kani suresh
Moderator
கமலி போகும் வினோத்தை அமைதியாகப் பார்த்தவள் மனதிற்குள், 'உங்களுக்கு அவமேல எந்த அளவுக்கு லவ்வு இருக்குன்றதையும், அவளுக்கு உங்க மேல லவ் இருக்கா இல்லையான்றதையும், இந்த மூணு நாள் பிரிவு இரண்டு பேத்துக்குமே உணர்த்தும் நம்புறேன்' என்று எண்ணினாள்.
வீட்டுக்குச் சென்ற வினோ, மாலை வேலை முடிந்து ராகினியும், கண்மணியும் வந்தவுடன் மூவரிடமும், தான் இன்று இரவு வேலை விஷயமாக வெளியூர் செல்வதாகவும், மூன்று நாள்களுக்குப் பிறகுதான் வருவதாகவும் சொல்ல, "இதெல்லாம் முன்கூட்டியே சொல்ல மாட்டாங்களா?" என்று கண்மணி முதல் ஆளாகக் கேட்டாள்.
அவளைத் திரும்பிப் பார்த்தவன், "எப்ப வேலை வருதோ, அப்பதான சொல்லுவாங்க?"
"இன்னைக்குப் போகணும் என்று இன்னைக்கு தான் சொல்லுவாங்களா?"
"இல்லை, எனக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி சொல்லிட்டாங்க. இன்னைக்குதான் கன்ஃபார்ம் பண்ணேன்" என்றவுடன் அவனைக் குறுகுறுவென்று பார்த்து முறைத்துவிட்டு கிச்சனிற்குள் நுழைந்து கொண்டாள்.
பத்மாவிற்கு தான் லேசாகச் சிரிப்பு. ராகினி கூட வாய் பொத்திச் சிரித்தவள், "அப்பா நீங்க என்கிட்டயும் சொல்லவே இல்ல."
பத்மாவைத் திரும்பிப் பார்த்தான். பத்மாவிடம் இரண்டு நாள்களுக்கு முன்பாகவே சொல்லி இருந்தான். அவர் கூட, "இப்போதுதான் உன் மனது அவள் பக்கம் கொஞ்சம் கொஞ்சமாகச் சாய ஆரம்பித்திருக்கிறது. இந்த நேரத்தில் தான் நீ வெளியூர் செல்ல வேண்டுமா? அப்படி ஒன்றும் நீ கண்மணியை இங்கு விட்டுவிட்டுச் செல்ல வேண்டாம். அப்படிச் சென்று ஆக வேண்டும் என்றால் அப்படிப்பட்ட வேலை போனாலும் பரவாயில்லை. வேற வேலை பார்த்துக் கொள்ளலாம்" என்றார்.
"நீங்க சொன்னது தான்மா. ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுக்கிறது, பக்கத்துல இருந்து நான் அவளைப் புரிஞ்சுகிட்டேன். ஆனா அவ என்னைப் புரிஞ்சிக்க கொஞ்சம் நான், அவளை விட்டு விலகி வெளியே போயிட்டு வந்தால் நல்லதுன்னு எனக்குத் தோணுது." என்று தன் தாயிடம் நேரடியாகவே சொல்லியிருந்தான்.
அவனது மனதை முழுமையாக வெளிப்படுத்திய பிறகு, தன் மகனின் தோளில் சாய்ந்தவர், “வினோ, உண்மையாவா?" என்றார்.
"அதிசயமாகக் கேட்கிற மாதிரிக் கேக்குறீங்க? ஏன், என் செயலும், நடவடிக்கையும் உங்களுக்குக் காட்டி கொடுக்குது தானே"
"இருந்தாலும், உன் வாயால கேட்கும் போது…" என்றார்.
"சரிமா, ஒத்துக்குறேன். எனக்குக் கண்மணியைப் புடிச்சிருக்கு. என் பொண்டாட்டியா ஏத்துக்க ஆரம்பிச்சுட்டேன். ஆனா, அதுக்காக நீங்க என்கிட்ட…” என்று விட்டு நிறுத்த,
"எனக்குப் புரியுதுடா… புருஷன், பொண்டாட்டியா நீங்க உங்க வாழ்க்கையைத் தொடங்குவது உங்க விருப்பம். மனசளவுல ரெண்டு பேரும் சீக்கிரம் இணைஞ்சாலே எனக்குப் போதும்டா. அதைவிட வேற என்னடா எனக்கு வேணும். நீ எடுத்த முடிவுல உறுதியா இருந்தா சரி. ஆனால், ராகி நீ முன்ன வெளிய போகும் போது சின்னப் புள்ளையா இருந்தா, இப்ப ரொம்ப விவரம் தெரிஞ்சு ரொம்பப் பேசுறா, சமாளிக்கிறது கஷ்டம் பா"
"அதான் கண்மணி இருக்காளே மா, அவ பார்த்துப்பா, சமாளிச்சிடுவா. அவ கிட்ட இப்போ பேசினா, எதையாவது பேசி என்னைப் போக விடாமல் பண்ணாலும் பண்ணிடுவா"
"ஆமாண்டா, அதை தான் பண்ணுவா ராகி குட்டி" என்றார்.
இன்று தன் தாயைத் திரும்பிப் பார்த்தவனுக்கு அவை நினைவில் வர, "சடனாதான் சொன்னாங்க. அப்பா அப்போ கன்பார்மா போகலாமா, வேண்டாமானு இருந்தேன். இன்னைக்கு தான் போயே ஆகணும்னு சொன்னாங்க. அதனால தான்" என்றவுடன் கண்மணி கிச்சனிலிருந்து குரல் கொடுக்க, "வரேன் மா" என்று விட்டு வேகமாக ஓடினாள்.
அவளை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு, "அப்பா வேலை விஷயமா தான போறாங்க. அப்படிப் போகும்போது அடம் பிடிக்கலாமா? போகக் கூடாதுன்னு சொல்லக் கூடாதுடா தங்கம். அப்பா வேலை விஷயமா போறாங்க, போயிட்டு இரண்டு நாள்ல வந்துருவாங்க சரிங்களா? ஏன் அம்மா கூட இருக்க ராகிமாவுக்கு விருப்பம் இல்லையா? பாட்டி இருக்காங்க, கவின் குட்டியை வேணா இங்க வர வைப்போமா?" என்று கேட்டாள்.
"வேணாம் மா. அவனுக்கு குட்டிப்பாப்பா வரப்போகுதுன்னு ரொம்ப ஆசையா இருக்கான். டெய்லியும் குட்டிப்பாப்பா வரும், ஜாலியா இருக்கும்னு சொல்லிட்டு இருப்பான். அவன் அத்த கூடவே இருக்கட்டும்" என்று புன்னகைத்தாள்.
"சரிடா தங்கம், விடுங்க. அதான் பாட்டி இருக்காங்க, நான் இருக்கேன். அப்புறம் என்ன ராகி குட்டிக்கு" என்று சமாதானம் செய்து கொஞ்ச அவளும் சமாதானமானாள்.
வெளியில் வந்த ராகினி, "சரிப்பா, நீங்க பார்த்துப் போயிட்டு வாங்க. நான் அம்மா கூடவும், பாட்டி கூடவும் சமத்தா இருக்கேன்."
"என் பொண்ணு செல்லக்குட்டி, சமத்துக்குட்டி. ஆனா, நான் சொன்னா கேட்க மாட்டா… இப்ப எல்லாம் வரவர அம்மா செல்லம்"
"ஆமாம், ராகி குட்டி அம்மா செல்லம்தான்" என்று வேகமாக ஓடிச் சென்று வெளியில் வந்த கண்மணியின் காலைக் கட்டிக்கொள்ள, "ஆமான்டி தங்கம், நீங்க அம்மா செல்லம்தான்" என்று தூக்கிக் கொஞ்சி விட்டு அவனை முறைத்து விட்டு, “என்னென்ன வேணும் சொல்லுங்க, எடுத்து வைக்கிறேன்.” என்று கேட்டாள். "எத்தனை மணிக்குக் கிளம்பனும்?" என்று கேட்க,
அவளது முகம் என்னவோ சாதாரணமாக தான் இருந்தது. குரலில் அத்தனை கோபம். அவனுக்கு அவளது செயலில் சிரிப்புதான் வந்தது. பத்மா தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்பது போல் அமைதியாக இருந்தார்.
"கண்மணி, எனக்கு ஒரு மாதிரி இருக்கு. நான் கொஞ்சம் லேட்டா சாப்பிடுறேன். கொஞ்ச நேரம் ரூம்ல படுத்து இருக்கேன்" என்று விட்டுச் சென்றார். "பாட்டி எனக்குக் கதை சொல்றீங்களா? நானும் வரட்டா" என்று கேட்டாள் ராகி.
"பாட்டிக்கு அசதியா இருக்காம், நீங்க வாங்க அம்மா கூட. நான் கதை சொல்றேன்"
"ஒன்னும் இல்ல கண்மணி, நானே பார்த்துக்கிறேன். நீ பாரு" என்று விட்டு ராகினியைத் தூக்கிக் கொண்டு தன்னுடைய ரூமுக்குச் சென்று விட்டார்.
கண்மணி ரூமுக்குள் செல்ல, வினோத் மெதுவாகப் பூனை நடை இட்டு அவள் பின்னாடியே செல்ல வேகமாகத் திரும்பியவள், அவனை வெளிப்படையாகவே முறைத்துவிட்டு, "சாருக்கு, இரண்டு நாளைக்கு முன்னாடி தெரிஞ்சும் இப்பதான் சொல்ல முடியும் இல்லையா? இன்னும் மூணு மணி நேரம் கழிச்சுக் கிளம்புறீங்கன்னு அவ்வளவு தான் இல்ல…"
“அவ்வளவுதான், வேற என்ன?" என்றான் ஒற்றைப் புருவத்தை உயர்த்தி. கண்மணியால் பேச முடியவில்லை. வாய் குழறியது. "ஒ..ஒன்னும் இல்ல, என்ன வேணும் சொல்லுங்க, எடுத்து வைக்க…"
‘அப்பக் கூட வாயத் திறந்து போகாதீங்கனு சொல்லிடாத. சரியான அழுத்தக்காரி.’ என்று மனதுக்குள் எண்ணினான்.
"உங்ககிட்ட தான் கேட்கிறேன்."
"எனக்கு எடுத்து வச்சுக்கத் தெரியும்"
"அப்ப நீங்களே எடுத்து வச்சுக்கோங்க" என்று விட்டு வெளியில் செல்லக் கிளம்ப, அவளது கையை வேகமாகப் பிடித்து விட்டான்.
“என்ன வேணும் உங்களுக்கு இப்போ?" என்று எரிந்து விழுந்தாள்.
"சும்மா சொன்னா, அப்படியே போயிடுவியா? எடுத்து வை" என்று விட்டு குளியலறைக்குள் புகுந்தான்.
அவன் குளித்து முடித்து வரும்போது அவனுக்கு என்ன எல்லாம் தேவை என்று அனைத்தையும் எடுத்து வைத்தவள், "இது எல்லாம் ஓகேவா?" என்று ஒன்றுக்கு இரண்டு முறை கேட்டுவிட்டு பைக்குள் எடுத்து வைத்தாள். பிறகு நேரம் ஆவதை உணர்ந்து அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட,
அனைவரிடமும் ஆயிரம் பத்திரம் சொல்லிவிட்டு, பார்த்து இருங்க, பார்த்துக்கோங்க என்று சொல்லித் தன் அம்மாவின் கையில் அழுத்தம் கொடுத்தான்.
"ராகி மா, அம்மாவையும், பாட்டியையும் தொந்தரவு பண்ணக்கூடாது. சமத்தா இருங்க அப்பா வரும் வரை" என்று ராகினியின் நெற்றியில் இதழ் பதித்து விட்டு கண்மணியைப் பார்த்தான்.
அவள் அவனைதான் பார்த்துக் கொண்டிருந்தாள். 'இப்பொழுது அவளிடம் நம் உணர்வுகளைக் காட்டக்கூடாது. பொறுமையாக இருக்க வேண்டும்' என்று மனதிற்குள் எண்ணி விட்டு, "சரி கண்மணி, பார்த்துக்கோ" என்றான்.
'அம்மாவுக்கும், பிள்ளைக்கும் மட்டும் தான் ஆயிரம் பத்திரமா? எனக்கு எல்லாம் கிடையாதா? அப்போ நான் யாரோவா?' என்று மனதிற்குள் புழுங்கியவள் அவனையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவன் ஒரு தலையசைப்போடு பைக் அருகில் சென்று பைக் எடுப்பதற்கு முன்பு ஒருமுறை திரும்பிப் பார்த்தான். ராகினி கையசைக்க, பத்மாவும் தலையசைத்தார். கண்மணி அமைதியாக இருக்க, "கண்மணி…" என்று அழைத்தான்.
அவள் ராகினியைக் கீழே இறக்கி விட்டுவிட்டு, "என்ன?” என்று கேட்டுக் கொண்டே அவனது அருகில் வர,
"போகும் போது எதுக்கு நீ இப்படி மூஞ்சத் தூக்கி வச்சுட்டு இருக்க. சிரிச்சா தான் என்ன?"
"ஆமாம். நான் சிரிக்கலனா இப்போ உங்களுக்கு என்ன வந்தது? என்ன இருந்தாலும், உங்களுக்கு உங்க அம்மாவும், பிள்ளையும் மட்டும் தான் கண்ணுக்குத் தெரிஞ்சாங்க. நான் உங்க கண்ணுக்குத் தெரியல இல்ல. என்கிட்ட ஒரே ஒரு வார்த்தை, சரி நான் போயிட்டு வரேன்னு சொன்னீங்களா?"
"சரி, நான் போயிட்டு வரேன். அப்புறம் வேற என்ன சொல்லணும் கண்மணி"
"அது சரி, நான் யாரோ தான,,,” என்று முகத்தைத் திருப்ப,
திரும்பி தன் அம்மாவையும், மகளையும் பார்த்தான். இருவரும் தங்களையே பார்த்துக் கொண்டு இருக்க, "இங்குப் பாரு கண்மணி" என்றான். அவள் வேறு பக்கம் திரும்ப,
அவளது கையை மட்டும் பிடித்து இழுத்து, "இங்க என்னைப் பாருடி" என்றான். அவனது முதல் "டி" என்ற அழைப்பில் வேகமாகத் திரும்பி அவனைப் பார்த்தாள். அவளது கண்கள் லேசாகக் கலங்கி இருந்தது. கண்ணீர் இப்போதே விழுந்து விடுவேனா என்பது போல இருந்தது.
ஆனால், அதை வேகமாக உள்ளே இழுத்துக் கொண்டு, "என்ன?" என்று கேட்டாள்.
அவனது "டி" என்ற அழைப்பு நினைவில் வந்தாலும், அதைக் கேட்கும் நேரம் இதுவல்ல என்று எண்ணி விட்டு அமைதியாக, "சொல்லுங்க" என்றாள்.
"அம்மா பெரியவங்க, பாப்பா குழந்தை. அதனால மட்டும் தான்…"
"அப்போ எனக்கு எல்லாம் சொல்ல எதுவும் இல்லையோ?"
"சரிங்க மேடம், பார்த்து பத்திரமா இருங்க. போயிட்டு வரேன். சரியா?"
"இதைக்கூட நான் கேட்டு வாங்கணும்."
"என்னத்தமா கேட்டு வாங்குன நீ…” என்றான் ஒரு மார்க்கமாக.
"எதே!" என்று அதிர்ச்சியுடன் அவள் அவன் மீது பார்வையைப் பதிக்க,
அப்பொழுது அவனுக்கு போன் வர,
"சரி" என்றவன் போனை எடுத்துப் பேசிவிட்டு, "சரி கண்மணி, எதையும் யோசிக்காத. அம்மாவையும், பாப்பாவையும் பார்த்துக்கோ, உன்னையும் பாத்துக்கோ… சரியா? அங்க போய் டைம் இருந்தா பேசுறேன்… டைம் ஆயிடுச்சு, நான் கிளம்பனும். டைம் ஆயிடுச்சுன்னு போன் பண்றாங்க" என்று விட்டுத் தன் அம்மாவிடம் தலையசைத்து விட்டுக் கண்மணியும் சரி என்று தலையசைக்கத் திரும்பி அவளைப் பார்த்துக் கண் அடித்து விட்டு வண்டியை எடுத்துக் கொண்டு பறந்து விட்டான்.
'என்னைப் பார்த்துதான் கண்ணடித்தாரா?' என்று அதிர்ச்சி அவளுக்குள் இருந்தது. வேகமாக ஓடி வந்த ராகினி, "மா வாங்க, உள்ள போலாம். பனி பெய்து இல்ல" என்று சொல்ல,
"சரி வாடா தங்கம்" என்று அதிர்ச்சியில் இருந்து மீண்டு குழந்தையைத் தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள்.
"சரி அத்தை, நீங்க தூங்குங்க" என்று பத்மாவை ரூமுக்குள அனுப்பி வைத்துவிட்டு, அனைத்துக் கதவையும் சாற்றி விட்டுத் தங்களது ரூமுக்குள் சென்றாள். அதுவரை அமைதியாக இருந்த ராகினி ரூமுக்குள் சென்றவுடன் அப்பா புராணத்தைப் பாட ஆரம்பித்தாள்.
"என்னடா தங்கம், ஒரு நாள் கூட ஆகல. அப்பா கூட இருக்கும்போது அப்பாவைச் சீண்டிகிட்டே இருந்த. இப்போ அப்பா வேணும்னு அழுவுற"
"சும்மா நான் அப்பாவை விளையாட்டுக்கு தான் சீண்டினேன். அப்பா இல்லாம நான் எப்படி இருப்பேன்?" என்று அழ,
"தங்கம், ரெண்டு நாள்ல அப்பா வந்துடுவாங்க. அதான் உன்கூட அம்மா இருக்கேன்ல, பாட்டி இருக்காங்க" என்று சமாதானப்படுத்தி பல கதைகள் சொல்லிக் குழந்தையைத் தூங்க வைத்திருந்தாள்.
'ட்ரெயின் ஏறிட்டாரா? இல்லையானு தெரியல. ஒரு போன் கூடப் பண்ணல.' என்று ராகினியைத் தூங்க வைத்துவிட்டுத் தன் போனைத் தேடி எடுத்து வினோத்துக்கு அழைத்தாள். அவன் போன் நாட் ரீச்சபிள் என்று வந்தது.
'ஒரு போன் பண்ணிக் கூட சொல்ல முடியாதா?' என்று நினைத்து விட்டுப் படுத்து இருந்தாள். இத்தனை நாள்களாக உடன் இருந்த வினோத் இல்லாமல் தனியாக இருக்க ராகி போல், இவளுமே துவண்டு போனாள் என்று தான் சொல்ல வேண்டும். ‘ஒரு வார்த்தை முன்கூட்டியே சொல்லணும் என்று கூடத் தோணல. நான் அவ்வளவுதான், அப்போ நான் ராகிக்கு அம்மா மட்டும் தான. உங்களுக்கு எதுவும் இல்லையா?' என்று வருந்தினாள்.
அந்த நொடி அப்போதுதான் அவளது மனதிற்குள் மின்னல் வெட்டியது போல் அவளது வார்த்தைகளே வந்து சென்றது. அவளது மனசாட்சி கேள்வி கேட்டது. குழந்தைக்காக என்று தானே இங்கு வந்தாய்? நீ ராகிக்கு அம்மா தானே? அப்புறம் என்ன?’ என்று பலவாறு யோசித்தாள்.
மனசாட்சியிடமும் கேள்வி கேட்டாள். 'நான் அப்போ ராகினிக்கு அம்மா மட்டும்தானா? வினோவுக்கு எதுவுமே இல்லையா?' என்று. ‘அதை நீ தான் சொல்லணும்.’ என்று மனசாட்சி அவளிடம் கேள்வி தொடுக்க,
‘அ..அவர் அ..அவர்தான் எனக்கு எல்லாமே’ என்று திணறினாள். அவளது பதிலில் அதிர்ச்சியானாள். தன் மனசாட்சி கேள்வி கேட்கவும் வேகமாக மனதில் தோன்றியதைச் சொல்லி விட்டாள். ஆனால், அவளுக்கே அது அதிர்ச்சியாய் இருந்தது.
‘அப்போ, நான் அவரை விரும்ப ஆரம்பிச்சுட்டேனா? அவர் இல்லாமல் இனி என் உலகம் இல்லையா? கோபம் கூட வந்துச்சு, இப்போ போன் எடுக்கலன்னு.’ என்று எதை எதையோ யோசித்தாள். அந்த நேரத்தில் போன் ரிங் ஆனது.
அடித்துப் பிடித்து அவனாக தான் இருக்கும் என்று போனை எடுத்தாள். கமலியாக இருந்தது. போன் எடுத்து, "சொல்லு, என்ன இந்த நேரத்துல. ஏன் தூங்கலையா?” என்று கடுகடுவெனப் பேச, கமலிக்குச் சிரிப்பு தான்.
"எதுக்கு கண்மணி, இப்போ என்கிட்ட எரிஞ்சு விழுற?" என்றாள்.
"அவர் ஆபீஸ் விஷயமா வெளியூர் போயி இருக்காரு. வர 3 நாள் ஆகும்" என்றாள் மெதுவாக. "ஹும் எனக்குத் தெரியுமே. அண்ணா, சாயங்காலம் போன் பண்ணி எங்களுக்குச் சொன்னாரு."
"ஓ! உங்களுக்கு எல்லாம் சொல்ல முடியுது. அப்போ எனக்கு மட்டும் தான் சொல்ல முடியாதா"
"ஏன்? சொல்லாமலா கிளம்பினாரு"
"சொன்னார். இப்பதான் சொன்னாரு."
"ஓ! அப்புறம் எப்பச் சொல்லுவாங்க"
"ரெண்டு நாளைக்கு முன்னாடியே அவருக்குத் தெரியுமாம். அதைக் கூட என்கிட்டச் சொல்லல தெரியுமா?"
"அத உன்கிட்டச் சொன்னா மட்டும் இப்ப நீ என்ன பண்ணிடப் போற?"
"ஆமா, என்கிட்ட ஏன் சொல்லணும்? நான் யாரோ தான அவருக்கு. வை டி போன" என்று விட்டுக் கோபத்துடனே போனை வைத்திருந்தாள்.
கமலிக்கு லேசாகச் சிரிப்பு. அவளுக்கும் இப்பொழுது தோன்றியது. உண்மையாகவே கண்மணி மனசு இந்த மூன்று நாள்களில் மாறிவிடும் என்ற நம்பிக்கை கண்மணியின் பேச்சில் தெரிய வந்தது. அவளது தோளில் கைவைத்த சங்கர், ."என்ன?" என்று கேட்டான்.
"ஒன்றும் இல்லை" என்றாள்.
"மாலையில் இருந்து உன் முகம் சந்தோசமா இருக்கே, என்ன விஷயம்?"
"சொல்றேன், ஒரு அஞ்சு நாள் பொறுங்க"
"ஏதோ பண்ற"
சிரித்துக் கொண்டே அவனது தோளில் சாய்ந்து கொண்டாள்.
விடிய விடியக் கொட்டக் கொட்ட முழித்துக் கொண்டிருந்தாள் கண்மணி.
ஆனால், அவன் போன் செய்யவில்லை. இவள் போன் செய்தாலும் நாட் ரீச்சபிள் என்று வந்தது. காலை ஆனவுடன் அலாரம் அடிக்கக் கண்களை அழுத்தித் தேய்த்தவள் கண்ணில் எரிச்சல் மண்டியது.
'இப்பக் கூட அவருக்கு போன் பண்ணனும்னு தோணல. என் நினைப்பே இல்ல, ஒருவேளை அத்தைக்கு போன் பண்ணி இருப்பாரோ?' என்று யோசித்து விட்டு வெளியில் வந்து பத்மாவின் ரூமைப் பார்த்தாள்.
அவர் அசந்து தூங்கிக் கொண்டிருக்க, வாசல் தெளித்துக் கோலம் போட்டுவிட்டு வந்தவள் அடுத்தடுத்த வேலையில் ஈடுபட்டாள். ராகினியும் எழுந்து வர, பத்மாவும் ஹாலில் உட்கார்ந்து இருந்தவர் ராகினியிடம், “உன் அப்பா போன் பண்ணானா ராகி குட்டி?” என்றார்.
"தெரியலையே?" என்று உதட்டைப் பிதுக்கினாள்.
"உங்க அப்பா சொல்லாமல் போயிட்டான்னு அம்மாவுக்கு அப்பா மேல கோவம் போல" என்று சொல்ல,
அப்போது, "அத்தை, உங்களுக்கு அவர் போன் பண்ணாரா?” என்று கேட்டாள்.
"இல்லம்மா, உனக்கு போன் பண்ணலையா?" என்று திரும்பக் கேட்க,
"நான் கேட்டதை என் கிட்டவே திரும்பக் கேளுங்க. உங்க பையனுக்கு அங்கே போயிட்டாரா, இல்லையான்னு போன் பண்ணிச் சொல்லக் கூட வலிக்குது இல்லையா? போன் பண்ணா, போக மாட்டேங்குது. நாட் ரீச்சபீள்னு வருது" என்று முனகினாள்.
"டவர் கிடைக்காம இருக்கும் மா, இல்லனா அப்பா போன் பண்ணி இருப்பாரு இல்ல"
"ஆமாம், நீ உங்க அப்பாக்குதான சப்போர்ட் பண்ணுவ. அப்புறம் என்ன எனக்கா சப்போர்ட் பண்ணுவ?" என்று ராகினியிடமும் எரிந்து விழுந்து விட்டுச் செல்ல,
ராகினி தான் பாவமாகத் தனது பாட்டியைப் பார்த்தாள். ஆனால், பத்மாவிற்கு அளவு கடந்த சந்தோசம்.
'அவருமே தன்மகன் சொன்னது போல் தனது மருமகளிடம் சிறுசிறு மாற்றங்கள் உண்டாவதை உணர்ந்தார். தன் மகனுக்காக யோசிக்கிறாள். தன் மகன் தனக்கான உரிமையைக் கொடுக்கவில்லை என்று நேற்று மாலையிலிருந்து உரிமையாக அவனிடம் சண்டை போடுகிறாள். கோபித்துக் கொள்கிறாள்' என்பதை உணர்ந்தவருக்கு மிக்க மகிழ்ச்சி.
"அப்பா போன் பண்ணாதனால அம்மா ஃபீல் பண்றாங்க. அது ஒன்னும் இல்லடா தங்கம், நீங்க வாங்க" என்று கிச்சனுக்கு அழைத்துச் சென்று பால் எடுத்துத் தர,
"ஏன்? நான் கொடுக்க மாட்டேனா?” என்றாள், அவரிடமும் முகத்தைத் திருப்பிக் கொண்டு.
"சரிமா, நீயே அவளுக்குக் கொடு" என்று விட்டு அமைதியாக வந்து உட்கார்ந்து கொண்டார்.
ராகினியைக் குளிக்க வைத்துவிட்டுத் தானும் குளித்துவிட்டு வந்தாள். மணி எட்டு, போன் எடுத்துப் பார்த்தாள் அவனிடம் இருந்து போன் வரவில்லை. போன் அடித்துப் பார்த்தாள். அப்போதும் நெட்வொர்க் பிசி என்று வர, கோபத்துடனே ராகினிக்குச் சாப்பாடு ஊட்டி விட்டு,
"மாத்திரை போட்டுக்கோங்க அத்தை, எதுனா போன் பண்ணுங்க. இல்ல கூட யாரையாச்சும் வந்து இருக்கச் சொல்லட்டா. இல்ல நீங்க அங்க வீட்டுக்குப் போறீங்களா? ஆட்டோ பிடித்துக் கொண்டு வரட்டா, இல்ல நான் கொண்டு போய் விட்டுட்டு வரட்டா?” என்று கேட்டாள்.
"அதெல்லாம் எதுவும் வேணாம் கண்மணி. டெய்லி நான் தனியா தான இருக்கேன்"
"சரி அத்தை, போன் பண்ணுங்க" என்று ஆயிரம் பத்திரம் சொல்லிவிட்டு அனைத்தையும் ஒதுங்க வைத்துவிட்டு வந்து திரும்ப போன் எடுத்துப் பார்த்தாள்.
அவனிடமிருந்து ஃபோன் வராமல் இருக்கக் கடுப்பானவள், "அவர் போன் பண்ணா சொல்லுங்க" என்று விட்டுக் கிளம்பினாள்.