எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கண்ணாளனே 22

kani suresh

Moderator
ஆபீசுக்குச் சென்ற வினோத்துக்கு கண்மணி நினைவாகவே இருந்தது. அவளது சிறுசிறு அசைவுகளையும் இப்பொழுதெல்லாம் ரசிக்கச் செய்கிறான். அவளது நினைவில் தனியாகச் சிரிக்க, அவனது அருகில் வந்த அவனுடன் வேலை செய்ப்பவன், "என்ன வினோத் சார், இப்போலாம் அடிக்கடி உங்க முகத்தில் சிரிப்பப் பார்க்க முடியுது. உங்க வைஃப் நினைச்சா? உங்க நியூலைஃப் எப்படிப் போகுது? தங்கச்சி உங்களை நல்லாப் பார்த்துக்கிறாங்களா?" என்று கேட்டான்.

"ஏன்டா, என்னோட லைஃபுக்கு என்ன? இதுக்கு முன்னாடி சிரிக்கத் தெரியாமலா இருந்தேன்?"

“அப்படி இல்ல வினோத், முன்ன எப்பவாவது சிரிப்பீங்க. இப்போ எந்த நேரமும் சிரிச்ச முகமா இருக்கீங்களா, அதனால கேட்டேன்…”

'என்னடா இது, நமக்கு வந்த சோதனை?' என்று மனதிற்குள் புலம்பினான்.

அப்போது அருகில் வந்த அவனது நண்பன், "என்ன மச்சான், புலம்புற? நானும் காலையில் வந்ததிலிருந்து பார்க்கிறேன், கனவுலகத்தில் இருக்க"

"அதெல்லாம் ஒன்னும் இல்ல மச்சான்" என்று புன்னகை பூத்தான்.

"ரொம்பப் பல்லக் காட்டாத, வழியுது. தொடச்சிக்கோ… எழுந்திரு, லன்ச் பிரேக் ஆகிடுச்சு. போய் சாப்பிடலாம். பசி கூட எடுக்காத அளவுக்கு சார் ஏதோ ஒரு போதையில் இருக்கீங்க" என்று அவன் தோளில் தட்ட,

"டேய், அப்படிலாம் இல்ல. என்ன போதையில் இருக்காங்க?"

"என் தங்கச்சி கண்மணியோட போதையில் இருக்க… சார் காலைல வந்ததுல இருந்து அடுத்தவங்க கூப்பிடுறது கூடக் காதுல வாங்காத அளவுக்கு தான் இருக்கீங்க."
"அப்படி எல்லாம் இல்லடா மச்சான்"

"சரி, சமாளிக்க ஒன்னும் வேணாம் வா… நல்லா இருந்தா சரி, வா சாப்பிடலாம். சரி மச்சான், லைஃப் எப்படிப் போகுது?" என்று கேட்க,

"அதற்கு என்னடா, நல்லா தான் போகுது" என்று முறுவலித்தான்.

"வர வர ரொம்பச் சிரிக்கிற மச்சான்… எல்லோரும் மரை கழன்றிடுச்சுன்னு நினைச்சிடப் போறாங்க" என்று புன்னைக்க,

"ஏன்? அதுக்கு முன்னாடி சிரிக்க காசா கேட்டேன்"

"அப்படித்தான்டி மாப்பிள்ளை சொல்லணும். சிரிக்கக் கூட காசு தான் கேட்ப. அதும் ஒரு சில நேரம் எரிஞ்சு கூட விழுவ…" என்றான் அகிலன் லேசான புன்னகையுடன்.

வினோ முறைக்க, "சரி சரி விடு, சரி என்ன முடிவு பண்ணி இருக்க?"

"என்ன முடிவு பண்ணி இருக்கேன்னா, என்ன மச்சான் அர்த்தம்?"

"இல்ல மாப்ள, அடுத்த மூவ் என்ன? தங்கச்சிகிட்ட எப்ப உன்னோட லவ் சொல்லலாம்னு இருக்க?"

வினோ அதிர்ச்சியுடன், "எ..எதே லவ்வா?"

"பின்ன இல்லையா?"

"டேய் லூசு, விளையாடாத. அப்படிலாம் எதும் இல்ல. நீயே எதும் உளறிகிட்டுத் திரியாத. சரியா?"

"ஓ! அப்ப நீங்க என் தங்கச்சி கண்மணியை லவ் பண்ணலையா? சரி சரி" என்று சிரிக்க,

"டேய் லூசு, என்னடா பண்ற மச்சான்? உண்மையா காமெடி பண்ணாத…"

"நான் காமெடி பண்றனா? நீ கண்மணியை லவ் பண்ண ஆரம்பிச்சுட்டன்னு எனக்கே தெரியுது."

"டேய், அப்படி எல்லாம் இல்ல."

"சரி விடு. உன் மனசாட்சியைக் கேட்டுப் பாரு, நீ கண்மணியை லவ் பண்றியா, இல்லையான்னு… சரியா? இப்ப வா, நேரம் ஆகுது." என்று அவனைக் கையோடு சாப்பிட அழைத்துச் சென்றான் அகிலன்.

'எது? நான் அவளை லவ் பண்றனா?' என்று மனதிற்குள் கேட்டுக் கொண்டான்.

அகிலன் கூப்பிடக் கூப்பிட அமைதியாக இருக்க, "மச்சான், வீட்ல போயி தான் உன்னைய மனசாட்சிகிட்ட கேட்டுப் பார்க்கச் சொன்னேன். அதுக்காக வேலை நேரத்தில் இல்ல, வா…" என்றான்.

அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு வேலையில் கவனத்தைச் செலுத்தினான். கண்மணிக்கும் அவ்வப்போது வினோத்தின் நினைவு வர, ஒதுக்கி வைத்துவிட்டு வேலையில் கவனத்தைத் திசை திருப்பினாள்.

மாலை வினோத், கண்மணியை அழைத்துக் கொண்டு ராகினியை அழைக்க ஸ்கூலுக்குச் சென்றான். போகும் வழியில் வினோத் அமைதியாகவே வர, சிறிது தூரம் சென்ற பிறகு, "ஏன் அமைதியா வரிங்க, என்ன ஆச்சு?" என்றாள். அப்போதும் அவன் அமைதியாக இருக்க, "உங்களைத் தான்" என்று அவன் தோளில் தட்டினாள்.

"என்ன கேட்ட?" என்றான். "நான் என்ன கேட்டேன் என்று தெரியாத அளவுக்கு அப்படி என்ன பலத்த யோசனை?".

"ஒன்னும் இல்ல. ஃப்ரெண்ட் அகி ஏதோ சொன்னான், அதப்பத்தி நினைச்சேன்."

"என்ன சொன்னாரு?"

"ஒன்னும் இல்ல" என்று விட்டு அமைதியாகி விட்டான்.

‘என்னஆச்சு இவருக்கு? வந்ததுல இருந்து ஒரு மாதிரி இருக்காரு.’ என்று யோசித்தாள். ஸ்கூலுக்குச் சென்று ராகினியை அழைத்துக்கொண்டு, சங்கருக்கும் போன் செய்து கவினை அழைத்துக் கொண்டு செல்வதாகச் சொல்லி, அவனையும் அழைத்துக்கொண்டு சென்று கவினை வீட்டில் விட்டுவிட்டு, மூவரும் டீ மட்டும் குடித்துவிட்டுத் தங்கள் வீடு நோக்கிச் சென்றார்கள்.

வீட்டுக்கு வந்தவுடன் வினோத் ரூமுக்குள் நுழைந்து கொள்ள, கண்மணி இரவு உணவுக்குத் தேவையான அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள். ராகினி வினோத்திடம் சென்று ஏதோ கேட்டதற்கு, அவன் காதில் வாங்காமல் உட்கார்ந்து இருக்க, "அப்பா, நான் பேசுறது காதுல வாங்காம, உட்கார்ந்து இருக்காங்க அம்மா" என்று கண்மணியிடம் புகார் பத்திரம் வாசிக்க,

"அப்பாவுக்கு ஆபீஸ் டென்ஷன்டா ராகிமா, கொஞ்ச நேரத்துல சரி ஆகிவிடுவார்." என்றாள்.

"இதுவரை அப்பா இந்த மாதிரி இருந்தது இல்லைம்மா"

"சரி விடுங்க டா, அதிக வேலையா இருக்கும் அப்பாவுக்கு, அதனால தான்" என்று விட்டுக் குழந்தையைக் கொஞ்சி அவளிடம் கதை பேசிக்கொண்டே சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள்.

வினோத்தின் போன் இரண்டு மூன்று முறை அடித்து ஓய்ந்தது. திரும்பவும் போன் ரிங் ஆக, ரூமுக்குள் வந்த கண்மணி, வினோத் தோளில் தட்டிவிட்டு போனை அவன் கையில் நீட்ட, "போன் ரொம்ப நேரமா ரிங் ஆகி கட் ஆகுது. எந்த உலகத்துல தான் இருக்கீங்களோ?"என்று கைகளைக் கட்டிக் கொண்டு முறைத்தாள். அவளை அப்படிப் பார்த்தவுடன் லேசாகச் சிரிப்பு தோன்றி மறைய, "சரி" என்று போனைக் காதில் வைத்து பேச ஆரம்பிச்சான்.

"என்ன மச்சான், யோசிச்சிட்டியா?" என்று கேட்க, கண்மணியைப் பார்த்தவன் லேசாக நகர்ந்து வந்து, "டேய் நாதாரி, கொஞ்ச நேரம் அமைதியா போயிடு. எதை எதையோ யோசிக்கிறேன், ஒன்னும் புரியல. வந்ததுல இருந்து நான் எங்க இருக்கேன்னு எனக்கே தெரியல. அம்மா ஒரு மாதிரிப் பார்க்கறாங்க, ராகிமா ஒரு மாதிரிப் பாக்குறா…"

"அப்போ கண்மணி?"

"எல்லாரும் தான்டா… ஏன்டா, இப்படி என்னைச் சாகடிக்கிற? நான் எப்படா உன்கிட்ட வந்து அவளை லவ் பண்றேன்னு சொன்னேன்?"

"டேய் மச்சான், இப்பயும் சொல்றேன். நீ லவ் பண்ற சரியா?" என்று விட்டு வைத்து விட்டான்.

"என்ன ஆச்சு? டிரஸ் கூட சேஞ்ச் பண்ணாம அப்படியே உக்காந்து இருக்கீங்க?" என்று கேட்டாள்.

"ஒன்னும் இல்லையே" என்று வெளியில் வந்தான்.

அதன் பிறகு, ராகினியிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தான். ஆனால், கண்மணியிடம்தான் அவனது பார்வை இருந்தது. பத்மா அதைப் பார்த்தவர் சிரித்துக் கொண்டே அவனிடம் சிறிது சிறிதாக மாற்றம் உண்டாவதைக் கண்டார்.

‘ஆண்டவா, சீக்கிரம் இருவரும் ஒன்று சேர வேண்டும்' என்று எண்ணிக் கொண்டார். அப்போது கமலி கண்மணிக்கு போன் செய்து இருந்தாள்.

"என்னடி, வீட்டுக்கு வந்து இருக்கீங்க, ஏன் என்னப் பார்த்துட்டுப் போக முடியாதா?"

"நான் தினமும் தான உன்னக் காலையில பாக்குறேன். இன்னைக்கு அவரோட வந்தோம், என் பைக் பஞ்சர் அதான்…"

"அதனால தான் நானும் கேட்கிறேன். தினமும் நீயும், ராகினியும் தான வருவீங்க. இன்னைக்கு அண்ணனோட வந்திருக்க…"

"அங்க அத்தை தனியா இருப்பாங்க இல்ல, அதனால தான் உடனே கிளம்பிட்டேன்."

"ஓ! மேடம் இப்போ ரொம்ப குடும்ப இஸ்திரி ஆயிட்டீங்க போல, சொல்லவே இல்ல." என்று புன்னகைக்க,

"அப்படி எல்லாம் இல்ல. என்ன இருந்தாலும் உங்க அளவுக்கு வருமா அ..அண்ணி.….." என்று அந்த அண்ணியில் அழுத்தம் கொடுத்து அவளை வம்பு இழுக்க, போன் ஸ்பீக்கரில் இருந்ததால்,

"என்ன இருந்தாலும் உன் அளவுக்கு வருமா கமலி, சொல்லு… எல்லாம் உன்னோட ட்ரெயினிங் தான… நீதான உன்னோட நாத்தனாருக்குக் குடும்பப் பொறுப்பை எப்படிக் கவனிக்கணும் என்று சொல்லித் தர வாத்தியார்" என்று இந்தப் பக்கம் வினோத் கமெண்ட் பண்ண,

"என்ன இன்னைக்குப் புருஷனுக்கும், பொண்டாட்டிக்கும் பொழுது போகலையா? என்ன வச்சு கமெண்ட் பண்ணிட்டு இருக்கீங்க, ஆள் ஆளுக்கு மாத்தி மாத்தி. இதுல என்னோட சேர்த்து அவளையும் கலாய்க்கச் செய்றீங்க" என்றாள் புன்னகையுடன் கமலி.

“நீங்க தோழிகள் இரண்டு பேரும் எவ்ளோ பெரிய ஆளு, உங்களப் போய் கலாய்க்க முடியுமா?" என்று முறுவலிக்க, அருகில் இருந்த பேனாவைத் தூக்கி அவன் மேல் போட்டவள், "அமைதியாவே இருக்க மாட்டீங்களா?” என முறைக்க,

"என்ன கண்மணி, எங்க அண்ணனை வெளுத்து வாங்கறது போலத் தெரியுது?" என்று கமலி அந்தப் பக்கம் மென்னகையுடன் கேட்க,

"ஆமா, வா உங்க அண்ணனுக்கு வக்காலத்து வாங்கிக்கிட்டு… உன்கிட்ட மாட்டிகிட்டுத் தினமும் எங்க அண்ணன் வாங்காத அடியா, உதையா?” என்று கண்மணியும் பேச்சுக்குப் பேச்சு வாதாட,

அப்போது வினோத், "ஏய், ஏய் நிறுத்துங்க, நிறுத்துங்க… உங்க ரெண்டு பேத்துக்கும் இப்படி எல்லாம் கூட வருமா?"

"எப்படி?" என்று இருவரும் ஒரே போல் கேட்க,

"இல்ல, ஜாலியா ஒருத்தங்கள ஒருத்தங்க கலாய்ச்சுப் பேசுறீங்களே, அதான்…" என்று இழுத்தான்.

"ஏன்? எங்க ரெண்டு பேரையும் பார்த்தா சண்டைக்காரி போலவா தெரியுது?"

"இல்ல தான். இருந்தாலும், நாத்தனார், அண்ணி இல்லையா?

"ஓ! அதுக்காக டிவில காமிக்கிறது போல எந்த நேரமும் நாத்தனாரும், அண்ணியும் முடியைப் பிடிச்சுப் பிச்சுக்கிட்டு இருக்கணும்னு நினைச்சிட்டீங்களோ?"

"நான் கூட இப்படித்தான் நினைச்சேன். உனக்கு நாத்தனார் கெட்அப் சரி இல்ல கண்மணி… நாத்தனாரா உன்னோட அண்ணி கமலியைக் கொடுமை பண்ணத் தெரியல. அதே தான், கமலி உனக்கும். உனக்கு அண்ணி கெட்டப் சரியில்லை. அண்ணியா வீட்ல இருக்க நாத்தனாரை மிரட்டி வேலை வாங்கத் தெரியல" என்று இரு பக்கமும் சேம் சைட் கோல் போட,

"சாரி மணி, நான்தான் எங்க அண்ணன் ரொம்ப நல்லவரு, வல்லவரு, அமைதியான குணமுடையவர்னு நினைச்சேன். நமக்குள்ளே சண்டையைத் தூண்டி விட்டு, சிண்டு முடிச்சு விடுற வேலை பாக்குறாரு. நீ அவரை அடிக்கிறதுல தப்பே இல்ல. நீ உன்னோட வேலையை கன்டினியூ பண்ணு. நாளைக்கு எங்க அண்ணன் நல்லா இருந்தா போன் பண்ணி ஒரு வார்த்தை சொல்லு…" என்று விட்டு போனை கட் செய்து இருந்தாள்.

போன் வைத்துவிட்டு கண்மணி, அவனது கழுத்தை நெரிப்பது போல் வந்தவள், 'கொன்றுவேன்' என்று சைகை செய்தாள்.

சிறிது நேரம் கமலியிடம் பேசியதின் விளைவால் கண்மணியிடம் பழைய துள்ளல் குணம் வெளிப்பட ஆரம்பித்திருந்தது. அவளைப் பார்த்துப் புன்னகைத்து விட்டு, 'அவள் பேச்சுக்குப் பேச்சு வாதாடிச் சிரித்து ரொம்ப நாள்களாகிறது' என்று உணர்ந்தவன், அமைதியாகக் கண்மணியின் மடியில் வந்து படுக்க இங்கு கண்மணிக்கு தான் உள்ளுக்குள் உதறியது.

தானாக அவளது கை அவனது தலையைக் கோதியது.

இருந்தாலும், உள்ளுக்குள் ஒரு ஆண்மகனின் நெருக்கம் ஏதோ செய்யத்தான் செய்தது.
 
Top