அழுகுரல் கேட்க..

" சரி நான் போன் பண்ணி போக சொல்லிடுறேன். நீ தனியா நிம்மதியா இருமா.. "என்று
போனை துண்டிக்கும் முன்.

" மேல வர சொல்லு.. ஒரு தடவ பார்த்துட்டு போயிடணும்."

" ம்...ம்... உடனே போய்டும் என் மாமா.."என்று வாக்கு கொடுத்தால்.

காலிங் பெல் சத்தம் கேட்டு கையை பிசைந்து கொண்டு நின்றாள் பிரதிக்ஷா.. அவனை எதிர்கொள்ள தயக்கம் ஒருபுறம் என்றால்.. மனது மாறிவிடுமோ எனும் பயம் தான்.. அதிகம்.!! குழந்தை பார்க்க விடாமல் தடுக்கும்.. பழிவாங்கும் புத்தி அவன் காதலிக்கு கிடையாது..!

அவனைப் பார்த்தால் அழவே கூடாது என்று மனனம் செய்து கொண்டால்.. பிரதிக்ஷா ..

காணும் முன்பே விழியில் அடைமழை பெய்தது.. என்னதான் வெறுப்பது போல காட்டிக் கொண்டாலும், ஆழ் மனம் அவனுக்காக ஏங்குவது உண்மை.. மனதை திடப்படுத்திக் கொண்டு கதவை திறந்தால் பிரதிக்ஷா..

எதிரில் நிற்பது அவன் தானா என்று சந்தேகம் காதலிக்கே வந்தது..

உடல் மெலிந்து.. முகம் கறுத்து ..கண்கள் ஒளி இழந்து.. இதழ்கள் கருமை பூசியது போல.. தாடிக்குள்ளே..மொத்த முகமும் மறைந்து விட்டது..கலங்கிய விழிகளோடு ஏக்கமாக அவளை ப்ரீத் பார்க்க..!!

அதை தாங்க முடியாமல் திரும்பி நின்றாள் பிரதி..

முகம் பார்க்க பிரியப்படாத அளவு வெறுக்கிறாள் என இப்போதும் கூட தவறாகத்தான் புரிந்து கொண்டான்.. ப்ரீத்.
அவன் நிலையை பார்த்து கலங்கும் விழியையும் .. மனதையும் .. மறைக்க அவள் படும் பாடு கடவுளுக்கே வெளிச்சம்.!! பிரதி வேகமாக உள்ளே சென்று தன் அறையின் கதவை மூடிவிட்டு அழுதாள்.


கண்களை சுற்றிலும் சுழல விட்டு வீட்டை ஆராய்ந்து பார்த்தான்.. காதலன்.
இது ஒரு
அடுக்கு மாடிக்குடியிருப்பு.. மூன்றாவது தளத்தில் ஒற்றை படுக்கையறை வசதி கொண்ட வீடு.. ஒன்று மட்டும் விளங்கவில்லை.. கடல் போல வீடு இருக்கும் போது தனியாக ஏன் வந்து இங்கே இருக்கிறாள்.. அது தான் அதிபனுக்கு புரியவில்லை.

திருமணத்திற்கு முன்னால் பிள்ளை கொடுத்தவனுக்கு காரணம் தெரியவில்லையாம்.!! இவன் நிலையில் எந்த மாற்றமும் இல்லை..
பிள்ளையையும் பழியையும் இவன் சுமக்கவில்லை..
அதனால் சுற்றி இருக்கும் யாராலும் பாதிப்பில்லை..சமுதாயம் இவனால் அவளுக்கு தந்த சவுக்கடிகள் எல்லாம் தாங்கியவள்..நெஞ்சம் பொறுக்க முடியாமல் ஓடி ஒளிந்து வாழ்ந்த கதை.. ஆண்மகனாக தவறு செய்து.. அழுக்கில்லாமல் சொல்லால் அடிப்படாமல்..ஊரார்க்கு அடையாளம் தெரியாத விதைத்தவன்..அறிய வாய்ப்பில்லை.!!

அதெல்லாம் உணர ஒரு ஆண் பெண்ணாக பிறவி எடுத்தால் தான் முடியும்..!!

தாய் அழுவதை உணர்ந்ததால் அதி மிளிரன் அழுக ஆரம்பிக்க..!!

பிள்ளை அழுகுரல் தந்தையால் உணர்வுகளை அடக்க முடியவில்லை.. வேகமாக உள்ளே சென்று வாஞ்சையாக பிள்ளையை தூக்கி நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.. மகன் அழுவதை பார்த்து தந்தைக்கு கண்ணீர் பெறுக்கெடுக்கிறது.. !!

தன்னை அழ வைக்கும் போதெல்லாம்.. கல்லாக நின்றவன் பிள்ளையழும் போது மெழுகாய் உருகுவது.. கோபத்தையும் பொறாமையும் கிளப்பி விட்டது..

"குழந்தைக்கு பசிக்குது போல"எங்கேயோ பார்த்துக் கொண்டு சொல்ல.

அவள் முன்னே வந்து.."அப்ப சீக்கிரமா பால்குடு.."என்று அதிகாரமாக அவசரப்படுத்தினான்.. அவள் மார்புக்கு நேராக பிள்ளையை நீட்ட பயந்து தான் போனால் பிரதி..!! குழந்தையை வாங்கியவள் சங்கோஜமாக நெளிய.. ஆணி அடித்தது போல் எதிரே அப்படியே பார்த்துக் கொண்டே நின்றான் வெக்கம் இல்லாமல்..


பத்தி கொண்டு வந்தது அவளுக்கு " வெளியில போங்க." நாகரீகமாக வெளியேறச் சொன்னால் தாயவள்.

கேட்கிறான் பாரு...
கேனப்பய மாதிரி கேள்வி" ஏன் போகனும்" அறிவாளித்தனமான கேள்விக்கு பதிலுக்காக காத்திருந்தான் காதலன்.

சீ..என்ற நிலையில் பிரதி.." நீங்க போகலைனா..குழந்தை அழுதுகிட்டே தான் இருப்பான்"

" ம்..கு..ம்..." நடந்த சில நல்ல சம்பவங்கள் எல்லாம் நெஞ்சில் நிழலாக வர..' எனக்கு தெரியாதா..' சலித்துக் கொண்டு அறையை விட்டு வெளியே சென்றான் கொண்டவன்.

வெவஸ்தையே இல்லாத என்ன ஜென்மமோ .? என தன் தலையில் அடித்துக் கொண்டு.. பாலை புகட்டினால் பிரதி.. மகனுக்கும் திட்டு..விழுந்தது. " நான் தூக்கும்போது அழுத தான.?? அவர் தூக்கும்போது ஏன் அழவேயில்லை.. தரிச்சதிலிருந்து கண்டுக்காத இந்த அப்பன் மேல இவ்வளவு பாசமா உனக்கு.?"பிள்ளையை அதட்டினால்.. சிறு பிள்ளைத்தனமாக தந்தை மீது தாயின் பொறாமை.!!

கதவை திறந்தவள் அரண்டுவிட்டால்.. முட்டுவது போல முன்னே அவன் இருக்க.. தந்தை பிள்ளைக்காக காத்திருப்பது தெரிந்தும்.. மனதே இல்லாமல் அதியை அவனிடம் நீட்ட.. வெடுக்கென பிடுங்கிக் கொண்டான்..

உடனே கீழே அமர்ந்து தோள் பையைத் திறந்து..கீழே தலைகீழாக கொட்டி கடையை விரிக்க‌..!!

மாயோன் வித்தை காட்டுவதை வேடிக்கை பார்க்க சோபாவில் அமர்ந்து விட்டால் பிரதி..

நடப்பதை எல்லாம் பார்த்து பேரதிர்ச்சி இவளுக்கு தான்..!! கன்னத்தில் கை வைத்து .. திகைத்துப்போய் பார்ப்பது இவள் முறை..!!

காதலிக்கும் போது விளங்காத ஒரு விஷயம் இப்போது தெளிவாய் புரிந்தது..

சீக்கிரமே கல்யாணம் குழந்தைக்கு..ஏன் அவசரப்படுத்தினான் என்பது இன்று விளங்கியது.

சீ.. அதுக்காக தான் என்று காதலனை சரியான காஜி..என பெண் தவறாக நினைத்ததும் உண்டு..!! ஆனால் மன்னவனுக்கு குழந்தை பராமரிப்பு.. கைவந்த கலையாக இருக்கிறது..பக்கா டாடி மெட்டீரியல் என்று புரிந்து கொண்டால்.

ஒரு மணி நேரம் அவள் நடுங்கிக் கொண்டு போராடும் விஷயத்தை ஒரு சில நொடிகளில் அழகாக செய்து விட்டான்.. வெந்நீரில் துணியை நனைத்துப் பிழிந்து போட்டு துடைத்து.. குழந்தைக்கு அழகாக மையிட்டு.. பவுடர் பூசி உடைகளை மாற்றி..!! அதிமிளிரனை..அழகு மிளிரனாக்கி..

" குழந்தைகளுக்கு பகல்ல பேம்பர்ஸ் போடக்கூடாது காத்தோட்டமா தான் வச்சுக்கணும் ஆம்பள பையன்.. அப்புறம் பின்னாடி பிரச்சனை வந்துரும்.." பிள்ளையின் சந்ததியை கருத்தில் கொண்டு.. ப்ரொபசர் போல கிளாஸ் எடுக்கிறான் அவளுக்கு.

அதிர்ந்து பார்ப்பவளுக்கு ஒன்று மட்டும் புரிந்தது. இவன் ஏதோ ஒரு முடிவோடு வந்திருக்கிறான்.

ஒரு மணி நேரம் குழந்தையோடு ஒட்டிக்கொண்டு விளையாடும்.. காதலனை கால அவகாசம் முடிந்து விட்டது என துரத்த மனம் வரவில்லை அவளுக்கு..!!

குழந்தை அவன் கையிலே தூங்க.. கண் கொட்டாமல் ரசிப்பவன்.. கை வலித்தாலும் நொடி கூட குழந்தையை கீழே வைக்கவில்லை.. இவனிடம் போய் வீட்டை விட்டு வெளியே போக எப்படி சொல்வது? தயங்கிக் கொண்டு நின்றால் பிரதிக்ஷா.

" கு..கு...குழந்தை தான் பாத்துட்டீங்களே.. போ.. போ.." முடிக்க முடியாமல் வார்த்தையை இழுத்தால்.

" என்னால என் குழந்தை விட்டு போக முடியாது. " எனும் சொல் உறுதியாக வந்தது தந்தையிடமிருந்து.

கோபம் மிகுதியாக கத்தினால் " என்னால உங்க கூட இருக்க முடியாது.. "

நிதானத்தை கடைபிடித்தான்..மெல்லிய குரலில் அழுத்தமாக.." உன்னை கூட நான் இருக்க சொல்லல.. என் குழந்தையை விட்டு என்னால போக முடியாது. "

"எதை வச்சு உங்க குழந்தை னு சொல்றீங்க.? அன்னைக்கு கேட்டிங்களே..? நேத்து அவன் ... இன்னைக்கு நான் .. நாளைக்கு யாரு .? அப்படின்னு..?? நானே சொல்றேன் இந்த குழந்தைக்கு நீங்க அப்பா இல்லை..தயவு செஞ்சு வீட்டை விட்டு போங்க." ஆத்திரத்தில் வரம்பற்ற வார்த்தைகளை சொன்னால் காதலி.

"கையை முறுக்கி கொண்டு நாம்புகள் எட்டி பார்க்க..! கண்ணில் கோபம் தெறிக்க..முகம் இறுகிப்போய் அமர்ந்திருந்தானே தவிர.. ஒற்றை வார்த்தை கூட தவறாக பேசாதது ஆச்சரியமே..!!" சண்டை வரட்டுமே என்று தானே இந்த வார்த்தையை விட்டால்.

'என் புள்ள இல்லன்னா எதுக்குடி என்னை டெஸ்ட்க்கு கூப்பிட்ட ..' இதை சொல்வான் என எதிர்பார்த்து காத்திருந்தால்.

ஆனால் சொரணையே இல்லாதது போல் அமைதியாக.. கற்ச்சிலையாக அமர்ந்து காதலிக்கு கலர் கலர் பல்பாக கொடுத்துவிட்டான் ப்ரீத்.

காதலியாக இருக்கும் போது வேறு ஆண்.. யாராவது கிட்ட நெருங்கி இருந்தால் கூட நடக்கும் சண்டை என்ன..?பேசும் பேச்சு என்ன..? அடி கூட வாங்கி இருக்கிறாள்.. என் பிள்ளைக்கு நீ அப்பா கிடையாது என்று சொல்லும் போது இப்படி ஜடமாக அமர்ந்து இருக்கிறான்..!!

'திருந்திட்டானா? மாறிட்டானா..?'
ஆயிரம் கேள்விகள் எரிமலையாய் மனதிலே வெடித்தது..

மகனின் தந்தையின் திடீர் மாற்றத்திற்கான காரணத்தை அறிய பவித்ராவுக்கு கால் செய்ய பிஸி என்றே வந்தது.. அப்போது தான்..உரைத்தது யாரோடு பேசுகிறாள் என்று. அவன் செவியில் ப்ளூடூத் கருவி பொருந்தி இருக்க.புரிந்து போனது பொறுமையின் சிகரமாக எரிமலை ஏன் அமர்திருக்கிறது என்று..பவித்ரா மீது கொலை கண்டு வந்தது..

இவள் அப்படி பிள்ளையே
உன்னுடையது.. இல்லை என அவதூறாக பேசும் போது அங்கே என்ன நடந்தது என்றால்..!!

அழைப்பில் பவித்ரா " மாமா.. பிரதி சொல்ற எதையும் நம்பாதே..உன்ன கோபப்படுத்துறதுக்காக பண்றா..உன்னோட குழந்தை வயசு போட்டோ.. இரு வீட்ல போய் போட்டோ எடுத்து அனுப்புறேன்.. ஒரு வித்தியாசம் பிள்ளைக்கும் உனக்கும் முடிஞ்சா அவள காட்ட சொல்லு..என் மாமன குட்டியா ஜெராக்ஸ் எடுத்து வச்சுக்கிட்டு.. என்ன ஏத்தம் இருந்தா இப்படி எல்லாம் பேசுவா.. நான் வந்து பேச வா .. மாமா.."

" வேணாம்.. நான் பாத்துக்குறேன்." அழைப்பை துண்டித்தான் ப்ரீத்.

தாங்காத கோபத்தில் பிரதிக்ஷா மிரட்டல் விடுத்தால் " இப்ப நீங்க வீட்டை விட்டு போறீங்களா..இல்ல குழந்தை எங்கையாவது கண் காணாத இடத்துக்கு நான் தூக்கிட்டு போயிடவா..? நீங்க நெனச்சாலுமே கண்டுபிடிக்காத மாதிரி என்னால கடைசி வரைக்கும் பிள்ளையை கண்ணுல காட்டாம வளர்க்க முடியும்..

மிரட்டுறதுக்காக நான் சொல்லல.. எல்லாம் பண்ணிட்டு..இப்ப வந்து நின்ன உடனே நான் உங்களை ஏத்திகிட்டு வாழணுமா..?
நான் பட்ட ..வலி .. அவமானத்தையெல்லாம் மறந்துவிட்டு உங்கள மன்னிக்கணுமா.?என் புள்ள உங்கள மாதிரி ஒருத்தவர அப்பானு கூப்பிடக்கூடாது " இந்த வார்த்தையை முடிக்கும் போது உணர்வு மிகுதியால் அழுதுவிட்டால்..

அணைத்து ஆறுதல் சொல்ல துடித்த மனதை அடக்கினான்.. "அப்பாங்கறதோட உரிமைய எடுத்துக்க நான் வரல பிரதி. அப்பாவுக்கான கடமை செய்ய வந்து இருக்கேன்.என்ன அப்பானு எல்லாம் உன் புள்ளை கூப்பிட வேணாம்."

" என் புள்ள வளர்ந்து உங்களை யாருன்னு கேட்டா என்ன சொல்றது "

" குழந்தை பாத்துக்க ஒரு கேர் டேக்டர் வச்சு தான ஆகணும்.. அது நானா இருந்துட்டு போறேன்..அப்பாகிற அடையாளம் எனக்கு வேணாம்.. "

" உங்கள நம்பி எப்படி நான் என் கூட வச்சுக்கிறது .. திரும்ப சண்டை போட்டா .. சந்தேகப்பட்டா.."ஒரு திட்டத்தோடு தான் இந்த கேள்வியை கேட்டால்.

" ஒரே ஒரு தடவை நம்பு.. எந்த வகையிலயும் நான் உன்னை காயப்படுத்த மாட்டேன்.. அப்படி காயப்படுத்தினா.. வீட்டை விட்டு நானே போயிடுறேன்." என இழந்த நம்பிக்கையை காதலியிடம் மீட்க..உறுதியளித்தான்.

" வெறும் வாய் வார்த்தைய நான் எப்படி நம்புறது.."

நம்பாமல் கேட்கவும்" நம்ம குழந்தை மேல சத்தியமா சொல்றேன்.." குழந்தையிடம் சென்று அமர்ந்து கொண்டான் ப்ரீத்..


அவனுக்கான சோதனையை ஆரம்பித்தால்.." ஹலோ நான் பிரதிக்ஷா பேசுறேன்.."

" சொல்லுங்க பிரதிக்ஷா மேடம்" ஆணின் குரல் கேட்டது.

" ஆஃபீஸ் பெண்டிங் பைல்ஸ் எல்லாம் எடுத்துக்கிட்டு நாளைக்கு நான் சொல்ற அட்ரஸ்க்கு வர முடியுமா அருண் "

யோசனையோடு தன் சந்தேகத்தை கேட்டான்." தனியா அப்பார்ட்மெண்ட்ல இருக்கிறதுனால ஆபீஸ் ஒர்க்.. எடுத்துட்டு வரக்கூடாதுன்னு சொன்னீங்களே மேடம்.."

" இப்ப நான் தான வர சொல்றேன். காலையில சீக்கிரமா வந்துடுங்க" கர்வமான புன்னகையோடு அழைப்பை துண்டித்தால்..பிரதிக்ஷா ஆதிகேசவன்.


டெக்னிகலா ஹெல்ப் பண்ற இல்ல பவி.. லவ் பண்ண எனக்கு தெரியாதா.. உன் மாமாவோட வீக்னஸ் எது னு.. நாளைக்கு காலைல உன் மாமன வெறி புடிச்சவனா நான் மாத்தி காட்டுறேன்.'

❤️நன்றிகள் 🙏கோடி❤️

உமா கார்த்திக்
 
Status
Not open for further replies.
Top