எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம்.66

uma Karthik

Moderator
ஆம்புலன்ஸில் வர மனைவிக்கு மட்டும் அனுமதி கிடைக்க.. பவித்ரா, சர்வேஸ்வரன், அதி மூவரும் மருத்துவமனைக்கு காரில் சென்றனர்.

ப்ரீத் _" பிரதி.. பிரதி.." வாயில் உதிரம் வழிய அவள் பெயரை சொல்லி பிரதியின் ஒற்றை கையை கெட்டியாக பிடித்துக் கொண்டான் ப்ரீத்.

இவர்கள் வாழ்வில் தான் எத்தனை துன்பம். ஒரு நாள் கூட கணவன் மனைவியாக சேர்ந்தே வாழ முடியாத நிலை இருவருக்கும். கண்ணீர் நிற்காமல் வழிந்தது.!

உயிரை திரட்டி கடைசிவார்த்தையை உதிர்ந்தான்.

" நான் உன்ன தனியா விட்டுட்டு போகலை. என் உயிர் அதி.. ய விட்டுட்டு போறேன். நீ என் வாழ்க்கைக்குள்ள வராதவரை அம்மா இல்லாத ஏக்கம் எனக்கு இருந்தது.

மூச்சி சீரற்று வர
" நான் இல்லாம போனாலும் நீ இருக்கனும். என் புள்ளைக்கும் என் விதிய கொடுத்துடாத."
அவள் உள்ளங்கை யில் ஏக்கமாக கண்ணீரோடு கடைசியாக முத்தமிட்டான் காதல் கணவன்.!!

" உங்களுக்கு எதுவும் ஆகாது.. நான் விட மாட்டேன்." , என்று சொல்லும் போதே சுய நினைவு தப்பி மயங்கினான் ப்ரீத்.

தீவிர சிகிச்சை பிரிவில் வாழ வேண்டியவன் உயிர் துடிக்கிறது‌. புனர் ஜனத்திற்காக..!

மருத்துவமனையில் படிவங்களை பூர்த்தி செய்துவிட்டு,
பசியில் கதறும் பிள்ளையை தோழியிடம் பசியாற்ற அழைத்து வந்தால் பவித்ரா.

பவித்ராவும்,அதியும் அருகில் வர, பின்னால் விலகி அமர்ந்தால் பிரதிக்ஷா." என்கிட்ட நீ வராத, உனக்கும் எதாவது ஆகிரும்.. பவித்ரா நீயும் என்கிட்ட வராத .." பெற்ற பிள்ளையை கூட விலக்கி, நடுங்கிக் கொண்டு தன் விதியை பார்த்து பயந்து நகரும் அவளைப் பார்க்கவே பவித்ராவிற்கு பரிதாபமாக இருந்தது.

வேதனையுடன் சமாதானம் செய்ய முயன்றாள்.. பிள்ளையின் பசியில் கதறுவது தாங்கமல்.

" பிரதி.. குழந்தை பயந்து அழுறான் டி.. " அதி மிளிரனை தாயின் அருகில் விட்டாள் பவி.

பிள்ளையை விட்டு தள்ளி நகர்ந்தால் பிரதிக்ஷா.

" நிஜம் தான்.. நான் சபிக்கப்பட்டவ போல.! எவ்ளோ ரத்தம்.. வாழ முடியாத வலி.. அவர் கண்ணுல, சேரவே முடியாத எங்கள ஏன்..?
சேர வைச்சு பிரிக்கனும். என் விதி அவர் உயிர காவு வாங்க போகுது. நான் செத்துட்டா அவர் பிழைச்சுடுவாரு, நான் சாகனும்.. சாகனும். " சிறுவயதில் தாய் தந்தையும் இதே போல ரத்த வெள்ளத்தில் இறந்தது காட்சியாய் விரிய, உயிர் குடிக்கும் பேயாக தன்னை உணர்ந்து.!

"நான் சாகனும்.." என தொடராக மீண்டும் மீண்டும் பித்தாகியது போல் பிதற்றினாள். புது தாலியிட்டவள்.!

பசிக்காக கூட பிள்ளையை அருகில் நெருங்க விடவில்லை தாய். பிள்ளை உயிரும் தன்னால் போய் விடுமோ.. என்ற பயம் இழி நிலையின் உச்சம். எந்த தாய்க்கும் இந்நிலை வரக் கூடாது.

அத்தை அங்கு அன்னையாகி பசியாற்றி, பிள்ளை அழுகுரல் அடக்கி,தன் அழுகுரல் உடைத்து வெடிக்காமலும் நிதானித்தாள் பவித்ரா. மாமன் பிள்ளைக்கு யார் அழுதாலும் பிடிக்காமல் கத்துகிறது அப்பனை போல்.!

வேதனை மிகுதியால் அவளை மீறி வழியும் கண்ணீரை மட்டும் துடைத்து கொண்டு பிரதிக்கு தனிமை கொடுத்து தூரமாக அமர்த்தாள் பவி.

மீண்டும்..மீண்டும் பிள்ளை சினுங்க, வேடிக்கை காட்ட சொல்லி சர்வேஸ் கையில் தந்து வெளியே போக வைத்தாள்.

" பிரதி.. " பதிலே இல்லை.. " பிரதி.." கண்ணீர் மட்டும் வழிந்தது பிரதிக்ஷாவின் கண்களில் .

அதை கண்ணார பார்க்கும் இவள் தைரியம் எல்லாம் உடைந்தது. அவள் இழிநிலை கண்டு.!

" பிரதி.. மாமாவுக்கு எதுவும் ஆகாது. " விழியசைப்பு செய்யாமல் எதையும் உணராமல் அவள் அமர்ந்து இருப்பது அச்சத்தை ஏற்படுத்தியது.

அழுகையற்ற உடைந்த குரலில் வெறித்த விழி மாறாது." கல்யாண புடவை முழுக்க ரத்தம். என் வாழ்க்கை ஒரு நாள் தானா..? நான் என்ன பாவம் பண்ணேன்? இத்தனை நாள் பிரிஞ்சு வைச்சு நான் கொடுத்த தண்டனைக்கு, மொத்தமா என்ன பிரிஞ்சு போய் பழிவாங்குறிங்க இல்ல ப்ரீத்.? உங்களுக்கு தெரியலை. உங்கள பிரிஞ்சு நான் உயிர் வாழ முடியாது. " அவளிடம் பவி பேசுவது கூட உணராது,அவனிடம் பேசினாள்.அவன் மீது தீராத காதல் பித்தானவள்.!

" அதிய யோசி..மா.. பாவம் நீ.. இல்லாம " தெளியாதவள் தோளை உலுக்கினாள் பவித்ரா.

" புருஷன கொன்ன பாவி.. புள்ளையையும் கொன்னுட்டு மாபாவியாகனுமா? அவர் இல்லைனா நான் இல்லை. சுயநலம் இது சுயநலமா தெரியலாம்.. அதான் என் முடிவு. என் புள்ளை கண்ணீர்லயாவது குளிரட்டும் அந்த தெய்வம்.! " கதறினாள்..பின் தானாக பேசி, இல்லாத எதையோ சவற்றில் வெறித்தபடி அமையானாள் பிரதி.

ஒரு மணி நேர சிகிச்சை பிறகு வெளியே வந்த மருத்துவர். இடிந்து போய் கீழே அமர்ந்து இருக்கும் பெண் அடிபட்டவர் மனைவி என்று யூகித்து.

" உங்க ஹஸ்பண்ட் ரொம்ப நல்லா இருக்காங்க.. கை மட்டும் தான் உடைஞ்சிருக்கு. தலையில அதிகமான அளவில சிராய்ப்பு, ரோட்டுல உள்ள கூர் ஜல்லி குத்தி இருக்கு.அதான் ரத்தம் அதிகமாக போய் இருக்கு. இப்ப கண் முழிச்சு தெளிவா இருக்காங்க போய் பாருங்க.

சுவற்றை தாங்கி பிடித்து,மெல்ல தன்னை உணர்ந்து நிலைப்படுத்தி கொண்டு எழுந்தாள் பிரதி.

மருத்துவர்_ " அவர யாரோ.. தாங்கி பிடிச்ச மாதிரி தான். பாதிப்பு இல்லாம அடி பட்டு இருக்கு. பயப்பிடாதிங்க மிஸ்ஸஸ் ப்ரீத் குமார் . காட் வித் யூ." என நிதர்சனம் கூறி, அடுத்த பணிக்கு சென்றார் மருத்துவர்.

மனதில் அருவமாக அம்பிகையின் முகம் வந்து கேள்வி கேட்க.!

கண்ணீர் வழிய மனதால் நிந்தனைக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டாள்.சன்னதியில் கழுத்தில் பொன் தாலி வாங்கியவள்.!

கதவை திறந்து கொண்டு உள்ளே சென்று விட்டாள் பிரதி. பின்னாலே சர்வேஸ்வரன், பவித்ரா, அதி மூவரும் வர, வலது கையில் கட்டு போட்டு தலையில் சிகிச்சை பெற்ற அடையாளமாய் சிறு அளவிலான கட்டுகள் இருந்தது.

பிரதியை பார்த்து எந்த உணர்வும் கட்டாமல் ப்ரீத் இருக்க.

தொடர் மயக்க மருந்தின் விளைவு என பிரதி நிற்காத கண்ணீரை துடைத்து விட்டாள்.

"பவித்ரா..யாரு இவங்க.?" சந்தேகமாக மனைவியை பார்த்து ப்ரீத் கேட்க?

சார்வேஸ் "பிரதி.. யாரா..? " இதுக்கு இவன் செத்தே இருக்கலாம்..
என்று எண்ணி.. பவித்ரா கையை வேகமாக பிடித்து வெளியே இழுத்து சென்றான் சர்வேஸ்வரன்.

பவித்ரா_ "விடு சர்வா.. எதுக்கு இப்படி இழுத்துட்டு வர"கையை உதறி தள்ளிவிட்டாள்.

" நாம எங்கேயாவது போயிடலாம். அடுத்து என்ன நடக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும்.

அவனுக்கு எல்லாம் மறந்திருக்கும்.

மறுபடியும் முதல்ல இருந்து உன்னை காதலிக்க ஆரம்பிப்பான்.

அதெல்லாம் பார்க்க எனக்கு சக்தி கிடையாது.
பழைய படத்துல வர மாதிரி தலையில் அடிபட்டு எல்லாத்தையும் மறந்திருப்பான்.. அதிர்ச்சியான தகவல் கேட்டா செத்துருவான்னு பிரதியும் உன்னை அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சுருவா.. தயவு செஞ்சு வா போய்டுவோம்."விடாப்பிடியாக இழுத்துப் போனான் சர்வா.

திகைத்து " அச்சச்சோ.. என்ன கல்யாணம் பண்ணிக்கலைனா என் மாமா செத்துடுமா.."அதிர்ச்சியாக விதிர்த்து
விழித்தாள் பவித்ரா.

கணவனின் கேள்வியில் அவன் முகம்..பார்த்து நலமுடன் இருப்பதை எண்ணி , நிம்மதியாக புன்னகை அரும்பியது.

"நான்.. என் பேர் பிரதிக்ஷா. நீங்க நல்லா இருக்கதே..எனக்கு போதும்..என் நினைவு இல்லனா கூட பரவாயில்லை.
நாம சேர்த்து வாழ வேண்டாம். என் ஏக்கமும் காதலும் எப்பவும் தீர வேண்டாம். நீங்க நல்லா இருக்கீங்க அதுவே போதும்.
சேராத காதல் எப்பவும் தீராத காதல் ஆ நிலைக்கும்.என் விதிய மாத்த முடியாதுல்ல.! " வேதனையாக அவன் விழிகளை ஓர் ஆழ் பார்வை பார்க்க.!

" யாரு நீங்க.?பவித்ரா.. எங்க.? "

" வெளியில இருப்பா..நா போய் வர சொல்லுறேன்." வெளியே செல்ல கதவில் கை வைக்க தடுத்தது அவன் குரல்.

" நீ யாரு?" கதவை திறந்த கைகள் நடுங்கியது வேதனையில், யாரோவாகி போனதை எண்ணி அடக்க முடியாமல் அழுகையில் உடல் குலுங்கிதியது.

" ஓய்.. பிரதி.. மை பொண்டாட்டி..வா..டி.." என்று அழைத்ததும் கோபம் தெறிக்க திரும்பி பார்த்தாள். ஆணவன் வலியோடு தன் ஒரு கை நீட்டி அழைக்க ஒடிச்சென்று அவனிடம் அடைக்கலமானாள் பிரதிக்ஷா.


பவித்ரா - " சர்வா.. லூசு மாதிரி பேசாத, தலையில தான் அடியே படலை எப்படி பழசு மறக்கும். "

" இது ப்ளானா இருக்கும் இவன் உங்க ரெண்டு பேரையும் கல்யாணம் பண்ணிக்க ஸ்கெட்ச் போடுறான் போல.! "
" அவன் மட்டும் மறந்திருந்தா. உன்ன பார்த்ததும் என்ன நடந்திருக்கும்.? பழைய மாமாவா இருந்தா ஒரு கொலையே நடந்து இருக்கும். " என்று சிரித்துக் கொண்டே ப்ரீத் இருக்கும் அறை கதவை திறந்தவள். சட்டென்று மூடி வைத்து திகைத்துப் போய் நிற்க..!

சர்வேஸ்வரனும் என்ன தெரிகிறது என்று ஒரு கணம் கதறை திறக்க.. குப்பென்று வேர்த்தது நடப்பதை பார்த்ததும். படார் என்று மூடிவிட்டு தலையில் அடித்துக் கொண்டான். " முத்தக்காட்சியாடா..
எனக்கு மட்டும் ஏன் ரொமான்ஸ் சீன் அமையவே மாட்டிங்குது. அப்படி என்ன பாவம் பண்ணேன்." என்று புலம்பி.. அதன் வெளிப்பாடால் மூண்ட வெறுப்பில் காதல் காட்சி தராத என்னை பார்த்து சாரி.. மேலே கடவுளை பார்த்து ஆதங்கமாய் கத்தினான் சர்வேஸ் சு.

" அவங்களுக்கு அமையுது நமக்கு அமையல என்ன பண்ண.?" வா.. அதிய எங்கயாவது தூங்க வைப்போம்.. என் தோள்ல இருந்தா ஃப்ரீயா தூங்க மாட்டான். வலிக்கும் புள்ளைக்கு. " அருகில் இருந்த தனி அறையில் போய் தட்டிக் கொடுத்து உறங்க வைத்தாள் பவி.

பூனை போல அருகே வந்து பெட்டில் அவளருகில் அமர்ந்தான். அவள் உள்ளங்கையை வருடி.." பவி.. எதையும் அமைச்சுக்கிறது நம்ம கையில தான் இருக்கு. " என்று கையில் இருந்து மேலே தாவி கன்னம் வருட தொடங்கினான்.

பட்டென்று கையை தட்டிவிட்டாள் பவித்ரா." என்ன ஆச்சி.. அவங்க கல்யாணம் ஆனவங்க ஏதோ பண்ணுறாங்க நமக்கென்ன.? " பாவம் பார்த்து அவன் நெற்றியில் முத்தமிட

" அவ்ளவு தானா " பாவமாக முகத்தை மாற்றி கேட்க.?

புன்னகை பூத்தவள்
" போதும்.. ஆம்பளைக்கு இடத்தை கொடுத்தா ஒரு பொண்ணு எவ்ளவவு துன்பப்படனும் னு பிரதிய பார்த்து காத்துக்கனும். எவனையும் நம்ப முடியாது. இந்த பாவமான பார்வை செல்லாது.. செல்லாது. " என்று தள்ளி அமர்ந்து கொண்டாள்.

" ஏதோ.. உன் மாமா மாதிரி குழந்தை வரமா கொடுக்க போறேன். முத்த வரம் தான் கேட்குறேன். வேணும் ப்ளீஸ் ." சினுங்கிய குரலோடு கெஞ்சினான்.

" அந்த குழந்தை மிட்டாய் கேட்குது. எனக்கு வேணும் போல அடம் பண்ணுற சர்வா வெளிய போ.. சத்தம் கேட்டு குழந்தை முழிச்சுடப் போகுது ப்ளீஸ் டா.. "

" முடியாது.. ஆ.! இப்படி தான் கத்துவேன். டேய் குட்டிப்பையா எழுந்திரி டா. அப்பாகிட்ட போகலாம்.நான் அனுபவிக்காதது எவனும் அனுபவிக்க கூடாது "

" சர்வா.. வாயை மூடு."என்று கூறி பயனற்று போக, பெரிய குழந்தை பிடிவாதம் நிற்காது என புரிய, மிட்டாய் வழங்கினாள். சில பல கடிகளோடு .. சர்வேஸ் புலங்காத இதழில் ஆழம் பார்த்தாள் பற்களால், பிறகு காதல் காட்சிகள் முத்த காட்சிகள் இரு ஜோடிக்கும் குறைவே இல்லாமல் அரங்கேற்றியது.!


ப்ரீத் அறிவுறுத்தல்படி பவித்ரா சர்வேஸ்வரன் திருமண ஏற்ப் பாட்டை உடனே தொடங்கினாள் பிரிதி.மாமன் மனைவியாக நின்று எல்லா வேலையையும் பொறுப்பாக செய்தாள். பிரதிக்ஷா ப்ரீத்குமார்.

ப்ரீத் உடல் உலைப்பு செய்யும் நிலையில் இல்லையே தவிர,
செல்ஃபோன் மூலம் அனைத்தையும் நிர்வகித்து மனைவியின் மீது மிக அழுத்தம் கூடாமல் பார்த்துக் கொண்டான். தெய்வமாக இருக்கும் சுமதி அத்தையின் அருள் ஆசியுடன் இனிதாக நடந்தது சர்வேஸ்வரன் பவித்ரா திருமணம்.


ஒரு வருடத்திற்க்கு பிறகு..

" பிரதி.. லேட் ஆகுது." கையில் பையோடு வாசலில் நின்று மனைவி பெயரை ஏலம் போட்டான் ப்ரீத்.

" இருயா.. வர்றேன்.. வாசலுக்கு போய் தான் சாவி.. இல்லனு தெரியுமா? போகும் போதே.. எடுத்துட்டு போனா தான் என்ன.?" அலுத்து பதில் சொன்னாள் பிரதி.

"என்ன டி .. முனகல் அதிகமா இருக்கு. சீக்கிரம் கொண்டு வா.. ஆபிஸ் போகனும். "

குடும்ப தலைவியாக.. அழுக்கு நைய்ட்டி அள்ளி கொண்டையிட்டு, அப்பன் மற்றும் மகன் படுத்தும் பாட்டின் வெளிப்பாடாய் உறக்கத்திற்க்கு கெஞ்சும் சொக்கும் மயக்க விழிகள்.!

அழகு என்பது ஆடை, அபாரணம் அல்ல, தாய்மையும் பொறுப்பும், தியாகமும் தான்.!

வெடுக்கென சாவியை பிடிங்கியவன். " அதி எங்க ? " கத்தினான்.

" தூங்குறான்.. நீங்க போங்க. " மனைவி வேகமாக கை அசைக்க ஏதோ யோசனை வந்தவனாக வீட்டுக்குள் நுழைந்து போய் உறங்கும் பிள்ளையை பார்த்தான். அவன் டாடா (அப்பா)

" கிளம்புங்க.. லேட் ஆச்சி ப்ரீத்.. போங்க.. " என்று சொல்லும் போதே அவன் முகம் மாறி .. மோகம் ஏறி நிற்பது தெரிந்தது.

அவள் இதழ்கள் மட்டும் போ என்றும் இமைகள் வா என்ற தூண்டிவிடும் அழைப்பை ஏற்று அப்படியே கையில் அள்ளிக் கொண்டு எதிரே இருக்கும் அறைக்கு சென்றான்.

இரவு முழுவதும் உறங்காமல் தொல்லை செய்யும் பிள்ளையால் வரும் உணர்வு ஏக்கம். காலை வேளையில் கூடல் நிகழ்வு அழகாய் நடைபெற்று, அவன் தின்னிய மார்பில் அவள் கூந்தல் அடர்ந்து படர்ந்திருக்க.

" பிரதி.. ஐ லவ் யூ டி " உறக்கத்தில் மனைவி " ம்" கொட்ட தவறவே இல்லை. பாவம் மன்னன் ஆட்சியின் அயர்வு.

" தீராதடி நான் கொண்ட ஏக்கம் " என்று அவள் செவியில் அழுத்தமாக இதழ் பதித்து விட்டு தன் இமையையும் அவளையும் அணைத்து உறங்கினான்.

அழுகுரல் அலாரம் ஒலிக்க,ஒரு நொடி கூட முழுமை பெறாது அறக்க பறக்க எழுந்தவன்.. குழந்தை தூக்கி மனைவி உறக்கம் கெடாமல் காத்தான்.

பிள்ளை பெற்ற பிறகு பிரதி முழுமையான உறக்கம் இல்லாமல் தவிக்கும் போதும். மனைவியின் உடல் நிலையை சமன் செய்து உறக்கம் கெட்டுவிடாமல்,
பிள்ளையின் கடமையையும்,
மனைவியையும் தாங்கிக் கொள்ளும் அன்பான காதல் கணவன் இவன்.!

என்றுமே தீராதடி நான் கொண்ட (ஏக்கம்) காதல். என்று புரிதலின் இலக்கணமாய்
அவளின் அவன்.

சுபம்

இந்த கதையை வாசித்த அனைத்து வாசகர்களுக்கு எந்தன்🙏 நன்றிகள்♥️ கோடி🙏 மேலான தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். உங்கள் நிமிடங்களை நேரத்தை உணர்வுகளை எனது கதையில் செலவிட்டதற்க்கு நன்றி.

❤️நன்றிகள் 🙏கோடி❤️
உமா கார்த்திக்

 
Top