எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம்.63

Status
Not open for further replies.

uma Karthik

Moderator
❤️ ஏக்கம் ❤️
மதுவோடு கூட்டணி போட்டதால்.. மறுநாள் நண்பகல் வரை நித்திரையில் நிறைய..! மெல்ல சுட்டெரிக்கும்.. சூரிய வெளிச்சம். முகத்தில் அடிக்கவும், புரண்டு படுத்தவன்.. உறக்கம் இன்னும் தெளியாமல்.. கண்களை கசக்கி கடிகாரத்தை நோக்க.? நண்பகல் இரண்டு மணி, அடித்துப் பிடித்து எழுந்தவன்.. மெத்தை எங்கும் உடைந்த கண்ணாடி வளையல்கள்.. வானவில்லை போல சிதறி கிடக்க..! இறுதி தீர்ப்புக்கான குற்றவாளி போல கதி கலங்கி போனான் நாயகன். தயங்கி .. தயங்கி .. நடந்து எட்டிப் பார்க்க..? பவித்ரா பிரதிக்ஷாவின் முன் குற்றவாளியை போல் கைகட்டி நிற்க.

' எனக்கு கேரண்டி கையெழுத்து போட்ட பாவத்துக்கு என்ன கிழி...கிழிக்கிறாளோ ?? பாவம் பவி.' என நினைக்கும் போது சர்வேஸ்வரன் பக்கத்தில் ஜோடியாக பவித்ரா நிற்பதை பார்த்து கொந்தளித்தது கோபம். " பவித்ரா " பெயர் சொல்ல, ஒற்றை அதட்டலில் நிமிர்ந்து பார்த்தால் பவித்ரா.

தெறிக்கும் அனல் பார்வையாலே " இவன் கூட எதுக்குடி வந்த ..? என்றான் விழிகளில் சினம் கொண்டு.

உதடைப்பிதுக்கி .. நெஞ்சில் கை வைத்து இல்லை என்று விரலை மறுத்து விரித்து.. ஒற்றை விரலால் பிரதியை சுட்டிக்காட்டினாள்..பவி.

வாய் அசைவில் " நான் தனியா தான் வந்தேன். மாமா.. பிரதி தான் இவர வர வைச்சு இருக்கா.. எதுக்குன்னு எனக்கு தெரியாது" பயந்து பதில் சொல்ல.


அவள் அருகில் நின்று இதையெல்லாம் நேரலையில் பார்த்தவனுக்கு தான் பத்திக்கொண்டு வந்தது. 'இவரு ரொம்ப யோக்கியம்.. அவன் வூட்டு புள்ளைய நான் ஏமாத்தாம பாதுகாக்குறாராம். குடிச்சுட்டு அராஜகம் பண்ணி பிராதுல இருக்கான். பொருக்கி பய .. இவன் பஞ்சாயத்து ஓய மாட்டேங்குது. அவசரமா கூப்பிடறாங்க, கல்யாணம் பண்ணி வைப்பாங்கன்னு பார்த்தேன்.. ம் கும்.. இவன் அடங்க மாட்டான். எனக்கும் கல்யாணம் நடத்த விட மாட்டான். இவன் எப்ப சேர்ந்து .. நான் எப்ப வாழ்ந்து. ஐயோ..' என நினைத்து
முறைத்து பார்ப்பவனை தானும் முறைத்து நின்றான் சர்வேஷ்வரன்(பிரதிக்ஷாவின்) தங்கையின் அரணாக.!!

பவித்ரா மாமனை பார்வையில் எரித்தால்.. பிரதி முகத்தை தெரியாமல் கூட மோதிடாமல் விழியை தாழ்த்தினால்..

போதையில் ஏதும் எல்லை மீறி நடந்து இருப்பானோ? என்ற பயம் வேறு அவளை தடதடக்க வைத்தது.சர்வேஷின் இளக்கார சிரிப்பு வேறு இன்னும் எரிச்சல் மூட்டியது.

நேற்றைய அளவில்லா குடி.. நடந்தவை எதுவும் நினைவில்லை, பிரச்சனையிலிருந்து தப்பிக்க " கடைக்கு போகணும்.. பேம்பர்ஸ் தீர்ந்துடுச்சு" என வாய்க்கு வந்த பொய் காரணம் சொல்லி, ப்ரீத் நகர பார்க..

நழுவும் அவனை இரு பெண்களும் முறைத்து தள்ளினர். தலை சொரிந்து, சின்ன அசட்டு சிரிப்போடு.. மெல்ல பைக் சாவியை எடுக்க.. பதட்டத்தில் கை போட்ட ஆட்டத்தில் சாவி தவறி விட .

சர்வேஷ்-" சாருக்கு இன்னும் போதை தெளியல.. ப ச்.. ப ச்.. பெட்ரோல் விக்கிற விலைக்கு.." குத்தலோடு ஒரு பார்வை பார்த்து, நக்கல் தொனியில் " சொகுசா .. வண்டியிலே போக நெனைச்சா எப்படி..? சாவிய கீழ வைச்சுட்டு நடந்து போங்க தம்பி.. எடுபுடி தான நீங்க..? தரையில நடக்கலாம் தப்பில்லை.. போதையாவது தெளியும் .. குடிகாரன எல்லாம் ஏன்மா வேலைக்கு வைக்குற.? " என சலித்துக் கொண்டு பிரதிக்ஷாவை பார்க்க.. சர்வேஷ்வரன் சொன்ன வார்த்தையின் வீரியம், அவள் கண்களில் கோபமாக, ப்ரீத்தை தான் பிரதி முறைப்பதாக தவறாக எண்ணினான் சர்வேஷ்.

பாவமாக பிரதியை ஒரு பார்வை பார்த்து .. கையில் எடுத்த சாவியை கீழே வைத்து விட்டு வாசல் நோக்கி சோகமாக நடையிட.

பவித்ரா -" டாய்.. தப்பி.. எனக்கும் நடக்க ஆசையா இருக்கு சேர்ந்து போலாமா.." என்றால் கண்கள் மிளிர, மாமன் குஷியோடு வேகமாக தலை அசைக்க..

அதை கண்டு பிரதி முறைக்க.! சர்வேஷ் துடிக்க.! பவித்ரா அவன் கையை கோர்த்து வெளியே இழுத்துச் செல்ல..!

தீயிலிட்ட மூங்கிலாய் பிரதியின் நெஞ்சம்.! அசைய மறந்து அப்படியே நின்றாள். தோழியின் குணம் தெரியும்.. ஏதோ.. சம்பவம் செய்யப் போகிறாள் என இதயம் தந்தி அடிக்க.. வாட்சப் செயலியில் ஸ்டேட்டஸ் நோட்டிபிகேஷன். மணி அடித்தது..!

பிரதி, சர்வேஷ் இருவர் நெஞ்சிலும் இடி முழக்கம் தான்.. வீடியோ அப்படி. !!

" ஏ… சுத்தி வருவது சோதிக்கதானே…

சுந்தரி அழகு சாமிக்குதானே…

கற்பூரம் எதுக்கு காமிக்கதானே…

கட்டிலும் எதுக்கு சாதிக்கதானே…

சரணம் முடிஞ்சா பல்லவி தானே.. "
என்ற டூயட் பாடலை சேர்ந்து ஜோடியாக பெர்ஃபார்ம் செய்யும்..நெருக்கமான,ரொமான்டிக் வீடியோ.!!


சுத்தி வருவது சோதிக்க தானே.. ' என்ற வரிகளில் பவித்ரா தன் ஒற்றை விரலால் அவனை ஒரு சுற்று தீண்டி வட்டமடிக்க..

சுந்தரி அழகு சாமிக்கு தானே!
' அவள் அணிந்திருக்கும் சேலை பட்டைகளை மேலிருந்து கீழ் வருடி..
அவனுக்கு தான் என கை காட்ட..!!

கற்பூரம் எதுக்கு காமிக்கதானே… ' எனும் வரிகளில், ப்ரீத் பவியின் கைகளை பற்றி அவள் முகத்திற்க்கு நேரே உயர்த்தி கற்பூரம் இல்லாமல் ஆரத்தி சுத்திட,

கட்டிலும் எதுக்கு சாதிக்கதானே.. ' என இழுக்க அவன் நெற்றி முட்டி அவள் சிரிக்க.. இவன் ரசிக்க..

சரணம் முடிஞ்சா பல்லவி தானே.. " பாடல் வரிகள் நிறைவுற , மாமன் தோளில் நாணச் சிவப்பில் முகம் புதைக்க .. வெட்கத்தில் அவன் சிரிக்க..

இதயம் வெடிக்கும் நிலையில் அவர்களை காதலித்த ஜீவன்கள் தவிக்க..!! துடிக்க..!! அற்புதக் காட்சி.!!

பல்லைக் கடித்துக் கொண்டு.. கோபமான குரலில்.." அவ இருக்கும் போது அவ மாமா
வ இன்சல்ட் பண்ண கூடாதுன்னு தெரியாதா..? சீக்கிரமா கீழ போங்க, நேரா போய் ரைய்ட் சைய்ட் திரும்பு னிங்கனா ஒரு கார்டன் ஏரியா இருக்கும் .. "

"ஹான்.. " புரியாமல் முழிக்க.

" உங்க ஆளு அவரோட அடுத்த டூயட் ரீல்ஸ் பண்ணுறதுக்குள்ள தடுங்க.. ணா.." என்றதும் கீழே ஓடியவனுக்கு நேர்வழி கூட தெரியாமல், டெங்ஸனில் குழம்பி .. நிற்க.! ' 'சுந்தரி அழகு சாமிக்கு தானே..' வேறு ஒளியும் .. ஒலியுமாக கண் முன்னே வந்து போக.. தீயாய் மூண்டது கோபம்..

இருவரும் கார்டனில் நெருக்கமாக நிற்பதை பார்த்து ஆத்திரத்தோடு அருகே வந்து..
ப்ரீத் குமாரின் சட்டையை கொத்தாய் சர்வேஷ்வரன் பிடிக்க..! இருவரும் தங்கள் கரங்களை முறுக்கி கொண்டு அடிக்க
பாய.. சர்வேஷ் ஐ பிடித்து பவித்ரா இழுக்க..

அவளை தீயாய் முறைத்து விலகிப் போனான் சர்வேஷ்வரன்.

பிரச்சனையை தீர்க்க.. மாமாவை மேலே வராமல் இங்கேயே இருக்க வேண்டும் என்ற உத்தரவிட்டு, பவித்ரா.. மேலே சென்று வாசல் தாண்டி வீட்டின் உள்ளே செல்ல.. பிரதியை பார்த்ததும்..வேண்டுமென்று முணு முணுத்தால் பாடல் வரிகளை .

" நாக்கு செவக்க சுண்ணாம்பு வேணும்…
நானும் செவக்க மாப்பிள்ளை வேணும்…

தாலி கட்டியதும் தாளிக்க வேணும்.."

அவள் பிறவி குணமான பொறுமையை மீறியது பொறாமையால் உண்டான கோபம்."அறைஞ்சுடுவேன் ... டி.. ஒவரா போற.."

பவித்ரா -" நீயும் தான்.. ஒவரா போற.."

" உனக்கு என்ன திமிர் இருந்தா.. சர்வேஷ் அண்ணா பாக்கற மாதிரி வீடியோ போடுவ.. அவர் என்ன நெனைப்பாரு..? பயமே இல்லை.. ல.." என்று பதறி போய் கண்டித்தால்.ஒரு ஆணின் சந்தேகத்தால் ஆழமான காயங்களை அடைந்தவள்.

"இல்லை ..நான் ஏன் பயப்படனும். ? யார்கிட்டயும் ப்ரீத்த நீ விட்டுக்கொடுக்க கூடாது. என் மாமா குழந்தைக்காக இங்க இருக்கான், கண்டவனும் வந்து அதிகாரம் பண்ண இல்லை. வேலைக்காரனா தான வச்சிருக்க, வீட்டுக்காரனா இல்லையே.? என்ன கேள்வி கேட்க நீ யாருடி..? அவனை ஒட்டி உரசி உறவாட எனக்கு உரிமை இருக்கு. ஏன்னா எனக்கும் கல்யாணம் ஆகல,என் மாமாவுக்கும் கல்யாணம் ஆகல,கதை இப்ப கூட மாறலாம்.!! தப்பு பண்ணா தண்டனை கொடுக்க உனக்கு உரிமை இருக்கு.அடுத்தவங்க முன்னாடி விட்டுக்கொடுத்த னு வை..பவித்ராவ வேறமாதிரி பார்ப்ப! முகம் கொடுத்து பேசாம எவ்வளவு கொடுமை அவன பண்ற..எனக்கு தெரியாது நினைச்சியா?உங்க ரெண்டு பேருக்கு இடையில வரக்கூடாதுனு ஒதுங்குனா.. சீண்டி பாக்குறீங்க.?இந்த கோபம் வெறுப்ப வச்சு, என்ன சாதிக்க போற.?உன்னோட பழி உணர்ச்சி,
உனக்கான காதலையும்.
பிள்ளைக்கு கிடைக்க வேண்டிய உரிமையும் தடுக்குதுன்னு உனக்கு புரியலையா..
ப்ளீஸ் டி.. எனக்காக ரெண்டு பேரும் எல்லாத்தையும் மறந்து மன்னிச்சு சந்தோஷமா வாழனும்.
உண்மையான அன்பு காயப்படும் காயப்படுத்தாது பிரதி..புரிஞ்சுக்கோ.. "

" எனக்கு அட்வைஸ் பண்றது இருக்கட்டும்.
நீ..என்ன பண்ற பவி. ?ஆம்பளைங்களுக்கு சந்தேகம் வந்தா ஒரு பொண்ணோட வாழ்க்கை சீரழியும் அப்படின்னு , என்ன பாத்து கூடவா உனக்கு தெரியல? சர்வா அண்ணா என்ன நெனைப்பாங்க.?உன்ன கல்யாணம் பண்ணிக்க போற மாப்பிள்ளை.வார்த்தையை டக்குனு என்னால விட முடியாது. அதுக்காக தான் அமைதியா நின்னேன். உனக்கு மாமா..னா
என் பிள்ளையோட அப்பா டி.. அவரு.. அவர நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்னு உனக்கு தெரியும். விதண்டாவாதம் பண்ணாதே.."

" அப்போ உங்க பிள்ளையோட அப்பா மட்டும் தான் அவரு.? வேற எந்த உறவும் இல்லை. "
" நீதானே இப்ப சொன்ன. கல்யாணம் ஆகாதவர எப்படி நான் புருஷன் னு சொல்ல முடியும்.இப்போ அது முக்கியமும் இல்லை. நீ சர்வேஷ் அண்ணாவை போய் சமாதானப்படுத்து. ரொம்ப கோபமா ஊருக்கு போறேன்னு உள்ள போயிருக்காங்க. சந்தேகம் மட்டும் ஒரு உறவுல வந்துறவே கூடாது பவி." என்றவள் குரலே வலியை தாங்கி வர..

அந்த வாக்கியத்தை உணர்வுபூர்வமாக பிரதி சொல்லி முடிக்கும் முன், அவளை கடந்து அவனவன் இருக்கும் அறையில் நுழைந்து கதவை தாழிட்டால் பவித்ரா..

" சர்வா.. இங்க பாரு " முகம் பாராது,கையை அழுந்த மடக்கி, பற்களை கடித்து கோபத்தை வெளிக்கொணராமல் இழுத்து பிடிப்பது நன்றாய் உணர்ந்தால் பவித்ரா..

" பேசு.. டா.. சர்வா.." மெல்லிய குரலில் அழைத்தால்.

"வெளிய போ .. எதாவது மோசமா சொல்லிடுவேன் .. வெளிய போ.. " கர்ஜித்தான் ஈஸ்வரன்

வெளிப்படுத்தாத கோபமும் விஷம் தான்.திட்ட வைக்க, வெறுப்பேற்றத் தொடங்கினாள்.. " சுத்தி வருவது சோதிக்க தானே சுந்தரி அழகு சா.." என்ற பாடலை முணுமுணுத்து முடிக்கும் முன்னே.. ஆறாத கோபத்தோடு தோகையானவள் மெல்லிய கரம் பற்றி வன்மையாக இழுத்தவன்.. அவள் பின் கழுத்தை இரு கைகளால் கோர்த்து பிடித்து தன்
மொத்த கோபத்தையும் அவள் இதழ் மீது இறக்கிட, சீறும் அவன் கோபம்.. அவள் மென் இதழ்களை நிலைகுலைய செய்ய ..! ததும்பித் தள்ளாடினாள் பவித்ரா..

பூஞ்சை போல மென்மையாக காதல் செய்பவன் அவளின் சர்வேஷ். ஆண்மகனின் காதலி மீதான அழமான உரிமை வெளிப்பாடு மெல்லியவளுக்கு வலியை வாரி தந்தது.. இதழின் ரத்தக் கசிவு அவன் எச்சில் உணரும் வரை நிறுத்தமில்லாமல் தொடர்ந்தது யு (மு)த்தம். என் உரிமையானவள் நீ என விதைக்கிறான் காதல் வி(வ)தையை !! பொறுக்க முடியாமல் அவனை தள்ளிவிட,

" என்னடி சொன்ன ? உன் அழகு அவனுக்கு.. எனக்கு தாண்டி எனக்கு மட்டும்தான். " கத்தினான் காதல் கொண்ட மிருகமாய் . காதல் மனிதனை வெறி ஏற்றி அடங்கா காட்டுமிராண்டியாக்கும். விலக விடாமல் மீண்டும் முத்தத்தை தொடர்ந்து கொண்டே இருக்க.. இந்த முறை தடுக்காமல் அவளும் அணைத்திட மெல்ல கோபம் தளர்ந்து..குற்ற உணர்வோடு விலகிப் போனான் சர்வேஷ்வரன்.

" ஐ லவ் யூ .. சர்வா.. ப்ளீஸ் வேற எதுவும் என்கிட்ட கேட்காத. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.." அவளே முன்வந்து அவனை அணைப்பில் இறுக்க.

உண்மை காதலை அவள் ஒற்றை அணைப்பில் உணர்ந்து"இது போதும் டி." நெற்றியில் இதழ் பதித்து .. கன்னத்தில் இச்சுகளை கடத்த .. உதட்டை நோக்கி காதல் கடத்த முயன்ற போது.. சாம பூஜையில் கரடியின் வரவு போல.!

இடி.. இடிக்கும் ஓசையை.. ஒத்த, ஒரு பேரிரைச்சல் கதவே உடையும் அளவு பலம் கொண்டு கதவை தட்டி உடைக்க, சர்வேஷின் முகத்தில் மெல்லிய குறுநகை.. "வந்துடான் " பவித்ராவின் பார்வை அதிரும் கதவில் படிய, பயந்து வேகமாக ஓடி கதவை கொஞ்சமாக திறக்கும்.. போதே.. அவள் கரத்தை அழுத்திப் இறுக்கி பிடித்து கிட்சன் நோக்கி இழுத்து சென்றான் ப்ரீத். அவள் நிமிராமல் தலை குனிந்து நிற்க.

அவள் தாடையில் இரு விரல் பதித்து முகம் உயர்த்தி.. அழுத்தமாக ஒரு பார்வை பார்த்து" அடிச்சானா.. பவி "கன்னங்களை கண்களால் ஆராய .

சில நொடி மெளனமாக கழிந்தது நிமிடம்.

" சர்வா.. உன்ன மாதிரி சந்தேக புத்தி உள்ளவன் இல்லை. என்ன பண்ணாலும் சகிக்க , நான் பிரதியும் இல்லை." என்று சொல்லால் குத்தி வீழ்த்திய பின். மாமானை பார்க்க..? சொல் சுட நிமிர முடியாது நின்றான ப்ரீத்.!

" ஏன் மாமா.. எனக்கு கேட்க நீ இருக்க.. சர்வா என்ன அடிச்சிருந்தா சண்டை போட்டு இருப்ப..தான ?பிரதி அடிச்சா கேட்க யாரும் இல்லைன்னு அடிச்சியா மாமா ? " என்ற கேள்வியே அவன் குணத்தின் மீது படியும் சாட்டையடி தான்!

" சர்வேஷ்க்கு வந்த கோபம் என் மேல உள்ள காதலால தானே தவிர,சந்தேகத்தால இல்லை. இந்த இடத்துல நீ இருந்தா என்ன ஆகியிருக்கும். ? கொலையே நடந்து இருக்கும். உரிமையோடு கோபப்படுறது வேற..நம்பிக்கை இல்லாம சந்தேகப்படுறது வேற.நீ ரெண்டாவது ரகம்.

ஒரு பொண்ண நம்பிக்கைல மட்டும் தான் கட்டிப்போட முடியும். திரும்ப இந்த மாதிரி சூழ்நிலை பிரதிக்கு வராம பாத்துக்கோ.

காதல் அடையுறதோ.. வலி கொடுத்து தன்னோட தக்க வைச்சுகிறதோ.. இல்ல.!

நமக்கு பிடிச்சவங்கள சந்தோஷப்படுத்துறதுக்காக நாம நம்மள மாத்திக்கிறது. பிடிச்சவங்களுக்காக வலிய அனுபவிக்கிறது..காயப்படுத்தாம விட்டு கொடுத்துட்டு விலகுறது. நேசிச்சவங்கள மரியாதையா நடத்துறது. அவங்க உணர்வுகளை புரிஞ்சுக்கிறது..
கூட காதல் தான். பாவம் மாமா அவ , கஷ்டம் மட்டும் தான் படுத்துவே னு தெரிஞ்சும் உன்ன காதலிச்சவ , இதுக்கப்புறமாவது உன்னால அவ காயப்படக்
கூடாது. " என்று அறிவுறுத்தி, மாமனுக்கு வக்காலத்து வாங்கி, மன்னிக்க சொல்லி கெஞ்சி, மறுமுறை ஒரு வாய்ப்பு தர சொல்லி .. பிரதி சம்மதித்ததும். சர்வேஷ் உடன் சென்னை புறப்பட்டாள் பவித்ரா..

கிச்சனில் ஒரு ஓரமாக மடங்கி அமர்ந்து யோசிக்க தொடங்கி விட்டான்.. ப்ரீத்.

ஒரு ஆண்மகனாக சர்வேஷ்வரன் மீது மரியாதை வந்தது. தன் மீது வெறுப்பும் தவறாமல் வந்தது. அவனோ .. கண்ணால் கண்டதை நம்பாமல் காதலை நம்புகிறான்.

நானோ .? நினைக்கவே.. குமட்டியது. காதல் என்ற பெயரில் பிரதிக்ஷாவிற்கு செய்த கொடுமைகள் எல்லாம் கண்முன்னே வந்தது. தன் காதல் மீதான கர்வம் உடைந்தது. பிரதி தன்மீது கொண்ட காதலின் உயரத்தை அதிசயித்து பார்த்தான் ப்ரீத். தவறவிட்ட வரம் அவள்.

மாறாத நம்பிக்கை தான் காதல் என சர்வேஷ்வரனுடன் ஒப்பிட்டு மாமனுக்கு உணர்த்தி விட்டாள் பவித்ரா.காதலின் அர்த்தம் உணர்ந்து, வாழ்வையே முழுவதுமாக தன்னவள் காதலுக்கு பரிசாய் தர வேண்டும் என்று முடிவெடுத்தான் ப்ரீத்.

இருவரும் சேர்ந்து வீடியோ வெளியிட்டதன் விளைவு.. நாடகத்தில் நடித்தவனுக்கு அரங்கேற காத்திருந்தது. அந்த முப்பது நொடி.. ஸ்டேட்டஸில் தன் காதலன் சிந்திய புன்னகையும் வெட்கமும்,கண்ணில் நிரம்பிய காதலும்,நெற்றி மீது நெற்றி மோதலும், ஊடலோடு கூடிய ஒட்டல்.. உரசல்கள் தொடுதல் அணைப்புகள்..சேர்ந்து அரங்கேற்றமான நாடக காதலை. கூட்டி
கழித்து கணக்கு போட்டு வட்டியோடு தண்டனை தருவாள். தன்னவன் தனக்கானவன் என்ற பிடிவாதம் மிகையான காதலி.!!


❤️நன்றிகள் 🙏கோடி❤️

உமா கார்த்திக்
 
Status
Not open for further replies.
Top