kani suresh
Moderator
வேலைக்குச் சென்ற கண்மணிக்கு வேலையில் தான் கவனம் செல்லவில்லை. வினோத் நினைவாக இருந்தது. 'ஒரு போன் பண்ணிக் கூட சொல்ல முடியல. நாட் ரீச்சபிள். நெட்வொர்க் கிடைக்கலைன்னா என்ன? வேற யார் கிட்டயாவது போன் வாங்கிப் பேசலாம் இல்ல' என்று பொருமினாள்.
ஆனால், சிறிது நேரத்தில் வேலை வர அதில் கவனத்தைச் செலுத்தினாள்.
மதியம் போன் பண்ணி மாத்திரை போடச் சொல்லி பத்மாவிடம் சொல்லி விட்டு, "அவர் போன் பண்ணாரா அத்தை" என்றும் கேட்டாள்.
"இல்லம்மா, நானும் போன் பண்ணா நாட் ரீச்சபிள் தான் வருது."
சரி என்று விட்டு மாலை ராகினி, கவின் இருவரையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்ல, கவினை வீட்டில் விட்டுவிட்டு, ராகினியை அழைத்துக் கொண்டு வந்தாள். வீட்டிற்கு வந்தும் அவளுக்கு வேலை ஓடவில்லை.
"போன் செய்தாரா?" என்று பத்மாவிடம் கேட்டாள்.
அவர் இல்லை என்று சொல்லியும் அவரது ஃபோனை எடுத்துப் பார்க்க, அவருக்குச் சிரிப்புதான். அவளைப் பார்த்து முறைத்துவிட்டு, "ஏன்? என் மேல நம்பிக்கை இல்லையா, போன் பண்ணா சொல்ல மாட்டேனா?"
"அதுக்கு எதுக்கு முகத்தை இப்படி வச்சிக்கிறீங்க. உங்களுக்கு இந்த மாமியார் கெட்டப் எல்லாம் செட் ஆகல" என்று சிரித்து விட்டு நகர்ந்தாள்.
ராகினி கூடச் சிரித்து விட்டாள். முதலில் "ஏன் பாட்டி, அம்மா இப்படி இருக்காங்க" என்று லேசாகப் பயத்துடன் கேட்ட ராகி, "அப்பா போன் பண்ணல டா, அதான் அம்மாவுக்குக் கோவம். இப்போ, அப்பா உன்கிட்டச் சொல்லாம ஊருக்குப் போனா நீ கோவிச்சுக்கல. அந்த மாதிரித் தான்டா தங்கம். வேற ஒன்னும் இல்ல"
"பெரியவங்களும் கோவிச்சுப்பாங்களா, சின்னப் பசங்க மாதிரி" என்று கேட்க,
"எல்லாருக்குமே எல்லார்கிட்டயும் கோவம் வந்தா காட்ட முடியாது. உரிமை இருக்கவங்ககிட்ட தான் காட்ட முடியும். அம்மாவுக்கு அப்பாகிட்ட எல்லா உரிமையும் இருக்கு இல்ல" என்று அவளுக்குப் புரியுமாறு சொல்லிப் புரிய வைத்தார்.
மாலை 7 மணி போல் ஹாலில் இருந்த கண்மணியின் போன் அடிக்க, "யாருடா ராகிமா பாரு" என்றாள்.
வேகமாக போனை எடுத்துப் பார்த்த ராகி, "மா, அப்பாதான்" என்று கத்த, சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவள் அதை அப்படியே போட்டுவிட்டு வேகமாக ஓடி வந்து, "ஹலோ அப்பா" என்று ராகினி பேசும்போதே போனை வேகமாக அவளிடம் இருந்து பிடுங்கிப் பொரியத் தொடங்கி இருந்தாள்.
"ஏன்? போயிட்டீங்கனா, போன் பண்ணி ரீச் ஆயிட்டேன்னு கூடச் சொல்ல முடியாதா? ட்ரெயின் ஏறிட்டேன் என்று போன் பண்ணிச் சொல்ல முடியாதா? நீங்க போன் பண்ணுவீங்கனு நானும் நேத்து நைட்ல இருந்து பார்க்கிறேன், ஒரு போன் இல்ல. என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? உங்கள வீட்ல இருக்கவங்க தேடுவாங்கன்னு எண்ணம் கூடக் கிடையாதா? சின்னப்புள்ளை, வயசானவங்களை விட்டுட்டுப் போனாம் என்ற எண்ணம் கூடக் கிடையாது, இல்லையா?"
அவன் அமைதியாக லேசான புன்னகையுடன், "அம்மாவையும், பாப்பாவையும் நீ பார்த்துக்க மாட்டியா?" என,
"அப்போ நான்…" என்றாள் சட்டென்று.
அவனுக்குத் தன்னையும் மீறிச் சிரிப்பு வரப் புன்னகைத்து விட்டு, "என் பொண்டாட்டி ஒன்னும் சின்னப் புள்ளையும் இல்ல, பக்குவம் இல்லாதவளும் இல்ல. தைரியசாலி தான்… அவளைப் பார்த்துக்க அவளுக்குத் தெரியும். அவளுக்கு என்ன வேணுமோ அதைப் பார்த்துக்கத் தெரியும்."
"நினைப்புதான்" என்று வாயைக் கோணித்தாள்.
ராகினி கையைச் சுரண்ட, "பாப்பா பேசுறாளாம்"
"அப்பா சாப்டியா, என்ன பண்ற? ஏன் போன் பண்ணல?" என்று அடுக்கடுக்காகக் கேள்விகளை அம்மாவைப் போல மகளும் தொடுக்க,
"உனக்கு தான் அப்பாவைப் பிடிக்காதே. அம்மாவ தான பிடிச்சிருக்கு" என்று கோபம் போல முகத்தைத் திருப்ப,
"இல்ல, எனக்கு அப்பாவைப் பிடிக்கும். நான் சும்மா விளையாட்டுக்குத் தான் உங்களைச் சீண்டிப் பார்த்தேன். எனக்கு ரெண்டு பேருமே வேணும்." என்று லேசான விம்மலுடன் சொல்ல,
போனை வாங்கிய கண்மணி, "எதுக்கு பாப்பாவை அழவச்சிட்டு இருக்கீங்க?" என்று கேட்டுக் கொண்டிருக்கும் போது வீடியோ காலில் வந்தான்.
"ஐ... ஜாலி! அப்பா வீடியோ கால் பண்றாங்க" என்று குதூகலித்தாள்.
ராகினியிடம் பேசினாலும், அவனது பார்வை முழுமையாகக் கண்மணியிடம் இருந்தது. அவளும் பார்த்தும் பார்க்காத போல, “நீங்க பேசிட்டு இருங்கடா ராகிமா. அம்மாவுக்கு வேலை இருக்கு" என்று சொல்ல,
"என்ன, உங்க அம்மாவுக்கு என்கிட்டப் பேசறதவிடப் பெரிய வேலை" என்றான். அவளை வம்பு இழுக்கும் பொருட்டு. சிறிது நேரம் தன் மகளிடமும், அம்மாவிடமும் பேசிவிட்டு, "சரி மா, பாருங்க" என்றான்.
"டேய், கண்மணி கிட்டப் பேசுறியா?" என்றார்.
"இல்லம்மா, எனக்கு ஒர்க் முடிஞ்சிட்டா, நான் ப்ரீ தான். இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சுப் பேசுறேன்."
அவருக்கும் அவனின் நிலை புரிய, "சரிடா" என்று விட்டு வைத்து விட்டார்.
"என்னடா, உங்க அப்பா வச்சிட்டாரா? என்கிட்டப் பேசலையா?" என்று வேலைகளை முடித்துவிட்டு வந்த கண்மணி கேட்க,
"அப்பா ப்ரீ ஆயிட்டுக் கூப்பிடுறேன் சொன்னாங்க மா" என்று புன்னகைத்தாள்.
"அது சரி, உங்க அப்பாவுக்கு என்கிட்டப் பேசலாம் ஏது நேரம்?" என்று விட்டு அனைத்துச் சமைத்த பாத்திரங்களையும் எடுத்துக் கொண்டு வந்து வைத்தாள். மூவரும் ஒன்றாகச் சாப்பிட்டுவிட்டு, "சரித்த நீங்க போய் படுங்க நேரமா" என்று விட்டு அனைத்தையும் ஒதுங்க வைத்துவிட்டு ராகினியை அழைத்துக் கொண்டு சென்று கதை சொன்னாள்.
"அப்பா ரெண்டு நாள்ல வந்துருவாங்களாமா?".
"வந்துடுவாரு. ஆனா என்கிட்டப் பேசணும்னு தோணவே இல்ல. ரெண்டு வார்த்தை தான் பேசினார். அதுக்கப்புறம் பேசவே இல்லை" என்று புலம்பினாள்.
"அப்பாவுக்கு வேலை இருக்கு மா. அப்புறமா கூப்பிடுவாங்க, நீ என்ன சின்னப் பிள்ளையா? என்னை மாறியே பேசுற. அப்பா ரெண்டு நாள்ல வந்துருவாரு."
"அது சரி, உங்க அப்பா உன்கிட்டப் பேசிட்டாரு இல்ல. அப்போ இப்படிதான் சொல்லுவ" என்று முனகிவிட்டு ராகினிக்குக் கதை சொல்லித் தூங்க வைத்தாள். இரவு பத்தரை இருக்கும், போன் ரிங் ஆகியது.
வேகமாக ஃபோனை எடுத்திருந்தாள். அட்டென்ட் செய்யாமல் அமைதியாக சைலண்டில் போட்டாள். எங்குச் சத்தம் கேட்டு ராகினி எழுந்து விடுவாளோ? என்று எண்ணி. முழு ரிங் சென்று போன் கட் ஆகியது.
"கோவக்காரி, ராட்சசி" என்று நினைத்துத் திரும்பவும் அழைத்தான். இரண்டாவது போன் செய்தபோது கடைசி ரிங்கில் ஃபோனை எடுத்துக் காதில் வைத்துவிட்டு அமைதியாக இருந்தாள்.
"ஏன், மேடம் பேச மாட்டீங்களா? அவ்வளவு கோபமோ?"
"உங்க பொண்ணு தூங்கிட்டா, அம்மாவும் தூங்கிட்டாங்க. இப்போ எதுக்கு எனக்கு போன் போட்டு இருக்கீங்க?" என்றாள் வீம்பாக.
"அவங்க ரெண்டு பேர் கிட்டயும் பேசிட்டேன். மேடம், உங்ககிட்டப் பேசதான் போன் போட்டு இருக்கேன்" என்றான் லேசான மென்னகையுடன்.
"எனக்குத் தூக்கம் வருது. காலைல வேலை இருக்கு."
"நான் மட்டும் வேலை வெட்டி இல்லாம வெட்டியா உக்காந்து இருக்கேனா?"
"எனக்கு எப்படித் தெரியும்? உங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கும். என் கிட்டப் பேசி ஏன் உங்க நேரத்தை வீண் அடிக்கிறீங்க" என்றாள் ஆதங்கமாக.
'இந்த உரிமையான செல்லக் கோபம் கூட நல்லா இருக்குடி' என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவன், "ரொம்ப தான் மேடம் சூடா இருக்கீங்க போல."
"இப்ப என்ன வேணும் உங்களுக்கு? இந்த நேரத்தில் போன் பண்ணி என்கிட்ட வம்பு வளக்கறீங்க"
"ஓ! அப்போ என்கிட்டப் பேச முடியாது. என்கிட்டப் பேச எதுவும் இல்லன்னா, வச்சிடலாம் இல்ல" எனவும் அவள் அமைதியாகவே இருக்க,
"உன்கிட்ட தான் மேடம் கேட்கிறேன்"
அப்போதும் அவள் அமைதியாக இருக்க போன் உடனே கட் ஆனது.
"ஏன் என்கிட்ட எல்லாம் பேச முடியாதா? பேச மாட்டீங்களா?" என்று வாய்விட்டுப் புலம்ப,
அப்போது, அவனிடமிருந்து வீடியோ கால் வந்திருந்தது.
கோபத்தோடு போனை அட்டென்ட் செய்து "என்ன?" என்றாள்.
ஆனால், அவளது பார்வை முழுவதும் அவன் மேல்தான் ஊடுருவி இருந்தது.
"சாப்டீங்களா?"
"ரொம்பதான் கோவம் வருது, ஸ்கேன் பண்ணியாச்சா? நீ பார்க்கிறதுல எனக்கே ஒரு மாதிரி இருக்கு. அங்க இருந்து எப்படி வந்தேனோ அப்படியே தான்டி இருக்கேன். ஒரு நாள்ல என்ன மாற்றம் வந்துறப்போது?"
"ஒன்னும் இல்லையே, நான் சும்மாதான் பார்த்தேன். உங்களுக்கு தான் அப்படித் தெரியுது போல சார்"
"ரொம்ப மரியாதை பலமா இருக்கே"
"ஒன்னும் இல்ல" என்று முகத்தைச் சுழித்தாள்.
"சாப்டியா?" என்றான்.
"நேத்து நான் போன் பண்ணேன் இல்ல, ஏன் எடுக்கல?"
அவளது செயலில் புன்னகை தோன்ற முறுவலித்து விட்டு, "நான் எடுக்கலையா?"
"நாட் ரீச்சபிள்னு வந்துச்சு. இருந்தாலும், வேற யார் கிட்டயாவது போன் வாங்கி ரீச் ஆகிட்டீங்கன்னு மட்டும் சொல்லி இருக்கலாம் இல்ல?"
"ஆபீஸ் போனவுடனே டைம் இல்ல. அங்க இருந்து ட்ரெயின் ஏறின உடனே நெட் ஒர்க் கிடைக்கல. அதனால்தான் இன்பார்ம் பண்ண முடியல. நான் இங்க வரவே லேட் ஆயிடுச்சு. திரும்ப வேலை முடிஞ்சு வந்து உனக்கு தான்டி ஃபர்ஸ்ட் கூப்பிட்டேன்."
"என்கிட்டவா பேசினீங்க நீங்க?"
"நான் உன்கிட்ட தான் பேசினேன். நீ தான உங்க அப்பாகிட்டப் பேசிட்டு இருனு ராகி கிட்ட போன் குடுத்துட்டுப் போன. அப்புறம் அம்மாகிட்டப் பேசினேன். இப்போ உன்கிட்டப் பேச தானடி போட்டு இருக்கேன். என்ன பேசணும் சொல்லு, பேசுவோம்."
"மணி என்னன்னு தெரியுமா? தூங்குங்க, இப்போ நேரத்துக்குத் தூங்கலைனா அப்புறம் காலைல ஆபீஸ் கிளம்ப நேரம் ஆகும்."
"உண்மையா தான் சொல்றியா? என்கிட்டப் பேச எதுவும் இல்லையா?"
"இங்க வந்த பிறகு பேசிக்கலாம், போய் தூங்குங்க." என்று போனை வைத்திருந்தாள்.
வினோ பெருமூச்சு விட்டுவிட்டு 'ஊருக்கு வந்த உடனே, எப்படியும் உன்கிட்ட என் நேசத்தைச் சொல்லணும்டி. உனக்குக் கஷ்டமா இருக்கோ இல்லையோ, எனக்குக் கஷ்டமா இருக்கு, கிளம்பும்போது சண்டை போட்டது.
இப்போ வரைக்கும் எனக்காகத் துடிக்கிறது, உரிமையான பேச்சு எல்லாம் என்னை என்னமோ செய்யுதுடி. உன்னை விட்றக் கூடாதுன்னு என் மனசு அடிச்சு சொல்லுது. நீ எங்கேயும் போயிட மாட்டதான். இருந்தாலும் என் காதலை உன்கிட்டச் சொல்லனும்.' என்று மனதிற்குள் எண்ணி விட்டுத் தூங்கி இருந்தான்.