Sowndharyacheliyan
Writer
வான்மழை 24:
அன்றைக்கான வகுப்பினை முடித்து விட்டு ஸ்டாப் ரூம் வந்தமர்ந்த முகிலனுக்கு, அடுத்து என்ன செய்வது என தெரியாது தலையை பிடித்துக் கொண்டான்.
கண்ணை மூடினால் நேற்று சண்டையிட்ட மனைவியின் முகம் தான் அவன் கண்ணில் வருகிறது.
சற்றும் யோசிக்காமல், அவன் பேசிய பேச்சில் நன்றாய் மாட்டிக் கொண்டான் அவனது மனையாளிடம்.
நேற்று அவன் பேசியது அதிகமென அவனிற்கு புரிகிறது தான். வருணா கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் இவனிடம் சுத்தமாக பதிலில்லை. அவள் கேட்ட கேள்விகள் அனைத்தும் நியாயம் தான், அவளது பிறந்த வீட்டு உரிமையை மறுக்க அவனிற்கு எந்த அதிகாரமும், இல்லை என்று புரிகிறது தான், ஆனால் என்ன பிரயோஜனம்?
நேற்று இரவு இவையனைத்தையும் அவனது மனது எடுத்துரைக்க இல்லையே.
ஆனால் அதற்காக அவள் மனையாள் பேசியது சரியென்று கூறிவிட முடியுமா? என்ன? என்ன பேச்சு பேசிவிட்டால், அதை நினைக்கையில், இப்போது அவளை இழுத்து வைத்துக் கொட்டும் வேகம் வந்தது அவனிடம்.
அவன் நினைத்ததை செயல்படுத்த முடியாத நிலையில் அல்லவா இருக்கிறான்? தவறு இவன் பக்கம் தானே அதிகம்.சொல்லப்போனால் இவனிடம் இருந்து தானே அனைத்தும் ஆரம்பம் ஆனது. அடுத்த என்ன? எப்படி மனையாளை சமாதானம் செய்வது? என நினைக்க நினைக்க அவனிற்கு தலைவலி எடுத்திட,
“சிட்! முகிலா உன் வாயை கொஞ்சம் மூடிட்டு உட்காந்திருக்கலாம். தேவையில்லாததை பேசி இப்புடி சிக்கலாக்கி வச்சிருக்கியே?
இனி, அவக்கிட்ட சமாதானம் பேச போனாலும் ரொம்ப மூஞ்சியை திருப்புவாளே! அதுக்காக அவ பேசினதும் சரி கிடையாது தப்புத் தானே” என வாய் விட்டு புலம்பியவன், மதியத்திற்கு மேல் விடுமுறை எடுத்துக் கொண்டு மாமியார் வீட்டிற்கு சென்றான்.
தான் பேசியதும் தவறு என்று உண்ர்ந்திருந்தவன், மனைவியின் பேச்சும் தவறு, என அவளுக்கு உணர்த்திட வேண்டும் என முடிவு செய்தவன், அவளிடம் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை.
மனையாளிடம் சமாதானம் செய்ய சென்றால் அவள் மிஞ்சுவாள் என்பதை அறிந்தவன், அவள் மீதிருந்த கோபத்தை விடாது பிடித்துக் கொண்டான்.
அதே போல் இங்கே வருணாவும் அவன் மீதிருந்த கோபத்தை விடாமல் தான் இருந்தாள். நேற்றைய தன் வார்த்தைகள் அதிகப்படி என அவளிற்கே புரிந்தது தான்.இருந்தும் அதனை கொண்டு வருத்தமடைவதில்லை பயனில்லையே! பேசியாகிவிட்டது.
இனி அதனை மாற்ற இயலுமா என்ன?
நேற்றைய பேச்சிற்கு கணவன் காலையே தன்னை சமாதானம் செய்ய வருவான், என்று எல்லாம் அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. கணவனின் குணம் அறிந்தவள் அல்லவா அவள்.
அதனைக் கொண்டு சிறுப்பிள்ளை தனமான எதிர்பார்ப்பு எல்லாம் இல்லை அவளிடம்.
எப்படியும் அவன் வேலையை முடித்து விட்டே வருவான் என அவள் அறிந்ததே. அதை மெய்யாக்குவது போல், மதிய உணவு நேரத்திற்கு வந்த கணவனை கண்டு அலட்டிக் கொள்ளவில்லை அவள்.
குருசாமியும், கிருஷ்ணாவும் மண்டபம் வரை வேலையாக சென்றிருந்தனர். கிருஷ்ணா - கெளரி நிச்சயத்தினை மண்டபத்தில் வைத்திருந்தனர்.
மல்லிகா, நேற்று உதிரிப்பூக்களை வாங்கி பூ கட்டும் பெண்ணிடம் கொடுத்திருந்தார். அதை வாங்க அவர் சென்றிருக்க, வீட்டில் இவளும், பாட்டியும் மட்டுமே.
சற்று முன் தான் அவர் உண்டு விட்டு ஓய்வெடுக்க சென்றிருந்தார். ஆக, இவன் வந்த நேரம் மனையாள் மட்டுமே வீட்டினில்.
இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. உள்ளே வந்தவன் நோராக மனைவியின் அறைக்கு சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொள்ள, அவனிற்கு தேவையானதை கட்டிலில் வைத்துவிட்டு அவள் சென்றிருந்தாள்.
“இதுல எல்லாம் கொறைச்சல் இல்லை. வாய் மட்டும் தான் அதிகம்.” என முணங்கியவன், அவள் எடுத்து வைத்திருந்ததை அணிந்துக் கொண்டவன் கீழே செல்ல,
இவனிற்காக உணவுகளை எடுத்து வைத்திருந்தாள் வருணா. அங்கே சென்றமர்ந்தவன், உண்ணாது அலைப்பேசியை பார்த்தப்படி இருக்க,
சில நொடிகள் அவனைப் பார்த்தவள்,
பின், தானும் அமர்ந்து உணவிட்டு கொண்டு, ஒரு வாய் எடுத்து உண்ண, அதனை அடிக்கண்ணால் கண்டு விட்டு அவனும் உண்ண ஆரம்பிக்க,
அவனின் செயலில் கடுப்பாகியவள்,
“இதுக்கொண்ணும் கொறைச்சலில்லை” என முணுமுணுத்திட, அவளிடம் பேச்சினை துவங்குவதற்காக காத்திருந்தவன் பட்டென அதனை பிடித்துக் கொண்டான்.
“என்ன சொன்ன நீ இப்போ?”
உர்ரென்ற முகத்துடன் அவன் கேட்டிட,
“உங்களுக்கு கேட்கணும்னுதானே சொன்னேன்.கேட்கலையா என்ன?” அவளின் பதில் கேள்வியில் கடுப்புற்றவன்,
“ரொம்பத்தான் வாய் நீளுது வருணாக்ஷி உனக்கு?”
“நேத்து நீங்க பேசுனதை விடவா?”ஒற்றைக் கேள்வியில் அவனை வாயடைக்க வைத்திருந்தாள். அதன் பின் அவன் எங்கே பேசிட? சிறு முறைப்புடன் உணவினை முடித்தவன், அவளது அறைக்கு சென்றிருந்தான்.
அனைத்தையும் ஒதுங்க வைத்துவிட்டு, அவள் அறைக்கு சென்ற நேரம், முதுகிற்கு ஒரு தலையணையை அணைவுக் கொடுத்து, கட்டிலில் சாய்ந்தமர்ந்தான் முகிலன். முகம் சிடுசிடுவென்று எரிச்சலில் இருக்க,
அதனை கண்டும் காணாமல், சிறிது நேரம் வேலை இருப்பது போல் இங்கும் அங்கும் உலாத்தியவளுக்கு அதற்க்கு மேல் முடியாமல் போக, பேசாது அவனருகே வந்தமர்ந்து விட்டாள்.
அவனை காணும் வரையில் தான் அவளது கோபம் எல்லாம். கணவனை இத்தனை அருகில் வைத்தும் அவளால் அவனை அலட்சியப்படுத்த முடியவில்லை. அவன் பேசியதும் அதிகப்படிதான், அதற்காக தான் பேசியதும் ஒன்றும் கம்மியில்லையே, என்பதை உணர்ந்தவளுக்கு அவனிடம் பேசாமல் இருக்க முடியவில்லை.
“எ..என்னங்க!” என்றவள் தொடங்கிய நொடி, அவனது இறுகிய அணைப்பினில் இருந்தாள். அவள் யோசித்தவையாவும் தான், முகிலனும் இந்நேரம் வரை யோசித்துக் கொண்டிருந்தது.
அவன் பேசியது தவறு என்று அவனிற்கு நன்றாகவே தெரிகிறது. பின்னே எதற்கு வீம்பு பிடிப்பானே? மனையாளிடம் மன்னிப்பு கேட்பதற்கு எந்தவித தயக்கமும் இல்லை அவனிடம்.
“நான் அப்புடி பேசியிருக்க கூடாது தான் வருணாக்ஷி. சாரி, என்ன இருந்தாலும் இது உன் பிறந்த வீட்டு உரிமை. அதை நான் மறுத்திருக்க கூடாது.”
கணவனே இறங்கி வந்த பிறகு, அவள் ஏன் வீம்பு பிடிக்கப் போகிறாள்?
“நானும் சாரிங்க, உங்களுக்கு புரிய வைக்கனும்ன்றதுக்காக கூட, நான் அப்புடி பேசியிருக்க கூடாது தான்.” என்றவளின் பேச்சில், நேற்று அவள் பேசிய வார்த்தைகள் ஞாபகம் வர, யோசிக்காது நறுக்கென்று நான்கு கொட்டுகளை அவளது தலையில் கொட்டியிருந்தான் கணவன்.
“ஏங்க, வலிக்குது!” என்றவளின் வார்த்தைகளை எல்லாம் காதினில் வாங்கவில்லை அவன்.
“பேசுவியா? இனி அப்புடி பேசவியா?” என்றவனின் இடைவிடாத கொட்டலில் அவளிற்கு நிஜத்திற்கும் வலித்தது.
“அப்போ நீங்க பேசினது?” தலையை அழுந்த தேய்த்தவாறு அவள் கேட்க,
“தப்புதான் சாரி!” என்றபடி அவளை அருகிழுத்தவன், அவள் கையை தட்டி விட்டு, கொட்டிய இடத்தில் மிருதுவாய் தேய்த்து விட்டவன், தன் இதழ் கொண்டு அங்கே அச்சாரமிட்டான்.
“ஆனா, நீ பேசுனது சரியா?” ரேமோவாக இருந்தவன் மீண்டும் அந்தியனாக மாறிட,
இம்முறை உசாரகியவள்,
“நானும் சாரி, அப்புடி பேசியிருக்க கூடாது.” என்றபடி அவனது கொட்டலில் இருந்து தப்பித்திருந்தாள்.
அடுத்து என்ன பேசுவது என்று இருவருக்கும் தெரியவில்லை. சிறிது நேரம் அவளை கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தான்.
வருணாவிற்கு இனி அவன் சுபாவை தங்களிடையே கொண்டு வரக் கூடாது என திட்டவட்டமாக சொல்லி விட வேண்டும் என நினைத்திருத்திருந்தாள்.
“என்னங்க?”
“ம்ம்ம்”
“நான் ஒண்ணு சொல்லனும்!”
“சொல்லு!”
“இனி உங்க அண்ணி கூட என்னை கம்பேர் பண்ணாதீங்க.”
அவன் பேசாது அவள் முகத்தையே பார்க்க,
“உங்களுக்கு ஹேர்ட் ஆனாலும் சிலதுல நாங்க ரெண்டுப் பேரும் வேற தான். அவுங்க கல்யாணம் நடந்த விதமும், நம்மதும் ஒண்ணு இல்லை. அப்புடி இருக்கிறப்போ அதுல வரக் கூடிய பிரச்சினையை அவங்காதன் சமாளிச்சு ஃப்பேஷ் பண்ணனும்.
அவங்களுக்காக மத்தவங்க அவுங்களோட சந்தோசத்தை விட்டு தர முடியாது. எனக்கானதை நான் என்னைக்கும் நான் விட்டுத் தர மாட்டேன். இனியும் நீங்க இப்புடி எந்த விசயத்துலயும் என்னை அவுங்களோட கம்பேர் பண்ணக் கூடாது. அவுங்க வேற, நான் வேறதான். அவுங்க விசயத்துல அதிகமா தலையிடாதன்னு சொன்னீங்க, இப்போ வரை நான் ப்பாலோ பண்ணிட்டு தான் இருக்கேன்.
அப்போ நீங்களும், என் விசயத்துல அவுங்களை கொண்டு வரக் கூடாது தானே.” என்றவள் அவன் முகம் பார்க்க,
அமர்ந்திருந்தவன் சாய்ந்து படுத்து அவளையும் அருகிழுத்துக் கொண்டவன்,
“கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு, ஈவ்னிங் நம்ம வீட்டுல இருந்து வந்திடு வாங்க.” என்றபடி அவன் கண்மூடிட,
தான் பேசியவற்றை அவன் புரிந்துக்கொண்டானா? என அவள் குழம்பியது தான் மிச்சம். இப்போதைக்கு கணவனின் அருகாமையை வீணாக்க மனமில்லை அவளுக்கு.
வெளியே சென்றிருந்த அனைவரும் வீட்டிற்கு வந்திருந்தனர்.
மல்லிகா போன் செய்யும் வரை நல்லதொரு உறக்கம் இருவரிடமும்.
“வரு, உங்க வீட்டுல இருந்து வந்திருக்காங்க. சீக்கிரம் வா” என்ற மல்லிகாவின் அழைப்பில் வேகமாய் எழுந்தவள், தன்னை சீர்ப்படுத்திக் கொண்டு கீழே சென்றவள் கணவனையும் எழுப்பி விட்டு சென்றிருந்தாள்.
“வாங்கத்தை, வாங்க மாமா! எங்கே பரணி மாமாவும், சுபா அக்காவும்?”
“அவுங்க நாளைக்கு காலையில வருவாங்க வருணா.சுபா அம்மாக்கு முடியலையாம், அதான் சுபா அங்க போயிருக்கா.” முத்துப்பேச்சி கூறிட,
“ஓ சரிங்கத்தை!” என்றவள் அதற்கு மேல் அதனை விசாரித்துக் கொள்ளவில்லை.
அவர்கள் டீ அருந்திய நேரம், வந்தான் முகிலன்.
“அம்மா வாங்க, அப்பா எங்க காணோம்?”
“வெளிய உன் மாமானார் கிட்ட தான் பேசிட்டு இருக்காரு.”
“சரி நான் பாத்துக்கிறேன்.” என்றவன் அவர்களிடம் செல்ல,
அதற்குள் அவனை தேடி வந்திருந்தான் கிருஷ்ணா.
“வாங்க மாப்பிள்ளை, நல்ல தூக்கமா.”
“கல்யாண மாப்பிள்ளை வீட்ல இல்லாம,எங்க போயிட்டு வர்றீங்க மச்சான் நீங்க?”
“மண்டபத்தலு சின்ன வேலை இருந்தது மாப்பிள்ளை.”
“எல்லாம் வேலையும் முடிஞ்சதா?” என பேசியபடியே இருவரும் வெளியே சென்றிருந்தனர்.
“எங்கத்தை அவரு, சத்தம் கேட்டுச்சு” கையில் அவனிற்கான டீயுடன் வருணா வர,
“தம்பி வெளியே போயிருக்காரு, நீ கொண்டுப் போயி குடு” என்ற மல்லிகா,
“அண்ணி நீங்க வாங்க, கெளரிக்கு எடுத்ததை பாக்கலாம்.” என்றபடி முத்துப் பேச்சினை தங்களுடன் அவர் அழைத்துக் கொள்ள, இவள் கணவனை தேடி சென்றாள்.
“அப்புறமுங்க தம்பி, உங்களுக்கு துணி எடுக்கனும். பணமா தந்திடட்டா? இல்லை நிச்சயத்தை முடிச்சிட்டு கடைக்குப் போகலாமா?” குருசாமி மருமகனிடம் கேட்டுக் கொண்டிருக்க,
“வருணாக்கு எப்புடி இஷ்டமோ, அப்புடியே பண்ணிக்கலாம் மாமா.” என்றபோது வருணா வந்துவிட்டிருந்தாள்.
“வருணாம்மா உனக்கு எப்படி வசதி?”
“நீங்க பணமா கொடுங்கப்பா, நம்ம எல்லாரும் சேர்ந்து போய் எடுத்துக்கலாம்.” என்றவள் கணவனிடம் டீயை கொடுத்திருந்தாள்.
“அதான், நாங்களே கூட வரோம்ல அப்பறம் எதுக்கு பணம் கேட்கிற?” கிருஷ்ணா கேட்டிட,
“உங்க பட்ஜெட் எவ்வளவுன்னு தெரியாமா, நான் கூட எடுத்துட்டா என்ன பண்ணுறது? அதான் முன்னாடியே கேட்டு வச்சுக்கலாம்னு.” என்றவள் சிரிப்புடன் இழுக்க,
“அடடே, நீ பொறுப்பான பிள்ளையா மாறிட்டன்னு நாங்க நம்பனும்னு, உன்னோட பொறுப்புத்தனத்தை இதுல காட்ட வேண்டாம் வருணாக்ஷி கார்முகிலன்.” கிருஷ்ணா சிரிப்புடன் தங்கையை மிரட்ட,
“உனக்கு காசை மிச்சம் பண்ணலாம்னு நெனைச்சேன், வேணாட்டிப் ப்பே.” என்றவள் உதடு சுழிக்க,
“ஏன் தாயி அப்புடி சொன்ன? அம்மா ஏதுமா சொன்னாளா?” தந்தையாய் மகள் இப்படி தங்களிடம் விலகி நின்றுப் பேசியதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை குருசாமியால், நொடியில் அவரது முகம் வாடி விட்டது.
“அட, மருமக ஏதோ விளையாட்டாப் பேசுது குருசாமி.” மகாலிங்கம் கூறிட,
“அப்பா, என்னப்பா? நான் சும்மா தான் வெளையாட்டுக்கு பேசுனேன்.”
“உங்க மகளை பத்தி தெரியாதா மாமா, சின்னப்பிள்ளை தனமா யோசிக்காமா பேசிடுவா, நீங்களே கூட வந்து உங்கப் பொண்ணுக்கு ஆசை தீர எடுத்துக் கொடுங்க.” என்றபடியே அடிக்கண்ணால் மனையாளை முறைத்து வைத்தான் முகிலன்.
‘நேத்து முழுசும் சீரு வேணாம்னு சொல்லிட்டு, இப்போ மாமானார் முகம் லேசா வாடுனதும் என்னை முறைக்கிறதப் பாரேன்! சிடுமூஞ்சி வாத்தி.’ என மனதிற்குள் அவனை திட்டியவள், பதிலுக்கு முகத்தை திருப்பியபடி உள்ளே சென்றிருந்தாள்
.
மனைவியின் செய்கை, முகிலனின் உதடுகளில் புன்முறுவலை தோற்றுவிக்க, அழகான புன்னகையை உதடுகளில் தவழ விட்டவனின் பார்வை, வருணாக்ஷியை உல்லாசமாய் தழுவியது.