எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம்.61

Status
Not open for further replies.

uma Karthik

Moderator
❤️ ஏக்கம் ❤️

முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தால் பிரதிக்ஷா.. தலைவலிப்பதை சோர்ந்து போன முகம் கண்ணாடியாக பிரதிபலித்து.

சுட சுட இஞ்சி டீயின் மணம்.. நாசியில் நெருட .. தானாக தலை மெல்ல திரும்ப ப்ரீத் கையில் தேநீரோடு நிற்பதை பார்த்து .. முகத்தை திருப்பிக் கொண்டால்.. பிரதி.

சில நொடி தயங்கி பின் "டீ.. குடிச்சா.. கொஞ்சம் பெட்டரா ஃபீல் ஆகும்." அக்கறையோடு அருகில் உள்ள மேசையின் மீது வைக்க.

முறைப்போடு " டீ எல்லாம் இப்ப நான் குடிக்கிறது இல்ல.. அது சில கசப்பானவங்களை ஞாபகப்படுத்துறதுனால விட்டுட்டேன். " வலி தாங்காமல் தலையை அழுந்த பிடித்துக் கொண்டு காதலி பேசிவிட காயம் பட்டது போல வலித்தது. கசப்பான காதலனுக்கு !!

அவளே மறுத்து உன் நினைவும் கசப்பானது என சொன்னதும்.. ப்ரீத் அமைதியாக டீயை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றுவிட, தன்னிடம் எகிறி குதிக்காத அவன் அமைதி அரிதான அதிசயமே.!

காயப்படுத்தும் நோக்கத்தில் வேண்டாம் என்று மறுத்து கூறினாலே தவிர.. இருந்த தலைவலிக்கு ஒரு டீ குடித்தால் தேவலாம் போல தான் இருந்தது.

பத்து நிமிடங்கள் கடக்க,ஒரு ட்ரேயில் ஜூஸ், காபி, பாதாம் பால் ,ஆப்பிள், கிரேப்ஸ், பூஸ்ட், ஹார்லிக்ஸ் என மொத்தமாக இருக்கும் எல்லா வகையிலான பானத்தையும் கலக்கி எடுத்து வந்து விட்டான்.. பிடிவாதம் (காதல்) மிகுந்தவன்.

' ஐயோ..என்ன பண்றாரு.? ' அப்படின்னு அவள் புரியாமல் பார்க்க..!

கண்ணாடி கிளாஸ்கள் நிரம்பிய வகை வகையான பானங்கள் அடங்கிய தட்டை வெறித்து பார்த்துக் கொண்டே இமைகள் உயர்த்தி.. அவனை நோக்கி பார்வையை திருப்ப..? சிரித்த முகத்தோடு செய்தியை விளக்கினான்.

" பிரதிக்ஷா.. இதுல எது உங்களுக்கு கசக்காதோ அதை குடிச்சுருங்க.." குரலில் கொஞ்சம் நக்கல் தூக்கலாக..

அதை உணர்ந்த பிரதியோ.. அக்கினியை அள்ளி பார்வையால் அவன் மீது கொட்ட.. மெல்லிய சிரிப்போடு கண்களை மூடி..இமையில் அணைத்துக்கொண்டான் காந்தலான அவள் விழி சிந்தும் வேள்விகளை.!!

" திமிரு.." என முனகி, கொண்டு வந்த எதையும் அருந்தாமல். ஹாலில் தூங்கிய பிள்ளையை தூக்கிக் கொண்டு அறைக்குள்ளே சென்று விட்டாள் பிரதி.

குழந்தையும் பிரதிக்ஷாவும் தூங்கும் வரை காத்திருந்து விட்டு.. மெல்ல கதவை திறந்து எட்டிப் பார்த்தான் ப்ரீத்.

தலைவன் வந்ததால் வெளியே காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் உள்ளே பரவிய நிம்மதியில் இன்று நேரத்திலே உறக்கத்தை தலையணை பரிசளிக்க..புன்னகை முகமாக நிம்மதியாக உறங்கினால் பிரதிக்ஷா .

இதற்க்கு முன் பவித்ரா மெத்தையின் ஒரு பக்கம், பிரதி ஒரு பக்கமாக படுத்து உறங்கிய பழக்கத்தில் குழந்தையை ஒரு பக்கம் படுக்க வைத்து இவளும் உறங்கிட..

மெல்ல பூனை போல அறை கதவை திறந்து வைத்து விட்டு சத்தமே வராமல் மெல்ல அடி மேல் அடிவைத்து உள்ளே வந்தவன். பிள்ளை இருக்கும் பக்கம் சுற்றிலும் நகராதவாறு தலையணையை எடுத்து வந்து அரணாக அடுக்கி ..!

பிள்ளை சுமந்ததால் பேரழகையும் சுமக்கும் அவளின் முகத்தை ஆழமாக ரசித்து உஷ்ணமாக மூச்சை இழுத்து விட்டு ஏக்கமா ஒரு பார்வை பார்த்து ..

'இனிமேல் இங்கே நின்றால் தாங்காது சாமி..' எக்குத்தப்பாக ஆசை எழ.. ஏதாவது நடந்து விடுமோ .. என பயந்து வெளியே வந்து சோஃபாவில் அவள் முகம் தெரியும் பக்கம் மாறிப் போய் படுத்தான்.. ப்ரீத்.


உறங்கும் ஒருத்தியை பார்க்க.. பார்க்க தூக்கம் வராமல் அவள் மீது காதல் வந்தது..!!
அவன் ஆசை அனுதினமும் காணும் அவள் முகமே..!! இரவு பகலாக ரசித்து கிடக்க வேண்டிய விழிகள்.. இது நாள்வரை காணாது பட்டினி கிடக்க, இத்தனை நாள் தாகம்.. அடங்கிப் போனது அருகில் ஒளிரும் தேவதையின் முகம் கண்டு..

பிரதியை பிரிந்த போது கழுத்து வரை குடித்தால் கூட அவளின் நினைவுகளால் உறக்கம் வராமல் தவித்த இரவு ஏராளம்.

இவள் அருகாமை தான் நிம்மதி. இவள் காதல் தான் என்றும் தான் தேடும் தீராத போதை என நினைத்து இமை நிறைவாய் மூட உறக்கியது காதல் மேவிய விழிகள்.!

உயிரானவன் மீண்டும் தன்னை காதலோடு தேடி வந்தும்.சூடு பட்ட பூனையாக ஏன் இத்தனை பயம் இந்த உறவு மீது என்று அவளுக்கு புரியவில்லை.. சேர முடியாமல் தவிப்பதும் சேர்ந்து பிறகு உடைவதும் .. தானே தன் விதி.! சேரவும் வேண்டாம் பிரியவும் வேண்டாம் .. என தெளிவாக தப்பாக முடிவெடுத்தாள் பிரதி.

அவன் மீதான நம்பிக்கை இழந்ததின் வெளிப்பாடு அது.! புரிதலில்லா காதல் கசந்து விட்டது.

மீண்டும் அவனை பிழையாக காதல் செய்ய துணிவில்லை பேதைக்கு.!!

இன்று அவனுக்கான சோதனையோடு பொழுது விடிந்தது..

தொடர்
காலிங்பெல் சத்தத்தோடு
கதவைத் திறந்தவன் முன்னால்.. பொறுமையின் சோதனையாக வந்து நின்றான் அருண் குமார்.அப்போதே நாலறை கொடுக்க பரபரத்த கைகளை அடக்கினான். தன் கோபம் கூட இப்போது சந்தேகமாக பார்க்கப்படும் என்று தெளிவு வந்திருந்தது. பிரிவால் கிடைத்த அனுபவம் இது.


அருண் வாசனை திரவியத்தில் குளித்து வந்திருந்தான். ஜீன்ஸ், ஃபார்மல் சர்ட், கூலர்ஸ் அணிந்து கொண்டு அழகாய் நிற்க.!!

முகம் கூட கழுவாமல் நிற்கும் இவனுக்கு பொறாமையில் , சருகாய் அவன் இதயம் பற்றி எரிய.!! ஒரு ஆணின் அலங்காரம் எதற்கு என்று ஒரு ஆணாய் அவனுக்கு தெரியும் அல்லவா.? கோபத்தை தணிக்க முடியாமல் அவஸ்தை அனுபவித்தான் ப்ரீத் குமார்.

மஞ்சள் வண்ண குர்தி அணிந்து..
அறையை விட்டு வெளியே வந்தவளை பார்த்து ..ப்ரீத் மனநிலை மாற..பின்னால் நின்றவனும் (அருண்) அதே ரசனோடு அவளை ஆ.. என பார்க்க.. கட்டுக்கடங்காத கோபத்தை இழுத்து பிடிக்க முடியாமல்.கிச்சனுக்குள் நுழைந்து கொண்டு போன் செய்து கோபத்தை பவித்ராவிடம் கட்டினான் "

" நீங்க வெயிட் பண்ணுங்க.. உங்களுக்கு குடிக்க ஏதாவது கொண்டு வர சொல்றேன். என அங்கிருந்து நகர்ந்து. கிச்சனுக்குள் நுழையாமல் நிலையில் ஒரு பக்கமாய் சாய்ந்து கை கட்டிக் கொண்டு. பவித்ராவின் மாமாவின் தீத்தெறிக்கும் காரசாரமான உரையாடலை ரசித்தவள்..அதிகாரமாக "டீ போட்டு எடுத்துட்டு வாங்க . " என திரும்பும முன்.

" என் குழந்தைக்கு கேர் டேக்கரா தான் வந்து இருக்கேன் பவித்ரா.. யாருக்கும் நான் வேலைக்காரன் கிடையாது" முகத்தை திருப்பிக் கொள்ள.

அவன் செவி அருகே குனிந்து..அழைப்பில் இருக்கும் பவித்ராவிற்கு தெளிவாக கேட்கும் படி " பவித்ரா மேடம்.. நான் சொல்றது எல்லாத்தையும் செஞ்சுட்டு என்கூட இந்த வீட்ல இருக்குறதுனா இருக்கலாம். இல்லனா .. உங்க மாமா இப்பவே கிளம்பி போகலாம்.யாரும் யாரையும் புடிச்சு வைக்கல. "

" இப்ப எதுக்காக அந்த நாய இங்க வர வச்சிருக்காங்கன்னு கேளு பவித்ரா ."

" மரியாதையா பேச சொல்லு.. பவி.. ஒரு நாள் வாழ்ந்தவருக்கு இவ்வளவு உரிமை என்கிட்ட இருக்கும் போது ஒரு மாசம் வாழ்ந்தவருக்கு. இங்க நிற்கிறவரை விட ..அதிக உரிமை இருக்கு.

எனக்கும் சேர்த்து டீ போட்டு எடுத்துட்டு வர சொல்லு.. சுகர் தூக்கலா இருக்கணும்."

"ஒரு மாசம் வாழ்ந்தானா??" அதிர்ச்சியில் சிறுமூளை பெருமூளை எல்லாம் சிவந்து வெடித்தது" என் கையால டீ குடிச்சா கசக்கும் னு நேத்து வேணாம்னு சொன்னாங்க பவி. "

சின்ன சிரிப்பை உதிர்த்து " பிடிச்சவங்க பக்கத்துல இருக்கும் போது கசக்குறதும் இனிக்கும் பவி.." என குழந்தையை கவனிக்க சென்று விட.. அவள் மீது உள்ள கோபத்தில் திட்டி தீர்த்து விட்டான் பவித்ராவை.

" மாமா.. இருடா... நான் அவகிட்ட பேசிட்டு வர்றேன்.
" அழைப்பை துண்டித்து விட்டு பிரதிக்ஷாவிற்கு அழைக்க..எதிர்பார்த்து காத்திருந்தவள் உடனே ஏற்றால்.

பவித்ரா ஆரம்பிக்கும் முன்னரே பிரதி ஆரம்பித்து விட்டால்.
"எத்தனை நாளைக்கு உன்னால இப்படி இன்ஸ்ட்ரக்ஷன் சொல்லி ரோபோட் மாதிரி உங்க மாமாவை நடத்த முடியும்.. நம்பிக்கை மனசுல இருந்து வரும் பவித்ரா.. அது மத்தவங்க சொல்லி வராது. வாழ்க்கை முழுக்க காதுல மெஷினை மாட்டிவிட்டு.. எப்படி என்கிட்ட பேசணும். எப்படி நடந்துக்கணும்னு உன்னால கத்துக் கொடுத்துட்டே இருக்க முடியுமா ??

இங்கு நடக்கிறத பார்த்தா..! ஒருவேளை எங்க பிரைவேட் லைஃப்ல கூட உன் மாமாவுக்கு நீயே சொல்லிக் கொடுத்து தான் எல்லாம் நடக்கும் போல.!! " நிதானிக்காது.. வார்த்தைகளால் கடித்து குதற.

எவ்வளவு தான் திட்டு வாங்குவாள். பாவம். பொறுமை எல்லாம் காற்றில் பறக்க.. பொங்கி விட்டாள் .. பவி.

" குழந்தையே பெத்துக்கிட்டவங்களுக்கு ..
அதுலாம் நான் ஏண்டி சொல்லித் தரணும். அந்தளவா ரெண்டு பேரும் விவரம் இல்லாதவங்க..?" பிரதியை சுருக்கென தைத்தது இந்த வார்த்தை.

" எங்க வரணும் எங்க வரக்கூடாதுன்னு எனக்கு நல்லா தெரியும். நான் இருந்த மூணு மாசத்துல யாருமே உன்கிட்ட வந்தது கிடையாது..?
குழந்தைய பாக்க கூட ஒரு சொந்தக்காரங்க வந்தது கிடையாது. ?என் மாமா வந்து ஒரு நாள்ல .. இன்னைக்கு ஒருத்தன் வரான்னா..? அது உன் வேலை தான் எனக்கு புரியாம இல்ல.!! பெட்ரோல் பக்கத்தில நெருப்பு பத்த வச்சு எரிய கூடாதுன்னு சொல்ற..!!

நாகரிகமா நடந்துக்க எனக்கு நல்லா தெரியும் பிரதி.. நான் சொல்லிக் கொடுத்து தான் அச்சுல வார்த்த மாதிரி புள்ள பெத்து வச்சிருக்க இல்ல.. நீ.?? திடீர்னு எவனும் பொறுமைசாலி ஆயிட மாட்டான் டி.

நீ மாமாகிட்ட சண்டை போடும்போது. நீயா ஏதாவது சொல்லும் போது நான் வரமாட்டேன். ஆனா அடுத்தவங்கள அழைச்சிட்டு வந்து வெறுப்பேத்துனா.. கண்டிப்பா நான் அதுல இடையில வர மாதிரி தான் ஆகும். ஏதே .. ஒரு மாசம் அவன் கூட வாழ்ந்த அப்படின்னா..?குழந்தை என் மாமாவோடதில்லையா? " வார்த்தைகளால் நெருப்பை அள்ளிக்கொட்ட

அந்த வார்த்தை பொறுக்காது "பவித்ரா " என தாயாய் ஆத்திரம் அடைந்து கத்தினால் பிரதிக்ஷா .

" இதே அர்த்தம் வர்ற மாதிரி தானே நீயும் சொன்ன..நாம என்ன சொல்றோம்னு நமக்கு முதல்ல புரியனும். ஒரு ஆம்பள கிட்ட என்ன சொல்லணும், என்ன சொல்ல கூடாதுன்னு அடிப்படை அறிவு இருக்கணும். என் மாமாவ காயப்படுத்துறதா நினைச்சு, உன்னை நீயே கேவலப்படுத்திக்குற.. பிரதி.

ஒரு மாசம் வாழ்ந்தவருக்கு உரிமை அதிகம் அப்படின்னு சொல்றியே..? சந்தேகம் ப்ரீத் மனசில் வந்து உட்கார்ந்தா என்ன ஆகிறது. ? நான் நேர்ல இருந்திருந்தேன் அறை வாங்கி இருப்ப நீ .." உரிமையோடு எச்சரித்தாள் பவித்ரா.

" நானா சொல்லல டி.. உன் மாமா தான். அன்னைக்கு அப்படி சொன்னாரு. நான் ஒரு மாசம் அவன் கூட இருந்தேன்.. நாளைக்கு யார் கூட இருப்பேன்?? இப்படி எல்லாம் தப்பா அன்னைக்கு அவர் தான் பேசினார்." என தன்பக்க நியாயம் பேச.

" அவனா சொல்றது வேற..நீயா ஒத்துக்குறது வேற..ரெண்டுக்கும் ஆயிரம் மடங்கு வித்தியாசம் இருக்கு.. அதே மாதிரி அவனுக்கு இது எதுவுமே ஞாபகம் கூட இல்ல. குடிச்சிட்டு ஒளரதெல்லாம் நீ பெருசா எடுத்துட்டு பேசினா.. நான் என்ன சொல்ல முடியும்."

" நெஜமா..
சொன்ன எதுவுமே அவருக்கு ஞாபகம் இல்லையாடி" நம்ப முடியாமல் பாவமாய் கேட்க.

" அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னு முழுசா உனக்கு தெரியல..?
அந்த தாத்தா சொன்னத நம்பி உன்கிட்ட ஒன்னும் ப்ரீத் சண்டை போடல.. இப்ப உள்ள உட்கார வச்சிருக்கியே ஒரு உத்தமன.. அவன் தான் சொல்லி இருக்கான், தப்பு தப்பாவும் பேசி.. இருக்கான்.நீயும் அவனும் கல்யாணம் பண்ணிக்க போறீங்க. ஒரு மாசமா ஒன்னா வாழ்றீங்க..இன்னும் சொல்லி இருக்கான் அது வேணாம். "

இணைத்து சொன்னதற்கே ஒவ்வாமை வர "சீ.. என்ன சொல்ற.? அவன் ஏன்டி அப்டி சொல்லனும்.? " பிரதி சந்தேகம் கேட்க.

"அவன்கிட்ட தான் கேட்கனும். பிரதி..அவர் மனசுல உன் மேல என்ன ஆசையோ..!! கெத்துக்காக அப்படி சொல்லி இருக்கலாம்." மேலோட்டமாக ஒரு விளக்கம் கொடுத்தால்.

" ஒரு பொண்ணு தப்பா பேசுறதுல .. அப்படி என்னடி கெத்து இருக்கு..? நல்ல நாள்லயே.. அந்த ஆளுக்கு சந்தேகப்படவா சொல்லித் தரணும்.. நான் யாருக்கு என்ன பாவம் பண்ணேன்.ஏன் பவி எனக்கு இப்படி எல்லாம் நடக்குது.
ஆமா..உன் மாமா என்கிட்ட மட்டும் பாய்வாரு.?? அவன் அப்படி சொன்னதுக்கு இவர் அருண கேட்கலையா.? என்ன விட அவன் சொன்னா பொய் மேல நம்பிக்கை வந்துருச்சு.." நம்பாதவன் மீது உள்ள கோபத்தை ஆதங்கமாக இவளிடம் கொட்டியும். கண்கள் கலங்கி வழிந்தது.

" அதுக்குள்ள அவன் போயிட்டான் டி.. இப்பதான் வந்து சிக்கிட்டான்ல.. "

ஆ...ஆ... என்று யாரோ அலறும் சத்தம் கேட்க.?
பதற்றத்தோடு " அந்த அருண் கத்துற மாதிரி சத்தம் கேட்குது பவி "

" எங்க மாமா பேச ஆரம்பிச்சுட்டாரு.. டி..அருணோட ஆத்மா சாந்தியடைய ப்ரே பண்ணிக்கோடி.. " பவியின் சிரிப்பொலி செவியில் கேட்க.

' செத்துகித்து தொலச்சிட கூடாது மனதில் வேண்டிக்கொண்டு " என்ன பண்ணி தொலைச்சிருக்காரோ.. வை நான் போய் பாக்குறேன்."

மொத்த கோபத்தையும் கொதிக்க கொதிக்க கொட்டி விட்டான்.. அவன் நடுபக்கத்தில்..!!

சுட சுட டீயை அவன் ஜீன்ஸ் பேண்டுக்கு பரிமாறியதால். அலறி அடித்து எழுந்தான் அருண் குமார். வலி தாங்க முடியாமல். எழுந்து கை காலை உதறி.. துடித்துக் கொண்டு அருண் நிற்க..நல்ல பிள்ளையாக கைக்கட்டி இவன் நிற்பது போன்ற நடிப்பை பார்த்து சிரிக்க தோன்றியது காதல் கொண்டவளுக்கு .

கனிவான குரலில் அப்பாவியாக முகம் வைத்து"தெரியாம..வெந்து..சீ.. விழுந்துடுச்சு..ஸா...ரி.." தட்டை அணைத்து பிடித்தவாறு திமிரான தோரணையில் ப்ரீத்..நிற்க.!!

அவனோ.. இருக்கும் எரிச்சலுக்கு விட்டான் ஒரு அறை.. ப்ரீத் குமாரின் கன்னம் வீங்கும் அளவு.." கவனம் எங்கடா இருக்கு..இடியட் " அடித்து விட்டு கடுமையாக திட்டி பேச.

ரூமில் இருந்து பிரதியின் குரல்

"அருண் உள்ள வாங்க .. " என்றதும் மேனேஜருக்கு எரிச்சல் நீங்கி.. மகிழ்ச்சி வர.. ஒற்றை விரலை நீட்டி சைகையால் "கொன்றுவேன் உன்ன " எனும் வாய் அசைப்போடு
உள்ளே சென்றான் அருண்..

ப்ரீத்..உடைந்து விட்டான். அவன் அடித்ததை விட ..!! பிரதி அதை கண்டும்.. திட்டாமல் அவனை எதிர்காமல் போனது வலித்தது,சில நொடி .. பிடித்தது தேற்றி கொள்ள.

வெறுமை பரவிய மனதில் .. வேதனை உச்சம் தொட சண்டையைத் தவிர்க்க வீட்டை விட்டு வெளியே சென்று விட்டான்.

அறைக்கு உள்ளே வந்தவனை வரவேற்றது, அவள் கோபம் ஏறிய விழிகள் தான்..!! அவனை எரிக்கும் பார்வையே சொல்லியது ஏதோ தவறு என்று. "

குழந்தை உறங்குவதை கண்களால் பார்த்து உறுதி செய்தவள்.. இவன் ப்ரீத்தை அறைந்தது கண் முன் வந்து போக.. விட்டால் ஒரு அறை அவன் கன்னத்தில். " கன்னத்தைப் பிடித்துக் கொண்டு அதிர்ந்து விழித்தான் அருண்.!!

" என்ன தைரியம் இருந்தா அவர் மேல கை வைப்ப.? "

" மேடம் அலட்சியமா டீயை கொண்டு வந்து கொட்டுனது. உங்க வேலைக்காரன் அதான் அடிச்சேன். " தயங்கி கொண்டே பேச.

நிதானிக்க முடியாமல்.. " நீ தான்டா வேலைக்காரன்.. அவர் என் புருஷன்." என ஆக்கோஷமாய் கத்தி விட்டு... மீண்டும் ஒரு அறை விட தான் கோபம் எழுந்தது ஆனால் அடிப்பதற்காக தொட்ட கைகளில் கூட அருவருப்பை உணர்ந்தால் பிரதி " என் கம்பெனியில உனக்கு வேலை கிடையாது..இதைவிட கேவலமா நெறைய பண்ணி இருக்க. அத பேசி என்ன அசிங்கப்படுத்திக்க எனக்கு விருப்பம் இல்ல.கெட் அவுட் " பார்வையால் எரிக்க.

அருண் உடனே அறையை விட்டு வெளியேறி விட்டான்.வேலைக்காக கெஞ்சி கேட்கும் நிலையில் அவன் இல்லை. பிரதிக்ஷா கணவன் என்று சொன்னதுமே நடுங்கிப் போய்விட்டான்.. அடியாட்கள் போலீஸ், பொய் கேஸ் என்று இழுத்து விடாமல் இப்படியே விட்டது போதும் என்று ஓடிவிட்டான்.

கண்ணாடி சாளரத்தின் திரைச்சீலைகள் மட்டும் விலக்கி .. பார்வையில் அவனை கீழே தேட..பார்க்கில் இருக்கும் மரத்தோடு குத்து சண்டை போட்டுக் கொண்டிருந்தான்.. ப்ரீத்.. மூன்றாவது மாடியில் இருந்து பார்ப்பவளுக்கு கூட அவன் முகத்தில் காட்டம் கனலாய் அப்பட்டமாய் தெரிந்தது. சீறும் காளையாய் இப்போதும் மரத்தை நெற்றியால் முட்டி சாய்க்க.. முயல!!

மாறாத ப்ரீத்தின் அடமான கோபம். அதையும் சேர்த்து தானே காதலித்தால்.!!
அவளை தான் இப்போது திட்டி காதலன் பினாத்துவது புரிய.. புன்னகை மலர்ந்தது இதழில்.. காதல் ரசனையை பெருக்கும்.

இமை மூடாமல் கண் வைக்கிறால் அவனின் செய்கையை குறுநகையுடன்.

வெயில் உச்சி வரும் வரை வீட்டுப் பக்கமே காதலன் வரவில்லை.. வெயிலின் விளைவால் பார்க் சிமெண்ட் பென்ச் அக்கினியாய் பற்றி எரிய..! வேறு வழிஇன்றி வீட்டிற்க்கு வந்தான்.. ப்ரீத்.. கழுத்து சுளுக்கு பிடித்த போல் தரையோடு உறவாடியது ஆணவன் வேதனை சுமக்கும் விழிகள்.

யாரோ ஒருவன் அடிக்கும் போது கூட தனக்காக பரிந்து பேசாத..கணவன் அல்லது காதலன் என்று உறவாக சொல்லாத.. ஏன் அறைந்ததை ஒரு பொருட்டாக மதிக்காத அளவு.. உயிரே வைத்த காதலிக்கு, அன்னியமாகிப்
போன தன்னை நினைத்து வலித்தது.

ஒரே ஒரு முறை அவன் எதிர்பார்த்து .. அவள் உணராது ஏமாற்றியது... மனதின் அடி ஆழம் வரை மிகையோடு வதைக்க..!

பாவம்.!!
எத்தனை முறை அவளை காயப்படுத்தி இருக்கிறான்..? வார்த்தைகளால் வதைத்திருக்கிறான்.. சந்தேகத்தால் வேண்டாம் என்று உதறி சென்றிருக்கிறான்.

பொறுமையே இல்லாதவனுக்கு ஒரு முறை பிறரிடம் விட்டுக் கொடுத்ததை தாங்க முடியவில்லை..!!

பிறருக்கு சூடு போடும்போது நமக்கு வலிக்காது.
கர்மா நமக்கான சூட்டை திருப்பி போடும் போது.. காயப்பட்டவளின் வலியும் வேதனையும் புரியும்.

அவனால் அவள் பட்ட வேதனைகள் அலை அலையாய் மனதில் மோத.! கண்ணீர் மட்டுமே இதுவரை தன்னை காதல் செய்த பாவத்திற்க்கு பிரதிக்கு பரிசாய் தந்ததை யோசித்து நெஞ்சை அடைத்தது. பலகீனமாக உணர்தவன் சோஃபாவில் சாய்ந்து கண்ணை மூட அயர்வில் உறங்கியும் போனான்.


காதலன் உறங்குவதை உறுதி செய்துவிட்டு அவன் அருகில் சென்றவள்.. மெல்ல தன் விரலால் கண்ணத்தில் வீங்கிய சிவந்த தடிப்புகளை வருடிட ..!!

கன்னம் வலித்ததால் சட்டென விழித்தவன்.. பதறி அடித்து விலக..

சமாளிக்க முடியாமல் உளறினாள்." இல்லை.. ஒ..ஒரு .. " தடுமாறி பின் " என் வீட்டுல வாட்ச்மேன் ஆ இருக்க தாத்தா. " என இழுக்க ..

"ம்.. செத்துட்டாரா " உணர்வின்றி சகஜமாக கேட்க.

பதறி.." ஐயோ.. இல்லை. ஏடிஎம்ல அவருக்கு பணம் எடுக்க தெரியாது. நீங்க போய் கையில சம்பளம் கொடுத்துட்டு வர முடியுமா.?? " வாய்க்கு வந்தததை உருட்ட.

'பதினாறு வயசு பாலகன செத்துட்டானா னு கேட்டுட்டன்ல .. கிழத்துக்காக ஐயோ னு பதறல் வேற." அந்த ஆளுக்கு அடுத்தவங்க வாழ்க்கை எப்படி கெடுக்கிறது மட்டும் தானே தெரியும். சரி நான் ஏன் போகனும். என்ன அடிச்சாரே உங்க மேனேஜர் சாரு.. அவர போக சொல்ல வேண்டியது தான. வேடிக்கை தான பார்த்த.." அடித்ததை சொல்கிறான்.

" என்னால போக முடியாது.. அதுவும் அந்தாளுக்கு சம்பளம் போய் கையில திணிக்க டெலிவரி பாயா நான்..? இப்ப வந்தான் ல அவன போக சொல்லு" இறுகிய முகத்துடன் விரைப்பாய் நிற்க.

" நீங்க தான் போகனும்.. இல்லை குழந்தைய தூக்கிட்டு நான். போகனும்.." குழந்தை சென்டிமென்ட் வைத்து தாக்க..

" அப்போ... அவன் ?? " என்ன ஆனான் என ஆர்வமாய் கேட்டான் ப்ரீத்.

" வேலைய விட்டு நிறுத்திட்டேன்.." தன் பதிலுக்காக காத்திருந்தவன் முகம் பார்த்தால் பிரதி. ' என்னைக்கும் நான் உங்கள விட்டுக் கொடுக்க மாட்டேன் ' என நினைத்து நிமர.!!
இருள் அடைந்த முகத்தில் மின்னல் வெளிச்சம்.! அவள் பதிலில் வெளிப்படையாக அழகாக சிரித்தான் ப்ரீத்.

முகத்தில எந்த உணர்வும் கசிய விடாது.. பார்வையில் மட்டுமே அவனை ரசித்தால்.. பிரதி.

" நானே.. போறேன். சம்பளம் எவ்ளோ? "

" பிஎஃப் போக.. இருபதாயிரம்.. ஏன் கேட்குறீங்க..?" பையில் இருந்து பணத்தை எண்ணி கையில் திணிக்க .. பணத்தோடு கையை அழுத்திப் பிடித்து

" அப்ப எனக்கு எவ்ளோ சம்பளம் தருவீங்க." உதட்டில் பார்வையை பதிக்க.! கையை அவனிடமே விட்டு வைத்தவள் " நீங்க பண்றதுக்கெல்லாம் சம்பளம் தர முடியாது.. சம்பளம் வேணும்னா வேற வீடு பாத்துக்கோங்க. " வார்த்தையை தொடராமல் கத்தரித்து வெட்ட .

" போய் அந்த கிழவனை நாலு சாத்து சாத்தி.. ரெண்டு அடி குழி தோண்டி புதைச்சுட்டு ரோஜா செடி நட்டு வச்சிட்டு வந்துடுறேன். பழிக்கு பழி." வில்லன் போல சிரித்து வைக்க.

பயத்துடன் " அது மாதிரி எதுவும் பண்ண கூடாது. " வெளியேறியவனை பார்வையால் கெஞ்சினால். பிரதி.

மொத்தமும் தலைகீழாய் அங்கே நடந்தது.

" தப்பி... குடிக்காதப்பா.. போதை ஏறினா நீ மனுஷனா இருக்க மாட்ட.. " தன் உயிரை தற்காத்துக் கொள்ள தாத்தா கெஞ்ச..!

அவர் வார்த்தையை தூசி போல தட்டி விட்டு " மிருகமா.. மாறி தான் உன்ன வேட்டையாட போறேன்.." ஒரு பாட்டிலையும் மொத்தமாக வாயில் சரித்து சொட்டு விடாமல் குடித்து வெறியேறி .. சிவந்த விழிகள் அவர் பக்கம் திரும்ப .. வெற்று பார்வைக்கே .. அந்த தாத்தாவின் அங்கமெல்லாம் உயிர் பயத்தில் கிடு கிடுத்தது.. "

இரவாகியும் திரும்பாத ..
அவன் எண்ணிற்கு அழைத்து அழைத்து ஒருத்திக்கு கை ஓய்த்து போக, ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகும் உணர்வு பிரதிக்ஷாவிற்கு.
அடுத்து என்ன செய்வது என்றே புரியவில்லை..

அந்த தாத்தாவிடம் சரக்குக்காக தள்ளுமுள்ளு நடந்து கொண்டிருக்க.

இதுக்கு முன்னாடி இப்படி குடிச்சிட்டு இவன் பண்ணதெல்லாம் கண் முன்னாடி வந்துட்டு போகுது..

ஐயோ எனக்கும் பயமா இருக்கு. இவன் திருந்தவே மாட்டானா?? எந்த ஜென்மம் செஞ்ச பாவமோ இப்படி பிடிச்சு ஆட்டுது அவள... பச்ச உடம்புக்காரி என்ன ஆக போறாளோ ?? பாவம்..!!

❤️நன்றிகள்🙏கோடி❤️

உமா கார்த்திக்
 
Last edited:
Status
Not open for further replies.
Top