எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் 9

Privi

Moderator

"அடியே காமாட்சி, தம்பிக்கு காலைலே பூரியும் கிழங்கும் செஞ்சிடு, ஐயாவுக்கு தோசை ஊத்திரு, தொட்டுக்க கார சட்னியும், புதினா சட்னியும் செஞ்சிடு, எனக்கு மல்லியப்பூ இட்லி செஞ்சிட்டு மணக்க மணக்க சாம்பார் வைச்சிடு.​

ஏலே என்ன நான் சொல்லுதது புரிசித்தாம்ல....." என சமையல் அறை வாயிலிருந்து அவர்கள் வீட்டு சமையல் வேலை செய்யும் காமாட்சியிடம் உரக்க அன்றைய காலை உணவிற்கான மெனுவை கூறி கொண்டிருந்தார் மரகதம்.​

காமாட்சி "புரியுதுங்கம்மா. நீங்க சொன்ன எல்லா உணவு பதார்த்தங்களையும் உடனே செய்ச்சறேன்." என கூறினாள். சமையல்காரியிடம் வேலையை ஏவி விட்டு, மகனை காண அவனது அறைக்கு சென்றார் மரகதம்.​

ரணதீரன் காலையிலே எழுந்து குளித்து விட்டு நேற்று கல்லூரியில் அவனுக்கு போதித்த பாடங்களை ஒரு முறை மீள் பார்வை பார்த்தான். அப்போது வாசல் கதவை தட்டும் சத்தம் கேட்டு கதவை திறக்க போனான். அறை வாசலில் நின்றது மரகதம் தான்.​

ரணதீரன் "என்னமா வேணும்?" என்று சற்றே சலிப்பு நிறைந்த குரலில் கேட்டான்.​

மரகதம்" போய் டிபன் சாப்பிடு கண்ணா. உனக்கு பிடிச்ச புரியும், கிழங்கும் செய்ய சொல்லிருக்கேன்.' என கூறினார்.​

சரி என தலை ஆட்டி மீண்டும் தனது அறையினுள் சென்றான். புத்தகங்களை சரி பார்த்து எடுத்து கொண்டு சாமி அறையை நோக்கி சென்றான். அங்கே பெரிதாக திருச்செந்தூர் முருகன் படத்தை மாட்டிவைத்திருந்தனர். முருகனை பார்த்து மனதார கையெடுத்து வணங்கி விட்டு உணவு அறையை நோக்கி சென்றான்.​

காமாட்சி மேசையில் உணவுகளை எடுத்து வைப்பதில் மும்முரமாக இருந்தார். அவர் அருகில் சென்று "குட் மோர்னிங் அக்கா, இன்று நீங்க எனக்கு பூரியும் கிழங்கும் செய்திருப்பதாக அம்மா கூறினார்கள். ரொம்ப நன்றி அக்கா." என கூறினான்.​

காமாட்சி “இருக்கட்டும் தம்பி உங்களுக்கு உணவு எடுத்து வைக்கிறேன். என கூறினாள்.​

ரணதீரன் "வேண்டாம் அக்கா. எனக்கு தேவையானதை தேவையான அளவு நானே போட்டு சாப்பிட்டு கொள்கிறேன்." என கூறி தட்டு ஒன்றை எடுத்து அவனே இரண்டு பூரியை போட்டு கிழங்கையும் போட்டு சாப்பிட துவங்கினான்.​

ஒரு வாய் சாப்பிட்ட பிறகு "அக்கா ரொம்ப ருசியாக உள்ளது." என மனதார பாராட்டினான். காமாட்சியும் மெலிதாக சிரித்து விட்டு சமையல் அறையில் அவர் வேலையை பார்க்க போனார்.​

காமாட்சியிடம் மட்டும் இல்லை அங்கு வேலை செய்பவர்கள் அனைவரிடமும் அவன் இப்படித்தான் அன்பாகவும் மரியாதையுடனும் பேசுவான். அதே சமயம் அவர்கள் வேலையை அவன் பாராட்டவும் தவறுவதில்லை.​

அங்கு அவர்களை ஒரு மனிதராய் நடத்துவது இவன் ஒருவன் மட்டுமே. அவன் உண்டு கொண்டிருக்கும் வேளையில் அங்கு வந்து சேர்த்தார் மாணிக்கம் "கருப்ப…” என தோட்டக்காரன் பெயரை கத்திகொண்டே வீட்டிற்குள் நுழைந்தார்.​

ஐயா கூப்பிடுவது கேட்டவுடன் மாணிக்கம் முன் தலை தெரிக்க ஓடி வந்து நின்றான் கருப்பன். வந்தவன் சுதாரிக்கும் முன் அவன் கன்னத்தில் பளார் என ஒரு அரை விட்டார் மாணிக்கம். அந்த ஒரு அரையில் சுருண்டு விழுந்தார் கருப்பன்.​

" ஏலே எண்ணமல நெனச்சிட்டு இருக்க. நான் உம்மகிட்ட என்ன சொன்னேன்." என மாணிக்கம் கத்தி கொண்டிருக்கும் போது அவரை தன் கைகளால் தூக்கி நிறுத்தினான் ரணதீரன்.​

அவன் கருப்பனை தூக்கி நிறுத்தினத்தை பார்த்த மாணிக்கத்திற்கு கோபம் இன்னும் தலைக்கு ஏறியது. அவர் பேச ஆரம்பிக்கும் முன் ரணதீரன்​

"இப்படி போட்டு அடிக்க அவர் என்ன மிருகமா. மிருகம் கூட நீங்கள் அடித்தால் வலி தாங்காமல் திருப்பி உங்களை தாக்க முயற்சி செய்யும் ஆனால் இவர் மனிதன் தானே.. அடித்தல் எங்கனம் திருப்பி அடிப்பார் என்ற எண்ணத்தில் தானே இவரை இப்படி போட்டு அடிக்கிறீர்கள்." என்று மாணிக்கத்தை பார்த்து கோபமாக பேசினான்.​

கருப்பனை பார்த்து, "அவருக்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்." என அவன் கூறும்போதே பற்களை நர நர வென கடித்து கொண்டே "ராணாதீர...." என கத்தினார் மாணிக்கம்.​

ரணதீரன் கருப்பனை பார்த்து மேலும் தொடர்ந்து "நீங்கள் உங்கள் இடத்திற்கு போங்கள் என அவரை வற்புறுத்தி அனுப்பி வைத்தான். அவர் சென்ற பின் கோபமாக நின்று கொண்டிருக்கும் மாணிக்கத்தை திரும்பி அவனும் கோபமாக பார்த்தான். இவை அனைத்தையும் சற்று தொலைவில் நின்று பார்த்து கொண்டிருந்த மரகதம் ' இனி விட்டால் அப்பனும் மகனும் சண்டை போட்டு கொள்வார்கள் என நினைத்து அவர்கள் நடுவே சென்றார்.​

"போதும் இருவரும் முறைத்துக்கொண்டது. ரணதீர நீ போய் சாப்பிடு என ரணதீரனை பார்த்து கூறியவர் கணவனை பார்த்து நீங்களும் போங்கள் போய் உணவருந்துங்கள்.” என கூறினார்.​

அதற்கு ரணதீரன் "எனக்கு சாப்பாடு ஒன்றுதான் இப்போது ஒரு குறை." என கூறி தனது கல்லூரி பையை எடுத்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டான்.​

போகும் அவனை நிறுத்தும் முயற்சியில் மரகதம் கூப்பிட்டது காற்றில்தான் கரைந்து போனது. அவன் சென்றவுடன் கோபமாக கணவர் பக்கம் திரும்பியவள் " நான் எத்தனை தடவை கூறியிருக்கிறேன் அவன் இருக்கும் போது இங்கு வேலை செய்யும் கழுதைகளை ஒன்றும் கூறாதீர்கள் என்று. பார்த்தீர்களா அவன் சாப்பிடாமல் எழுந்து போய்ட்டான்.' என பொரிந்து தள்ளினார்.​

"அடியே அவன் என்னை மதிக்காமல் போகிறான் அது உனக்கு கவலை இல்லை அவன் சாப்பிடாமல் போறானேன்னுதான் உனக்கு இப்போது கவலையாக இருக்கிறதா." என அவரும் அவர் பங்கிற்கு மரகதத்திடம் கத்தினார்.​

மேலும் நாம இருவரும் ஒரு போக்கில் போன இவன் மட்டும் எடி வெட்டி நியாயம் பேசிட்டு தனி வழியில் போறான். இவன் நமக்குத்தான் பிறந்தான இல்லை மருத்துவமனையில் செவிலியர் இவனை மாற்றி குடுத்திட்டாரா?" என்று மேலும் எரிச்சலில் பேசினார்.​

என்ன வார்த்தை மாமா பேசுறீங்க. கொஞ்சம் பார்த்து பேசுங்க என மரகதமும் சற்று கட்டமாகவே கூறினார். அதற்கு மாணிக்கம் 'அடி போடி" என கூறிக்கொண்டு உணவருந்த சென்றார்.​

மாணிக்கத்தின் பழக்க வழக்கங்கள் ரணதீரனுக்கு பிடிப்பதில்லை அதனாலேயே அவன் மாணிக்கத்திடம் பேசுவதை நிறுத்தி இருந்தான். அதற்காக அநீதி என்று அவனுக்கு படுவதை மாணிக்கம் செய்தால் அதை அவர் முகத்துக்கு நேரே சுட்டிக்காட்டுவான். அதற்காக அவரிடம் சண்டையும் போடுவான்.​

யாருக்காகவும் அடங்கி போகும் ராகம் அவனில்லை. தாயிடம் மட்டும் கொஞ்சம் அமைதிக்காப்பான் என்ன இருந்தாலும் பெற்றவள் என்கிற ஒரு பாசம் மரகதத்தின் மேல், ஆனாலும் தப்பென்றால் தப்புதான். அதனாலேயே மகனின் முன் மரகதமும் இவ்வாறான செயல்களை செய்ய மாட்டார்.​

யூ.சி.இ.டி என்னும் பல்கலைக்கழகத்தில் பொறியாளர் படிப்பை கடைசி வருடத்தில் படித்து கொண்டிருக்கிறான் ரணதீரன். அவன் தான் அந்த யூனிவெர்சிடியின் மாணவர்கள் தலைவனும் கூட.​

நன்றாக படிக்கும் மாணவன். ஆசிரியர்களுக்கெல்லாம் மிகவும் பிடித்த மாணவன். மாணவர்களுக்கு இடையே நல்ல தலைவன் அதே சமயம் மிகவும் கடினமானவன். மாணவர்கள் தவறு ஏதேனும் செய்தால் கண்டித்து மன்னிப்பவன் அதுவே தப்பு செய்தால் அவன் தண்டனை மிகவும் கடுமையாக இருக்கும்.​

மாணவர்கள் இடைவே அவன் மேல் மிகுந்த பயமும் இருக்கிறது. அன்று அவன் கல்லூரிக்கு செல்லும்போது அவனுடன் அவன் நண்பனும் உடன் இணைந்து சென்றான் அப்போது அவர்கள் வரும் வழியில் திடீரென ஒரு பூனை குட்டி ஓடி குறுக்கில் ஓடியது அதன் மேல் மோதி விட கூடாது என இவன் அவனுடைய மோட்டார் வண்டியை திருப்ப அது சரியே ஒரு பெண்ணின் மீது மோதியது.​

அவளுக்கும் அடியும் கொஞ்சம் பலமாகவே பட்டு விட்டது. வண்டியை ஓரம் நிறுத்தியவன் அப்பெண்ணின் அருகில் விரைந்து சென்றான். அவள் அருகில் சென்று குனிந்து "என்னை மன்னிச்சிருங்க நான்தான் உங்கை மோதி விட்டேன். அடி பலமா? வாங்க மருத்துவமனைக்கு போகலாம்." என கூறினான்.​

அப்போதுதான் பேசுபவனை நிமிர்த்து பார்த்தாள் அப்பெண் அவள் மலர், நம் கதையின் நாயகி. அவள் பார்த்த பார்வை, அவள் விழிகள் என்னவோ கதை பேசின ரணதீரனிடம். அந்த கண்களுக்குள் மூழ்க ஆசை கொண்டது அவன் மனம் ஆனால் சட்டென சுதாரித்து அவளிடம்​

"மன்னித்து விடுங்கள் வாங்க ஹாஸ்பிடல் போகலாம்." என அழைந்தான்.​

அதற்கு அப்பெண் கீழிருந்து எழுந்து கொள்ள முயற்சி செய்தபடி, “பரவாயில்லை அண்ணா... நான் சமாளித்து கொள்வேன்." என கூறினாள்.​

அவள் முகத்தில் வலியின் சாயல் அப்பட்டமாக தெரிந்தது. அவள் புத்தக பையை எடுத்து கொண்டு நொண்டி கொண்டே அங்கிருந்து அகன்று சென்றாள்.​

போகும் அவளையே விழி அகலாமல் பார்த்து கொண்டிருந்தான் ரணதீரன். அவன் தோள்களை தொட்டு "டேய் மச்ச" என உலுக்கினான் அவன் நண்பன்.​

அதில் தெளிந்தவன் நண்பனை பார்த்து, "என்ன கண்ணுடா அவளுக்கு. அந்த கண்ணனை பாத்துட்டே இருக்கணும் போல் இருக்கு டா" என்றான்.​

அதற்கு அவன் நண்பன் "அது சரி உங்க அப்பா யாருன்னு நினைப்பு இருக்க மாப்ள... அந்த பொண்ணு என்ன சாதின்னு தெரியல. அப்படி நமக்கு ஒத்துவராத சாதின்னா அவ்ளோதான்.​

அந்த பொண்ணு உயிர் கூட விளையாடுற." என விளையாட்டுபோல் கூறினாலும் தனது நண்பன் எதிர்காலத்தில் கஷ்டப்பட கூடாது எனும் எண்ணமும் சேர்த்திருக்க அவனுக்கு புரிய வைக்க முயற்சி செய்தான்.​

ஆனால் ரணதீரனோ " டேய் அவ கண்ணு செம்மையை இருக்குன்னுதாண்ட சொன்ன, வேற எதுவும் இல்ல.' என கூறி அவன் வண்டியை எடுக்க திரும்பியதிரும்பியவன்,​

மீண்டும் அவன் நண்பன் பக்கம் திரும்பி "அப்படியே நான் அவளை விரும்பினாலும் அது என் இஷ்டம். என் அப்பாவால் அவளை ஒன்றும் செய்ய முடியாது." என கூறி விட்டு அதன் பின் அவன் வண்டியை எடுக்க திரும்பினான்.​

வாழ்க்கை இவனுக்கு என்ன வைத்திருக்கிறதோ.... அவள் விழிகளில் மீண்டும் மயங்குவானா??? பொறுத்திருந்து பாப்போம்.​

(அவதான் நாயகின்னு சொல்லியாச்சு மயங்காம இருப்பானா?)​

 
Top