எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

manjam 30

NNK-54

Moderator
மஞ்சம் 30


அதியின் பெங்களூரு நாட்கள் கலவையாய் இருந்தது. மூணரை வருஷங்கள் இந்தியா வராமல், பெற்றோரை நேரில் பார்க்காமல், வெறும் அலைபேசி வழியாக உறவாடி கொண்டிருந்ததால் முதல் ஒரு மாதம் அவள் சென்னை வரவில்லை. தனிமை உணர்வும் இல்லை. நிரஞ்சன் எப்போதும் அவனது போன்ற உணர்வுகளின் பிடியில் சிக்காமல் இருப்பதற்கு முழு காரணம் என்று சொல்லவும் வேண்டுமா...


பிறகு ஒரு வார இறுதியில், “நீயேன் அதி சென்னையே போகல? உங்க அப்பாவையும் அம்மாவையும் நீ மிஸ் பண்ணலையா…” என்று கேட்ட பின் தான் 'தான்' இங்கேயே தங்கி வைத்திருக்கிறோம் என்பது அவளுக்குப் புரிந்தது . இந்த ஒரு மாதமாக வார இறுதி நாட்களில் அப்பா அம்மாவுடன் வீடியோ காலில் பேசுகிறாள் தான். குளோபல் வில்லேஜ்' என்று இதற்காகத்தான் சொல்கிறார்களோ என்னவோ... எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் மனதுக்கு நெருக்கமானவர்கள் பக்கத்தில் இருப்பது போன்று ஒரு உணர்வை இன்றைய காலகட்டத்தின் விஞ்ஞானம் அதிகமாக செய்திருக்கிறது.


பதில் சொல்ல மறந்து அதி தனக்குள்ளேயே யோசித்துக் கொண்டிருந்தபோது, நிரஞ்சன் மீண்டும் மீண்டும் அழைக்க நடப்பு உலகத்திற்கு மீண்டு வந்தாள்.


“ம்ம்ம்... இந்த வாரம் போகலாமான்னு யோசிக்கிறேன் நீரு. அப்பாவும் அம்மாவும் கூட என்னை ரொம்ப மிஸ் பண்றாங்க. அவங்க ரெண்டு பேரும் இங்கே வந்து என்னை பார்க்கிறேன்னு சொன்னதுக்கு நான்தான் வேண்டாம்னு சொல்லிட்டேன். எனக்கு தனியா எல்லாத்தையும் சமாளிச்சு பழகணும். அடலீஸ்ட் நீ இங்க இருக்க…” என்றவள் சிறிது இடைவெளிவிட்டு “நீ சென்னைக்கு என்னை கூட்டிட்டு போவியா நிரஞ்சன் “என்று வார்த்தைகளை கோர்த்தாள்.


யோசித்து சொல்வதாக பேச்சை முடித்துக் கொண்டான் நிரஞ்சன். வார இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமைகளில் நிரஞ்சன் வீட்டிற்கு காலையிலேயே வந்து விடுகிறாள் அதிதி. இரவு அவனேக் கொண்டுபோய் விடுவான். அதிதியை பொருத்தவரை நிரஞ்சனிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. நிரஞ்சன் மனதில் இருப்பதை சொல்வதற்கு இன்னும் காலம் கனியவில்லை. காதல் என்ற உணர்வு அவள் உணர்ந்தால்தான் அடுத்த அடி எடுத்து வைப்பேன் என்று பிடிவாதமாக காத்திருக்கிறான் நிரஞ்சன்.


'அதிதி' கேட்டாள் என்பதற்காக, வெள்ளிக்கிழமை மாலை தனது காரில் அதியுடன் சென்னையை நோக்கிப் புறப்பட்டான் நிரஞ்சன். அவன் வாழ்க்கை என்னமோ அவளை சுற்றித்தான். அவள் மனம் நோகாமல் இருப்பதற்காக எது செய்யவும் அவன் தயார்தான். இருவரும் சென்னை நோக்கி பிரயாண பட, அதியை அவள் வீட்டில் இறக்கி விட்டவன் வீட்டிற்குள் கூட நுழையாமல், தான் ஹோட்டலில் தனக்காக அறை பதிவு செய்திருப்பதாக சொல்லி விட்டு கிளம்பிவிட்டான். சனிக்கிழமை மதியம் தன் அம்மாவையும் ஹோட்டல் அறைக்கு வரச் சொல்லி, அம்மாவுடன் ஞாயிறு காலை வரை தங்கி இருந்தவன், மதிய உணவை முடித்துக்கொண்டு அவன் அம்மாவை அவன் அவர்கள் வீட்டில் விட்டுவிட்டு, அதி வீட்டை நோக்கிப் பயணமானான். அதி எவ்வளவு அவனை உள்ளே அழைத்தும் வர மறுத்தவன் விஸ்வம் தானே இறங்கி வந்து, அவனை' உள்ளே வா 'என்று அழைக்கவும் மறுபேச்சின்றி காரிலிருந்து இறங்கி வீட்டிற்குள் சென்றான். அதி மனதில் மீண்டும் மீண்டும் குழப்ப ரேகைகள். இருவருக்குள்ளும் மூண்டு இருக்கும் இந்த பனிப்போர் எப்படி கையாளுவது என்று மீண்டும் யோசனை. மீண்டும் பெங்களூர் வந்து சேர விடிகாலை ஆகிவிடவே அதி நிரஞ்சன் வீட்டிலேயே தங்கி விட்டாள். நிரஞ்சன் வசிக்கும் அதே அடுக்ககத்தில் வீடு வாங்கி இருக்கும் நிரஞ்சன் அலுவலகத்தில் வேலை செய்யும் குணால் இவர்கள் இருவரும் சேர்ந்தே வீட்டிற்குள் நுழைவதை பார்த்தவன் மனதில் ஆயிரம் குப்பைகள். அதைக் கொட்டும் இடமாக அவன் அலுவலகத்தை தேர்ந்தெடுத்தது தான் துரதிருஷ்டம்.


அலுவலகம் முழுவதும் இந்த செய்தி பரவி விட, அதி கூனிக்குறுகி போனாள். ஆரியன் தான் வந்து அவளுக்கு சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தான். இவ்வளவையும் கேட்டும் பார்த்துக் கொண்டு இருந்த சுமனா மனதில் பிரித்தறிய முடியா உணர்வு. அதிதி மீது வன்மம், நிரஞ்சன் மீது கோவம். மதியம் இடைவேளையின்போது நிரஞ்சனிடம் நேரில் சென்று கேட்டுவிட்டாள். அவளை ஒரு ஆழ பார்வை பார்த்த நிரஞ்சன்... '’என்னோட பர்சனல் விஷயம் பேச உனக்கு யார் அனுமதி கொடுத்தது சுமனா…” என்று நிதானமாக கேட்ட கேள்வி. தனது விருப்பமின்மையை நேராகவே அவனும் சொல்லிவிட்டான்.


“நா யாருன்னா... உங்ககிட்ட நம்ம கல்யாணம் பத்தி பேசியிருந்தேனே நிரஞ்சன்... “அவளுக்கு துக்கம் பொங்கியது.


அவள் உணர்வுகள் நிரஞ்சனுக்கு தெளிவாக புரிகிறது. இதை எப்படி கையாள்வது என்று ஒரு கணம் யோசித்தவன்,'’ லுக் சுமனா, நான் கமிட்டடா உன்ன கல்யாணம் பண்ணிக்கறதா எப்பவாச்சும் சொல்லி இருக்கேனா...'ஐ திங்க் நோ'. யூ ஹவ் பெட்டெர் ஆப்ஷன்ஸ். எனக்கு உன்மேல கொஞ்சமும் இன்டெரெஸ்ட் இல்ல.”


“தென், அப்போ ஏன் ஓகே சொன்னீங்க நிரஞ்சன்?”


அவளது கேள்விக்கு அவனிடம் பதில் உண்டு. அதை ஏற்பாளா... என்ற யோசனை அவனுள். சடுதியில் சுதாரித்துக்கொண்டவன், “நா என்ன சொன்னேன்னு திரும்ப யோசிச்சு பாருங்க சுமனா. சி ஏ முடிங்க. அப்புறம் கல்யாணம் செஞ்சுக்க யோசிக்கலாம்னு சொன்னேன்.

யோசிச்சு பாத்ததுல, சரி வராதுன்னு தோணுது. ரெண்டு மனசு சேரும் பொழுது கல்யாணம் செஞ்சு சிறப்பா வாழ முடியும். கம்பெல் பண்ணா... ஹ்ம்ம்... கொஞ்சம் கஷ்டம்.”

அவன் வார்த்தைகள் கொடுத்த வலி.


“ஓகே. அப்போ நீங்க அதிதிய... அவளால் வார்த்தைகளை முடிக்க முடியவில்லை. ஏமாற்றம்! அது உணர்பவர்களுக்கு தெரியும். அவள் கண்கள் இதோ, உன் துணைக்கு நான் நீரை அனுப்பவா? அவை பேசும் உனக்காக என்று சாமாதானம் செய்ய முற்பட, அவற்றை தூர நிறுத்தி, அவனயே உற்று நோக்கினாள்.


அவளை ஆழ பார்த்தவன்,'” நீ என்ன தெரிஞ்சுக்க விரும்புற, அதிய நா லவ் பன்றேனான்னு தெரியணுமா?'’என்றான்.


சுமனாவின் தலை தானாக 'ஆம் ' என்று அசைந்தது.அவனது அதி எனும் அந்தரங்க அழைப்பு சொன்னது அவள் மீதான அவனது உரிமையை. ஆனாலும் அவன் வாயால் அவளுக்கு தெரிந்து கொள்ள அடம்!

ஹ்ம்ம்...இவளிடம் சொல்வது சரியாக இராது என்று முடிவு செய்தவன் ‘'அவ என்னோட அத்தை பொண்ணு. கூட படிச்ச தோழி. இதுக்கு மேல என்னனு உனக்கு நா சொல்லணும்னு எதிர் பாக்குற'’ என்றவன், “ஓகே சுமனா எனக்கு வேலை இருக்கு”என்று எழுந்துவிட்டான். அவள் சற்றும் இதையெல்லாம் எதிர்பார்த்திருக்கவில்லை.

உட்கார்ந்து இருந்த கேன்டீன் டேபிளில் முகத்தை கவிழ்த்துக்கொண்டாள்.


அவளையும் நிரஞ்சனையும் இணைத்து பேசிய அலுவலகம், இன்று அவனையும் அதிதியையும் இணைத்து பேசுகிறது. அப்போது ரசித்தது, இப்போது நெஞ்சு காந்த வைக்கிறது.


மாலை நேரம் அதியிடம் பேசிவிடுவது என்று முடிவெடுத்துக்கொண்டாள் சுமா.

ஆனால், நிரஞ்சன் அதி அருகிலேயே காத்து நின்றான். மாலையில் அவனே அதியை அழைத்தும் சென்று விட்டான்.


ஒருவாரம் கண்ணாமூச்சி ஆட்டம். நிரஞ்சன் கிளையன்டை பார்க்கவென்று மாண்டியா இரு நாட்களுக்கு செல்ல, அதி தனியானாள். சுமனா, மீண்டும் முயற்சி செய்ய ஆரியன் தடுக்க முற்பட்டும் ஒன்றும் ஆகவில்லை.


சுமா அதியை பிடித்து உலுக்கி விட்டாள். அதியோ நிரஞ்சன் சொன்னவற்றை இன்னும் கொஞ்சம் இனிமை குரலில் இயம்பினாள். அதே வார்த்தைகள் எனும் பொழுது சுமா மனதில் இருவருக்குள்ளும் இவ்வளவு ஒற்றுமையா என்று வியக்காமல் இருக்க இயலவில்லை. பொறாமை சாமரம் வீசியது.


சுமனா அடுத்த அடி எடுத்து வைப்பதற்குள் நிரஞ்சன் வந்துவிட்டான். அதிக்கு இந்த பெண் ஏன் இப்படி நடந்து கொள்கிறாள் என்று தோன்றாமல் இல்லை.

நாட்கள் அது பாட்டுக்கு செல்ல, ஹாஸ்டலில் தங்கியிருந்தவளுக்கு முதல் நாள் இரவு லேசான சளியில் ஆரம்பித்தது மறுநாள் காலைக்குள் கண் திறக்க முடியாது ஜுரம். அதி நிரஞ்சனுக்கும் அழைக்க வில்லை. பெற்றோருக்கும்தான். அவள் நிலை கண்டு பதறி ஹாஸ்டல் வார்டன் தான் வித்யாவுக்கு அழைத்து சொன்னார். வேலை விஷயமாக விஸ்வம் குஜராத் சென்றயிருக்க அவருடன் வித்யாவும். இப்போதெல்லாம் கணவரை தனியாக விட அவள் விரும்புவதில்லை. ஏற்கனவே இதய நோயாளி என்ற பயம்.




வித்யா நிரஞ்சனுக்கு அழைத்தாள். வேறு யாரை கூப்பிட முடியும்?

ஹாஸ்டல் விரைந்த நிரஞ்சன், அவளை தன்னுடன் அழைத்து சென்றுவிட்டான். சரியான நிலைக்கு அவள் வர மூன்று நாட்கள் ஆக, இம்முறையும் குணாலின் வாய்க்கு அவலானது அதியின் வரவு.

நிரஞ்சன் மனதில் குணால் எவ்வளவு தூரம் சென்றாலும் சரி என்று முடிவெடுத்துவிட்டான்.


முதல் இரண்டு நாட்களுக்கு அதி கண் கூட திறக்க முடியாமல் அவதியுற, தன்னை தொலைத்து நின்றான் நிரஞ்சன். அவனும் அலுவலக வேலையை அவள் அருகே அமர்ந்தே செய்தான். உடம்பு கொஞ்சம் தேறியதும் அதி நிரஞ்சனை முழுவதும் ஆராய்ச்சி பார்வை பார்த்துகொண்டிருந்தாள். வினய் இவளுக்கு மாதந்திர உடல் சோர்வு என்றால் கூட அருகே உதவிக்கு வந்ததில்லை.


இவள் கண் விழித்ததும் அவளது ஹாஸ்டல் சென்றவன் அவள் அங்கிருந்து காலி செய்வதாக சொல்லி அவளது உடமைகளை காரில் வைத்துகொண்டு வந்துவிட்டான். திரும்ப இது போன்று அதியை பார்த்தால் தன்னால் தாங்க முடியாது என்று அவனுக்கு புரிந்து விட்டது.


இவன் வெளியே சென்றிருந்த நேரம் முழுவதும் அதி மனதில் இவனை போன்று ஒருவன் தம் திருமண வாழ்வில் ஏன் வரவில்லை... அடலீஸ்ட் நண்பன் அமையவாவது கொடுப்பினை உள்ளது என்று யோசித்து கொண்டிருந்தாள்.


தனது மொத்த பொருட்களையும் நிரஞ்சன் கொணர்ந்து விட்டதை கண்டவளுக்குள் கோவம் முளை விட்டது.


இவன் இப்படியே செய்தால் ஏற்கனவே இருவரையும் இணைத்து பேசும் நபர்களுக்கு இன்னும் என்ன சொல்ல முடியும் என்று கவலை கொண்டாள் பெண். அதை உண்மையாக்கி விடலாம் என்றான் நிரஞ்சன். அதிக்கு இவன் என்ன இப்படி சொல்கிறான் என்று இருந்தது.


எவ்வளவு முடியுமோ அவ்வளவு எடுத்து சொல்லி பார்த்தாள் அதி. அவன் கேட்க தயாரில்லை. உடலும் மனமும் சோர்ந்து தூக்கம் அதனில் தஞ்சம் அடைந்தாள் பெண்.


நிரஞ்சன் மறுநாளே தன் அம்மாவை வரச்சொல்லிவிட்டான். அதியை இந்த நிலையில் தனியே விட்டு அலுவலகம் செல்ல அவனுக்கு விருப்பம் இல்லை.


அவன் அம்மாவுக்கு நிரஞ்சன் சொன்னதைக் கேட்டதும் கோவமாக வந்தது. ஆனால் தன் உணர்ச்சிகளைக் காட்டும் நேரம் இது என்று அவருக்குத் தோன்றவில்லை. வேறு ஏதாவது முயற்சி செய்து பார்க்கலாம் என்ற நம்பிக்கையுடன் பெங்களூருக்கு வந்து விட்டார்.

அந்த ஒரு வாரமும் அதிதி அலுவலகம் செல்லவில்லை. நிரஞ்சனின் அம்மா வீட்டில் அதியுடன்.


அதி மதிய நேரத்தில் தன் அறையில் இருந்தே அலுவலக வேலைகளை லேப்டாப்பில் செய்து கொள்ள, சுமனா நிரஞ்சனது அம்மா பெங்களூரு வந்திருப்பதை அறிந்து கொண்டு, அவருக்கு போன் செய்து நிரஞ்சன் சொன்னவற்றை எல்லாம் ஒப்புவித்தாள்.


ஒரு முடிவுக்கு வந்தவளாக, நிரஞ்சனது அம்மா அதியிடம் சுமா - நிரஞ்சன் இடையே நடந்தவற்றை எல்லாம் சொல்லி, நிரஞ்சன் திருமணம் சுமா உடன் இன்னேரம் நடைபெற்றிருக்கும். அது நின்றதற்கு காரணம் அதியின் வரவு என்று குற்றம் வேறு சாட்ட மீண்டும் மனதிற்குள் நொறுங்கிப் போனாள் அதிதி.


போதா குறைக்கு திருமணம் புரியாமல் அந்நிய ஆணுடன் தங்கியிருக்கும் அவளைப் பற்றியும், அவளது நடத்தை பற்றியும், விமர்சனம் வேறு முன் வைத்தாள் பிள்ளையை பெற்றவள்.


இறுதியில் அதியை நிரஞ்சனது வாழ்விலிருந்து விலகி விடும்படி நிரஞ்சனின் அம்மா அவளை சாட, அழுதுகொண்டே தனது அறையிலேயே தஞ்சம் இருந்தாள் அதிதி.


மாலை நிரஞ்சன் வீட்டிற்கு வந்தவுடன், அதியோட உடம்பு பரவாயில்ல.. நா சென்னை போறேன் ' என்று விட்டேத்தியாக சொல்லிவிட்டு கிளம்பும் தனது அம்மாவை நிரஞ்சன் தடுக்கவும் இல்லை. மறுநாளே அவன் அம்மா சென்னை கிளம்புவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்தான்.


இரண்டோர் நாட்கள் உணர்வுகளை மறைத்துக்கொண்டு அலுவலகம் சென்று வந்தாள் அதி. இது அவளுக்கு பழக்கமான ஒன்றுதான். தனக்கு ஏற்றவாறு ஒரு ஹாஸ்டலை மீண்டும் தேர்ந்தெடுத்தவள், அந்த வார இறுதியில் வருவதாகச் சொல்லிவிட்டு வந்தாள்.


அதற்குள் சுமனா, அலுவலகத்தின் உணவு இடைவேளையின்போது, அதியிடம் தானும் நிரஞ்சனும் காதலிப்பதாகவும் திருமணம் பற்றி யோசிக்கும் நிலையில் அதியின் வரவு, நிரஞ்சன் இப்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தை மாற்றி விட்டதாகவும் சொல்லி அழ நிலை குலைந்து போனாள் அதி.


ஹாஸ்டல் சென்றாலும் நிரஞ்சன் மாற மாட்டான் என்று புரிந்தவள், மீண்டும் சென்னைக்கு செல்ல பெண் தீர்மானிக்க,


என்ன நடந்தது…
 
Top