எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

என்னை ஆளும் காதலே- முடிவுற்றது

Sathya theeba

New member
தனஞ்சயனைப் பிரிந்திருப்பதை நினைக்கவே அழுகை அழுகையாய் வந்தது நிஷாந்தினிக்கு. அவனைக் காணாமல் ஒருநாள்கூட தன்னால் இருக்க முடியுமா என்ற ஏக்கம் அவளை வாட்டி வதைத்தது. தன் மனவேதனையை அவனுக்குக் காட்டாமல் நடமாடித் திரிந்தாள்.

அன்று இரவு வேலைகளை முடித்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்த சுபியையும் சென்று பார்த்து முத்தமிட்டுவிட்டு தங்கள் அறைக்குள் வந்தாள் நிஷாந்தினி. அங்கே கட்டிலில் அமர்ந்து மடிக்கணினியில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தான் அவள் கணவன் தனஞ்சயன்.

ஆம், அவர்கள் திருமணம் முடித்து இன்றுடன் நாற்பத்து மூன்று நாட்கள் பறந்தோடிவிட்டன.

அன்று நடந்தவற்றை மீண்டும் ஒரு தடவை புரட்டிப் பார்ப்போம்...

அன்று இருவரும் தன்னிலை மறந்து நின்றபோது ஆற்றங்கரையின் மரமொன்றில் அமர்ந்திருந்த குயிலின் இனிமையான குரலோசை அவர்களை நிதானத்திற்குக் கொண்டு வந்தது.

"மாமா.."

"ம்.."

"மாமா பிளீஸ்... என்னைப் பேச விடுங்களேன்"

"நீதான் என்னைப் பிளீஸ் பண்ணனும்.. என்னால முடியலை" என்றுவிட்டு மீண்டும் தன் வேலையில் மும்முரமாக ஈடுபட்டான்.

"பாப்பு.."
"ம்.."
அவளால் பேச முடியவில்லை. மூச்சு வாங்கியது.
அவன் தோளில் முகத்தைப் புதைத்தாள். அவள் முகத்தை நிமிர்த்தியவன் கண்களில் மென்மையாக முத்தமிட்டுவிட்டு,
"ஐ லவ் யூ பாப்பு.. மை ஸ்வீட் பாப்பு.. ஐ லவ் யூடி.." என்றுவிட்டு மூச்சு முட்ட அணைத்தான்.


சிறிது நேரம் கழித்து அவளை விடுவித்தவன்,
"பாப்பு.."
"ம்ம்..."
"ஏதோ சொல்ல வந்தாய்?"
"போங்க மாமா.. எங்க என்னைப் பேச விட்டிங்க" என்று சிணுங்கினாள்.


உல்லாச சிரிப்பில் கன்னத்தில் குழிவிழ, அதனுடன் போட்டி போடும் விதமாக கண்களும் சிரிப்பில் மின்னிட
"ஓகே ஓகே... நான் கொஞ்ச நேரம் கட்டுப்பாடாக இருக்கிறேன். நீ பேச வேண்டியதைப் பேசி முடித்து விடு. கொஞ்ச நேரம் தான் உனக்கு தரமுடியும். ஓகே.." என்றான்.


"நாம் உள்ள போயி பேசலாமா?"

"கட்டாயம் உள்ளே போகனுமா பேபி? இந்தத் தோட்டம், பூக்களின் நறுமணம், இந்த ஆற்றின் குளிர்மை எல்லாம் சேர்ந்து ரொமாண்டிக் ஃபீலாவே இருக்கு. இங்கேயே கொஞ்ச நேரம் இருப்போமே"

"பிளீஸ் மாமா வாங்க.." என்று அவன் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றாள்.
அங்கே இருந்த இருக்கையில் அவனை அமர வைத்துவிட்டு அவன் காலடியின் கீழே அமர்ந்து கொண்டாள்.


"ஏன் கீழே அமர்கின்றாய்? என் மடியில் உட்காரேன் பாப்பு..."

"கொஞ்ச நேரம் வம்பு பண்ணாதீங்க மாமா" என்று சிணுங்கலாகக் கூறினாள்.
"சரி சரி பேசுவோம்" என்று விட்டு அவள் தலையை ஆதரவாக தடவி விட்டுக் கொண்டிருந்தான்.


சிறிது நேரம் அமைதியாக இருந்தவள்,

"மாமா... ரொம்ப ஸாரி.."
"இப்போ எதுக்குடா ஸாரில்லாம்"


"நீங்கள் அக்கா வீட்டுக்கு வந்த போது... அன்று நான் உங்களிடம் அப்படி பேசியதில் உங்களுக்கு என்மேல் ரொம்பக் கோவம் வந்ததா?"

அவள் உச்சியில் மென்மையாக முத்தமிட்டவன்,
"கோபம் எல்லாம் இல்லடி.. ரொம்ப உடைஞ்சு போயிட்டன். எவ்வளவு ஆசையாய் சிங்கப்பூரில் இருந்து வந்ததும் உன்னைப் பார்க்க ஓடி வந்தேன் தெரியுமா? வந்து பார்த்தால் மேடம் அமெரிக்காக்காரனை மேரேஜ் பண்ணப் போறதா சொன்னாங்களா.. வாழ்க்கையே வெறுத்திச்சு"


"உங்களுக்கும் மிருணாளினிக்கும் ஏன் கல்யாணம் நடக்கலை?"

அதற்கு பதில் சொல்லாத தனஞ்சயன்,
"கடைசியாக நான் உன் வீட்டிற்கு வருவதற்கு முன் உன்னை பாட்டியும் மிருணாளினி வந்து
சந்தித்தார்களா?" என்று எதிர்க்கேள்வி கேட்டான். ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தவள்
"ம்ம்.." என்று மட்டும் பதிலளித்தாள்.
"பாட்டி அன்று என்ன கூறினார்?"


"இப்போது அதெல்லாம் எதற்கு கேட்கிறீர்கள்? அது முடிந்து போன விடயம் தானே"

"முடிந்த விடயம் தான். இன்று நான் எல்லாத்தையும் தெளிவுபடுத்தி விடவேண்டும். இனி வரும் நாட்களில் நமக்குள் எந்த ஒளிவு மறைவும் இருக்க கூடாது. எந்த சங்கடமும் இன்றி நம் வாழ்க்கையைத் தொடங்க வேண்டும்" என்றான். அவன் கூறியதைக் கேட்டதும் அன்று நடந்தவற்றை அவனிடம் கூறினாள். தொடர்ந்து தன் வாழ்க்கையில் நடந்த விடயங்கள் அனைத்தையும் கூறினாள்.

அன்று என்னால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. உங்கள் பாட்டி வந்து என்னிடம் அப்படி சொன்ன பிறகு மீண்டும் உங்களை சந்திக்க என்னால் முடியவில்லை. நீங்கள் வந்தபோது அதுதான் நான் அப்படிக் கூறினேன். அத்துடன் என் அக்காவின் வாழ்க்கையையும் நான் அழிக்க விரும்பவில்லை என்னை மன்னித்து விடுங்கள்" என்றாள்.

"இப்ப எதுக்கு மன்னிப்பு எல்லாம் கேட்கிறாய். நமக்குள் எதுவும் வேண்டாம் நான் செய்ததும் தப்புதான். நீ என்னை வேண்டாம் என்றதும், எதற்கு என்று காரணத்தை நான் அப்போதே ஆராய்ந்து இருக்கவேண்டும். அதை செய்யாமல் உன் மீது ஏற்பட்ட மனஸ்தாபத்தில் மிருணாளினியைக் கல்யாணம் செய்ய சம்மதித்து விட்டேனே. அது நான் செய்த தப்பு தானே நல்லவேளை அவளே அதற்குத் தடையாக அமைந்து விட்டாள்" என்று நிம்மதி பெருமூச்சு விட்டான். தொடர்ந்து அவனும் தன் வாழ்வில் நடந்தவற்றை அவளுக்கு கூறினான்.

"மாமா.. நீங்க உடலளவிலேதான் என்னைவிட்டுத் தூரமாய் போயிருந்திங்க. ஆனால் மனசளவில் என்கூட நெருக்கமாய்தான் வாழ்ந்திங்க. சொன்னா நம்பமாட்டிங்க. என்கூடவே நீங்க வாழ்வதாகவே கற்பனை வாழ்க்கையை ரசிச்சு வாழ்ந்திட்டிருந்தேன். பைத்தியக்காரி மாதிரி நீங்க பக்கத்தில் இருப்பதாய் கற்பனை செய்து உங்ககூட பேசிக்கிட்டு, சிரிச்சுகிட்டு இருப்பேன். நீங்க என்னைவிட்டுப் போகமாட்டிங்க. என்னிக்காவது என்னைத் தேடி வருவிங்க என்ற நம்பிக்கை சில வேளைகளில் ஏற்படும். முட்டாள் என்று என்னை நானே திட்டிக் கொள்வேன். ஆனாலும் மனசின் ஆழத்திலே நீங்க எனக்குத்தான் என்ற ஒரு நம்பிக்கை ஆழமாய் இருந்தது. என்னிக்காச்சும் ஒருநாள் என்னைத் தேடி நீங்க வந்திட மாட்டிங்களா என்ற ஏக்கம் எப்பவுமே எனக்குள் இருந்தது. இப்போது என் நம்பிக்கை உண்மையாயிடுச்சு. எனக்கு இது கனவோ என்றுகூட சந்தேகமாய் இருக்கு. ஐ லவ் யூ மாமா..." என்று உணர்ச்சி மிகுதியில் கண்கள் பனிக்க தன் காதலை எடுத்தியம்பினாள் பேதையவள்.

அதுவரை அவள் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கும் அந்தக் கணம் சந்தோசத்தின் உச்சமாய் தோன்றியது. அவளுக்கு வார்த்தைகளால் பதிலளிக்காமல் குனிந்து அவள் கண்களில் முத்தமிட்டுத் தன் காதலை உணரவைத்தான்.

"லவ் யூ டி பாப்பு... இதற்கு மேலும் என்னால் காத்திருக்க முடியாது. உடனேயே நாம் கல்யாணம் பண்ணிக்கணும்" என்றான் அவன்.

"ஓகே மாமா.. இப்போ உங்களுக்கு என்னைப்பற்றி எப்படி தெரிந்தது. அதிலும் சுபிக்குட்டியைப் பற்றி எப்படி அறிந்து கொண்டீர்கள்..?" என்று தயக்கத்துடன் கேட்டாள்.

அவன் விக்னேஸ்வரன் தன்னை வந்து சந்தித்ததையும் சுபியைப் பற்றி அவன் கூறியதையும் குறிப்பிட்டான். அதைக் கேட்டதும் அவள் பயத்தில் தடுமாறிப் போனாள். "அப்படியென்றால் என் சுபியை அவர் கூட்டிக்கொண்டு போக வந்தாரா?" என்று கலக்கத்துடன் கேட்டாள்.

"விக்னேஸூக்குத் தான் செய்த தப்பு இப்பொழுதுதான் புரிந்திருக்கின்றது. தன் குழந்தை மீது இப்பொழுதுதான் பாசம் வந்திருக்கிறது. அதை அவர் உணர்ந்து வந்திருக்கிறார். குழந்தையைப் பார்க்கட்டுமே"
"நோ.." என்று அதிர்ச்சியில் எழுந்தே விட்டாள்.
" என் சுபி என்கூடத்தான் இருப்பாள். என்கூட மட்டும் தான் இருப்பாள்" என்று கணணீருடன் கூறினாள். அவளின் உணர்வைப் புரிந்து கொண்டவன்,
"ஏய் பாப்பு பயப்படாதே. நம் சுபி எப்போதும் நம் கூடவே இருப்பாள். உனக்கு மட்டும் அல்ல அவள் எனக்கும் மகள் தான். எப்பொழுதும் அவளை நான் உன்னிடம் இருந்து பிரித்து விட மாட்டேன். நமக்கு எப்போதும் முதல் குழந்தை அவள் தான். அதற்குப் பின்னர் ஒரு நான்கு அல்லது ஐந்து போதுமா?" என்று கேட்டான். சந்தோசத்தில் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் அவள்.


"ஆனால் உங்கள் வீட்டில்..." என்று மீண்டும் தயக்கத்துடன் கேட்டாள். "அதைப்பற்றி நீ பயப்படவே வேண்டாம். நான் அம்மாவிடம் எல்லாவற்றையும் கூறிவிட்டேன். சுபியுடன் தான் வருவேன் என்பதையும் அவர்களுக்குத் தெரிவித்து விட்டேன். அதனால் எந்த பிரச்சனையும் இல்லை" என்றான்.

தொடர்ந்து அவர்கள் இருவரும் சில மணி நேரங்கள் தங்கள் வாழ்க்கையில் இதுவரை நடந்தவை பற்றி அளவளாவினர்.

மதியம் வீட்டிற்கு சுபியை அழைத்துவந்த தாரணி தன் தோழியின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்திலேயே அவள் மனதைப் பற்றி அறிந்து கொண்டாள். அவளை அப்படியே அணைத்து,
"ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இப்படியே நீ எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க வேண்டும்" என்று மனதார வாழ்த்து தெரிவித்தாள்.


அடுத்த நாளே சுபியையும் அவளையும் அழைத்துக் கொண்டு அவன் சென்னை சென்று விட்டான். அங்கே சென்றதும் மளமளவென திருமணத்துக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டான். திருமணம் மிக எளிமையாக நடத்தப்பட்டது. பிரசாந்தால் வரமுடியாமல் போய்விட்டது. கவிப்பிரியாவும் அவளது கணவரும் வந்திருந்தனர். தனியாகப் பேசக் கிடைத்த சந்தர்ப்பத்தில் நிஷாந்தினியிடம் மன்னிப்புக் கேட்டாள் கவிப்பிரியா.
மிருணாளினி குடும்பத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் அவள் வரவில்லை.


ராஜலட்சுமிக்கு மட்டும் பெரும் சங்கடமாக இருந்தது. அவள் எதிரில் வருவதைத் தவிர்த்தார். அதை உணர்ந்த நிஷாந்தினி தானே வலியச் சென்று அவருடன் பேசினாள். அவளது நற்குணத்தை அறிந்து கொண்டவர், தான் அன்று செய்த முட்டாள்தனத்தை உணர்ந்து வெட்கத்தை விட்டு அவளிடம் மன்னிப்பை வேண்டினார்.

சுபியை விக்னேஷ் வந்து பார்த்துவிட்டுச் சென்றான். அவள் நிஷாந்தினியிடம் வளர்ந்தாலே சிறப்பாக இருப்பாள் என்பதை உளமார உணர்ந்தவன், தனக்கு அப்பப்போ தன் மகளைப் பார்ப்பதற்கு மட்டும் அனுமதியை வேண்டினான்.

இதோ இன்று திருமணமாகி இத்தனை நாட்களாகிவிட்டன. அவனுக்குத் தனது தொழில் விடயமாக சிங்கப்பூர் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதற்கே அவள் இவ்வாறு கலங்கி நிற்கின்றாள்.

அறைக்குள் வந்தவள் உடல் கழுவி இரவு உடையை அணிந்துகொண்டு கட்டிலின் மறுபக்கம் வந்து அமர்ந்தாள். அதுவரை நேரமும் தன் வேலையில் கவனமாக இருந்தவன் அதனை மூடி வைத்துவிட்டு அவள் பக்கமாகத் திரும்பினான். அவனுக்கு முதுகு காட்டிப் படுத்திருந்தவளது அருகில் வந்தவன்,
"ஏய் பாப்பு அதற்கிடையில் என்ன தூக்கம்?" என்றான்.
பதில் எதுவும் அவளிடமிருந்து வரவில்லை எனவும் அவளைத் தன்புறம் திருப்பினான். அவள் கண்களில் கண்ணீரைக் கண்டதும் பதறியவன்,
"என்னம்மா? என்னாச்சு?" என்று கலக்கத்துடன் கேட்டான்.
"நாளை நீங்க சிங்கப்பூர் போறிங்கதானே..."
"ஆமாம்..."
"அது.. அது.. எனக்கு நீங்க இல்லாமல் எப்படி?"
"பாப்பு ஒரு வாரம்தானே.. பாப்புவிடம் ஓடி வந்திட மாட்டேனா. எனக்கும் கஸ்டம்தான். அடுத்த தடவையிலிருந்து நான் வேறு யாரையும் அனுப்ப ட்ரை பண்ணுறன். ஓகேயா.. பிளீஸ் இப்படி அழுதால் என்னால் எப்படி போகமுடியும்?"
"ம்ம்" என்றவள் கண்களைத் துடைத்து விட்டாள்.
"ஓகே நாம சுபிக்குட்டிக்கு தம்பியோ தங்கச்சியோ கிடைக்க ஏற்பாடு பண்ணுவோமா? என்று கேட்டவன் வெட்கத்தில் சிணுங்கிய மனைவியை அணைத்து ஆசையுடன் முத்தமிட்டான்.


நிறைவுடன்...
 
Top