மௌனப்பெருவெளி
நான் காத்திருக்கிறேன்!!!
புத்தன் கண் திறக்கும் வரை!
உன்னை சிலை வடிக்கும்
பிரம்மாக்கள் யாரும்
உன் கண்ணை
திறப்பதில்லையே ஏன்?
எவரும், உன் கண்
நோக்கி - யசோதரையும் ரகுலனையும்
ஏன் கைவிட்டாய் என்று
கேட்டால்?
உன் கண் கலங்கி விட கூடாது
என்பதற்காகவா?!!!
சத்தமாக என்னை தொந்தரவு
செய்கிறது புத்தனின்
மௌனப்பெருவெளி!!!
குடந்தை அனிதா
நான் காத்திருக்கிறேன்!!!
புத்தன் கண் திறக்கும் வரை!
உன்னை சிலை வடிக்கும்
பிரம்மாக்கள் யாரும்
உன் கண்ணை
திறப்பதில்லையே ஏன்?
எவரும், உன் கண்
நோக்கி - யசோதரையும் ரகுலனையும்
ஏன் கைவிட்டாய் என்று
கேட்டால்?
உன் கண் கலங்கி விட கூடாது
என்பதற்காகவா?!!!
சத்தமாக என்னை தொந்தரவு
செய்கிறது புத்தனின்
மௌனப்பெருவெளி!!!
குடந்தை அனிதா
