வித்யா தனது மயக்கம் தெளிந்து எழுந்துவிட்டாள். அவள் முகம் அதிர்ச்சி, ஆச்சர்யம் இரண்டையும் கலவையாய் காட்டியது. மகளுக்கு இவ்வளவு நல்ல ஒருவனை கணவனாக அடையும் பேறு, நிச்சயம் மகிழ்ச்சி கொள்ள வைப்பதே! ஆனால், இது வேண்டாம் என்று முடிவெடுத்து வேறு வரன் தேட யோசிக்கும் சமயம் மகள் திருமணம் முடிந்து விட்டது. அதுவும் தங்கள் கண்களால் கண்டு சந்தோஷப்பட முடியாமல், ஒரு வழியில் இதுகூட திருட்டு கல்யாணந்தான் இல்லையா.. வித்யாவின் மனம் அடித்துக் கொண்டது. போதாத குறைக்கு, நிரஞ்சனின் அம்மா வந்து கேட்டால் வேறு என்ன செய்வது புரியவில்லை. பெற்றோர்களுக்கு இல்லாத உரிமை வேறு யாருக்கு இருக்கிறது? எந்த தைரியத்தில் இந்த பிள்ளைகள் இதுபோன்ற காரியங்களை செய்கிறார்கள்?
இதையே வித்யா, நிரஞ்சனிடம் கேட்பதற்கு தயங்கவில்லை.
‘'நிரஞ்சன் நீ உண்மையாகவே,என் பொண்ண கல்யாணம் பண்ணிக்க விருப்பப்பட்டு இருந்தா எங்க கிட்ட இன்னும் ஸ்ட்ராங்கா பேசி இருக்கணும். எங்களை எப்படியாவது கன்வின்ஸ் செஞ்சி இருக்கணும். எங்களுக்கு இல்லாத எந்த உரிமையை நீ கண்டுட்ட?
நீ நல்லபடியா வரணும்னு சொல்லி உங்க அம்மா தன்னோட வளையலை கழட்டி என் கிட்ட கொடுத்தாங்க...
உன்னோட படிப்பு செலவுக்கு வச்சுக்க சொல்லி. உன் மேல அவங்களுக்கு இல்லாத உரிமை வேறு யாருக்கு வரும்?
படிச்சு நல்ல வேலையில இருந்தா உங்களுக்கு எல்லாம் தெரியும்னு நினைப்போ?
இப்போ உன்ன பெத்தவள நான் எப்படிப் பார்ப்பேன்? பெத்து படிக்க வச்சு இவ்ளோ செஞ்சவங்களுக்கு நல்லா நன்றி காட்டுறீங்கப்பா..”. என்றவள் தன் பெண்ணை தீ விழிப் பார்வை பார்த்தாள். அதில் நீயுமா இப்படி என்ற செய்தி
அதிப்பெண்ணை செயலிழக்கச் செய்தது. ஆனால் என்ன ஆனாலும், தனக்காக மட்டுமே தன்னை திருமணம் செய்து கொண்டிருக்கும் நிரஞ்சன் எப்படி இந்த திருமணத்தை செய்து கொண்டான் என்பது பற்றி அவள் வாயை திறப்பதாக இல்லை.அப்படியே அவள் எல்லா உண்மையும் சொன்னாலும் கூட நம்புவதற்கு அங்கு யாரும் தயாராக இல்லை.வழக்கம்போல் மௌனம் என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்துக் கொண்டாள் அதிதி. நிரஞ்சன் அதிதியின் இந்த மௌனத்தை கொண்டு, ஏற்கனவே அதிர்ச்சியில் இருக்கும் பெண்ணிற்கு இன்னும் எவ்வளவு தாங்குவாள் என்ற கழிவிரக்கம் மிகுந்தது. ஆனால் அவனைப் பொறுத்த வரையும் கூட, எதுபற்றியும் யாரிடமும் சொல்ல தேவையில்லை என்ற எண்ணம் வந்து விட்டிருந்தது. அவன், ஒரு முறைக்கு இரண்டு முறை உங்கள் பெண்ணை கொடுங்கள் என்று இவர்களிடம் கேட்டு விட்டான். யாருக்கு திருமணம் செய்து வைத்தாலும் உனக்கு மட்டும் பெண் கொடுக்க முடியாது என்று சொல்பவர்களை என்ன செய்ய முடியும்?
இன்று இவ்வளவு பேசும் வித்யா கூட எந்த தருணத்திலும் நிரஞ்சனுடன் அதிதி திருமணத்தைப் பற்றி யோசிக்கவே இல்லையே!
அவர்கள் சொல்கிறார்கள் இவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எவ்வளவு நாள் அவள் தன் உணர்வுகளை புதைத்துக் கொண்டு வாழ முடியும்? அவன் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்தவள் அதிதி. அவனுடைய அந்தரங்க உணர்வுகள் அவளுக்கு மட்டுமே சொந்தம். அதை யாருடனும் அவனால் பகிர்ந்து கொள்ள முடியாது.
உடல் அளவில் அதிப்பெண் சேர்வதற்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றாலும் கூட, அவனுக்கு அது பற்றி எந்த கவலையும் இல்லை. அவன் கவலை எல்லாம் அவள் அவனிடமிருந்து தனியாக இருப்பதுதான். இதையெல்லாம் சொன்னால் யாருக்கு புரியும்?
பெண்களுக்கு எதிரி வெளியில் இல்லை பெண்களே தான் என்று அவனுக்கு தோன்ற ஆரம்பித்தது.
அவன் அம்மா, அதியின் அம்மா, சுமனா, நடாலி என்று, அதியை சுற்றி இருப்பவர்கள் அவளுக்கு கொடுத்து இருப்பது என்ன?
ஒன்று ஏதோ ஒருவகையில் அவளது சந்தோசத்தை பறித்து, அவள் ஏற்கனவே விவாகரத்து ஆனவள். அதுபோன்ற ஒருவனையே திருமணம் செய்து வைத்துவிட்டால் போதும் என்ற எண்ணங்கள் வேறு.
அவளது கணவன் செய்த தவறுகளுக்கு அவள் எப்படிப் பொறுப்பாக முடியும் இதுபற்றி வித்யா கூட யோசிக்கவில்லை. அவளைப் போலவே விவாகரத்து வாங்கியவனை தானே தேடி இருக்கிறார்கள்? இதில் இவர்கள் எல்லாம் யார் என்னைப் பற்றி பேசுவதற்கு என்ற கோபம் அவன் மனதில் கனன்றது.
இரவாகி விட்டதால் எங்கும் வெளியே செல்ல முடியாத நிலையில் வித்யா விஸ்வம் இருவரும் நிரஞ்சன் வீட்டில் தங்கி விட்டார்கள். அவர்கள் இருவருக்கும் ஒருவாய் சாப்பிடக் கூட பிடிக்கவில்லை. நிரஞ்சன் எதுவும் அவர்களை வற்புறுத்தவில்லை. ஆனால் அதிக்கு மட்டும் கட்டாயப்படுத்தி இன்னும் கொஞ்சம் பாயசம் கொடுத்தான். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவர்களுக்கு கோபம் தலைக்கேறியது. அதியும் மனதில் பொங்கும் உணர்ச்சிகளை வெளியே காட்டவில்லை.
அவள் இன்னும் நடந்த நிகழ்வில் இருந்து வெளியே வரவில்லை. ஆனால் என்று வித்யாவும் விஷ்வமும் தங்கள் பெண்ணை புரிந்து கொண்டிருக்கிறார்கள்? இதுவரை என்ன நடந்தது என்று கூட அவளிடம் கேட்கவில்லை. அவனிடம் பேசிப் பார்க்க இருவருக்கும் விருப்பம் இல்லை. தாங்களாகவே ஒரு முடிவு எடுத்து அந்தப் பெண்ணிடம் முகம் தூக்கி வைத்துக் கொண்டு இருப்பவர்களிடம் போய் என்ன சொல்ல முடியும்?
இரவு அதி வழக்கம்போல் தன் அறையில் போய் முடங்க நினைக்க, அங்கே விஸ்வம் தோளில் சாய்ந்து கொண்டு வித்யா அழுது கொண்டு இருந்தாள்.
அவர்கள் பேசிக் கொண்டிருந்ததில் இருந்து அதி புரிந்து கொண்டது, இருவருக்கும் நிரஞ்சன் அதியை திருமணம் செய்து கொள்வது பற்றி தயக்கம் உண்டு தான். ஆனால் விருப்பமில்லை என்று சொல்ல முடியாது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் நிரஞ்சன் போன்ற ஒருவன் தன் மகளுக்கு மணமகனாக வாய்த்தது பற்றி அவர்களுக்கு சந்தோஷம் தான். ஆனால் ஏற்கனவே காயம்பட்ட தன் பெண்ணுக்கு, முதன் முறையாக திருமணம் செய்து கொள்ளும் நிரஞ்சன் எப்படி பொருந்துவான்? அவனால் தன் மகளை புரிந்துகொள்ள முடியுமா? ஏதேனும் ஒரு கட்டத்தில் குத்தி காண்பித்து பேசி விட்டால் அவள் தாங்குவாளா போன்ற கவலைகள் இருவரையும் ஆக்ரமித்திருந்தது.
அவர்கள் பேசுவது தெளிவாக நிரஞ்சன் காதுகளில் கூட கேட்டது. அவனுக்கு மனதுக்குள் சந்தோஷம்தான். காலப்போக்கில் இந்த கல்யாணத்தை அவர்கள் மனதளவில் அங்கீகரிக்க கூடும் என்று நினைத்துக்கொண்டான்.
அப்பாவும் அம்மாவும் பேசிக்கொண்டிருக்கும் தனது அறையில் தூங்க முடியாது என்ற முடிவு செய்தவள், நேராக அங்கு காலியாக இருக்கும் இன்னொரு அறைக்கு சென்று தூங்குவதற்கு முடிவு செய்துகொண்டாள்.
அங்கு படுக்க வசதி இல்லை. ஓரமாக சாத்தி வைக்கப்பட்டிருந்த பாயை எடுத்து தரையில் விரித்தவள் பங்களூரில் குளிரில் தவித்துப் போனாள். நேராக தனது அறைக்கு வந்து விடுவாள் அதி என்று நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு அவள் இன்னும் வராமல் போகவே, அடுத்த அறையில் தேடிப் பார்த்தான். குளிரில் நடுங்கிக் கொண்டு அதி படுத்திருப்பதை கண்டு நிரஞ்சனுக்குள் ஆத்திரம் பொங்கியது.
‘'உன்ன ஒண்ணுமே செய்ய மாட்டேன். ரூமுக்கு வா... பஸ்ட் நைட் இன்னிக்கு நமக்கு.’' என்று அவள் விக்கித்துப் போகும்படிக்கு ஒரு ஸ்டேட்மென்ட் கொடுத்துவிட்டு அவள் அருகிலேயே நின்று கொண்டான். அவனை குழப்பத்துடன் பார்த்தவாறே அவன் அறைக்குள் நுழைந்தது பெண்.
முதன்முறையாக அவனுடன் அவன் அறையில் ஒன்றாக உறங்குவது பற்றி யோசிப்பதற்குகூட அவள் தயங்கிக் கொண்டிருக்க அவனோ வெகு இயல்பாகத் தான் இருக்கிறான்.
அப்பாவும் அம்மாவும் கிளம்பும் வரை தான் இப்படி என்று மனதை தேற்றிக் கொண்டு கட்டிலில் படுத்துக்கொண்டாள். வெகு காலத்திற்குப் பிறகு ஆக்ரமித்த நிம்மதி, அன்று நடந்த விஷயங்களையும் மீறி அவளை உறக்கத்திற்கு தள்ளியது. நிரஞ்சன் கூட தனக்கு தேவையானது கிடைத்த சந்தோஷத்தில் உறங்கிப் போனான்.
அடுத்த நாளே விஸ்வம், நிரஞ்சனிடம் தங்களுக்கு நடந்தவற்றை ஜீரணம் செய்ய நாட்களாகும் என்று கூறிவிட்டு கிளம்ப வித்யா குற்றம் சாட்டும் பார்வையை வீசி விட்டு கிளம்பினாள். நிரஞ்சன் எதற்குமே அலட்டிக் கொள்ளவில்லை. எல்லாம் எதிர்பார்த்ததுதான். அதி தான் சுருண்டு போனாள். எந்தத் தப்பும் செய்யாமல் எனக்கு ஏன் இப்படியெல்லாம் என்று யோசித்தவளுக்கு, பெருமூச்சுதான் விடையாகக் கிடைத்தது.
வழக்கம்போல் தன் அறைக்கு சென்று முடங்கிக் கொண்டாள். சமையல் எல்லாம் தானே முடித்து நிரஞ்சன் அதி அறைக்கு உணவுடன் சென்றான். அன்று இருவரும் அலுவலகம் செல்லவில்லை. நிரஞ்சன் லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தான். அதிக்கு இவன் இவ்வளவு சாதாரணமாக எப்படி இருக்கிறான் என்ற ஆச்சரியம். அவளால் தனது வேலையில் மனதை செலுத்த முடியவில்லை. தான் புதுமண பெண்ணா, இப்படியெல்லாம் நடப்பது சரியா என்றெல்லாம் முழுநாளும் யோசனையிலேயே கழித்தாள்.
நிரஞ்சன் செய்த வேலைக்கு தனக்கு நியாயமாக அவன் மீது கோபம் வந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் எனக்கு அழுகை வந்திருக்க வேண்டும். இரண்டுமே இல்லாமல் சாதாரணமாக எப்படி இருக்கேன் என்று தன்னையே கேட்டுக் கொண்டாள். கழுத்தில் புதிதாக ஏறியிருந்த தாலி மனதிற்கு இதமளிக்கிறது. தன்னை சுற்றி இருக்கும் துன்பங்கள் நகர்வது போல ஒரு பிரமை. மீண்டும் மீண்டும் அதை தொட்டுப் பார்த்துக்கொண்டாள். அவனது காதலுக்கு தன்னால் நியாயம் செய்ய முடியுமா என்று அவளுக்கு புரியவில்லை. பண்பாட்டு அடி பெரிது.இதற்காக நிரஞ்சனை பழிவாங்க போகிறேனா... அவன் என்ன தவறு செய்தான்? என்னால் அவனுக்கு இவ்வளவு துன்பம்.
ஆனாலும் பெண்ணின் மனம் இந்த திருமணத்தினால் கோபம் கொள்ளாமல், மாறாக அவனுடன் இருப்பதையே விரும்புகிறது.
அதிக்கும் இன்னும் புரியாதது, நிரஞ்சன் மீதான தனது பிடிப்பிற்கு பெயர் என்ன?
டிவியில்’ ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால், அந்த உறவுக்கு பெயர் என்ன’ என்று பாடல் ஒலிக்க தன்னை அதே கேள்வியை கேட்டுக்கொண்டாள் பெண்.
இருவரின் நட்பும் மாறவில்லை. திருமணம் முடிந்து ஆறு மாதம் ஆன பின்பும், இருவரின் உறவு நிலையில் அடுத்த நிலை வரவில்லை.
அவள் தன்னறையில் தங்கிக்கொண்டாள். கழுத்தில் அணிந்து இருப்பது தாலி என்று யாருக்கும் தெரியவில்லை அதனால் திருமணம் வெளியே பரவவில்லை. நிரஞ்சனும் இதுபற்றி யாரிடமும் எதுவும் பேசவில்லை. அதி முழு மனதுடன் ஒப்புக் கொள்ளாதவரை இது பற்றி யாருக்கும் தெரியக்கூடாது என்பதில் கருத்தாக இருந்தான்.
இதற்கு நடுவில் நிரஞ்சனின் அம்மா திருமணம் பற்றி தெரிந்து கொண்டு, அலைபேசியில் அதியை அழைத்தவர் திட்டி தீர்த்தாள். அதி மனதிற்குள் வருந்தினாலும் எதுவும் பேசவில்லை.
மதிய இடைவேளையின் போது ஒருநாள் சுமனா, நிரஞ்சன் மீதான தனது காதலை பற்றி அதியிடம் பேச, அதிக்குள் முதன்முதலாக கோவம் வந்தது. சுமா பாதி பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே எழுந்து சென்றுவிட்டாள் அதி.
அது முதலே அதி மனதில் நிரஞ்சனை சுமா எடுத்துக்கொள்வோளோ என்று பயம் வரத்தொடங்கியது. மனதின் பாரம் தாங்க முடியாமல் போனது.
'நீ அவனுக்கு பொண்டாட்டியா நடந்துகிட்டா இப்படி யோசிக்கலாம். உன்னை விட்டுட்டு அவளை கல்யாணம் செஞ்சுக்கிட்டா நல்லது தான். இனியாவது அவன் லைப் சந்தோசமா இருக்கும் 'என்று அவள் மனம் நியாயம் பேச அரண்டு போனாள் அதி.
நானா இவன் கிட்ட வாழ்க்கை பிச்சை கேட்டேன் என்று அவன்மீதே அவளது கோவம் திரும்பியது.
போதாகுறைக்கு நிரஞ்சன் தன் மீது பரிதாபப்பட்டுத்தான் திருமணம் செய்து கொண்டான் என்ற எண்ணம் வேறு. தான் அதியை உயிருக்கு உயிராக காதலிப்பதாக நிரஞ்சன் சொன்னதை அதி நம்புவதற்கு தயாராக இல்லை.
விளைவு சுய பச்சா தாபம். ஓயாமல் கண்ணீர் வந்தது. நிரஞ்சனோ மற்றவர்களோ பார்த்துவிடக்கூடும் என்று படுக்கை அறையில் அழுது தீர்த்தாள். காலையில் கண்கள் சிவந்து வெளியே வரும் தோழியை ஆராய்ச்சி பார்வை பார்த்த நிரஞ்சனுக்குள் கணவன் நிரஞ்சன் விழித்துக்கொண்டான்.
காலையில், பனியில் நனைந்த ரோஜாவை போல் கண்ணீரால் சிவந்த அவள் மூக்கின் நுனி, இன்னும் அதிகம் பிங்க் நிறத்தில் நடுக்கம் கொண்ட அவள் உதடுகள் அவனை ஈர்க்க, முதன்முறையாக கணவனாக அவள் அருகில் சென்றவன் தன்னை கட்டுபடுத்த முடியாது, நெற்றி, கண்கள், மூக்கின் நுனி என்று உதடுகளால் பிராயாணம் செய்து உதடுகளில் தஞ்சம் அடைந்தான்.
அவன் வேகம், மோகம், தேவை புரிந்தவளுக்கோ குற்ற உணர்ச்சி மிக, அவனை தடுக்கத் தோன்றாமல் தயங்கி திகைத்து நின்றாள்.
அந்த நெருக்கம் அவனது ஹார்மோன்களின் வேகத்தை கூட்ட, முழுவதும் தன்னை இழப்பதற்கு முன் வேகமாக தன்னை விடுவித்துக்கொண்டு தன்னறைக்குள் சென்று, அவளிடம் இருந்து தன்னை மறைத்துக்கொண்டான்.
அவளை இனியும் இப்படியே விட முடியாது. தோழி மனைவியாக வேண்டும் என்று முடிவு செய்து கொண்டவன் ஒரு மன நல மருத்துவரிடம் செல்ல தீர்மானித்தான்.