kani suresh
Moderator
கண்மணி வீட்டிற்குச் சென்றவுடன் புது மாப்பிள்ளை என்பதால், ஏகபோக வரவேற்பு தான் வினோத்திற்கு. இரவு உணவும் சாப்பிட்டு விட்டுச் சென்றாக வேண்டும் என்று கமலி ஒரே வார்த்தையாகச் சொல்லிவிட,
அவள் சமையலறைக்குள் நுழையும்போது கண்மணியும் உள்ளே வர, "நான் பார்த்துக்குவேன். நீ போயி அவரோட உட்கார்ந்து பேசிட்டு இரு" என்றாள்.
"நான் அங்க போய் அதானே பண்ணப் போறேன்" என்று கண்மணி சொல்ல, கமலி சிரித்த முகத்துடன் சமையலில் ஈடுபட்டுக் கொண்டே "கண்மணி, உனக்கு அங்க எல்லாம் ஓகே தானே" என்று கேட்டாள்.
"ஓகே தானனு நீ எதைக் கேட்கிற?” என்று கேட்டாள்.
"நான் எந்த எதிர்பார்ப்போடும் கேக்கல. உனக்கு அங்க செட் ஆயிடுச்சான்னு மட்டும் தான் கேட்டேன். எனக்குத் தெரியும் டி" என்று வாயைக் கோணித்துக் காண்பிக்க, "என் கமலி செல்லத்துக்கு ரொம்ப தான் கோவம் வருது வர வர. என் அண்ணன் தான் பாவம் போல" என்று சிரித்தாள். அவளை வம்பு இழுத்துக் கொண்டே.
"ஆமாம், ஆமாம். உங்க அண்ணா ரொம்ப தான் பாவம்" என்று அவளும் வாதாட அப்போது கிச்சனுக்குள் நுழைந்து இருந்தான் வினோத். "என்ன ரெண்டு பேரும் பேசிட்டு இருக்கீங்க காரசாரமா?" என்றான் சிரித்த முகத்துடன்.
"என்ன அண்ணா, ஏதாச்சும் வேணுமா? நீங்க இங்கே வந்திருக்கீங்க? ஏதாச்சும் வேணும் என்று கவிகிட்டச் சொல்லி இருந்தா நான் கொண்டு வந்திருப்பேன்ல" என்று லேசான பதட்டத்துடன் கேட்டாள்.
"எனக்கு ஒன்னும் வேணாம் கமலி. சும்மாதான் வந்தேன்" என்று பேசிக்கொண்டே கிட்சன் மேடைமேல் உட்கார, "அண்ணா எதாவது வேணுமா?” என்று திரும்பவும் கேட்டாள்.
"ஒன்றும் இல்லை கமலி. நீ பாரு, நான் சும்மாதான் வந்தேன். பசங்க ரெண்டு பேரும் விளையாடிகிட்டு பாட்டி, தாத்தா கூடப் பேசிட்டு இருக்காங்க. சங்கருக்கு ஏதோ ஆபீஸ்ல இருந்து போன் கால் வந்திருக்கும் போல, பேசிட்டு இருக்காரு" என்ற உடன் அமைதியாகி விட்டாள்.
மூவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது சங்கர் உள்ளே வந்தவன், "மச்சான் ஏதாச்சும் வேணுமா? சாரி மச்சான், ஆபிஸ் கால் அதான்" என்றான்.
"ஒன்னும் இல்ல, விடுங்க மச்சான். நான் சும்மா இவங்ககூடப் பேசிட்டு இருக்கலாம் என்று தான் வந்தேன்" என்று பேசிக் கொண்டிருக்க கமலி சமைத்த அனைத்தையும் எடுத்துக் கொண்டு வந்து ஹாலில் வைத்தாள்.
சாப்பிட்டுவிட்டு மூவரும் சொல்லிக்கொண்டு வீட்டிற்குக் கிளம்பினார்கள். கிளம்புவதற்கு முன்பு அனைவரையும் பார்த்த வினோத், "உங்க பொண்ண என்னால முடிஞ்ச வரை நல்லாப் பார்த்துப்பேன். அந்த நம்பிக்கையை உங்களுக்குத் தரேன். சொல்றதை விட நிரூபிச்சுக் காட்டுறேன்" என்று அனைவரையும் பார்த்துச் சிரித்துவிட்டு கண்மணி, ராகினி இருவரையும் அழைத்துக் கொண்டு தங்களது வீட்டிற்குப் புறப்பட்டான்.
அவ்வப்போது, கண்மணியின் பார்வை வினோத்தைத் தீண்டிச் சென்றது. வினோத்திற்கு லேசாகச் சிரிப்பு வந்தது. 'சின்னப்புள்ளத் தனமாக நடந்து கொள்கிறாளே' என்று யோசித்தான். ‘கவினை அடிக்க வந்து தன் மேல் பட்டதை எங்கு நான் தவறாக எண்ணி விடுவேனோ? என்று நினைத்து அவளது பார்வை தன்னைத் தீண்டிச் செல்கிறது. அவளது வீட்டில் கூட அவளின் பார்வை என்னிடம் இருந்தது’ என்று எண்ணி மனதிற்குள் சிரிப்பு உண்டாகியது.
அவளது சிறுபிள்ளைத் தனத்தையும், ரசிக்கதான் செய்தான் உள்ளுக்குள். வீட்டிற்கு வந்தவுடன் பத்மாவிடம், "அம்மா, நீங்க சாப்டீங்களா?" என்று கேட்டான்.
"அதான், கண்மணி அங்க போன உடனே நாங்க வரதுக்கு லேட் ஆகும், நீங்க சாப்பிடுங்க அப்படின்னு சொல்லிட்டாளே டா" என்றார். கண்மணியைப் பார்த்தான். அவள் கண் மூடித் திறக்க எதுவும் பேசாமல், "மாத்திரை போட்டிங்களா, இல்லையா?" என்று கேட்டான்.
"போட்டுட்டேன்டா" என்றார். பிறகு, "சரி மா, நேரம் ஆகுது. போய் தூங்குங்க" என்று விட்டு வண்டியில் வரும்போதே ராகினி தூங்கி இருக்க அவளைத் தோளில் சாய்த்துக் கொண்டு பெட்ரூமில் சென்று படுக்க வைத்து விட்டுத் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு வெளியில் வர, கண்மணி ரூமில் இருக்கும் அனைத்தையும் ஒதுங்க வைத்துக்கொண்டு இருந்தாள்.
"காலையில பாத்துக்கலாம் கண்மணி, நேரம் ஆகுது பாரு தூங்கு" என்றான்.
"காலையில் எழுந்தா இருக்க வேலையைப் பார்க்கவே நேரம் கரெக்டா இருக்கும்" என்று விட்டு அனைத்தையும் ஒதுங்க வைத்த திருப்தியுடன் வெளியில் சென்று கதவு அனைத்தும் சாற்றி இருக்கிறதா? என்று ஒரு முறை பார்த்து விட்டு வந்து படுத்தாள்.
"ஏன் கண்மணி, சாயங்காலத்தில் இருந்து ஒரு மாதிரி இருக்க?" என்று கேட்டான். இதுவரை அமைதியாக இருந்தவளுக்கு இப்போது லேசான பதற்றம் தொற்றிக் கொண்டது.
"அ..அது ஒன்னும் இ..இல்ல" என்று திணறினாள். அவளது கையைப் பிடித்துத் தன் கைக்குள் வைத்துக் கொண்டவன், "அது தெரியாமல் நடந்த ஒரு இன்சிடன்ட், கவினை அடிக்க வந்து அப்போ என் மேல கை பட்டுருச்சு. இன்னும் சொல்லப் போனால் அது எனக்கு வலிக்கவும் கிடையாது. இன்னொன்னு என்னை நீ அடிக்கணும்னு அடிக்கவும் வரல. அதுக்கு எதுக்கு இவ்ளோ பதட்டம்? சின்னப்புள்ளத் தனமா நடந்துக்குற. சின்னப் பிள்ளைங்க தான், நம்ம ஒருத்தவங்கள அடிக்க வந்து வேற ஒருத்தர் மேல பட்டுருச்சுன்னா, அச்சோ அவங்க தப்பா நினைச்சிருவாங்களோனு யோசிப்பாங்க. சின்னப் பசங்களை விட நீ மோசமா இருக்க. ஆனாலும், உன்னோட இந்த முழி புடிச்சிருக்கு." என்றான் சிரித்துக் கொண்டே. இப்பொழுதும் திருதிருவென அவனைப் பார்த்து முழித்தாள்.
"இப்படி முழிச்சிட்டு இருக்காத, தூங்கு நேரம் ஆகுது" என்று விட்டு அவளை ஒரு முறை திரும்பிப் பார்த்துச் சிரித்துவிட்டுப் படுத்தான். அவன் சிரிக்கும் பொழுது அவனது கன்னத்தில் குழி விழுவதை லேசாக ரசிக்கச் செய்தாள்.
"உங்களுக்குச் சின்ன வயசுல இருந்தே கன்னத்துல குழி விழுமா, சிரிக்கும் போது" என்று கேட்டாள்.
அவள் கேட்ட விதத்தில் லேசாகச் சிரிப்பு வர, "தெரியல, அப்படி தான் அம்மா சொல்லி இருக்காங்க. அம்மாவுக்கும் பிடிக்கும். அப்பப்ப ராகிமாவும் சொல்வா, அப்பா நல்லா இருக்கு என்று” சொல்லிட்டுப் போர்வையை எடுத்துப் போர்த்திக் கொண்டு படுத்து விட்டான்.
சிறிது நேரம் மாலையில் இருந்து நடந்த அனைத்தையும் இருவரும் நினைவில் கொண்டு வந்துவிட்டு அசதியில் தூங்கி இருந்தார்கள். நாள்கள் அழகாகச் சென்றது. தினமும் கண்மணி ராகினியை அழைத்துக்கொண்டு, இங்கிருந்து தனது அண்ணன் வீட்டிற்குச் சென்று கவினையும் அப்படியே அழைத்துக்கொண்டு செல்வாள்.
ஆரம்பத்தில் சங்கர், கமலி கூட எதுக்கு இவ்வளவு அலைச்சல் என்று கேட்க, "எனக்கு என்ன அலைச்சல், ஆபீஸ்க்கு போறதுக்கு முன்னாடி நீ அவனை இங்க இருந்து கொண்டு போய் விட்டுக் கூப்பிட்டு வருவதற்கு உனக்கு தான் அலைச்சலா இருக்கும். என்னால முடியலன்னா நான் முடியலைன்னு சொல்லப் போறேன். ப்ரீயா தான இருக்கேன். நான் தினமும் போற வர வழி தான" என்று அமைதியாகி விட்டாள். அவளாலும் தினமும் கவினைப் பார்க்காமல் இருக்க முடியாது. கவினாலும் அவளைப் பார்க்காமல் இருக்க முடியாது என்பதால் அமைதியாகி விட்டார்கள்.
மாதங்கள் ஓடி இருந்தது. ராகினி இப்பொழுதெல்லாம் கண்மணியை அம்மா என்று அழைக்க ஆரம்பித்திருந்தாள். தினமும் தன் அப்பாவிடம் கண்மணி சமையலில் ஈடுபட்டிருக்கும் பொழுது இரவு வேளையில், “அப்பா ஸ்கூல்ல இது நடந்துச்சு, அது நடந்துச்சு” என்று சொல்லுவது போல், "அம்மா ஸ்கூலுக்குப் போகும்போது கூட கதை சொல்லி தான் கூட்டிட்டுப் போவாங்க தெரியுமா? உன்ன மாதிரி இல்ல, நீ தூங்க வைக்கும் போது கூடக் கதை சொல்ல மாட்ட" என்று கண்மணி பற்றிய புராணம் பாடச் செய்தாள்.
ஆரம்பத்தில் கண்மணி புராணத்தைத் தொடங்கும்போதே எரிச்சல் உண்டானவனுக்கு, இப்பொழுது எல்லாம் சிரிக்க தான் தோன்றியது. ஒரு சில நேரங்களில் அவளது சிறுபிள்ளைத்தனத்தைக் கூட ரசிக்கத்தான் செய்து இருக்கிறான். குழந்தைகளிடம் பேசும்போது குழந்தையாகவே மாறி விடுகிறாள். தன் அம்மாவிடம் பேசும்பொழுது பெரிய பிள்ளையாக அவனது கண்களுக்குத் தெரிகிறாள். அம்மாவிடம் பேசும்போது மிரட்டவும் செய்கிறாள் ஒரு சில நேரங்களில்.
"நீங்க இப்படித்தான் செய்யணும்" என்று அவரது உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு ஒரு சிலவற்றைச் செய்யாதீங்க என்று மிரட்டுகிறாள். அவளது அந்த மிரட்டலில் உண்மையான அன்பு, அக்கறையை மட்டும் பார்க்கிறான்.
அதுவே ‘ராகினிடம் பேசும்போது கொஞ்சிக் கொஞ்சி அன்பாகப் பேசி, தாஜா செய்து குழந்தையை எப்படி வழி நடத்த வேண்டுமோ, அப்படி வழி நடத்துகிறாள். தன்னிடம் பேசும் போது முற்றிலும் வேறு விதமாகத் தெரிகிறாள்’ என்று யோசிக்கச் செய்தான். அவளை அவன் விரும்ப ஆரம்பித்தானா? என்று கேட்டால், அப்படியெல்லாம் சொல்லிவிட முடியாது. ஆனால், அவளை உற்று கவனிக்க ஆரம்பித்து இருந்தான்.
அவளது ஒவ்வொரு செயல்களையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான். யாரிடம் எப்படிப் பேசுகிறாள், ஒவ்வொரு வேலைகளையும் எந்த அளவிற்கு ஈடுபாடுடன் செய்கிறாள் என்று ஒவ்வொன்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான். தினமும், அவளுக்குச் சமையலில் ஒரு சில உதவிகளைச் செய்துவிட்டு, ராகினி ஸ்கூலுக்குச் செல்லக் கிளம்ப உதவி செய்வான்.
ஒரு சில நேரங்களில் அவனுக்கு நேரமாகினால், ஏதாவது வேலை இருந்தால், "நான் பார்க்கிறேன், நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்க" என்று சொல்வாள். கவினும் ஒரு சில நாள் இங்கு வந்து தங்கி விட்டுச் சென்றான். மூவரும் குடும்பத்துடன் சென்று கமலியையும் அடிக்கடி பார்த்துவிட்டு வந்தார்கள். கமலிக்கு ஏழாவது மாதம் தொடங்கி இருந்தது.
கண்மணி கமலிடம், "கமலி, ஏழாவது மாசம் தொடங்கிடுச்சு. உனக்கு நான் சாப்பாடு கொண்டு வரட்டா" என்று கேட்டாள். அவளை அமைதியாகப் பார்த்த கமலி, "ஏன், மேடம் அதுகூட என்கிட்டக் கேட்டுட்டு தான் எடுத்துட்டு வருவீங்களோ?" என்று கேட்க, "இல்ல வீட்ல இருந்து அத்த, மாமா எடுத்துட்டு வருவாங்கன்னு சொன்னா? அதான், உன்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டுச் செய்யலாம்னு…" என்றாள்.
"லூசு, கவின் வயித்துல இருந்தப்ப நீ செய்யறன்னு சொல்லி அடம் புடிச்ச. அப்போ அம்மா, அப்பா செய்யணும்னு சொன்னாங்க. அதனால அவங்க செய்வாங்கன்னு சொல்லி இருந்தேன். இப்போ நீ தான் வேறொரு வீட்டுக்குப் போயிட்டியேடி. ஏன் எனக்காக உன்னால சாப்பாடு கூட செஞ்சு எடுத்துட்டு வர முடியாதா?" என்று உரிமையாகத் தன் தோழியிடம் மல்லுக்கு நின்றாள்.
வினோத்திற்கு தான் சிரிப்பு வந்துவிட்டது. "ஏன்டா சிரிக்கிற?" என்று பத்மா கேட்க, "மா, உண்மையா இவ்வளவு நாளா உங்க மருமகள் தான் சின்னப்புள்ள தனமா நடந்துக்குதுன்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா, இப்போ கமலியும் அப்படிதான் இருக்கா" என்றவுடன் கமலி ஒன்றும் புரியாமல் திருதிருவென முழிக்க, கண்மணி தான் அவனை முறைத்துக் கொண்டு நின்றாள்.
சங்கர் தான், "என்னாச்சு மச்சான்" என்று கேட்க,
"இல்ல மச்சான், உங்க தங்கச்சி தான் அப்பப்போ சின்னப் பிள்ளைத்தனமா நடந்துக்குறா, ஒரு சில விஷயம் பண்றான்னு நினைச்சேன். ஆனா, இவங்க ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்து இருந்தா, வச்சு சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம் தான் போல. இத்தனை வருஷம் வச்சி சமாளிச்சு இருக்கீங்க பாருங்க, உங்களுக்கு அவார்ட் தரணும்" என்றார்.
இருவரும் இப்பொழுது வினோத்தை முறைக்க, "இல்ல, நான் சும்மா சொன்னேன்" என்று சிரித்தான். அவன் சொன்ன விதத்தில் வீட்டில் அனைவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது. அனைவரும் அவனைப் பார்த்துச் சிரிக்க, குழந்தைகள் இருவரும் கைதட்டிச் சிரித்தார்கள்.
"அப்பா, அத்தையும், அம்மாவும் முறைச்சுப் பார்த்த உடனே நீ பல்டி அடிச்சிட்ட" என்று இருவரும் சிரிக்க, "டேய், உண்மையாக இரண்டு பேரும் எந்த அளவுக்குக் குழந்தைத் தனமா நடந்துக்குறாங்களோ, அந்த அளவுக்கு ஸ்ட்ரிக்டா இருக்காங்க டா" என்று சிரித்தான்.
அதை வீட்டில் உள்ளவர்களும் ஆமோதித்தார்கள். சிரிப்பும் கும்மாளமுமாக கமலியின் ஏழாவது மாத சாதமும் கொடுக்கப்பட்டது. அதுவும் நல்லபடியாக நடந்து முடிந்தது.
அப்போது அருகில் உள்ள ஒரு சில உறவினர்களை மட்டும் அழைத்து இருக்க, கமலியின் அம்மா வந்தவர் அமைதியாக இல்லாமல் கண்மணியிடம், "கண்மணி, உன் நல்லதுக்கு தான்டா சொல்றேன். என்னதான் நீ அங்கு வாழப் போய் இருந்தாலும், அங்க ஏற்கனவே ஒரு குழந்தை இருந்தாலும், உனக்குன்னு ஒரு குழந்தை இருந்தா, அது வேற மாதிரி தான் இருக்கும். நான் ராகினியை நீ உன் குழந்தை மாதிரிப் பார்க்க வேண்டாம்னு சொல்லல. இருந்தாலும், உனக்குன்னு ஒரு குழந்தை இருந்தா, அந்த லைஃப்ல ஒரு பிடிப்பு இருக்கும். உன்னோட நல்லதுக்கு தான் சொல்றேன். உன் ஃப்ரெண்டோட அம்மாவா தான் சொல்றேன்" என்று கண்மணியின் தலையைக் கோதிவிட்டு நகர்ந்து விட, அதை வினோத்தும் கேட்க நேரிட்டது. கண்மணிக்கு ஒரு மாதிரியாகிவிட்டது. அவர் தன்னுடைய நல்லதுக்கு தான் சொல்கிறார் என்று அவளும் அறிவாள். இருந்தாலும், அவர் சொன்ன வார்த்தையை அவளால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. அமைதியாக நின்று கொண்டிருந்தாள்.
அப்பொழுது அங்கு வந்த கமலி, "ஏண்டி ஒரு மாதிரி இருக்க?" என்று கேட்க “ஒன்றும் இல்லை” என்றாள்.
"அம்மா என்ன சொன்னாங்க? உண்மையச் சொல்லு, ஏதாவது உன்ன சொல்லிட்டாங்களா?" என்று கேட்க, "அத்தை என்னை என்ன கமலி சொல்லப் போறாங்க?" என்று கேட்டாள்.
"பின்ன அம்மா பேசிட்டுப் போனதுக்கு அப்புறம் தான் உன் முகம் வாட்டமா இருக்கு." என்ற உடன் தோழியாக பாவித்துக் கமலியின் அம்மா சொன்ன அனைத்தையும் கமலியிடம் சொல்ல, "இந்த அம்மா லூசு மாதிரி எதையாவது பேசிட்டுப் போகுது, அதுக்கு எங்க என்ன பேசணும்னு புரியாது, தெரியாது." என்று சொல்ல,
"விடு கமலி, பெரியவங்க என்னோட நல்லதுக்கு தானே சொன்னாங்க" என்ற உடன் வேகமாகத் திரும்பிய கமலி, "நீ என்ன சொல்ல வர கண்மணி, எனக்குப் புரியல" என்றவுடன் வினோத்துக்குமே ஒரு நிமிடம் அதிர்ச்சி ஆகிவிட்டது.
"அவங்க சொன்னாங்கன்றதுக்காக நான் அதை ஃபாலோ பண்ணனும்னு சொல்லல. ஆனா, அவங்க சொன்னதுல தப்பு இல்லன்னு சொல்றேன். அவ்வளவுதான்… அதுக்காக, அதை நான் அப்படியே அக்செப்ட் பண்ணிக்கப் போறேன் அப்படின்னு சொல்லல."
"எனக்குப் புரியல, இதுக்கு என்ன அர்த்தம்? இத நான் எப்படி எடுத்துக்கறது கண்மணி" என்று கேட்டாள் கமலி.