மனம் - 14
மாலையிடும் மன்னவன் அருகே நிற்க…மனதில் எந்த உணர்வும் இல்லாமல் எந்திரமாக நின்றிருந்தாள் பெண்ணவள்…
இரண்டு நாட்களில் நடந்தவைகள் எல்லாம் அவளின் மனதில் ஆறாத வடுக்களை ஏற்படுத்தி இருந்தது.
தெய்வத்தின் முன் மாங்கல்ய நாண் கையில் ஏந்தியபடி, அவள் கழுத்தில் பூட்டி மூன்று முடிச்சிட அவளை ஏறிட்டவன். சலனமே இல்லாமல் தன் முன் தலையைத் தாழ்த்தி நிற்கும் தாராவைப் பார்த்துக் கொண்டே இருந்தான் …
ஐயரின் நல்ல நேரம் முடிவதற்குள் கட்டுங்கோ என்ற சத்தத்தில் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் தாரா.
அதியமானைக் கண்டதும் சட்டெனக் கண்ணீர் வழிந்தது அவள் விழிகளில்…
அவள் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டவன் காதலோடு அவள் கழுத்தில் மூன்று முடியிட்டு அவளைப் உரிமையாக்கிக்கொண்ட அடுத்த நொடி அவள் நெற்றியில் மென்மையாக முட்டினான்…
அவள் நெற்றியில் குங்குமம் வைக்கும் போது மிக அருகே நெருங்கி நின்றவன் “அழதே… இப்படி அழுதாய் என்றால்... கோயில் என்றும் பார்க்காமல் கிஸ் பண்ணிறுவேன்” என்றவனின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியில் கண்கள் விரிந்து, சட்டென அழுகை நின்றது அவளுக்கு.
அவளின் சிறுபிள்ளைத் தனத்தில் சிரிப்பு வந்தது தாராவின் ஆதிக்கு…
திருமணம் என்பது வாழ்க்கையில் ஒரு முறைதான் … அதில் நடப்பதை அவள் உணராமல் இருந்தால் எப்படி… அவர்களுக்கான தருணம் அல்லவா இது… இருவரும் மாலை மாற்றி…கோயிலை வலம் வந்தனர்…
வலம் வரும் நேரத்தில் கிடைத்த தனிமையில்… அவளிடம் “ என்னம்மா… ஏன் முகம் இவ்வளவு சோகமாக வைத்திருக்கிறாய்… என்னைக் கல்யாணம் செய்வது உனக்கு இவ்வளவு வேதனையைத் தருகிறதா, தாரா” என்று கேட்டான்.
தாலிக் கழுத்தில் ஏறியப் பின் கணவன் பேசும் முதல் வார்த்தையே இப்படி எதிர் மறையாக இருந்தால் என்ன செய்வாள் அவளும் தான்…
கேள்வியைக் கேட்டவன் அவள் பதிலுக்குக் காத்திருக்காமல் அவள் கரம் பிடித்து வேகமாக நடந்தவனைப் பிடித்து நிறுத்தினாள்.
தன் உடன் வராமல் நின்றவளைத் திரும்பிப் பார்த்தான் அதியமான்.
"என்ன டி.. காலையில் இருந்து இப்படியே பண்ணிட்டு இருந்தாயென்றால் " என்று சத்தமில்லாமல் அவளைச் சத்தமிட்டான்…
“உங்களுடனான என் திருமணம் எவ்வளவு பெரிய விஷயமாக என் வாழ்க்கையில் இருக்கிறது என்பது என்னைத் தவிர உங்களுக்குக் கூடத் தெரிய வாய்ப்பில்லை… எனக்குப் பயமாக இருக்கிறது அதெப்படிச் சொல்ல என்று தெரியவில்லை… மத்தபடி இந்தத் திருமணத்தில் எனக்கு முழுச் சந்தோஷம் தான்... அதை விவரிக்கும் அளவிற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை” என்றாள்.
நேற்று வரை திருமணம் வேண்டாம் என்றவளின் இந்த வார்த்தைகள் புதிதாகவும் அது நேரம் புதிராகவும் தோன்றியது அவள் கணவனுக்கு.
இந்தத் திருமணத்தில் அவள் முழு மனதோடு தான் வந்திருக்கிறாள் என்ற எண்ணமே அவனுக்குப் போதுமானதாக இருந்தது.
இதழில் புன்னகையோடு பிடித்து இருந்த அவள் கரத்தைத் தன்னோடு இழுத்தவன் எல்லோருக்கும் இருக்கும் இடம் தேடி வந்தான்.
தம்பதியரின் அருகே வந்த இனியன் தன் நண்பனை ஆரத்தழுவி
“வாழ்த்துக்கள் மச்சான்... தங்கச்சி என் நண்பன் ரொம்பப் பாசக்காரன், அவனை நன்றாகப் பார்த்துக்கோ” என்றான் அவளைப் பார்த்து…
“சரி அண்ணா” என்றுத் தலையை ஆட்டினாள் தாரா.
உடனே தாராவின் அருகில் நின்றிருந்த மகேந்திரன்.. “எங்கள் தாரா மட்டுமென்ன, அவள் நல்ல மனது இங்கே இருக்கும் யாருக்கும் இல்லை” என்று தாரிகாவின் செயலைக் குத்திக் காட்டினான்.
“அவளை நீங்கள் நன்றாகப் பார்த்துங்கோங்க ஆதி” என்றான் மகேந்திரன்.
மகேந்திரனின் பேச்சில் மீண்டும் கண் கலங்கிய தாராவை அணைத்து “அதெல்லாம் ஒன்னும் இல்லை தாரா… நாங்கள் அடிக்கடி உன் வீட்டிற்கு வருவோம்” என்று அவளுக்கு ஆறுதல் கூறினான்.
மகேந்திரனின் செயலின் பிடித்தமின்மை, சாந்தியம்மாவின் முகத்தில் பிரதிபலித்தது… மனதில் என்ன இருந்தாலும் இப்படியா, கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்லுவான்… அவளுக்கு அறிவு வேண்டாம் என்று அவர் மனதில் முணுமுணுத்தார்.
“பாஸ்... அவள் என் மனைவி” என்று உரிமைக் கொடி நாட்டினான் அதியமான்.
சத்தமாகச் சிரித்த மகேந்திரன்.. “ஆதி.. அவள் என் மாமன் மகளாக இருந்தாலும் எப்போதும் என் தங்கை தான்… அதைத் தெரிந்து கொள்ளுங்கள்” என்றான்.
“அது நீங்கள் சொல்லாமலேயே தெரிகிறது மகி” என்றான் தாராவின் கணவன்.
கோயிலில் இருந்து வீட்டிற்குச் செல்லத் தயாராகினர்.
வீட்டிற்கு வந்து மதிய உணவு உண்டதும் சாந்தி நேராகக் கங்காதரனிடம் வந்தார்…
"அண்ணா… என் இளைய மகனுக்குத் தாரிகாவிற்கும் கல்யாணம் தேதி நீங்களே உங்களுக்கு எப்போ தோது படுதோ, பார்த்துச் சொல்லுங்க… இப்படிக் கோயில் எளிமையாக எல்லாம் வேண்டாம்" என்ற அவர் வார்த்தைகளில் இருக்கும் உண்மைக்கு அவரும் ஒத்துப் போனார்.
"புரிகிறது... என்ன செய்ய இந்தக் கல்யாணம் இப்படி நடக்கும் என்றுக் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை தங்கச்சி… என்னத்தச் சொல்ல எல்லாம் என் போறாத காலம் என்றவர் நான் பார்த்துட்டுச் சொல்லறேன்" என்றார்.
அங்கே வந்த அதியமான்…
"நான் தான் உங்களிடம் தெளிவாகச் சொன்னேன் தானே அம்மா… இன்னும் மூன்று மாதங்கள் போகட்டும் என்று அதற்குள் மாமாவிற்கு உடல் நன்றாகத் தேறி விடும்" என்றான் உண்மையான அக்கறையோடு.
"சரி நாங்கள் கிளம்பறோம் அண்ணா மாலை ஆவதற்குள் போய்ச் சேர்ந்தால் தான் பாக்கி நல்ல காரியங்கள் பார்க்க வேண்டும்… அதெல்லாம் இவங்களுக்குத் தேவை இல்லை தான்… இருந்தாலும் உலக நடப்பு இருக்கே" என்று அவர் வார்த்தைகளைக் கேட்டு எப்படி எதிர் வினை ஆற்ற என்று தெரியாமல் நின்றான் அதியமான்.
தாயின் ஒவ்வொரு சொல்லின் அர்த்தம் அவனுக்குப் புரியாமல் இல்லை.
இருவருக்கும் சாந்தி முகூர்த்தம் என்பது இன்று தான் என்று அவர்கள் நேசிக்கும் நண்பர்களுக்கு மட்டுமே தெரியும்.
எதுவும் பேசாமல் அமைதியாகச் சரி நீங்கள் கிளம்புங்க அம்மா நான் பின்னால் வருகிறேன் என்றான் அதியமான்.
சதீஷிற்கு இங்கே நடப்பதை எதுவும் உணரும் நிலையில் இல்லை... மீண்டும் தாரிகாவின் வரவும் தன் காதல் கைக்கூடியதும் இனி தன் வாழ்க்கையில் எந்தத் துயரும் இல்லை என்ற நிம்மதியில் அவள் பின்னே சுற்றிக் கொண்டு இருந்தான். அவளிடம் கர்ப்பமாகிருந்ததைப் பற்றி எதுவும் அவன் கேட்கவில்லை. இப்பொழுது இருக்கும் நல்ல மனநிலையைக் கெடுக்க அவன் விரும்பவில்லை.
தாரிகாவிற்கும் இன்று தான் நிம்மதி மனதில் பூத்தது… எங்கே தன்னை மறந்து இருப்பானோ என்ற பயம் போன தருணம் தன் அருகே வந்து அவன் அவளைக் காதலால் சீராட்டியது.
அதை அவனிடம் கேட்கவும் செய்தாள்.
சதீஷ்.. நீங்கள் என்னை மறந்து இருப்பீங்க என்று, பயத்திலேயே செத்துக்கொண்டு இருந்தேன்.. நம் காதல் தூய்மை ஆனது அது தான் நமக்கு நிறைவேறுகிறது என்று அவனிடம் கண்ணீரோடு சொல்லிக் கொண்டு இருந்தாள்.
"அதெப்படி, தாரிகா உன்னை மறப்பேன்.. நான் விபத்து நடக்கும் முன் உன்னைப் பற்றி அண்ணனிடம் சொல்லிட்டுத் தான் மயங்கி இருக்கேன்... இப்பவும் அவர் சொல்லுவார்… அதுதான் உங்கள் வீட்டு அட்ரஸ் கண்டுப்பிடிச்சுப் பெண் கேட்கச் சொல்லி இருக்காரு... வீட்டைப் பற்றி விசாரிக்க, அப்பொழுது அவர் மனைவி வீடு என்று தெரிந்ததும் தான் அவர் திருமணத்தை முதலில் நடத்தி விட்டார்" என்று தன் கற்பனையையும் சேர்த்துக் கூறினான் சதீஷ்.
சதீஷிற்குத் தான் கர்ப்பமாக இருந்தது நினைவில் இல்லை என்று அப்பொழுதுத் தான் தாரிகா உணர்ந்தாள்… அவனோ அந்தக் குழந்தைக்கு ஜெனனம் கொடுத்து இருக்க மாட்டாள் என்று நம்பி இருந்தான் என்பது அவளுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அமரன் பற்றி இனி மேலே மௌனம் காப்பது தன் காதலுக்குத் தன் வாழ்க்கைக்கும் நல்லது என்று புரிந்துக் கொண்டாள்.
இது மேலும் அவளை மௌனியாக்கியது.
என்ன தாரிகா அமைதியாக இருக்கிறாய் என்ற சதீஷின் கேள்வியில் நடைமுறைக்கு வந்தவளிடம்… "நாங்கள் கிளம்பிறோம்" என்றவன் அவள் அருகே நெருங்கி வந்தான்.
வந்தவனின் நோக்கம் புரிந்ததும் வெட்கத்தில் முகம் மாறியது… அவள் அழகிற்கு மேலும் மெருகேற்றியது அவள் வெட்கம்.
பெண்ணவளின் வெட்கம் கண்டு வேட்கையுடன் அவள் இதழ்களைச் சிறையெடுத்தான்.
ரொம்ப நேரமாக இருவரையும் காணமல் அழைத்து வரச் சொல்லி நளினியை அனுப்பி இருந்தான் மகேந்திரன்.
அவர்கள் நின்றிருந்த பகுதிக்கு வந்தவள் கண்டது... இருவரின் ஆலிங்கனத்தை... மெல்லக் குரலைச் சொருமியவளின் செயலில் பிரிந்து நின்றனர் இருவரும்.
நளினியை மீண்டும் சந்தித்தபின்னர், சதீஷ் முன் போல் உரிமையோடு இல்லாமல்... சாதரணமாகத் தான் பேசினான்…
அவனுக்கு ஒரு காலத்தில் தன் தோழி அவள் என்று தெரிந்தப் போதும்… நட்பினைப் புதுப்பிக்க மனமில்லாமல் இருந்தது… ஏன் என்ற காரணமும் தெரியவில்லை.
எதற்கு என்ற அறியாமலேயே பல உறவுகளை நாம் உதறி இருப்போம் …
சதீஷும் அதே தான் நளினி விஷயத்தில் செய்து இருந்தான்.
அது மனதில் வலியை அவளுக்கு உண்டாக்கியப் போதும்... தாரிகாவின் சுயநலம் கண்டு பழகியவளுக்கு இதுவும் கடக்கக் கற்றுக் கொண்டாள் இந்த இரண்டு நாட்களில்.
"உங்கள் இரண்டு பேரையும் கூப்படறாங்க" என்றவள் அங்கே நிற்காமல் வேகமாகச் சென்றாள்.
காதலர்கள் இருவருக்கும் யாரைப் பற்றியும் கவலைப்பட நேரமில்லை... தங்கள் காதல் பல இன்னல்களுக்கு மத்தியில் நிறைவேறும் சந்தோஷத்தை அனுபவித்தனர்.
காதல் மட்டுமே இருந்தது அவர்களுக்கு இடையே…
மற்றவர்கள் பற்றிச் சிந்திக்க வில்லை.
அதியமான் குடும்பம் அங்கிருந்து வேகமாகக் கிளம்பியது.
அவர்களை இனியனோடு போகச் சொன்னான்.
நாங்கள் இருவரும் என் காரில் வருகிறோம் என்று அவர்களை அனுப்பி வைத்தான்.
இனியனோடு தொடங்கிய பயணத்தில்... தன் மகனின் நண்பனிடம் மனதில் இருக்கும் சந்தேகங்கள் கேட்டுத் தெளிந்தார் சாந்தி.
"இனியா... தம்பியோட வியாபாரத்தில் சதீஷ்க்குப் பங்கு இருக்கா"… என்று சாந்தியம்மா, கேட்டார்.
"என்னம்மா ஆச்சு, தீடிரென இதெல்லாம் விசாரிக்கிறீங்க" என்றான் இனியன்.
"இல்லப்பா... அவனுக்குத் திருமணம் முடிந்து விட்டது… இவனுக்கோ விபத்தின் காரணமாக உடல் நிலை இப்போது தான் சரியாகி வந்து இருக்கான்… இவனுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கவும் போறோம்... தொழில் எதுவும் இல்லாமல் இருந்தால் அவனுக்கு மரியாதை இல்லை அல்லவா… இவனுக்கு வேலை இல்லை... பார்த்து வைத்திருக்கும் பெண்ணும் இன்னும் ஏதோ தனியார் பள்ளியில் தான் வேலைச் செய்கிறாள் போல… அவன் மட்டும் தெளிவாக நல்ல படிச்சு வேலையில் இருக்கும் பெண் கட்டிக்கிட்டான்… என்ற சாந்தியின் பேச்சில்…
"அம்மா என்ன பேசறீங்க… அது தான் அவள் அரசாங்க வேலைக்கு முயற்சிப் பண்ணிட்டு இருக்காளே"… என்று தாரிகாவிற்குச் சப்போர்ட் பண்ணனினான் சதீஷ்.
அவனின் செயலில் சிரித்த இனியன் "என்னடா இப்பவே வரப் போறப் பொண்டாடிக்குச் சப்போர்ட் பலமாக இருக்கு" என்று கேலிச் செய்தான் இனியன்.
"அதெல்லாம் ஒன்னும் இல்லை அண்ணா" என்ற சதீஷ் தன் அலைபேசியில் மூழ்கினான்.
"அவனை விடு இனியா… நான் கேட்டக் கேள்விக்குப் பதிலைச் சொல்லு" என்றார், சாந்தி
"அம்மா... தப்பா நினைக்காதீங்க... நம்ம அதியமான் அப்படியெல்லாம் தன் குடும்பத்தையும் உங்களையும் விட்டுட மாட்டான்… நீங்கள் அவனை நம்புங்கள்" என்றான் இனியன்.
"நம்பிக்கை எல்லாம் இருந்தது தான்.. அவனுக்கு என்று ஒரு குடும்பம் இருப்பதை மறைத்தவனை எப்படி நம்பறது இனியா… இனி அவனுக்குக் குழந்தை மனைவி என்று தான் சிந்தனைகள் இருக்கும். தம்பிக்கு வாழ்க்கை அமைத்துக் கொடுக்க முடியுமா? நான் பேசுவதைக் கேட்டு என்ன இப்படிச் சுயநலமாக இருக்கேன் என்று நீ நினைக்கலாம்… ஆனால் பெற்ற அம்மாவிற்கு மட்டுமே தெரியும் என் மனம். தாயென்பவள் தடுமாறும் பிள்ளையைக் கரைச் சேர்க்கத் தான் போராடுவாள்… நீயும் என் இடத்தில் இருந்தால் புரியும்" என்றவர்…
"இந்தத் தொழிலில் சதீஷுக்கும் உரிமை இருக்குமா.. அதற்கு அவன் என்ன செய்ய வேண்டும்… ஏதோ படிக்கணும் என்று எல்லாம் சொல்லிட்டு இருந்தானே… இப்போ என்ன பண்ண” என்று தெளிவாக ஒழிவு மறைவின்றிக் கேட்டார், சாந்தி.
அவரின் இந்தச் சிந்தனை எல்லாம் தேவையற்றது என்று புரிந்தது இனியவனுக்கு.
தன் நண்பனைப் பற்றி நன்கு தெரியும்… அவன் எப்படி எல்லாம் தன் குடும்பத்தை உயர்த்தப் பாடு பட்டான் என்று அருகில் இருந்து பார்த்தவன் ஆயிற்றே… இருந்ததும் என்ன சொல்ல… இவருக்குப் புரிய வைப்பது விட இதற்கு நல்ல வழியைக் கண்டு பிடித்து அதை முறையாகச் செயல் படுத்த அவனுக்குச் சொல்ல வேண்டும் என்று மனதில்
நினைத்தான்.
இதைப் பற்றி அவனிடம் பேசுவதற்குத் தாமதிக்கக் கூடாது என்றும் முடிவுச் செய்தான்.
இல்லையென்றால் குடும்பத்தில் தேவையற்றப்பிளவு வரும்... பணம் தான் உறவுகளுக்கு இடையிலான எதிரி என்று உணர்ந்து இருக்கிறான் இனியன்.
அவன் தம்பியின் தவறைத் திருத்த போய்த் தவறானவனாகத் தவறி நிற்கிறான் அதியமான்.
இனியவன் உடன் பெற்றவளையும் உடன் பிறந்தவனையும் அனுப்பியவனுக்குத் தாராவின் வீட்டில் திருமணம் முடிந்துப் பாலும் பழமும் குடுக்கும் சடங்கிற்கு எல்லாம் ஏற்பாடுச் செய்தனர்.
இதிலெல்லாம் பட்டும் படாமல் இருந்தாள் தாரிகா… அவளுக்குத் தன் பெற்றவர்கள் மனக்கசப்பினை மனதில் வைத்து எங்கே தன்னையும் தவறாக நினைத்து விடுவார்களோ என்று பயந்தாள்.
இதெல்லாம் நளினி, தங்கத்துடன் சேர்ந்த செய்தாள்.
புனிதா அங்கே வெறும் ஆளாக மட்டுமே நின்றிருந்தாள். அந்த அளவிற்குத் தாராவின் மேல் கோபம் அவர் கண்கள் மட்டும் இல்லாமல் அறிவையும் மழுங்கடித்து இருந்தது.
தனக்குக் குடிக்கத் தந்தப் பாலைக் குடித்தவன் பாதி அவளுக்கும் கொடுத்தான்.
தயங்கியபடி வாங்கிக் குடித்தவளுக்கு எல்லோருக்கும் முன் கூச்சமாக இருந்தது. தன்னைப் பற்றிய தவறான அபிப்ராயத்தை எப்படிச் சரி செய்வது எனத் தெரியவில்லை உதவப் போய் உதவியின்றி நட்டாற்றில் நிற்கிறாள் தாரா.
எல்லாம் சரியாகும் என்று இறைவனைத் துதித்தாள்.
தன் திருமணம் வாழ்க்கையில் எந்த வித வேதனையும் தராதே இறைவா என்பது மட்டுமே அவன் பிராத்தனையாக இருந்தது.
தாராவை அவகனிக்கும் புனிதாவின் செயலில் ஒரு புள்ளியில் தாங்க முடியாமல் தங்கத்திற்குக் கோபம் வந்தது.
என்ன தான் இருந்தாலும் பெற்ற மகள் அல்லவா… அவள் திருமணத்தில் சிரித்த முகத்தோடு இல்லை என்றாலும் அவளை இப்படி வேதனைப் படுத்த வேண்டாம் என்று முகத்திற்கு நேராகச் சொல்லி விட்டாள் தங்கம்.
"இங்கே பாருங்கள் அண்ணி... தாரா, செய்தது என்றுச் சொல்ல வில்லை, ஆனால் நீங்களும் தவறு தான். பெத்தப் பிள்ளையை மன்னிக்க முடியாதவள் அம்மாவாக இருக்கவே முடியாது… என் மனதில் தோன்றியது சொல்லறேன்… இன்னைக்கு அவளைப் இப்படி வேதனைப் படுத்தும் நீங்கள்… அவள் எதனால் இப்படியொரு இடத்தில் நிற்க வேண்டி வந்தது என்று அறியும் நேரத்தில் … நீங்கள் செய்த எதையும் உங்களால் திருத்த முடியாது” என்றார், தங்கம்.
எங்க அண்ணனுக்குக் கோபம் இருந்த போதும் உங்களைப் போல அவளை அவமானப் படுத்தவில்லை… ஒரு தந்தையாக அவளுக்கு மனமாற ஆசி வழங்கினார்… இல்லை தெரியாமல் கேட்கிறேன் அவள் நாசமாகப் போகணும் ஆசைப் படறீங்களா”... என்று தன் நாத்தனாரின் நேரடித் தாக்குதலில்…
"நீங்கள் ஏன் அண்ணிப் பேச மாட்டீங்க... பையனைப் பெத்தவங்க…உங்களுக்கு என் வலியும் வேதனையும் தெரியாது…
அவள் செய்தச் செயலுக்கான அவமானம் எனக்கு மட்டும் தானே... தாரிகாவைப் பார்த்தீர்களா அவளை நான் எவ்வளவு தரம் சந்தேகம் பட்டு இருப்பேன்… அதெல்லாம் பொய் என்று நிறுப்பித்துக் கையில் பிள்ளையோடு வந்து நிற்கிறாள் தாரா… எவ்வளவு நெஞ்சழுத்தம் அவளுக்கு…
ஒரு பிள்ளைக்குத் தாயாவது என்ன அவ்வளவு சாதரணமாகப் போய் விட்டதா உங்களுக்கு… யாருக்கும் தெரியாமல் மறைத்து வாழ்ந்து இருக்கிறாளே! ஏதோ மாப்பிள்ளை நல்லவராக இருக்கவும் இந்த வாழ்க்கை அவளுக்கு அழகாகத் தெரியுது” என்றார், பட்டென்று.
தண்ணீர்க் குடிக்க உள்ளே வந்தவளுக்குத் தாயின் பேச்சின் வீரியம் தாங்காமல் அதியமான் அருகில் போய் அமர்ந்துக் கொண்டாள்…
மனதின் தைரியம் வடியத் தொடங்கியது... சட்டென அவன் கைகளில் தன் கரத்தை வைத்து இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள் தாரா.
அதியமான் தன்னைச் சுற்றி நடப்பதை நன்கு அறிந்து வைத்திருந்தான்… ஏதோ அவளைப் பற்றிப் பேசுவதைக் கேட்டுத் தான் இப்படி வந்து அமர்ந்து இருக்கிறாள் என்று உணர முடிந்தது.
இனி நேரத்தைக் கடத்தாமல் கிளம்ப வேண்டும் என்று முடிவுச் செய்தான்.
அங்கே நளினிடம் காதலில் ஓவியம் வரைந்துக்கொண்டு இருந்த மகேந்திரனை அழைத்தான் அதியமான்.
"மகி.. உங்க காதல் ஓவியத்தை வரைந்தது போதும்… முதலில் எங்களை அனுப்பி விடுங்கள்" என்று நேரடியாகக் கேட்டான் அதியமான்.
"என்ன ஆதி… இன்னைக்கு இங்கே இருந்துட்டு நாளைக்குப் போகலாம் தானே... குட்டியை வச்சுட்டு எப்படிச் சமாளிப்பீங்க" என்று தன் பயத்தை நேரடியாகக் மகேந்திரனும் கேட்டான்…
அவன் தான் சாந்தியின் மனநிலையைப் புரிந்து கொள்ள முடிகிறது.
"இல்லை மகி நிறைய வேலைகள் இருக்கிறது" என்றவனின் முகத்தில் சிந்தனை ரேகைகள் படர்ந்தது…
இதெல்லாம் பார்த்தத் தாராவிற்குக் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல உணர்ந்தாள்.
பயம் மட்டுமே மனதில் படர
காதல் காணமல் போனதே…
மகனைக் காத்தவள்…. காக்கும் காதலனாகத் தன் அருகே அமர்ந்து
இருப்பவனின் காதலை உணர்ந்தால் போதுமே…
பயம் இருக்கும் இடமறியாது
மறைந்துப் போய்விடும்…
அவளை ஆட்டிப்படைக்கும் அவனைக் காதலில் கட்
டி வைத்திருக்கும் அவளின் நேசத்தை ... தினறத் தினற உணரும் அதியமானின் வாழ்க்கையில் எல்லாம் அழகானதாக இந்தத் தாயும் சேயும் மாற்றியமைப்பர்…
தொடரும்…