kani suresh
Moderator
கண்மணி நெளிந்து கொண்டே, "வினோ, எனக்கு ஒரு மாதிரி இருக்கு. ப்ளீஸ் எழுந்திடுங்க" என்றாள். கொஞ்ச கொஞ்சமாக தான் இவளை மாற்ற வேண்டும். ஒரே நாளில் எதுவும் மாறிவிடாது என்பதால், அமைதியாக அவளிடம் இருந்து எழுந்து கொண்டான்.
நாள்கள் அழகாக நகர்ந்தது. தினமும், வினோத் அவளைச் சீண்டிக் கொண்டே இருந்தான். தன் மகளுடன் சேர்ந்து ஏதாவது சேட்டைகளைச் செய்து கொண்டு, அவள் செய்யும் ஒவ்வொரு செயலையும், அவளையும் ரசித்தான்
'தன் நண்பன் சொன்னது போல், இவளை நாம் நேசிக்க ஆரம்பித்து விட்டோமோ?' என்று கூடப் பலவாறு யோசித்தான். அவனது உள்மனம் ஆம் என்றாலும், ஏனோ அதை அவனால் உணர முடியாமல், நாள்களை அமைதியாகக் கடத்தினான். அப்படி அவனுக்குள்ளையே அவன் கண்ணாமூச்சி ஆட்டம் நடத்திக் கொண்டிருக்கும் வேளையில், அவனுக்கு மூன்று நாள்கள் வெளியூர் சென்று வேலை முடித்தாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
அப்போது, "நான் இந்த ப்ராஜெக்ட்டுக்குச் செல்லவில்லை. வேற யாராவது அனுப்பி வையுங்கள்" என்று கேட்க,
"என்னப்பா, என்ன நினைச்சுட்டு இருக்க வினோத்? ஒரு வேலை வைத்தால், இப்படி முடியாதுன்னு தட்டிக் கழிக்கிற பழக்கமெல்லாம் உனக்கு இல்லையே?" என்று எம்டி கேட்க ஒரு நிமிடம் கண்ணை மூடித் திறந்தவன், ஏனோ இத்தனை நாள்கள் வெளியூர் பயணம் என்றால், இன்னும் கொஞ்சம் அமவுன்ட் வரும் என்று யோசிப்பவனுக்கு இப்பொழுது மூவரையும் விட்டுச் செல்ல மனம் ஒரு மாதிரியாகப் பிராண்டியது.
மூவரையும் என்று சொல்லிவிட முடியாது. அவன் மனசாட்சியே அவனைக் கேள்வி கேட்டது.
'இதற்கு முன்னாடி சிறுபிள்ளையையும், வயசான அம்மாவையும் விட்டுட்டுப் போகாமல் இருந்திருக்கயா?' என்று. அவனுக்கும் புரிகிறது. எனினும் திருமணத்திற்குப் பிறகு, கண்மணியை விட்டு மூன்று நாள்கள் வெளியே தங்க வேண்டிய சூழ்நிலை. இதுவரை அவனும், கண்மணியும் கணவன் மனைவியாக அன்னியோன்யமாக வாழ்கிறார்களா? என்று கேட்டால் தெரியவில்லை. நல்ல நண்பர்கள் என்பதையும் தாண்டி அவன் மனதுக்குள் சிறு சிறு பூகம்பத்தையே அவ்வப்போது ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கிறாள். வினோ முழுவதுமாக அவள் வசம் சாய்ந்து விட்டான் என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் அவள் ராகினிக்காகவும், பத்மாவிற்காகவும் செய்யும் ஒவ்வொரு செயலிலும், தன்னுடைய நலனிலும் எந்த அளவிற்கு ஈடுபாடோடு செய்கிறாள் என்பதை இந்த நொடிவரை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான்.
வேலைக்குச் சென்று வந்த அசதியில் வேலை முடியவில்லை என்றால் கூட, "வினோ, இதை நீங்க செஞ்சுடுவீங்களா? இப்ப எனக்கு டைம் இல்ல, என்னால முடியல" என்று நேரடியான அவளின் ஒவ்வொரு பேச்சும், செயலும் அவனை ரொம்பவே ஈர்த்தது என்று தான் சொல்ல வேண்டும். இல்லை என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. ஒன்றும் புரியாமல் யோசனையில் இருந்தான்.
‘ஆனால், இப்பொழுது நான் சென்றாகதான் வேண்டும். பணத்தையும் தாண்டி எங்களது நல்வாழ்விற்காக. என் மனதில் அவள் தான் இருக்கிறாள் என்பதை நான் உணர்வதற்கும், அவள் மனதில் நான் இருக்கிறேன் என்பதை அவளுக்கு உணர வைக்கவும், இந்த இடைவெளி இருவருக்கும் தேவை' என்று யோசித்தான்.
அதே யோசனையுடன் கமலியைப் பார்க்கச் சென்றான். கமலிக்கு ஒன்பதாவது மாதம் தொடங்கி இருந்த காரணத்தினால், வேலைக்குச் செல்ல முடியாமல் விட்டு இருந்தாள். நேராக கண்மணியின் வீட்டிற்குச் சென்றான். மாப்பிள்ளை என்பதால் ஏகபோக வரவேற்பு தான். கமலி அவனை வரவேற்று உபசரித்து, ஓர் இடத்தில் உட்காராமல் அலைந்து கொண்டு இருக்க,
"இந்த மாதிரி நேரத்தில், எதற்கு ஓடியாடி வேலை செய்யற கமலி, ஓர் இடத்தில் அமைதியாக உட்காரலாம் இல்ல"
"அண்ணா, ஒரே இடத்தில் உட்கார்ந்து இருக்க முடியல. வேலை செஞ்சு பழகின உடம்பு. அது மட்டும் இல்லாம சின்னச் சின்ன வேலை எல்லாம் செய்யணும். அப்போ தான் சுகப்பிரசவம் ஆகும்" என்றாள் புன்னகையுடன்.
"ரொம்பத் தெளிவா தான் இருக்க" என்று முறுவலித்தான்.
"சரி அண்ணா, என்ன இந்த நேரத்துல வந்து இருக்கீங்க?".
அவன், "ஏன் நான் இங்க வரக் கூடாதா கமலி" என்க,
"அண்ணா, இது உங்க பொண்டாட்டியோட பொறந்த வீடு. நீங்க எப்ப வேணாலும் வரலாம், போலாம். ஆனா, இப்படி வேலை நேரத்தில அதுவும் நீங்க மட்டும் தனியா வந்து இருக்கீங்களே,எதுவும் விஷயம் இல்லாமல் சாதாரணமா வந்து இருக்க மாட்டீங்க. அதனால தான், எதுக்காக வெட்டியா பேசணும். நேரா விஷயத்துக்கு வந்துடலாம் எனக் கேட்டேன்" என்றாள்.
அவளைப் பார்த்துப் புன்னகைத்து விட்டு, "அது ஒன்னும் இல்ல கமலி, உன்னப் பார்த்துக் கொஞ்சம் பேசிட்டுப் போலாம்னு வந்தேன்."
கமலி தனது அத்தை, மாமாவைப் பார்த்தாள்.
இருவரும், “சரிப்பா… நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க. எங்களுக்குக் கொஞ்சம் அசதியா இருக்கு. கொஞ்சம் படுத்து எழுந்தா தேவலாம்." என்று விட்டு எழுந்து கொண்டார்கள்.
கமலி வினோத்தைப் பார்த்து உதட்டில் புன்னகையைத் தவழ விட்டாள்.
"உடம்புக்கு எப்படி இருக்கு?" என்று கமலியின் உடல் நிலையைப் பற்றிச் சிறிது நேரம் விசாரித்தான்.
"அண்ணா, வந்த விஷயத்தைச் சொல்லுங்க" என்று அவள் நேரடியாகக் கேட்க, "எனக்கு வேலை விசயமா மூணு நாளைக்குக் கொஞ்சம் வெளியே போக வேண்டி இருக்கு கமலி, கண்மணியைப் பார்த்துக்கோங்க" என்றான். அவன் அவ்வாறு சொன்னவுடன் கமலிக்குச் சிரிப்பு வந்துவிட சிரித்து விட்டாள்.
"அவ என்ன சின்னப் புள்ளையா? அவள வேற ஒருத்தவங்க பார்த்துக்க?”
"இல்ல, மூணு நாள் கொஞ்சம் வெளியே தங்க வேண்டி இருக்கு இல்லையா, அதனால தான்"
"ஏன்? இதுக்கு முன்னாடி நீங்க வேலை விஷயமாக வெளியே போனது இல்லையா?"
"போயிருக்கேன், ஆறு மாசத்துக்கு ஒரு டைம் போவேன்."
"அப்பலாம் நீங்க பத்மா அம்மாவையும், ராகினியையும் விட்டுட்டுப் போறீங்கனு யோசிச்சு இருக்கீங்களா?"
"யோசிச்சிருக்கேன். அதுவும் ஸ்டார்ட்டிங்ல ராகினி சின்னப்புள்ளையா இருக்கும்போது நிறைய யோசிச்சிருக்கேன். அப்போ பிரண்டு அகிலனோட வைஃப் கூட வந்து இருப்பாங்க."
"இப்போ தான் அம்மா கூடத் துணைக்கு கண்மணி இருக்காளே அண்ணா, அப்புறம் என்ன? அவ ஒன்னும் சின்னப்புள்ள இல்லையே. அவளுக்கு அவளையும் பார்த்துக்கத் தெரியும். அம்மா, ராகினியையும் பார்த்துக்கத் தெரியும்." என்று சிரித்தாள்.
"இருந்தாலும், நீ பார்த்துக்கோ… அப்போ அப்போ போன் பண்ணிப் பேசு"
"அண்ணா, நான் ஒன்னு கேட்கட்டா, தப்பா எடுக்க மாட்டீங்களே?" என்று அவனது கண்களை நேருக்கு நேர் பார்த்துக் கேட்டாள்.
அவன் அமைதியாக இருக்க, "அவளை விட்டுட்டுப் போக உங்களுக்கு மனசு வரலையா?" என்று கேட்டு விட்டு அவனது கண்களை தான் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"சொல்லுங்க அண்ணா, நீங்க அவளை விரும்ப ஆரம்பிச்சுட்டீங்களா? அது உங்களுக்குத் தெரியலையா? இல்ல, அதை உங்களால ஏத்துக்க முடியலையா?" என்றாள் கேள்வியாக.
'தன்னுடைய விருப்பம் வெளிப்படையாகவே ஒரு சில நேரங்களில் வெளிப்படுகிறது' என்பதை அவனுமே உணர்ந்து இருக்கிறான். தன்னுடைய செயல்களே காட்டிக் கொடுக்கிறது என்பதையும் உணர்ந்தவன் சிரித்துக் கொண்டே, "நான் எனக்குத் தெரியலன்னு சொல்லல."
"அப்போ உங்களால ஏத்துக்க முடியலையா? இல்ல, நீங்க இன்னும்…" என்று நிறுத்திவிட்டு அமைதியானாள்.
லேசாகச் சிரித்தவன், சுற்றி முற்றிப் பார்த்தான்.
"அத்தையும், மாமாவும் ரூம்ல இருக்காங்க. வெளியே வர மாட்டாங்க. இல்ல, நம்ம ரூம்ல போய் பேசினாலும் பேசலாம்."
"அப்படி எல்லாம் இல்ல. இருந்தாலும், யாராவது இருக்காங்களா பார்த்தேன். வேற ஒன்னும் நீ யோசிக்கிற அளவுக்கு எல்லாம் இல்ல கமலி. நான் கண்மணியை விரும்புறேன், ஓகேவா… அதை நான் அக்செப்ட் பண்ணிக்கிறேன். நீ கேக்க வந்த விஷயம் ராகி அம்மாவைப் பத்தி இல்லையா?" என்றவுடன், கமலி சத்தமாகவே சிரித்தாள்.
"ஏன், கமலி சிரிக்கிற?".
"அண்ணா, அன்னைக்கு அம்மா வந்தப்ப தன்னுடைய மருமகனு சொன்னாங்க. இன்னைக்கு நீங்க ராகி அம்மானு சொல்றீங்க. இதுவரைக்கும் அவங்க பேரைக் கூட நீங்களும் சரி, அம்மாவும் சரி, ஏன் ராகினி வாயிலிருந்து கூட நான் கேட்டது இல்லை. அவங்க பேரு என்னன்னு கூட இதுவரைக்கும் நீங்க சொல்லல. இன்னும் சொல்லப் போனால், அவங்க போட்டோ கூட நான் வீட்ல பார்க்கல…"
"இல்ல கமலி, போட்டோ வீட்ல இல்ல. ராகிமா பார்த்து ஃபீல் பண்ணக் கூடாதுன்னு அப்பவே எடுத்துட்டோம். இன்னும் சொல்லப் போனால், எங்க வீட்ல இருந்த போட்டோஸ் கூட ராகி தாத்தா வந்து எடுத்துட்டுப் போயிட்டாரு" என்றவுடன் அமைதியாகப் பார்த்தாள்.
அவளது கையில் அழுத்தம் கொடுத்துப் பிடித்தவன், "அவ பேரு இளவரசி. அவளை நான் லவ் பண்ணினேனா என்று கேட்டா, என்கிட்ட பதில் இல்லை. வீட்ல பார்த்து வச்ச கல்யாணம்தான் எங்களோடது. அம்மா சொல்லி இருப்பாங்க. கல்யாணம் ஆகி மொத்தமே ஒரு ஒன்பது மாசம் தான் நான் அவ கூட வாழ்ந்தேன். அதுக்கப்புறம் அவ இந்த உலகத்திலேயே இல்ல. ராகிமாவைப் பெத்துக் கொடுத்துட்டு இந்த உலகத்தை விட்டுப் போயிட்டா.
அதுக்காக அவ மேல எனக்கு எதுவுமே இல்லைன்னு சொல்ல முடியாது. மனைவியா ஒரு உணர்வு வரும் இல்ல, ஹஸ்பண்டுக்கு வைஃப் மேலயும், வைஃப்க்கு ஹஸ்பண்ட் மேலயும். தன்னுடைய துணை இவங்கதான் என்ற உணர்வு. அந்த உணர்வு மட்டும்தான் எனக்குள்ள இருந்துச்சு. எனக்கு அதை மட்டும்தான் அவ கொடுத்து இருந்தா. எப்படிச் சொல்ல எங்களுக்குக் கல்யாணம் ஆன அடுத்த மாசமே குழந்தை தங்கிடுச்சு.
'ஆசை 60 நாள், மோகம் 30 நாள்' பழமொழி சொல்லுவாங்க இல்ல. அந்தக் கணக்கா தான் எங்க லைஃப் இருந்துச்சு. குழந்தை வந்த உடனே குழந்தையைப் பற்றிய நினைப்பு, குழந்தையின் வளர்ப்பு இப்படித்தான் எங்கள் இருவரது எண்ணங்களும் சென்றது. எனக்கு என்ன வேணுமோ அதைப் பார்த்துப் பார்த்துச் செஞ்சா தான். இருந்தாலும் எங்களோட லைப் நார்மலா தான் போச்சு. மத்தபடி அவ மேல லவ், அஃபெக்ஷன் இந்த மாதிரிக் கேட்டனா இருந்துச்சு. ஆனா, அது என்னோட துணை அப்படின்ற மாதிரியான உணர்வு மட்டுமே…
ஆனா கண்மணி எங்க வீட்டுக்கு வந்து இத்தனை நாள்களில் என்னோட மனநிலையே வேறு. உனக்கே தெரியும், நான் இளவரசியோட கண்மணியை கம்பேர் பண்ணல. எனக்கே புரியல, கண்மணி எனக்குள்ள எப்படி வந்தா எந்த அளவுக்கு ஆழப் பதிஞ்சிருக்கா என்று… ஆனா, இப்போ நான் கண்மணியோட சிறு சிறு அசைவையும் ரசிக்கச் செய்யறேன். எனக்கே தெரியாம, எனக்குள்ள கண்மணி கொஞ்சம் கொஞ்சமா வர ஆரம்பிச்சிட்டா… இப்போ முழுசா என்னை ஆக்கிரமித்து இருக்கிறது கண்மணியோட நினைவுகளும், அவளும் மட்டும்தான்.
அம்மாவுக்கும், ராகிக்கும் அவ பண்ற ஒவ்வொரு விஷயமும் என்னை ரொம்பவே பாதிக்குது. எதையும் அவ எந்த ஒரு காரணத்தோடும் செய்யல. என் மனசுல இடம் பிடிக்கனும்னு நினைக்கல. அவ அவளா இருக்கா...
அதுவே என்னை அவ பக்கம் இழுத்து இருக்குன்னு சொல்லணும். தினமும் ராகிக்குக் கதை சொல்லும் போது நான் சோர்ந்து இருந்தா, எனக்கும் சேர்த்துக் கதை சொல்லி தான் தூங்க வைக்கிறாள். உண்மையா கண்மணி என் மனசு ஃபுல்லா இருக்கா. இதுக்கு மேல நான் சொல்ல ஒன்னும் இல்ல கமலி" என்று விட்டு அவளது முகத்தைப் பார்த்தான் அமைதியாக.
"அவகிட்ட நீங்க உங்க விருப்பத்தைச் சொல்லிட்டீங்களா?"
"அதற்கான நேரம் இன்னும் வரல நினைக்கிறேன் கமலி"
"புரியல அண்ணா"
"நான் என்னோட விருப்பத்தைச் சொல்லி எனக்காக, அவ என்னை ஏத்துக்கக் கூடாது. அவளுக்காய் மனசளவுல நான் அவளோட புருஷன் என்ற உணர்வும், என் மேல நேசமும் தன்னால துளிர் விடனும்னு ஆசைப்படுறேன்."
"சரி அண்ணா, நீங்க சொல்றத நான் ஏத்துக்குறேன். அதுக்கான ஸ்டெப் எடுத்து வைக்கிறதப் பத்தி யோசிச்சு இருக்கீங்களா?"
அவன் அவளை அமைதியாக உற்று நோக்க,
"பிஸிக்கல் ரிலேசன்ஷிப் அப்படின்றதைத் தாண்டி, நீங்க தான் அவ புருஷன் என்ற உணர்வை அவளுக்குத் தருவதைப் பத்தி யோசிச்சு இருக்கீங்களா? அவளும் உங்களை விரும்ப ஆரம்பித்திருக்கலாம். அதை நீங்க உணராமல், இல்லை தெரிஞ்சுக்காம இருந்தா, இது போலக் கேட்கிறேன்.” என்று வெளிப்படையாகவே பேச,
லேசாகச் சிரித்தவன், "நான் என்னுடைய லவ்வை உள்வாங்கிட்டு இருக்கேன். இன்னும் என் லவ்வை அவளுக்கு முழுசாய் தரணும்னு நினைச்சிருக்கனே தவிர, அவகிட்ட இருந்து லவ் எனக்கு இப்போதைக்கு வேணும்னு எதிர்பார்க்கல. அவகிட்ட இருந்து அன்பு, அக்கறை எல்லாம் கிடைக்குது. ஆனா, எனக்கான நேசம் அவகிட்ட இருக்கா, அப்படின்றத நான் பொறுமையா தான் தெரிஞ்சுக்கணும். அவளுக்குக் கொஞ்சம் டைம் கொடுக்கணும் இல்ல கமலி. நீ சொன்ன மாதிரி தான்…"
"அண்ணா, நான் சொன்ன டைம் வேற. நீங்க அவளுக்குக் கொடுக்கணும்னு நினைக்கிற டைம் வேற… நீங்க யோசிக்கிறது சரின்னு தோணுதா உங்களுக்கு?"
"தெரியல. ஆனா இந்த மூணு நாள் என்னை அவளுக்கும், அவளுக்கு என்னையும் உணர வைக்க உதவும்னு நம்புறேன். அதுக்காகவே இந்த ட்ரிப் எனக்கு ஓகேன்னு படுது" என்றான்.
சத்தமாகச் சிரித்த கமலி, "நல்ல யோசனை. நீங்க ஊருக்குப் போகறதுக்குத் தேவையான எல்லா வேலையும் செய்யுங்க. அதுக்கப்புறம் நடக்கிறது நடக்கட்டும். அவ மனசுல நீங்க இருந்தா அவளே உங்களுக்கான நேசத்தை உங்ககிட்ட வெளிப்படுத்துவா"
வினோத்தும் கண்ணை மூடித் திறந்தான்.
"சரி" என்று விட்டுத் தன் வீடு நோக்கிக் கிளம்பி விட்டான்.