priya pandees
Moderator
அத்தியாயம் 21
மனோ சிலபல காரணங்களோடு தான் அவர்முன் சென்று நின்றாள். இனிதான் அவளும் அவள் கணவனும் ஒரே இடத்தில் ஒன்றாக திருமண வாழ்க்கையை வாழவிருக்கிறார்கள். இப்போதென்று சொத்து வழக்கு, நீதிமன்றம் என அலைவதில் பிடித்தமில்லை, இது ஒரு காரணமென்றால் மற்றொன்று தெரிந்தே என்றாலும் இவள் அன்று சொன்னது உண்மையாகியிருந்தது, எவ்வளவு பெரிய நஷ்டம் இது, இதனால் அவள் கணவன் எந்தவகையிலும் வாழ்க்கை, நம்பிக்கை என எந்த பிடிப்பாதரத்தையும் இழந்துவிட கூடாது என்ற எண்ணம். இவ்வாறு அவளுக்கும் அவனுக்குமான காரணங்களாலேயே இந்த வழக்கை சீக்கிரம் முடித்துவிட வேண்டும் என நினைத்தாள். இந்த பிரச்சனை சுலபமாக முடிய வேண்டி அவள் இஷ்ட தெய்வத்திற்கு பெரிய வேண்டுதல் கூட வைத்திருக்கிறாள்.
இதோ இப்போதும் நஷ்டத்திற்கு காரணமானவரையும் வெறுப்பேற்றும்படி வந்து நிற்கிறாள், ஆனால் உள்ளுக்குள் அவ்வளவு யோசனைகள், அனைத்திலும் அவள் கணவன் தான் பிரதானமாக நின்றான்.
மார்க்கின் மாமா, வாய்தா வாங்கிவிட்டாலும், பணம் குடுத்ததாக காண்பிக்க என்ன செய்யலாம் என்ற யோசனையில் எரிச்சலோடு வந்தவர் எதிரில் வந்து நின்றவளை அதே எரிச்சலோடு தான் பார்த்தார்.
"அப்றம் சித்தப்பா? ரொம்ப சந்தோசமா இருக்கீங்க போல?" என சிரித்த முகமாக கேட்டவளை இன்னும் கடுப்பேற முறைத்தார்.
"புருஷன் திரும்ப வந்துட்டான்னு திமிரா உனக்கு? இருக்க தான செய்யும். ஒன்னுந்தெரியாதவ மாறி இம்புட்டுன்டா மூஞ்சிய வச்சுகிட்டு அப்பவே எங்களலாம் கண்டுபுடிச்சுருக்கள்ல" என்றார்,
"அப்படியும் வச்சுக்கலாம். நா அவர் பொண்டாட்டி அவர் திரும்ப வந்துட்டாருன்னு சந்தோசமா இருக்கேன் நியாயம். நீங்களும் அதனால தான் ரொம்ப சந்தோசமா இருக்கீங்கன்னு கேள்விபட்டேனே? இன்னும் என் புருஷன் மேல இருக்க பாசம் குறையலையோ?"
"ஏய் என்ன? உன் புருஷன் வந்தா என்ன அப்படியே காணாம போனாதான் எனக்கு என்ன? இந்த நையாண்டி எல்லாம் வேறெங்குட்டும் வச்சுக்கணும்"
"இத்தனை நாள் வாங்கி வாங்கி அவர் பணத்த அமுக்கும்போது அவன் எப்படியும் காணாம போட்டும்னு நினைக்க தோணலல? வாழ்க்கை பூராவும் அடுத்தவன் காசுல திண்ணு உடம்ப வளர்த்தா இப்படி தான் பேச தோணுமோ?" என கேட்க,
"அவன் காசுல திண்ணேன்னு பாத்தியாமா நீயி? அவன் காசெல்லாம் அவன பெத்தவங்களுக்கு வைத்தியம் பாக்கவே சரியா பத்தாது. கைகாசு போட்டு இதுங்களுக்கு சேவை பார்த்ததுக்கு தான் இங்க நிக்றேன் நான்"
"அடடா உங்க தொண்டு சேவைக்கு அவார்ட்டே குடுக்கலாமோ? சரி ரோசக்காரக எதுக்கு இன்னும் ஏமாத்தி பிடுங்கின சொத்துக்கு நாயா அலைறீங்க"
"ஏய் அடுச்சுருவேன் வார்த்தைய பார்த்துவிடணும்" என அவர் எகிற, அசராமல் தான் நின்றாள் மனோ.
"அப்பா கோர்ட்ப்பா இது. அடிச்சா கேஸாகிடும். அதுக்கு தான் அவங்க வந்து பேசுறாங்க" என ஓடி வந்து தடுத்தான் கிஷோர். அவன் அம்மா அங்கு இன்னும் சாம்பவியுடன் ஏதோ பேச்சுவார்த்தையில் இருந்தார். கிட்டத்தட்ட கெஞ்சிக்கொண்டிருந்தார் என்றும் சொல்லலாம்.
"இவளாம் ஒரு ஆளாடா என் எதிர்க்க நின்னு பேசுறா?"
"ஏன் உங்க எதிர்க்க நிக்க நாளு கால் வேணுமோ? இனத்தோட மட்டும் தான் பேசுவீங்களோ?" என்றாள் அப்போதும்.
"என்னடி வாய் ரொம்ப நீளுது?" என அடிக்க கையை ஓங்க, பிடித்துவிட்டான் கிஷோர்.
"நீ டி போட்டா நா டா போட்டு பேசுவேன் பரவால்லயா சித்தப்பா?" என்றாள். அவள் பேச்சில் அவ்வளவு நிதானம். அவரை கோபபடுத்தி பார்த்தாளே அன்றி அவள் முகத்தில் கூட கோபம் தெரியவில்லை அமைதியாக சின்ன சிரிப்புடன் தான் பேசி நின்றாள்.
"இப்படி பேசாதீங்க. அத்தானுக்கு தெரிஞ்சாலே திட்டுவான்" என்றான் கிஷோர்.
"புதுமாப்ள தான நீ? கல்யாணம் ஆன கையோட கோர்ட் கேஸுன்னு அலையிற? ஒருவேளை பொண்ணு வந்த நேரம் சரியில்லையோ. அப்ப இனி உன் வாழ்க்கை முழுக்க அந்த பொண்ணோட தானே வாழணும்? என்னென்ன நடக்க போகுதோ, பேசாம அந்த பொண்ண வேணாம்னு அனுப்பிடு" என்றவள், "நீங்க பண்ண பாவத்துக்கு அந்த பொண்ணும் சேர்ந்து பழி சுமக்க வேணாம் பாரு. அனுப்பிடு" என்றாள்.
"உங்களுக்கு தேவையில்லாதத பேசாதீங்க"
"ஆமா ரைட். அது என் பிரச்சனையே இல்ல. நீ வாழ்ந்தா என்ன இல்லைனா எனக்கு என்ன? என் பிரச்சனைய மட்டும் பேசுறேன், என்ன சித்தப்பா பண்ணலாம், சிவில் கேஸ் வேற இழுத்தா, இழுத்து பத்து வருஷம் பனிரெண்டு வருஷம்னு ஓடிடும். நமக்கும் வெறுத்து போவும், சமரசமா பேசி ஒரு முடிவுக்கு வருவோமா?" என கேட்க,
"எங்க சொல்லேன் உன் சமரசத்த கேட்போம்?" என்றார் அவரும் தெனாவெட்டாக,
"உங்களுக்கு அந்த இடம் தான் வேணும்னா பரவால்ல வச்சுக்கோங்க, இன்னைக்கு டேட்டுக்கு அந்த இடத்துக்கான வேல்யூவ மட்டும் குடுத்துடுங்க, இல்ல காசு தரமுடியாது அவ்ளோலாம் உங்கள்ட்ட இல்லை நீங்களே குடும்பமா திருடியோ, பிச்சை எடுத்தோ தான் வாழ்றீங்கனா இடத்தையே திரும்ப குடுத்திடுங்க. காசா, இடமா எத செய்யலாம்னு சொல்லுங்க. ஈசியா பத்து நிமிஷத்துல வேலைய முடிப்போம்" என்றாள்.
"அது என் இடம் என் பேர்ல இருக்கத நா ஏன் விட்டுகுடுக்கணும்" என்றார் அவர் சுற்றி பார்வையை ஓட்டி,
"உங்க இடமா? எப்படி சம்பாதிச்சீங்க? அவ்வளவு ரூபாய்க்கு சோர்ஸ் கேட்பாங்களே எத காட்டுவீங்க? பேங்க்ல கொள்ளை அடிச்சேனுவீங்களோ? அதுக்கு கூட ஃபோட்டோ இல்லனா வீடியோ ஆதாரம் வேணுமே வச்சுருக்கீங்களா இல்ல இனி தான் ரெடி பண்ண போறீங்களா? பாத்து மாட்டிக்காம எடுங்க"
"என்னடி விட்டா ஓவரா பேசுற? கொண்ணு குழில இறக்கிருவேன்"
"ஓ! அப்ப கொலை பண்ணி சம்பாதிச்சீங்களா? எத்தன கொலை பண்ணிருப்பீங்க இதுவரை? அப்ப உங்கள தூக்குல போடணுமே, என்ன இப்படி வெளில விட்டு வேடிக்கை பாக்றாங்க" என பேச, அவருக்கு அழுத்தம் அதிகமாகி கொண்டே இருந்தது.
"என்ன சொல்லி அனுப்பினான் உன் புருஷன்? என்னத்துக்கு இப்படி நின்னு ஆட்டங்காட்டுற நீ?"
"ரெண்டே ஆப்ஷன், காச தரீங்களா இல்ல இடத்தையே தரீங்களா சித்தப்பா?"
"ரெண்டும் முடியாதுடி, எனக்கு இல்லனா உங்களுக்கும் இல்ல. கிடைக்க விட மாட்டேன். நாங்க அப்படியே இருப்போம் நீங்க மேலமேல சொத்து சேர்த்துட்டு போவீங்களோ? கடைசிவர இந்த சொத்துக்காக அலைஞ்சே சாவுங்க" என ஆத்திரமாக பேசினார்.
"அப்படி என்ன கோபம் என் புருஷன் மேல?"
"எனக்கு கீழ இருந்தவன் அப்படியே இருந்துருக்கணும். என்னைய மீறி போயிருக்க கூடாது. நானே இன்னும் ஒரு சொத்து லட்சத்துல வாங்கல, இவன் கோடில வாங்குவானோ? அப்ப அது எனக்கு தானே சொந்தமாகணும்?"
"சம்பாதிச்சு வாங்க வேண்டியது தான? ஆம்பள பிள்ளை தானே நீங்களும் வச்சுருக்கீங்க?"
"அந்த தருதலை நல்லா சம்பாதிச்சு அந்த மாராவ தாண்டி போயிருந்தா நா ஏன் இப்படி உன் முன்னலாம் நின்னு பேசிட்ருக்க போறேன்?"
"அப்ப வேணும்னு தான் செஞ்சீங்க?"
"ஆமாடி என்ன பண்ணுவீங்க? தெரிஞ்சு தான் அந்த இடத்த எழுதி வாங்குனேன்"
"அத எழுதி வாங்கினேன்னு சொல்ல கூடாது, ஏமாத்தி வாங்குனேன்னு சொல்லணும்" என திருத்திக்கொடுத்தாள்.
"ஆமா உன் மாமியார ஏமாத்தி தான்டி வாங்குனேன், உன் புருஷனால ஆனத பாக்க சொல்லு. கடைசிவரைக்கு இந்த இடத்த வாங்க முடியாம அலைஞ்சு நொடிஞ்சு போய் என்ட்ட வந்து அவன கெஞ்சிட்டு நிக்க விடுவேன். அப்ப நீயும் வருவல்ல, சேர்ந்து கெஞ்சுங்க" என எகத்தாளமாக சிரிக்க,
"ம்ம் எல்லாத்துலயும் பேராசை? அது ஒரு வியாதி சித்தப்பா, மருந்தே கிடையாது. கொஞ்சம் கொஞ்சமா அரிச்சு மொத்தாமா இல்லாம பண்ணிடும். பாத்து ஜாக்கிரதையா இருங்க" என தோளை குலுக்கி திரும்ப முயல,
"ஏய் இந்தா நில்லு. இந்த பேச்செல்லாம் உன் புருஷனுக்கு சொல்லு. ஒழுங்கா பொழப்ப பாக்க சொல்லு"
"சொல்லலைனா?"
"சொல்லனா கேஸூக்கு அலைஞ்சு அம்புட்டையும் தொலைச்சிட்டு கடைசி என்ட்ட தான் வந்து நிக்கணும்"
"பாப்போம் சித்தப்பா. சீக்கிரமே திரும்ப சந்திப்போம். புதுசா கல்யாணம் ஆனவங்கள கவனிங்க. அப்புறம் ஜெயிலுக்கு போய்ட்டா கூட இருந்து கவனிக்க முடியாதுல்ல" என நக்கல் சிரிப்புடனே நகர்ந்துவிட்டாள்.
அவர் முறைத்தே நிற்க, கிஷோர் தான், "வாங்கப்பா போலாம்" என இழுத்துக் கொண்டு நடந்துவிட்டான். அவனும் அவன் அம்மாவும், 'வேண்டாம் விட்டுவிடலாம்' என சொல்லி பார்த்துவிட்டனர், அவர் தான் கேட்கமாட்டேன் என அடம்பிடித்து நிற்கிறார்.
மனோ அவள் அத்தை அருகில் செல்லவும், கிஷோரின் அம்மாவும் விலகிச் சென்றுவிட்டார்.
"உன் மூஞ்சிய பாக்கவே அவமானமா இருக்காம்" என சாம்பவி அவருக்கு பதில் குரல் கொடுக்க,
"அவங்க புருஷன் செஞ்சது அவமானமா இல்லையாமா?" என்றாள் மனோ.
"இவ என்ன பண்ணுவா அதுக்கு"
"கூட வச்சுருக்காங்களே? தப்புன்னு தெரிஞ்சா சாப்பாடுல விஷம் வச்சுருக்க வேணாமா?" என இவள் சொல்லவும் அதிர்ந்து விழித்தார் சாம்பவி. இனி அவர் அவர்களுக்கு ஏதுவாக பேசமட்டுமில்லை யோசிக்கவும் கூடாது என்றே அவ்வாறு கூறினாள்.
"ஏம்மா?" என சாம்பவியை காண்பித்து சுரேந்தர் சிரிக்க,
"துரோகம் பண்ணவங்களுக்கு பாவம் பாக்றளவுக்கு நாங்க அன்னை தெரசாவுமில்ல, மன்னிக்க ஏசுநாதரும் இல்ல அண்ணா. சாதாரண மனுஷங்க தான் எனக்கு வலிக்குது உனக்கும் கொஞ்சம் வலிக்கட்டும்னு நினைக்கிற சாதாரண மனுஷங்க. இவங்களும் தெய்வபிறவி ஆக வேணாம், மனுஷியாவே இருந்தா போதும்" என சாம்பவியும் கேட்டு நிற்கவே கூறினாள்.
"எதுக்கு வீடியோ எடுக்க சொன்ன? இங்கிருந்து அங்க நீங்க பேசிட்டது ரொம்ப மெதுவா தான் கேட்குது. இத ஆதாரம் காட்டினா, எடிட் பண்ணிருக்காங்கன்னு முடிச்சுவிட்ருவாங்கமா" என்றான் சுரேந்தர் தான் எடுத்ததை காண்பித்து.
"அன்னைக்கு எடுத்தது வேஸ்டா போச்சுன்னு தான் அகைன் எடுத்தேன் அண்ணா. மினி மைக் என்ட்ட சேரில இருந்தது. சோ நாம எடுத்தது இந்த டைம் வேஸ்டாகாது" என்றவள் தன் கையில் வைத்திருந்த மினி மைக்கையும் காண்பித்தாள்.
"நல்லது தான்மா. எந்த ஃப்ளூக்கும் குடுக்க கூடாது அந்தாளுக்கு. இந்தமாதிரி ஆளுங்களாம் ரொம்ப டேன்ஞர், எத செய்யவும் யோசிக்க மாட்டாங்க. சீக்கிரம் அங்கயிருந்து அவர க்ளியர் பண்றது, இவங்க ரெண்டு பேருக்கும் சேஃப்" என்க, தலையசைத்து கேட்டுக்கொண்டாள்.
இதற்குள் மார்க், அவளுக்கும் சுரோந்தருக்கும் மாற்றி மாற்றி பத்து முறைக்கு மேல் அழைத்துவிட்டான்.
"நா அவங்கட்ட பேசிட்டு அப்படியே கிளம்புறேன் அண்ணா. நீங்க இவங்கள வீட்ல விட்டுட்டு கிளம்புங்க" என்றாள்.
"இரேன்மா கார்ல தானே, அவங்கள வீட்ல விட்டுட்டு அப்படியே கிளம்பினா உன்னையும் இறக்கிவிட்டுட்டு நா போயிக்கிறேன்" என்றான்.
"இல்லணா உங்களுக்கும் லேட்டாகும். நீங்க கிளம்புங்க நா பாத்துக்குறேன். பசங்கள வேற விட்டுட்டு வந்துருக்கேன் தேடுவாங்க" என்றவள், மாமியார், மாமனாரிடமும் வந்து சொல்லிவிட்டு கிளம்ப, "நீயும் வாம்மா வீட்டுக்கு. இங்க எங்களோடவே வந்துடேன்" என்றழைத்தார் மணிகண்டன்.
"என் வேலை அங்க தான் மாமா. இனி அத யாருக்காகவும் விட்டு தர்றதா இல்ல. நீங்க எதுனாலும் கால் பண்ணுங்க நா வரேன்" என கிளம்பியேவிட்டாள்.
இவள் அங்கிருந்து ஆட்டோவில் ஏறி பேருந்து நிலையம் வந்து, நறுமணந்திக்கு போகும் பேருந்தில் ஏறி அமர்ந்த பின்னரே அவனுக்கு அழைத்தாள்.
"என்னடி பண்ணிட்டு வந்துருக்க? அந்த ஆள்ட்ட இப்படி போய் நிக்கணுமாக்கும். நா பாத்துக்க மாட்டேனா?" என தான் ஆரம்பித்தான் மார்க் எடுத்ததுமே. சுரேந்தர் அனைத்தையும் சொல்லி அந்த காணொளியையும் அவனுக்கு அனுப்பி வைத்திருக்க, அதை அவன் பார்த்துக்கொண்டிருக்கும்போது தான் அழைத்துவிட்டிருந்தாள் மனோ.
"சீக்கிரம் முடிச்சா நம்ம வேலைய நிம்மதியா பாக்கலாம்ல? செய்யாத தப்புக்காக அலைஞ்சுட்டே இருக்கணுமா?"
"எப்படியும் இழுக்க தான் செய்வாங்க. அதையே போட்டு யோசிக்காம அடுத்து என்னன்னு பாத்துட்டு முன்னேறி போயிட்ருக்க வேண்டியது தான். அவர வேறெதையும் சிந்திக்கவிடாம செஞ்சாலே போதும் தானா வழிக்கு வருவாரு மனோ"
"என்னால முடிஞ்சத நா செய்ய ட்ரை பண்றேன். அவர எதாவது கேட்கணும் போலவும் இருந்தது. அதான் கேட்டுட்டும் வந்தேன்"
"சரி போ. உன்கூட தான் மல்லுகட்ட வேண்டிய வரும்னு நினைச்சுட்டு வந்தேன். ஆனா பாரு ஏதேதோ வில்லங்கத்துல கொண்டு நிறுத்திருக்கு நம்ம சிட்யூவேஷன்"
"ம்ம் முட்டாளாவே இருக்காத மார்கண்டேயா கொஞ்சம் முழிச்சுக்கோன்னு கடவுள் உங்க கண்ண திறந்துவிட்ருக்காரு. நீங்க நன்றி சொல்லணும். இல்லனா உங்கள அமெரிக்காவ விட்டு நகர்த்திருக்க முடியுமா? இப்ப பாருங்க தன்னால கிளம்புறீங்க"
"பேசுடி நீ நல்லா! உனக்கு இவேன் நல்லா வாங்கட்டும்னு எண்ணம், அது நடந்துட்டுன்னு குஜால்ல பேசுற"
"ஹலோ, இது என் பசங்களுக்கு வந்து சேர வேண்டியது அத எப்படி போனா போட்டும்னு நினச்சு பேச முடியும்? உங்க அக்கா பங்குக்கு வருவாங்கன்னு நினச்சேன். இப்படி மொத்தமா போகும்னு நினைக்கவே இல்ல. சோ இது போனதுல எனக்கு வருத்தம் தான்"
"அப்ப கூட, உங்களுக்காகன்னு வாயில வரல உனக்கு?"
"ஆசை தான். இவங்க எங்கள யோசிக்கவே மறந்துட்டாங்களாம். நாங்க மட்டும் இவங்களயே யோசிச்சுட்டு இருக்கணும்னு எதிர்பாப்பாங்களாம்"
"ஒரு நேரம் அப்படிதான் இருந்த நீ. இப்பத்தான் மாறிட்ட"
"மாத்திட்டீங்கன்னு சொல்லணும்"
"சரி நாந்தான் என்னால தான் மாறிட்ட. இப்ப இல்ல இனி என்னைய தேடுவியா மாட்டியா நீ?"
"ம்கூம் எட்டு வருஷமா உங்கள தேடாம இருக்கத்தான் பழக்கவிட்ருக்கீங்க. இனி வந்து தான் உங்கள தேட வைக்கற மாதிரி எதாவது செய்யணும் நீங்க"
"தேட வைக்றேன்டி. வந்து பாத்துக்குறேன் உன்ன"
"ஹான் பாக்கலாம் பாக்கலாம்" என்றவள் சிரிப்புடனே அழைப்பை நிறுத்தினாள்.
"மசியிறாளா பாரு!" என்றவனுக்கும் சிரிப்பு தான்.
மூன்று மாதங்கள் வேகமாக தான் கடந்து சென்றிருந்தது. மார்கண்டேயன் மொத்தமாக அமெரிக்காவிற்கு, 'நன்றி வணக்கம்' சொல்லி கிளம்பி வந்திருந்தான். வள்ளுவனுக்கு அவனது வேலை நாள் முடிய இன்னும் பத்து நாட்கள் இருந்தது. மார்க் முன்னே கிளம்பிவிட்டான்.
நேராக பழூர் தான் சென்றான். அம்மா அப்பாவை பார்த்து அவன் அடுத்து செய்யப்போவதை பற்றியும் பகிர்ந்துவிட்டு அவர்களையும் நறுமணந்திக்கு அழைத்தான்.
"ஏன்டா அவளையும் பிள்ளைகளையும் கூட்டிட்டு இங்க வந்தே இருக்கலாமே? இங்க சொந்த வீட்ட விட்டுட்டு அங்கன வந்து ஏன் வாடகைக்கு இருக்கணும்? இங்க கூட அவ வந்து வேலைக்கு போகட்டும்" என்றார் மணிகண்டன்.
"அவ இங்க வர மாட்டேன்னு சொல்லிட்டாளாடா?" என்றார் சாம்பவி,
"இல்லம்மா நா காரணமா தான் சொல்றேன். இங்க நம்ம விஷயம் எல்லாருக்கும் தெரியும். ஒன்னு பாவமா பேசி ஆழம் பாப்பாங்க, இல்லனா ஈசியா ஏமாத்தலாமான்னு வழி தேடுவாங்க. இது ரெண்டுமே அவங்க செய்யலனாலும் அப்படித்தான் நம்மள பாக்றானோன்னு எதிர்ல நிக்றவன நானே சந்தேகமா தான் பாப்பேன். சோ இதெல்லாம் இல்லாம இருக்க புது தொழிலோட அங்க தான் இருக்கணும் நாங்க. நீங்களும் அங்க வாங்க, வாரத்துக்கு ஒருக்கா கூட இங்க வந்துட்டு போவோம்" என நிறுத்த,
"இல்லடா எங்களுக்கு இதுதான் வசதி. நீங்க வாராவாரம் வாங்க" என கூறிவிட்டனர் அவன் பெற்றோர். அவனும் வற்புறுத்தவில்லை, அவனுக்கு இங்கு இருப்பதும் நறுமணந்தியிலிருப்பதும் ஒன்றுதான், பனிரெண்டு வருடங்களாக ஊரை விட்டிருந்துவிட்டான் அதனால் அவனுக்கு அது சுலபம், அவர்களுக்கு அப்படி இல்லையே, அதனால் கட்டாயப்படுத்தவில்லை விட்டுவிட்டான். அதும்போக ரெண்டு சம்பந்தம் எடுத்த ஊரில் வந்து தங்க அவர்களுக்கு ஒருமாதிரியும் இருக்கலாம் என நினைத்துக் கொண்டான்.
மாலை போல் அவன் கிளம்பி வெளியே வர, அவன் மாமாவும் அப்போது தான் அவர் வீட்டிலிருந்து வெளியே வந்தார்.
"யோவ் இன்னும் வீட்டவிட்டுலாம் வெளில வர்றியா நீ? ஊரே காறி
துப்புதே அசிங்கமா இல்ல வெளில வந்து முகரைய காட்டுற? வெள்ள சட்டை ஒரு கேடு உன் சொட்டைக்கு" என இவனே அவரை பேச,
முதலில் அதிர்ந்து ஒரு நொடி நின்றவர், "ச்சை" என திரும்பவும் உள்ளே சென்றுவிட்டார். அவர் மருமகன் பேசுவான் என தெரியும், இந்தளவிற்கு இறங்கி பேசுவான் என தெரியாதே! இப்போது தான் நேரில் பார்க்கிறார்.
அவர் உள்ளே செல்லவும், கிஷோர் அவன் வண்டியில் வெளியே வரவும் சரியாக இருக்க, "ஆஹான் வாடா புதுமாப்ள, வா வா இப்டி வா, உன்னைய தான் தேடிட்டு இருந்தேன் நீயே வந்துட்ட" என அவனை வண்டியோடு இழுத்து பிடித்தவன், "வண்டிய விட்டு இறங்கு பாப்போம்" என்கவும் அவனும் இறங்கிவிட்டான்.
"அடுத்தவன் காசுல சொகுசு பைக் கேக்குதோ, நடந்து போ" என அவன் பின்னந்தலையில் அடித்து, அவன் நகரவும், "ஏய் நில்லு. போன்னா போயிருவியோ?" என மீண்டும் நிறுத்தியவன், "வண்டி யார் பேர்ல இருக்கு?" என கேட்க,
"என் பேர்ல தான்" என்றதும், "நா கூப்பிடுறப்ப வந்து கையெழுத்து போட்டு தர்ற நீ. இப்ப போ" என விரட்டிவிட்டான். பைக்கை பாவமாக பார்த்துக் கொண்டே தான் சென்றான் கிஷோர்.
இவன் அவனுக்கு தெரிந்த மெக்கானிக்கை வரைவழைத்து அன்றே அந்த வண்டியை விலைபேசி, கைமாற்ற ஏற்பாடும் செய்துவிட்டான். விஷயமறிந்து அவன் மாமா மறுநாளே சண்டைக்கு வர,
"யார் நீ? உனக்கும் எனக்கும் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது. அப்பனும் மகனும் என்னைய இளிச்சவாயின்னு நினைச்சீங்கள்ல? அதான் காட்றேன் நா யாருன்னு" என்றவன் கூடவே வந்த கிஷோரை, "எதுக்கு இந்தாள கூட்டிட்டு வந்த? உன்னைய என்ன சொன்னேன், கூப்பிடும்போது வந்து கையெழுத்து தான போட சொன்னேன்? எதுக்கு இவர கூட்டிட்டு வந்த?" என இன்றும் நான்கடி போட, அவன் மாமா எகிறி குதிக்க, கிஷோர் தான் அவரை இழுத்துச்செல்லும்படி ஆனது. அவனால் மார்க்கை திருப்பி அடிக்கவும் முடியவில்லை, தடுக்கவும் தெரியவில்லை, அவ்வளவு புதிதாக தெரிந்தான் இவன்.
"மார்க் அத்தான் இப்படியான்னு இருக்குமா? எவ்வளவு அமைதியா, சரி வச்சுக்கோ இனி சொல்லாம செய்யாதன்னு பேசுவான். அவனா இப்பிடி மாறிட்டாம்னு இருக்குமா" என கிஷோர் அவன் அம்மாவிடமும் புலம்பியிருந்தான்.
மறுவாரத்தில் வெறும் பத்து ரூபாய்க்கு கிஷோரிடமிருந்து இவன் பெயருக்கு வண்டியை மீட்டுக்கொண்டான். அதை மெக்கானிக் கூறிய விலைக்கு அவரை வைத்தே புது ஓனருக்கு கைமாற்றி பணத்தையும் பெற்றுக்கொண்டான்.
கையெழுத்திட வந்த அன்று, "என் காசுல வாங்குன ஃபோன எங்கடா?" என முறைப்புடன் வந்து நின்ற மார்க்கிடம்,
அடித்துவிடுவானோ என்ற பயத்தில், வேகமாக, "அது அப்பவே ரிப்பேரா போச்சு அத்தான். சத்தியமா அதுக்கடுத்து ரெண்டு ஃபோனு மாத்திட்டேன். இப்ப வச்சுருக்கிறது என் பொண்டாட்டி எனக்கு கிஃப்டா குடுத்தது" என எடுத்து காட்ட, அது ஐபோன் தற்போதைய மாடல்.