எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம்.64

Status
Not open for further replies.

uma Karthik

Moderator

ப்ரீத்.. அன்று வைத்த பைக் சாவியை இன்றுவரை எடுக்கவில்லை..எடுக்க விடவில்லை பிரதிக்ஷா.

கடந்த ஆறு மாதமாக வேலை பளு பிழிந்து எடுத்தது ப்ரீத்குமாரை,அவளிடம் முடியாது என்று சொல்ல முடியாமல், தரும் வேலைகளை எல்லாம் செய்ய முடியாது திண்டாடி தான் போனான்.

அந்த டூயட்க்கு பிறகு சிறு துரும்பை கூட அவள் அசைப்பதில்லை.இது நாள் வரையில் ஒரு வேலையும் அவனிடம் சொன்னதில்லை பிரதி. ஆனால் பவித்ராவோடு ஆடிய ஆட்டத்திற்கு பதிலடி கொடுக்க நினைத்து பழிவாங்கினாள்.

தன் காதலி யாரிடம் பேசினால் கூட, பிடிக்காமல் சாமி ஆடும் இவன். இன்னொருத்தியோடு டூயட் ஆடுவானா? ஏதாவது வேலை சொல்ல வேண்டுமென்றால் அவள் மகன் பெயரை சொல்லி வேலைகள் மட்டும் கட்டளையாக சொல்வாள். பார்வையில் கூட, முகம் தீண்டாது அலட்சியத்தால் அடித்தால் அவனை.

அன்று மேனேஜர் போஸ்டில் இருந்து அருணை டெர்மினேட் செய்ததால்.. ஆபீஸ் வேலைகள் கூட இவன் தலைமீது தான்.. தன் குழந்தைக்காகவும் தன்னை பழிவாங்கும் குழந்தைக்காக அத்தனையும் பொறுத்துக் கொண்டான். புன்னகை மாறாமல், ஆணவக்காரனின் கோபத்தை கர்வத்தையும் தன் பாதத்தில் பணிய வைத்தது.அவன் அணுவின் சதை வடிவமான மழழை ,அவன் மகன் எச்சிலோடு சிந்தும் ஒற்றைப் புன்னகை அத்தனை சோர்வையும் நீக்கிவிடும். வேலைகளை விட பிரதியின் ஒதுக்கம் தான் அவன் உயிரை ஒய்ந்து போக வைத்தது.

மூச்சடைத்தது அவள் காதல் இல்லாமல் .. அதற்காக ஏங்க மட்டும் தான் முடிந்தது,கேட்கத் தான் உரிமை இல்லையே..! வாய் வார்த்தையில் தெரியாமல் அவள் பெயர் கூறி அழைத்தால் கூட, வெறுப்போடு அவனை எரிக்கும் விழிகள் தினமும் வதைத்தது.

அதீத அலட்சியத்தால் தொலைத்த காதல்,அவன் அருகில் இருந்தும் நெருங்க முடியாமல் கொல்லும் ஏக்கங்கள் தீராதா.? கை சேராதா.?

குழந்தையை தூக்கிக்கொணடு கார்டன் ஏரியாவில் மாலையில் நடை பயிற்சி செய்வது பிரதிக்ஷாவின் தினசரி வழக்கம்.

மாலை நேரம் வீடு திரும்பும் பறவைகளை கண்டு ரசிப்பது அவள் மகனான அதிமிளிரனுக்கு மிகவும் பிடிக்கும். புரியாத மொழியில் வானத்தில் செல்லும் பறவைகளை அழைத்து பேசி சிரிப்பான்.

இன்றும் அது போல்
குழந்தையை தூக்கிக் கொண்டு பார்க்கில் பிரதி மென் நடை போட, தூரத்திலிருந்து அவள் பெயரை யாரோ அழைப்பது போல உணர்ந்து, திரும்பி பார்த்தாள்.!

பக்கத்து வீட்டு பெண்மணி தான், ஓட்டமும் நடையுமாக அவள் அருகில் வந்து, வியர்த்து பெருமூச்சு வாங்கி ..

" பிர..தி.." என கலவரமாக அழைக்க.

" சொல்லுங்க ஆன்டி . " என்றாள் நிதானமாக,

" உன் வீட்ல ஒருத்தன் இருக்கானே அவன் சரியான பொறுக்கி பய..முதல்ல அவன வேலையை விட்டு நிறுத்து " உறுதியாக சொல்ல.. பயம தொற்றியது பிரதிக்ஷாவிற்க்கு.

' என்ன பண்ணி இருப்பாரு? இவங்க ஏன் இப்படி' தவறான எண்ணங்களில் மனம் சிறகடித்து பறக்க " ஏன்.. அப்படி சொல்றீங்க."
யென
கேட்டவள் குரல் வேண்டுதலோடு அதிர்ந்து நடுங்கியது.

நான் சொன்னா. நீ .. நம்ப மாட்ட " என்று அவர் கையோடு கோர்த்து இழுத்து, நடக்க முடியாமல் தள்ளாடி நடந்து அவளை இழுத்து கொண்டு போய், அவள் வீட்டின் பால்கனி இருக்கும் பக்கம் அழைத்து வந்து நிறுத்திட,

" பிரதி.. அங்க பாரு." என்றதும் மேலே பார்க்க.? வாளியில் இருந்து துணியை உதறி கொடியில் போடும் அவளவனை விரலால் சுட்டி காட்ட, ஒன்றும் விளங்கவில்லை பிரதிக்ஷாவிற்க்கு.

சலித்துக் கொண்டு "பச்.. துணி.. காய வைக்குறாரு இது ஒரு விஷயமா.?"

" பேசாம அவன் பண்ணுறத பாரு.." வைத்த கண் வாங்காமல் அவனை வெறிக்க..
விருப்பமின்றி இவளும் அவன் செய்கையை நோட்டமிட்டாள்.

அவள் சுடிதார் டாப் ஐ நேராக பிடித்து கிளிப் மாட்டிவிட்டு, எதிரே நின்று ஏக்கப் பெருமூச்சி அனலாய் விடுவது தெரிய .!
அடுத்து என்ன என்ற ஆர்வத்தோடு விழிகள் விரிந்தது காதலிக்கு.

" இப்படி தான் நெருப்பு கணக்க ஒரு மூச்சியவிட்டு அந்த சண்டாளன் அடுத்து என்ன பண்ணுறான் பாரு.? " தூபம் போட்டு பேச,

பிரதி மேலும் ஆர்வம் கூடி பார்க்க..! சட்டென அவள் உடையை அவன் அணைக்க.! இவளை அணைத்தது போல மூச்சு முட்டியது. பழைய உணர்வுகள் நினைவுத் தீண்டலாய் கிளறிட, கடந்த கால காதல் காட்சிகள் கண்ணில் தோன்ற.! கண்கள் கர்வத்தில் மலர, எய்த பார்வையை அவனை விட்டு அகற்றவே முடியவில்லை.! உடனடியாக நிஜ அணைப்பு தர நெஞ்சம் தவிக்க.! இடையுறாக ஒரு குரல் கேட்டது.

" இப்ப புரியுதா.. சரியான காம காட்டேரியா இருப்பான் போல, பட்ட பகல்ல பால்கனியில இருக்க, ஈர துணிய கூட விட்டு வைக்க மாட்டிங்குறான். அவன போய் உன்கூட , அதுவும் கல்யாணம் ஆன பொண்ணு கூட வேலைக்கு வைக்குறது பேராபத்து. " என அட்வைஸ் முடித்து நிமிர, கோபம் வராது, அவள் முகத்தில் வெட்கம் வெடிக்க, அதை கண்டதும் இரத்தக் கொதிப்பு ஏறியது. அந்த ஆன்டிக்கு,
" என்ன நீ வெட்கப்படுற "

" அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை. அவரு அதியோட அப்பா. " என முகம் சிவக்க கூறினாள் பிரதி.

" உன்னோட புருஷனா அவரு .?"

இடம் வலமாக தலை அசைத்து
" ம். ஆமா." என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க.

" என்னடி இது நிஜத்துல நீ இருக்கும் போது.. ஏன் துணிய கட்டிப் பிடிக்குறான்.?" அவள் மீது சந்தேக பார்வை வீச,

" குழந்தை பிறந்து கொஞ்ச நாள் தான ஆகுது. அதான் தள்ளி இருக்காங்க." தயங்கி பொய் உரைக்க.

" அடியே.. பத்து மாசம் தான் ஆகிடுச்சே.. புள்ளை பொறந்து. புருஷன பட்டினி போட்டு கொல்லாத, ஆமா உன் புருஷன் வெளிநாட்டுல இருந்தவர் தான. கோடாலி தைல்லம் இருந்தா கொடேன்.." என பல்லை காட்ட ,

" ம்.." தலை அசைப்போடு புன்னகை மிளிர லிஃப்ட்ல் ஏறி வீட்டை அடைந்தாள்.

இத்தனை நாள் அவனை பார்க்காமல் தவிர்த்தாள். ஆனால் இன்று நாணத்தால் பார்க்க முடியாது தவித்தாள். " பாவம் " என்று பிரதி வாயில் முனகிட, பிளாஸ்டிக் வாளியோடு சென்றவன். ஒரு ஆழமான பார்வை பார்த்தான் அவளை. ?

' இன்னைக்கு என்ன சிரிச்ச முகமா இருக்கா.?'

காலிங் பெல் சத்தம் கேட்டது. வாளியை கீழே வைத்து விட்டு ப்ரீத் சென்று கதவை திறக்க, நடுத்தர வயது கொண்ட ஆண். வெள்ளை சட்டையும் கண்ணாடியும் அணிந்து நின்றார். யார் என புரியாமல் ப்ரீத் பார்க்க.? புரிய வைத்தது பிரதியின் குரல்

" வாங்க சார்.. காலையிலே வர்றதா சொன்னிங்க. உட்காருங்க " சோஃபாவை கை காட்டிட, மெல்ல உடலை அதில் பொருத்தி அமர்ந்தவர். அவர் சுயப்பெருமையை கதையை அளக்க தொடங்க,

கடுப்போடு' இவன் யாரு அறுவையா பேசுறான்.. ப்ரீத் தண்ணீர் எடுக்க கிட்சனுள் செல்ல.. திரும்பி அவருக்கு தண்ணீர் தர வந்தவன்.. செவியில் அமிலமாய் பாய்ந்தது அவர் சொன்ன வார்த்தை.

" நீங்க கேட்ட மாதிரி நல்ல கோடீஸ்வர மாப்பிள்ளைங்க ஜாதகத்தையும் போட்டோவையும் உங்க வாட்ஸ்அப்-க்கு அனுப்பி இருக்கேன். யார செலக்ட் பண்றீங்களோ அவங்க கூட வர்ற முகூர்த்தத்திலயே கல்யாணம் வச்சுக்கலாம்.

கோடிஸ்வர மாப்பிள்ளை என்ற வார்த்தையை கேட்ட ஏழை காதலன் மனம் தீயிட்ட எள்ளாய் கருகியது. கண்கள் வழிவது கூட தெரியாமல் கூனி குறுகினான். மனமெங்கும் தாழ்வுணர்ச்சி பரவியது.

" அவங்களுக்கு என்ன பத்தி எல்லா டீடெயில்ஸ் சொல்லிட்டீங்களா.? எனக்கு ஒரு குழந்தை இருக்கது. கல்யாணம் பண்ணிக்காம நான் ஏமாந்து போனது, எல்லாத்தையும் சொல்லிட்டீங்க தானே. " என்று கேட்டு தெளிவுபடுத்திக் கொண்டாள்.

" சொல்லிட்டேன்..மா யார் கிட்டயும் எதையும் மறைக்கல.இதெல்லாம் தெரிஞ்சு சம்மதம் சொன்ன, மாப்பிளைங்க மட்டும் தான், உங்க வாட்ஸப் நம்பர்க்கு அனுப்பி இருக்கேன். நீங்க பாத்துட்டு ஒரு முடிவை சொல்லிட்டீங்கன்ணா அடுத்த முகூர்த்தத்தில் கல்யாணம் வச்சுக்கலாம்." மென தலையை அசைத்து சிரிக்க.

" பணம் உங்க அக்கௌன்ட்க்கு அனுப்பி விடுறேன், நைய்ட் யாருனு சொல்லிடுறேன்." வாசல் வரை வந்து வழி அவரை அனுப்பினாள் பிரதி.

இங்கு உடைந்து ஒருவன். கிட்சன் ஸ்லாப் அருகே கீழே மடங்கி அமர்ந்து விட்டான். அவனால் முடியவில்லை. வேறு துணை தேடும் .. இணை, அவள் செய்கை வதைத்தது. இயலாமை கண்ணீராக உருவகமெடுத்து ஓடியது கன்னத்தில்.

கல்யாண தரகரை வழியனுப்பிவிட்டு உள்ளே அவனை தேடி வர, அவள் வருவதை அவள் கொழுசு முன்கூட்டி அறிவிக்க .! கண்களை துடைத்து காய வைத்தான் காதல் துளிகளை.!

" ப்ரீத்.." இரண்டு வருடம் கழித்து அவனை அழைக்கிறாள் எதற்க்கு என புரிந்தவன் இதழில் வெளிவந்தது கசந்த புன்னகை.!

" பேசணும் " சொல்லிவிட்டு ஹாலில் வந்து அமர்ந்தால் பிரதி.

திருமண செய்தி கேட்க வந்தான் ஜீவனற்ற காதலன்.!

" உங்ககிட்ட பேசனும் முக்கியமான
விஷயம், அதை நீங்க எப்படி எடுத்துப்பிங்கனு தெரியலை. நமக்குள்ள இருக்க உறவ நான் இதோட முடிச்சுட்டு, அடுத்த வாழ்கைய வாழ ஆசைப்படுறேன்.
உதட்டை கடித்து கண்ணீரை கொட்டிடாமல் அடக்கினான் ப்ரீத்.

உணர்வற்ற குரலில்" நமக்கு கல்யாணம் ஆகலை. சோ .. டைவர்ஸ் தேவையில்லை. லீகலா எந்த பிரச்சனையும் வராது. உங்க இஷ்பப்படி நீங்க வாழலாம், நான் அதுக்கு தடையா வரவே மாட்டேன். அதி மிளிரன் உங்க பையன் தான் " அழுத்தமான கேள்வி பார்வையால் வெட்டி " அதுல எதுவும் சந்தேகம் இருக்காதுனு நம்புறேன். உங்க பையன நீங்க உங்க கூடவே கூட்டிட்டு போயிருங்க. "


இதயம் தடதடத்தது அவள் கூறிய உங்க பையன் என்ற விலகலில் 'நம்ம குழந்தை பிரதி. என அவன் ஆன்மாவும் பேச மொழியற்று உள்ளே கதறியது ' இதையெல்லாம் கேட்க முடியாமல் திரும்பி விலகிச் செல்ல..தடுத்தது அவள் குரல்.

" பதில் சொல்லிட்டு போங்க. நடந்தது எல்லாத்தையும் மறந்துட்டு, உங்களை என்னால ஏத்துக்க முடியல,நானும் முயற்சி பண்ணி பார்த்துட்டேன், திரும்பத் திரும்ப காயப்பட என்கிட்ட சக்தி கிடையாது. மொத்தமா உங்கள விட்டு விலகிட தோணுது,எனக்கு நீங்க வேணா.. நமக்குள்ள ஒரு உறவு அப்படின்னா அதிய வச்சு மட்டும் தான். உங்களுக்கு யார் மேலயாவது விருப்பம் இருந்தா நீங்க அவங்களை கல்யாணம் பண்ணிக்கோங்க, நான் தடையாக வரமாட்டேன். என் வாழ்க்கைய வாழ எனக்கு உரிமை இருக்கு. கண்டிப்பா நீங்க அதிய எனக்காக விட்டுக்கொடுக்க மாட்டிங்க. உங்க பையன நீங்களே வச்சுக்கோங்க, வளர்த்துக்கோங்க,என்ன விட்டுருங்க.இதுக்கப்புறமாவது நான் நிம்மதியா வாழ்ந்துகிறேன். "
என பயம் வெளிகாட்டாமல் தன் பேச்சை முடித்து இதுவரை நிறுத்தி வைத்த மூச்சை விட்டு, குரலின்
நடுக்கம் வெளியே தெரியாமல் தான் பேசினால் பிரதிக்ஷா.


கண்டிப்பாக கொலை விழும் என்று தெரியும்.திரும்பாமல் அப்படியே நிற்பவனை நடுக்கத்தோடு வெறித்தது இவள் பார்வை.கோபம் கொண்டு மிருகமாகி எப்போது வேண்டுமானாலும் அவள் மீது தாக்குதலுக்காக பாயலாம், என எண்ணியவள் விரலோடு சேர்த்து கால்களும் கிடுகிடுத்தது.

உடைந்த குரலில் "இன்னொரு தடவை எனக்கு வாய்ப்பு கொடுக்க கூட உனக்கு பயமா இருக்கு. அந்த அளவு என்னால நீ பாதிக்கப்பட்டு இருக்க, என் மேல தான் தப்பு ,என்னால நீ நிறைய கஷ்டப்பட்டு இருக்க. " மறு வாய்ப்பு தர மாட்டாயா என்ற கெஞ்சுதலோடு அவன் விழியில் அடை மழை பொழிவது, முகம் காட்டாமல் திரும்பி நின்ற போதும். காதல் கொண்டவள் அகம் உணர்ந்தது அதிசயமே.!

" நான்.. பொய் டுறேன். நீ நிம்மதியா உனக்கு பிடிச்ச மாதிரி வாழு. சத்தியமா திரும்ப வர மாட்டேன். சேர்ந்தா தான் காதலா என்ன? நீ என்ன வெறுக்க ஆயிரம் காரணம் இருக்கு. சாகுற வரை நான் உன்ன காதலிப்பேன் பிரதி. என் காதல் தீராது.! ஒரு வாய்ப்பு கொடு னு கெஞ்சக் கூட தகுதி இல்லாம நிக்கிறேன் பிரதி நான். நீ எடுத்த முடிவு சரி. என்னால நீ பட்ட வேதனை, யாரா இருந்தாலும் என்ன வெறுப்பாங்க. என்ன மாதிரி ஒரு தப்பான காதலால நீ பட்ட வலிகள். உனக்கு சரியான வங்கள, உன் அன்புக்கு தகுதியானவங்கள தேர்தெடுக்க உதவும்.

" நான் வேற ஒருத்தர கல்யாணம் பண்ணிக்கிறதால உங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. குட்.. அப்போ அதி ?" அதிவேக நெஞ்சத் துடிப்போடு பதிலுக்காக காத்திருந்தாள் அவள்.

" அதிக்காவது அம்மா வேணும். என்ன மாதிரி ஏங்கி வளர வேண்டாம். " வழிந்த கண்களை துடைத்து
வார்த்தையை தொடர்ந்தான் " என் பையன் என்ன மாதிரி இருக்க கூடாது. உன்ன மாதிரி யாரும் பிற்காலத்துல கஷ்டப்பட்டுட கூடாது. என்னால உன் புள்ளைய வெறுத்துடாத பிரதி. நான் விலகிடுறேன். அதிய நீ நல்லா வளர்ப்ப அது போதும். முன்ன தெரியலை. இப்ப உன்ன ரொம்ப காதலிக்குறேன். நீ சந்தோஷமா இருப்பனா.. நான் விலகிக்குறேன். பிகாஸ் ஐ லவ் யூ..ஐ லவ் யூ சோ மச்.. " என்று கத்திகொண்டே திரும்பாமல் அப்படியே நிற்க.

அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றாள் பிரதிக்ஷா .
இந்த மாற்றத்தை அவள் எதிர்பார்க்கவில்லை. ' என்ன ஆச்சி இவருக்கு.' என்ற எண்ணம் தவிர்க்க முடியாமல் வந்தது.

கண்ணீரோடு கேட்டாள் " என்ன விட்டு பொய்டுவீங்களா.. ப்ரீத். "

போகவே மாட்டேன். என வாரி அணைக்க துடித்த மனதை அடைத்துக் கொண்டு." ம் "

புயல் அடித்து ஒய்ந்த பின் கூட்டை அடையும் பறவையாய் அவன் மெய் காதல் கண்டு கண்ணீருடன் கர்வம் பெருகியது . பல உணர்வுகள் பேரலையாய் சுற்றி அடித்து ஓய்ந்தது.

முடியாது,விட மாட்டேன். என பழைய பிடிவாதக்காரனை எதிர் பார்த்து ஏமாந்து போனால் பிரதி. பெரிய பிரளயத்தை எதிர் நோக்க.! எங்கிருந்தாலும் வாழ்க என பேசியது கோபத்தை ஏற்படுத்தியது. " தேங்ஸ் " என்று வாட்ஸ் அப்பில் வந்த மாப்பிள்ளை போட்டோவை விரலால் நகர்த்தி பார்த்து வேண்டுமென்று சத்தமாக படித்தால்.


" சந்தோஷ்.. ஐடி கம்பெனி ஒனர், டேய் .. அதி நீயே வந்து உங்க அப்பாவ செலக்ட் பண்ணு. அம்மா செலெக்ஷன் எப்பவும் தப்பா தான் இருக்கு.. " என அவள் குத்தலோடு குறைபட்டு பேச, சூழல் மீதி இதழ் விரிந்தது அவள் செலக்ஷனுக்கு.!

அப்பா என்றதும் மெல்ல ஊர்ந்து .. அவன் டிராக் பேண்டை பற்றி ஏறி காலை ஊன்றி நின்ற மகன் முதல் அழைப்பை பரிசளித்தான் " ப்பா.." உயிர் உருகியது அவன் அழைப்பில் .. பாவ மன்னிப்பு வழங்கியது போல தந்தை எனும் அழைப்பு.. மண்டியிட்டு வாரி அணைத்துக் கொண்டான் தன் சிறு உயிரை . " ப்பா.." மறு அழைப்பில் அடக்கிய அழுகை எல்லாம் வெடித்தது.

உணர்ச்சி பெருக "அப்பா போக மாட்டேன் டா.. அம்மாவ மன்னிக்க சொல்லுடா.. ஒரு தடவை நம்ப சொல்லுடா " என மன்னிப்புக்காக இறைஞ்சினான். ப்ரீத்

பொய் கோபத்தோடு " என்ன சொன்ன? "அருகில் வந்து பிள்ளையை அதட்டினாள் பிரதி.

" இங்க பாரு .. குழந்தைக்கே அப்பா நான் தான்னு தெரியுது. என்ன ஏத்துக்கிறத தவிர உனக்கு வேற வழி இல்லை. அக்ஸப்ட் மீ.. " என சிரித்து பிள்ளையை நெஞ்சோடு அணைத்து காத்தான்.

" அடி.. வாங்க போற." பிள்ளையை பிடுங்க வர.

உதறிவிட்டு" எங்க.. அடி பாக்கலாம். கை காணம பொய்டும். " என எச்சரித்தான்.
" ஒ.. நீங்க விட்டுட்டு போன பிறகு அடிப்பேன். உங்க புள்ளைய "

" விடவே மாட்டேன். என் பிள்ளையையும் என் பொண்டாட்டியயும். " அவளையும் கோர்த்து அணைக்க, திமிறுவது போல பாசங்கு செய்து,

அலுத்துக் கொண்டு தன் கேள்வியில் உரிமைக்கான ஆசை விதைத்துக் கேட்டாள். " ம். கும்.. நான் பொண்டாட்டியா.? தாலி கட்டின மாதிரி உரிமையா கேட்குறாரு.? " முகத்தை வெட்ட,

" தாலியே தேவை இல்லை நீ தான் என் பொஞ்சாதி " என பனிமலையை பார்சல் செய்ய,
" எனக்கு தாலி வேணும் எப்ப கட்டுவாருன்னு உங்க அப்பாட்ட கேட்டு சொல்லு அதி." அர்த்தம் உணர்ந்து அதிர்ந்தது அவன் விழிகள்.

மன்னிப்பு தந்த தேவதையை மேலும் தன்னோடு இறுக்கி அணைத்து.
அவள் மார்பில் புதைந்து கொண்டு..விழிகள் கரைந்து வெம்பிஅழும் குழந்தையாய் மாறினான் காதலன்.! மன்னிப்பின் விழிநீர் பட்டு இதுவரை அவளை சந்தேகத்தால் குத்தி கீறிவிட்ட நெஞ்சத்தின் ரணமான காயங்களை அவனே நீர் மருந்திட்டு ஆற்றிட குளிர்ந்து போனால் காதல் இலக்கணமானவள்.!!

"அஞ்சு நிமிஷத்துல ஆயிரம் தடவை செத்துட்டேன்டி.. ராட்சசி ." என்றான் கண்ணீரோடு திமிறி .. தொடர் விம்மிலோடு, பேச வராது.. " நா..நா.." என திக்கி தொடராது, தடைபடும் வார்த்தை இல்லா வாய் அசைப்பை, சொல்ல முடியாத வலிகளை .. தவிப்புகளை, ஆறுதல் படுத்தினால் இதழ்களால்.!

எல்லா முத்தமும் காமத்தை கடத்துவது அல்ல, கண்ணீரையும் காதலையும் வலிகளையும் கடத்தி உணர்த்திடும், வகையான முத்தம் தான் இது.!

இரண்டு வருட பிரிவின் வலி.
அவன் மீது கொண்ட தீரா காதலின் வெளிப்பாடு.!
விதியால் பிரிந்த மெய் காதலின் உணர்வின் உருக்கம், கண்ணீர் திரவமாக.!
காதல் பெருக்கத்தினால் இதழ்கள் இடைவெளி இன்றி தாழிட்டு கொண்டது.

பிள்ளை அழுகுரல் கேட்டு இருவரும் விலகிட , கை நீட்டி அணைப்பை யாசிக்கும் பிள்ளையை தூக்கி நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் தாய். பசியில் பிஞ்சு முகத்தை புரட்டியது மார்பில்.! அறைக்கு சென்று பசியாற்றி, மடியில் வைத்து கொஞ்சும் போது.. ப்ரீத் உள்ளே வந்து பிள்ளையை வாங்கி மடியில் வைத்து அமர, அவன் ஒற்றை தோள் மீது கன்னம் பதிய முகத்தை புதைத்து கொண்டால் பிரதிக்ஷா .

'எத்தனை நாள் ஏக்கம் இது.அவன் அருகாமை, அன்பு, அணைப்பு.. அதனை தினம் ஏங்கி தேடியவள். தலைவன் கை சேர்ந்ததும், விழிநீர் கொட்டியது. இருவருக்கும் காதலுக்கு பஞ்சமில்லை தான்.! உரிமையோடு உறவு சேர்ந்தால் தான் வலிமையாக மாறும். அதற்காகத் தான் இத்தனை நாள் தள்ளி இருந்தால். அவள் பலவீனம் இவன் அருகாமை..

''காதல் மட்டும் கொண்டிருந்தால் என்றோ வெறுத்து விலகி இருப்பாள்.
தாய்மையும் சுரந்ததனால் தான், இத்தனை மன்னிப்புகள், தண்டனை விடுப்புகள். காதலின் அடுத்த கட்டம் காமம் என்ற வழமைகள் பிழையாக, காதலின் உச்சம் தாய்மை.! எனும் இலக்கணம் இயற்றினால் தீராத காதல் கொண்ட, இவன் பிரதியானவள்.! "

காதல் சுமைத்தாங்கியவள், மனதின் பாரம் கனக்க, கண்ணீர் கொட்டியது.!
" பிரதி.. ஏன் பொய் சொன்ன ? துடிச்சுப் பொய்ட்டேன். " அவள் கையை இதயத்தில் அழுத்தி பிடித்து " பாரு இன்னுமே அதிர்ச்சி குறையல , எப்படி படப்பட னு நெஞ்சு அடிச்சுக்குது பாரு.! " பதில் வேண்டி திருமதி யின் முகம் பார்க்க.?

" ஒரு அஞ்சு நிமிஷம் .. நான் சொன்ன பொய்ய தாங்க முடியலை. " வெறுமையாக புன்னகைத்தாள். "கல்யாணம் ஆயிடுச்சுன்னு பொய் சொன்னிங்க.? அத உண்மைனு நம்பி.. குழந்தை உண்டானது கூட சொல்லாம மறச்சுட்டேன். பிரசவத்தப்போ.. பவித்ரா வந்து சொன்னப்ப தான்.. நீங்க யாரையும் கல்யாணம் பண்ணிக்கல குற,உண்மை தெரிஞ்சது. அதுவரை இப்படி தான் எனக்கும் மனசு வெடிக்குற அளவு துடிச்சது, எனக்கு துரோகம் பண்ணிட்டீங்கன்னு வலிச்சது. " கண்ணீர் கோடுகள் நீள.. அவன் முகத்தை பார்த்தாள். கேள்வியாக.

குற்ற உணர்ச்சி,அவமானம், சுய வெறுப்பு முகத்தில் நிறைய, தலையை தாழ்த்தினான் அவள் பார்வையை எதிர்க்க தைரியமற்ற கோழையாக, விலகும் அவனை மேலும் இறுக்கி அணைத்து பிடித்தவாறு " இப்டியே .. கொஞ்ச நேரம்.. ப்ளீஸ் தள்ளி போகாதிங்க.." கெஞ்சும் குரலில் கேட்க.
"ம்" என்று அவள் தலைமீது தலை சாய்த்து " பிரதி.. உன்கிட்ட பேசனும் டி"

" பேசுங்க"

" பேசனும்,மிஸ் பண்ணத எல்லாம் சொல்லனும். " கழுத்தில் முகம் புதைத்து மீசையால் நெருட ,

கூச்சம் வந்து துள்ளினாள் பிரதி." ஸ்.. ஸ்.. என்ன பழக்கம் இது .? இப்டி தான் பேசனுமா.? சும்மா இருங்க ப்ரீத்.. நம்ம குடும்பமா இருக்கிற இந்த நிமிஷத்த முழுசா ஃபீல் பண்ண விடுங்க, அப்பறம் பேசலாம்.

" முடியாது.. ரெண்டு வருஷம் ஆகுதுடி.. அசைவம் சாப்டு .. இதுக்கு மேல நல்லவனா நடிக்க முடியாது டி.. ப்ளீஸ் " தாபத்தில் தவழ்ந்து குரல் குழைய.

"அப்போ இது எல்லாம் நடிப்பா !
நீங்க மாறலையா.? "அதிர்ந்து நெஞ்சில் கை வைக்க.

" பதறாத டி.. குணம் மாறிடுச்சு, காதல் எப்படி மாறும். ? இத்தனை நாள் ஆசைகளை எல்லாம்
கட்டுப்படுத்தி இருந்தது, பெரிய சாதனை தான். ப்ளீஸ் பிரதி.. " இதழுக்கு முன்னேற முயல, தலையில் கொட்டி விலகி போனால் பிரதி.

" எனக்கு உங்க கிட்ட நிறைய பேசனும்.மிஸ் யூ சொல்லணும்.குழந்தை தூங்க வச்சுட்டு வந்து பேசலாம். " காதல் பார்வை வீச, எகிறி குதித்தது வேட்டைக்கு தயாரான ஆண் மனம்.!

" எப்படி தூங்க வைக்குறேனு மட்டும் பாரு. " பிள்ளையை தோளில் போட்டு தட்ட ,அது பதிலுக்கு தந்தை தோளில் தாளம் தட்டியது.

பிரதி வேண்டுமானால் மன்னிக்கலாம். பிள்ளை பழிவாங்கலை கையில் எடுத்தது. இமை சொடுக்காமல் விழித்துக் கொட்டியது. அவனும் எல்லா முறையிலும் உறங்க வைக்க முயன்றான் .. யூ- டியூப் வீடியோ டிப்ஸ் பார்த்தும் பயன் இல்லை. இளமை சூடு தாங்காமல் சிவக்கும் விழிகளோடு பிரதியை ஏக்கமாய் பார்ப்பதும், எச்சிலை விழுங்கி சோர்ந்து போய் தலையில் கை வைய்ப்பதை பார்த்து வரும் சிரிப்பை அடக்கிக் கொண்டாள் பிரதி. மேலும் ஒரு மணி நேரம் கழிய, சோஃபாவில் அமர்ந்து உறங்கும் பிரதியை பார்த்து எரிச்சல் வந்தது. தொட்டிலில் போட்டு மகனை ஆட்டோ.. ஆட்டு என ஆட்டியும் தூங்காமல் இருக்க, தாபத்தால் வந்த கோபத்தில் கீழே கிடந்த பொம்மையை தூக்கி அவள் முகத்தில் வீச, விழித்தவள் அதிர்ந்து சுற்றிலும் பார்வையை சுழல விட்டாள்.

" என்னடி.. தூங்குற ?" எரிச்சலோடு பல்லை கடிக்க,

" தம்பி தூங்கிட்டானா " சந்தேகமாய் தொட்டியை பார்க்க குழந்தை உடலை நெளித்து முண்டியது.

இரண்டு மணி நேர போராட்ட கடுப்பில் " உன் புள்ளை தூங்கவே .. மாட்டிங்குறான் டி " வலியில் கையை உதற.

" என்ன ? இத்தனை நாள் என் புள்ளை னு கொஞ்சிட்டு, அடம் பண்ணதும் என் புள்ளை ஆகிட்டானா.? " நேராக எழுந்து அருகில் வந்து பிள்ளையைப் அள்ளி எடுத்து முகம் பார்க்க. மொச்சை விழியில் துளி தூக்கமில்லை. 'சுத்தம் வயித்துல இருக்கும் போது இவரு படுத்துன பாட்டுக்கு ரிவென்ஞ் எடுக்குறான் போல ' என நினைத்து சிரித்தவள். பாலை புகட்டி, பின் பிள்ளையை ப்ரீத் கையில் தினித்து

" எனக்கு தூக்கம் வருது நான் போய் தூங்குறேன். உங்க பையன் தூங்குனதும், வந்து எழுப்புங்க என அவள் உள்ளே தன் அறைக்கு செல்ல, மணி இரவு ஒன்று.

" டேய்.. முடியலைடா.. ஒரு மணிடா, நேத்து வரைக்கும் ஒழுங்கா தான தூங்குன ? இன்னைக்கு ஏன்டா.. தடா போடுற.. நீயும் ஏன்டா பழிவாங்குற, இவனுக்கு நடக்கிறது புரியுதோ .?" என்ற சிந்தனையில் வேறு மூழ்கினான். அதற்க்குள் அவன் பெற்றவன்.. தவழ்ந்து போய் பொருட்களை கலைத்துப் போட ஐயோ.. என தலையில் கை வைத்து ஒடி பிடித்து கலைத்து போனான்.. கீழே அமர்ந்து மடியில் போட்டு தட்டிக் கொடுக்க.. கோழி கூவும் சத்தம் கேட்டது.

"விடிஞ்சேடுச்சா.?" புலம்பலோடு ..பிள்ளையை மடியில் போட்டு, அமர்ந்த வாக்கில் சுவற்றில் சாய்ந்து அவனும் தூங்கி வழிய,
விடிந்ததும் எழுந்து வந்து பாக்கெட் பாலை எடுத்து வந்து ஃபிரிட்ஜில் போட்டு, அவன் அருகில் வந்து உட்கார்ந்து அவன் கன்னம் தொட, பாக்கெட் பாலின் குளுமை சில்லென கையிலிருக்க, " பச்.. " ஜில்லிப்பில் முகத்தை திருப்பி சிணுங்கினான்.
" என்னங்க.. விடிஞ்சுடுச்சு." விழி திறக்க முடியாத நிலை, கைகளால் தேடி அவளை பிடித்து, தன்னோடு சேர்த்து அணைத்து பிடித்தவாறு " பக்கத்துலயே இரு போகதடி" என்று உறக்கத்திலும் கெஞ்சிட, அவன் ஆதுரமான அணைப்பில் உருகி பின் உறங்கியும் போனால் பிரதிக்ஷா .

அவள் வாழ்வின் இனிய உதயம் இன்று. பகலில் அவள் கண்ட கனவுகள் நிஜமாக, நிறைவான வாழ்வு ஆரம்பமாகி விட்டது.


❤️நன்றிகள் 🙏கோடி❤️

உமா கார்த்திக்
 
Status
Not open for further replies.
Top