Privi
Moderator
கிரீன் ஸ்ட்ரீட், வெஸ்ட் ஹம், மஸ்ஜித் கம்யூனிட்டி பில்டிங், என்ற இடத்தில் தான் ராயினின் நடன வகுப்பு இருக்கிறது. ராயின் ஒரு கலைத்தேர்த நடன ஆசிரியர்.
மாடர்ன் டான்ஸ், ஸ்விங் டான்ஸ், ஹிப் ஹாப் டான்ஸ் என கூறப்படும் இந்த மூன்று டான்ஸையும் ராயின் கற்று கொடுப்பான். போல்க் டான்ஸ், சல்சா டான்ஸ், ஜாஸ் டான்ஸ் மற்றும் நம் தமிழர் பாரம்பரியமான பரதநாட்டியம் இவை அனைத்திற்கும் அதற்கான கைதேர்ந்த நடன ஆசிரியர்களை நியமித்து அவர்கள் மூலம் கற்று கொடுக்கிறான்.
இதன் அடிப்படையை கொண்டுதான் ராயின் இங்கு வாழ்ந்து கொண்டு இருக்கிறான். அங்கு உள்ள சுற்று வட்டாரத்தில் அது கொஞ்சம் புகழ் பெற்ற நடன பள்ளிதான்.
இன்றைய அவனது முதல் வகுப்பே ஸ்விங் டான்சசுக்கான வகுப்புதான் தொடங்க போகிறது. வயது பேதமின்றிதான் அங்கு மாணவர்கள் கற்று கொள்கிறார்கள்.
அதில் இருபத்து நான்கு வயது கொண்ட பெண் மெடலின் தான் சற்று கொஞ்சம் பெரிய வயது மாணவி. முதல் நாளே தொலைபேசியின் மூலம் ராயினுக்கு தொடர்பு கொண்டு, அவளுக்கு ஒரு காம்பெடிஷன்( competition) இருப்பதாக கூறி அவளுக்கு ஸ்விங் டான்ஸ் வகுப்பன்று கொஞ்சம் கூடுதல் பயிற்சி கொடுக்கும் படியாக கேட்டிருந்தாள்.
அதனால் மற்ற மாணவர்களுக்கு அன்றைய நாளுக்கான சாதாரண பயிற்சி கொடுத்து விட்டு சில ஸ்டெப்ஸ்களை மீண்டும் மீண்டும் செய்து பார்க்க கூறி விட்டு இவளை அழைத்தான்.
"மெடலின் ஷால் வி ஸ்டார்ட் அவர் ப்ராக்டிஸ்"(madelin shall we start our practice) என கேட்டான். அவளும் "யெஸ் மாஸ்டர்" என கூறி விட்டு அவனுடன் ஒன்றி நடனம் ஆட ஆரம்பித்தாள்.
அப்போது அடுத்த கிளாஸ்சுக்கு தயாராகி வந்து சேர்ந்திருந்தாள் ராகவி. ராகவி அங்கேயே பிறந்து வளர்ந்த தமிழ் பெண். தாய் தந்தையர் இருவரும் இங்கு இருக்கும் பெரிய நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள். மகள் கேட்கும் அனைத்தையும் அவளுக்காக செய்து குடுத்து விடுவார்கள்.
அப்படிதான் மகள் இந்த நடன பள்ளியில் மாடர்ன் டான்ஸ் கற்று கொள்ள வேண்டும் என கேட்க, உடனே சம்மதித்து வகுப்பில் சேர்த்தனர். ஆனால் ராகவி நடன வகுப்பில் சேர்ந்ததற்கு காரணம் என்னவோ ராயின் தான்.
அவளது கல்லூரியில் தமிழ் கழகம் ஏற்பாடு செய்த கலை நிகழ்ச்சியில் ஒரு புகழ் பெற்ற பாட்டிற்கு நடனம் ஆட வந்தவன் தான் ராயின்.
அவனின் அழகிலும் அவனது நடனத்தின் எழிலிலும் மனதை பறி கொடுத்தவள், அவனை பற்றி அலசி ஆராய்ந்து அவனது நடன பள்ளியிலும் வந்து சேர்ந்து கொண்டாள்.
அவனுக்கு ஒரு குழந்தை இருப்பது தெரிந்தும் அவனின் மீது உள்ள மையல் அவளை விட்டு விலக வில்லை. அதன் விளைவு எட்டு வயது பெண்ணுக்கு தாயாக தயாரானாள்.
நடன பள்ளி சேர்ந்த நாட்களில் இருந்தே விலகியே இருந்த மேக்னாவிடம் வலுக்கட்டாயமாக பேச்சு கொடுத்து, அவளுடன் நெருக்கமாக பழகி இன்ன தேதியில் அவளுடன் நட்பு பாராட்ட ஆரம்பித்து விட்டாள்.
மேக்னாவும் அங்கு உள்ள அனைவரையும் காட்டிலும் ராகவியுடன் நெருக்கமாக இருப்பாள். இருவரும் சேர்ந்தாள் அப்படி என்ன பேசுவார்கள் என்பதே தெரியாது, அதே போல் பேச ஆரம்பித்த நொடியில் இருந்து அவர்களிடையே சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது.
மேக்னா எல்லோரிடமும் சிரித்து பேசும் குணம் உடையவள் இல்லை. அவள் அதிகமாக பேசுவது அவள் தந்தையிடமும் பள்ளியில் அவள் தோழி கரீனாவிடமும் தான். அவளின் கூட்டுக்குள் இப்போது ராகவிக்கும் இடம் கிடைத்து விட்டது.
இப்படி போகும் நிலையில் தான் அன்று மெடலின் சற்று கூடுதல் பயிற்சிக்காக ராயினுடன் நடனம் ஆடினாள். அவளால் மெடலின், ராயினுடன் நடனமாடுவதை தங்க முடியவில்லை.
பொறாமையில் அவள் வயிறு எரிந்தது. அரை மணி நேரமாக மெடலினுடன் நடனமாடி, வராத சில ஸ்டெப்ஸை அவளுக்கு கற்று கொடுத்தான். பின் அந்த ஸ்டெப்ஸையே மீண்டும் மீண்டும் ஒரு முறைக்கு பல முறை ஆடிப்பார்த்து பயிற்சி எடுத்து கொண்டனர்.
இங்கு ராகவிக்கு பொறுமை காற்றில் பரந்திருந்தது. நேரே சென்று பாட்டை நிறுத்தி விட்டாள். இசை நின்றவுடன் புளுடூத் ஸ்ப்பிக்கர் இருந்த இடத்தை பார்த்தான் அங்கு ராகவி தான் நின்று கொண்டிருந்தாள்.
அவளை கேள்வியாக பார்த்தான். உடனே அவளும் "இல்ல மாஸ்டர் டைம் முடிந்தது. அதுதான் நான் பாட்டை நிறுத்தினேன்" என்றாள். அப்போதுதான் ராயினும் மணியை பார்த்தான்,
"ஓகே மெடலின் ஆல் தி பெஸ்ட் போர் யுவர் காம்பெடிஷன். டான்ஸ் வெள்"(ok medalin all the best for your competition. dance well) என வாழ்த்தி அவளை அனுப்பி வைத்தான்.
பின் ஐந்து நிமிடம் அமர்ந்து கொஞ்சம் நீரை பருகிய அடுத்த நிமிடமே அடுத்த வகுப்புக்கு கற்றுக்கொடுக்க தயாராகி விட்டான். அது ராகவி வகுப்பு என்பதால் அவள் மகிழ்ச்சியுடன் ஆட ஆரம்பித்தாள்.
அவன் கற்று கொடுப்பதையும் அவனையும் ரசித்து கொண்டே நடனமாடி கொண்டிருந்தாள் ராகவி. அவன் கிளாஸ் வாசலில் இருவர் வந்து நிற்க அவர்களிடம் உரையாட வேண்டும் என்பதற்காக மாடர்ன் டான்ஸ் குரூப்பில் சிறப்பாக ஆடும் ஒருவனை அழைத்து அவர்களுக்கு பயிற்சி வழங்குமாறு கூறி விட்டு இவன் வந்தவர்களிடம் சென்றான்.
புதிய வரவு, மகனை ஹிப் ஹாப் டான்ஸ் குரூப்பில் சேர்த்து விட வந்திருக்கின்றனர். அவர்களை அழைத்து கொண்டு அவனது அலுவலக அறைக்கு சென்று விட்டான் ராயின். அவன் சென்றவுடன் ராகவி சற்றே தளர்ந்து ஐந்து நிமிடம் ஓய்வு கேட்டு அவளது தண்ணீர் போத்தலை எடுத்துக்கொண்டு ஒரு ஓரமாக சென்று நின்று நீர் அருந்திக்கொண்டிருந்தாள்.
அந்த சமயம் மேக்னா பள்ளி முடிந்து அங்கு வந்து சேர்ந்தாள். அவளை பார்த்தவுடன் ஆர்வமாக சென்று அவளை கட்டி கொண்டாள் ராகவி. ஆனால் மேக்னாவோ சற்று கோபமாக அவள் பிடியிலிருந்து திமிறி வெளியே வந்தாள். அவள் முகம் கடு கடுவென இருந்தது. ராகவி மேல் பயங்கர கோபத்தில் இருந்தாள்.
ராகவி "ரொம்ப பண்ணாத சரியா? நான் என்ன பண்ணட்டும் அப்பா என்னை பேமிலி கதெரிங்க்கு அழைத்து சென்று விட்டார். மன்னிச்சிருடா குட்டி" என அவளை சமாதானம் செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தாள்.
மேக்னா கோபமாக "நான் உங்களுக்காகத்தான் கடைசி வரை காத்திருந்தேன். ஆனால் நீங்கள் வரவில்லை" என கோபமாக ஆரம்பித்து அவள் வரவில்லை என்ற வருத்தத்துடன் பேசி முடித்தாள்.
ராகவி "சாரி ட குட்டி" உன்னுடைய ராகவிதானே மன்னிக்க மாட்டாயா?" என கெஞ்சி கொஞ்சி அவளை சமாதானம் செய்தாள். ராகவி ராயினை விரும்பினாலும் மேக்னாவுடன் உண்மையான அன்பில் தான் பழகினாள்.
பின் இருவரும் நேற்று நடந்த அவள் பிறந்த நாள் விழாவை பற்றி உரையாடி கொண்டிருந்தனர். புது வரவுக்கான பதிவை போட்டு விட்டு மீண்டும் வகுப்புக்கு வந்தான் ராயின்.
வந்தவன் ராகவி நடனம் ஆடாமல் மேக்னாவுடன் அளவளாவி கொண்டிருப்பதை பார்த்து அவர்களிடம் விரைந்தவன் கண்டிப்பான பார்வையில் ராகவியை பார்த்தான்.
அவளும் மெல்ல எழுந்து “சாரி மாஸ்டர்” என கூறி நடன மாடி கொண்டிருப்பவர்களுடன் இணைந்து கொண்டாள். அப்படியே திரும்பி அவன் மேக்னாவை பார்க்க அவளோ "சாரி ப்பா" என கூறி அவளுக்கென ஒதுக்க பட்டிருக்கும் இடத்தில் அமர்ந்தாள்.
அமர்ந்தவள் அவள் பாடங்களை புரட்டி படிக்கலானாள். ராயினோ அவளை பார்த்து தலையை இரு பக்கமும் ஆட்டி விட்டு மீண்டும் அவன் வேலையை தொடர ஆரம்பித்தான்.
அவளின் நடன வகுப்பு முடிந்து அடுத்த வகுப்பு தொடங்கி அதுவும் நிறைவு பெற்று விட்டது ஆனால் ராகவி மேக்னாவின் உரையாடல் ஒரு நிறைவுக்கு வரவில்லை.
ராயின் இருவரிடமும் வந்து மேக்னாவை பார்த்து "பம்கின் போகலாமா" என கேட்க அவளும் சம்மதமாய் தலை அசைத்தாள். அடுத்து ராகவியை பார்த்து "நீ இன்னும் புறப்பட வில்லையா?" என கேட்டான்.
அதற்கு ராகவி "இல்லை இன்னும் அப்பா வரவில்லை. தாமதமாகும் என கூறினார்." என்றாள்.
ராயின் "சரி வா நானே உன்னை வீட்டில் விட்டு செல்கிறேன்." என்று கூறியவன், அவளை அழைத்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டான்.
அவளும் அதை தானே எதிர்பார்த்தாள். ராயின் கார் ஓட்ட ராகவியும், மோக்னாவும் பின் சீட்டில் அமர்ந்து உரையாடிக்கொண்டு வந்தனர். ராகவி என்னதான் மேக்னாவுடன் பேசிக்கொண்டு வந்தாலும் அவளின் ஒரு கண் ராயினை மொய்ப்பதை திருத்த வில்லை.
பதினைந்து நிமிடத்தில் ராகவியின் வீடு வந்து விட்டது. அவளை அவள் வீட்டில் இறக்கி விட்டு, தன் வீட்டை நோக்கி பயணம் செய்தான் ராயின்.
அவள் எந்த அளவு ராயினை விரும்புகிறாளோ அதே அளவு மேக்னாவையும் நேசிக்கிறாள். ராயினுக்கும் ராகவியின் பார்வை, செயல் புரியாமல் இல்லை. ஆனால் அவன் இதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள வில்லை.
வயது பெண்ணிற்கே உள்ள ஒரு ஆர்வம் அதை கண்டும் காணானதைப்போல் விட்டு விட்டால் கொஞ்ச நாளில் அவளே மாறி விடுவாள் என நினைத்தான்.
ராயினை பொறுத்தவரையில் அவன் வாழ்க்கை அவன் மனைவியுடன் முடிந்து விட்டது. இப்போது அவன் வாழும் வாழ்க்கை அவன் மகளுக்கானது. இன்னொரு பெண்ணை இனி அவன் வாழ்க்கையில் ஏர்ப்பது என்பது அவனை பொறுத்த வரையில் நடக்காத காரியம்.
இதில் எங்ஙனம் ராகவியின் காதல் கை கூடுவது?
இல்லை
ராயின் வாழ்வில் வசந்தம் வசந்த காற்று வீசுமா?
என்பதை பொறுத்திருந்து பார்போம்.