uma Karthik
Moderator


பிரதியின் வீட்டு வாசலில் நின்று பைக் ஹாரனை அலற விட்டான் ப்ரீத்.. பழி வாங்கல் இங்கேயே தொடங்கி விட்டது.
ஹாரான் ஒசையில் எரிச்சல் மூழ.. கடுப்போடு
கேட்டை திறந்து ஆமை போல மண்டையை மட்டும் நீட்டி யார் என பார்த்தவர். ஆடித்தான் போனார். எதிரே ஆறடியில் நின்ற ஏழரையை கண்டதும் உடனே பயத்தில் தலையை உள்ளே இழுத்துக் கொண்டார் தாத்தா.
"யோவ்.. சகுனி கேட்ட திற.. " என கத்தி அழைக்க..
நடுக்கத்தோடு இரும்பு கேட்டை திறந்து. " அந்த பொண்ணு இந்த ஊரவிட்டே பொய்டுச்சுப்பா.. இங்க யாரும் இல்லை. " கதவை சாத்த போக.
" சம்பளம்.. கையில தான் .. வாங்குவியோ..? பேங்க்ல போய் எடுத்துக்க மாட்டியா ?? பெரிய துரை.. நான் வரனுமா அதுக்கு " என்றான் முறைப்போடு.
" சம்பளம் பத்தி உனக்கு என்ன கேள்வி.. நான் எப்டியோ.. வாங்கிறேன்." நொடித்து பேச.
" பாவமே பிரதி சொன்னா னு பணம் கொடுக்க வந்தா.. அதே குணம் மாறாம இருக்கியே.. திருந்தவே மாட்டியா? உர்ர்..னு ஏன்யா என்ன முறைக்குற " அதட்டி கேட்க.
வெறுப்போடு கடுப்பாக " புத்தி கெட்டுப் போய் இவனையே கட்டிக்கிச்சா.. அந்த பொண்ணு " வாய் தவறி சத்தமாக பெருசு உளற.
சிரிப்பு வர நக்கலாக கேட்டான்." தாத்தா.. மையின்ட் வாய்ஸ் னு நீ சத்தமா.. பேசுற, இப்படி மூஞ்சிய மூனு முழத்துக்கு இழுத்துக்கிட்டு..காண்டுல கண்ணுல படுற நல்ல காதல் எல்லாம் பிரிச்சு..விடு..ம்.. ஆனா நீ...பதனி.. பதனி.. வேலைய நல்லா பவ்யமாக முகத்தை வைச்சுட்டு பதமா பாக்குற..!! " என்றான் பல்லை கடித்து.
" சம்பளத்தை தான் கொடுத்துட்டீங்களே வெளிய போங்க" அதிகாரமாக விரட்ட .
கடுப்பில் ப்ரீத் கேட்டை தள்ளிக் கொண்டு வீட்டிற்குள் முன்னேறி செல்ல.
" நில்லுப்பா...நீ பாட்டுக்கு உள்ள போற,வெளிய போ.. அந்த பொண்ணு கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொல்லவே இல்லையேப்பா.."
" குழந்தையே இருக்கு வாயா.."
" உள்ள போகாத தம்பி" கை நீட்டி தடுக்க.
" நான் அப்படித்தான் போவேன். என்ன பண்ணுவ.?? ஆமா நீ ஏன் பதறுற வீட்ட ஏதும் உள்வாடைக்கு விட்டு இருக்கியா?? " வீட்டை திறந்தவன்..உள்ளே நடக்க.. மூச்சு வாங்க .. பின்னால் அவரும் ஓடி வந்தார்..
டைனிங் டேபிள் பார்த்ததும்.. ப்ரீத் நடை தடைப்பட்டது.. சிந்தனையில் நிழலாக அன்று நடந்த காட்சி வந்து போனது..! துண்டு துண்டாக நினைவலைகள்.. எண்ணத்தில் தேங்கி நிற்க.! அவன் கையில் கத்தி எடுத்தது.. பீங்கான் பாத்திரங்கள் கீழே சரிந்து விழுந்தது.. கைகளில் ரத்தம் வடிய கண்ணீரோடு பிரதி அவனைப் பார்த்தது.. என மாறி மாறி காட்சிகள் மின்னலாய் புத்தியில் வெட்டி செல்ல.!!
தலையைப் பிடித்துக் கொண்டு அப்படியே நின்றான் ப்ரீத்.
" என்னாச்சு தம்பி. ? " பெரியவரோ ..பதறி தோளை உலுக்கிட.
" அன்னைக்கு நான் என்ன பண்ணேன். ப்ளீஸ் கொஞ்சம் சொல்லுங்க.?" கெஞ்சுதலோடு கேட்க.
" பண்ணவே கூடாதது எல்லாத்தையும் பண்ண.. " என ஒவ்வொன்றாக அவன் குணத்தின் கோபத்தின் அவ லட்சணங்களை உதறி போட ஆரம்பித்தார் தாத்தா.
" குடிச்சிட்டு வந்து அந்த பொண்ண அப்டி போட்டு அடிச்ச , உடனே நான் நாலு பாடிகாட்ஸ் அ கூப்ட போக பார்வையால அந்த பொண்ணு தடுத்துடுச்சு.
அந்த பாப்பாக்கு தெரியும். வாட்ட சாட்டமான நாலு பேர் அடிச்சா நீ தாங்க மாட்ட.. அதான் என்ன தடுத்துடுச்சு.. அந்த பொண்ண நீ கத்தியால குத்த வரும் போதும் கூட அசையாம அப்டியே கொல்லட்டும்னு நின்னுச்சி..! ஏதோ.. சொன்னுச்சே..? ஹான் ..
தினமும் சந்தேகத்துல சாவுறதுக்கு ஒரே அடியா.. கொல்ல சொன்னுச்சி..
அது தங்கம்யா.. உன்கிட்ட மனச கொடுத்துட்டு எவ்ளோ.. சொல்... பழி.. வதை,அப்பா.. நரகம்.
இந்த ஊர் பொம்பளைங்க வாய்க்கு வந்ததை ஏசி .. இங்க வேலை பார்த்த அம்மா.. கூட.. பல பேர் கூட தொடர்பு, யாருனு ஆதி அய்யா பொண்ணுக்கே தெரியலை..
அதான் எவனும் ஏத்துக்கலை.. முகத்துக்கு நேரா பேசி.பச்... "
" அப்படி கேவலமா சொன்னது தளாம தான் ஊர விட்டு எங்கயோ போய் ஒளிஞ்சு வாழுது. ஆனா அது எந்த தப்பும் பண்ணலை.. நான்.. யாரோ.. ஒருத்தன்.. நான் சொல்லுற பொய்ய ஏத்துகுற நீங்க.? அவங்கள ஏன் நம்பல ? "
சில நொடி மெளனமாக நகர .
" தினமும் ஊர் உலகம் முன்ன எம்புட்டு அவமானம் பட்டுச்சினு தெரியுமா? பாவம் யா அந்த பாப்பா. யப்..பா. பா... எம்புட்டு பாசம் உன் மேல.!!" வியப்பில் வானவில்லாய் அவர் கண்கள் விரிந்தது.. முகத்தில் ஏக்க சிரிப்போடு .
" அந்த பாப்பாவ குத்தாம உன்ன குத்திக்க கத்திய நீ திருப்புனதும்.. கையை குறுக்க விட்டு கத்தி கூர பிடிச்சி.. கையில தாங்கி.. உள்ளே உன் வயித்துல பாயாம காயத்தை தன் கையில வாங்கி நின்னப்ப.!! கூட நீ திட்டுன.." என்று இழிவான ஒரு பார்வையோடு கதையை தொடர்ந்தார்.
" நீயுமே.. அந்த அம்மாவ நடத்தை கெட்டவ, நீ எனக்கு வேணாம்னு உதறிட்டு போன..! "
கூடத்தை கை காட்டி "இங்க.. நின்னு தான் விட்டுட்டு போகாதிங்க.. நான் தப்பு பண்ணல னு கெஞ்சி அழுதுச்சி. தப்பு பண்ணி புடிபட்ட எல்லாரும் நல்லவனு தான் பொய் சொல்லுவாங்க.. என்னை தேடி வராத.. வந்தா.. நான் உயிரோட இருக்க மாட்டேனு சொல்லிட்டு பொய்ட்ட.. "
சொன்னதற்கே.. கண்கள் கலங்க
" கத்தி கையில பதிஞ்சு ஒரே ரத்தம்... தரை எல்லாம் பரவி.. பரிதாபமா.. நைய்ட் வர நீ வருவேனு அந்த இடத்தை விட்டு அசையல.!! காலையில நாங்க வந்து பார்த்தப்ப உசிருக்கு போராடி கெடந்துச்சு.. ஒரு மாசம் நினைவே இல்லை. பார்க்க கேட்க ஆள் இல்லாம அனாதையா கிடந்துச்சு.!!
அப்புறம் தான் அந்த பொண்ணு மாசமா இருக்கது தெரிஞ்சு.. சொந்த பந்தம் எல்லாம் வந்து அப்படி திட்டினாங்க.. கருவ கலச்சிட்டு அவங்க பிள்ளையை கட்டிக்க சொன்னாங்க.. முடியாதுன்னு மறுத்ததும் முகத்துக்கு நேரா அப்படி திட்டினாங்க..!!
" யார் அவள தப்பா பேசினாங்க??" கோபம் பொங்கி வழிந்தது கண்ணில்.
அனுபவமான சொல்லால் போட்டார் சூடு " யாரால அந்த பொண்ண தப்பா பேசினாங்கனு யோசி.. அந்த பொண்ணு அடஞ்ச வேதனைக்கு எல்லாம் காரணமே நீ தான்.. நம்பிக்கை வைக்க பழகு." கடுமையான குரல் வந்தது மிகை அதட்டலோடு.
சொல் சுட்டதும்.. சீறினான் அவரிடம் " ஏற்கனவே எறிஞ்சிட்டு இருக்க..போது, இன்னும் ஏறிய குத்தி விடுற இல்ல.. சாத்தான் வேதம் ஓதுதா." என்றான் விழி சிவக்க எரிக்கும் முறைப்புகள் கடுப்புகளோடு.
" என்ன சாத்தான் சொல்ற.. நீ ரொம்ப நல்லவனா??" என கேட்டு பெருசு ஜட்ஜ் ஆக.
கையை அடிக்க மடக்கியவன். "வெறியல இருக்கேன்..வாய மூடுயா.. " எச்சரித்து, விட்டு விட்டென்று வீட்டைவிட்டு வெளியேறினான்.. ப்ரீத்.
அவனால் பாதங்களை அந்த வீட்டுக்குள் நிலைப்படுத்த முடியவில்லை.. நடந்ததை எல்லாம் நினைவுபடுத்தி அந்த வீடு பயம் காட்டியது ஆண் மகனுக்கு..
கைகளில் உதிரம் வழிய " என்ன விட்டுட்டு போயிடாதீங்க ப்ரீத்" என்று அவளின் வார்த்தை காதையும் நிறைக்க..! அழுத்தம் தாங்க முடியாமல் ஓடி வந்து விட்டான் வெளியே.. சட்டைகள் எல்லாம் வியர்வையில் நனைய.. தலை வெடித்து தெறித்தது வலியில்..
நேராக காவலாளி அமரும் அறைக்கு சென்றவன்.. நாற்காலியில் துவண்டு அமர.. நா வறண்டு தண்ணீர் தேடி கண்கள் அழைய.. அவன் பார்வையை தன் மீது தேங்கி நிற்க வைத்தது அது..!!
இதோ நான் இருக்கிறேன் உன்னை அழிக்க என்பதை போல் மது பாட்டில் அழைக்க..!! தாவிப்பிடித்து எடுத்துக் குடித்தான்.
இழைத்த தவறுகளை அவன் மனசாட்சி கேள்விகளாய் அடுக்கி..சுட்டு எரிக்க..!! கவலையையும் அழுத்தத்தையும் குற்ற உணர்வையும் குறைக்க மயக்கம் வேண்டும். அதற்கு மது வேண்டும்.
ஒரே மூச்சில் ஒரு பாட்டில் காலி செய்தவன். அடுத்ததை எடுக்க.. ஓடி வந்து பாட்டிலை பிடித்துக் கொண்டு தொங்கி.. அப்படியே தடுத்தார் முதியவர்.
'இதுக்கு முன்னாடி இப்படி குடிச்சிட்டு இவன் பண்ணதெல்லாம் கண் முன்னாடி வந்து போக.'
கெஞ்சுதலோடு" தப்பி... குடிக்காதப்பா.. போதை ஏறினா நீ மனுஷனா இருக்க மாட்ட.. " தன் உயிரை தற்காத்துக் கொள்ள தாத்தா கெஞ்ச..!
அவர் வார்த்தையை தூசி போல தட்டி விட்டு " மிருகமா.. மாறி தான் உன்ன வேட்டையாட போறேன்.." ஒரு பாட்டிலையும் மொத்தமாக வாயில் சரித்து சொட்டு விடாமல் குடித்து வெறியேறி .. சிவந்த விழிகள் அவர் பக்கம் திரும்ப .. வெற்று பார்வைக்கே .. அந்த தாத்தாவின் அங்கமெல்லாம் உயிர் பயத்தில் கிடு கிடுத்தது.. "
இரவாகியும் திரும்பாத ..
அவன் எண்ணிற்கு அழைத்து அழைத்து ஒருத்திக்கு கை ஓய்த்து போக, ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகும் உணர்வு பிரதிக்ஷாவிற்கு.
அடுத்து என்ன செய்வது என்றே புரியவில்லை..
போனை சைலண்டில் போட்டுவிட்டு போதையில் புலம்பினான் ப்ரீத் " என் தப்பு மட்டும் தாண்டி.. பூத கண்ணாடி வச்சு கண்டு பிடிக்கிறீங்க..என் மேல மட்டும் தப்பு இருக்க மாதிரி நீ பேசுறியே. ? உன் மேல தப்பு இல்லையா.?? சொல்லுடி.. என் குழந்தை உண்டானது என்கிட்ட மறைச்சுட்ட.. சட்டப்படி அது குற்றம்.. " குளறியது வார்த்தை
" என்ன லவ் பண்ண உனக்கு என்ன தெரியாது.. நீ பவித்ரா கிட்ட சொல்லி இருக்கணும் என் கூட சேர்ந்து இருக்கணும்.. சொல்லுடி.." கீழ சம்மனம் போட்டு உட்கார்ந்திருக்கும் பெரியவரை பிரதி என நினைத்து பேச..! அவருக்கு எங்கே தலையை போய் முட்டி மோதிக் கொள்வது என்று புரியவில்லை.
செக்யூரிட்டிக்கு அழைப்பு விடுத்தால் பிரதிக்ஷா.. ஏற்றதும் " அவர்கிட்ட போன குடுங்க.." குரலில் பதட்டம் மேலோங்கி இருந்தது.
" தம்பி பாப்பா பேசுது பேசு" என நீட்டவும்.
பூரிப்போடு .." என் பையனுக்கு பேச்சு வந்துருச்சா.!! அப்பா சொல்லுடா தங்கம்." என்று ஆசையாய் போனை காதில் வைக்க..
"வீட்டுக்கு வாங்க " அழுத்தமாக காதலியின் குரல்.
தெளிவின்றி உளறலோடு " நான் ஏன் வரணும்..நீ வா..டி.. " என பாட தொடங்கினான் ப்ரீத்.
"என்னை தாலாட்ட வருவாளோ..
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ..
தங்க தேராட்டம் வருவாளோ..
இல்லை ஏமாற்றம் தருவாளோ..??"
" அழகு தாத்தா கிட்ட போன குடுங்க."
" இவன் எங்க அழகா இருக்கான்..? பெரிய சைஸ் ஆமை மாதிரி இருக்கான் " வாய்விட்டுச் சிரித்தான்.. ப்ரீத்.
சிரிக்க தோன்றவில்லை அவளுக்கு" பெரியவங்கள மரியாதை இல்லாம பேசக்கூடாது ப்ரீத். " என்றால் கண்டிப்பான குரலில்.
அவரை பர்வையால் ஸ்கேன் செய்து " இவரா பெரியவா.." எகத்தாளமாக சிரித்தவன் " எங்க அத்தை அடிக்கடி ஒரு வார்த்தை சொல்லுவாங்க.. வயசுல பெரியவங்களா இருக்கவங்க பெரியவங்க கிடையாது. குணத்துலயும் பெரியவங்களா இருக்கணும்.
இவன் சில்லறை பயடி.. வேணும்னா அழக.. மிதிக்கலாம்.. மதிக்கலாம் முடியாது. " தாத்தாவின் கழுத்தோடு சேர்த்து பிடிக்க.. இறுக்கம் கூட வலி பொறுக்க முடியாமல்.
சரண்டர் ஆனார்
" அப்பா எனக்கு சுகர் இருக்குப்பா.. பசிக்குதுபா.. சாப்பிடணும் பா.. மயக்கம் தள்ளுது.." என பொய்யாய் மயங்க.
" தள்ளட்டும்..
தள்ளட்டும்.. என் வாழ்க்கை கெடுத்துட்டு உனக்கு என்ன நேரத்துக்கு சோறு.. " வழுக்கை தலையின் அடிவாரத்தில் எட்டிப் பார்த்து நாலு முடிகளை வலிக்க இழுத்து பேச.."
" வலிக்குது..விடு..பா.." கையை உதறி தள்ளிவிட்டு நின்றார்.
" ஏன் என்கிட்ட அப்படி சொன்ன சொல்லு.. நான் உனக்கு என்னய்யா பாவம் செஞ்சே.. சகுனி தாத்தா.. என் பிரதி நிழலாட்டம் என்ன சுத்தி வந்தவ, ஆனா இப்போ முகத்தை கூட பார்த்து பேச மாட்டேங்குறா.. இதெல்லாம் உன்னால தான ஏன்யா.. இப்படி பண்ண.. " என அவர் மார்பிலே சாய்ந்து கட்டிக்கொண்டு போதையில் அழ..
இதையெல்லாம் அழைப்பிலிருந்து கேட்டுக் கொண்டிருப்பவளுக்கு.. சிரிப்பதா அழுவதா என்ற நிலை .. பாவம் அவரை படுத்துகிறான்.. போதையில் இருக்கும் அவனை நம்பவும் முடியாது.. எப்போது சீறுவான் என்று யாருக்குமே தெரியாது.. கோபத்தில் ஏதாவது செய்து விடுவான் என்று பயம் மனதை பிய்த்து எடுத்தது.
" ப்ளீஸ் உடனே வீட்டுக்கு வாங்க"
" நெவர்.. என் மனசு ஆறல, இன்னைக்கு நான் இந்த கிழவனை கேட்கிற கேள்வியில, தானா தற்கொலை பண்ணி சாகனும். நீ வீம்புக்கு என்கிட்ட பொய் சொல்லி.. அந்த அருண் நாயும் அதே மாதிரி பொய்ய என்கிட்ட சொல்லி.. புத்தி கேட்டு போய் நானும் நம்பி.. என் வாழ்க்கை சிதஞ்சு போயிடுச்சு..
உங்களால தாண்டா என் பிரதிக்கு என்னை பிடிக்காம போயிடுச்சு.. எவ்வளவு சண்டை போட்டும் காயப்படுத்தியும் கூட வேணாம்னு விட்டுட்டு போக நெனச்சதில்ல.. அவ.
எங்கள பிரிச்சிட்டடியே.. யா.." சட்டை காலர் பிடித்து குலுக்கி எடுக்க.. இருமலோடு மூச்சுக்காக திணறுவது எதிர்முனையில் அலைபேசியில் கேட்க. இனிமேல் கெஞ்சல் எல்லாம் செட் ஆகாது கொஞ்சல் தான் என்று முடிவெடுத்தவள் மனம் காதலனை நினைத்தது.
' காதலிச்சா வானம் அளவு காதலிக்கிறது.. நோகடிச்சா அப்படியே தூக்கி எறியுறது.. எதை நான் ஏத்துகிறது.? எத தான் வெறுக்கிறது..
குழைவான குரலில் " ப்ரீத்.. "
" என்கிட்ட பேச மாட்டியா டி" குழந்தையாக கேட்க.
" பேசுவேன்"
ஏக்கமாக
" என் முகத்தை பார்க்க மாட்டியா டி."
" பார்ப்பேன்"
" நீயே இதெல்லாம் உட்கார்ந்து ஒட்டு கேட்டு இருக்க.." தாத்தாவை பார்வையில் பொசுக்க.
நடுக்கத்துடன்" நீதான் அப்பா காலரோட இழுத்து வெச்சிருக்க.. என் காதுக்குள்ள தான் நீ பேசுற, நான் ஒட்டு கேக்கல." காலரில் இருந்து கையை உதறி.. நகர்ந்து போக சொல்லி விரல் அசைத்து.. விரட்ட.. நகர்ந்து ஓடியே விட்டார்.
ஃபுல் லவ் மூடில்
" வந்தா முத்தம் கொடுப்பியா??"
" ஹான்.. " அதிர்ந்து பின் " கொடுப்பேன்"
" என்ன கொடுப்ப" என்றான் மீண்டும் கேட்க
"ம்.. முத்தம் " முகத்தில் மெல்லிய வெட்கம் இழையோட .
குறும்பு புன்னகையுடன் " அப்ப நான் வர்றேன். அதி என்ன பண்றான்."
அழுதுகிட்டே இருக்கான்..அப்பா வேனுமா.. சீக்கிரமா வாங்க." என்றால் வரவுக்காக ஏங்குவது போல.!
" என் பையனுக்கு மட்டும் தான் என்ன தேடுது .. உனக்கெல்லாம் என் மேல பாசம் இல்லல..தெரியம் டி.. ஐ லவ் யூ..தெரியுமா.. பிரதி " தொடர் முத்தம் தான்.. அதன் சத்தம் வெளியே நின்றவர் காதை கூச செய்தது.
முத்தம் முடிவுக்கு வர சிறிதும் தடுமாற்றமில்லாமல். " பைக் சாவியை அந்த தாத்தா கிட்ட கொடுத்துட்டு, வெளியில வாங்க.. கார் வெயிட்டிங்ல இருக்கு.." துண்டித்தாள்.
" இங்க பாரு அழகு.. வேற யாரு காதலையும் நீ பிரிக்க கூடாது.. சமத்துப்பையனா இருக்கணும்.. வர்றேன் அழகு.." வீட்டை விட்டு நகர.
" அந்த பிள்ளைய விட்றாதயா.. இனிமே நோகடிக்காத.. உன்ன பார்த்தா தான் அதுக்கு முகம் மலருது.. " என்றார் உருக்கமாக.
மனதை அரிக்கும் கேள்வியை அவரிடம் கேட்டான்." ஏன் பிரதி... என்னை வெறுக்கலை..? "
" அந்த பொண்ணுக்கு இருக்கிற ஒரே ஒரு உறவு நீ தானே.!
உன்னை வெறுத்துட்டா வாழ காரணம் இருக்காது இல்ல.!! அதான்."
அதை கேட்டதும் மெல்லிய புன்னகையோடு வெளியே வந்து, ப்ரீத் காரில் ஏறி கை அசைத்து கிளம்ப.. அவனை எண்ணி சிரிப்பு வந்தது.. பசியில் சோர்ந்து வர உணவு பொட்டலத்தை பிரித்து உண்ண ஆரம்பித்தார். அழகுராஜா.
பிரதிக்ஷா ஜன்னல் பக்கத்தில் நின்று கொண்டு தவித்துக் கிடந்தால்..! அவள் வேண்டுதல் எல்லாம் எந்த வம்பும் இல்லாமல் வீட்டுக்குள் வந்தால் போதும்.. என வேண்டுதல் அடுக்க.. கார் வந்து கீழே நிற்பதை பார்த்து வேகமாக கீழே ஒடி சென்று.. காரின் கதவை திறந்து பிரீத் இறங்கும் முன்னே, அவன் முன்னால் இவள் நின்றால். அவள் வந்து தனக்காக நிற்பதை பார்த்து அழகாக சிரித்து கர்வமாக நடைபோட்டு அருகில் வந்து, காது ஓரம் மூச்சின் சூடேற்றி..! உரிமை கொண்ட கொஞ்சலோடு திட்டினான்" குழந்தை தனியா விட்டுட்டு எதுக்குடி இங்க வந்த.? "
" அப்பாவுக்கு அக்கறை தான்" வாய் வார்தையில் ஓசையின்றி முனுமுனுக்க.
" இல்ல நீங்க குடிச்சு இருக்கீங்க.. அதனால தான் வந்தேன்."
" நான் ரொம்ப ஸ்டெடியா தானே இருக்கேன்" நேராக நடக்க முடியாமல்.. நாகம் போல கால்கள் நெளிய.. தடுமாறி விழும்போது தாங்கிப் பிடித்தால் பிரதிக்ஷா.
லிஃப்ட்டில் இருவரும்.. ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து நடந்து.. மிதந்து எப்படியோ..வீடு வந்து சேர்ந்தனர்.
" பிரதி.. உனக்கு என் மேல கோபம் இல்லையாடி.?? சந்தேகப்பட்டு, சண்டை போட்டு, தப்பா பேசி ,ஏன்.. உன்னை கொல்ல கூட வந்தவன் மேல உனக்கு வெறுப்பு வரலையா? நான் வேணாம் பிரதி.." மெல்ல அவள் பிடியை விட்டு விலகி செல்ல.
" நீங்க என்ன கொல்ல வந்திங்க னு யார் சொன்னா.? அந்த தாத்தா சொல்லுறத மறுபடியும் நம்புறீங்க பாருங்க. " நடந்தவை யாவும் ப்ரீத்க்கு தெரியாமல் மறைக்க முயன்றாள்.
அவள் வலது கரத்தை பிடித்து பார்க்க.!
காயம் பட்டதின் தழும்பு .. அவன் குத்தியதின் அடையாளம் காட்ட.!!
" வலிச்சதா பிரதி.." அவள் உள்ளங்கையை அவன் கன்னத்தில் பதிக்க..!! அவன் கண்ணீர் துளிகள் அவள் கைகளில் விழுந்து மன்னிப்பு கேட்டது..!!
சட்டென விலகியவன் நான் உனக்கு வேணாம் பிரதி.. அவள் முகம் பார்த்து விலகி பின்னால் நடக்க.. பால்கனியின் கம்பியில் இடர்பட்டு தடுமாறி கீழே விழப்போனவனை..!
கண்ணீரோடு கோபமாக மேல் சட்டையை பிடித்து .. ஆவேசமாக இழுந்து தன்னோடு போர்த்திக் கொண்டாள்.. பிடிவாதமாய் .. விட மாட்டேன் உன்னை என்று இரவின் குளிர் காற்று இருவரின் நெருக்கம் தந்த இதம்,நொடியை காதலோடு நகர்த்த..!!
மின்சார விளக்குகள் ஒளிராத நள்ளிரவில் .
நிலவெண்ணும் ஒற்றை விளக்கின ஒளியில் .. பிரிந்து தவித்த இரு இதயத்தின்
ஏக்கமான இறுக்கம் .. நொடிகள் கடந்து நிமிடம் செல்ல.. காலமே நகராதே எனும் வேண்டுதலில் மூழ்கியது இரு காதல் நெஞ்சங்கள்.!!
" பசிக்குது டி ..." என்ற வார்த்தை கேட்டு நினைவுலகில் இருந்து நிஜம் வந்து சேர்ந்தாள் பிரதி. மெல்ல விலகி.. டைனிங் டேபிளில் இருக்கும் சாப்பாட்டை தட்டில் பரிமாறிட..
" நீயும் சாப்டல தான பிரதி.." சேரில் அமர்ந்து.. அவளை ஒரே இழுப்பில் மடியில் இழுத்துப் போட்டு அமர வைத்து.. அதிர்ந்து அவள் விழிப்பதை பார்த்து சிரித்தவன்.. உணவை பிசைந்து அவள் வாயில் தினிக்க.. வேறு வழி இல்லாமல் வாங்கிக் கொண்டாள் பிரதிக்ஷா .. போதும் என்றதும், அவளை அவன் எதிரே டைனிங் டேபிள் மீது தூக்கி உட்கார வைத்தவன்.. சட்டமாய் அவனுக்கான உணவை நீட்ட.. மறுக்காமல் வாங்கி ஊட்டி விட்டால்.. உண்டதும் எழுந்து அறைக்கு செல்ல நான்கு அடி எடுத்து வைத்தவள்.. அடுத்த நொடியே அவன் மார்பின் மீது மோதி .. அவன் கையில் ஏந்திட மிதந்தாள்..
அவள் படுக்கை அறையின் கதவை மெல்ல காலால் உதைத்து .. மெத்தை மீது விழ வைக்க.. உள்ளம் படபடத்தது..
அடுத்து என்ன என்று தாயானவள் அறிவாளே.. பயம் தொண்டையை அடைத்தது. கதவை அடைத்தவன் தட்டு கெட்டு.. தள்ளாடி நடந்து அவளிடம் வர.. வெடவெடத்து போய் மெத்தையில் அமர்ந்து இருந்தால்.. பயத்தில் உடல் விறைத்தது.. காதலன் தான் என்றாலும் நிலை இல்லாத இருவர் உறவு சிதைபட்டு கிடக்க.. காமம் மட்டும் கொண்ட கலவியில் அவளுக்கு விருப்பம் இல்லை.
போதுமடி.. பொல்லாத பிரிவு என்று மொத்தமாய் வாரி அணைத்தும் கொண்டான். மெல்ல இறுக்கங்கள் விலக.. அவன் தழுவளில் காயங்கள் எல்லாம் நீர் பட்ட தீயாய் அணைய.! காதல் பரவியது அந்த அறை முழுவதும் .!!
ப்ரீத் தன்னை அவளை விட்டு விலக்கி " என்ன பிடிக்கலை தான .. ரேப் பண்ண போறேன்னு பயப்படுற தான. ? " என்று கேட்டு அவள் முன் மண்டியிட்டு, அமர்ந்த நிலையில் இருக்கும் அவள் கண்ணங்களை கை கொண்டு அணைத்து.. " நீ எனக்கு என்ன..னு எனக்கு..எனக்கு சொல்ல தெரியலை..
பிரதி.. நீ.. என் மூச்சு டி.. அதி ..க்கு நீ எப்படியோ எனக்கும் அப்படி தான். " நிஜமாக அவன் சொல்வது புரியாமல் கேள்வியாக பார்க்க.
அவள் கண்ணோடு கலந்து ..
" காமங்கள் எல்லாம் என் காதல் அல்ல.
கண்டேனே உன்னை தாயாக .."
அவள் மடியில் படுத்து அவனாக அவளது வலது கரத்தை எடுத்து தலையை வருட செய்ய..!
அந்த இரண்டு வரியின் உணர்வில் உறைந்து போனவள் .. மீண்டு மெல்ல அவன் தலையை வருடிட, காதல் கதகதப்பில்
கண்மூடி உறங்கினான்.. காதலில் தாய்மையை தேடும் குழந்தையாக.!!
" நீ இல்லாத நாள் எல்லாம்..
உயிர அழுத்துற பாரம்.. மனச நெறைக்குற வெறுமை.
இந்த காதல் கொல்லுது தெரியுமா?
என் வேதனையும் நீ தான்.என் நிம்மதியும் நீ தான்..என்ன தான்டா பண்ணுவேன் நான்.
உன்ன காதலிக்குறத தவிர..!! "
நெற்றியில் முத்தம் தந்து முற்றுப்புள்ளி வைத்தாள்..தன்
காதல் கவிதைக்கு.!!