subageetha
Moderator
மஞ்சம் 12
முதல் மாதம் முழுவதும் அவனை வெளியே கூட செல்ல அனுமதிக்காமல் வீட்டு சிறையிலேயே வைத்து இருந்தான். அவன் செய்கையில் அவன் பெற்றோருக்குக் கூட சந்தேகம் எழவில்லை. அந்த அளவிற்கு இருவரும் அன்னியோன்யமாக இழைந்தார்கள். அதிதிக்கு கையில் தன் செல்போன் கூட இல்லை. அதை ஞாபக மறதியாக அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட்டாள். எந்தக் காரணத்தைக் கொண்டும் அவள் தன் பெற்றோருடன் தொடர்புகொண்டு விடாமல் அவன் அவளை கண்காணித்துக் கொண்டிருந்தான்.
வக்கீலை சந்திப்பதற்கு அவள் தனியாக போக முடியாது என்ற நிலை.இல்லை அவன் அதை அனுமதிக்காமல் தடை செய்தான் என்றும் கூடக் கூறலாம்.
அடி உதை போன்ற துன்புறுத்தல்கள் இல்லை. ஆனால் ஒரு நாளைக்கு இரண்டு முறை மூன்று முறை என்று இரவெல்லாம் அவளுடன் கூடி கொண்டிருந்தவன்,
அடுத்த இரண்டு மாதத்திற்குள் அவளுக்கு நரகத்தை காட்டி விடுவது என்ற வேகத்தில் பகலில் கூட அவளை விடாமல் கசக்கி பிழிந்தான். அவள் இங்கு எலும்புகளில் கூட வலி நிற்க வில்லை. ஆனாலும் அவன் விடவில்லை.
இருவரும் வக்கீலிடம் சென்று பேசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்கள் பிரிவுக்கு என்று.
வக்கீல் 'உங்கள் மனைவி இப்போது எங்கு தங்கி கொண்டிருக்கிறார்கள்' என்ற கேள்விக்கு பதிலாக அவள் என்னுடன் என் வீட்டில்தான் தங்கி இருக்கிறாள் என்றான் விநயன்.
வக்கீலோ அதெல்லாம் சரிப்படாது அவர்களை அவர்கள் அம்மா வீட்டுக்கு அனுப்பி வைத்து விடுங்கள் என்று விட்டார்.
அதிதியின் மனதிற்குள் தென்றல் வீசியது. '
சரி சார் அனுப்பி வச்சிடறேன் என்றவன் ஒரு வாரம் அவளை தன்னுடன் வைத்திருந்து வாய்விட்டுக் கதற வைத்துவிட்டான். வலி தாங்க முடியாமல் அவள் கதறி கொண்டுதான் இருக்கிறாள் ஒன்றரை மாதங்களாக. வலி உடலில் என்றால் காயங்கள் ஆறிவிடும் மனதில் ஏற்படும் வலிக்கு மருந்து இட யாரால் முடியும்?
வெளியே நடந்தவற்றையெல்லாம் சொன்னால் நடப்பதே வேறு என்று வேறு அவன் மிரட்டி விட்டான்.
பலாத்காரங்கள் பலவிதம்.
பெண்களுக்கான இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றது ஏதோ ஒரு மூலையில். வாய்விட்டு இதுபோன்று அந்தரங்கத்தை பெண் யாரிடம் சொல்ல முடியும்? கூச்சம், வெட்கம் போன்ற உணர்வுகளால் தாக்கப்பட்ட பெண்கள் இவற்றைபற்றி மருத்துவ ஆலோசனை பெறுவதற்கு கூட தயங்குகிறார்கள். படித்த பெண்கள் படிக்காத பெண்கள் என்றெல்லாம் இதில் விதிவிலக்கல்ல. பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் அந்த பெண்களின் மனதில் பலத்த அடியை கொடுக்கிறது சில பெண்களுக்கு படுக்கையறையில் செல்வது என்றாலே சுகம் என்பதற்கு பதிலாக சோகம் என்றாகிவிடுகிறது. படுக்கையறையின் கூடலுக்கு பெண் அழுது கொண்டே வெளியே வரும் பெண்கள் கூட இருக்கிறார்கள்.
அந்தக் கடைசி ஒரு வார துன்புறுத்தல்களுக்கு பிறகு அவன் அவளை தொடக்கூட இல்லை.மெல்ல மெல்ல அவளது உடல் தேறி கொண்டுவந்தது.வீட்டில் பெரியவர்கள் அதாவது பையனை பெற்றவர்கள் இரண்டு மூன்று முறை அதிதி தன் பெற்றோர்களுக்கான செல்ல வில்லையா என்று கேட்டு பார்த்து சலித்து விட்டார்கள். அவன் ஏதும் தவறு செய்கிறான் என்று அவர்களுக்கு தெரிகிறது ஆனால் என்ன செய்கிறான் அவன் எப்படி கண்டிப்பது என்பது புரியவில்லை அந்த பெண்ணும் தங்களிடம் வந்து எதுவும் சொல்ல மாட்டேன் என்கிறார் எப்படி இந்த விஷயத்தில் தலையிட முடியும் என்ற நிலையில் அவர்கள். இருந்தாலும் விநயனின் அம்மாவிற்கு ஏதோ தவறு நடப்பது உள்ளுணர்வு, வித்யாவுக்கு அழைத்து அதி வந்திருப்பதை சொல்லி விட்டாள்.
வித்யாவுக்கு குழப்பம். பெண் இங்கு வந்திருக்கிறாள் என்றால் இங்கு தங்கள் வீட்டிற்கு ஏன் ஒன்றரை மாதங்களாக வரவில்லை? அங்கிருந்து கிளம்பும் போது கூட தகவல் சொல்லவில்லையே ஏன்? மகளின் நிலை என்ன? ஏன் தன்னுடன் தொலைபேசியில் கூட பேசவில்லை போன்ற பல்வேறு கேள்விகள் அவளை சுற்றி வளைக்க இதை கணவனிடம் வேறு எவ்வாறு சொல்வது என்ற பயம் அவள் மனதை கவ்வி கொண்டது.
இந்த நேரத்தில் அவளை அழைக்க கூடிய ஒரே நபர் நிரஞ்சன் தான். அழைத்து விட்டாள்.
அவனிடம் அதிதியின் மாமியார் சொன்ன எல்லாவற்றையும் சொல்லி பெண் இன்னும் இங்கு வந்து சேரவில்லை என்றும் கூறி வருத்தப்பட பதற்றம் அவனையும் தனக்குள் இழுத்துக் கொண்டது.
தன் அம்மாவை திரும்ப கொண்டு விட சென்னை செல்ல வேண்டும் என்ற தீர்மானத்தை வைத்திருந்தவன் தன் முடிவை மாற்றிக் கொண்டு அவன் அம்மா இங்கு பெங்களூர் வருவதற்கு முன்பாகவே அலுவலகத்திற்கு ஒரு வாரம் விடுப்பு எடுத்துக் கொண்டு சென்னை சென்று நின்றான். அவன் சென்றது நேராக அதிதி யின் வீட்டிற்கு தான். அவன் அங்கு செல்வதற்கும், அதிதி மொத்தமாய் தன் பெற்றோரிடம் திரும்ப வருவதற்கும் சரியாக இருந்தது.
மூன்றரை வருடங்களுக்கு முன்பாக திருமணமாகி சந்தோஷமாய் அமெரிக்கா சென்றவள் சத்தியமாய் இவள் இல்லை . கண்களில் உணர்வின்றி நிரஞ்சன் அதிர்ந்து நின்றான். அதிதியின் கழுத்துக்கு கீழே இருந்த பற்களால் கடிக்க பட்ட காயம் அவன் கண்களில் முதலில் கண்டவுடன் கண்களில் விழுந்தது. அவளை விட்டு விட்டோமே எனும் குற்ற உணர்வில் தவித்துபோனான்.
அதிதி நிரஞ்சனை நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. அவன் இந்த நேரத்தில் இங்கே எப்படி என்று அவளுள் யோசனை. அவள் வருவதைப் பற்றி முன்பு யாருக்கும் அவள் தகவல் தெரிவித்து இருக்கவில்லை. அப்படி இருக்க நிரஞ்சன் இங்கே வருவான் என்று அதிதிக்கு இப்பவும் நம்ப முடியவில்லை.
அவனை அவள் பார்க்கும் பார்வையில் அந்நிய தன்மை அப்பட்டமாய் தெரிந்தது. அவள் பார்வை அவனை 'உனக்கு இப்போது இங்கு என்ன வேலை' என்று கேட்டது.
அவனோ அவளை கண்ட அதிர்ச்சியில் வாய் பேச முடியாமல் அமைதியாக இருந்தான்.
அதிதிக்கு இருந்த மனக்குழப்பத்தில் யாரிடமும் எதுவும் பேச அவளுக்கு தோன்றவில்லை. யோசிக்க நிறைய இருக்கிறது. இவற்றையெல்லாம் எப்படி அப்பா அம்மாவிடம் சொல்வது, அவர்களுக்கு எப்படி நிலைமையை புரிய வைப்பது என்பதே அவளுக்கு தெரியவில்லை. தனது அப்பாவின் உடல்நிலை அவளை எப்போதும் பயமுறுத்தும் ஒன்று.
எப்பொழுதுமே அவள் ஒருவிதமான அமைதி காக்கும் பேர்வழி தான். இப்பொழுதும் அதே நிலைதான். வீட்டில் நின்று கொண்டிருக்கும் மூவருக்கும் அவள் எவ்வாறு இருக்கிறாள் என்று அறிந்து கொள்ளும் ஆர்வமும், அவளுக்கு நடந்தது என்ன என்பது பற்றி தெரிந்து கொண்டே ஆக வேண்டிய நிலையுமாக தவித்துக் கொண்டிருக்க அவளோ நேராக தனது அறைக்குள் சென்று விட்டாள். அவளுக்கு இந்த நேரம் தேவைப்படுவது தனிமை.
சியாட்டிலில் இருந்த இந்த மூன்றரை வருஷங்கள் முழுவதும் அவளுக்கு வாய்த்தது தனிமை மட்டும் தான்! அந்தத் தனிமையை இப்போதும் அவள் துணையாக தேடினாள்.
அவள் ஏற்கனவே சென்னை வந்த இரண்டு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் வித்யாவிற்கு மகளிடம் கேட்க வேண்டிய கேள்விகள் நிரம்ப இருக்கிறது. முக்கியமாக அதிதி இந்தியா வந்தது பற்றிய தகவலை தனக்கு ஏன் அதிதி தெரிவிக்கவில்லை என்ற கேள்வி வித்யாவை குடைந்தது.
விஸ்வம் மகளின் முகம் பார்த்தே சிலையானார். இந்த திருமணத்தை நடத்தி அதன் மூலம் தான் ஏதோ பெரிய தவறு செய்து விட்டோமோ'என்று அவருக்கு தோன்ற தொடங்கியது.
நிரஞ்சன் தன் அம்மாவிற்கு அழைத்து தான் சென்னை வந்து விட்டதாகவும்,அதிதியின் வீட்டில் இருப்பதாகவும் தெரிவிக்க அவனது அம்மாவிற்கு சுத்தமாக இந்த நிலை பிடிக்கவில்லை.தன் மகன் இன்னும் அதிதியின் நினைவிலேயே இருப்பது ஏதோ ஒரு வகையில் அவன் வாழ்வில் முட்டுக்கட்டையாக இருப்பது போல் ஒரு தோற்றம். எப்போதுதான் தன் மகன் அதிதி நினைவில் இருந்து வெளியே வந்து தனக்கென்று ஒரு வாழ்வை அமைத்துக் கொள்வான் என்று ஏங்கிக் கொண்டிருக்கும் அவன் அம்மாவிற்கு அதிதியின் இப்போதைய வருகை நிச்சயமாக சந்தோஷத்தை அளிக்கவில்லை.
திருமணம் முடிந்து இத்தனை வருடங்களில் அதிதி இந்தியா வந்ததில்லை. ஏதாவது விசேஷமாக இருக்குமோ என்ற எண்ணம் மனதில் ஒரு கணம் வந்து சென்றாலும், தன்மகன் இவ்வளவு விரைவாக கிளம்பி வந்திருப்பதால் ஏதாவது , பிரச்சனையாக இருக்குமா என்ற பயமும் அவரை கவ்வியது.
அதிதி அவள் வீட்டிற்கு வரும் சமயம் தன்மகன் அவள் வீட்டில் போய் அவளுக்காக தவம் இருப்பது, 'அவன் வாழ்க்கையை இன்னும் எவ்வளவு கெடுத்துக்கொள்ள போகிறான்' என்ற ஆயாசத்தை அவன் அம்மாவுக்கு கொடுத்தது. இந்த ஒரு தலைக்காதல் தான் கூட வில்லையே? நிரஞ்சன் ஏன் வேறு ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொள்ளாமல் இன்னும் காலத்தைக் கடத்திக் கொண்டு இருக்கிறான் என்ற கோபம் வேறு. இவனிடம் காதல் சொன்ன அந்த அலுவலக பெண்ணை ஏன் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறான் என்று அர்த்தமில்லாத யோசனைகள் அவரை ஆக்கிரமித்தன.
நிச்சயம் அதிதியினால் மட்டும் தான் தன் மகன் இவ்வளவு பெரிய நிலைக்கு உயர்ந்துள்ளான் என்பதில் அந்த தாய்க்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. வித்யாவிடமும் அதிதியிடமும் அதற்காக நன்றி உணர்வு நிரஞ்சனின் அம்மாவுக்கு உண்டு. அதேசமயம் நிரஞ்சனின் அம்மாவாக யோசிக்கையில் நிரஞ்சன் அந்தப் பெண்ணிற்கு அடிமையாக வாழ முடியுமா... என்றும் ஒரு ஆற்றாமை. கண்டிப்பாக நிரஞ்சனுக்கு வித்யா அழைத்து இருப்பார். அதனால் தான் இங்கு வந்து இருப்பான் என்பது நிரஞ்சனின் அம்மாவிற்கு நிச்சயம். ஆனால் எதற்காக நிரஞ்சனை அழைக்க வேண்டும் என்றுதான் புரியவில்லை.
வித்யாவும் அதிதி தன் அறைக்குள் சென்று பூட்டி கொண்டபிறகு நிரஞ்சனிடம் ' நீ வெளியில போய் ஹோட்டல்ல ரூம் போட வேண்டாம் நீரு. இங்கேயே உன்னோட ரூம்ல தங்கிக்கோ... என்றவள் மறந்தும் நீ எத்தனை நாள் இங்கு சென்னையில் இருக்கப் போகிறாய் என்று கேட்கவில்லை. உண்மையில் வித்யாவிற்கு தனது கணவர் விஸ்வத்தை விட நிரஞ்சன் இப்பொழுது தன் கூட இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம்தான்.
தன் மகளுக்கு நிகழ்ந்தவை எதுவும் சரியாக இருந்திருக்கப் போவதில்லை என்பது வித்யாவிற்கு நிச்சயம். ஏற்கனவே,கனடாவில் இருக்கும் தனது தம்பியுடன் பேசியவை வித்யாவின் மனதிற்குள் வந்து சென்றது. ஏதோ ஒன்று மனதில் தன் மகள் நிரந்தரமாக இங்கே வந்து விட்டாள் என்று சொல்ல வித்யாவிற்கு சூழ்நிலையை கையாளத் தெரியவில்லை. அதே சமயம் மகள் வாயைத் திறந்து இதுதான் விஷயம் என்று சொல்லாத வரையில் தானாகவே எந்த ஒரு முடிவிற்கும் வருவது நல்லதல்ல என்று தனக்குத்தானே பலமுறை கூறிக் கொண்டாள். தன் தம்பியுடன் பேசிய சமயம்
அவரோ,' வித்யாக்கா...சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத. உன்னோட பொண்ணு கிட்ட உன் மாப்பிள்ளை கை செலவுக்குக் கூட பணம் கொடுக்கவில்லை. இங்க கனடாவுக்கு நான்தான் டிக்கெட் போட்டேன். அவளோட முகமே காண சகிக்கல. எதையோ இழந்த மாதிரி ஒரு சோகம்.
சதா ஏதோ ஒரு யோசனையிலேயே இருக்கா. கேட்டா... கேட்ட கேள்விக்கு பதில். எப்பவுமே அதிகம் பேசமாட்டா. இப்ப இன்னும் மோசம். ரொம்ப வீக்கா இருக்கா. உடம்புல சக்தி இல்லை. கண்ணைச் சுற்றியும் கருவளையம் இருக்கு. என்னன்னு கேட்டா சரியா பதிலும் சொல்ல மாட்டேங்குறா.
அவள வளைகாப்புக்கு அழைக்கும் போதே உன் மாப்பிள்ளை பேசின விதம் சரியில்லை. மொத்தத்துல அதிதி சந்தோஷமாக இல்லன்னு அவள் முகத்தை பார்த்தாலே தெரியுது. சதாசர்வகாலமும் மாப்பிள்ளை போன் பண்ணுவார்னு மொபைல் போனையே ஏக்கமா பாக்குறா.ஆனா அவரோ அதி இங்க வந்ததிலிருந்து போனே பண்ணல. அவ கண்ணுல ஏக்கமும், மாப்பிள்ளை நடத்தைல அலட்சியமும் தெரியுது. என்று நடந்தவற்றை சுருக்கமாக சொல்ல, வித்யாவிற்கு மனதில் நெருஞ்சி முள் போல் தைத்தது. இங்கு இருந்தவரை அதிதிக்கு ஒரு குறைவும் வருவதற்கு விஸ்வம் அனுமதித்ததில்லை. தன் மகளை நிஜமாகவே அவர் தங்கத் தாம்பாளம் கொண்டுதான் தாங்கினார். அவள் கேட்க வேண்டும் என நினைப்பது மனதிற்குள் நினைக்கும் போதே கிடைத்துவிடும்.
வீட்டை விட்டு தன் நண்பர்களுடன் தங்க வேண்டிய நிலைமை நிரஞ்சனுக்கு.
நிரஞ்சனின் கஷ்டம் பொறுக்காமல் இங்கே அழைத்து வந்து தங்க வைக்க வேண்டும் என்று விஸ்வதிடம் அதி கேட்க, அவரோ வயது பெண் இருக்கும் இடத்தில், வெளி மனிதர்களை எல்லாம் வீட்டில் தங்க வைக்க முடியாது என மறுத்த பிறகு, இரண்டு நாள் பட்டினி கிடந்து நிரஞ்சனை தங்கள் வீட்டு மாடியில் தங்க வைத்துக் கொண்டாள் அதிதி பெண்.
வித்யா -விசுவம் இருவருக்கும் தெரிந்து அதிதி பிடிக்கும் முதல் பிடிவாதம் இதுதான். ஆனால் அதற்குப் பிறகு அதுக்கு வேறு எந்த காரணத்திற்காகவும் எதற்காகவும் மறுத்து பேசியதில்லை.
எவ்வளவு பெரிய விஷயம் ஆனாலும் தன் மகளின் கண் பார்த்து அதை நடத்திக் காட்டும் அப்பாவின் பாசம் விசுவதின்னுடையது. இன்று மகள் தன் கை செலவு பணத்திற்கு கூட கணவனின் முகம் பார்க்க வேண்டியுள்ளது, அதுவும் அவன் இவளுக்காக செலவழிக்க தயங்குகிறான் என்பது வித்யாவால் ஜீரணித்து கொள்ள முடியவில்லை.