எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

என்னவளே என்னில் பாதியானவளே -2

kani suresh

Moderator
மறுநாள் காலையில் நிலா தனது ஸ்கூட்டியில் அலுவலகத்திற்கு கிளம்பி கொண்டு இருந்தாள்.

அவள் தினம்தோறும் அலுவலகத்திற்கு ஸ்கூட்டியில் தான் செல்வாள் ...

நேற்று அவளது ஸ்கூட்டி பஞ்சர் ஆகிவிட்டதால் ,அவளது அப்பா அதை பஞ்சர் ஒட்டி வைப்பதாக கூறி, இன்று ஒரு நாள் மட்டும் பேருந்தில் போ என்று சொல்லியிருந்தார்...


காலை வேலையில் அவளின் அண்ணன் அலுவலகத்தில் டிராப் செய்து விட்டான் ...

இரவு வேலையில் தான் அவள் பேருந்தில் வர நேரிட்டது .

அப்பொழுதுதான் நமது ஹீரோ சிவரஞ்சனை பார்க்க நேரிட்டது...


அவள் நேற்று நின்று கொண்டிருந்த பேருந்து நிறுத்தத்தை கடக்கையில் நிலாவிற்கு தானாகவே சிவரஞ்சனின் ஞாபகம் வந்தது.

இன்றும் அவன் தன்னை பாலோ செய்கின்றானா? என்று திரும்பிப் பார்த்தாள் ...

சுற்றி முற்றி ஒரு நிமிடம் நின்று பார்த்துவிட்டு , தலையில் தட்டிக் கொண்டு அவள் அலுவலகத்தை நோக்கி வண்டியை விட்டாள்...

அப்போது , ஒரு சிக்னலில் வேறு ஒரு போலீஸிடம் நின்று பேசிக்கொண்டு இருந்தான் சிவா...

அவனைப் பார்த்தவள் ..ஒரு நிமிடம் நின்று அவனையே விழியகலாது பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஆனால் ,அவன் பேசும் மும்மரத்தில் தான் இருந்தானே ஒழிய! ,இவளை அவன் பார்க்கவில்லை என்று இவள் நினைத்துக் கொண்டிருக்கின்றாள் ...

ஆனால் ,அவள் வந்து நின்ற அடுத்த நொடியே அவளை பார்த்து விட்டான் .

பார்த்தாலும் பார்த்தது போல் காட்டிக்கொள்ளவில்லை...


அவனை பொறுத்தவரையில் நேற்று இரவு ஒரு பெண் தனியாக பேருந்து நிறுத்தத்தில் நின்று இருந்தாள் .

அப்பெண் பாதுகாப்புடன் அவள் வீட்டிற்கு சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் மட்டுமே பாலோ செய்தான் .

வேறு எந்த எண்ணமும் அவன் மனதில் இல்லை. அவ்வளவு தான் அவனின் நினைப்பு....!


அதனால் தான் இன்று அவள் வந்து நின்றாலும் ,நாம் ஏதும் கண்டு கொள்ளக்கூடாது என்று தான் அவள் அங்கு நிற்பதை பார்க்காதது போல் அவன் மற்றொரு போலீசிடம் பேசிக்கொண்டு இருந்தான் ...


அவள் இரண்டு நிமிடம் நின்று பார்த்துவிட்டு, அலுவலகத்திற்கு நேரம் ஆவதால், ஸ்கூட்டியை கிளப்பி கொண்டு அவளுடைய அலுவலகத்திற்கு சென்று விட்டாள்....

ஆனாலும் ,நிலாவுக்கு அலுவலகத்திலும் அவனது நினைவாகவே இருந்தது.

'என்ன இது நமக்கு அவன் நினைப்பாவே இருக்கு!' என்று தலையை உலுக்கி விட்டு , வேலையில் கவனம் செலுத்தினாள்.....


சிறிது நேரத்தில் வேலையில் மூழ்கி விட்டாள். அவனைப் பற்றிய நினைப்பை அப்பொழுதைக்கு ஒத்தி வைக்கப்பட்டது என்று தான் சொல்ல வேண்டும்....

பிறகு மதிய இடைவேளையில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் ,அவளின் ஆபீஸ் தோழி அழுது கொண்டு இருந்தாள் ...


"ஏன் டி என்ன ஆச்சு ?"என்று கேட்க.

அவளோ, என்னுடைய பாய் பிரண்டு என்னை மிரட்டுகிறான்.. "நான் அவனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள். பேசிய வீடியோ, ஆடியோ ஆகியவற்றை காண்பித்து , நெட்டில் விட்டு விடுவேன் என்று மிரட்டுகிறான்"என்றாள்.


ஏனென்றால், அப்பெண்ணிற்கு ஆதாவது, நிலாவின் தோழிக்கு இன்னும் இரண்டு மாதத்தில் திருமணம் ...

அவள் அவளின் காதலனை உண்மையாக தான் நேசித்தாள். ஆனால் ,அவளின் வீட்டு சூழ்நிலை . வேறொருவனை திருமணம் செய்து கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருகின்றாள். அவளின் பெற்றவர்களுக்காக ...


வீட்டில் மாப்பிள்ளை பார்த்து இருப்பது பற்றி காதலனிடம் வந்து சொன்னாளே ஒழிய, அவனிடம் மறைக்க வேண்டும் என்று நினைக்கவில்லை ...

காதலனிடம் பேசிவிட்டு ,அந்த மாப்பிள்ளையிடம் பேச வேண்டும் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தாள். ஆனால், அவளின் திருமண விசயத்தை காதலனிடம் சொன்ன உடனே அவனோ அவளை மிரட்ட ஆரம்பித்து விட்டான் .என்னிடம் பேசிய ஆடியோ ,வீடியோ, போட்டோ ஆதாரங்கள் இருக்கிறது. அனைத்தையும் பொதுவெளியில் காட்டுவேன் என்று,

இப்படி மிரட்டுகிறவன் எப்படி தன்னை உண்மையாக காதலித்து இருப்பான் என்று முடிவு எடுத்தவள். தனக்கென பார்த்திருந்த மாப்பிள்ளையிடம் தன் காதலை பற்றி கூறவில்லை.
இந்நேரம் வரை....


சிறிது நாட்கள் பொறுத்து பார்க்கலாம் என்று இருந்தாள் .ஆனால், அவளின் காதலன் அவளை தினமும் மிரட்டி கொண்டே இருக்கின்றான்.
அதனால் தான் இன்று அவளால் இனி முடியாது என்று எண்ணி அழுது கொண்டு இருக்கின்றாள்...


அப்போது தான் நிலா பார்த்து எனவென்று கேட்டாள். அதற்கு நிலாவின் தோழி அவள் அழுததற்கான காரணத்தை கூறி முடிக்க .



நிலா தான் ,அவளின் தோழியிடம் ,"லூசாடி நீ! இதுக்கெல்லாம் யாராவது அழுவாங்களா? வா நீ நாம அவன் கிட்ட பேசிப் பார்ப்போம். அவன் சரிப்பட்டு வரலனா , போலீசில்ல கம்ப்ளைன்ட் கொடுத்துரலாம்" என்று கூறினாள்...


அதற்கு நிலாவின் தோழி நிலாவிடம் "போலீஸ் கிட்ட போன, வீட்டிற்கு விசியம் தெரிஞ்சிடுமே!" என அஞ்சினாள்...

"ஓ! மேடமுக்கு லவ் பண்ணும் போது இந்த பயம் வரல. இப்போ தான் வருதோ ?அமைதியாக வாடி!" என்று இழுத்துக் கொண்டு தனது தோழியின் காதலனிடம் அழைத்து சென்றாள் ...

ஆனால், அந்த காதலன் இவர்கள் சொல்வதை எதுவும் கேட்கவில்லை. அவள் எனக்கு உண்மையாக இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தவன் ...

இறுதியில்,"என் கூட ஒரு நைட் இருந்துட்டு, அதுக்கப்புறம் வீட்ல பார்த்திருக்க மாப்பிள்ளையை கட்டிக்கச் சொல்லு! என்று கூறவும்..

அவன் அப்படி சொன்ன அடுத்த நொடி , நிலாவின் ஐவிரல்களும் அவனின் கன்னத்தைப் பதம் பார்த்து இருந்தது ..

"நீ நல்லவன்னு நினைச்சு அவ உன்கிட்ட பழகினா, நீ அவளையே ஒரு நைட் கூப்பிடுவியா? டா பொறுக்கி நாயே.. நீ எம்புட்டு பெரிய அயோக்கியன்னு இன்னைக்காவது புரியட்டும் இவளுக்கு.. " என்று கூறிவிட்டு, அவளின் தோழியின் கையைப் பிடித்து அவளை அழைத்து கொண்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்து விட்டாள்...


நேராக இருவரும் அரை நாள் விடுப்பு எடுத்து விட்டு, போலீஸ் ஸ்டேஷன்க்கு நிலாவின் ஸ்கூட்டியில் சென்றார்கள் .

அங்கு சென்று மேல் அதிகாரியை பார்க்க வேண்டும் என்று கூறினாள் நிலா...


அங்கு இருக்கும் மற்ற போலீஸ்கள் " என்ன விஷயம்னு எங்க கிட்டயே சொல்லுங்க, நாங்க அவர்கிட்ட சொல்லிக்கிறோம். நேரா அவரயே எல்லாம் பார்க்க முடியாது" என்று கூறினார்கள்.

"இல்ல. நாங்க மேலதிகாரியை தான் பார்க்கணும் "என கூறினாள் மீண்டும் நிலா..

அவர்கள் அப்பொழுதும் தயக்கமாக நிற்க ,"லேடீஸ் மேட்டர்! கொஞ்சம் பர்சனல்" என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டாள்.

அப்போதும் அங்கிருந்த மற்ற போலீஸ்கள்," நாங்க பத்திரமாக யாருக்கும் தெரியாம என்ன கேஸ், விவரம் என்னன்னு பாப்போம். நீங்க எங்கள நம்பி கம்ப்ளைன்ட் பண்ணலாம் . உங்க விருப்பம் இல்லாம விஷயம் வெளிய லீக் ஆகாது.." என்று கூற...

ஆனாலும், நிலா ஒரேப்பிடியாக "மேல் அதிகாரியை பார்க்க வேண்டும் என்று மட்டுமே!" கூறினாள்..

சிறிது நேரத்தில் சத்தம் கேட்டு ரூமில் இருந்து சிவரஞ்சன் (எஸ் ஆர் )வெளியே வந்தான். அனைவரும் அவனுக்கு வணக்கம் வைத்தனர்..


அங்கு இருந்த போலீஸிடம் சிவா," என்ன பிரச்சனை?" என்று கேட்க.

அதற்கு அந்த போலீஸ்," சார் உங்கள தான் பார்க்கணும்னு ரொம்ப நேரமா இந்த பொண்ணுங்க சொல்லிட்டு இருக்காங்க" என்றார் ...

"ஏன் என்னவாம்?" என்றபடி இருவரையும் திரும்பிப் பார்த்து நோட்டமிட்டான் .

"ஒரு கேஸ் பைல் பண்ணனும்!" என்று மட்டுமே சொன்னாங்க சார். அதுக்கு நாங்களே பண்ணுவோம் என்று கூறியதற்கு கூட, உங்க கிட்ட தான் சொல்வேனு உறுதியா இருக்காங்க " என்று கூறினார் அந்த போலீஸ்...

சிவரஞ்சன்," சரி என்னோட ரூமுக்கு வாங்க !" என்று அந்த போலீஸ் இடம் கூறிவிட்டு," வாங்கம்மா இரண்டு பேரும் "என்று நிலா மற்றும் அவளின் தோழியை பார்த்து சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டான் சிவரஞ்சன்.


சிவரஞ்சன் அவன் அறைக்குச் சென்ற அடுத்த நொடி, நிலா சுயநினைவு பெற்றாள் ..

நிலா சிவரஞ்சனை இங்கு எதிர் பார்க்கவில்லை ...

'மேலதிகாரியை பார்க்க வேண்டும் என்று மட்டுமே கூறினாள். அது சிவரஞ்சன் என்று அவள் நினைக்கவில்லை...'


நிலா சுயநினைவு பெற இரண்டு நிமிடம் ஆனது. அதன் பிறகு ,அந்த போலீஸ் தான் இருவரையும் பார்த்து, "உள்ள வாங்க மா. சார் உள்ள வர சொல்லிட்டாரு உங்கள!" என்று இருவரையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார் ...

அவர் அழைத்து கொண்டு சென்றவுடன், சிவா இருவரையும் உட்கார சொல்லிவிட்டு, அந்த போலீஸை வெளியே அனுப்பி விட்டான்...

" என்ன விசியம் சொல்லுங்க ?"என்று ..
இருவரையும் பார்த்து நேரடியாக விஷயத்துக்கு வந்தான்.

நிலா தான்," சார் என்னோட பேர் நிலா. இவ என்னோட பிரண்டு "என்று அனைத்து விவரங்களையும் கூறினாள் .
பிறகு ,அப்பெண்ணை ஒரு முறை சிவரஞ்சன் உற்று பார்த்தான் ...


அவன் பார்த்த பார்வையில் என்ன இருந்தது என்று நிலாவிற்கும் தெரியவில்லை .நிலாவின் தோழிக்கும் தெரியவில்லை. அவன் பார்வையின் அர்த்தம் அவன் ஒருவனே அறிவான்....

"அந்த பொண்ணு கிட்ட நான் கொஞ்சம் தனியாக பேசணும் " என்று அவன் கூற...

நிலா ஒரு நிமிடம் அவனை உற்றுப் பார்த்துவிட்டு ,"சரி "என வெளியே சென்று விட்டாள்...

பிறகு ,சிவா என்ன கேட்டானோ ? அவள் என்ன கூறினாளோ ?

"இன்னும் ரெண்டு மணி நேரத்தில உனக்கு தேவையானது உன்கிட்ட இருக்கும்.. அவன் கூட நீ எடுத்துக்கிட்ட உன்னோட போட்டோஸ் அண்ட் ஆடியோ, வீடியோ என உன் சம்பந்தப்பட்ட விஷயம் எல்லாம் உன் கையில இருக்கும் "என்று கூறிவிட்டு அவன் வெளியில் சென்று விட்டான் ...

நிலாவிடம் அவன் ஒன்றும் கூறவில்லை...


பிறகு ,நிலா தான் அவளின் தோழியிடம் "என்ன சொன்னாரு?" என்று கேட்டாள்.

"இன்னும் ரெண்டு மணி நேரத்தில போட்டோ, வீடியோ, ஆடியோ ஆதாரம் எல்லாமே என் கையில கிடைக்கும்னு அந்த சார் சொன்னாரு!" என்றாள்.



நிலா பிறகு எதுவும் பேசவில்லை..

இருவரும் வண்டியை எடுத்துக்கொண்டு அவர்கள் அலுவலகத்திற்கு பக்கத்தில் இருக்கும் பூங்காவிற்கு சென்றார்கள் ...


ஏனென்றால், சிவரஞ்சன் முகம் தெரியாதே ஒழிய ! அவனை பற்றி நிலா அதிகமாக கேள்விப்பட்டு இருக்கின்றாள்.

அலுவலகத்திற்கு பக்கத்தில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் மேல் அதிகாரி நல்லவர். லஞ்சம் வாங்க மாட்டார். உடனடியாக தீர்வு கண்டு தருவார் என்று நிறைய பேர் கூறி கேட்டு இருக்கிறாள் .அதனால் தான் இங்கு அழைத்துக் கொண்டு வந்தாள் நிலா அவளின் தோழியை......

அதனால் அவன் இன்னும் இரண்டு மணி நேரத்தில் நற்செய்தி கூறுவான் என்று இருவரும் அங்கே காத்துக் கொண்டிருந்தனர்...


ஏனென்றால், செல்லும்பொழுது அவன் நிலாவின் தோழி நம்பரை வாங்கிக் கொண்டுதான் சென்றான்...

பிறகு நிலாவின் தோழி நம்பருக்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே சிவரஞ்சன் போன் செய்தான்.

" நீங்க உங்க அலுவலகத்திற்கு வாங்க மா" என்று கூறினான்....

பிறகு நிலா மற்றும் நிலாவின் தோழி இருவரும் அலுவலகத்திற்கு சென்றார்கள்.

அங்கு சென்ற அடுத்த நொடி நிலாவின் தோழி காலில் அவளின் காதலன் விழுந்து இருந்தான் ...

விழுந்து மன்னிப்பு கேட்டுவிட்டு, அவர்களுக்கு தேவையான அனைத்து ஆபரணங்களையும் அவள் கையில் ஒப்படைத்துவிட்டு "சார் என்ன மன்னிச்சிடுங்க!"என கதறினான்.



அதற்கு ,சிவா "என் கிட்ட மன்னிப்பு கேட்டு எந்த பிரயோஜனமும் இல்லை. அந்த பொண்ணு கிட்ட கேளுடா. இனி இன்னொரு தரம் இதே மாதிரி எந்த பொண்ணையும் ஏமாத்தணும்ன்ற எண்ணம் கனவுல கூட இருக்கக் கூடாது.." என அவன் கையை மடக்கி திருப்ப..


"ஆ..."என வலியில் கத்தியபடி, அவனது தோரணையில் நடுங்கி அமைதியாக நின்றான்.


அனைத்தும் முடிய, சிவரஞ்சன் நிலா மற்றும் அவளின் தோழியிடம் சொல்லிக் கொண்டு கிளம்பி விட்டான்...


அவன் ஒரு நொடியும் நிலாவை திரும்பிப் பார்க்கவில்லை. ஆனால் அவன் அங்கிருந்து நகரும் வரை நிலா அவனையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள்...

பிறகு அவளின் தோழியை பார்த்தாள். அவளை அழைத்துக் கொண்டு, அலுவலகத்திற்கு பக்கத்தில் இருக்கும் பூங்காவிற்கு சென்று இருவரும் அமர்ந்தார்கள்...

அங்கு அமர்ந்து அந்த போட்டோஸ் மற்றும் வீடியோ, ஆடியோக்களை கேட்டார்கள் மற்றும் பார்த்தார்கள்.....

அனைத்தையும் பார்த்த நிலா தான்," லவ் பண்றேன்னு சொல்லிட்டு அவன் கூட இவ்வளவு நெருக்கமா எதுக்குடி போட்டோ எடுத்து வச்சிருக்க?" என்று தன் தோழியை வசைப்பாடினாள்.

ஆடியோவில் அவ்வளவு கேவலமாக ஒன்றும் இல்லை. நார்மலாக பேசுவது போல் தான் இருந்தது. ஆனால் போட்டோ தான் சிறிது நெருக்கமாக இருந்தன. தவறாக எதுவும் இல்லை...


பிறகு நிலா அவளின் தோழியின் கண்ணை துடைத்துவிட்டு அவளை அவளின் வீட்டிற்கு கொண்டு சென்று விட்டு விட்டு வந்தாள் ...

பிறகு தனது வீடு நோக்கி செல்லாமல் கோவிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு செல்லலாம் என்று யோசித்தாள் ...

பிறகு கோவிலுக்கு சென்று வேண்டி விட்டு, சிறிது நேரம் உட்கார்ந்து இருந்தாள். அவ்வேளையில் அங்கு கோவிலுக்கு பக்கத்தில் இருக்கும் இடத்தில் சிறு சலசலப்பு ஏற்பட்டது சத்தம் கேட்டு திரும்பி பார்த்தாள் .

அங்கு ஒரே கூட்டமும், சத்தமாக இருந்தது..என்னவென்று பார்த்தாள். அங்கு சிவரஞ்சன் ஒரு பையனை அடி வெளுத்து வாங்கி கொண்டு இருந்தான்...

நேற்று பார்க்கும் போது எப்படி இருந்தான். இப்பொழுது எப்படி இரு
க்கின்றான். இன்று காலையிலிருந்து இவன் நம் கண்ணோட்டத்தில் வெவ்வேறாக காணப்படுகின்றான் என்று எல்லாவற்றையும் நினைத்துக் கொண்டு, அவளின் வண்டியை எடுத்துக் கொண்டு அவனின் நினைவுகளை சுமந்து கொண்டு, வீட்டிற்கு சென்றாள்..
 
Top