kani suresh
Moderator
லக்ஷ்மி வள்ளியிடம்" சிவால தான் நாங்க உன்ன பாக்க வரல வள்ளி" என்று கூற,
"ஏன் அண்ணி? அவன் என்ன செஞ்சான். ஏன் அவனால நீங்க என்ன பாக்க வரல?"
லட்சுமி சிறிது நேர மௌனத்திற்கு பிறகு ,"அத்தை எப்படி இருந்தாங்களோ, அப்படியே தான் இருக்கான் நம்ப சிவாவும், நீ வளர்த்த பையன், உன்னோட மருமகன், உன் மேல உசுரையே வச்சிருந்தான். அப்போ அந்த வயசுல நீ அவனை விட்டுட்டு போனது அவனுக்கு வருத்தத்தை கொடுத்துச்சு. முழுக்க முழுக்க அவனை வளர்த்தது நீ ! நீ இல்லாம தனியா இருக்கும்போது தனிமையை உணர ஆரம்பிச்சான். உன்னைக் கேட்டு அழுதான். அப்போ நீ அத்தை பேச்சி கேக்காம கல்யாணம் பண்ணிட்டு போன கோவத்துல, அத்தை அவன் கிட்ட உன்ன பத்தி தப்பு தப்பா சொல்லி வச்சுட்டாங்க, உன்ன புடிக்காம தான்டா உன் அத்தை உன்னை விட்டுட்டு போயிட்டா, நாங்க சொன்ன பேச்செல்லாம் கேட்கலைன்னு சொல்லி விட்டுட்டாங்க, அதுக்கப்புறம் முழுக்க முழுக்க அவன் அத்தையோட பொறுப்புல தான் வளர ஆரம்பிச்சான். அத்தை எது சொன்னாலும் அவனுக்கு வேதவாக்கு, இப்படி இருக்கும் பொழுது தான், அத்தைக்கு ரொம்ப உடம்புக்கு முடியாமல் போயிடுச்சு. சாகறதுக்கு முன்னாடி கூட, நம்மள வேணான்னு உதறி தள்ளிட்டு போன உன் அத்தக்காரி நான் செத்ததுக்கு அப்புறம் கூட, இந்த வீட்டு வாசப்படியை மிதிக்க கூடாது, நீ தாண்டா எனக்கு அப்புறம் இத காப்பாத்தணும் என்று அவனிடம் சொல்லிட்டு செத்துட்டாங்க. அது மட்டும் கிடையாது ,அப்பவே நீயும் பெருசா வளர்ந்ததுக்கப்புறம் காதல் கன்றாவினு திரியக்கூடாது எனக் கூறி தான் இறந்தார்.
அவனுக்கு அந்த வயசுல மனசுல பதிந்தது எல்லாம் அத்தை கூறிய வார்த்தைகள் மட்டும் தான். உன்ன அந்த வீட்டில் சேர்த்துக் கொள்ளக்கூடாது, உன்கிட்ட நாங்க யாரும் பேசக்கூடாது,உறவு கொண்டாட கூடாது, இன்னொன்னு அவனுக்கு காதல் என்ற வார்த்தையே பிடிக்கக்கூடாது, காதலிச்சு கல்யாணம் பண்ணிக்க கூடாது. இது மட்டும் தான். இப்ப வர அவன் மனசுல பசுமரத்தாணி போல பதிஞ்சிருக்கு.
இப்போ இத்தனை வருஷம் ஆகி கூட ,வேலை செய்ற இடத்துல நிறைய பொண்ணுங்க கிட்ட பேசுறான். ஃப்ரண்டா நிறைய பொண்ணுங்க கூட இருக்காங்க. ஆனா யாராவது லவ் பண்றதா சொன்னா, அந்த பொண்ணு கிட்ட பேசுறதையே நிறுத்திடுறான். இப்போ அவன் மனசுல பதிஞ்சிருக்க விஷயம், லவ் மேரேஜ் பண்ண கூடாது. இன்னொன்னு உன்ன வீட்டுக்குள்ள சேர்க்கக்கூடாது. இது ரெண்டும் தான் குறிக்கோளா வச்சுட்டு இருக்கான்". என கூறி முடிக்க,
"சிவா கிட்ட நான் பேசி பார்க்கிறேன் அண்ணி. அவன் நான் வளர்த்த புள்ள..அவன் என்ன ஏத்துக்கிட்டா மட்டும் போதும்! "என்றார் வள்ளி.
"அவன் லவ் மேரேஜ் பண்ணட்டும். பண்ணாடாட்டி போகட்டும் அது அவனோட தனிப்பட்ட விருப்பம். அதுல நான் தலையிட மாட்டேன். என்ன அவனோட அத்தையா ஏத்துகிட்ட கிட்ட மட்டும் எனக்கு போதும். நான் ஒரே ஒரு முறை அவன நேரில் பார்த்து பேசி பார்க்கிறேன்" என்று கெஞ்சினார்.
அப்போது லிங்கம் தாத்தா "இல்ல வேணாம் வள்ளி. இப்போதைக்கு நீ அவன்கிட்ட பேசி பார்க்க வேண்டாம்"
"ஏன் பா?".
"அவனுக்கு இப்பவே 29 வயசு ஆயிடுச்சு .கல்யாண வயசு, கல்யாணத்துக்கு பொண்ணு பாக்க கேக்குறதுக்கு கூட ,எனக்கு இப்போதைக்கு கல்யாணமும் வேணாம்.எனக்கு தெரியாம பொண்ணு பாக்க கூடாதுன்னு சொல்லிட்டு இருக்கான் .கொஞ்சம் கூட பிடி கொடுத்து பேச மாட்றான். இப்போ மூணு நாளா தான் நீங்க பார்க்கிற பொண்ண கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி இருக்கான். இப்போ இந்த நேரத்துல நீ அவன் கண்ணு முன்னாடி வந்து நின்னனா ஒரு வேலை அவன் மனசு மாறி கல்யாணமே வேணான்னு சொன்னாலும் சொல்லிட வாய்ப்பு இருக்கு" என்றார் தழுதழுத்த குரலுடன் லிங்கம்.
வள்ளியும் அதன் பிறகு பெற்றவர்களாக திருமண வயதில் இருக்கும் பிள்ளைக்கு கல்யாணம் பண்ணி பாக்குறது தானே அழகு! என்று யோசித்தவர் .
"என்னைக்கு என்ன ஏத்துக்கணும்னு இருக்கோ அன்னைக்கு ஏத்துக்கட்டும்" என்றார் மனதில் ஏற்பட்ட வலியுடன்,
" எனக்கும் அவன் கல்யாணத்த பாக்கணும்னு ஆசை. பொண்ணு பாத்துட்டீங்களா ?இல்ல இனிமேதான் பொண்ணு பார்க்கணுமா ?நானும் என் பக்கம் இருந்து பாக்கட்டா?" என்றார் ஆர்வமாக,
வள்ளி அவ்வளவு கேட்டும், லிங்கம் ,மதியழகன் ,லட்சுமி மூவரும் அமைதியாக இருக்க. வள்ளிக்கு ஒன்றும் புரியவில்லை.
"அண்ணி உங்ககிட்ட தான் கேட்டுட்டு இருக்கேன். ஏன் மூணு பேருமே அமைதியா இருக்கீங்க? பொண்ணு பாத்துட்டீங்களா ?இல்ல இனிமேதான் பார்க்கணுமா ?"என்றார் மீண்டும்.
ஆழ்ந்த மூச்சை வெளியிட்ட லட்சுமி ,வள்ளியின் கையை பிடித்துக் கொண்டு,
"நான் உன்கிட்ட ஒன்னு கேட்பேன் தப்பா எடுத்துக்க மாட்டியே ?"என்றார்.
"என்ன அண்ணி சொல்லுங்க ?இதுல நான் தப்பா எடுத்துக்க என்ன இருக்கு?"
லட்சுமி தயக்கத்துடனே ,"உன்னோட பொண்ணு நிலாவை நம்ம சிவாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்க உனக்கு சம்மதமா?" என கேட்க.
"அண்ணி என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? இப்போ தான் சிவா என்ன ஏத்துக்க மாட்டான்னு சொன்னீங்க ?இப்போ என்னோட பொண்ண அவனுக்கு கேக்குறீங்க? நிலா என்னோட பொண்ணுன்னு தெரிஞ்ச பிறகு அவன் எப்படி அவளை கல்யாணம் பண்ணிப்பான்? நம்ம குடும்பம் ஒன்னு சேரனும்னு இப்படி யோசிச்சா அதுல பாதிக்கப்படப் போறது சிவாவோட வாழ்க்கையும், என் பொண்ணோட வாழ்க்கையும் தான்.
என்ன ஏத்துக்க மாட்டான்னு சொன்னீங்க .சரி அவன் கல்யாணம் பண்ணட்டும். அதுக்கப்புறம் அவன் கண் முன்னாடி வந்து நிக்கலாம்னு யோசிச்சேன். இப்போ நிலாவ பொண்ணு கேக்குறீங்க?"
லட்சுமி பேச வருவதற்கு முன்பாகவே, இடைவெட்டிய நிலா ,"அத்தை நான் வீட்டுல பேசிட்டு உங்களுக்கு ஒரு நல்ல செய்தியா சொல்றேன்" என தன் அத்தையிடம் கூறியவள்.
தன் தாத்தா ,அத்தை ,மாமா மேனகா என அனைவரிடமும் சொல்லி கொண்டு, தன் குடும்பத்தை அழைத்துக் கொண்டு கிளம்பினாள் வீட்டிற்கு..
வள்ளி தான்," என்ன நிலா விளையாடுறியா? நீ அன்னைக்கு பார்த்ததா சொன்னது சிவா தானு தெரியுது. அப்படித்தானே ?அந்த போலீஸ் சிவா தான? ஆனா, எங்களால இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க முடியாது"என்றார் முடிவாக,
அவர் அவ்வளவு கூறியும் நிலா அமைதியாக இருக்க .
"என்னடி நான் பேசிட்டு இருக்கேன் .அமைதியா இருக்க?"
தன் தாயின் கண்களை உற்று நோக்கியவள்." உங்களை ஒன்னு கேக்குறேன் தப்பா எடுத்துக்காதீங்க. நீங்க லவ் மேரேஜ் தான பண்ணிக்கிட்டீங்க. என்கிட்டயும் ,உதயா கிட்டயும், நீங்க இத்தனை வருஷமா என்ன சொன்னீங்க ?என் புள்ளைங்க லவ் பண்ண கூட நாங்க அதுக்கு எதிர்ப்பு சொல்ல மாட்டோம். அவங்க ஆசைப்பட்ட விருப்பப்பட்ட வாழ்க்கையை அமைச்சு தருவேனு சொன்னீங்க தான. ஆனா இன்னைக்கு என்னோட காதலுக்கு நீங்களே எதிரியா இருக்கீங்க? "
அவள் வார்த்தையை கூட முடிக்கவில்லை ..உதயா நிலாவை ஓங்கி ஒன்று கன்னத்தில் விட்டிருந்தான். "யார்கிட்ட என்ன பேசிட்டு இருக்கேன்னு புரியுதா ?இல்லையா ? நீ யார்கிட்ட பேசிட்டு இருக்கேன்னு தெரியுதா ? உன்ன பெத்தவங்க கிட்ட பேசிட்டு இருக்க ஞாபகத்துல இருக்கட்டும்.
அது மட்டும் இல்லாம நான் கேட்கும் போது நீ அவனை விரும்பலன்னு சொன்ன? இப்போ அவனை விரும்பறதா சொல்ற?"
நிலா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க.
அப்போது அன்பழகன் தான் பெருமூச்சு விட்டபடி ,நிலாவின் அருகே வந்து அவள் கையை பிடித்துக் கொண்டு ,"குட்டிமா நீ உன் அம்மா அவ குடும்பத்தோட சேரணும்னு நினைச்சு எந்த முடிவையும் எடுக்காதடா. இது உன்னோட வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம். இப்போ வரைக்கும் நீ சிவாவை பார்த்த வரைக்குமே கூட, உனக்கும் அவனுக்கும் செட் ஆகல. முட்டி மோதிக்கிட்டு தான இருக்கீங்க ?அப்படி இருக்க? சரி நீ உண்மையாவே அவன விரும்பறதா கூட இருக்கட்டும். ஆனா,இப்படிப்பட்ட சூழ்நிலையில எங்களால் உன்ன அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியாது. உண்மையா உன் மனசுல அவன் இருந்தானா ?எங்கள மன்னிச்சிடு இது எங்களால முடியாது."என்றார்.
நிலா ஒரு முடிவெடுத்தவளாக ,அவர்கள் முன்பு நின்றவள். "நான் அம்மாவுக்காக மட்டும் இதை யோசிக்கலப்பா. அம்மா தூக்கி வளர்த்த பையன் தானப்பா அவரு. அம்மா மேல இப்போ வெறுப்பு இருக்கலாம். அவர் ஒன்னும் கெட்டவர் இல்லையே. பாட்டி சொன்னாங்கன்றதுக்காக அவர் அம்மாவை வெறுக்கிறது நியாயமா? பாட்டி சொன்னாங்க என்ற ஒரே காரணத்துக்காக வெறுத்துட்டு இருக்காரு. ஆனா அம்மாவை எதுக்கு வெறுக்கிறோம் என்று தெரியாமலே வெறுக்க செய்யறாரு. அதே சமயம் அம்மாவுக்கும் அவங்க அண்ணன் பையன் மேல பாசம் இருக்க தானே செய்யும். அவருக்கு கூட ஏதோ ஒரு மூலையில தன்னை வளர்த்த அத்தை மேல பாசம் இருக்கும் தானே!
பாட்டிக்காக வெறுக்கிற மாதிரி இருந்தாலும், அம்மா தனக்குனு ஒரு குடும்பம் இருந்தும் ,எதுக்காக இத்தனை வருஷம் பிரிந்து இருக்கணும். இது எல்லாத்தையும் விட எனக்கு உண்மையாவே அவர புடிச்சிருக்கு .நான் அண்ணன் கிட்ட சொல்லும்போது கூட அவர பார்க்கும்போது ஏதோ ஒன்னு தோணுதுன்னு சொன்னேன். அது என்னனு எனக்கே தெரியாம என்னால அவன் கிட்ட சொல்ல முடியல. ஆனா இன்னைக்கு கோவிலில் அவரை குடும்பத்தோட பார்த்தவுடனே எனக்கு அவர கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணுச்சு. அவர்தான் என்னுடைய லைஃப்னு நான் அங்கவே முடிவு பண்ணிட்டேன்.. நான் வீட்டுக்கு வந்து உங்க கிட்ட இத பத்தி பேசலாம்னு நெனச்சு இருந்தேன். அவர்கிட்ட என்னோட விருப்பத்தை சொல்றதுக்கு முன்னாடி. ஆனா, அதுக்கு அப்புறம் தான் எனக்கு தெரிய வந்துச்சு அம்மாவுக்கு இப்படி ஒரு குடும்பம் இருக்குன்னு, அம்மாவோட அண்ணன் பையன் தான் சிவா என்று தெரிய வந்துச்சு. மனசார அவரை விரும்புற எனக்கு அவர்தான் புருஷனா வேணும். இல்லனா எனக்கு கல்யாணமே வேணாம்.. நீங்க என்னனு யோசிச்சு முடிவு எடுங்க" என்று நகர்ந்து விட்டாள்.
பெற்றவர்கள் இப்பொழுது என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்க, உடன்பிறந்தவனோ, நிலாவுக்கு அவன் வேணவே வேண்டாம். என்று ஒரே பிடிவாதமாக நின்றான்.
தனது தாயையே எந்த ஒரு காரணமும் இல்லாமல் வெறுப்பவன். தங்கையை எப்படி நன்றாக பார்த்துக் கொள்வான்? என்று அண்ணனாக யோசித்தான்.
அவனுக்கும்,நிலாவுக்கும் டாம் அண்ட் ஜெர்ரி போல் அப்பப்போ முட்டுக் கொள்ளும் அதற்காக பாசம் இல்லாமல் இல்லையே?
அவனுக்கு நிலாவை ரொம்பவே பிடிக்கும் .அப்படி இருக்கும் நிலையில் எப்படி தனது தங்கையை விருப்பமே இல்லாமல் திருமணம் செய்து வைப்பான்..
இங்கு அனைவரும் இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் நிலையில் , சிவாவோ இங்கு நடப்பது எதையும் அறியாமல் அவனுடைய வேலையில் கவனமாக இருந்தான்...