தனது வீட்டில் வேலை செய்ய வந்த தேன்மொழியை காதலிக்கும் நாயகன் ஆழிவேந்தன்... இருவரும் காதலித்து கொண்டிருக்கும் சமயத்தில் தனது தவறான புரிதலால் தேன்மொழியை வார்த்தைகளால் காயப்படுத்தி மனதை உடைத்து வீட்டை விட்டு போக வைக்கும் வேந்தன்... அவளை தேடி அலைந்து கொண்டிருக்கிறான் ஆழிவேந்தன்... அவனது கண்ணில் படாமல் ஆட்டம் காட்டி கொண்டிருக்கிறாள் தேன்மொழி...
இருவரும் சேர்வார்களா..?? தேன்மொழி அவனை மன்னித்து ஏற்றுகொள்வாளா என்பதே இக்கதை....
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி கிராமத்தின் (கற்பனை மட்டுமே) மையப்பகுதியில் அமைந்திருந்த கலை நயத்தோடு பழமை மாறாது அதே சமயத்தில் சற்று மாடர்னான மூன்று அடுக்குகளை கொண்ட வீட்டின் மூன்றாம் மாடியில் இருந்த ஒரு அறையில் அமர்ந்து தனது கையில் இருந்த புகைப்படத்தை பார்த்து பேசி கொண்டிருந்தான் இருபத்தி ஆறு வயதே ஆன ஆடவன் ஆழிவேந்தன்… அவனே நம் கதையின் நாயகன்… அவனது கையில் இருந்த புகைப்படத்தில் சிரித்த முகமாக தேவதையாக ஜொலித்து கொண்டிருந்தாள் ஆழிவேந்தனின் தேனு என்ற அழைப்பிற்கு சொந்தக்காரியான தேன்மொழி… அவளது புகைப்படத்தை வருடியவனின் கண்கள் கலங்கி போனது.. அதை விட அவனது கண்களில் கோபத்தின் சாயல் அதிகமாக இருந்தது.. தனது கண்களை இறுக்கி மூடி கண்ணீர் வெளியேறாமல் தடுத்த படியே கண்களை திறந்தான்.. அவனது கண்கள் இரண்டும் கோபத்தில் சிவந்து போயிருந்தது…
ஆழிவேந்தன், “தேனு… எங்க டி இருக்க.. என்னை மன்னிச்சிடி.. நான் உன்னோட மனசை உடைக்கிற மாதிரி பேசி உன்னை ரொம்ப காயப்படுத்திட்டேன்.. நான் அப்படி பேசியிருக்க கூடாது.. நான் நீ போன்ல பேசுனதை கேட்டு மனசு உடைஞ்சு தான் அப்படி எல்லாம் பேசுனேன்… நீயும் என்னோட பணத்திற்காக தானே என்னை காதலிக்கிற மாதிரி நடிச்சிட்டு இருந்தா.. உன்னை எப்படியாவது கண்டு பிடிச்சு உன்னை கட்டி போட்டாவது என் கூட வாழ வைப்பேன்… நீ நிறைய விஷயங்களை என் கிட்ட இருந்து மறச்சிட்டேல…” என்று கூறியவன் அன்று தன்னவளை காயப்படுத்த வேண்டி பேசியது அனைத்தையும் நினைத்து பார்த்தான்.. அவள் கூற வருவதை காது கொடுக்காமல்… அவளை பேச விடாமல் தனது வார்த்தைகளால் காயப்படுத்தியதை மட்டும் மறந்து விட்டான் போலும்…
ஒன்பது மாதங்களுக்கு முன்பு :
தேன்மொழி சந்தோசமாக ஆழிவேந்தனின் அறைக்குள் நுழைந்து அவனிடம் ஏதோ கூற வாயை திறந்தவள் அழிவேந்தன் கூறியதை கேட்டு மனது உடைந்து கண்கள் கலங்கி கண்ணீர் வழிய ஆரம்பித்தது…
ஆழிவேந்தன், “ஏய் வேலைக்காரி.. எவ்வளவு தைரியம் இருந்த என்னோட அனுமதி இல்லாம என் ரூமுக்குள்ள வருவ… என்னோட ரூமுக்கு வர்றதுக்கு முன்னாடி வேலைக்காரங்க எல்லாரும் கதவை தட்டிட்டு வரணும்னு சொல்லிருக்கானா..” என்று கோபமாக கூறினான்.
அவன் கூறியதை பெரிதாக எடுத்து கொள்ளாத தேன்மொழி அவனது அருகில் நெருங்கி அவனை அணைத்து கொண்டு, “என்னாச்சு மாமூ.. ஏன் இப்படி கோபப்படுற.. ஏதாவது பிரச்சனையா.. ஆபீஸ்ல ஏதாவது பிரச்சனையா.. என்ன பிரச்சனையா இருந்தாலும் என் கிட்ட சொல்லு நான் உன்னோட பிரச்சனைக்கான தீர்வை கண்டு பிடிச்சு கொடுக்கிறேன்…” என்று தன்னவனின் கோபத்தை குறைக்கும் முயற்சியில் அவனது முதுகை தட்டி கொடுத்தாள்..
அவளது அணைப்பில் உருகிய மனதை கோபம் என்ற போர்வையால் அடக்கி அவளை தன்னிடம் இருந்து பிரித்து தள்ளி விட்ட ஆழி, “ஏய்.. உனக்கு வெக்கமா இல்ல.. என்னை மயக்கணும்னு நினைச்சு அதே மாதிரி மயக்கி நீ நினைச்ச எல்லாத்தையும் சாதிச்சிட்டியே… என்னை காதலிக்கிற மாதிரி நடிச்சு என்னோட சொத்தை ஆட்டைய போடணும்னு தானே என்னோட வீட்டுக்கு வேலைக்காரி வேஷம் போட்டு வந்த.. நீ ஒரு அப்பாவி மாதிரி நடிச்சு என்னோட வீட்டில உள்ள எல்லாரையும் ஏமாத்தி உன் பக்கம் திசை திருப்பி நீ சொல்றது எல்லாம் உண்மைன்னு நம்ப வச்சிட்டேல…. இப்பவும் உன்னோட உடல் தேவையை என் மூலமா அதாவது என்னை மயக்கி உன்னோட இச்சையை தீர்த்துக்க தானே வந்த… உன்னோட நாடகம் இப்போ எனக்கு தெரிஞ்சிடிச்சு..” என்று கோபமாக கூறினான்.
தேன்மொழி, “ஏன் மாமூ இப்படி எல்லாம் பேசுற.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு டா.. நான் எதுக்கு உன்னை காதலிக்கிற மாதிரி நடிச்சு ஏமாத்த போறேன்… நான் உன்னை உண்மையா காதலிக்கிறேன்.. நீயும் என்னை காதலிக்கிறேன்னு எனக்கு நல்லாவே தெரியும்… நீ இப்போ ஏதோ கோபத்தில இருக்க நான் உன் கிட்ட சொல்ல போற விஷயத்தை கேட்டா உன்னோட கோபம் இருந்த இடம் தெரியாம போக போகுது பாரு..” என்று கூறியவள்.
“மாமூ, இரண்டு வாரத்துக்கு முன்னாடி உங்களுக்கு காய்ச்சல் வந்த அன்னைக்கு…” என்று சொல்ல முடியாமல் திணறியவளின் உடல் முழுவதும் வெட்கத்தால் சிலிர்த்து அடங்கியது.. அதை விட தாய்மையின் காரணமாக அவளது முகம் பூரித்து போயிருந்தது… கன்னம் இரண்டும் வெட்கத்தில் செவ்வானமாக சிவந்திருந்தது.. வெட்கத்தால் சிவந்திருந்த அவளது கன்ன சிவப்பை பார்த்த ஆழி அவள் கூற வருவதை கேட்காமல் அவளை தவறாக புரிந்து கொண்டு அவளது மீதிருந்த கண் மண் தெரியாத கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று கூட யோசிக்காமல் வார்த்தைகளை விட்டான்.. பின்னாளில் அதை நினைத்தே அழ போகிறோம்… தன்னவள் அவளை தேடி தன்னை அலைய வைக்க போகிறாள் என்றும் அறியாமல் சிறிதும் யோசிக்காமல் அவள் மீது சிறிதும் நம்பிக்கை இல்லாமல் அவளை வார்த்தைகளால் வதைத்து காயப்படுத்தினான்… இப்போதும் அவன் மீது எந்த தவறும் இல்லை.. தவறு முழுவதும் அவள் மீதே என்று நினைத்து கொண்டிருக்கிறான் அவன்...
அழிவேந்தன், “ஏய் என்ன டி.. நான் உன்னை காதலிச்சேனா.. செம்ம காமெடி டி… நான் உன்னை காதலிக்கிறேன்னு என்னைக்காவது உன் கிட்ட சொன்னானா.. நீயா என் பின்னாடி சுத்துன… நானும் உன்னை டைம் பாஸ்சுக்கு யூஸ் பண்ணலாம்னு தான் காதலிக்கிற மாதிரி நடிச்சேன்…. அன்னைக்கு நடந்தது வெறும் ஆக்சிடென்ட் மட்டும் தான்.. நான் காய்ச்சல்ல சுயநினைவு இல்லாத நேரத்தில நீ என்னை நெருங்கி வந்த நானும் அதை பயன்படுத்தி உன்னை எடுத்துக்கிட்டேன்…. நீயா ஆசைப்பட்டு என்னை நெருங்கி வந்த நானும் பார்க்க தக்காளி பழம் மாதிரி இருந்த உன்னை விட முடியாம எடுத்துக்கிட்டேன்… நீயும் அதுக்காக தானே வந்த..” என்று அவளை கொச்சையாக பேசினான் ஆழிவேந்தன்..
“அப்புறம் அன்னைக்கு நடந்ததை வச்சு என்னை பிளாக்மெயில் பண்ணி என்னோட சொத்தை அடையலாம்னு மட்டும் நினைக்காத… உன்னோட திட்டம் எதுவுமே வெற்றி அடையாது.. நீ அன்னைக்கு நடந்ததை எல்லார்கிட்டயும் சொன்னாலும் நான் அதை அப்படியே மாற்றி உன் மேல தான் தப்பு இருக்க மாதிரி சொல்லுவேன்.. அன்னைக்கு நடந்தது உனக்கே தெரியும்.. நீயா தான் என்னை தேடி வந்த.. உன்னோட உடல் தேவையை நிறைவேத்திக்க தான் என்னை தேடி வந்தேன்னு எனக்கு நல்லா தெரியும்.. அதை வச்சே நான் காய்ச்சல்ல கிடந்ததை பயன்படுத்தி உனக்கு சாதகமாக மாற்றிட்ட… நான் சுயநினைவில இல்லாத நேரத்தில என் கூட வெக்கமே இல்லாம ஒண்ணா இருந்திருக்க…” என்றவன் சில அந்தரங்க விஷயங்களை அவளது காதில் கூறினான்..
அவன் கூறியதை கேட்டு துடித்து போனாள் தேன்மொழி.. தன்னவன் காய்ச்சலின் வீரியத்தில் கண்ணை கூட திறக்க முடியாமல் கிடந்தவனுக்கு மருந்து, மாத்திரை, ஊசி போட்டும் காய்ச்சலின் வீரியம் குறையாமல் இருந்ததால் தன்னவனை காப்பாற்ற வேண்டி தன்னையே அவனுக்கு கொடுத்ததை இவ்வளவு கேவலமாக பேசினானே என்று நினைத்து அவளது இதயம் சில்லு சில்லாக நொறுங்கியது.. தனது காதலை கொச்சைப்படுத்தியதை அவளால் தங்கி கொள்ள முடியவில்லை… அவளது மனதில் அவ்வளவு வலி ஏற்பட்டது.. இதற்கு மேல் எதற்க்காக உயிரோடு இருக்க வேண்டும் என்றும்.. இப்போதே பூமி பிளந்து சாகமாட்டோமா என்று மனதில் நினைத்தவள் தனது வயிற்றில் வளரின் தனது உதிரத்தின் நினைவு வந்ததும் தனது எண்ண போக்கை கண்டு நொந்து போனவள் தனது குழந்தைக்காக வாழ வேண்டும் என்று உறுதியான முடிவை மனதில் எடுத்து கொண்டாள்..
ஆழிவேந்தன் ஏற்கனவே தேன்மொழியை காயப்படுத்தியது போதாது என்று நினைத்தான் போலும், “ஏய்.. உனக்கு பணம் தானே முக்கியம்.. என்னோட பணத்திற்காக என் கூட படு**.. பணத்திற்காக எவன் கூட வேணாலும் என் கூட படுத்த மாதிரி அவனுங்க கூட போவியா… நீ போனாலும் போவ டி.. உனக்கு அதெல்லாம் கை வந்த கலை தானே… உனக்கு நடிக்க சொல்லியா தரேனும்.. நீ தான் டிராமா குயினாச்சே… அது மட்டுமா அழகா வேற இருக்க உன்னோட அழகை காட்டியே எல்லாரையும் மயக்கிடுவியே.. என்னை மயக்கினா மாதிரி.. உனக்கு உன்னோட அழகை காட்டி மயக்க மட்டும் தானே தெரியும்…” என்று அவளது ஒழுக்கத்தை பற்றி மிகவும் கேவலமாக பேசினான்..
“நான் உன்னை எப்பவும் காதலிக்க மாட்டேன்.. உன் கூட ஒண்ணா இருந்தேன்னு உன்னை கல்யாணம் பண்ணிப்பேன்னு நினைக்காத.. எனக்காக என் மாமா பொண்ணு சம்யூ இருக்கா.. அவளை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்.. உன்னை வேணும்னா வப்பாட்டியா வச்சுக்கிறேன்…” என்று ஒரு பெண்ணின் வாழ்க்கையை அழித்து விட்டோம் என்று சிறிதும் குற்ற உணர்ச்சி இல்லாமல் அவளை இன்னும் வார்த்தைகளால் வேதனைப்படுத்தினான்..
அவன் கூறியதை கேட்டா தேன்மொழியின் இதயத்தில் கூர் வாளால் தாக்கியது போல் அளவுக்கு அதிகமான வலி ஏற்பட்டது.. கண்ணில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது… தன்னவன் தன்னை காதலிக்கவில்லை டைம் பாஸ்சிற்காக தன்னை காதலித்தது போல் நடித்தேன் என்று அவன் வாயால் கேட்டும் அதனை ஜீரணிக்க முடியவில்லை… அதை விட அவன் தன்னை மிகவும் கேவலமாக பேசியதை அவளால் தாங்க முடியவில்லை.. அவனிடம் எதுவும் கூறாமல் அறையை விட்டு வெளியேறினாள்.. அவனும் கோபத்தில் அவள் எங்கே சென்றாள் என்று பார்க்காமல் அலட்சியமாக இருந்தான்.. அன்று தான் அவளை கடைசியாக பார்த்தது.. அதன் பிறகு அவளை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.. ஒன்பது மாதங்களாக தேடி கொண்டிருக்கிறான்..
ஆனால் அவனின் தேடலுக்கு சொந்தக்காரியோ அவனின் கண்ணில் சிக்காமல் அவனுக்கு ஆட்டம் காட்டி கொண்டிருக்கிறாள்…. பழைய நினைவில் இருந்து வெளியே வந்த ஆழிவேந்தனின் இதயம் பலமாக துடிக்க ஆரம்பித்தது.. ஆனால் எதனால் என்ற காரணம் மட்டும் புரியவில்லை… காரணம் புரியாமல் குழம்பி தவித்தான்..
அதே நேரம் உலகின் ஏதோ ஒரு மூலையில் இருந்த மருத்துவமனையில் லேபர் வார்டில் பிரசவ வலியில் துடித்து கொண்டிருந்தாள் தேன்மொழி… கிட்டத்தட்ட மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு தேன்மொழியின் கதறல் ஓய்ந்து வீல் என்ற அலறலுடன் ரோஸ் நிறத்தில் பிறந்தாள் ரோஜா மொட்டு… ஆழிவேந்தனின் பெண் வாரிசு…
குழந்தை பிறந்த மறு நிமிடம் மயக்கத்திற்கு சென்றாள் தேன்மொழி.. அவளுக்கு கொடுக்க வேண்டிய சிகிட்சைகளை கொடுத்து கொண்டிருந்தார் மருத்துவர்… இன்னொரு புறம் குழந்தைக்கு கொடுக்க வேண்டிய சிகிட்சை கொடுத்து குழந்தையை சுத்தப்படுத்தி பூந்துண்டால் சுற்றி வெளியே கொண்டு சென்றார் நர்ஸ்.. வெளியே தோழியை நினைத்து பதற்றத்தோடு காத்திருந்த தேன்மொழியின் தோழி ஜீவிதாவின் கையில் குழந்தையை கொடுத்தார்… அவளும் தோழியின் குழந்தையை ஆசையாக வாங்கி நெற்றியில் மெதுவாக முத்தமிட்டு குழந்தையை கொஞ்சியவள்… தோழியை பற்றி நர்ஸிடம் விசாரித்தாள்… அவரும் தேன்மொழி மயக்கமாக இருக்கும் விஷயத்தை கூறி அரை மணி நேரத்தில் அறையில் மாற்ற போவதாக கூறி விட்டு குழந்தையை வாங்கி கொண்டு சென்றார்…
தனக்கு பெண் வாரிசு பிறந்ததை பற்றி அறியாமல்… காரணமே புரியாமல் படபடப்பிலும், பதற்றத்திலும் அமர்ந்திருந்தான் ஆழிவேந்தன்…
தனது உதிரத்தில் பிறந்த குழந்தையை பற்றி அறிந்து கொள்வானா…???
தன்னவளை தேடி கண்டு பிடிப்பானா…???
அவளை கண்டு பிடித்தாலும் அவனை மன்னித்து ஏற்று கொள்வாளா தேன்மொழி…??
அழிவேந்தன் கூறியது போல் தனது அத்தை மகளை திருமணம் செய்து கொள்வானா…???
அவ்வாறு நடந்தால் தேன்மொழி மற்றும் அவளது குழந்தையின் நிலை…???
அனைத்து கேள்விகளுக்கான விடையை அடுத்தடுத்த அத்தியாயங்களில் தெரிந்து கொள்ளலாம்….