kani suresh
Moderator
காலை 8 மணி போல் தான் தூக்கம் கலைந்து வினோத் தான் முதலில் எழுந்தான். ராகினி எழுந்து உட்கார்ந்து கொண்டு வினோத்தை தான் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
அவளைப் பார்த்தவன், "நீ எப்பவே எழுந்துட்டியா ராகி மா, அப்பாவை எழுப்பி இருக்கலாம் இல்ல"
"நான் எழுந்துட்டேன் பா… நீ வந்ததைப் பார்த்தேன். அதுவும் அம்மா இன்னும் எழுந்திரிக்கல அதான்"
"சரி" என்று குழந்தையை அமைதியாகத் தூக்கிக்கொண்டு கீழே இறங்கி வந்தான்.
"சாரி மா, டைம் ஆனது தெரியல."
"டேய் எப்படா வந்த. சொல்லவே இல்லை"
"சும்மா சர்ப்ரைஸ்" என்று முறுவலித்தான்.
"பாட்டி, அப்பா எப்போ வந்தாங்க?"
"எனக்கும் தெரியாதுடா தங்கம். உன் அப்பா வருவதா சொல்லல" என்று விட்டுக் குழந்தைக்கு ஹார்லிக்ஸ் கொடுக்க,
"அம்மா நான் பார்க்கிறேன். நீங்க போய் உட்காருங்க"
"ஒருநாள் செய்யறதால எதுவும் ஆகாது வினோ. இப்போதைக்கு கண்மணியை எழுப்ப வேண்டாம். அவ தூங்கட்டும், மூணு நாளா தூங்கினாளா, இல்லயானு கூடத் தெரியல."
"சரி" என்று விட்டு அமைதி ஆனான். அவனுக்கும் பால் கொடுக்க குடித்துக் கொண்டு இருந்தான்.
"ராகி குட்டி, இன்னைக்கு நான் உங்கள ஸ்கூல்ல கொண்டு போய் விடுறேன்" என்று சொல்லிக் குளிக்க வைத்து சாப்பாடு ஊட்டிக் கொண்டிருக்கும் போது தான் அடித்துப் பிடித்து எழுந்த கண்மணி நேரத்தைப் பார்த்துவிட்டு வேகமாக வெளியில் வர,
"எதுக்கு இப்போ இவ்வளவு அவசரமாக ஓடிவர?" என்றான்.
"நீங்க எழுந்தீங்க இல்ல. என்னையும், எழுப்பி இருக்க வேண்டியதுதானே. நேரம் போனதே தெரியல, அசதியில் தூங்கிட்டேன் போல."
"ஒன்னும் இல்ல கண்மணி, வேலை எல்லாம் முடிஞ்சுடுச்சு. அவ்ளோ தான்" என்றார்.
"சாரி அத்தை"
"கண்மணி, நானே இன்னைக்குப் பாப்பாவை ஸ்கூலுக்குக் கூட்டிட்டுப் போறேன். எனக்கு இன்னைக்கு ஆபீஸ் இல்ல, லீவு தான். உனக்கு இன்னைக்கு ஆபீஸ் இருக்கா?".
"ஆமாம். பின்ன இல்லையா? நீங்க தான் வெளியூர் போயிட்டு வந்ததால உங்களுக்கு லீவு. எனக்கு எதுக்கு லீவு விடுவாங்க. எனக்கு வேலை இருக்கு."
தன் அம்மாவைத் திரும்பிப் பார்த்தான். அவர் சமையலறைக்குள் சென்று விட, "ஆபீஸ் போயே ஆகணுமா என்ன?"
ஒன்னும் புரியாமல் அவனைப் பார்க்க, "கிளம்பி இரு, நம்ம வெளியே போகலாம். நான் போய் பாப்பாவை விட்டுட்டு வரேன்."
அவனை முறைத்துவிட்டு எதுவும் பேசாமல் தலையாட்டிவிட்டுத் தன்னுடைய ரூமுக்குள் புகுந்து விட்டாள். ராகினியை விட்டுவிட்டு வீட்டிற்கு வர கண்மணி குளித்து முடித்து இருந்தாள்.
அவளை அழைத்துக் கொண்டு வெளியில் வந்து, "அம்மா, கொஞ்சம் வெளியே போயிட்டு வரோம்" என்றான்.
"பார்த்துப் போயிட்டு வாங்க" என்றார்.
"நீங்களும் வரிங்களா அத்தை" என்று கேட்டாள்.
"இல்லம்மா, நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்க. சின்னஞ்சிறுசுங்க, முதல் முறையா தனியா வெளிய போகப் போறீங்க, பார்த்துப் போயிட்டு வாங்க"
"சரி" என்று விட்டு இருவரும் வெளியில் வந்து வண்டியில் ஏற, "இப்போ திடீர்னு என்ன பிளான், எங்க போறோம்?".
"அமைதியா வா, போனா தெரியப் போகுது." என்று கோயிலுக்கு அழைத்துச் சென்று சாமி கும்பிட்டு விட்டு நேராகக் கண்மணி வீட்டிற்கு தான் அழைத்துச் சென்றான்.
"இங்க போறோம்னு சொல்லவே இல்ல."
"இறங்கி வா, சொன்னதா தான் வருவியோ?" என்று விட்டு வீட்டுக்குள் நுழைந்தான். அவனைப் பார்த்து முகத்தைத் திருப்பிக் கொண்டு வர கமலி சிரித்த முகமாக இருவரையும் வரவேற்றாள்.
கமலியை முறைத்த கண்மணி, "மூணு நாளா எனக்கு போன் பண்ணனும்னு கூடத் தோணல."
"ஓ! அப்போ நான் போன் பண்ணலனு கூட மேடமுக்கு இப்போ தான் தெரியுது, இல்லையா? நான் போன் பண்ணலைன்னா என்ன? நீ பண்ணி இருக்க வேண்டி தான…"
"இ..இல்ல, அ..அது…" என்று கண்மணி திணற,
"கமலி, அது… அவ…" என்று வினோ ஆரம்பிக்க,
"அண்ணா, இது எங்களுக்குள்ள இருக்க விஷயம், இதுல நீங்க தலையிடாதீங்க" என்று கமலி சொல்லிவிட,
சங்கர் தான், "கமலி, என்ன பேச்சு இது? மாப்பிள்ளை கிட்ட" என்றான்.
"கொஞ்ச நேரம் கம்முனு இருக்கீங்களா? நான் உங்க கிட்டையும் பேசல. உங்க தங்கச்சிகிட்ட நான் இப்பப் பேசல. என் பிரண்டுகிட்ட, என் பிரண்ட அவ என்கிட்ட ஏன் மூணு நாளா பேசலனு கேக்கறேன். இப்போ நான் அவகிட்டப் பேசலாமா, வேணாமா? இல்ல உங்க தங்கச்சியானா நீங்க வச்சுக்கோங்க." என்று முகத்தைத் திருப்ப,
ஓடிச் சென்று கமலியைப் பின்பக்கம் இருந்து கட்டிக் கொண்டு, "சாரிடி உண்மையா எனக்கு அவர் என் பக்கத்துல இல்ல அப்படின்றது தாண்டி வேற எதுவும் தெரியல. அவர் இல்லைன்றது மட்டும்தான் என் கண்ணுக்குத் தெரிஞ்சுச்சு. வேற எதையுமே என்னால உணர முடியல… இதுக்கு மேல என்னோட நிலைமையை எப்படிச் சொல்லிப் புரிய வைக்கிறதுனு தெரியல. எனக்கு இப்போ இந்த நிமிஷம் இவர் வேணும். அவர் இல்லாம என் லைஃபே இல்ல கமலி…" என்றாள் லேசான அழுகையுடன்.
வேகமாகத் திரும்பிய கமலி அவளது முகத்தையே பார்க்க,
"ஆமா, நான் இவர விரும்புறேன். எப்போ இருந்து எப்படி எல்லாம் கேட்டா எனக்குத் தெரியாது. ஆனா, அவர் இல்லாம என் லைஃப் இல்லை இனி" என்றவுடன் மொத்தக் குடும்பமும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தது.
கமலி தன் மொத்தக் குடும்பத்தையும் பார்த்துவிட்டுக் கண்மணியைப் பார்க்க, அனைவரும் தன்னைப் பார்ப்பதைப் பார்த்தவள் லேசாக நெளிந்தாள்
வினோ உதட்டில் லேசாகப் புன்னகையைத் தவழவிட்டுக் கமலியைப் பார்த்தான்.
"சத்தியமா உன் அண்ணியை விட, உன்னை யாரும் புரிஞ்சி வச்சிருக்க முடியாது." என்றான் சங்கர்.
கண்மணி ஏன் என்று புரியாமல் பார்க்க,
"கமலி சொன்னா… இந்த மூணு நாள் நீங்க யாரும் அவளுக்கு போன் பண்ண வேணாம். அவளா போன் பண்ணா பேசுங்க. அதும் ஒரு ரெண்டு வார்த்தை மட்டும் பட்டும்படாம பேசிட்டு வையுங்கனு சொன்னா. அதனால தான் இந்த மூணு நாள்ல நாங்க யாருமே உனக்கு போன் பண்ல. நீயுமே எங்களுக்குக் கூப்பிடல.
எங்களுக்குக் கூப்பிடலைன்றது தாண்டி அதுவும், கமலி இந்த டைம்ல இப்போ கேரிங்கா இருக்கா… அதும் நிறைமாசமா இருக்கான்னு தெரிஞ்சும் கூட அவளுக்கு நீ போன் பண்ணல. ஆனா, உண்மையாவே நீ போன் பண்ணலன்னு பீல் பண்ணா… அதே நேரம் அதைவிடப் பல மடங்கு சந்தோஷப்பட்டா. எங்க எல்லாரையும் விட, ஏன் கவினையும் விட உன் லைஃப்ல புருஷனா, உன்னோட வாழ்க்கைத் துணையா வினோத் வந்து இருக்கிறதை நினைச்சு சந்தோஷப்பட்டா…
வினோ மச்சான நீ எந்த அளவுக்கு விரும்புற என்று நீயாவே உன் வாயால சொல்லுவனு சொன்னா… அதை இப்போ நிறைவேத்தியும் காட்டிட்டா. நீயா உன் வாயால அவர உனக்கு எந்த அளவுக்குப் புடிச்சிருக்குன்னு சொல்லிட்ட. இந்த மூணு நாளா எங்களுக்குள்ள உன்ன வச்சு சண்டை நடந்துச்சுன்னு கூட சொல்லலாம்." என்று புன்னகைத்தான்.
"ஏன் இப்படிப் பண்ற அண்ணா, இந்த நேரத்தில" என்றாள் லேசான வலி மிகுந்த உணர்வுடன்.
"உங்க அண்ணனுக்கு என்ன இருந்தாலும், உன் மேல பாசம் இல்லாம போயிடுமா?"
"அதுக்காக உன் மேல நம்பிக்கை இல்லாமலா?"
"என்ன? என் மச்சானுக்குக் கமலி மேல நம்பிக்கை இல்லையா?" என்று சங்கரைப் பார்க்க,
"அண்ணா, அப்படி எல்லாம் கிடையாது. உங்க மச்சானுக்கு என்னை ரொம்பவே பிடிக்கும். என்ன, அதவிடத் தங்கச்சி வாழ்க்கை முக்கியம் இல்லையா?"
"அதுக்காக நீ கேரிங்கா இருக்கன்னு தெரிஞ்சுமா? அதும் டெலிவரி நெருங்கிற நேரத்துல கூடவா?"
"அப்படி எல்லாம் இல்லை அண்ணா. அவரு எனக்கு என்ன வேணுமோ எல்லாமே பார்த்தாரு. ஆனா, அதையும் தாண்டி அவருக்குத் தங்கச்சி மேல இருக்கற பாசம் போகாது இல்லையா? விடுங்க" என்று சிரித்தாள்.
"சாரி டி" என்று சங்கர் கமலியிடம் மன்னிப்பு வேண்ட,
"என்னங்க இது?" என்று அவன் கையைப் பிடிக்க சங்கர் அமைதியாகி விட்டான். அதன் பிறகு, அனைவரும் சந்தோசமாகப் பேசி கொண்டு இருந்தார்கள்.
"ஏதாவது சாப்பிடறீங்களா?" என்று கேட்க,
"எதுவும் வேணாம்" என்று சொல்ல,
"இருங்க நான் செய்யறேன்" என்று ரொம்ப நாள்களுக்குப் பிறகு தன் தாய் வீட்டு கிச்சனில் சமைக்க ஆரம்பித்தாள்.
அனைவரும் ஒன்றாகச் சாப்பிட்டுவிட்டு எழுந்தார்கள்.
"கவி குட்டி, நீ அத்தையைத் தேடவே இல்லையா?" என்று கேட்க,
"அவனா? அவன் ரொம்ப சந்தோசமா இருக்கான். ஏன் உன்னைத் தேடாம? அதான், ராகினி கதை கதையா சொல்றாளே… அவ சொல்ற கதையே அவனுக்குப் போதும். அப்பா சொல்லாம போயிட்டாரு, போன் பண்ணலனு அம்மா என்கிட்டையே சண்டை போடறாங்கன்னு சொல்லிச் சிரிச்சிருக்கா..."
"எது, சிரிச்சாளா?"
"உன்னோட மக இல்லையா? வேற எப்படி இருப்பா… உன்ன மாறி தான இருப்பா. நீ அவகிட்ட எது கேட்டாலும் சுடுசுடுனு எரிந்து விழுந்துட்டு இருக்கியாம்" என்று புன்னகைத்தாள்.
"என்னப் பார்த்தா உங்களுக்கு எல்லாம் சிரிப்பா இருக்கு. ஆமாம் நீ ஏன்டா ஸ்கூல் போகல, உடம்புக்கு ஏதும் பண்ணுதா?"
"இல்ல அத்தை, அம்மாகூட இருக்கதான்… சும்மா" என்று உதட்டில் புன்னகையைத் தவழ விட்டான்.
"கமலி, உனக்கு ஒன்னும் இல்லல்ல."
"லூசு, அவன் லீவ் போட்டு இருக்கான். எனக்கு ஒன்னும் இல்லடி".
மாலை வரை இருவரும் அங்கு இருந்து விட்டு ஒன்றாகச் சென்று ராகினியை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார்கள்.
அன்றிலிருந்து அப்பாவும், மகளும் ஒன்று சேர்ந்து கண்மணியை அவ்வப்போது சீண்டிக் கொண்டு இருந்தார்கள். ஒரு சில நேரங்களில் இரவு வேளையில் தன் அம்மாவுடன் சேர்ந்து அப்பாவைச் சீண்டுவாள். இப்படியே நாள்கள் அழகாகச் சென்றது. மூவரும் குடும்பமாக அவ்வப்போது வெளியே சென்று வந்தார்கள்.
அவ்வப்போது பார்வைப் பரிமாற்றம் செய்து கொண்டார்கள். இருவரும் மனதளவில் நெருங்கியிருந்தார்கள். இன்னும் உடலளவில் நெருங்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவளது நடுக்கத்தைப் போக்கவும், உள்ளுக்குள் இருக்கும் பயத்தைப் போக்கவும் வினோத்தும் அவ்வப்போது அவளிடம் மெது மெதுவாகப் பேச்சு கொடுத்துக் கொண்டும், அவ்வப்போது லேசாகக் கட்டியணைத்து அவளது நெற்றியில், கன்னத்தில் என்று இதழ் பதித்துக் கொண்டும் இருக்கிறான்.
அவளை அதிலிருந்து வெளியே கொண்டு வர அவனால் ஆன ஒவ்வொரு செயலையும் செய்து கொண்டு ஒவ்வொரு முயற்சியாக எடுத்துக் கொண்டிருக்கிறான். ஆனால், அவளது நடுக்கம் தான் இன்னும் முற்றிலும் போகவில்லை.
அவன் அவளது அருகில் நெருங்கி வந்தாலே, ஒரு சில நேரங்களில் அவளையும் மீறி உதறல் எடுக்கதான் செய்கிறது. அந்த நேரத்தில் வருத்தம் கொண்டு "சாரி வினோ, என்னால உங்க வாழ்க்கையும் வீணாகுது. உங்க சின்னச் சின்ன ஆசையைக் கூட நிறைவேற்ற முடியல" என்று வருந்துவாள்.
"ஒன்னும் இல்ல கண்மணி, இது மட்டும் வாழ்க்கை இல்ல... ஆனா, அது இல்லாம புருஷன், பொண்டாட்டி வாழ்க்கை முழுமை அடையாது. எதுவா இருந்தாலும் பொறுமையா பார்த்துக்கலாம். ஒன்னும் அவசரமில்லை. இது நம்ப லைஃப்… இப்ப ஒன்னும் நான் உன்ன தப்பா நினைக்கல." என்று அவளைத் தோளோடு அணைத்து நெற்றியில் இதழ் பதித்தான்.
அவ்வப்போது இருவரிடமும் சிறு சிறு செல்லத் தீண்டல்கள் இருக்கத்தான் செய்கிறது. அனைத்தையும் தாண்டி அதிகமான காதல் இருவரிடமும் நிரம்பி வழிகிறது. ‘அவளை அமைதியாக விட்டால் சரி வராது. அவளது நடுக்கத்தைப் போக்க, நான் தான் ஏதாவது வழி செய்ய வேண்டும். நாம் முயற்சி செய்யாமல், அவளே சீக்கிரம் சரி ஆவாள் என்று நினைத்தால் சரி வராது.’ என்று எண்ணிய வினோ அவளிடம் ஒரு சில நேரங்களில் நெருங்க செய்தான்.
‘நாம் ஒதுங்கியே இருந்தால் அவள் அமைதியாகி விடுவாள். குற்ற உணர்வும் வரும். இதுவே நான் அவளிடம் நெருங்கினால், தனக்காக என்று யோசித்தாவது தன்னை மாற்றிக் கொள்ளவும், பதட்டத்தை போக்கவும் முயற்சி செய்வாள்’ என்று எண்ணினான்.