uma Karthik
Moderator


வாசல் கதவை பல முறை தட்டியும்.. பதில் இல்லாமல் போக ஒரு கையில் டிராவல் பேக். மறு கையில் கதவை தள்ளி விட்டு பவித்ரா அகதில் அடி எடுத்து வைக்க,கண்ட காட்சி.!
பிள்ளையை மடியில் ஏந்தி, ஒரு தோள் பக்கம் காதலியை தாங்கி அமர்ந்தே உறங்கும்
மாமன் அழகோ அழகு.! உடனே தன் செல்போன் கேமராவில் பதிவு செய்தால்.. அழகிய காட்சியை படங்களாக.
பிரதிக்ஷா .. கண் விழிக்க, உயிர்த் தோழி பவித்ராவின் தரிசனம். " பவி.! "ஆசையாக எழுந்து ஒடி சென்று அவளை கட்டிக் கொள்ள " வா.. பவி.. திடீர்னு வந்து இருக்க.! "
" என் மாமாவோட கட்டளை முறைப்படி நான் தான் வந்து உன்ன அழைக்கனுமாம் அதான் வந்தேன்." என்றாள் காரணமாக.
" தனியாவா.. வந்த? சர்வா அண்ணாவ அழைச்சுட்டு வந்து இருக்கலாம்ல "
"உன் அண்ணனுக்கு வேற முக்கியமான வேலை இருக்காம். வர முடியாது னு சொல்லிட்டாரு." பவி உதட்டை பிதுக்க.
"எதாவது முக்கியமான வேலையா இருக்கும். " என்று முகம் சுருங்கி நின்றவளுக்கு சமாதனம் சொல்லி, உள்ளே அழைத்து சென்றால். பிரதி
" பவி.. நீ ரிஃப்ரெஷ் ஆகு.. நான் டீ போட்டு கொண்டு வர்றேன். " என்று செல்பவளை விடாமல் பிடித்து.
" கிளம்பனும் பிரதி.. நீ போய் ரெடி ஆகிட்டு வா.. நல்லா நேரத்துக்குள்ள நம்ம வீட்டுக்கு போகனும். " என்ற அழுத்தமான வார்த்தையில் ஏதோ இருப்பதை உணர்ந்து பிரதி குளியலறை நோக்கி சென்றால்.
ப்ரீத்.. ம் கண் விழித்து கொண்டான்.குழந்தையை தொட்டிலில் உறங்க வைத்து பவித்ரவிடம் ரகசியம் பேசினான்.
"எல்லாம் பண்ணியாச்சு மாமா. சர்வா அதான் வரலை." ஏதோ பிரதிக்கு தெரியாமல் மூடி மறைத்து பேச்சு வார்த்தை நடந்தது.
பவித்ரா, காதல் தம்பதிகள் இருவரும் பிள்ளையுடன் சென்னை விமான நிலையம் வந்ததும்.
"பிரதி நீ மாமா கூட போ.. நல்ல நேரத்துக்கு தான். நீ வீட்டுக்கு வரணும்.நா கெளம்புறேன். " தனித்து விட்டு பதில் வரும் முன் அவசரமாக பவித்ரா வெளியே செல்ல.
" என்ன ஆச்சி..ங்க, பவி ஏன் விட்டுட்டு போறா.? "
" நா தான் பிரைவசி வேணும்னு அவள போக சொன்னேன். ஹனி மூன் ரிஸார்ட் புக் பண்ணி இருக்கேன். " என சொல்லி குதூகலித்தான் ப்ரீத்.
" ச்சீ.. என்ன இது ? வீட்டுக்கு போகாம ஹோட்டலுக்கு போறதா.? நா வரல, கல்யாணம் ஆகம ஒரு பொண்ணு வீட்டுல வச்சிகிட்டு ஹோட்டல ரூம்.? அதை வெட்கமே இல்லாம சொல்லி எங்களுக்கு தனிமை வேணும்னு அவள போக சொல்லுறது. என்ன பழக்கம். ? எப்ப இருந்து இவ்ளோ கேவலமா.. புத்தி மாறுனுச்சு உங்களுக்கு.?" திட்டி தீர்த்தாள் பிரதி. எதிர் வினையாக ப்ரீத்.. வாய் விட்டு சிரிக்கவும்.
"சிரிக்காதிங்க.." சிடு சிடுத்து பிள்ளையை மட்டும் தூக்கி விலகி நடந்து சென்றாள்.
" ஓய்..நில்லு பிரதி.. "பின்னால் ஓடி வந்து மூச்சு வாங்கியது, பாவமாக முகம் வாடியது.
" அப்போ ஹனி மூன் வேணாமா.?"
" முதல்ல கல்யாணம் பண்ணுயா.. ஹனி மூன் .னு தான் குறைச்சல். " வாயில் காரசாரமாக முனகியபடி பிரதி முன்னே நடக்க,
" அப்போ.. பிடிக்கல"
முகத்தை கோணி கோபமாய் அப்படியே நின்றான் கோபக்காரன்.
சந்தேக தொணியில்
" அங்க எல்லாம் ஒழுங்காக தான இருந்திங்க, இங்க வந்ததும் கொம்பு முளைகுதோ."
" ஆமா.." என்று சொல்லி நிற்கும் ஆணின் அடம் பிடித்தம் கண்டு இதழ் மலர சிரித்தாள் பிரதி.
" இங்க பாருங்க.நல்ல நேரம் வர்ற வரைக்கும் போய் ஏதாவது கோவில்ல உட்காரலாம்."
" அப்ப..என்.. ஹனி மூணு.. ப்ளானு ?"
" மூடிட்டு வாடா.."என வெட்டிக்க ஆரம்பித்தாள்.
" என்ன திமிரா.? நீ தாண்டி என் சாமி. தனியா ஏன் கோவிலுக்கு போகணும்.?" என்று சிரிப்பில் வசிகரித்தான்.
" இப்படிப்பட்ட பொய்கள் நீங்க பேசுனத நம்பி தான்.! கல்யாணத்துக்கு முன்ன வரம் வாங்கிட்டு நின்னேன்." என்று தன் மகன் அதி மிளிரன் முகம் பார்க்க.
" புள்ள வரம் கொடுத்த தெய்வம் டி நான்.. கொஞ்சமாவது நன்றி இருக்கா.? "
புள்ள வரம் மட்டும் தான கொடுத்த," வேதனையில் முகம் சுருங்கியது. விலகிச் சென்று
ஆட்டோவை கை காட்டி நிறுத்தி பிரதி ஏறி..அதே இடத்தில் மாறாமல், நிற்பவனை பார்த்து கை அசைத்து.. ஆட்டோவை கிளப்ப.. பதறி அடித்து வந்தான்.
" ஏய்..நில்லு டி.. மதிக்கவே மாட்டே." என புலம்பி ஆட்டோவில் ப்ரீத் ஓடி போய் ரன்னிங்கில் எற.!
" பிரதி.." எனும் ஆவேச கத்தலோடு அவளிடம் சிடு முகத்தை காட்டினான்.
" ஸ்ஸ்.." அருகில் அமர்ந்து கொண்ட தன்னவன் கையை அழுத்தி பிடித்து சாந்தமாக்கினால் பிரதி.
கோவில் வாசலில் ஆட்டோ நிற்க. கோவிலை பார்த்ததும் அதிர்ச்சியில் பிரதிக்ஷாவின் விழி விரிந்தது, முன்பு இருவருக்கும் திருமணம் செய்ய ஏற்பாடாகி நடைபெறாமல் தடைபட்ட அதே கோவில்.!
" வாங்க.. " சர்வேஸ்வரன் அழைப்பில் உயிர்ப்பித்து நிஜம் வந்தவள்.
" அண்ணா.. நீங்க.?" வேட்டி சட்டை அணிந்து கம்பீரமாக நிற்கும். சர்வா.. வை பார்த்து குழப்பம் வர.. கோவில் அலங்காரம் பார்த்து பவித்ரவின் திருமணம் என புரிய ஆனந்த அதிர்ச்சி தோழியின் முகத்தில்.
சர்வேஸ் அதியை தான் கையில் தூக்கிய பின் " பவித்ரா வெயிட் பண்ணுறா.. லேட் ஆச்சி போங்க சிஸ்டர்." சர்வேஸ் பர பரக்க , வேகமாக மணமகள் அறை நோக்கி ஓடி சென்றாள் பிரதி.
" என்கிட்ட மறச்சிட்ட பார்த்தியா??" பொய் கோபம் கொண்டாள் பிரதி.
பவித்ரா - "டைம் இல்ல டி..சீக்கிரம் வா " என்று மிகவும் அவசரப்படுத்தினாள்.
தன் வீட்டுப் பெண்ணை பற்றி இத்தனை யோசித்தவன். தன்னை யோசிக்கவில்லை என்ற வருத்தம்,திருமணத்திற்கான ஏக்கம் பிரதியின் முகத்தில் இருந்தது.
"ஹான்..வந்துட்டேன் . புடவை கட்டி விடனுமா?? " பட்டு புடவையை உதறி முந்தானைக்கு மடிப்பு எடுக்க,
" சீக்கிரம் புடவைய மாத்துடி" அவசர கதியில் பவித்ரா கத்திட, உயர்த்தி பிடித்த முந்தானையோடு உறைந்து போனால் ஒருத்தி.!
" எனக்கும் அவருக்கும் இப்ப கல்யாணமா " எச்சில் கூட்டி விழுங்கி, இன்ப அதிர்ச்சியை சமன் செய்ய, புடவையை அழுத்தி பிடித்து கொண்டாள்.
" ம்.. "திகைப்பில் பிரதி பொம்மையாக நிற்க. பவித்ரா அவளை தயார் செய்ய தொடங்கினால். கழுத்தில் இருந்த பொய் தாலியை கழற்றி விட்டு, இத சாமி உண்டியல்ல போட்டுட்டு வா.. " பணித்து அனுப்பினால் பவித்ரா.
வெளியே வந்தவள் விழிகள் அவனை நாடி ஓடியது.. எங்கும் தென்படவில்லை அந்த மாப்பிள்ளை அவதாரம்.! " அவர் நல்லா இருக்கனும். நிறைவா சந்தோஷமா இனிமே பிரிவு இல்லாம வாழனும் " என வேண்டுதல் அடுக்க, கோவிலில் மணி அடித்தது. புன்னகையுடன் கோவில் பின்புறம் தேடி செல்ல, தன் குட்டி ஜெராக்ஸ் காப்பிக்கு வெல்ஃகுரோ வேட்டியை இடிப்பில் ஒட்டி கிளப்பிக் கொண்டு இருந்தான்.. காதலன்.!
செல்போன் காதில் வைத்து கொண்டே வேஷ்டியை கட்டினான் ப்ரீத்." தர முடியாது.. என்ன நெனைச்சுட்டு இருக்கீங்க? நேத்து ஒரு விலை ஃபைனல் பண்ணிட்டு, இன்னைக்கு மாத்தி பேசுறீங்க? வியாபாரம் நடத்த முடியாது. நா வந்தேன்.. அவ்ளோ தான்.."
பதறிய குரலில் " டேய்.. கல்யாணம் டா.. உனக்கு, அடங்குடா.. பிளீஸ்." கெஞ்சி கூத்தடினான் இவனிடம் சிக்கிய ஈஸ்வரன்.
" என்ன அவன் எத கேட்டாலும். சர்வேஸ்வரன் சார் கிட்ட போய் கேட்க சொல்லுறான். நீ சாரு னா..நா யாருடா? " குரலில் கோபம் கொப்பளித்தது.
" நீ தான் சாரு..ஹீரோ நீ தான். நா காமெடியன்.. கிளம்பி வா.. டா.. " நொந்து போனான். வருங்கால இந்த வீட்டின் மாப்பிள்ளை.
' பண்ணது புல்லா அயோக்கியத்தனம்என்ன சார் ன்னு சொன்னா கோபம் பொத்துகிட்டு வருது. ' " ஏன்..மா.. பிரதி. இவன போய் எப்படி மா காதலிச்ச.? " வாய்விட்டு புலம்ப,
" என்ன டா சொன்ன.?" நாக்கை துருத்தி கேட்க.
" ஒன்னும் இல்ல ஹீரோ..சார்.."
" அது.." ப்ரீத் சட்டை மாற்றுவதில் பிஸியாகினான்.
தூணில் சாய்ந்து அவனை விழி வெட்டாது. சைட் அடிதவள் உதடுகள் தானாய் அசைந்தது " அடவடிக்காரன் " அவள் சொன்னது கேட்டது போல உடனே திரும்பி பார்க்க, ஓடியே விட்டால் பிரதி.
புயல் மீது தென்றல் காதல் கொண்டது எப்படியோ.!!
மணவரையில் பிள்ளையை மடியில் வைத்து அமர்ந்து இருந்தான். மாப்பிள்ளை.!
கீழே நின்ற நிலையில் சர்வேஸ் வாய்விட்டு முனகினான்.
" கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம புள்ளய மடியில வைச்சுட்டு தாலி கட்ட உட்கார்ந்து இருக்கான் பாரு.. மானங்கெட்டவன். "
அர்ச்சதை அரிசி எடுத்து போன பவித்ரா காதில் விழுந்தது.உடனே கோபம் தெறிக்க .." சர்வா.. " அலறி .னாள்.
" சொல்லு பவி..மா. எனி ஹெல்ப். "
"வயித்தெரிசல்.. தாங்கலை. என் மாமவ திட்டுற, குழந்தையோட கல்யாணம் பண்றது, எவ்ளோ நல்லது தெரியுமா? கல்யாண போட்டோல நான் இல்லைனு அதி
அழவே மாட்டான். அது எல்லாம் ஒரு திறமை,சர்வா.." மாமனுக்கு சாதகமாய் கொடி பிடித்தல்.
" அப்ப என் திறமைய காட்டவா.. ?" உதட்டை லேசாய் கடித்து.. புருவம் ஏற்றி .. கழுத்துக்கு கீழே பார்வையை மையமிட்டு
இறக்க..
நாணம் கொள்கிறாள் நங்கை." ஏய்.. பிச்சு.. " அர்ச்சதை தட்டை அவன் கையில் தினித்து மணமகளை அழைக்க சென்றால் வெட்கம் கலந்த நகையோடு.
இங்கு பிரதிக்ஷா .. அடர் சிவப்பு நிறத்தில் மிதமான ஒப்பனை எழில் சேர்க்க..!
தோழியுடன் நடந்து வரும் போதே, அவள் கண்கள் நிறைந்தது ஆடவன் அழகில்,
மென் சந்தண நிற சட்டையில், கம்பீரமாக இதழ் கொள்ளா புன்னகையுடன் வசியம் செய்தான். ப்ரீத் குமாரன்.
இன்று அழகேறிக் கிடந்தது அவளவன் முகம்.! காதல் பெருக்கெடுத்த ஆழியாய் மெல்ல மூழ்க வைத்தான். காதலியை தன் காதல் பார்வையில் .!
பவித்ரா -" பிரதி.. கைய காட்டு.." என ப்ரீத் அவளுக்கு காதலோடு பரிசாய் தந்த அவன் பெயரின் முதல் ஆங்கில எழுத்து தாங்கிய மோதிரத்தை அணிவித்து.
" மொத்தமா.. கொடுத்துட்டேன். பத்திரமா.. பார்த்துக்கோ.! " ஆயிரம் ஆழமான அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் அது.
கனமான உணர்வு விலகி,நிம்மதி பெருமூச்சு விட்டபடி, தோழியை மணவரையில் பவி அமர வைக்க, சிரித்து விட்டு தலையசைப்பில் சம்மதம் தெரிவித்தாள் பிரதி.
பவித்ரா.. காதலை மட்டுமல்ல, காதல் நினைவுகளை கூட மொத்தமாக உரியவளிடம் தந்து நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
காதல் பரிசுகள் கனக்கும் பிள்ளையாய்..வலி தரும். பழைய நினைவுகளை சுமக்கும் இதயத்தில் இழந்த காதல் நிழலாட, மெல்ல உடைபட்ட காதல் நினைவுகள் ஊசியாய் தைத்து சென்றது.
" கெட்டி மேளம் முழங்க,ப்ரீத் பொன் தாலியை பிரதிக்ஷாவின் கழுத்தில் கட்டி நிம்மதியாக நிமிர்ந்து பார்க்க, கண்ணீரோடு அவனை நேரிட்டவள் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான். காதலனை கணவனாக கைத்தளம் பற்றினாள்.ப்ரீத் குமாரின் மனைவி பிரதிக்ஷா.!
நெஞ்சம் நிறைந்த திருநாள் தான் பிரதியின் வாழ்வில் இன்று, எல்லை இல்லாத ஆனந்தம். உரிமையாக ஊரரிய மனைவியான பின் நிகழும் அந்த இன்ப அதிர்வு.. வாழ்வின் சொர்க்க நிமிடங்கள்..!
பிரதிக்ஷாவின் விருப்பபடி கோவில் வரும் பக்தர்கள்.. ஆதறவற்ற முதியவர்கள் அனைவருக்கும் சமபந்தி விருந்து தான்..பிரதி கையில்
குழந்தையுடன் நின்று பரிமாறுவதை வேடிக்கை பார்க்க.
ப்ரீத் _" நீங்க போய்.. கார்ல உட்காரு.. ங்க.. நான் பணம் கணக்கு பார்த்து கொடுத்துட்டு வர்றேன்ங்க." என்று நகர.
கை பிடித்து தடுத்து " என்ன மரியாதை பலமா இருக்கு.! "
" பொண்டாட்டி ஆகிட்டுங்க.. அதான்.." காதின் நுனி இவன் மூச்சில் சிவக்க " புள்ளைய தூங்க வைச்சுடு..டி, நைய்ட் ராஜ மரியாதை தான். "
தோளில் இடித்து கோவிலின் நுழைவாயில் தாண்டி வெளியே சென்றான் ப்ரீத்..
பவித்ராவை அழைக்க திரும்ப.. சர்வேஸ் உடன் பேசி சிரிப்பது பார்த்து. தொந்தரவு தராமல் வெளியே வந்தால்.பிரதி.
தார் சாலையில் எங்கோ .. கார் தூரமாக நிற்க.
அந்த இடம் நோக்கி நடந்தாள் பிரதி.. சாலை ஓரம் தொடர்.. கம்பி முள் வேலிகள் போடப்பட்டு இருக்க. பிரதியின் முந்தானை அதிவேக காற்றில் நழுவி கம்பியில் கடினமாக சிக்கிக் கொண்டது. இழுக்க முயன்றதும், கல்யாண புடவை கிழிந்து விட்டது.! பதறி புடவையை சிக்கிய முடிச்சு எல்லாம் விடுவிக்க போராடிய நொடி.. பிள்ளை நழுவி கீழே விழுந்தது.
கவனம் தப்பியதும்..மெல்ல குழந்தை.. நடு சாலை வரை..தவழ்ந்து ஊறி சென்று விட்டான். அதி மிளிரன்.
நெடுஞ்சாலை ஒரு கார் வேகமாக வர, தரையில் தவழும் குழ்ந்தை, புலப்படாமல் விழி தப்பியதால். உயர் வேகத்தில் சீறி வந்த கார் அவள் உயிரானவனை மோதியது.!
திரும்பி பார்த்த பிரதி..கண்டது பிள்ளையை அவளிடம் வீசி எறிந்துவிட்டு " பிரதி" என்ற கணவனின் கடைசி குரலும்.. தன்னை நோக்கி காற்றில் வரும் குழந்தையும் தான்.!
தாய்மையின் அனிச்சை செயலாக பிள்ளையை தாயவள் பற்றிய நொடி.!!
அவள் விழி திரையில் கார் மோதி கீழே வீசப்படும் கணவன்.!
விதி வலியது.!!
அன்று சொன்ன ஆருடம் பலித்துவிட்டது. அந்த பெண்ணை மணந்தால் மரணம் என்று சொன்ன சொல்.. இவள் தலைவிதி ஆனது.!
" தாலி வாங்கிய இடத்தில்
உயிரை காவு வாங்கி
சன்னதியின் முன் மண்டியிட்டு,
அடி வயிறு அக்னியாய் எரிய..
தெய்வ உருவில் நின்ற
கல்லை கண்ணீர்
பார்வையால் எரித்தாள்.
பத்தினி தெய்வம்.!"